வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 06, 2013

மெட்டீயரிலிஸ வாழ்வில் மிஃராஜ்


        لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى(18)

இன்றைய ஜும்ஆ உரையிலும் மிஃராஜை நினைவு கூர்வது பொருத்தமானதே!

(மிஃராஜ் சிறப்பு பயானுக்கு வராத பலரும் ஜும் ஆவிற்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கும் இது பற்றிய சொல்லியாக வேண்டும். மிஃராஜ் பற்றிய புஹாரியின் ஹதீஸை எண்ணோடு அப்படியே படித்துக் காட்டலாம்).  புஹரி 3887 (மொழிபெயர்ப்பு ஓரத்தில் உள்ளது.


حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ بَيْنَمَا أَنَا فِي الْحَطِيمِ وَرُبَّمَا قَالَ فِي الْحِجْرِ مُضْطَجِعًا إِذْ أَتَانِي آتٍ فَقَدَّ قَالَ وَسَمِعْتُهُ يَقُولُ فَشَقَّ مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ فَقُلْتُ لِلْجَارُودِ وَهُوَ إِلَى جَنْبِي مَا يَعْنِي بِهِ قَالَ مِنْ ثُغْرَةِ نَحْرِهِ إِلَى شِعْرَتِهِ وَسَمِعْتُهُ يَقُولُ مِنْ قَصِّهِ إِلَى شِعْرَتِهِ فَاسْتَخْرَجَ قَلْبِي ثُمَّ أُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مَمْلُوءَةٍ إِيمَانًا فَغُسِلَ قَلْبِي ثُمَّ حُشِيَ ثُمَّ أُعِيدَ ثُمَّ أُتِيتُ بِدَابَّةٍ دُونَ الْبَغْلِ وَفَوْقَ الْحِمَارِ أَبْيَضَ فَقَالَ لَهُ الْجَارُودُ هُوَ الْبُرَاقُ يَا أَبَا حَمْزَةَ قَالَ أَنَسٌ نَعَمْ يَضَعُ خَطْوَهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ فَحُمِلْتُ عَلَيْهِ فَانْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ فَقِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَفَتَحَ فَلَمَّا خَلَصْتُ فَإِذَا فِيهَا آدَمُ فَقَالَ هَذَا أَبُوكَ آدَمُ فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ السَّلَامَ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالِابْنِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَفَتَحَ فَلَمَّا خَلَصْتُ إِذَا يَحْيَى وَعِيسَى وَهُمَا ابْنَا الْخَالَةِ قَالَ هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا فَسَلَّمْتُ فَرَدَّا ثُمَّ قَالَا مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ صَعِدَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَفُتِحَ فَلَمَّا خَلَصْتُ إِذَا يُوسُفُ قَالَ هَذَا يُوسُفُ فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الرَّابِعَةَ فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ أَوَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَفُتِحَ فَلَمَّا خَلَصْتُ إِلَى إِدْرِيسَ قَالَ هَذَا إِدْرِيسُ فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الْخَامِسَةَ فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قِيلَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَلَمَّا خَلَصْتُ فَإِذَا هَارُونُ قَالَ هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ السَّادِسَةَ فَاسْتَفْتَحَ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ مَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ قَالَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَلَمَّا خَلَصْتُ فَإِذَا مُوسَى قَالَ هَذَا مُوسَى فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ فَلَمَّا تَجَاوَزْتُ بَكَى قِيلَ لَهُ مَا يُبْكِيكَ قَالَ أَبْكِي لِأَنَّ غُلَامًا بُعِثَ بَعْدِي يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِهِ أَكْثَرُ مِمَّنْ يَدْخُلُهَا مِنْ أُمَّتِي ثُمَّ صَعِدَ بِي إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَاسْتَفْتَحَ جِبْرِيلُ قِيلَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ مُحَمَّدٌ قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ نَعَمْ قَالَ مَرْحَبًا بِهِ فَنِعْمَ الْمَجِيءُ جَاءَ فَلَمَّا خَلَصْتُ فَإِذَا إِبْرَاهِيمُ قَالَ هَذَا أَبُوكَ فَسَلِّمْ عَلَيْهِ قَالَ فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ السَّلَامَ قَالَ مَرْحَبًا بِالِابْنِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ ثُمَّ رُفِعَتْ إِلَيَّ سِدْرَةُ الْمُنْتَهَى فَإِذَا نَبْقُهَا مِثْلُ قِلَالِ هَجَرَ وَإِذَا وَرَقُهَا مِثْلُ آذَانِ الْفِيَلَةِ قَالَ هَذِهِ سِدْرَةُ الْمُنْتَهَى وَإِذَا أَرْبَعَةُ أَنْهَارٍ نَهْرَانِ بَاطِنَانِ وَنَهْرَانِ ظَاهِرَانِ فَقُلْتُ مَا هَذَانِ يَا جِبْرِيلُ قَالَ أَمَّا الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ ثُمَّ رُفِعَ لِي الْبَيْتُ الْمَعْمُورُ ثُمَّ أُتِيتُ بِإِنَاءٍ مِنْ خَمْرٍ وَإِنَاءٍ مِنْ لَبَنٍ وَإِنَاءٍ مِنْ عَسَلٍ فَأَخَذْتُ اللَّبَنَ فَقَالَ هِيَ الْفِطْرَةُ الَّتِي أَنْتَ عَلَيْهَا وَأُمَّتُكَ ثُمَّ فُرِضَتْ عَلَيَّ الصَّلَوَاتُ خَمْسِينَ صَلَاةً كُلَّ يَوْمٍ فَرَجَعْتُ فَمَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ بِمَا أُمِرْتَ قَالَ أُمِرْتُ بِخَمْسِينَ صَلَاةً كُلَّ يَوْمٍ قَالَ إِنَّ أُمَّتَكَ لَا تَسْتَطِيعُ خَمْسِينَ صَلَاةً كُلَّ يَوْمٍ وَإِنِّي وَاللَّهِ قَدْ جَرَّبْتُ النَّاسَ قَبْلَكَ وَعَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ لِأُمَّتِكَ فَرَجَعْتُ فَوَضَعَ عَنِّي عَشْرًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ فَرَجَعْتُ فَوَضَعَ عَنِّي عَشْرًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ فَرَجَعْتُ فَوَضَعَ عَنِّي عَشْرًا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ مِثْلَهُ فَرَجَعْتُ فَأُمِرْتُ بِعَشْرِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ فَرَجَعْتُ فَقَالَ مِثْلَهُ فَرَجَعْتُ فَأُمِرْتُ بِخَمْسِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ بِمَ أُمِرْتَ قُلْتُ أُمِرْتُ بِخَمْسِ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ قَالَ إِنَّ أُمَّتَكَ لَا تَسْتَطِيعُ خَمْسَ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَإِنِّي قَدْ جَرَّبْتُ النَّاسَ قَبْلَكَ وَعَالَجْتُ بَنِي إِسْرَائِيلَ أَشَدَّ الْمُعَالَجَةِ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ التَّخْفِيفَ لِأُمَّتِكَ قَالَ سَأَلْتُ رَبِّي حَتَّى اسْتَحْيَيْتُ وَلَكِنِّي أَرْضَى وَأُسَلِّمُ قَالَ فَلَمَّا جَاوَزْتُ نَادَى مُنَادٍ أَمْضَيْتُ فَرِيضَتِي وَخَفَّفْتُ عَنْ عِبَادِي

மிஃராஜை நினைவு கூறுவதால் இன்றைய நமது ஈமானிய வாழ்வுக்கு தேவையான பல செய்திகள் உள்ளன.

·         வரலாறு தெரியவருகிறது
·         தொழுகையின் சிறப்பை அறியமுடிகிறது
·         முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெருமையை உணர முடிகிறது
இவ்ற்றோடு இன்னொரு முக்கிய நன்மை

மிஃராஜ் நிகழ்வை கேட்கிற ஒவ்வொரு நிமிடமும் ஈமான் வலுப்பெறுகிறது.

இன்றைய உலகம், மெட்டீரியலிஸ்டுகளின் உலகம். அதாவது காரணங்களை பெரிதாக நம்புகிற அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற உலகம்.
·         பயிர் செழிக்கனுமா மழை பொழியனும்
·         முன்னேறனுமா உழைக்கனும் படிக்கனும்
·         பதவி வேனுமா எப்படியாவது மக்களை கவரனும்

இந்தக் காரணங்கள் எல்லாம் நியாயம் தான். மெட்டீயரிஸ்டுகள் இந்தக்காரணங்களை மட்டுமே நம்புகிறார்கள். முஃமின்களோ இந்தக் காரணங்கள் ஒரு இடைச் சாதன்ங்கள் தான் இவற்றுக்கு எல்லாம் அப்பால் அல்லாஹ் நினைத்தால் மட்டுமே இவைகள் சாத்தியமாகும் என்று அழுத்தமாக நம்ப வேண்டும்.

மழை பொழிந்தாலும் அல்லாஹ் நினைத்தால் மட்டுமே விளைச்சல் கிடைக்கும்.
உழைத்தாலும் படித்தாலும் அல்லாஹ நினைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
மக்களை கவர்ந்தாலும் அல்லாஹ் நினத்தால் மட்டுமே பதவி நிலைக்கும்.
என்று முஃமின் காரணங்களை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு கர்த்தாவான அல்லாஹ்வை முன்னிறுத்துகிறார்.

இந்த ஈமான் தான சத்தியமானதும் கூ.

நெருப்பு சுட வேண்டும். இதுதான் மெட்டீயரிஸ்ட்களின் தீர்வு.
நெருப்பு அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் தான் சுடும் இது முஃமிகளின் உறுதிப்பாடு.

وقلنا ينار كوني بردا وسلاما

என்று அல்லாஹ் சொன்ன போது நம்ரூது மூட்டிய நெருப்பு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நெருப்பு களும் சுட விலை. குளிர்ந்து போயின என்று முபஸ்ஸிர்கள் பெருமாலோர் கூறுகிறார்கள். (அல்லாஹ் நார் என்று பொதுவாக சொன்னதால்)

அல்லாஹ்வின் நாடினால் தான் எதுவும் நடக்கும். இந்த உலகின் புறக்காரணங்கள். ஒரு துணைச்சாதனம் மாத்திரமே என்ற அழுத்தமான உறுதியான சந்தேகமற்ற சஞ்சலமற்ற ஈமான முஃமின்களுக்கு அவசியம்,

அலி ரலி அவர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு காரியம் சொல்லி அனுப்பினார்கள். சீக்கிரமாக செல்லுங்கள் மக்காவிற்கு போகிற வழியில் ரவ்ளா ஹாஹ் என்ற இட்த்தில் ஒரு பெண் மணியை பார்ப்பீர்கள் அவரிடம் ஒரு கடிதம் இருக்கிறது அதை வாங்கி வாருங்கள் என்றார்கள். அந்தப்பெண்ணிடம் தேடிப்பார்த்த போது கடித்த்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
அலி (ரலி) சொன்னார்கள் கடிதம் இருக்கிறது என்று பெருமானார் (ஸல்) சொல்லியிருக்க கடிதம் இல்லாமல் போக முடியாது கடிதத்தை தருகிறயா ? இல்லை என்றால் உன் ஆடைகளை கலைந்து  பார்க்க நேரிடும் என்று எச்சரித்த போது தனது கொண்டைக்குள் மறைத்து வைத்திருந்த கடித்த்தை அந்தப் பெண் எடுத்துக் கொடுத்தார் என்ற செய்தி புஹாரியில் உண்டு.

பெருமானாரின் மீதான் உறுதியான நம்பிக்கைகான அடையாள்ம் இது. தனது கண்களை மட்டும்  நம்பியிருந்தால் அலி (ரலி) அவர்கள் கடித்த்தை பெறாமலே திரும்பியிருப்பார்கள்.

உமர் (ரலி) அவர்கள் காதிஸீயா யுத்த முனையில் தளபதி காலித் பின் வலீதை (ரலி) பணி நீக்கம் செய்து விட்டு அவருக்கு பதிலாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களை நியமித்தார்கள்.
யுத்த முனையில் இப்படி ஒரு மாற்றம் ஏன் என்று நண்பர்கள் உமர் (ரலி) யிடம் கேட்ட போது, காலித் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் முஸ்லிம்களிடம் வந்து விட்ட்து. அவர்களது ஈமானை பாதுகாக்கவே நான் இப்படிச் செய்தேன் என்றார்கள்.

நம்மை சுற்றி இருக்கிற சூழலை கவனித்துப் பாருங்கள் மெட்டீரியலிஸ்டுகள் தான் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்ப்ங்களில் நாம் கூட அவ்வாறு யோசிக்கவும் பேசவும் சிந்திக்கவும் நடந்து கொள்ளவும் செய்கிறோம்.

படிப்பு தான் பணம் தான் பதவி தான் அந்தஸ்து தான் செல்வாக்கு தான் நமது உயர்வுக்கான முழு காரணம் என்ற சிந்தனை நமக்குள்ளும் முந்திக் கொண்டு வந்து விடுகிறது.

அதனால் தான் அல்லாஹ்வை முன்னிறுத்தாத படிப்பும் பதவியும் பணமும் நமக்கு முக்கியமாகிவிடுகிறது.

நாம் வாழ்கிற இன்றைய உலகம் இன்றைய தினத்தின் மகிழ்ச்சியான வாழ்கையை அனுபவி என்ஜாய் என்ற ஒரே முழக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. நாமு அதில் ஒரு அங்கமாகி வருகிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இத்தகைய சூழ்நிலையை மிஃராஜை என்னிப்பார்ப்பதும் நினைவு கூர்வதும் ஈமானுக்கு உரம் பாய்ச்சுவதாக அமையும். 

முஹம்மது நபி (ஸல் அவர்கள் அல்லாஹ்வை சந்தித்து விட்டு தொழுகை பெற்றுக் கொண்டு திரும்பிய நிகழ்வை நாம் ஆண்டு தோறும் நினைவு கூர்கிற போது, அது நமது சிந்தனையை அடைத்துக் கொண்டிருக்கிற உலகியல் மாயைகளை உடைத்து ஈமானின் சுத்தமான தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நாம் அத்தனை பேரும் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஈமானை பிரதிபலிக்கிறோம். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? அது சத்தியமே! அல்லாஹ் எந்தக் காரியங்த்தையும் எப்படி வேண்டுமானாலும் நிகழ்த்த சக்தியுடைவன்

நபி (ஸல்) அல்லாஹ்வை சந்தித்தார்கள். மறுமையின் காட்சிகளை கண்டார்கள்.சொர்க்கம் நரகின் காட்சிகளை கண்டார்கள் என்பதை எல்லாம் கேட்கிற போது நமது நம்பிக்கை அதில் குவிகிறது. 

மிஃராஜ் ஒரு அதிசயம் என்றால், அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடைய ஈமானும் ஒரு அற்புதமே ! அந்த ஈமானை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக!  
  

5 comments:

  1. الحمدلله
    இன்றைய இஸ்லாமியர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய செய்தி
    அல்லாஹ் நம் ஈமானை பரிபூரணமாக ஆக்குவானாக! ஆமீன்.

    ReplyDelete
  2. masha allah hazrath jazakallah

    ReplyDelete
  3. ஜஸாக்கல்லாஹு ஹைர்.

    ReplyDelete
  4. Masha Allah
    Barakallah
    Alhamthulillah
    Jazakallah

    ReplyDelete