வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 03, 2013

பெண்களின் பாதுகாப்பு யார் கையில்?


பெண்களின் பாதுகாப்பு குறித்து இப்போது பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பு என்பது சாமாண்ய விவகாரமல்ல அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும்.

பெண்களை கேலி செய்தால் பெண்களை மானபங்கப் படுத்தினார்ல்
சமூகப் பதற்றம் உருவாகும்.

பனூ கைன்காஃ வின் ஒருவன் செய்த தவறு அந்த சமூகத்தையே மதீனாவை விட்டு  வெளியேற்றியது.   

كان من أمر بني قينقاع أن امرأة من العرب قدمت بجلب لها فباعته بسوق بني قينقاع وجلست إلى صائغ بها فجعلوا يريدونها على كشف وجهها فأبت فعمد الصائغ إلى طرف ثوبها فعقده إلى ظهرها فلما قامت انكشفت سوءتها فضحكوا منها فصاحت، فوثب رجل من المسلمين على الصائغ فقتله، وكان يهودياً فشدت اليهود على المسلم فقتلوه، فاستصرخ أهل المسلم المسلمين على اليهود، فغضب المسلمون فوقع الشر بينهم وبين بني قينقاع.

இப்போது தில்லியில் பெண்ணுக்கு ஏற்பட்ட மானபங்கமும் கொலை இந்தியாவில் ஒரு பெரும் புயலை உருவாக்கியிருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு குறீத்து ஆலோசனை சொல்வதற்காகவே மத்திய அரசு ஒரு நபர் கமிஷன் அமைத்திருக்கிறது.

கட்சிகள் கருத்து தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

தொலைக்காட்சிகள் சரமாரியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தமிழக முதலமைச்சர் பெண்களை கற்பழிப்போரின் ஆண்மையை இரசயானம் மூலம் இழக்க செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தலையை விட்டு விட்டு வாலைப்பிடித்த கதை போலத்தான் இப்போது சொல்லப்படுகிற ஆலோசனைகள் அமைந்திருக்கின்றன.

பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என்று மெதுவாக கருத்துச் சொன்ன சிலர் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இப்போதிருக்கிற கர்மா கரம் சூழ்நிலையில் எதுக்கு இது மாதிரியான கருத்துக்களை சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என பலர் பேசா மடந்தைகளாக இருக்கிறார்கள்.

இஸ்லாம் எந்தச் சூழலிலிம் தன்னுடை கருத்தை உறுதியாக தெரிவித்து விடுகிறது.

இப்போதைய பிரச்சினைக்கும் இஸ்லாமிடம் அற்புதமான தீர்வு உண்டு. அது ஏற்கப்படுமானால் பெண்களின் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்படும். குற்றம் செய்ய யாரும் பயப்படுவார்கள். முக்கியமாக குற்றம் நிகழும் சூழ்நிலைகள் வெகுவாக கட்டுப்படுத்தப் படும்

பெண்கள் பர்தா முறைக்கு உட்பட வேண்டும்

பர்தா, பெண் தொல்லைக்கு ஆளாவதை தடுக்கும் ஏற்பாடே தவிர அடக்கியாள்வதின் அடையாளம் அல்ல. இதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பர்தா பெண்களை பாதுகாப்பான சூழலில் இருக்கச் சொல்கிறது.
பர்தா என்பது பெண்கள் தங்களது பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவதாகும்.

பர்தா என்பது புர்கா போடுவது மாத்திரமல்ல. பர்தாவின் முதல் தரம் அந்நிய ஆண்களின் முன் தேவையில்லாமல் வெளிப்படாமல் இருப்பதாகும்.

ஜைனப் அம்மையாரை திருமணம் முடித்த பெருமானார் தோழர்களுக்கு வலீமா விருந்து கொடுத்தார்கள். அந்தச் சிறிய அறையில் ஒரு புறம் ஜைனப் அம்மையார் உட்கார்ந்திருக்க மறுபுறம் தோழர்கள் உட்கார்ந்திருந்தனர். அது ஜைனப் அம்மையாருக்கு கூச்சத்தை அளித்தது.

உமர் (ரலி) அவர்கள் يأتيك البر والفاجر   நீங்கள் ஏன் திரையிட்டுக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். அப்போது தான் பர்தாவை கடமையாக்கிய வசனம் அருளப்பட்ட்து.

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
பெண்கள் அந்நிய ஆடவர் அனைவரின் பார்வையிலிருந்தும் தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் அதுவே முதல் தர பர்தா.

இன்றைய சூழலில் அந்நிய ஆணகள் அனைவரையும் அயோக்கியர்களாக பார்க்க பெண்கள் பழகிக் கொண்டால் தான் ஓரளவு அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

அந்நிய ஆண்களுடன் தக்க துணையின்றி பழகுதல் ஊர்சுற்றுதல் உறவாடுதல் உறையாடுதல் அனைத்தும் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அல்லது சிரமத்தை கொடுக்கும்.

ஆணகளுடன் பழகும் போதெல்லாம் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறதா என்று கேட்கலாம். அது புயல் வரும் போதெல்லாம் சேதம் ஏற்பட்டு விடுகிறதா என்பதை போன்றது.

சிக்கிக் கொண்டால் சீரழிந்து விடுவோம்.

பர்தாவின் வசனம் பர்தாவின் நோக்கத்தை அற்புதமாக புலப்படுத்துகிறது.

ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
1.    பெண்கள் அடையாளம் காணப்படக்கூடாது
2.   தொல்லைக்கு ஆளாகாக் கூடாது.

(முஸ்லிம்களாகிய நாம், நமது வீட்டுப் பெண்களுக்கு பர்தாவின் நோக்கத்தை முதலில் விளக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் பலரும் பர்தாவை வெறும் கலாச்சார அடையாளமாக நினைக்கிறார்கள். அதனால் தான் பர்தா அணிந்து கொண்டே ஆண்களை ஈர்ப்பது போல அலங்காரம் செய்து கொள்கிறார்கள். அன்னிய ஆண்களிடம கொஞ்சலாக பேசுகிறார்கள். தேவையில்லாம அரட்டை அடிக்கிறார்கள்.)

பெண்களுக்கு  புரிய வைக்கப் பட வேண்டியவை

பெண்களின் உடலும் தோற்றமும் கவர்ச்சியானது, அதே நேரத்தில் தாக்குதலை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அல்லது எதிர் தாக்குதல் தொடுக்குமளவுக்கு பலமற்றது. இது எதார்த்தம்.

இந்த எதார்த்தம் பெண்களுக்கு முறையாக புரிய வைக்கப் பட வேண்டும்.

சுய பாதுகாப்பிற்கும் சுய மரியாதைக்கும் இடையே ஒரு த்த்தளிப்பில் இன்றைய மகளிர் சமுதாயம் இருக்கிறது.

நிறையப் படித்து விட்டால்… அதிகாரம் மிக்க பதவியில் உட்கார்ந்து விட்டால்..அதிகம் சம்பாதித்துவிட்டால் உடலின் பலமும் கூடிவிடுமா என்ன?

இன்றைய பெண்கள் இந்த இட்த்தில் தான் ஏமாந்து போகிறார்கள். ஆணுக்கு நிகராக படிப்பதும் ஆணுக்கு நிகராக சம்பாதிப்பதும் மரியாதையை பெற்றுத்தரலாம். ஒரு ஆபத்தை தவிர்க்கவோ, எதிர்கொள்ள்வோ தேவையான அல்லது தப்பிக்க தேவையான உடல் பலத்தை அது கொடுத்து விடுமா? அதுவே பாதுகாப்பாக மாறிவிடுமா?

இது பற்றிய தெளிவான சிந்தனைக்கு பெண்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

உடல் ரீதியான பலவீனத்தை ஒத்துக்கொள்வது அவமானமல்ல. கேவலமல்ல என்பதையும் பெண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இருப்பதை ஏற்ற்க் கொண்டுதானே ஆகவேண்டும்.
நிலாவுக்கு சுய வெளிச்சம் இல்லை என்பதனால் அது கேவலமாகி விடுமா?

ஆண் உடல் பலம் பொருந்தியவனாக இருக்கிறான் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல.

உடல் பலம் பெருமைக்குரியதாக இருந்தால் யானையும் சிங்கமும் அல்லவா அதிக பெருமைக்குரியவை

எனவே உடல் ரீதியான வித்தியாசங்களின் எதார்த்த்தை இன்றைய பெண்களை புரிந்து கொள்ளச் செய்வதே நாகரீக உலகத்தின் முன் இன்றுள்ள சவாலாகும்.

இதைப் பற்றி பேசத் தொடங்கினாலே பிற்போக்குவாதி ஆணாதிக்க பேர்வழி என்ற பழிச் சொற்களும் வசவுகளும் வருவதை எல்லாம் தாங்கிக் கொண்டாவது இந்த உண்மைகளை மகளிர் சமுதாயம் புரியுமாறு செய்ய வேண்டும்.

ஆண் பெண் சமத்துவம்

சமத்துவம் என்ற சொல் பெண் சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. ஆண்களானாலும் பெண்களானாலும் எல்லோரும் எல்லா இட்த்திலும் சம்மாகி விட முடியாது என்பது தான் சத்தியம்.

மேனேஜரும் பியூனும் சம்மாகிவிட முடியுமா?

திருக்குர் ஆன் ஆண் பெண் சுய மரியாதையை பேசுகிறது

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
  
النساء شقائق الرجال

அதே நேரத்தில் எல்லா இட்த்திலும் வித்திலும் சமத்துவம் என்ற பேச்சை இஸ்லாம் ஏற்கவில்லை. காரணம் அது பொருந்தாது என்பதுதான்.

சொத்து பங்கீடு விச்யத்தில் அத்தாவுக்கும் அம்மாவுக்கும் 1/6 என்று சம அம அளவில் பங்கு கொடுத்த இஸ்லாம், மகனுக்கும் மகளுக்கு பங்கீடு செய்கிற போது ஆணுக்கு இரண்டு பங்கு என்கிறது.

எல்லா இட்த்திலும் ஒரே மாதிரி சமத்துவம் பார்ப்பது பொருந்தாது என்பதால் தான் இந்தச் சட்டம்.
வணக்க வழிபாடுகளில், குடும்ப சமூக விவகாரங்களில் பலவற்றில் ஆண்களுக்கு சம்மான மரியாதை பெண்ணுக்கு உண்டு. அதே நேரத்தில் பாதுகாப்பு பொருளாதார கடமைகளில் ஆண்களின் கை உயர்ந்தே இருக்கிறது. காரணம் இவற்றில் உடல் வலிவும் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சல் குணமும் சம்பந்தப் பட்டிருக்கிறது.

இந்த விசயத்தில் பெண்களின் இயறகையான் அம்சத்தை கருத்தில் கொண்டு நியதிகளை சொன்னால் மட்டுமே அது காரிய சாத்தியமும் எதார்த்தமும் ஆகும்.

செயற்கை சமத்துவத்தின் பாதிப்பு

எல்லா வகையிலும் ஆணுக்குப் பெண் சமம் தான் என்று கற்பித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் தான் பெண்கள் அதிகம் பாதிப்புக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள் என்பதே இன்றைய ஆய்வுகள் காட்டுகிற உண்மை.

அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு நிமிட்த்திற்கும் ஒரு பெண் கணவன் அல்லது காதலனால் அடிபட்டு இறக்கிறாள்.

காரணம் என்ன தெரியுமா கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வருகிற போது உனக்கு நான் இளைத்தவள் அல்ல என்ற எண்ணம் பெண்ணை அதிகம் பேசவும் ஏசவும் வைக்கிறது. அது ஒரு எல்லையை தாண்டுகிற போது ஆண் தனது உடல் பலத்தை காட்டி விடுகிறான்.

பிறகு இருவரும் கோர்ட் படி ஏறுகிறார்கள். அல்லது பிரிந்து விடுகிறார்கள்.

மேற்கத்திய உலகில் சொந்தக் குடும்பத்துக்கு உழைத்துப் போடும்படி பெண் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

வேலைக்குப் போ! பணம் கொண்டுவா! குழந்தைகளை பராமரிப்போம் என்கிறான் ஆண்.

இன்றையை மேற்குலக சமுதாயம் தனது சொந்த மனைவிக்கு செல்வழிப்பதை சுமையாக க்ருதுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

செயற்கை சமத்துவம் ஆண்கள் பெண்களை விஷமத்தனமாக ஆபாசமாக அனுபவிப்பதற்கு த்தான் வழி செய்திருக்கிறது. இதை சுதந்திரம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். அது தான் பெரிய பேதமை.    

இத்தகைய பேதமைப் பொழுது ஒன்றில் தான் டெல்லி மாணவி கொடுரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

அவளை தெருவுக்கு இழுத்து வந்த ஆண் தாக்குதலை தாங்கிக் கொண்டு உயிர் பிழைத்து விட்டான். பெண் இறந்து போனாள்.

பெண்ணுக்குத்தான் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட இது ஒன்று போதாதா

ஒரு பெண் தன்னுடை கணவனுடன் போயிருந்தால் இது போன்ற பாதூகாப்பற்ற இட்த்திற்கு அவன் அவளை அழைத்துச் சென்றீருப்பானா?

அல்லது கணவனுடன் வருகிற பெண்ணை அந்தக் குடிகார்ர்கள் சீண்டிப் பார்த்திருப்பார்களா?

உனக்கென்ன இந்த நேரத்தில் ஊர் சுற்றல் என்று அந்தக் குடிகார்ர்கள் அந்தப் பெண்ணை சீண்டியதுதான் இந்தக் கொடூரத்தின் தொடக்கம் என்று செய்தி படிக்கிறோம். அப்படியானால் அந்தப் பெண் இருந்த பாதுகாப்பற்ற நிலைதான்
அவர்களை இந்தக் குற்றச் செயலை செய்யத் தூண்டியிருக்கிறது.

தில்லியில் நடந்த ஆர்ப்பாட்ட்த்தை பற்றி ஜனாதிபதியின் மகன் மேக்கப் போட்ட பெண்கள் தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று சொன்னார். அட்சரம் பிசகாத உண்மை.

சென்னையில் இரவு பணிரெண்டு மணிக்கு பெண்கள் ஊர்வலம் நட்த்தினர். இரவு நேரத்தில் டிஸ்கொதேக்களில் ஊர் சுற்றும் பெண்கள் தான் அதில் நிரம்பி வழிந்தனர் என்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்த்து.

பணபையை கையில் வைத்திருப்பவன் ஜாக்கிர்தையாகத்த்தான் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற சாலைகளை அவன் பயன்படுத்தக் கூடாது.

ஒரு வேளை பணம் களவு போய்விட்டால் நீ ஏன் அஜாக்கிரதையாக இருந்தாய் என்ற ஒரு கேள்விக்கு அவன் ஆளாகத்தான் வேண்டும்.

இதே போன்றதொரு கேள்வியை இன்றைய பெண் சமுதாய்மும் எதிர் கொண்டிருக்கிறது. அதை அலட்சியப்படுத்து கிற பெண்கள் ஆபத்துக்களுக்கு
தப்ப முடியாது.இன்றைய பிரச்சினைக்கு இஸ்லாமின் இன்னொரு தீர்வு.
கடும் தண்டனை
குற்றவாளிகள் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தலைவனாலும் அடிமையானாலும்

கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை காட்டு மிராண்டித்தனமானது என்றார் ஒரு முஸ்லிம் பேராசிரியர்.

புது தில்லியின் இந்தக் குற்றவாளிகளுக்கு அந்த தண்டனை எப்படி பொருந்து கிறது பாருங்கள்!

இந்தக் குற்றவாளிகளுக்கான தண்டனை பொது இட்த்தில் எல்லோரும் பார்க்கும் வகையில் நிறைவேற்றப் பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி கூறினர்.

இஸ்லாம் இதை அன்றே வலியுறுத்தியது.

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ الْمُؤْمِنِينَ(2)

கீழ் கோர் மேல் கோர்ட் இல்லாத ஒரே சரியான நீதி விசாரனையும். உடனடி தண்டனையும்
قَالَ عَلِيٌّ  قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ فَلَا تَقْضِ لِلْأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي  - ترمذي


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قُتِلَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُفِعَ الْقَاتِلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَفَعَهُ إِلَى وَلِيِّ الْمَقْتُولِ فَقَالَ الْقَاتِلُ يَا رَسُولَ اللَّهِ لَا وَاللَّهِ مَا أَرَدْتُ قَتْلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِوَلِيِّ الْمَقْتُولِ أَمَا إِنَّهُ إِنْ كَانَ صَادِقًا ثُمَّ قَتَلْتَهُ دَخَلْتَ النَّارَ فَخَلَّى سَبِيلَهُ قَالَ وَكَانَ مَكْتُوفًا بِنِسْعَةٍ فَخَرَجَ يَجُرُّ نِسْعَتَهُ فَسُمِّيَ ذَا النِّسْعَةِ


தகுந்த தண்டனை உடனடியாக வழங்கப்படும் போது எதிர்பாராத மாற்றங்க்ள் ஏற்படும். பாதிக்கப் பட்டவர்களின் கோபம் தணிந்து ஆசுவாசகம் ஏற்படும்.

கற்பழிப்பு வழக்கில் மட்டுமல்ல அனைத்து குற்ற வழக்குகளிலும் கடுமையும் துரிதமும் காட்டப்பட வேண்டும் தண்டனை உடனடியாக மக்கள் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.

எல்லா வற்றிற்கும் மேலாக பெண்கள் தங்களது பாதுகாப்பு விசயத்தில் சுதந்திரம் சமத்துவம் என்ற பகட்டான சொற்களை தாண்டி எதார்த்த்தை யோசிக்கவும் அதற்கேறப் நடந்து கொள்ளவும் வேண்டும்.No comments:

Post a Comment