வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 16, 2012

தீமைக்கு துணையாக வேண்டாம்.



وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

புனிதம் மிக்க ரமலான் நம்மிடமிருந்து விடைபெறுகிறது.
ரமலான் நமது ஈமானிய் வாழ்வின் வசந்தம்
நாம் நிறைய நல் அமல்கள் செய்தோம்
குறிப்பாக நிறைய ஸஜ்தா செய்தோம்
افضل عبادات البدنية الصلوة
நோன்புதான் கஷ்டமான வணக்கம். அதிக நேரம் பிடிக்க கூடியது.
ஆனால் தொழுகை தான் சிறந்த வணக்கம். ஏன் தெரிய்மா? அதில் சஜ்தா இருக்கிறது. لأن فيها السجود
·         ஒரு மனிதன் தன்னுடைய அதிக பட்ச பணிவையும் வணக்கத்தைய்ம் வெளிப்படுத்தும் இடம் ஸ்ஜ்தா.

·         ஒரு சுஜூது சைத்தானின் வாழ்க்கையை திருப்பி விட்ட்து.

·         ஸ்ஜ்தாவின் நன்மை

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَأْكُلُ النَّارُ ابْنَ آدَمَ إِلَّا أَثَرَ السُّجُودِ حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ  أَثَرَ السُّجُودِ- أبن ماجة

ரமலானில் ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தது 100 ஸ்ஜ்தாக்களை செய்யும் வாய்ப்பை பெற்றோம்.

இதி போலவே நோன்பு வைக்கவும் இப்தாருக்கும் ஸஹ்ர் செய்யவும் வாய்ப்பு பெற்றோம். நோன்பு மட்டுமல்ல இப்தாரும் ஸஹ்ரும் கூட நன்மை மிக்க காரியங்களே!

குர் ஆனை ஓதவும் கேட்கவும் பாக்கியம் கிடைத்த்து.
தர்மங்கள் செய்யவும் பயான் கள் கேட்கவும் பள்ளிவாசல்கள்களில் அதிக நேரம் இருக்கவும் வாய்ப்புக்கிடைத்தது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இப்போது ரமலானுக்கு விடை கொடுக்கிற தருணம் வந்து விட்டது,

இந்த  ஜும் ஆவில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.
ரமலானில் கூடுமானவரை தீமைகளிலிருந்து விலகி இருந்தோம்.
இனி வரும் காலத்திலிம் அதை கடை பிடிப்போம்.
உரிய அளவுக்கு நன்மை செய்யாவிட்டாலும் கூட தீமைகளிலிருந்து விலகிக் கொள்ளும் அளவுக்கு நாம் வெற்றி பெற முடியும்.
فَإِنْ انتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ(192
நாம் தப்பு செய்யாவிட்டாலும் கூட சில சமயங்களில் தீய விசயங்களுக்கு நாம் துணை போகிறோம்.
அது மாதிரி சந்தர்ப்பங்களில் தீமைகளின் கனம் என்ன என்பது குட நமக்கு தெரியாது. ஆனால் பெரும் பாவத்திற்கு நாம் காரணமாக் இருந்திருப்போம். அதனால் வாழ்க்கையில் நாம் முக்கியமாக ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய செய்தி இது. தீமைக்கு துணை போய்விடக்கூடாது.

தீமைக்கு துணை போனவர்கள் பெரும் சிரமத்தையும் இழிவையும் வேதனைகளையும் சந்தித்திருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகை தேவையில்லாத ஒரு பிரச்சினை உலுக்கி எடுத்த்து.

குர்ஆன் படைப்பு என்று உமைய்யா மன்னர் மஃமூன் சொன்னார்.

நம்மிடமிருக்கிற குர் ஆனின் பிரதிகள் படைப்பாக இருக்கலாம். அல்லாஹ்வின் கலாமான குர் ஆன் படைப்பு அல்ல என்பது சுன்னத் ஜமாத் ஆலிம்களின் நிலை.

கலீபா மஃமூன் தன் வழிக்கு வராதவர்களை எல்லாம் கொலை செய்தார். இறுதியில் பக்தாதில் 4 ஆலிம்கள் மட்டும் எஞ்சியிருந்தார்கள். அதிலும் இரண்டு பேர் அக்கருத்துக்கு உடன்பட்டு தப்பித்துக் கொண்டார்கள், இருவரைத்தவிர
أمر المأمون أن يقبض على الإمامِ أحمدَ بن حنبل ومحمدِ بن نوح، وأن يرسلا إليه، فأُرسلا مقيدين على بعير واحد، فأما محمد بن نوح فمات رحمه الله في الطريق قبل أن يصل إلى المأمون في طرسوس.
இமாம் அஹ்மது பின் ஹன்பல் கடைசி வரை அசத்தியத்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சிறையில் அடைக்கப்பட்டார்.  சாட்டையால் அடிக்கப்பட்டார்.
இறுதியில் இமாம் அஹ்மது வென்றார். பின்னர் வந்த கலீபா முதவக்கில் இது தேவையற்ற தீய விவாதம் இனிமேல் இதை யாரும் எழுப்பக் கூடாது என்று உத்தரவிட்டார். இமாம் அஹ்மதை பெரிதும் போற்றினார். இமாம் அஹ்மது அவர்களோ அரசர்களின் சித்ரவதையையும் சட்டை செய்யவில்லை. அரசர்களின் உபசரிப்பையும் சட்டை செய்யவில்லை.
ஆனால் இமாம் அஹ்மதின் வரலாற்றில் கிடைக்கிற பல அரிய பாடங்களில் மிக் முக்கியமானது.
இந்த குழப்பச் சூழ்நிலையில் தீமைக்கு துணை போன அனைவரும் பெரும் அந்தஸ்திலும் அதிகார வட்ட்த்திற்கு நெருக்கமாக இருதபோதும்
மிக மோசமான நிலையை அடைந்தார்கள்.
ஆட்சியாளர்களை இத்தகை கொடுமைக்கு தூண்டி அதை நியாயப்படுத்திய முக்கிய நபர். காழி அபூதாவூத். அமைச்சரைப் போல வாழ்ந்தவன் கேட்பாரற்று மரணமானான். எதிர்பாரத முடிவு இது,
القاضي المعتزلي أحمد بن أبي دؤاد فمكث أربع سنوات قبل موته، طريحاً في فراشه.
فعزله المتوكل أمر المتوكل بمصادرة جميع أمواله، ثم أتي بولده محمد فصودرت أمواله ومات قبل أبيه بشهر، ثم مات الأب بعده بهمه وغمه

இமாம் அஹ்மதை சவுக்கால் அடித்த இருவர்;
الجلادون :  أبو ذر، وأبو العروق
أما أبو ذر فأصيب بالبرص والمرض، وتقطع جسمه، وأهلكه الله بسوء عمله.
وأما أبو العروق;  يقول عمران بن موسى: دخلت على أبي العروق لأنظر إليه، فمكث خمسة وأربعين يوماً ينبح كما ينبح الكلب، ابتلاه الله بمرض فصار ينبح كالكلاب
அரசர்களை இதில் தூண்டி விட்டு அவர்கள் செய்யும் கொடுமையை நியாயப்படுத்திக் கொண்டுருந்த இருவர்
الذين كانوا يوقدون الفتنة، الوزير محمد بن عبد الملك بن الزيات وهرثمة

ஒரு முறை கலீபா முதவக்கில் முன்னர் நடைபெற்ற கொடுமைகளை நினவு கூர்ந்து வருத்தப் பட்டுக்கொண்டிருந்த போது அஹ்மது பின் நஸ்ர் (இமாம் அஹ்மது அல்ல. இவர் வேறு) என்பவர் இந்தக் குழப்பத்தில் கொல்லப்பட்ட்தை நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருந்தபோது அவரது முன்னிலையில் அமைச்சர்களாக இருந்த இவ்விருவரும் அதை ஆதரித்து போசுவதாக நினைத்து தீவிரமாக கருத்துச் சொன்னார்கள்.
أما ابن الزيات فقد قال له المتوكل: في قلبي شيء من قتل أحمد بن نصر، فقال: يا أمير المؤمنين: أحرقني الله بالنار إن قتله أمير المؤمنين الواثق إلا كافراً.
أما هرثمة فقال: قطعني الله إرباً إرباً إن قتله إلا كافراً.
முந்தைய மன்ன வாஸிக் செய்த்து சரிதான். இல்லை என்றால் அல்லாஹ் என்னை கரித்துப் போடட்டும் என்றார் ابن الزيات

முந்தைய மன்ன வாஸிக் செய்த்து சரிதான். இல்லை என்றால் அல்லாஹ் துண்டு துண்டாக வெட்டிப் போட்டும் என்றார் هرثمة

தீமைகளுக்கு துணை நின்றவர்களுக்கு அவர்கள் பேசிய வார்த்தைகளே தண்டனையாக அமைந்தன. 
 أما ابن الزيات الوزير، فقد ساءت الأحوال بينه وبين المتوكل فأصدر أمراً بالقبض عليه واعتقاله، فقيد بالحديد وأدخل السجن، وصودرت أمواله وبساتينه، ثم أمر الخليفة أن يُعذب وأن يمنع من الكلام والنوم، ثم وضع بعد ذلك في تنور من خشب، فيه مسامير قائمة في أسفله فأقيم عليها، حتى مات وهو كذلك.
وأما هرثمة الذي قال، قطعني الله إرباً إرباً، فقد هرب من المتوكل، فمر بقبيلةِ خزاعة، قبيلةِ الإمام أحمد بن نصر الخزاعي، فعرفه رجل من الحي، فصرخ بالناس: يا معشر خزاعة هذا الذي قتل ابن عمكم أحمد بن نصر، فاجتمع الناس عليه وقطعوه إرباً إرباً. وجزاء سيئة بمثلها
இந்த தகவல்கள் அதிக அச்சத்தை தருகின்றன. நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் இது.
வாழ்வில் எங்காவது எப்போதாதாவது தீய காரியங்களுக்கு துணை போய்விட்டால், அது நம்மை பெரிதும் பாதித்து விடக்கூடும்

இன்றைய காலகட்ட்த்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய கருத்து இது.
முஸ்லிம்கள் சமூகத்தில் தீய சக்திகளுக்கு பணத்தாலோ. செல்வாக்காலோ. அனுதாபம் தெரிவிப்பதன் மூலமோ ஆதரவு தெரிவிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூக அமைதியை குலைக்கிற சக்திகளுக்கு அவர்கள் சில நல்ல காரியங்களை செய்கிறார்கள் என்று சொல்லி ஆதரவு தெரிவித்து விடக்கூடாது.

அமைப்புக்கள் இயக்கங்களின் பெய்ரால் செயல்படுகிறர்வர்களும் கவனிக்க வேண்டும். இன்றுள்ள சூழ்நிலை மாறுகிற போது தவறுகள் தூசி தட்டி எடுக்கப் பட்டு தண்டனைக்கு ஆளாக நேரும்.
அல்லாஹ் நம் அனை வரையும் பாதுகாத்தருள்புரிவானாக!

ரமலான் விடை பெறுகிற போது நாம் உறுதியேறகத்தகுந்த ஒரு பொருத்தமான காரியம் இது.
புனித மிக்க ரமலானின் கிருபையால் தீமைகளிலிருந்து தொடர்ந்து விலகி இருக்கவும். தீமைகளுக்கு எந்த வகையிலும் துணை போகாதிருக்கவும் அல்லாஹ் கிருபை செய்வானாக!

1 comment:

  1. அ.அ.பாகவி மன்றம்
    ஈத் முபாரக்
    வெள்ளிமேடை உறுப்பினர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் ஈத்முபாரக் நல்வாழ்த்துக்கள்/

    ReplyDelete