உலகம் முழுவதிலும் 180 கோடி முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர்.
அனைவரது நோன்பும் ஒரே மாதிரி ஒரு யூனிபார்மாக இருக்கிறது.
சூரியோதயத்திற்கு அஸ்தமனத்திற்கு மிடையே ஏற்ப்டுகிற கால வித்தியாசத்தை தவிர.
இப்போது இந்தியாவில் நாம் சுமார் 14 ½ மணி நேரம் நோன்பு நோற்கிறோம் மாஸ்கோவில் 2 ½ மணிக்கு சஹர் முடிகிறது. நோன்பு திறக்கும் நேரம் இரவு 9.30 இஷ 11.45.
சஹர் உணவும் இப்தார் உணவும் வேறுபடலாம்; ஆனால் நோன்பின் வடிவம் ஒரே மாதிரி இருக்கிறது.
முந்தைய சமூகங்களிலும் நோன்பு கடமையாக்கப் பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அதை பல விதத்திலும் மாற்றிக் கொண்டுவிட்டனர்.
எல்லா இறைக்கட்டளைகளையும் தங்களிஷ்டத்திற்கு திரித்துக் கொண்டு வாழும் யூதர்கள் கடமையான நோன்பையும் திரித்து விட்டனர். யூத மதத்தில் இப்போது நோன்பு என்பது தனிநபர்கள் விரும்பினால் மேற்கொள்ளும் ஒரு வணக்கமாக இருக்கிறதே தவிர சமூக ரீதியான வணக்கமாக் இல்லை.
கிருத்துவர்களிடமும் அப்படித்தான் லெந்து கால வணக்கம் என்ற பெயரில் நவம்பர் டிஸம்பர் மாதங்களில் 40 நாள் விரதம் என்ற விரத நடை முறை இருக்கிறது. ஆனால் அது திட்டமிட்ட வரைமுறை இல்லாததாகவும் விரும்பினால் நோற்கும் விரதமாக , குறிப்பாக பாதிர்களும் கன்னியாஸ்திரிகளும் மேற்கொள்ளும் விரதமாக இருக்கிறது.
இந்துக்களிடத்தில் விரதத்திற்கு பொதுவான இலக்கணமோ காலமோ, கட்டாயமோ இல்லை. அவரவர் இஷ்டத்திற்கு கட்டமைத்துக் கொண்டததாக இந்து விரதம் இருக்கிறது.
அதே போல, திட உணவை சாப்பிடாமல் சிறிது நேரம் இருப்பது அல்லது கறி போன்ற சிறப்பான உணவை தவிர்ப்பது மாத்திரமே நோன்பாக பிற சமய மக்களிடம் கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் நோன்பு ஒரு சர்வதேச சட்ட விதிகளை கொண்ட, ஒழுங்கமைப்புக் கொண்டது..
கண்டிப்பாகஉணவு தண்ணீர் காமம் ஆகிய மூன்றையும் முற்றிலும் தவிர்த்துக் கொள்ள் வேண்டும். காலை முதல் மாலை வரை.
கண்டிப்பாகஉணவு தண்ணீர் காமம் ஆகிய மூன்றையும் முற்றிலும் தவிர்த்துக் கொள்ள் வேண்டும். காலை முதல் மாலை வரை.
والصوم في الشرع الإمساك عن المفطرات مع اقتران النية به من طلوع الفجر إلى غروب الشمس
வாலிபர்கள், சிறுவர்கள் பெண்கள் முதியேர் ஆகிய அனைவருக்கும் ஒரே மாதிரியாக
1500 வருடங்களாக முஸ்லிம்களின் நோன்பு எந்த சிறு மாற்றத்திற்கு ஆளாகவிலை..
இஸ்லாமிய நோன்பின் விஷேச அம்சங்கள் : சஹர் இப்தார்
நோன்பு திறப்பதில் அவசரம் காட்ட வேண்டும்,
சஹர் சாப்பிட வேண்டும், அதையும் கடைசி நேரத்தில் சாப்பிட வேண்டும், தொடர் நோன்பு கூடாது என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
சஹர் சாப்பிட வேண்டும், அதையும் கடைசி நேரத்தில் சாப்பிட வேண்டும், தொடர் நோன்பு கூடாது என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
- عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ - بخاري 1957
- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا – ترمذي -636
- عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً - بخاري
- عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ
- عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ - إبن ماجة 1683
- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْوِصَالِ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى – بخاري 1962
14 மணி நேரம் நோன்பு பிடிக்கிறோம். ஒரு அரைமணி நேரம் தமதித்தால் என்ன?
ஏன் இப்படி பரபரவென்று நோன்பு திறக்க வேண்டும்?
அது போல சஹர் செய்து நோன்பு வைக்க ஏன் வலியுறுத்த வெண்டும்?
ஏன் இப்படி பரபரவென்று நோன்பு திறக்க வேண்டும்?
அது போல சஹர் செய்து நோன்பு வைக்க ஏன் வலியுறுத்த வெண்டும்?
அற்புதமான திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது.
யாரும் பக்தி என்ற பெயரில் நான் இன்னும் இரண்டு மணி நேரம் அதிகமாக நோன்பு பிடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அதை மார்க்கம் என்று இஸ்லாம் ஏற்காது.
இஸ்லாத்தில் பிறழ்தல்கள் ஏற்படாமல் இருக்க இது பிரதான காரணமாகும். கடைசி மார்க்கத்த்த்தை கியாமத் வரை கொண்டு செல்வதற்காக இறவனின் திட்டமிட்ட ஏற்பாடு இது
தீனை பாதுகாப்பதில் பெருமானாரின் தீட்சணயமான வழிகாட்டுதலாக இவை அமைந்துள்ளன, இஸ்லாத்தின் மெருகு குலையாமல் இருக்க இத்தகைய ஏற்பாடுகள் துணை செய்கின்றன.
இந்த வழிகாட்டுதல்களை சரியாக கடைபிடிக்கிற ஒவ்வொரு தருணத்திலும் முஸ்லிம், ஒரு சுன்னத்தை கடைபிடித்தவராக மட்டுமல்ல.. மற்ற சமயங்களுக்கு நேர்ந்த பாதிப்பிற்கு ஆட்படாமல் தீனின் அடிப்படை அடையாளத்தை பாதுகாத்தவராகவும் ஆகிறார்.
நோன்பு ஏராளமான ஆன்மீக மற்றும் வாழ்வியல் நன்மைகளை தருகிறது,
عن أبي أمامة قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بأمر آخذه عنك قال عليك بالصوم فإنه لا مثل له
عن
أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من
صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا- بخاري
عن
أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة
فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي
نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها - بخاري
أبا
هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل
عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم
صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم
والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم
فرحتان يفرحهما إذا أفطر فرح وإذا لقي ربه فرح بصومه
عن أبي سلمة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
நோன்பின் நோக்கம் மானுடத்தின் உயர் பண்பாடுகளை பழக்கப் படுத்துவது.
عن
أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد
الصوم زاد محرز في حديثه وقال رسول الله صلى الله عليه وسلم الصيام نصف
الصبر إبن ماجة
عن
أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع
قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه- ترمذي
நோன்பின் பயன்
- மருத்துவ ரீதியாக குடலுக்கு ஓய்வு
- ஆன்மீக ரீதியாக இறைவனோடு நெருக்கம்
- சமூக ரீதியாக இரக்க உனர்வு பெருகுதல்
நம்மை போல தானே மற்றவர்களுக்கு பசிக்கும் மற்ற தேவைகள் இருக்கும் என ஒவ்வொரு மனிதனையும் நோன்பு உணரச் செய்கிறது.
நமக்கு
ஏற்பட்ட தாகம் போலத் தானே இந்த நாயுக்கு தாகம் ஏற்படும் என உணர்ந்து
நாய்க்கு தண்ணீர் புகட்டிய தீய நடத்தை கொண்ட பெண் சொர்ர்க்கம் சென்றார் என
நபி (ஸல்) அவர்கள் கூறியதை இங்கு நினைவு கூறுவது பொருத்தம்.
இந்த உணர்வே மனிதனை புனிதனாக்குவதில் முதனமைப் பங்கு வகிக்கிறது.
நோன்பினால் சமூகத்துக்கு கிடைக்க கூடிய மாபெரும் பரிசு பசியறிதல் எனும் பண்பை மக்கள் உணாந்து கொள்வதாகும்.
ஆயிரம் உபதேசஙகளால் சாதிக்க முடியாததை ஒரு பகல் நேர நோன்பு சாததித்து விடும் ஆற்றலை பெற்றிருக்கிறது. நூறு புரட்சிகளாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை சறிது நேர நோன்பின் வறட்சி ஏற்படுத்திவிடுகிறது.
பிரஞ்சு
தேசத்தில் பசி பொறுக்க முடியாமல் வொசேல் அரண்மனைக்கு வெளியே ரொட்டி
வேண்டும் என்று ஆப்பட்டம் செய்த மக்களை பாத்த்து பிரஞ்சு மன்னன் பதினாறாம்
லூயியின் மனைவி ரொட்டிகிடைக்கவில்லையா கேக் சாப்பிடுஙகள் என்றாள் என்கிறது பிரஞ்சுப்புரட்சியின் வரலாறு .
பெருமானான் துணைவியார், அன்னை ஆயிஷா அம்மையா அவாகள் தன்னிடம் யாசகம் கேட்டு வந்த ஏழை தாயை கண்டு இரஙகி தன்னிடமிருந்த ஒரே போத்தம்பழத்தையும் அவருக்கு தாமம் செய்தார் என்பது இஸ்லாமிய வரலாறு
இந்த இரண்டு வரலாற்றுக்கும் இடையே உள்ள இமாலய வேற்றுமக்கு நோன்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
நமது நோன்பு பசித்திருத்தலாக மட்டும் இல்லாமல் அதன் மாண்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைய அல்லாஹ் கிருபை செய்வானாக!
பிரஞ்சு மன்னனின் மனைவி, அன்னை ஆயிஷா ரலி-அன்ஹா இவர்கள் இருவருக்கும் இடையே செய்துள்ள ஒப்பீடு மிக அருமை.
ReplyDeletearumaiyaana pathivu thaanks kovai abdul aziz avarkale
ReplyDelete