வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 19, 2012

கர்பலா குடியரசுக்கான ஒரு போராட்டம்


 ·         இந்தியா குடியரசு தினத்திற்காக தயாராகிவருகிறது.
·         நம்முடைய நாடு , உலக அளவில் சிறந்த மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்பதில் சந்தேகமில்லை.
·         இந்திய குடிமக்கள் கல்வியறிவில் பின தங்கியிருந்த போதும் நமது குடியரசு பாதுகாப்பாகவே இருக்கிறது.
·         ஒரு இராணுவப் புரட்சியோ, சர்வாதிகாரமோ இங்கு தலை தூக்கவில்லை.
·         மக்கள் விரும்புகிறவர் ஆளுகிறார், இல்லையேல் வீழ்கிறார்.
·         இங்கு பல்வேறுபட்ட சிக்கல்கள் இருந்த போதும் குடியரசு ஜனநாயகம் பாதுகாப்பாகவே இருக்கிறது.
·         இந்திய மக்களான நாம் பெறுமைப் பட்டுக்கொள்ள தக்க விசயம் இது.
·         நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் இப்போது மக்களாட்சி இல்லை. பர்மாசிலதில் அரைகுறையாக இருக்கிறது.- பாகிஸ்தான்  
·         அதே நேரத்தில் இதில் இன்னும் விழிப்போடு நாம் நடந்து கொள்ள வேண்டும்.
குடியரசு என்பதற்கு பல விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றில் பிரதானமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறவர் மக்களை ஆள்வது.

குடியரசு என்ற சொல்லுக்கு இன்னும் யாரும் உறுதியாக விளக்கம் சொல்லவில்லை. மக்களை இரும்புக் கொண்டு அடக்கியாள்கிற சைனா தன்னை ஒரு மக்கள் குடியரசு என்றுதான் சொல்லிக் கொள்கிறது.


பண்டைய வரலாற்றில் கிருத்துவுக்கு சில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில்  மக்கள் தாம் விரும்பும் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமக்கு கிடைக்கிற வரலாற்று ஆதாரங்களின் படி பார்த்தால் உலகத்திற்கு சிறந்த மக்களாட்சி நடைமுறையை அமுல்படுத்திக் காட்டியது இஸ்லாமாகும்.


இஸ்லாத்திற்கு முன் உலகம் முழுவதுதிலும் குடும்ப அல்லது குல மன்னராட்சி முறையே நடைமுறையில் இருந்த்து.


இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் கலீபாக்களின் ஜனநாயக ஆட்சியை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் மக்களாட்சித் தத்துவம் வடிவம் பெற்றதாக கூறுகிறார்கள்.உண்மையில் இஸ்லாத்தின் கலீபாக்கள் மிக அற்புதமான குடியாடி முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தேர்வு செய்யப்பட்ட காட்சியை எடுத்துப் பாருங்கள்! ஒரு மக்கள் தலைவர் சில சிக்கல்களை தாண்டி  எவ்வாறு அற்புதமாக தேர்வு செய்யப் பட்டார் என்பதை அறிவீர்கள்.!

ஆலோசனையின் அடிப்படையில்தகுதி குறித்த விவாத்த்திற்குப் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்சித்தலைமைக்காக மனித வரலாற்றில் நடைபெற்ற  மிக முக்கியமான தேர்வு அது.

 لما علم الصحابة رضي الله عنهم بوفاة رسول الله e اجتمع الأنصار في سقيفة بني ساعدة في اليوم نفسه وهو يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول من السنة الحادية عشر للهجرة، وتداولوا الأمر بينهم في اختيار من يلي الخلافة من بعده

والتف الأنصار حول زعيم الخزرج سعد بن عبادة t ولما بلغ خبر اجتماع الأنصار في سقيفة بني ساعدة إلى المهاجرين

قال عمر t: فانطلقنا حتى أتيناهم في سقيفة بني ساعدة، فإذا رجل مزمِّلُ بين ظهرانيهم، فقلت: من هذا؟ فقالوا: هذا سعد بن عبادة، ... فلما جلسنا قليلاً تشهَّد خطيبهم فأثنى على الله بما هو أهله، ثم قال: أما بعد فنحن أنصار الله وكتيبة الإسلام وأنتم -معشر المهاجرين- رهط، وقد دفت دافة من قومكم، فإذا هم يريدون أن يختزلونا من أصلنا وأن يحضنونا من الأمر، فلما سكت أردت أن أتكلم- وكنت قد زوَّرتُ مقالة أعجبتني أريد أن أقدّمها بين يدي أبي بكر- وكنت أداري منه بعض الحدِّ، فلما أردت أن أتكلم قال أبو بكر: على رسلك. فكرهت أن أغضبه، فتكلم أبو بكر، فكان هو أحلم مني وأوقر، والله ما ترك من كلمة أعجبتني في تزويري إلا قال في بديهته مثلها أو أفضل منها حتى سكت. فقال: ماذكرتم فيكم من خير فأنتم له أهل، ولن يُعرف هذا الأمر إلا لهذا الحيِّ من قريش، هم أوسط العرب نسباً وداراً. وقد رضيت لكم أحد هذين الرجلين فبايعوا أيهما شئتم -فأخذ بيدي ويد أبي عُبيدة بن الجراح وهو جالس بيننا- فلم أكره مما قال غيرها، والله أن أقدّم فتضرب عنقي لايُقرِّبني ذلك من إثم أحب إليَّ من أن أتأمر على قوم فيهم أبو بكر، اللهم إلا أن تُسَوِّل إليَّ نفسي عند الموت شيئاً لاأجده الآن.
فقال قائل من الأنصار منا أمير ومنكم أمير يامعشر قريش، فكثر اللغط، وارتفعت الأصوات، حتى فرقت من الاختلاف فقلت: أبسط يدك يا أبا بكر، فبسط يده، فبايعته وبايعه المهاجرون ثم بايعته الأنصار

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட குடியரசுத் தத்துவம்  நிலை நாட்டப் பட்ட ஒரு முறை இது.

2 ஆண்டுகள் 3 மாதம்  13 நாட்கள்  அவரது ஆட்சி நீடித்தது

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தனது இறுதி நேரத்தில் உமர் (ரலி) அவர்களை அடுத்த தலைவராக தான் தேர்வு செய்தார்.

உறவோ, நட்போ, அதற்கு காரணமல்ல. தகுதி மட்டுமே காரணமாக இருந்தது.
மரண தருவாயில் பல தோழர்களிடம் ஆலோசித்தார். பலரும் அவருடை கருத்தை ஏற்பதாக கூறினர். உமர் (ரலி) அவர்களின் பெய்ரை முன் மொழிந்தார். அனைவரும் ஏற்றனர்.

وكذلك استشار سعيد بن زيد وعدداً من الأنصار والمهاجرين، وكلهم تقريباً كانوا برأي واحد في عمر إلا طلحة بن عبيدالله خاف من شدته، فقد قال لأبي بكر ماأنت قائل لرَبِّك إذا سألك عن استخلافك عمر علينا وقد ترى غلظته؟ فقال أبو بكر: أجلسوني أبالله تخوفوني؟ خاب من تزوَّدَ من أمركم بظلم أقول اللهم استخلفت عليهم خيْرَ أهْلكَ

وبين لمن نبهه إلى غلظة عمر وشدته فقال: ذلك لأنه يراني رقيقاً ولو أفضى الأمر إليه لترك كثيراً مما عليه

-ثم كتب عهداً مكتوباً يقرأ على الناس في المدينة وفي الأنصار عن طريق أمراء الأجناد فكان نص العهد:
بسم الله الرحمن الرحيم هذا ماعهد أبو بكر بن أبي قحافة في آخر عهده بالدنيا خارجاً منها، وعند أول عهده بالآخرة داخلاً فيها، حيث يؤمن الكافر، ويوقن الفاجر، ويصدق الكاذب، إني أستخلفت عليكم بعدي عمر بن الخطاب فاستمعوا له وأطيعوا، وإني لم آلُ الله ورسوله ودينه ونفسي، وإياكم خيراً، فإن عَدَلَ فذلك ظني به وعلمي فيه،  وإن بدل فلكل امرئ مااكتسب، والخير أردت ولاأعلم الغيب {وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ} (سورة الشعراء، آية:227).

மக்களுக்காக தேர்ந்தெடுக்கப் படும் குடியரசுத் தத்துவத்தின் இரண்டாம் அணுகுமுறை இது.


10 ஆண்டுகள்  5 மாதம் 28 நாட்கள் உமர் (ரலி) ஆட்சி செய்தார்.

உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய இறுதி நேரத்தில் ஆறு நபர்களிடம் பொறுப்பை ஒப்ப்டைத்தார்

إِنِّي لَا أَعْلَمُ أَحَدًا أَحَقَّ بِهَذَا الْأَمْرِ مِنْ هَؤُلَاءِ النَّفَرِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْهُمْ رَاضٍ فَمَنْ اسْتَخْلَفُوا بَعْدِي فَهُوَ الْخَلِيفَةُ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا فَسَمَّى عُثْمَانَ وَعَلِيًّا وَطَلْحَةَ وَالزُّبَيْرَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ

فَلَمَّا فُرِغَ مِنْ دَفْنِهِ اجْتَمَعَ هَؤُلَاءِ الرَّهْطُ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ اجْعَلُوا أَمْرَكُمْ إِلَى ثَلَاثَةٍ مِنْكُمْ فَقَالَ الزُّبَيْرُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَلِيٍّ فَقَالَ طَلْحَةُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عُثْمَانَ وَقَالَ سَعْدٌ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَيُّكُمَا تَبَرَّأَ مِنْ هَذَا الْأَمْرِ فَنَجْعَلُهُ إِلَيْهِ وَاللَّهُ عَلَيْهِ وَالْإِسْلَامُ لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمْ فِي نَفْسِهِ فَأُسْكِتَ الشَّيْخَانِ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَفَتَجْعَلُونَهُ إِلَيَّ وَاللَّهُ عَلَيَّ أَنْ لَا آلُ عَنْ أَفْضَلِكُمْ قَالَا نَعَمْ فَأَخَذَ بِيَدِ أَحَدِهِمَا فَقَالَ لَكَ قَرَابَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْقَدَمُ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ فَاللَّهُ عَلَيْكَ لَئِنْ أَمَّرْتُكَ لَتَعْدِلَنَّ وَلَئِنْ أَمَّرْتُ عُثْمَانَ لَتَسْمَعَنَّ وَلَتُطِيعَنَّ ثُمَّ خَلَا بِالْآخَرِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ فَلَمَّا أَخَذَ الْمِيثَاقَ قَالَ: ارْفَعْ يَدَكَ يَا عُثْمَانُ فَبَايَعَهُ فَبَايَعَ لَهُ عَلِيٌّ وَوَلَجَ أَهْلُ الدَّارِ فَبَايَعُوهُ.

இன்றைய ஜனாதிபதி எம் பி எம் எல் க்களால் தேர்ந்தெடுக்கப் படுவது போல
மக்களது பிரதிநிதிகளால்பிரமுகர்களால்ஆட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்ட மூன்றாவது நடைமுறை இது.

12 ஆண்டுகள் அன்னாரது ஆட்சி தொடர்ந்தது.

உஸ்மான் (ரலி) அவர்கள் எதிர்பாராமால் கொலை செய்யப் பட்ட சூழ்நிலையில் மக்கா மதீனா மற்றும் ஹிஜாஸ் பகுதி பிரமுகர்கள் அலி (ரலி) அவர்களை அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுத்தார்கள்.

இஸ்லாம் வெகு தூரத்திற்கு பரவி இருந்த சூழலில் அதன் பிறகு சில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஜனாதிபதிக்கும் சிரியா மாநில ஆளுநர் முஆயா (ரலி) அவர்களுக்கும் கருத்துவேறுபாடு எழுந்த்து. முஸ்லிம்களுக்கு இடையே சண்டைகள் நடந்தன.

முஆவியா (ரலி) யிடம் சிறந்த ஆளூமை திறன் பிறந்தது. அதனால் தான் அவரை சிரியாவின் ஆளூநராக உமர் (ரலி) நியமித்தார்.

இறுதியில் அலி (ரலி) அவர்கள அரசியலில் தான் தோன்றித்தனமான கருத்துக் கொண்ட ஹாரிஜிய்யாக்களாக் கொல்லப் பட்டார்.

4 ஆண்டுகள் 9 மாதம் அவர் ஆட்சி செய்தார்.

அதன் பிறகு அலி (ரலி) மகன் ஹஸன் (ரலி அவர்களுக்கு மக்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள்.

முஆவியா (ரலி) யுடன் சண்டை தொடர்ந்த்து. முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொல்வதை விரும்பாத ஹஸன் (ரலி) அவர்கள் அதிகாரத்தை திறமை மிக்க முஆவியா (ரலி) அவர்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

உலக வரலாற்றில் மிக அற்புதமான மனிதராக ஹஸன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்.

ஹஸன் (ரலி) அவர்கள் தான் விரும்பிய ஷரத்துக்களை எழுதிக் கொள்வதற்காக முஆவியா (ரலி) வெற்றுத் தாளில் கையெழுத்திட்டு வழங்கினார்.

முஆவியா (ரலி) தன்னுடை மரணத்திற்குப் பிறகு ஆட்சியை ஹஸன் (ரலி) அவர்களிடம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஹஸன் (ரலி) 6 மாதம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

وبعد وفاة عليّ بويع لابنه الحسن بالخلافة في العراق، لكن ما لبث الحسن أن تنازل لمعاوية تجنباً لإراقة دماء المسلمين في حرب داخلية، ، وكان الذين بايعوا الحسن 40000 أو نحو ذلك من أهل العراق لكنه رأى أن الحرب الداخلية تضعف المسلمين إذ قتل كثير من كبار الصحابة في موقعة الجمل وصفين بسبب النزاع على الخلافة، وأخيراً قتل أبوه غدراً فآثر اجتناب الحرب بأن ترك الأمر لمعاوية بعد أن اشترط عليه شروطاً قبل بعضها ورفض البعض الآخر وانتقل إلى المدينة تاركاً كل عداء،
اشترط الحسن على معاوية أن تكون له الخلافة بعده

சில காலம் கடந்த நிலையில். இஸ்லாம் பெருமளவில் வளர்ச்சியுற்ற சூழலில் முஆவியா (ரலி) வுக்கு அவரது மகன் யஜீதை அடுத்த ஆட்சியாளராக நியமிக்குமாறு ஆலோசனை கூறினார் முகீரது பின் ஷுஅபா (ரலி)

இஸ்லாமிய அரசிய்லில் மன்னராட்சிக்கான முதல் வித்து விதைக்க்ப பட்டது. அதன் நோக்கம்பரந்துபட்ட அரசை பாதுகாப்பதற்காக எனறு சொல்லப் பட்டது. அப்போது டமாஸ்கஸை தலைமையமாகக் கொண்டு இஸ்லாம் வெகு தூரத்திற்கு பரவி இருந்தது.

முஆவியா (ரலி) பெருமானாருக்கு வஹி எழுதுபவ்ராக இருந்தவர். முகீரா ஹுதைபிய்யாவின் போது பெருமானார் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தவர்களில் ஒருவர்.

இவர்களில் எவரையும் குறை கூறலாகாது. அரசியல் என்பது இப்படித்தான் சூழ்ச்சித் திறன் நிறைந்த்து.

அரசியலில் பயன்படுத்தப்படும்டிப்ளமஸிஎன்ற வார்த்தைக்கு சூழ்ச்சித் திறன என்பது பொருள்.

இதில் யார் வெளியே தெரியாதவாறு காரியம் ஆற்றுகிறாறோ அவர் சிறந்த அரசியல் வாதி ஆகிறார். சூழ்ச்சித் திறன் இல்லாதவர்கள் பெரிய ஆட்சியாளர்களாக இருக்க முடியாது.

முஆவியாவுக்குப் பிறகு அவரது மகன் யஜீத் (ரலி) ஆட்சிப் பொறூப்பேற்றார்.

இதை ஏற்காத ஏராளமான மக்கள் பழைய தலைநகரான கூபாவிலிருந்து இராக்கின் மற்ற பகுதியிலிருந்தும் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கடிதம் எழுதினர். ஹுசைன் (ரலி அவர்கள் முன்வந்தால் தாங்கள் அவருடன் சேர்ந்து போராடுவதாக கூறினர்.  சுமார் 12 ஆயிரம் கடிதங்கள் வந்தன.

فاجأ معاوية بن أبي سفيان الأمة الإسلامية بتعيين ابنه يزيد بن معاوية للخلافة من بعده مخالفا الصلح الذي عقده مع الحسن بن علي، وبدأ في أخذ البيعة له في حياته ترغيبا وترهيبا، في سائر الأقطار الإسلامية، ولم يعارضه سوى أهل الحجاز، وتركزت المعارضة في الحسين بن علي، وعبد الله بن عمر، وعبد الله بن الزبير [2] [3]. وضع الإمام الحسين نصب عينيه نصيحة أبيه علي بن أبي طالب عندما أوصاه والإمام الحسن قبل وفاته قائلاً: «أوصيكما بتقوى الله ولا تطلبا الدنيا وإن طلبتكما ولا تأسفا على شيء منها زوي عنكما افعلا الخير وكونا للظالم خصماً وللمظلوم عوناً»

 توفي معاوية بن أبي سفيان سنة 60 هـ، وخلفه ابنه يزيد؛ فبعث يزيد إلى واليه بالمدينة لأخذ البيعة من الحسين الذي رفض أن يبايع "يزيد" كما رفض- من قبل- تعيينه وليًا للعهد في خلافة أبيه معاوية، وغادر من المدينة إلى مكة لحج بيت الله الحرام، فأرسل إليه يزيد بأنّه سيقتله إن لم يبايع حتى ولو كان متعلّقا بأستار الكعبة. فاضطر الامام الحسين عليه السلام لقطع حجّته وتحويلها إلى عمرة فقط وخرج ومعه أهل بيته وأكثر إخوته وأطفاله من مكة قاصدا الكوفة بعدما أرسل له الآلاف من أهلها الرسائل بأن أقدم فليس لنا والعادل وإنا بحاجة إلى إمام نأتم به.

 فسار ومعه نفر قليل من أهله وصحبه ولم يعبأ برأي من نصحه بالعدول عن المسير، فلما علم يزيد بذلك ولَّى عبيد الله بن زياد على الكوفة وعزل النعمان بن بشير إذ قيل عنه إنه ضعيف وعيّن ابن زياد عمر بن سعد قائداً على جيش يبلغ عدده 4000 لمحاربة الحسين، فحاربه في كربلاء وهي قرية على بُعد 25 ميلاً من شمال غربي الكوفة

وكانت قوات الحسين تتألف من 32 فارسا و 40 راجلا وأعطى رايته أخاه العباس بن علي وقبل أن تبدأ المعركة لجأ جيش ابن زياد إلى منع الماء عن الامام الحسين وأهل بيته و صحبه، فلبثوا أياماً يعانون العطش في جو صحراوي شديد الحرارة.

فقتل الحسين في هذه المعركة بعد أن جرح جراحات كثيرة وقتل من كان معه وأرسل رأسه إلى يزيد بدمشق

وكانت نتيجة المعركة ومقتل الحسين على هذا النحو مأساة مروعة أدمت قلوب المسلمين و غير المسلمين وهزت مشاعرهم في كل انحاء العالم


பெருமானார் (ஸ்ல) அவர்களது பேர்ர் ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப் பட்ட்து மிகவும் துக்க கரமானது. சோகமயமானது.

இதை பயன்படுத்தி இஸ்லாமின் எதிரிகள்  தீனில் ஷியா என்ற ஒரு பிரிவை உண்டு பண்ணி விட்டனர்.

ஆனால் அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்தான். அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் கொல்லப் பட்டதில் கடும் துயரமடைந்த போதும், தீனின் முன்னோடிகளுக்கு எதிராக திரும்பவில்லை. இதை ஒரு அரசியல் சோகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டனர். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்பலா நிகழ்ச்சி முஹர்ரம் 10 நாள் அன்று நடை பெற்றது என்றாலும். அன்றைய தினத்தை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும் கர்பலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. (இமாம்கள் ஆஷூராவின் சந்தர்ப்பத்தில் கர்ப்லாவை பற்றி பேசுவதை தவிர்ப்பது உசிதமானது.)

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இது போல ஏராளமான துய்ரச் சம்பவங்கள் உள்ளன. சுமைய்யா (ரலி) அம்மார் (ரலி) ஹம்ஸா (ரலி) போன்றவர்களுக்கு ஏற்பட்ட சோகமும் இது போன்றதே!

கர்பலாவில் இமாம் ஹிசைன் (ரலி) கொல்லப் பட்டது குடியரசுக்கான - மக்களாட்சிக்கான போராட்ட்த்தில் மக்கள்குறிப்பாக முஸ்லிம்கள் எந்த அளவு ஈடுபாடு  காட்ட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணாமாகிவிட்டது.


تركت واقعة كربلاء تأثيرا بليغا على أفكار بني الإنسان حتى غير المسلمين منهم. فعظمة الثورة وذروة التضحية، والصفات الأخرى التي يتحلى بها الحسين وأنصاره أدّت إلى عرض الكثير من الآراء حول هذه الثورة الملحمية
قال غاندي، زعيم الهند :
لقد طالعت حياة الإمام الحسين، شهيد الإسلام الكبير، ودققت النظر في صفحات كربلاء واتضح لي أن الهند إذا أرادت إحراز النصر، فلا بد لها من اقتفاء سيرة الإمام الحسين.
இந்தியா சுதந்திரம் மடைய விரும்பினார் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாறு போதும் என்றார் காந்தி .

பிரபல அமெரிக்க வரலாற்றாசிரியர் வாஷிங்டன் இர்விங்  சொன்னார்;
இமாம் ஹிசைன் விரும்பி இருந்தால் சரணடைந்து எளிதாக தப்பித்திருக்கலாம். ஆனால்
பனூ உமய்யா குடும்ப ஆட்சிக்கு இஸ்லாம் கட்டுப்பட்டு வதிலிருந்து காப்பதற்காக எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ள் அவர் தயாரானார். கர்பலாவின் மணற்பரப்பில் ஹுசைன் (ரலி) அவர்களின் உடல் சரிந்தாலும். அவரது ஆன்மா இன்னும் எஞ்சியிருக்கிறது,  

சிறந்த குடியரசுத்தலைவர்களை உருவாக்கியது மட்டுமல்லாது. குடியரசை பாதுகாப்பதற்கான முயற்சிக்கும் மிக் உன்னதமான முன்னுதாரனங்களை இஸ்லாம் உல்கிறகு வழங்கியுள்ளது.

நமது நாட்டின் குடியரசு அமைப்பை பாதுகாப்பதற்காக நமக்குள்ள கடப்பாட்டை நாம் உணர வேண்டும். அதுவே கர்பலா தரும் பாடமாகும்.



 


1 comment:


  1. மௌலானா
    மிக அருமையான நடுநிலையான கருத்துக்கள் உள்ளன. (இந்தியா சுதந்திரம் மடைய விரும்பினார் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாறு போதும் என்றார் காந்தி .)இந்த செய்திக்கான ஏதாவது ஆதாரம் கிடைத்தால் தாருங்கள்

    ReplyDelete