வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 10, 2013

முஹம்மது (ஸல்)சீர்திருத்தமே இலக்கு


(சமநிலைச் சமுதாயம் பிப்ரவரி இதழில் வெளியான பூக்கள் நிறைந்த போர்க்களம் என்ற எனது கட்டுரையை ஜுமா உரைக்கேற்ப சுருக்கப் பட்டுள்ளது>)

முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப் பட்டவர் என்பதை அறிந்து கொள்ள இன்றைய உலகம் அதிக ஆசைப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) சீர் திருத்த வாதியாக வாழ்ந்து சீர்திருத்தவாதியாக மரணித்தார். இடையில் கிடைய அரசியல் தலைமை அவரது வாழ்வின் போக்கை மாற்றிவிடவில்லை.

அரசியல் அதிகாரம் என்பது எப்போது சீர்திருத்த முயற்சிகளுக்கு துணையாக அமையும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு ஒன்று மட்டுமே சரியான முன்னுதரானமாகும்.

தமது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அந்த நகரங்களை கைப்பற்றிய வரலாறுகள் நிறைய உண்டு என்றாலும் அதில் முஹம்மது நபியின் வ்ரலாறு வித்தியாசமானது. அவர் மதீனாவின் பத்து ஆண்டு கால வாழ்வில் மக்காவை வெற்றி கொள்வதை இலக்காக கொண்டு ஒரு போதும் செயல்படவில்லை

அவரது இலட்சியங்களும் செயல் திட்டங்களும் வேறாக இருந்தன. இந்த பூமியில் இது போல ஒரு சமுதாயம் வாழ்ந்தில்லை என்று சொல்லப்படுமளவிற்கான ஒரு சிறந்த  சமுதாயத்தை உருவாக்குவதையும் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்து தருவதையும் நோக்கமாக கொண்டிருந்தன.

அவர் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவை அடைந்த போது அந்நகரின் எல்லையில் இருந்த குபா பகுதியில் திங்கள் முதல் வியாழன் வரை தங்கினார். மக்காவிலிருந்து அவரது குடும்பத்தினரும் மற்ற முஸ்லிம்களும் வந்து சேர்ந்த பிறகு வெள்ளிக்கிழமை மதீனா நோக்கிப் புறப்பட்டார். அன்று மதியன் இடையிலிருந்த பதனுல் வாதியில் ப்னூ சாலிம் குலத்தவரை அவர் சென்றடைந்த போது வெள்ளிக் கிழமையின் சிறப்பு பிரார்த்தனை ஜும்ஆ தொழுகை கடமையாக்கப்பட்ட்து. அங்கேயே முதல் ஜும் தொழுகை நிறைவேற்றப்பட்ட்து. அந்த இட்த்தில் இப்போதும் மஸ்ஜிதுல் ஜும் என்ற பள்ளிவாசல் இருக்கிறது. முதல் ஜும் ஆவின் போது முஹம்மது நபி நிகழ்த்தி சொற்பொழிவு மனித வ்ரலாற்றில் கவனத்திற்குரியது.

அந்தச் சொற்பொழிவில் அவர் அனுபவித்த சிரமங்களைப் பற்றிய சுய புராணம் இல்லை. மக்காவின் மக்கள் இழைத்த கொடுமைகளைப் பற்றிய புலம்ப்வில்லை. மக்காவை வெல்வதே தன்னுடைய இலட்சியம் என்ற சூளூரை இல்லை.

இறைவனை துதித்துப் புகழ்ந்பின் அவர் சொன்னார்.
இறவனை அஞ்சிக் கொள்ளுமாறு உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்கிற அறிவுரைகளில் இதை விடச் சிறந்த்து வேறெதுவுமில்லை.
உங்களது தற்போதைய நடவடிக்கைகளிலும் இனி வரும் காலத்திலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். இரக்சிய வாழ்விலும் பகிரங்கத்திலும் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். அத்தகையோருக்கு மதிப்பு மிக்க ந்ற்கூலி கிடைக்கும். அவர்கள் பெரு வெற்றி அடைவர். அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள். மறுமை வாழக்கைகாக அதிக பாடுபடுங்கள்.
யார் இறைவனுக்கும் தனக்கும் இடையே உள்ள தொடர்பை சீர் செய்து கொள்கிறாரோ அவருக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையே உள்ள விவகாரங்களுக்கு இறைவன் கவனித்துக் கொள்கிறான். அல்லாஹ் மனிதர்கள் மீது தீர்ப்பளிக்கிறான். மனிதர்களால் அல்லாஹ் ஒன்றும் செய்து விட முடியாது.  
وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم المسلم، فاتقوا الله في عاجل أمركم وآجله، في السر والعلانية، فإنه من يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجراً، ومن يتق الله فقد فاز فوزاً عظيماً،

இந்த ஒவ்வொரு வார்த்தையும் முஹம்மது நபி எத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்தார் என்பதை பறைசாற்றுகின்றன,

மதீனா சென்றடைந்த பின் இந்த திசையிலேயே அவரது பனிகள் அமைந்திருந்தன. அதில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமூகத்தை கட்டமைக்கிற தீர்மாணம் இருந்த்தே தவிர அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் துளியும் இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) சில யுத்தங்களைச் செய்தார் என்பதை மட்டுமே முன்னிருத்தி அவரை சண்டைக்கார்ராக - வன்முறையில் நாட்டம் கொண்டவராகசித்தரிக்கிற சிலரைப் பார்க்கிற சிரிப்புத்தான் வருகிறது. இவர்கள் என்ன படித்தார்கள்? எதை ஆராய்ந்தார்கள்? யானையின் துதிக்கையை தடவிய குருடன் யானை உலக்கை போன்றது என்றானாம். அது போல இத்தகையோர் விளங்கியதும் குறைவு. விமர்ச்சித்த்தும் தவறு. 

பெருமானார் அனுப்பிய தூத்ரை நோமர்கள் கொன்றார்கள். அவர்களுக்கு எதிராக முஃதா யுத்தத்திற்கு தோழர்களை அனுப்புகிற போது பெருமானார் (ஸல்) என்ன சொன்னார் என்பதை கவனித்துப்பாருங்கள்
இறையச்சத்தோடு நடந்து கொள்ள உங்களை நான் அறிவுறுத்துகிறேன். உங்களுனிருக்கிற முஸ்லிம்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயரால் கிளம்புங்கள்! நிராகரிப்பாளர்களோடு சண்டையிடுங்கள்! மோசடி செய்யாதீர்கள்! எல்லை மீறாதீர்கள்! குழந்தைகளையோ பெண்களையோ வயது முதிர்ந்தவர்களையே மடங்களில் இருக்கிற துறவிகளையோ கொன்று விடாதீர்கள்! பேரீத்த மரங்களை நெருங்காதீர்கள்! மற்ற மரங்களையும் வெட்டாதீர்கள்! கட்டிடங்களை இடிக்காதீர்கள்
أوصيكم بتقوى الله وبمن معكم من المسلمين خيراً، اغزوا باسم الله في سبيل الله من كفر بالله، لا تغدروا ولا تغلوا ولا تقتلوا وليداً ولا امرأة ولا كبيراً فانياً ولا منعزلاً بصومعة ولا تقربوا نخلاً ولا تقطعوا شجراً ولا تهدموا بناءً».

தபூக் படை எடுப்புக்கு முஸ்லிம்கள் தயாராகும் காட்சியை கவனியுங்கள்

ரோமர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக படை அணியை தயார் செய்து விட்டார்கள். ரோமின் சக்ரவர்த்தி ஹிர்கள் அப்படையினருக்கு ஓராண்டுக்கான செலவிற்கு பெறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்ற செயதி கிடைத்து.
அவர்களை எதிர்கொள்ள முஹம்மது நபி (ஸல்) அவர்க்ள் தாமே தலைமையேற்று அவர்களை எதிர்த்துப் புறப்பட்டார்கள். பெரும் சிரமத்திற்கு இடையே அந்த படை எடுப்பு நடை பெற்றதால் அதை கஷ்ட காலம் என்று திருக்குர் ஆன் குறிப்பிடுகிறது,

ரோமர்களை எதிர்க்க தயாராகுங்கள் என நபிகள் நாயகம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். 

இந்த உத்தரவுக்கு முஸ்லிம் சமுதாயம் கட்டுப்பட்ட விதம் வரலாற்றின் பொன்னேடுகளில் ஒன்றாகும்.

மதீனா பேரீத்தம் பழ விவசாயத்தை மட்டுமே நபியிருக்கிற பூமி. அது அறுவடை காலம், மக்கள் அறுவடைக்கு காத்திருந்தார்கள். கடும் கோடையில் தான் பேரீத்தம் பழங்கள் கனியும். அந்தக் கோடையின் வெப்பத்தை சகித்துக் கொண்டு அறுவடைய பற்றி கவலைப்படாமல் நீண்ட தொலைவு பயணப்பட தோழர்கள் தயாரானார்கள். அக்கம் பக்கத்திலுருந்தும் மக்கள் திரண்டனர். இஸ்லாம் அதுவரை கண்டிராத அளவில் 30 ஆயிரம் பேர் திரண்டனர்.

இம்மாம் பெரிய படைக்கு தேவையான போதிய வகன வசதி இருக்கவில்லை. ஒரு ஒட்டகத்தை 18 பேர் பங்கிட்டுக் கொண்டார்கள்.   பேருக்கு நிதியுதவி செய்யுமாறு பெருமானார் அறிவிப்புச் செய்தார்கள்

 எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக நிற்கிற நபித்தோழர் அபூபக்கர் (ரலி) இப்போதும் முந்திக் கொண்டு தன்னுடைய சொத்து முழுவதை திரட்டி 40 ஆயிரம் வெள்ளிக்காசுகளை கொண்டு வந்தார். அவரைப் பற்றி தெரிந்திருந்த நபிகள் நாயகம் உங்களது வீட்டாருக்கென எதையும் மிச்சம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் அல்லாஹவை அவனது தூதரையுமே மிச்சமாக வைத்து விட்டு வந்தேன் என்றார்.

فكان أول من جاء أبو بكر الصديق رضي الله عنه فجاء ماله كله 40000 درهم فقال له صلى الله عليه وسلم «هل أبقيت لأهلك شيئاً؟» قال: أبقيت لهم الله ورسوله، وجاء عمر رضي الله عنه بنصف ماله فسأله: «هل أبقيت لهم شيئاً؟» قال: نعم نصف مالي، وجاء عبد الرحمن بن عوف رضي الله عنه بمائتي أوقية، وتصدق عاصم بن عدي بسبعين وَسْقاً من تمر وجهِّز عثمان رضي الله عنه ثلث الجيش.


உஸமான் அப்போது சிரிய நாட்டிற்கு வியாபாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அதில். 200 ஒட்டகைகள் இரு நூறு ஊக்கிய வெள்ளி இருந்த்து. பெருமானாரின் அறிவிப்பை கேட்ட்தும் அதை அப்படியே யுத்த நிதியாக கொடுத்து விட்டார். ஒரு நாள் கழித்து மீண்டும் பணம் திரட்டிக் கொண்டு வந்து நூறு ஒட்டகைகளை அதற்கான சாதன்ங்களுடன் வழங்கினார். அத்தோடு ஆயிரம் தங்க்க் காசுகளை பெருமானாரின்  மடியில் கொட்டினார். அந்த பொற்காசுகளை தடவிய நபியவர்கள் உஸ்மான் (ரலி) மனமுறுகி பிரார்த்தித்தார்கள். இனி உஸ்மான் என்ன செய்தாலும் அது அவருக்கு இடையூறாகாது என்றார்கள் (திர்மிதி) அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் உஸ்மான் (ரலி) தேடித்திரட்டி மேலும் மேலும் வழங்கினார். மொத்த்தில் தொள்ளாயிரம் ஒட்டகைகளையும், நூறு குதிரைகளையும். கணக்கற்ற தங்க வெள்ளிக் காசுகளையும் கொடுத்தார். தபூக் யுத்த்திற்கான தேவையில் மூன்றில் ஒரு பங்கை உஸ்மான் (ரலி) நிறைவேற்றினார். அவரது உதவியின் வேகமும் வீச்சும் பெருமானாரின் கண்களை கலங்க வைத்த்து.

மக்களில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த்தை கொடுத்தார்கள். சிலர் கையளவு தானியங்களை கொண்டு வந்தனர். பெண்கள் தங்களால் முடிந்த நகைகளை கழட்டிக் கொடுத்தனர்.

அடிப்படைத்தேவைக்கு கூட பணம் இல்லாதவர்கள் பெருமானாரிடம் வந்து முறையிட்டார்கள் 'அல்லாஹ்வின் துதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள் என்று கேட்டனர். பி (ஸல்) மிக்க கவலையுடன்
'உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே என்றார்கள். அந்தப் திலை கேட்ட தோழர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி
இல்லையே! என்று அழுதவர்களாக தரும்பிச் சென்றனர்.

அந்த கண்ணீர் துளிகளை திருக்குர் ஆன் வரலாற்றிற்காக பத்திரப்படுத்தியது.
وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوا وَأَعْيُنُهُمْ تَفِيضُ مِنْ الدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا مَا يُنفِقُونَ(92)

(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு 'உங்களை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனம் என்னிடம் இல்லையே என்று நீங்கள் கூறிய சமயத்தில்தம்மிடம்  பண வசதி இல்லாது போயிற்றே எனற கழிவிரக்கத்தில் கண்களிலருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீது (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் 9:92)

யுத்த்திற்காக நிதி திரட்டிய போது பெருமானார் சொன்ன வார்த்தையை கவனியுங்கள்
சிரம் காலத்தில் நடைபெறும் இந்தப் போருக்கான படையை தயார் செய்வோருக்கு அதற்குரிய கூலி சொர்க்கத்தில் உண்டு என்றார்கள். படையின் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை தந்துதவிய உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பெருமானார் செய்த பிரார்த்தனையை கவனியுங்கள்! அல்லாஹ் அவரை மன்னிப்பானாக என்றார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவரது வாத்தகள் உலக ஆதாயங்களை காட்டி தோழர்களுக்கு ஆசையூட்டுவதாக அமையவில்லை.  எதிரிகளை வென்றால் உங்களுக்கு கோட்டைகளை தருவேன், பதவிகளை வழங்க்வேன்! மாளிகைகளை சொந்தமாக்குவேன்! நிலபுலன்களை எழுதிக் கொடுப்பேன். பொன்னும் மணியும் வாரி வழங்குவேன் என ஒரு வார்த்தை சொல்ல வில்லை. அந்த தோழர்களும் அவர்களிடம் பிரார்த்தனையை தவிர வேறெதையும் எதிர்பார்க்க வில்லை. 

அன்பே மதம் என்று பறைசாற்றிக் கொள்கிற கிருத்துவ பாதிர்களும் மன்னர்களும் வீர்ர்களும் ஜெரூசலம் நகரை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக நட்த்திய சிலுவை யுத்தங்களுக்கு படை வீர்ர்கள் எப்படித் தயார் செய்யப்பட்டார்கள் என்ற வரலாற்றை கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கி.பி. 1095-ம் ஆண்டு போப்பாண்டவராக இருந்த அர்பன் 2 என்பவர் (Pope Urban 2  முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் திரளும்படி ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்துவர்களே, யுத்தத்துக்குத் திரண்டு வாருங்கள் என்று அழைத்த  
போப்பாண்டவர்  இதில்  அப்பாவி மக்களை இழுப்பதற்கால செய்த அறிவிப்புக்கள் இவை

·         இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும் அத்தனை கிறிஸ்துவர்களின் பாவங்களும் உடனடியாக இறைவனால் மன்னிக்கப்பட்டுவிடும்
·         அவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள்.
·         அவர்களது உறவினர்கள், வம்சம், வீடு, நிலம் அனைத்தையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பு திருச்சபையினுடையது.
·         ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்குத் திருச்சபையே பொறுப்பேற்கும்.
·         அவர்கள் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருந்தாலும் பிரச்னையில்லை. அதைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. வாங்கிய கடனைச் செலுத்தாமலிருப்பதற்காக அவர்கள் மீது யாரும் வழக்குத் தொடரக் கூடாது. அப்படியே தொடர்ந்தாலும் நீதி மன்றங்கள் அவற்றைத் தள்ளுபடி செய்துவிடும்.
·         அவர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் பாக்கி வைத்திருப்பார்களேயானால் அந்த வரிகளும் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும். மதத்துக்காகப் போரிடப் புறப்படும் வீரர்களிடம் அரசாங்கம் வரி கேட்டு இம்சிக்கக் கூடாது.

நான்காவது சிலுவையுத்தக்கார்ர்கள்  ஜெருசலத்தை கைப்பற்றீய போது  70 ஆயிரம் முஸ்ளிம்களை வெட்டிக் கொன்றார்கள். உமர் பள்ளிவாசலில் அடைக்கலாமாகியிருந்தோர் அனைவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். உமர் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்த்தாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யுத்தங்களின் வரலாற்றோடு ஒப்பிடுகையில் முஹம்மது நபியின் யுத்தங்கள் மனித சேதாரம் அற்றவை. இரத்த வாடை இல்லாதவை. சீரழித்தல்களோ சிதைவுகளோ நடக்காதவை. மாற்றமாக ஒப்பந்தங்களும் , பரிமாற்றங்களும். மன்னிப்புக்களும், அரவனைப்புக்களும் மிக்கவை

முஹம்மது (ஸல்) அவர்கள் தனது காரியத்தில் எப்போதும் கண்ணாக இருந்தார்கள். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஏற்பவர்களாக மாற வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் அதனால் தான் தனக்கு இன்னல் கொடுத்த்வர்களை - கொல்ல வந்தவர்களைவிஷம் வைத்தவர்களைஅவமதித்தவர்களைஉள்ளச் சுத்தியொடு மன்னித்தார்கள். சுதிபேதமின்றை அரவணைத்தார்கள்.

எதிர்யை எதிரியாகப் பார்ப்பது நியாயம். எதிரியை அக்கிரமக்காரணவே பார்ப்பது அநீதி! எதிரியை இவன் என்னவன்; திருத்தப்பட வேண்டியவன் என்ற எண்ணத்தோடு பார்ப்பது புனிதம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய எதிர்களை இந்த கண்ணோட்டத்தோடுதான் அணுகினார்கள்.

சீர்திருத்த சீந்தனையே அவரது வாழ்வில் மேலோங்கியிருந்த்து

அலி(ரலி) அவர்களிடம் கைபர் யுத்த்திற்கான கொடியை கொடுத்தனுப்பிய போது அலி! உன்னால் ஒருவர் நல்வழிப்படுவது அவரைக் கொன்றால் கிடைக்கிற மதிப்பு மிக்க சிவப்பு ஒட்டகைகளை விடசிறந்த்து. என்றார்கள்
فوالله لأن يهدي الله بك رجلاً واحداً خير لك من حمر النعم


இப்படி ஒரு சீர் திருத்தவாதியை வரலாறூ சந்தித்தில்லை. அதனால் தான அவர்கள் வரலாற்றில் பெரும் புகழ் பெற்றுத்திகழ்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களைப் பற்றிய சரியான செய்திகளை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்லுவோம்.

  


No comments:

Post a Comment