வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, February 22, 2012

பிள்ளைகள் நல்லவர்களாக...


(அஸ்ஸலாமு அலைக்கும். ஆலிம் பெருமக்களே!
இந்த முக்கியமான தலைப்பை அழுத்தமாக பதிப்பதற்காக, உங்களது பகுதிக்கு ஏற்ப விரிவு படுத்தி  தேவையெனில் இதையே இரண்டு வாரங்களுக்கு பிரித்துக் கொள்ளலாம்.)

கஹ்பு அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை தோறும் ஓதி வரும் படி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எந்த நிலையிலும் நாம் மறந்து விடக்கூடாத பல தத்துவங்கள் அதில் சொல்லப் பட்டுள்ளன. அதில் ஒன்று பிள்ளைகளால் பெற்றோருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து பற்றியது.

மூஸா அலை தனது ஆன்மீக ஆசானுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது அவர் ஒரு பையனை கொன்று விட்டார்.  
فَانطَلَقَا حَتَّى إِذَا لَقِيَا غُلَامًا فَقَتَلَهُ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا(74)قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا(75

மூஸா (அலை) ஆட்சேபித்தார். ஒரு நபி தனது கண்ணுக்கு நேரே ஒரு தீமை நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நான் ஆட்சேபனை செய்யாமல் வருவேன் என்ற ஒப்பந்தத்தை தாண்டி ஆட்சேபித்தார்

இதற்கான காரணத்தை பின்னர் கிழ்ர் விளக்கினார்.
وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَنْ يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا(80)فَأَرَدْنَا أَنْ يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا(81)

عن ابن عباس عن أبي بن كعب عن النبي صلى الله عليه وسلم قال" الغلام الذي قتله الخضر طبع يوم طبع كافرًا "رواه ابن جرير من حديث ابن إسحاق عن سعيد عن ابن عباس به ولهذا قال " فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا " أي يحملهما حبه على متابعته على الكفر

ஏதோ பழங்காலத்து சுவையான கதை என்று இதை அலட்சியப் படுத்தி விடக்கூடாது. இதில் பல த்த்துவங்கள் சொல்லப்படுகின்றன.

 قال قتادة: قد فرح به أبواه حين ولد وحزنا عليه حين قتل ولو بقي لكان فيه هلاكهما فليرضى امرؤ بقضاء الله فإن قضاء الله للمؤمن فما يكره خير له من قضائه فيما يحب
وصح في الحديث " لا يقضي الله لمؤمن قضاء إلا كان خيرًا له "وقال تعالى " وعسى أن تكرهواشيئا وهو خير لكم ".
மிக முக்கியமான தத்துவம்
நமது பிள்ளைகளால் நமது ஈமான் பறி போகக் கூடும் என்ற ஆபத்து பற்றி தெளிவான எச்சரிக்கையை இது தருகிறது.

ஈமான் பறிபோவது எல்லா ஆபத்துக்களை காட்டிலும் பெரிய ஆபத்து.
தவறான பிள்ளைகளால் எல்லா வகையிலும் ஆபத்துக்கள் ஏற்படலாம்.

சென்னையில் ஒரு பையன் ஆசிரியரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான.

அவனது பெற்றோர்களைப் பற்றி பதிரிகைகள் விமர்ச்சிக்கின்றன. அந்தக் குடும்பம் அவமானத்திற்கும் தலைக் குனிவிற்கும் ஆளாகி நிற்கிறது? அந்தப் பெற்றோர்களுக்கு இனி எத்தனை அலைச்சல் அவமானம் காத்திருக்கிறது?

நாம் நல்லவர்களாக இருந்தால் கூட நமது பிள்ளைகளால் தீடீரென நமக்கு ஆபத்து அவமானமும் ஏற்படக் கூடும் எனில் நாம் என்ன செய்வது?
இத்தகைய விபத்துக்களிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது?

தீர்வு 1
ஈமானிய வழக்கப் படி முதலில் அல்லாஹ்விடம் தஞ்சமடைவோம்.
திருக்குர் ஆன் கற்றுத்தரும் ஒரு அருமையான அனைவரும் கேட்க வேண்டிய துஆ

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنْ الْمُسْلِمِينَ(15 – الأحقاف

وقال مالك بن مقول: اشتكى أبو معشر ابنه إلى طلحة بن مصرف, فقال: استعن عليه بهذه الآية, وتلا: "رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين".
   واصلح لي في ذرتيي  என்பதன் விளக்கம்  
وقال أبو عثمان: اجعلهم أبرارا لي مطيعين لك.
இன்னொரு விளக்கம்.
وقال محمد بن علي: لا تجعل للشيطان والنفس والهوى عليهم سبيلا.

நமது பிள்ளைகளை எந்த அடிப்படையில் நாம் வளர்க்க வேண்டும் என்பதை இந்த வசனம் கற்றுத்தருகிறது.   

தீர்வு 2

நாம் ஏன் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறோம் என்ற சிந்தனை தெளிவு வேண்டும்!
ஏன் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்ற கேள்விக்கே நம்மிடம் பதில் இல்லை!
·         திருமணம் செய்து கொள்வது நாம் சாலிஹானவர்களாக வாழ்வதற்கு.
·         பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது சாலிஹான மனிதர்களை பெருக்குவதற்கு.

சாலிஹான மகன் / சாலிஹான மகள்/சாலிஹான் டாக்டர். சாலிஹான வக்கீல் சாலிஹான இன்ஞினியர் சாலிஹான வியாபாரி என்ற அமைப்பில் நம்முடை பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை அமைய வேண்டும்.

சாலிஹான என்ற வார்த்தை எல்லா நல்ல அம்சங்களையும் கொண்ட்தாகும். தகுதியான் ஒழுக்கமான ஆரோக்கியமான நல்ல பிள்ளை என்று அதற்கு பொருள் வரும்.

இப்படி நாம் யோசிக்கிறோமா?

இந்தச் சிந்தனை அடிப்படையில் நம்மிடம் இருந்தால் நமது பிள்ளையின் ஒவ்வொரு அம்சத்திலும் சலாஹிய்யத் எனும் தன்மையை நாம் கவனிப்போம்.
அன்பு செலுத்து கிற போது பிள்ளை கெட்டுப் போகிற அளவு அன்பு செலுத்த மாட்டோம்
கோபிக்கிற போதும் பிள்ளை விரக்தி அடைகிற அளவு கோபிக்க மாட்டோம்.
காசு கொடுக்கிற போதும், கல்வி கொடுக்கிற போதும், கலாச்சாரங்களை பழக்கப் படுத்துகிற போதும். சாலிஹான பிள்ளை எனும் இலட்சியம் நமக்கு தேவையான வழிகாட்டுதலை தரும்.

தீர்வு 3
இன்னொரு முக்கிய விசயம். எந்த காரியத்திற்கும் நல்ல சிந்தனையும் நல்ல துஆ மட்டுமே போதுமானதல்ல நமது நடவடிக்கை களும் வேண்டும்.
إهدنا الصراط المستقيم    என்று துஆ செய்து கொண்டே கண்ணை மூடிக் கொண்டு சாலையில் செல்லக் கூடாது. கண்களை திறந்து வைத்து நேரான வழியை தேடிப்பார்க்க வேண்டும்.

பிள்ளைகள் சாலிஹானவர்களாக திகழ்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை பெற்றோர்களே உருவாக்க வேண்டும். அது ஆசிரியர்களின் பொறுப்பல்ல.
1.   பிள்ளைகளின் தொழுகையில் அக்கறை செலுத்துதல்

أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ عَلَيْهِ السَّلَام لَيْلَةً فَقَالَ أَلَا تُصَلِّيَانِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا فَانْصَرَفَ حِينَ قُلْنَا ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُوَلٍّ يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا  - البخاري

2.   வீட்டிற்குள் இஸ்லாமிய நடைமுறைகளை பழக்கப் படுத்துதல்சலாம்குரான்திக்ர்
قَالَ كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُعَلِّمُ الْغِلْمَانَ الْكِتَابَةَ وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ - البخاري 2822

3.   நல்லொழுக்கப் பயிற்சிகளை நயமாக கற்பித்தல்
·        أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ-  ترمذي
·        عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ – ترمذي
·        قَالَ مُصْعَبَ بْنَ سَعْدٍ  : صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ – البخاري 790

4.  பெரியவர்களை மதிக்கும் இயல்புகட்டுப்பாட்டுக்குப் பழக்குதல்

ஒரு காலம் இருந்த்து. வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால் குழந்தைகளை அறிமுகப் படுத்தி ஒதச் சொல்லி துஆ சொல்லச் சொல்லி உற்சாகப் படுத்துவார்கள். “ துஆ செய்யுங்கள் என்று கேட்கச் சொல்வார்கள்.    இப்போது சினிமா பாட்டு பாடச் சொல்லி ஆடச் சொல்லி உற்சாகப் படுத்துகிறார்கள்
இப்போது வீட்டுக்கு வரும் பெரியவர்களை குழந்தைகள் கண்டுகொள்வதே இல்லை. அதைப் பற்றிய அக்கறையும் நமக்கு இல்லை.   

5.   குறைந்த பட்சம் பிள்ளைகள் கெட்டுப் போகாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்
·         அதிக செல்லம். தப்பு செய்தால் கண்டு கொள்ளாமல் இருப்பது.ஆதரிப்பது
·         அதிக பணம் கொடுப்பது

முஸ்லிம்கள் தான் இந்த தீமையை சாதாரணமாக செய்கிறார்கள். பிரமாணர்கள் கல்லூரிக்கு போகிற பையனுக்கு 10 ரூபாய், தயிர் சாதம் கொடுத்தனுப்புகிறார்கள், முஸ்லிம்கள் பள்ளிக் கூடம் செல்கிற பையனுக்கு பைக் நூற்றுக் கணக்கில் பணம் கொடுக்கிறார்கள்.
எதற்காக பணம் ? என்ன ஆச்சு மிச்சம் ? எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

6.  கண்காணிக்கத் தவறுவது
·         எங்களது பள்ளிவாசலில் ட்யூசனில் படிக்கிற பையன்  வீட்டில் பீஸ் பணம் கொடுத்து விட்டால் அதற்கு பானி பூரி வாங்கித் தின்று விட்டு ஒன்றும் தெரியாதவனைப் போல இருந்து விட்டான், பல மாதத்திற்கு பிறகுதான் உண்மை தெரிந்தது.
·         பல் இடங்களிலும் பெண் பிள்ளைகளின் தவறான நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்காணிக்கத்தவறுவதே காரணமாகிறது. வீட்டை விட்டு ஒடிப்போன பெண்களில் பலரை பற்றிய தகவல்களை விசாரித்த போது அது பற்றிய விபரம் அம்மாக்களுக்கு ஓரளவு தெரிந்தே இருக்கிறது.
·         இது போலவே ஆண் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் குறித்து நுணுக்கமாக ஆராய வேண்டும்.
·         இதில் தாய்மார்களின் பொறுப்பு மிகவும் அதிகம், சிகெரட் உள்ளிட்ட தீய பழக்கங்கள் கொண்ட பையன்கள், தேவையற்ற செல்போன் பேச்சுக்களில் ஈடுபடும் பிள்ளைகள் பற்றி அம்மாக்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது. பிள்ளைகளின் மாற்றம் அம்மாக்களின் கண்களை விட்டு மறைய வாய்ப்பில்லை. அவர்கள் இதை அசட்டை செய்வதும், பிள்ளைகளை நினைத்து பயப்படுவதுமே பிரச்சினைகளை பெரிதாக்கி விடுகிறது. உரிய நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் எனில் பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
·         பிள்ளை வளர்ப்பு குறித்து தாய்மார்களிடம் மறுமையில் விசாரிக்கப் படும்.
·         قال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ – الخاري  894
·         குழந்தைகள் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'அமானிதம் ஆகும். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடக்கூடாது. குழந்தைகளை முறையாக வளர்க்கவில்லையெனில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும்.


7.   சகஜமான உறவு முறை அவசியம்.

பிள்ளைகளை வளர்ப்பது என்றால் அவர்களை மிரட்டி வைப்பது என பல தந்தைகளுக்ம் நினைக்கிறாகள்.  மிரட்டுவது வளர்ர்பு அல்ல; அவர்களை மதித்துப் பழகுவெதே வளர்ப்பு
عَنْ أَنَس بْن مَالِكٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة – 3661


சில குடும்பங்களில் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களை குழந்தைகளாகவே நினைக்கிறார்கள், பிள்ளைகளின் கருத்துக் களை கேட்பதில்லை. இளம் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு அன்னியத்தன்மை நிலவுகிறது, மூன்றாவது ஆளை வைத்து சொந்த பிள்ளையின் கருத்தை அறிய முயற்சி செய்கிறார்கள், இந்த நிலை தவறு.

பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவது, அவர்களோடு கல்ந்து கல்கலப்பாக பேசுவது, உங்களது நன்மைக்காகத் தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உங்களது விருப்பத்தை தாராளமாக எங்களிடம் சொல்லுங்கள் என்று ஊக்கப்படுத்துவது பிள்ளைகள் பெற்றோர்களை விட்டு அன்னியமாகாமல் இருக்க உதவும்.


இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
நமது பிள்ளைகள் சம்பாதிப்பவர்களாக அல்லது வசதி படைத்தவர்களாக  இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே  நாம் அதிகம் கவலைப்படுகிறோம்.
ஒன்றை மறந்து விடக்கூடாது. பிள்ளைகள் சாலிஹானவர்களாக இருந்தால் மட்டுமே நம்க்கும் சமுதாயத்திற்கும் பயன்படுவார்கள்.
 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ مسلم -3084


No comments:

Post a Comment