வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 09, 2013

உயர் கல்வி சில யோசனைகள்



 يَرْفَعْ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 58:11

தமிழகத்தில் 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்த்தில் 88 சதவீத மாணவர்கள் வெற்றியடைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற் மானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஜெயசூரியா  என்ற  ஏழை மாணவன் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறான். அவனுடைய தந்தை சம்பாதிக்க இயலாதவர். நகரட்சிப் பள்ளியில் 8 ம் வகுப்பு வரை படித்த அந்த மாணவன் நன்றாக படிக்கிறான் எப்பதால் தனியார் பள்ளிக் கூட நிர்வாகிகள் அவனுக்கு உதவியுள்ளனர். இன்று அந்த மாணவனால் அந்தப் பள்ளிக் கூட்த்திற்கும் அந்த மாவட்டத்திற்குமே பெருமை கிடைத்துள்ளது.

நம்முடைய குடும்பத்தில் மஹல்லாவில் தகுந்த வசதியற்ற மாணவர்களுக்கு நாமும் உதவ முன்வர வேண்டும் என்ற வேட்கையை இது உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டு முஸ்லிம் மாணவ மாணவியர் முக்கியமான மூன்று தரங்களில் யாரும் வெற்றி பெற வில்லை என்றாலும். வேறு மொழியை பிரதானமாக எடுத்துப் படித்த ஒரு முஸ்லிம் மாணவி 1191 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அல்ஹம்து லில்லாஹ்.

மாணவர்கள் தங்களது உயர்கல்விக்கான் தேடலில் இறங்கியுள்ளனர்.

உயர்கல்வி தேடும் மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கான வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக! மாணவர்களின் தேடலை பயனுள்ளதாக்கி அவர்களுடைய பெற்றோர்களின் சுமையை அல்லாஹ் இலேசாக்கி வைப்பானாக!

உயர் கலவியில் அக்கறை செலுத்த வேண்டியது முஸ்லிம் மாணவர்கள் பெற்றோர்களுடைய கடமை.

சமூக பொருளாதார மேம்பாடு உயர் கல்வியைச் சார்ந்தே உள்ளது.

ஒரு முஸ்லிம் வியாபாரி ஐம்பதாண்டுகளில் சம்பாதித்த பொருளாதார பலத்தை கல்வி கற்ற புதிய தலைமுறை ஐந்தாண்டுகளில் சம்பாதித்து காட்டுகிறது.

அரசின் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சொன்னார்;
நானெல்லாம் 10 ஆயிரம் 15 ஆயிரம் பார்க்கவே ரொம்ப காலம் ஆச்சு. என் பையன் கெமிக்கல் இன்ஞினியரிங்க் படிச்சு ஒரு கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்தான். தொடக்க்மே 25 ஆயிரம் சம்பளம். ஒரு வருஷ்ந்தான் ஆச்சு. அதுக்குள்ள 45 ஆயிரமா சம்பளத்த உயர்த்திட்டாங்க!

எத்தைனையோ சாமாண்யக் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளின் உயர் கல்வியால் வளமடைந்திருக்கின்றன,

சமூகத்தின் மரியாதையும் உயர் கல்வியை பொருத்தே அமைகிறது.
ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்பத் திறனாளிகள் பெருகுவதே இன்றைய சூழலிம் முஸ்லிம் சமுதாயத்தின் மரியாதையை மீட்டெடுக்கும்.
         அப்துல் கலாம் ஒரு உதாரணம்.
         யூதர்களுக்கு இன்றை உலகில் கிடைக்கிற மரியாதைக்கு காரணம் அவர்களில் ஆய்வாளர்களும் தொழில் நுட்ப அறிஞர்களும் அதிகமாக இருப்பதே!

இஸ்லாம் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا என்ற பிரார்த்தனை இரண்டு வழிகாட்டுதல்களை தருகிறது.
1.            கல்வியின் முக்கியத்துவம்
2.            அதில் மேம்பாடு காணும் அக்கறை

இன்னும் அதிக கல்வி வேண்டும் என்று மூஸா (அலை) ஆசைப்பட்டதை தான் சூரத்துல் கஹ்பு அத்திதியாத்தில் ஹிழ்ர் (அலை) அவர்களுடனான பயனமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.


பணம் பதவிக்கு அதிகம் ஆசைப்படுவது வரவேற்கப் படாது.
நிறைய வேண்டும் என்று ஆசைப் படத்தக்க செல்வம் கல்வி மட்டுமே! அது வரவேற்கப் படும்

பாலைவனத்தில் பள்ளிக் கூடம் இல்லாத சமுதாயத்திலிருந்து வந்த நபியின்
பொன் மொழிகளை  கவனித்துப் பாருங்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ -        الترمذي
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ كَانَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ - الترمذي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا – الترمذي

நபிகள் பெருமானாரின் சமுதாயம் உயர் கல்வியை தேடுவதில் சளைக்காமல் ஈடுபட்ட்து அதனால முஸ்லிம்கள் உலகின் அறிவுசார் துறைகளில் முன்னோடிகளாக இருந்தார்கள்.

(பார்க்க! எம் தந்தையர்.. சிந்தனை சரம் கட்டுரை )

ஆண் பிள்ளைகளுக்கு இன்றையை சூழலில் ஒரு பட்டப் படிப்பு கட்டாயமாகும். மருத்துவம், சிவில்இன்ஞினியரிங், மெக்கானிக்கல், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் மட்டுமின்றி அறிவியல் துறைகளிலும் அவர்களை உக்குவியுங்கள்.

அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுள்ள மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதே!

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான அரசின் உதவிகளை நாடுங்கள். ஒரு தாசில்தாரிடமிருந்து குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற சான்றிதழைப் பெற்று விண்ணப்பத்தோடு சமர்ப்பித்து விட்டால்  கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

உயர் கல்விக்கு பிள்ளைகளை அனுப்புகிற போது டாக்டராக வேண்டும் இன்ஞினியராக வேண்டும் என்ற ஆசைக்கு முன்னாள் அல்லாஹ்வுக்கு பொருத்தமான டாக்டராக வேண்டும் அல்லாஹ்வுக்கு பொருத்தமான இன் ஞினியராக வேண்டும் என்ற ஒரு வாசகத்தை சேர்த்து இதயத்தில் பதிய வையுங்கள்.

எவ்வளவு உய்ரத்திற்கு போனாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் பொறுத்தமும் இல்லாமல் போனால் வாழ்க்கையில் எந்தப் பலனும் இல்லை.

டாக்டர் செரியன் பல்லாயிரக்கணகான இதய அறுவை சிகிட்சை செய்தவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரே! ஹிதாயத் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்.

சென்னையில் ஒரு டாக்டர் ஒரு கூட்ட்த்தில் பேசினார்; துபாயில் நான் வேலை செய்தேன். பாங்கு சத்தன் கேட்டதும் எல்லோரும் பள்ளி வாசலுக்கு செல்வார்கள். நான் என்னுடைய நோயாளிகளைத்தான் கவனிப்பேன் என்று பெருமையாக பேசினார்.

ஒரு அவசரம் என்றால் நோயாளியை கவனித்து விட்டு பள்ளிக் சென்றால் போதும். சாதாரணமாகவே தன்னுடைய பணியை பெரிதாக நினைத்துக் கொண்டு தொழுகையை சாதாரணமாக கருதினால் அது சரியல்லவே!

அதனால் எந்த உயர்ந்த படிப்புக்கு முன்னதாகவும் அல்லாஹ்வின் மீதான பயம், மாக்கத்தின் மீதான பற்றை நாம் பதிவு செய்து விட வேண்டும்.

அல்லாஹ்வின் மீதான பயமும் தொழுகையும் இருந்தால் கல்விப்பணியில் ஏற்படுகிற சிக்கல்கள் குறையும். ஹிதாயத் கிடைக்கும். பரக்கத் உண்டாகும்.

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا(2)وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا(3) الطلاق

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا(4)

 
  
உயர் கல்வி பெறுவதில் பெண்களை விலக்கி வைக்க வேண்டாம். ஆனால் கவனம் தேவை..

ஆயிஷா உம்மு சல்மா (ரலி)  போன்ற சிறந்த கல்வியாளர்களை உலகுக்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

பெண்களுக்குத் தகுந்த கல்வியை தேர்ந்தெடுங்கள்
இன்றையை சூழலில் அவர்களுடைய ஒழுக்கம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை புரியவையுங்கள்.

அதனால் பெண் மக்களின் ஒழுக்கத்திற்கு பாதுகாப்பிற்கும் பொருத்தமான கல்விக் கூடங்களை தேர்ந்தெடுங்கள். பெண்களின் ஒழுக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உயர் கல்வி சிறந்த்து.

இயன்ற வரை கோ எஜுகேசனை தவிர்க்க முயல்வது நல்லது. 
இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கவில்லை. ஆண்களோடு கலந்து பழகுவதை கடுமையாக எச்சரிக்கிறது.

கடந்த காலங்களில் கோஎஜுகேஸன் முறை வரவேற்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த முறையால் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிப்படைவதாக ஆய்வுக்ள் கூறுகின்றன.
கோ எட் முறையில் 10 சதவீதம் தேர்ச்சிய்டைகிற மாணவர்கள் தனிப்பள்ளியில் 73 % தேர்ச்சி பெற்றதாக வாஷிங்கடனில் நடந்த ஒரு ஆய்வு கூறுகிறது. அதனால் தற்போதைய கல்வியாளர்கள் தனித்தனி கல்வி முறையை ஆதரிக்கிறார்கள்.

கனடாவின் the montreal gazatte  பதரிகை 1989 ஆண்டு let’s separate bou’s girl classes  மாணவர்கர் மாணவிகளுக்கான வகுப்பறைகளை பிரித்து விடுவோம் என்ற தலைப்பில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்த்து.

இன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க செல்லும் இடங்களில் பெரும் ஒழுக்க சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை மிக முக்கியமாக நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

உயர் கல்வி படிக்கிறார்கள் என்பதற்காக இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரான ஆடைகள் அணியவும், நாகரீகம என்ற பெயரில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கவும் ஆரம்பித்தால் பெண் கல்வி என்பது தீமையாக அமைந்து விடும்.

எந்த் கல்வியின் தாக்கத்தால் பெண் பெண்மையை இழந்து விடுவாளோ அந்தக் கல்விக்கு மரணம் என்று அறிஞர்கள் பெயர்  வைத்துள்ளனர் என்று அல்லாமா இக்பால் கூறியதை கவனத்தில் வைக்க வேண்டும்.

கம்யூட்டர் போன்ற சம்ளத்தை அடிப்படையாக கொண்ட கல்வியை விட  சேவைய அடிப்படையாக கொண்ட கல்வியை பெண்களுக்கு கொடுப்பது நல்லது.

உங்களது பெண்குழந்தைகலின் இயல்பை கவனியுங்கள். திருமணத்தை வரவேற்கும் நிலையில் இருந்தால் திருமணம் செய்த்து விடுங்கள்.

இவள் படித்தால் சிறந்த பெண்ணாக வருவாள், இவள் படித்தால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலைகள் இருந்தால் பாதுகாப்போடு படிக்க வையுங்கள்.

பெற்றோர்களின் அளவான சிறந்த போதனைகளும் துஆவும் மாணவிகளுக்கு நேரான வழியை காட்டும்.
குறிப்பாக தாய் மார்கள் படிக்க செல்லும் தங்களது மகளின் நடைமுறைகளை கண்காணிக்க தவறக் கூடாது,

ஒரு வீட்டில் ஏழை தாய் சிரமப் பட்டு மக்ளை படிக்க வைத்தார். அந்தப் பெண்ணும் படித்து வேலைக்கு போனாள். பெண்ணுக்கு திருமணம் செய்ய தாய நிச்சயிக்கும் நேரத்தில் மகள் இன்னொருவருடன் ஓடிப்போனாள். அந்த தாய பின்னர் வந்து அழுதார். இரவு நேரத்தில் படுக்கையில் படுத்த படி அவள் செல் போன் பேசிக் கொண்டிருந்த்தை நான் முன்பே கவனிக்க தவறி விட்டேனே என்று கதறினார். கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்காமல் இருந்து விட்டால் பிறகு வருத்த்ப் பட வேண்டியதாகி விடக்கூடும். அல்லாஹ் பாதுகாப்பானாக!



உயர்கல்விகுக்கு உதவுங்கள்
உங்களது பகுதியின்/ குடும்பத்தின் வசதியற்ற சிறந்த மாணவரின் கல்விக்கு தாரளமாக் உதவி செய்யுங்கள்
மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் பழமொழி
கல்வியைப் பற்றிய பேசிய ஒரு நபி பொழியில் உதவிகள் பற்றியும் பெருமானார் பல அறிவுரைகளை கூறினார்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ أَخِيهِ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا قَعَدَ قَوْمٌ فِي مَسْجِدٍ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ

முஸ்லிம் ஜமாத்துக்கள் தங்களது பகுதியில் அதிக மதிப் பெண் பெற்ற் மாணவ மாணவியரைத் திரட்டி மேற்படிப்புக்கு வழிகாட்டுவதும், தேவைப் படுவோருக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதும் சமுதாயத்திற்கு காலம் அறிந்து செய்கிற அரிய சேவையாக அமையும்

ஒரு முக்கிய அறிவுரை : கலவி பயனளிக்க வேண்டும்.

கல்வி உரிய பயனை தரவேண்டும் என்பதே முக்கியம்.

ஆகவே! பய்னுள்ள உயர் கவ்வியை தா! கற்ற கல்வியால் பயன்பெற்ச் செய் இறைவா என்று பிரார்த்திக்க் மறக்காதீர்கள்
 عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم سلوا الله علما نافعا وتعوذوا بالله من علم لا ينفع  إبن ماجة

عن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال وأعوذ بالله من عذاب النار

பயனுள்ள் கல்வி பெற ஒழுக்கம் அவசியம்
உயர் கல்வி நிறுவன்ங்கள் பலவும் ஒழுக்க கேட்டின் வாசல்களாக இருக்கின்றன. சில நிறுவன்ங்கள் சுதந்திரமான அணுகுமுறை என்ற பெயரில் அதையே சிறப்பான நாகரீகமாக காட்ட முயற்சி செய்கின்றன. மாணவர்களும் பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டிய விசயம் இது! கல்வி தேடும் முயற்சியில் வாழ்வையும் மார்க்கத்தையும் தொலைத்து விடக்கூட்து,

பல கல்லூரிகளிலும் முஸ்லிம் மாணவர்களே குறும்புக்கார்ர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாத்தே இதற்கு காரணம்.

அல்லாஹ் விசய்த்தில், மார்க்கம் விசயத்தில், பெற்றோர் பெரியோ ஆசிரியர் விசயங்களில், கல்வி சம்பந்தப் பட்ட பணிகளில் ஒழுக்கம் பேணுபவ்ரே வாழ்வில் உயர முடியும், முடிந்திருக்கிறது,

இபுலீஸின் ஒரு உதாரணத்தை நினைவில் இருத்தினால் போதும்

முஸ்லிம் பெற்றோர்களிடம் இன்று கல்வியின் மீதான் ஆர்வம் அதிகரித்திருக்கிற அதே அளவுக்கு ஒழுக்கத்தின் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறதா என்பது மிகுந்த கேள்விக்குரியாகும்.

மகனோ மகளோ படிக்கிறார்கள் என்பதற்காக அதிக செல்லம் கொடுக்கிறார்கள். வீட்டுப் பணிகளில் ஒதுக்கி விடுகிறார்கள், பெரியோர்களை மதிப்பதிலும் மார்க்கத்தை பேணுவதிலும் அலட்சியத்தை அனுமதிக்கிறார்கள். தனித்தனி அறைகளை அனுமதிக்கிறார்கள். அதில் டிவி கம்யூட்டர் வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.

பல பெற்றோர்கள் கல்லூரிகளில் தங்களது மகன் அல்லது மகளுடையை நிலை என்ன என்பதை நேரில் சென்று பார்ப்பதே இல்லை. ஆசிரியர்களிடம் விசாரிப்பதும் இல்லை. இத்தகைய சூழலில் நம்முடையை பிள்ளைகள் வழி தவறிச் செல்ல நாமே காரணமாகி விடுகிறோம்.

பணத்தை அளவாகவும் பண்பை அதிகமாக கொடுங்கள். அதே போல பணத்தை அளவாகவும் பண்பை நிறைவாகவும் எதிர் பாருங்கள்.


கல்வி சம்பாத்தியத்திற்காக என்ற எண்ணம் வலுத்து வருகிறது .அதிக சம்பளம் வாங்குவதுதான் உயர் கல்வி கற்றதற்கான அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். இந்த மனப்போக்கில் ஒரு மாற்றம் இப்போது அவசியமாக தேவைப்படுகிறது.

வேலை வாய்ப்புக்கள் குறைந்து  வருகின்றன. அதனால் இளைஞர்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். தவறான வழிகளில் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பெற்றோர்கள் பெரிய சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பது இளைஞர்களுக்கு இப்போது பெரும் சுமையாக் மாறியுள்ளது.
ஆக்வே படிப்பின் மூலம்  இளவல்கள் தமது  வாழ்க்கை மதிப்பீடுகள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள் முதலில் தாம் உணர்ந்து பிள்ளைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
கல்வி முக்கியமானது தான். அது ஈமானிய வாழ்வுக்கு உரமாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் பிரதான கடமை.


7 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான விஷயங்கள் ஜஸாகல்லாஹு கைரா

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான விஷயங்கள் ஜஸாகல்லாஹு கைரா

    ReplyDelete
  3. masha allah hazrath allah ongaluku nenda ayilai tharuvanaha ameen

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை ஹழ்ரத்

    ReplyDelete
  5. masha allah romba thelivana arivurai jazakalllahu khairan kaseeran fiddhaarain

    ReplyDelete
  6. جزاكم الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete