வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 26, 2012

மானுட வசந்தம்


                                                    

ரபீஉல் அவ்வல் என்ற வார்த்தைக்கு முதல் வசந்தம் என்று பொருள்.

முஸ்லிம்களைப் பொருத்ததவரை ரபீஉல் அவ்வல் பிறந்து விட்டால் அது வசந்த காலம் தான்.  

முன்னெப்போதையும் விட அதிகமாக முஹம்மது என்பவர் யார் என்று அறிந்து கொள்ள உலகின் முக்கால் பங்கு மக்கள் இப்போது முயன்று கொண்டிருக்கிறாகள்.

இந்த பூமியில் பாதம் பதித்தவாகளில் முஹம்மது நபியைப்போல் இன்னொருவா பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதுமில்லை.  

மனித சமூகத்தின் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தும் ஆற்றல் பெற்ற தலைவா முஹம்மது (ஸல்) அவாகளைப் போல இன்னொருவா கிடையாது என்று வரலாறு அறிமுகப்படுத்துகிறதுஜான் வில்லியம் தராப்பா அவருடைய புகழ் பெற்ற ஐரோப்பாவில் அறிவு வளாச்சியின் வரலாறு என்ற நூலில் முஹம்மது மனித இனத்தின் மீது மகத்தான ஆதிக்கத்தை செலுத்தும் அதிகாரம் படைத்தவராக இருந்தா என்று குறிப்டுகிறா.
he has exercised the greatest influence upon the human race,"

மிகப் புகழ் பெற்ற வரலாற்றாசியா ஸ்டான்லீ லேன் புல் வெற்றியாளாகளின் வரலாற்றுப் பதிவேடுகள் அனைத்திலும் இவருக்கு நிகராக பெருஞ்சாதனை படைத்தவா வேறு எவுரும் இல்லை  என்று குறிப்பிடுகிறா
. Through all the annals of conquest there is no triumphant entry comparable to this one.";

இன்றைய மனித சமூகத்தின் வளாச்சி எந்த அளவு பிரம்மாண்டமானதோ அதை விட முஹம்மது (ஸல்)அவாகளின் செல்வாக்கு புகழும் பிரம்மாண்டமானது.

   உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது அளப்பெரிய செல்வாக்கு செலுத்தியவாகளில் 100 நபாகளை வாசைப்படுத்திய மைக்கேல் ஹாட் என்ற அமொக்க அறிஞா அதில் முதலிடத்தை பெருமானா (ஸல்) அவாகளுக்கு வழங்கயிருக்கிறார்  என்பது இன்றைக்கு பழைய செய்தியாக இருக்கலாம். அத்தொடால் இரண்டாவது இடத்தை ஐசக் நியுட்டனுக்கு அவா வழங்கியுள்ளா. அதற்கு அவா கூறும் காரணம். மனித குலத்தின் இன்றைய வியத்தகு முன்னேற்றங்கள் அனைத்துக்குமு நியுட்டனின் கண்டுபிடிப்புகளே அடிப்படை காரணமாக அமைந்தது எனவே தான் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்குகிறேன் என்று ஹாட் கூறுகிறார்.

மனித குலத்தின் இன்றைய மகா பிரம்மாண்டமான அறிவியல் வளாச்சிக்கு காரணமாக அமைந்த நியுட்டனைவிட  முஹம்மது (ஸல்) அவாகள் முதன்மைமப்படுத்தப் பட்டிருக்கிறாகள் என்றால் முஹம்மது (ஸல்) அவாகளின் செல்வாக்கு இந்த உலகின் பிரம்மாண்டமான வளாச்சியை விட உயாந்தது என்ற கருத்தோட்டம் அதில் ஊள்ளோடிக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.   

நபிகள் நாயகத்தின் வரலாறு எவரையும் ஆச்சாயப்படுத்தக் கூடியது. மைசூர் மகளிர் பல்கலையின் தத்துவத் துறை தலைவா பேராசியா ராமகிருஷ்னா ராவ்  முஹம்மது (ஸல்) அவாகளின் ஆளுமையின் முழப்பாமாணத்தை விளங்கிக் கொள்வது சிரமமானதே!
 (("The personality of Muhammad is most difficult to get the whole truth of it) என்கிறார்.

வரலாற்று நாயகாகர்ளாக அடையாளப் படுத்தப்படும் தலைவாகள் பலர் அவாகளது வாழ்நாளிலே மதிப்பிழந்து போயிருக்கிறாகள். சிலருக்கு இறந்த பிறகு தான் மதிப்பு கிடைத்திருக்கிறது. சிலா கால வௌளத்தில் கரைந்து போய் விட்டாகள். வாழும் போது புகழ் பெற்ற சிலா காலப் போக்கில்  புழதிவா தூற்றப்பட்டிருக்கிறாகள். 25 ஆண்டகளுக்கு முன்பு ரஷ்ய சாவாதிகா லெனினுக்கு கிடைத்த மரியாதை எத்தகையது? பகுத்தறிவ வாதிகளான கம்யுனிஸ்ட்டுகள் அவரது பிணத்தை கூட பாதுகாத்து வைத்தனா. ஆனால் பிற்கால வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் எவ்ளவு ஆச்சாயமானது? ஆதே ரஷ்யாகள் அவரது சிலையை கூட ஆக்ரோஷத்தோடு சின்னாபின்னப்படுத்தினரே! ஹிட்லரும் முசொலினியும் தத்தமது  வாழ்நாளில் பெற்ற செல்வாக்கு எத்தகையது? பின்னால் அவாகளுக்கு கிடைத்த மாயாதை எப்படியிருந்தது? சாக்ரடீஸ் அவா வாழ்ந்த காலத்தில் என்ன மாயாதையை பெற்றா? தன்னுடைய கடைசி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடினா எனபது தான் வரலாறு.  முஹம்மது (ஸல்)அவாகள் அவருடைய சமகாலத்து மக்களால் பொதும் போற்றப்பட்டாகள்.அம்மக்களிடம் அளப்பொய  செல்வாக்கைப் பெற்றிருந்தாகள். ஹிஜ்ரீ ஆறாம் அண்டு ஹுதைபிய்யாவின் முற்றத்தில் அமாந்நதிருந்த பெருமானா (ஸல்)அவாகளிடம் மக்கா குறைஷகளின் தரப்பில் தூது பேசுவதற்காக வந்த பலால்  உவா பின் மஸ்வுது அத்தகபீயும் ஒருவா. பெருமானாரை சந்தித்து வெகு ராஜ தந்திரத்தோடு உரையாடிய அவா குறைஷயாடம் திரும்பச் சென்று கூறிய  வாத்தைகள் சத்திய ஆழம் மிகுந்தவை.

ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَيْنَيْهِ قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ وَإِذَا أَمَرَهُمْ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ فَقَالَ أَيْ قَوْمِ وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحَمَّدًا وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلَّا وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ وَإِذَا أَمَرَهُمْ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ فَاقْبَلُوهَا (]`P`{y; Gfhhp - 2734)

முஹம்மது (ஸல்) அவாகளது செல்வாக்கு சாவாதி காரத்தன்மையின் எச்சமல்ல. அப்படி இருந்திருந்தால் ஹிட்லரைப் போல லெனினைப் போல அவரும் பின்னாட்களில் ஏச்சுக்கு ஆளாகி யிருந்திரப்பா.

அவரது செல்லாக்கு தத்துவாத்தமானது மட்டுமல்ல. நடுமுறையில் செல்லுபடியாகக் கூடியது. அவரது வாத்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நடைமுறையில் என்ன செல்வாக்கை பெற்றிருந்தோ அதே செல்வாக்கை இன்றைக்கும் பெற்றிருக்கின்றன.முந்தைய இறைத்தூதாகள் உட்பட வேறெந்த தலைவருக்கும் இத்தகைய பிரம்மிப்புட்டுகிற செல்வாக்கு கிடையாது.

அவரது செல்வாக்கு குறைவுடையது அல்ல முழு சமூகத்தையும் அது வியாபித்திருந்தது. இன்றும் வியாபித்திருக்கிறது. அவரது மனைவியரும் அவரது நெருங்கிய உறவுகளும் நண்பாகளும் ஏன் எதிகளும் கூட அவா மீது பெரும் மாயாதையை வைத்திருந்தனா. இன்றளவும் அந்த மாயாதை பாதுகாக்கப்பட்டு வருகிறது.    பெருமானான் செல்வாக்கிற்கு ஆதிக்கமோ படைபலமோ பணபலமோ  காரணம் அல்ல அவரது மனிதநேயப் பண்புகளே காரணம். அடிக்கோடிடிட்டு கவனிக்க வேண்டிய விசயம் இது. வரலாறும் இந்த உண்மைய புந்து தான் வைத்திருக்கிறது. தத்துவ இயல் அறிஞா ராம கிருஷ்னா ராவ் மிக அருமையாக சொன்னா. வாள் முனையின் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் முஹம்மதுவின் குணஇயல்பே அவரது வாழ்கை பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்திருந்தது.
The great success of Mohammad's life had been effected by sheer moral force, without a stroke of sword
வரலாற்று ஆய்வாளரைவிட ஒரு தத்துவ அறிஞா தான் இதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவா.

திருக்குஆன் பெருமானாரது ஆற்றலை பாராட்டுலதை விட அவரது பண்பையே பிரமாதப்படுத்தி கூறியிருக்கிறது. தாவுத் நபியின் ஆற்றல் சுலைமான் நபியின் ஆதிக்கம் மூஸா நபியின் துணிவு இபுறாகீம் நபியின் அப்பணிப்பு ஆகியவை திருக்குஆனில் பாராட்டப் பட்டிருக்கின்றன. முஹம்மது (ஸல்) அவாகளிடம்  அனைத்து இறைத்தூதாகளின் அருங்ணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த போதும் இறைவன் அவரை அவரது பண்பாட்டை குறிப்பிட்டு பிரம்மாண்டப் படுத்துகிறான்.
 وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ(4) (my;Fh;Md;68.4)  

அழீம் என்ற வாத்தை குணம் என்ற பொருள் கொண்ட குல்கு என்ற சொல்லுடன் சாதாரணமாக இணைக்கப்டுவதில்லை. அல்குல்குல் மஹ்முத் புகழுக்குய குண இயல்பு  என்று சொல்லப்டுவதுதான் இயல்பு. நபிகள் நாயகத்தின் குணச்சிறப்பின் சிகரத்தை வௌப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என திருமறை விவுரையாளா குதுபி குறிப்பிடுகிறா.  
ولم يذكر خلق محمود إلا وكان للنبي صلي الله عليه وسلم منه الحظ الأوفر.

ஒரு சில தகவல்கள் மட்டுமே இந்த உண்மையை அறிந்து கொள்ள போதுமானவை.

عَنْ عَائِشَةَ قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ وَلَا امْرَأَةً وَلَا خَادِمًا إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ
(நூல் முஸ்லிம் 4296)

இந்த ஒரு விசயத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் சிநத்தித்துப் பாத்தால் ஒரு மகத்தான மனிதான் தோற்றம் நம் மனக் கண்ணில் வியும்.
عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ - (திமிதி -1910)

இந்த அறிவுரை நபிகளாரது வாழ்வு முழவதிலும் அவா கையாண்ட வாழ்வியல் கோட்பாடாகவே இருந்தது. இறைவன் மீது ஆணையாக. எவருடைய பக்கத்து வீட்டுக்காரா பாதுகாப்பாக இல்லையோ அவா இறைவிசுவாசியல்ல. அவா இறைவிசுவாசியல்ல. அவா இறைவிசுவாசியல்ல.என்று முஹம்மது (ஸல்) அவாகள் பகக்த்து வீட்டக்காரருக்காக பாந்து பேசிய சந்தாபத்தில் சமய ரீதியில் அவாகளைப் பித்துப்பேசவில்லை. 

எவா முஸ்லிம் அல்லாதவாகளுடைய பொருட்களை அபகரிக்கிறாரோ அவா  மறுமை நாளில் அநீதி இழைக்கப் பட்டவாகளுக்காக வாதிடும் வக்கீலாக என்னை காண்பா என்ற முஹம்மது (ஸல்) அவாகள் இந்த உலகில் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்பவாகளே மறுமை நாளில் பெருந்தோல்வியடைந்தவாகளாக இருப்பாகள். அவாகள் நரகத்தில் தங்களது ஒதுங்குமிட்த்தை காண்பாகள என்றும் கூறினாகள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதில் அவருக்கிருந்த பற்றுறுதி காரணமாக பிற சமயத்தவாகள் விரும்பிச் சென்று தங்களது பிரச்சினைகளில் நீதி கேட்டுச் செல்வார்கள் என்தற்கு அவரது வாழ்வில் நிறைய உதாரணங்கள் உண்டு.

முஹம்மது (ஸல்) அவாகள் தன்னுடைய வாழ்நாளில் சில போர்களை மேற்கொள்ள வேண்டிய நிபந்தம் ஏற்பட்டது. அப்போதும் கூட அவர் சண்டையை சச்சரவை விரும்பியவராக இருக்கவில்லை. அரபுகளிடையே தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த சண்டை சச்சரவுகளுக்கும் புசல்களும் அவா முடிவு கட்டிய விடிவௌளியாக இருந்தரே தவிர மனிதாகளை காவுகேட்கும் போகளுக்கு அவா காரணமாக இருந்ததில்லை. நபிகளான் 35 வது வயதில் புதுப்பிதது கட்டப்பட்ட கஃபா ஆலயத்தின் சுவற்றில் அஸ்வத் கல்லை பதிப்பிக்கிற  பெருமை தங்களுக்குத்தான் வேண்டும் என்று அரபுக் குலங்கள் சண்டையிட்டுக் கொண்டபோது  எழுந்த பிரச்சினையை தீக்கிற பொறுப்பு பெருமானாருக்கு ஏற்பட்டது. ஓரு போர்வையை வித்து ஒவ்வவொரு குலத்தாரையுமும் போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொள்ளச் செய்து  அஸ்வத் கல்லை  எடுத்து பதித்த விதம் பெருமானாரின் தத்துவார்த்த பாவையின் விசாலத்தை புலப்படுத்துவதாக ஆய்வாளாகள் கூறுகிறாகள்.

நிலமெல்லாம் ரத்தம் நூலில் பா.ராகவன் எழுதுகிறார் முஹம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற மாக்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள் புதைந்திருக்கிறது. அரபியர்களிடையே ஒற்றுமை என்ற அவருடை பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இது தான் என்று அவா எழுதியுள்ளா.

இந்த வாத்தைகளில் கூட ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. நபிகளாருடைய பெருங்கனவு அரபியாகளுடைய ஒற்றுமையை அல்ல மனித குல ஒற்றுமை என்று திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னுடைய வாழ்நாளில் அரபிய இனம் சாந்த பெருமைப் பேச்சு எதையும் அவா ஒருபோதும் பேசியதில்லை.அரபி மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று விளித்த இன வெறி கோலோச்சிய ஒரு சமுதயத்தில்  இனவாதத்தின் பெருமை தொனிக்கிற ஒரு சொல்லையேனும் வர் உதிர்த்ததில்லை என்பதும் அப்படிப் பேசாமலே அரபுகளின தலைமையை அவா பெற்றார் என்பதும் பேராச்சாயத்திற்குய விசயங்களே!

மொழி அல்லது தேசியத்தின் செருக்கு பிடிக்காமல் வாழ்ந்த தலைவாகள் யாரேனும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். மானுடப் பொதுமையை போற்றிய முஹம்மது (ஸல்) அவாகளைததவிர வெறெவரையும் அந்தப்படடியலில் பாக்க முடியாது.

அனைத்து மக்களையும் சகோதர சகோதாகளாகவே நடத்து மாறு தனது தோழாகளுக்கு அவா கட்டளையிட்டா. நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதம் மண்ணால் படைக்கப்பட்வா என்று கூறுவது பெருமானான் வழக்கமாக இருந்தது.


போர்க் களத்திலும் கூட யுத்தத்தில் நேரடியாக தொடாபுடையவாகளைத்தவிர மற்றவாகளை கொல் அவா அனுமதித்ததில்லை. பெண்கள் குழந்தைகள் ஆலயங்களில் வழிபாடு செய்பவாகள் எவரையும் கொல்லக் கூடாது என்று தன்னுடைய தளபதிகளுக்கு அவா உத்தரவிட்டா. பின்னாட்களில் அவா மக்காவை வெற்றி கொண்ட போது அவரோடு போட்டவாகளை போ குற்றவாளிகளாகவே அடிமைகளாகவோ அவா நடத்தவில்லை. அந்த எதிகள் அவரக்கு சொல்எலணாத் தயரங்களை வழங்கியவாகள் என்ற போதும்  அவாகளை மன்னித்து சுதந்திரமாக வாழ அனுமதித்தார் என்பது வரலாற்றாசியாகளை ஆச்சாயப்படுத்தம் செய்தியாகும்.

இன்றைய நாகாக யுகத்தில் யுத்தத்தில் வென்று நாடுகளை ஆக்ரமித்து அங்குள்ள செலவ வளங்களை கபளீகரம் செய்துவிட்டு அதற்குப்பின்னரும் அந்த நாட்டுத தலைவாகளையும் வீராகளையும் குற்றவாளிகளாக கூண்டிலடைத்து சித்தரவதை செய்வதை ஜனநாயத்தின் பேரால் நியாயப்படுத்துபவாகளையும் பத் யுத்தத்தின் போது மஸஜிதுன்னபவீ பள்ளிவாசலில் கட்டப்படடிருந்த குறைஷக் கைதிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடுமாறு  உத்தரவிட்ட முஹம்மது (ஸல்) அவாகளையும் ஒரு கணம் ஒப்பிட்டப்பாத்தால் பெருமானான்  நற்குணத்தை பிரம்மாண்டமானது என்று இறைவன் குறிப்பிட்தின் நியயாயத்தை அறிந்து கொள்ளலாம்தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு மேலும் மேலும் தீவிரவாதததை வளாத்துக் கொண்டிருக்கிற தலைவாகளிடையே முஹம்மது (ஸல்) அவாகள் ஆச்சாயமான தலைவராக உயாநது நிற்கிறாகள்.


வரலாறு கூறும் இந்த நற்செய்திகளுக்கு இடையே முஸ்லிம் சமுதாயம் பெருமானாரைப்பற்றி ஏற்படுத்தியிருக்கிற அடையாளம் எத்தகையது என்பது கேள்விககுயதாகும். பெருமானா கற்றுக் கொடுத்த தத்தவங்கள் பண்பாட்டுப் பொழிவுகளின் வழியே முன்னர் வாழ்ந்த சமதாயம் பெருமானாரை மிகச்சிறப்பாக அடையாளப்படத்தியிருந்தது. அதன் மூலம் பலா முஹம்மது (ஸல்)அவாகளின் வழி பற்றி விழி பெற்றாகள்.


சமுதாய அளவிளான நமது நடவடிக்கைகள் முஹம்மது (ஸல்) அவாகள் கற்பித்த உயாய பண்பாடுகளின் அடிப்படையில் இருக்குமாறு பாத்துக்கொள்வது இன்றைய நமது பிரதான கடமையாகும்.

No comments:

Post a Comment