காலத்தின் அருமை மனிதன் உணர்வதில்லை. டைம் பாஸ் என்பதை போல் அக்கிரம்மான வார்த்தை வேறில்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதமான ஒரு ஹதீஸ் மறக்க கூடாத்து.
عَنْ ابْنِ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ
وَالْفَرَاغُ
ஆரோக்கியம் எத்தனை மதிப்பு மிக்கது – நமது ஆரோக்கியத்தின் மதிப்பை நாம் உணர்வதில்லை.
முழங்கால் வழி வந்து விட்டால் சர்க்கரை வந்து விட்டால் எவ்வளவு சிரம்ம்?
அரசு பொது மருத்துவமனைக்கு சென்று பாருங்கள! எத்தனை கஷ்டங்களோடு மக்கள் வாழ்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்த உலகை தங்களது காலடியில் வைத்திருந்தவர்கள் இப்போது
எத்த்கைய சிரமத்திலும் வேதனையிலும் அல்ல்ல்படுகிறார்கள் என்பதை பார்த்தால் நமக்கு தற்போது
கிடைத்திருகிற ஆரோக்கியத்தின் மரியாதை எத்தகையது என் அறியலாம்.
நமக்கு
கிடைத்திருக்கிற காலமும் அப்படித்தான் இந்த உலகில் அல்லாஹ் நமக்கு வழங்கிய நிஃமத்துக்களில்
மிக முக்கியமானது.
நம்முடைய
கேபிடல் – முதலீடு
– காலம் தான். காலத்தில் தான் எல்லாம் நடக்கிறது.
நாம் கடைவீதிக்குப் போகிறோம். எதைப் பார்த்தாலும் நம்மிடமிருப்பது நாபகத்திற்கு வருகிறது. ரெடிமேட் சட்டையைப் பார்த்தால் – சப்பல் க்டையை பார்த்தால் – நம்மிடம் இருப்பதை பார்த்துக் கொள்கிறோம். ஒரு பெரியவர் ஐஸ் கீரீம் பார்லைரைப் பார்த்த்து விட்டு சொன்னார். நான் ஐஸ் கிரீம் பார்லரைப் பார்த்தேன் எனக்கு والعصر சூரா ஞாபகத்திற்கு வந்த்த்து,
والعصر إن الإنسان لفي خسر
ஐஸ் கீரிம் வியாபாரி தன்னுடைய முதலீடு முழுவதையும் ஐஸ்கிரீமில் வைத்திருக்கிறான். கொஞ்சம் கவன்ம் தவறினாலும் அவனுடைய முதலீடு தண்ணீராக கறைந்து விடும்
அது போலத்தான் காலமும். காலத்தை கவனமாக கவனிக்கத்தவறியன் நஷடமடைவான்.
மிக்க முக்கியமாக நாபகத்தில் வைக்க வேண்டியது.
நஷ்டம் என்பது இலாபத்தில் குறைவது அல்ல. முதல் குறைவதாகும்.
மனிதனின் முதலே நேரம் தான்.
மைக்ரோ சாப்டின் பில்கேட்ஸின் ஒரு நிமிட உழைப்புக்கு என்ன மரியாதை? இன்றைய தொழில் முதலீட்டாளர்களின் ஒவ்வொரு நிமிட்த்திற்கும் எவ்வளவு மரியாதை?
நம்மிடமிருக்கிற அதே நேரம் தான் அவர்களிடமும் இருக்கிறது.
அவர்களின்
நிமிடங்கள் எவ்வளவு மரியாதைக்குரியதாக இருந்தாலும் அவர்களுக்குரிய அளவு முடிந்து விட்டால்
சேமித்தது அத்தனையை கொடுத்தாலும் ஒரு நிமிடம் கூட அவருக்கு அதிகமாக கிடைக்காது.
ஜஸ்ட் என் மினிட் என்று இப்போது சாதாரணமாக காலத்தை கோருகிறோம். எ மினிட் என்பது சாதாரண விசயமா என்ன?
ஒரு அனுப மொழி இருக்கிறது.
ஒரு நிமிட்த்தின் அருமை எத்தகையது என்பதை இரயில் புறப்பட்ட பின் நிலையம் வந்து சேருபவனை கேட்டுப் பாருங்கள்! அரை மணி நேரத்தின் அருமை எத்தகையது என்பதை பரீட்சை எழுதுபவனை கேட்டுப்பாருங்கள். ஒரு வருட்த்தின் அருமை எத்தகையது என்பதை பிரிந்திருந்த தம்பதியை கேட்டுப்பாருங்கள்.
இந்த உலகின் நேரம் மிக அருமையானது அரிதானது
மறுமையின் முக்கியமானது எது?
இந்த உலகில் மனிதன் கடந்து போன காலம் தான்.
அல்லாஹ்வை நினைக்காத நேரத்தை நினைத்து மனிதன் அதிகம் கவலைப்படுவான்.
நரக வாசிகளின் புலம்புதலை திருக்குர் ஆன் சொல்லிக் காட்டுகிறது.
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا
نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ
فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمْ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ
نَصِيرٍ(37) فاطر
எங்களை வெளியே அனுப்பு என்று அவர்கள் கேட்பதில்லை. எங்களை அமலின் உலகிற்கு திருப்பி அனுப்பு என்று கேட்பார்கள். இந்த உலகிற்கு திரும்பி வர ஆசைப்படுவார்கள்.
அமல்களுக்கான
இந்த உலகின் பெறுமை என்ன என்பது அப்போது தெரியும்.
ஆனால்
அப்போது கலங்கி கவலைப்படுவதாலோ என்ன பயனும் இருக்காது.
இவ்வளவு மரியாதைக்குரிய நேரத்தை வீண்டிப்பது - டைம் பாஸ் - பன்ன நினைப்பது புத்திசாலித்தனமாகுமா?
அதனால் தான் டைம்பாஸாக மட்டுமே அமைகிற விளையாட்டு கலை கலாச்சார நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கிறது.
நான் தந்த ஆயிரம் ரூபாயை நீங்கள் வீண்டித்தால் எனது முதல் எதிரி நீங்கள் அல்லவா? அவ்வாறே காலத்தை வீணடிப்பவர்கள் அல்லாஹ்வுக்கு கோபமூட்டுகிறார்கள்.
நூறு ஏடுகளையும் நான்கு வேதங்களையும் அல்லாஹ் கொடுத்து
மனிதனின் நேரத்தை உபயோகப்படுத்துவதற்காக
அனைத்து வேதங்களின் இது சொல்லப்பட்டுள்ளது. மற்ற வேதங்களில் சொல்லப்பட்ட்து குர்
ஆனில் என்ன இருக்கிறது என தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களீடம் கேட்ட போது பெருமானார் இந்த ஆயத்தை ஓதிக்காட்டினார்கள். காலத்தை எப்படிப்பயண்படுத்திக் கொள்ளவேண்டும்
என்பது பற்றி இது கூறுகிறது.
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى(14)وَذَكَرَ
اسْمَ رَبِّهِ فَصَلَّى(15)بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا(16)وَالْآخِرَةُ
خَيْرٌ وَأَبْقَى(17)إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى(18)صُحُفِ إِبْرَاهِيمَ
وَمُوسَى(19)
புதிய ஆண்டின் தொடக்கம் நமது கடந்த ஆண்டை எடை போடுவதற்கு புதிய ஆண்டில் நமக்கு கிடைக்கிற பொன்னான மணித்துளிகளின் மரியாதையை புரிந்து நடந்து கொள்வோம்.
إن صلوتي ونسكي ومحياي ومماتي لله رب
العالمين
என்று ஒவ்வொரு தொழுகையின் போதும் கூறுகிறோம்.
நமது நேரம் அல்லாஹ்வின் அன்பை பெறுகிற வகையில்
அமையுமாறு பார்த்துக் கொள்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
புதிய ஆண்டு முழுவதும் நன்மையும் மகிழ்ச்சியும் நிறையட்டும். இஸ்லாமும் முஸ்லிம்களும் வெற்றி கொள்ளட்டும்.
No comments:
Post a Comment