பத்ரிகைகளை திறந்தால் படுகொலை, கொள்ளை, வழிப்பறிகள்,
கற்பழிப்புகள் மானபங்கப்படுத்துதல்கள் பற்றிய செய்திகள் தான் அதிக மாக வருகின்றன.
சென்ற வாரம் புது தில்லியில் இரவு நேரத்தில் பஸ்ஸில்
பயணித்த பெண்ணை 5 நண்பர்கள் கொடூரமாக தாக்கி கற்பழித்த நிகழ்வு நாட்டையே உலுக்கியது.
பாராளுமன்றத்தை அதிர வைத்த்து.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பவன் என்பவன் என்னை தூக்கில்
போடுங்கள் நான் கொடூரமான குற்றத்தை செய்து விட்டேன் என்று கதறியிருக்கிறான்.
இத்தனைக்கும் பின்னணியில் மதுவின் மாயம் மறைந்திருக்கிறது.
இந்தச் செய்திகள் ஒவ்வொன்றிலும் மதுக் குடித்து விட்டு
என்ற வார்த்தை தவறாமல் இடம் பெறுவதை காண்லாம்.
மது அருந்துவது தீயவர்களின் பழக்கம் கெட்ட பழக்கம் என்ற
நிலை மாறி அது வாழ்க்கையில் ஒரு அங்கம் என்ற கலாச்சார சூழல் ஏற்பட்டு விட்ட்து.
பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் இந்த கொடூரத்திற்கு
ஆட்படுகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் 28 வயதுக்கு மேறபட்டவர்கள் குடிப்பை
பார்க்க முடிந்த்து இப்போது 13 வயது சிறுவர்கள் குடிக்கிறார்கள்
திருப்பூரில் ஒரு கல்லூரி மாணவி தன்னுடன் படிக்கும் மாற்று
மத்த்தை சார்ந்த வடநாட்டை பூர்வீகமாக கொண்ட
மாணவிகள் தங்களது புத்தக் பைகளுடன் ஒயின் எடுத்து வந்து குடிப்பதாகவும் தோழிகளை குடிக்கத்
தூண்டுவதாகவும் கூறினார். தமது சகோதர்ர்களே அதை வாங்கிக் கொடுப்பதாக அப்பெண்கள் கூறுவதாகவும்
அவர் கூறினார்.
தமிழகத்தில் ஒரு கோடிப்பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாகவும் விரைவில் அந்த
எண்ணிக்கை 2 கோடியை தொட்டுவிடும் என்று இன்று வைக்கோ எச்சரித்திருக்கிறார்.
இது விசயத்தில் நம்பிக்கையளிக்கிற செய்தி தமிழகத்தில் இரண்டு அரசியல் தலைவர்கள்
மதுவிற்கு எதிரான போராட்ட்த்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
முன்று நாட்களுக்கு முன் மதுக் கடைகளுக்கு பூட்டு
போடும் போராட்ட்த்தை டாக்டர் ராமதாஸ் நட்த்தினார்.
கடந்த சில நாட்களாக வைக்கோ தமிழ்நாடும் முழுவது
நடை பயணம் செய்து மதுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நல்லவர்களை வாழ்த்துகிறோம். காரணம் மதுவிற்கு
எதிராக பிரச்சாரம் செய்வதற்கு இன்றைக்கு ஒரு தனி தகுதி தேவையாக இருக்கிறது.
பல தலைவர்கள் மது விற்பனையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அரசாங்கமே மதுவின் வருமானத்தை நமிபியிருக்கிறது.
தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில்,
3,128 ஊரக பகுதிகளிலும்,
3,562 நகரப்
பகுதிகளிலும் அடங்கும். இந்த கடைகள் மூலம்
2003&2004ம் ஆண்டில்
ஜெயலலிதா ஆட்சியில் வருவாய்
3639.93
கோடியாக இருந்தது. தற்போது, 2010&2011ல் டாஸ்மாக் வருவாய் 14,965.42 கோடியாக உள்ளது. அசுர வேகத்தில் அரசு வருவாய் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.81 சதவீதம் வளர்ச்சி ஆகும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 2011 செப்டம்பர் மாதம் சட்டசபையில் கூறினார்.
இதை விமர்சனம் செய்த தினமணி இப்படிக் கேட்ட்து/
2003-04-ம்
ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965
கோடி.இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா?
மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5
மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள் எனறு திணமணி சொல்கிறது.
கல்வித்துறையை தனியாரிடம் விட்டு விட்டு கள்ளுக்கடைகளை
அரசே ஏற்று நட்த்துகிற கொடுமையான ஒரு காலகட்ட்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேம்,.
இந்தச் சூழலில் தங்களது சமுதாயம்
பாதிக்கப் பட்டிருப்பதை உணர்ந்து மதுவுக்கு
எதிராக போராட்டம் நட்த்தி வரும் அரசியல் தலைவர்களுக்கும் சமுதாயப் பெரியோர்களுக்கும்
இஸ்லாத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்பதோடு ஒரு முக்கிய வழிகாட்டுதலை
தருகிறோம்.
மது விற்கு எதிராக வெற்றி
கண்ட ஒரே சமய்ம் இஸ்லாம். ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம்.
இது விச்யத்தில் இஸ்லாத்தின்
ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள்.
இஸ்லாம் மதுவை தடை செய்த
வரலாற்றை ஊன்றிப் படியுங்கள்.
முதலில் மதுவுக்கு எதிரான
கருத்தை ஆழமாக நியாயமக பதிவு செய்யுங்கள். அதற்கான புகைப்படங்கள் வீடியோ காட்சிகளை
வைத்து பிரச்சாரம் செய்யுங்கள்.
மது ஒழிப்பு என்பது அரசை
எதிர்ப்பது அல்லது கள்ளுக்கடைகளை எதிர்ப்பது என்பதிலிருந்து தொடங்காமல் மக்களிடம் மனமாற்றத்தை
ஏறபடுத்திலிருந்து தொடங்கள் வேண்டும்,
மதுவில் மய்ங்கிக் கிட்ந்த
சமூகத்தில் திருக்குர் ஆன் மதுவைப் பற்றிய தன்னுடைய கருத்தை சொன்னது. (2.219)
முதலில் பெருமானார் மதீனாவுக்கு வந்தவுடன் உமர். முஆத் பின் ஜபல், மற்றும்
சில அன்சாரி நபித்தோழர்கள் மதுவை பற்றி அறிவுரைகள் தருமாறு கேட்டனர். அப்போது இந்த
வசணம் அருளப்பெற்றது.
يَسْأَلُونَكَ
عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ
وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا
عبدالرحمن بن زيد بن أسلم: إن هذه أول آية
نزلت في الخمر "يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير" ثم نزلت الآية
التي في سورة النساء ثم نزلت الآية التي في المائدة فحرمت الخمر. (إبن كثير)
இதில் தீமைகள் அதிகம்
என்று குர் ஆன் சொன்னதுமே பலர் மதுவை தவிர்த்தனர்.
அடுத்த்தாக் ஒரு முறை
அப்துர்ரஹ்மான் பின் அவப் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்றவர்கள் மதுவருந்திய
நிலையில் மஃரிபு தொழுதனர். அப்போது தொழவைத்த நபித்தோழர் اعبد ما تعبدون என்று ஓதினார்.
அது ஒரு பெரிய தவறாக அந்தச் சமூகத்தால் உணரப்பட்ட்து. அப்போது அந்நிஸா அத்தியாயத்தின்
வசன்ம் அருளப்பட்ட்து.
النساء "يا أيها الذين آمنوا لا تقربوا
الصلاة وأنتم سكارى"
இதை சரிதான் என்று அந்தச் சமூகம் ஒத்துக் கொண்ட்து.
ஒரு சரியான சந்தர்ப்பத்தை குர் ஆன் பயன்படுத்திக் கொண்ட்து.
மது அருந்தியவர்கள் சமூகத்தில் அழகிய முறையில்
ஒதுக்கி வைக்கப் பட்டார்கள்.
فكان منادي رسول الله - صلى الله عليه وسلم
- إذا أقام الصلاة نادى "أن لا يقربن الصلاة سكران" (إبن كثير)
அதற்குப்பின்னர் இதபான் பின் மாலிக் (ரலி) ஏற்பாடு
செய்த ஒரு விருந்தில் மது அருந்திய தோழர்களில் சஃது பின் அபூவக்காஸ் (ரலி) படித்த ஒரு
பாடலால் சண்டை மூண்ட்து. அன்சாரி ஒருவர் ஒட்டக எலும்பினால் தாக்கியதில் சஃது (ரலி)
ன் மண்டை உடைந்த்து. அதனால் பெரும் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்ட்ட்து. அந்த சந்தர்ப்பத்தையும்
இஸ்லாம் அற்புதமாக் பயன்படுத்திக் கொண்ட்து. மதுவை தடை செய்த வசனமும் அதனால் ஏற்படும்
சமூக தீமைகளை எச்சரிக்கும் வசன்மும் அருளப்பட்ட்து.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ
الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ
الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ
اللَّهِ وَعَنْ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ(91) المائدة
அதன் பிறகு மது குறித்து நபி (ஸல்) அவர்கள் சமூகத்தை தொடர்ந்து
எச்சரித்தார்கள்.
وعن أبي هريرة رضي الله عنه أَنَّ
رَسُولَ الله × قَالَ: «لا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ،
وَلا يَشْرَبُ الخَـمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ، وَلا يَسْرِقُ حِينَ
يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلا يَنْتَـهِبُ نُـهْبَةً يَرْفَعُ النَّاسُ إلَيْـهِ
فِيهَا أَبْصَارَهُـمْ وَهُوَ مُؤْمِنٌ». متفق عليه(
عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ
جَيْشَانَ وَجَيْشَانُ مِنْ الْيَمَنِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنْ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَ مُسْكِرٌ هُوَ قَالَ نَعَمْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ
عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ
مِنْ طِينَةِ الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ
عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ - مسلم 2002
عن
ابن عمر رضي الله عنهما أَنَّ رَسُولَ
ا٬ ﷺ قَالَ: «مَنْ
شَرِبَ الْـخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ».
متفق عليه
ஹதீஸீன் கருத்து.
مَنْ شرب الخمر في الدنيا ولم يتب لم
يشربها في الآخرة وإن أُدخل الجنة،
ولا يدخل الجنة مدمن خمر،
ومَنْ شربها وسكر لم تقبل له صلاة أربعين
صباحاً، وإن مات دخل النار، فإن تاب تاب الله عليه،
ومَنْ كرر شربها سقاه الله يوم القيامة
من عصارة أهل النار.
போதையூட்டும் அனைத்தையும் தடை செய்தார்கள்
فقال رسول
الله ×:
«كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ». متفق عليه(.البخاري
برقم (5586
குடிப்பது மட்டுமல்ல மது சார்ந்த அனைத்து வடிவங்களும்
தடுக்கப்பட்டன
الخمر أم الخبائث، ويحرم تعاطيها بأي صورة كانت، شرباً، أو بيعاً، أو
شراء، أو تصنيعاً، أو أيَّ خدمة تؤدي إلى شربها
குறைந்த போதை அதிக போதை, கொஞ்சமாக குடித்தல் வழக்கமாக
குடித்தல், அனைத்தும் தடுக்கப்பட்டவையே! சிவிலியன்களுக்கு கூடாது. இராணுவத்திற்கு கூடும்
என்ற பாகுபாடும் இல்லை. யாரும் எந்த நிலையிலும் குடிக்க அனுமதியில்லை.
மருந்தாக பயன்படுத்துவதும் தடுக்கப்பட்ட்தே! ஹராமில்
ஷிபா கிடையாது.
பிறகு மது அருந்துபவர்களுக்கு பொது இட்த்தில் தண்டனை
வழங்கப்பட்ட்து.
إذا شرب المسلم الخمر فعليه الحد أربعون جلدة، وللإمام أن يبلغ
به الثمانين تعزيراً إن رأى انهماك الناس في الشراب.
مَنْ شرب الخمر في المرة الأولى جُلد حد الخمر،
فإن شرب ثانية جُلد، فإن شرب ثالثة جُلد، فإن شرب رابعة فللإمام حبسه أو قتله
تعزيراً؛ صيانة للعباد، وردعاً للفساد.
மது ஒழிப்புக்காக போராடுகிறவர்கள்
·
மக்களிடம் மன மாற்றத்தை
ஏற்படுத்த முதலில் முயற்சி செய்ய வேண்டும்.
·
மதுவின் தீமைகள் தொடர்ந்து
பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.
·
மது அருந்துபவர்கள்
சமூகத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும்
·
முடிந்தால் பஞ்சாயத்துக்களின்
வழி தண்டனைகள் தரப்பட வேண்டும்
·
மது வியாபாரம் செய்பவர்களையும்
அதன் வருமானம் புறக்கணிக்கப்பட வேண்டும்
·
சமீப காலமாக தமிழ்
சினிமாக்களில் மது ஒரு சாதரண விசயமாக ஹீரோக்களின் ஒரு பழக்கமாக காட்டப்படுகிறது. இனி
அத்தகைய சித்தரிப்புக்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். சினிமாக்களின் வழியாகத்தான்
மதுப் பழக்கம் பெருகுகிறது.
·
இது விச்யத்தில் சட்டம்
இயற்றாத அரசு மக்கள் நலனில் அக்கறை அற்ற அரசு என்பதை மக்கள் மனதில் பதியும் வண்ணம்
போராட்டங்களும் விளக்க கூட்டங்களும் நட்த்தப்ப்படனும்
·
மதுவினால் சமூகத்தில்
பெரும் தீமைகள் ஏற்படுகிற போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி மக்களை உஷார் படுத்த
வேண்டும்.
·
மதுவை மட்டுமல்ல அனைத்து
போதை வஸ்த்துக்களையும் தடை செய்ய வேண்டும்.
முஸ்லிம்களிடம் சில இடங்களில் இந்தப் பழக்கம் பெருகிவருகிறது.
சமீபத்தில் என்னை அதிர வைத்த ஒரு நிகழ்வு
மதுவுக்கு அடிமையான ஒரு முஸ்லிம் தன்னுடைய 13 வயது மகளை கூட்டுக் குடிகாரணுக்கு எட்டாயிரம்
ரூபாயுக்கு விலை பேசியிருக்கிறான்.
அந்த மாற்று ஜாதிக்கார்ர். அவனது மனைவியை எச்சரிக்கை
செய்து குழந்தையை காப்பாற்றியிருக்கிறார். இப்போது குடும்பம் பிரிந்து கிடக்கிறது.
முஸ்லிம் இளம் பெண்கள் பலர் குடிக்கிற கணவனை ஆரம்பத்தில்
சகித்துக் கொள்கிறார்கள் ,அது பின்னால் பிரச்சனையாகும் போது தான் பஞ்சாயத்திற்கு வருகிறர்கள்.
குடிக்கிற கணவன் ஆபத்தானவன். அதை ஆரம்பத்திலேயே
தட்டிக் கேட்க சீர்திருத்த முயற்சி செய்ய வேண்டும். குடிக்கிறவனை சகித்துக் கொண்டிருக்க
கூடாது.
முஸ்லிம் வாலிபர்களிடம் பான் பராக் போதை பீடாக்களின்
பழக்கம் அதிகரித்திருக்கிறது.
மது ஒரு தீமை அல்ல. அது சகல தீமைகளுக்கும் தாய் என்பதை புரிய
வைப்பதும் உணர்த்துவதும் அதை தடுப்பதும் நமது கடைமையாகும்.
ALHAMDHU LILLAH GANNIYAM NIRAINDHA VELLIMEDAIYIN THANDHAI AVRGALE MIGA MIGA ARUMAIYANA MADHU OLIPPU SATTATHAI KATTURAIYIN MULAM THANTHULLIIRGAL JAZAAKALLAH
ReplyDelete