வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 06, 2012

சரியாக புரியாத ஷிர்க் வியாபாரிகள்


பெருமானாரை அவமதிப்பவர்களை நாம் கோபிக்கிறோம். ஆத்திரப்படுகிறோம். ஆர்ப்பாட்டம் நட்த்துகிறோம்.

 பெருமானார் (ஸல்) அவர்களை மற்றவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அதனால் தான் கேலி செய்கிறார்கள் என்று கருதி, பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவல்கள் பலவற்றை நோட்டீஸ் - பேனர்களாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்போது எங்கு பார்த்த்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றிய தகவல்கள் அடங்கிய பேனர்கள்.

ஆனால்! பெருமானாரை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா? குறிப்பாக இயக்க்ம அமைப்புக்களின் பெயரால் பேனர் வைக்கிற நணபர்கள் பெருமானாரை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? பெருமானாரை சரியாகப் மதிக்கிறார்களா?  என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது.

அக்டோபர் மாத சமநிலை சமுதாயம் மாத இதழில் ஒரு கட்டுரை

பொய் பேசும் சித்திரம் என்ற தலைப்பில் வெளியாகி இருந்த்து. அதன் இறுதியில் பெருமானார் மீது முஸ்லிம் சமுதாயத்திற்கிருக்கிற பற்றையும் பாசத்தையும் வெளிப்படுத்துகிற ஒரு பாடலின் மொழி பெயர்ப்பு வெளியாகி இருந்த்து. அந்த பாடலில் நபியே எங்களது உயிர் உங்களுக்கு அர்ப்பணம் என்ற வரி இருந்த்து.

சில நாட்களுக்கு முன் பத்ரிகை அலுவலத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொண்ட ஒரு முஸ்லிம் கண்ணாபிண்ணாவெண்று கத்தியிருக்கிறார். உயிர் உங்களுக்கு அர்ப்பணம் என்பதெல்லாம் உட்சபட்ச ஷிர்க ஏன் இப்படி ஷிர்க் செய்கிறீர்கள்! என்று கத்தியிருக்கிறார்.

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலருக்கு என்ன ஆயிற்று? அதிலும் இயக்க ஈடுபாடு கொண்டவர்கள் எப்படி தீனை விளங்கி வைத்திருக்கிறார்கள்?

இப்படிச் சொல்லலாமா என்று கேட்டிருந்தால் அவர் சரியான பதிலை பெற்றுக் கொண்டிருப்பார்!

 அவராகவே ஷிர்க் என்று முடிவு கட்டிக் கொண்டு மற்றவர்களை கோபிக்கவும் ஏசவும் தலைப்படுகிறார் என்றால் இது எவ்வளவு வருத்த்திற்குரிய செய்தி?

முஹம்மது ஸல்) அவர்களை மற்றவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட உம்மத் என்ற பெயரில் இருக்கும் இத்தகைய நபர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதே அதிகம் கவலைக்குரியது.

சில நேரங்களில் மேற்கத்திய கயவர்களை விட இந்த இயக்கங்களின் பொய்யர்களே பெருமானாரை அதிகம் குறைவு படுத்தி விடுகிறார்கள்.

பிதாக் அபீ உம்மீ என்று பெருமானாரிடம் நேரடியாகவே எத்தனை சஹாபாக்கள் கூறியிருக்கிறார்கள்

أَبِي هُرَيْرَةَ - فَقَالَ إِنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ فِدَاكَ أَبِي وَأُمِّي إِنَّ زَوْجِي يُرِيدُ أَنْ يَذْهَبَ بِابْنِي وَقَدْ نَفَعَنِي وَسَقَانِي مِنْ بِئْرِ أَبِي عِنَبَةَ فَجَاءَ زَوْجُهَا وَقَالَ مَنْ يُخَاصِمُنِي فِي ابْنِي فَقَالَ يَا غُلَامُ هَذَا أَبُوكَ وَهَذِهِ أُمُّكَ فَخُذْ بِيَدِ أَيِّهِمَا شِئْتَ فَأَخَذَ بِيَدِ أُمِّهِ فَانْطَلَقَتْ بِهِ – النسائي 3429

 
عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فِي طَائِفَةٍ مِنْ الْمَدِينَةِ قَالَ فَجَاءَ فَكَشَفَ عَنْ وَجْهِهِ فَقَبَّلَهُ وَقَالَ فِدَاكَ أَبِي وَأُمِّي مَا أَطْيَبَكَ حَيًّا وَمَيِّتًا مَاتَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَبِّ الْكَعْبَةِ – احمد 18

 பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا يُرِيدُ حِينَ قَالَ فِدَاكَ أَبِي وَأُمِّي وَهُوَ يُقَاتِلُ   - بخاري 4057


عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا بِأَبَوَيْهِ إِلَّا لِسَعْدٍ فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ ارْمِ سَعْدُ فِدَاكَ أَبِي وَأُمِّي قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ –ترمذي 3688

 
ஓரளவுக்கேனும் பெருமானாருடைய வரலாற்றை படித்த அனைவருக்கும் தெரிந்த இவ்வளவு தெளிவான ஒரு செய்தியைகூட ஷிர்க் என்று சொல்லி மறுக்கும் நிலை சமுதாயத்தில் இருக்கிறதென்றால் இவர்கள் எல்லோரும் தங்களது மன்ம் போனபடி மார்க்கத்தைப் பின்பற்றுகிறாரள் . அதையேதூய இஸ்லாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். என்று தான் அர்த்தம்.

 
ஒரு மவ்த் வீட்டில் இளைஞன் ஒருவன் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தான். இன்னிக்கு காலைல ஹஜரத் முட்டாளதனமா பேசறான். ஒருத்தர் நபிகிட்டே உடம்பு சரியில்லேன்னு வந்தாராம்.நபி அவருடைய கண்ல தன்னோட எச்சியை தடவினாராம்.

நான் அந்த இளைஞனை அழைத்துச் சொன்னேன். பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றீ பேசுவதற்கு முன் அது பற்றீ தெரிந்து கொண்டு பேசுங்கள். உங்கள் விருப்பத்திற்கு பேசாதீர்கள்.

பெருமானார் (ஸல்) உமிழ் நீர் கொண்டு பலருக்கும் சுகம் அளித்த செய்திகள் ஏராளமாக இருக்கிற போது, அதில் தவறூ காண்பதும். அதை முட்டாளதனம என்று பேசுவதும் பெருமானாரை மதிப்பதாகாகுமா?

பெருமானாரை அவரகளை மதிப்பதற்கு அல்லாஹ் சொல்லிக் கொடுத்த வழி முறைப்படியும். அவரகள வாழ்ந்த காலத்தில் அவர் மதிக்கப்பட்ட வித்த்திலும் மதிக்க வேண்டும்.



حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ قَالَ رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ مَا هَذِهِ الضَّرْبَةُ فَقَالَ هَذِهِ ضَرْبَةٌ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيهِ ثَلَاثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةِ  --البخاري 4206

 

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّه لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ – البخاري 2942

 

முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஒரு போதும் வழி கேட்டில் சென்றதில்லை. அதற்கு ஆதாரம். இன்று வரை பெருமானாரை அல்லாஹ்வுடைய அடியார் என்று தான் சமுதாயம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 பெருமானார் விச்யத்திலேயே வழி தவறாத சமுதாயம் வேறெவர் விசயத்திலும் வழி தவற வாய்ப்பில்லை.

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பெருமானாரை சமுதாயம் எப்படி எல்லாம் மதிக்க கடமைப் பட்டிருக்கிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


தொழுது கொண்டிருந்த சஹாபியை பெருமானார் அழைத்தார்கள்;

அவர் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதா பெருமானாருக்கு கட்டுப்படுவதா என்று தடுமாறினார். தொழுதுவிட்டு பெருமானாரிடம், வந்தார் நான் கூப்பிட்ட போது ஏன் வரவில்லை என்று பெருமானார் கேட்டார்கள்.

பெருமானார் அழைத்தால் தொழுகையை விட்டு விட்டுச் சென்று விட வேண்டும்,

காரணம் அவர் தான் நாம் ஈமானில் பிழைத்திருக்க காரணமானவர்.

பெருமானார் (ஸல்) ஒரு கிராமத்து வியாபாரியிடம் குதிரை ஒன்றை விலை பேசி வாங்கினார். பணம் எடுப்பதற்காக அவர்கள் சென்ற போது, மற்ற சிலர் அந்த குதிரைக்கு விலை பேசினர். வியாபாரி நான் வேறு ஆட்களுக்கு விற்று விடுவேன் என்றார். பெருமானார் (ஸல்) நீ தான் எனக்கு விற்று விட்டாயே பிறகு எப்படி இன்னொருவருக்கு விறக் முடியும் என்று கேட்டார்கள்.  அந்த வியாபாரி அதை மறுத்தார்.. நான் விற்றதற்கு யார் சாட்சி என்றார்.  குஸைமா (ரலி) நான் சாட்சி. என்றார். வியாபாரி குதிரையை கொடுத்து விட்டுச் சென்றார்.

குஸைமாவிடம் பெருமானார் (ஸல்) நாங்கள் வியாபாரம் செய்த இட்த்தில் நீங்கள் இல்லையே பிறகு எப்படி சாட்சி சொன்னீர்கள் என்று கேட்டார்.

குஸைமா சொன்னார்; நீங்கள் ஒன்றை சொன்னால் அது வே சாத்தியம். நீங்கள் ஒன்றை சொன்னால் அதுவே நான் சாட்சி சொல்ல போதுமே என்றார்.

பெருமானார் (ஸல்) அவரைப் பாராட்டி அவருடைய சாட்சி இரு சாட்சிகளுக்கு சம்மானது என்றார்கள்.  


عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ  - أبوداوود 3130

பெருமானாருக்காக சாட்சி சொன்ன ஒருவரின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்குரிய மரியாதையை பெற்றது.

பெருமானாரின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எந்த அளவு அந்த நம்பிக்கையிலும் மரியாதையிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கு தெளிவான அற்புதமான உதாரணம் இது.

பெருமானார் சொன்னார்கள் என்பதற்காக அல்லாஹ்வைமறுமையை சொர்க்கத்தை நரகத்தை- கப்ரின் வேதனைகளை நபுகிற போது ஒரு குதிரை விச்யத்தில் நம்பாமல் இருப்பதா என்ற ஆழிய சிந்தனையே அந்த சஹாபியை இவ்வாறு செய்யத் தூண்டியது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் நபி ஸல் அவர்கள் ஒரு வார்த்தை சொல்லி விட்டார்கள் என்றால் அது வெறும் பாராட்டுரையாக மட்டும் ஆகாது சட்டமாகவே கருதப்படும்.

 குஸைமா (ரலி) அவர்களை பெருமானார் பாராட்டியது சட்டமாக ஆகி பின்னால் அது பயன்பட்ட்து

فإن الصحابي الجليل الملقب بذي الشهادتين هو خزيمة بن ثابت بن الفاكه الأنصاري ثم الأوسي،

، وظهر ذلك عندما أراد أبو بكر جمع القرآن وأمر بزيد بن ثابت أن يتتبعه ويجمعه، كان لا يقبل آية إلا بشاهديْ عدل، وإن آخر سورة براءة لم توجد إلا عند خزيمة بن ثابت فقال: اكتبوها فإن رسول الله صلى الله عليه وسلم جعل شهادته بشهادة رجلين فكتبوها، وإن عمر بن الخطاب أتى بآية الرجم فلم يكتبها زيد لأن عمر كان وحده، ذكره السيوطي في الإتقان

இன்றைய இயக்க சார்புள்ள இளைஞர்கள் பெருமானாரை தங்களுக்கு விருப்பமான அளவில் மட்டுமே மதிக்கிறார்கள்.

ஆனால் பெருமானாரின் சரியான வரலாற்றிலிருந்து அவர் எப்படி மதிக்கப்பட்டார் என்பதை அறிந்து அது போல நாம் மதிக்க பழக வேண்டும்.

சமுதாயம் இதை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் ஐரோப்பியர்க்ளில் சிலைரைப்போலவே முஸ்லிம்களும் பெருமானாரை அவம்திக்கிறார்கள் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்.

 

 

 

 

 

1 comment:

  1. மவ்லானா அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்ம., உங்களின் ஜுமுஆ உரைக்கான வெளியீடுகள் மிக பயனுள்ளதாக உள்ளன. மத்ஹபுகளின் அவசியம், தாடி வளர்ப்பின் அவசியம், ஃபர்ளு தொழுகையின் அவசியம் குறித்த தலைப்புகளிலும் உங்கள் கோணத்தில்விரிவான உரைகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ம அஸ்ஸலாமா..

    ReplyDelete