நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாராவது குறை பேசினால் பெருமானார் திருப்பி பேச மாட்டார்கள். ஆனால் அல்லாஹ் சும்மா இருப்பதில்லை.
அல்லாஹ் இரண்டு வழிகளை கையாண்டான்
1. ஒன்று அல்லாஹ்வே பதில் அளிப்பான்
2. எதிரிகளை வைத்தே பெருமானாரின் சிறப்பை பேசவைப்பான்.
அல்லாஹ் பதிலளித்த்து.
பெருமானார் (ஸல்) கஃபாவில் தொழுது கொண்டிருந்தார். மக்காவின் குறைஷிகள் அன்னாரது செல்வாக்கு உயர்ந்து வருவதைப் பற்றி கவலையாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆஸ் பின் வாயில் சொன்னான், “ கவலையை விடுங்கள் அவர் நாதியற்றவர். இவரோடு இவரது கதை முடிந்து விடும்”
இந்தக் கொடும் வார்த்தை அல்லாஹ்வுக்கு பொருக்கவில்லை. பெருமானாருக்கு நிறைய அருள் வளம் தருவதாக வாக்களித்த பிறகு அல்லாஹ் அந்த எதிரிகளை சபித்தான் .
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ(1)فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ(2)إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ(3)
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ(
قال أهل اللغة: الأبتر من الرجال: الذي لا ولد له, ومن الدواب الذي لا ذنب له. وكل أمر انقطع من الخير أثره, فهو أبتر.
قال ابن عباس ومجاهد وسعيد بن جبير وقتاد نزلت في العاص بن وائل وقال محمد بن إسحاق عن يزيد بن رومان قال: كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول دعوه فإنه رجل أبتر لا عقب له فإذا هلك انقطع ذكره فأنزل الله هذه السورة
بل قد أبقى الله ذكره على رءوس الأشهاد وأوجب شرعه على رقاب العباد مستمرا على دوام الآباد إلى يوم المحشر والمعاد صلوات الله وسلامه عليه دائما إلى يوم التناد. ( إبن كثير)
பெருமானாரின் புகழ் வற்றவில்லை. அவரது வழி முறைகளைப் பற்றும் கோடான கோடி மக்கள் பிறந்தார்கள். பிறக்கிறார்கள். இனியும் பிறப்பார்கள்.
அவரைப் போல பின்பற்றப் படுகிறவர் யாருமில்லை.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும்.
முஹம்மது நபி (ஸல்) இன்றளவும் கண்டங்கள் அத்தனையும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேணும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப் படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.
· காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம்,
· வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம்.
· பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம்.
· இன்றைய வால்ஸ்ட்ரீ சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறைய்யற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்
· அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம்.
· நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைகாக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம்,
பெருமானாருக்கு எதிரான பழிச் சொற்களை எதிரிகளே மறுத்தல்
மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மது விடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும்.
ما أنتم بقائلين بشيئ فيه إلا عرف أنه باطل ( إبن هشام)
சமீப வரலாற்றில் சிலுவை யுத்தங்களின் போது ஐரோப்பிய கிருத்துவர்கள் பெருமானார் மீது நியாயமற்ற பழிச் சொற்களை கூறினர்.
அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.
அல்லாஹ் அவர்களிலிருந்தே ஒருவரை தேர்ந்தெடுத்தான்.
1840 ம் மே 8 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் தாமஸ் கார்லைல் ஐரோப்பியர்களிடையே உரையாற்றினார்.
“It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver
இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏறபது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்று கூறினார்.
“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”
“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”
பெருமானாரின் திருமணங்களுக்கு சிற்றின்ப ஆசை காரணமல்ல என்பதை கார்லைல் அற்புதமாக விளக்கினார்.
“முஹ்ம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் செல்லப் படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”
தம் பெயருக்கு ஏற்ப பெருமானார் புகழப்படுபவராக திகழ்கிறார். எத்தனை சல்மான் ருஷ்டிகள் வந்தாலும் அண்ணலாரின் புகழை குறைக்க முடியாது.
மேலதிக தக்வல்களுக்கு இந்த மாத “ சமநிலைச் சமுதாயம்” விமர்சன்ங்களை வென்றவர் கட்டுரையை பார்த்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment