வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 13, 2013

காரணங்கள் இலேசாக!


மிஃராஜும் தொழுகையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள போல. ஒன்றிலிருந்து மற்றதை பிரிக்க முடியாது.

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் எனும் வாய்ப்புக் கிடைத்த்து. முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தொழுகையை மிஃராஜை போல அந்தஸ்து மிக்கதாக ஆக்கினான்.

முஹ்ம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜின் வழியாக எந்த ஆறுதலும் மன உறுதியும் கிடைத்ததோ அது தொழுகையின் வாயிலாக உம்மத்திற்கு கிடைக்கும்

: الصلاة معراج المؤمن - السيوطي في شرح سنن ابن ماجة

மிஃராஜ் அல்லாஹ்வின் சக்தி என்ன படைப்புக்களுக்கு புரியவைக்கிறது,

அவன் தான் உண்மையான காரணகர்த்தா.  مسبب الأسباب
காரணங்களை மீறி அவனால் காரியமாற்ற முடியும்.

பயனத்திற்கு நேரம் தேவை=  பக்கத்து இட்த்துக்கு செல்ல அரைமணி நேரமும் பக்கத்து ஊருக்கு செல்ல அரை நாளும் தேவைப்படும்.

மிஃராஜ் பயணம் இரவின் கொஞ்ச நேரத்தில் முடிந்து விட்ட்து. மிஃராஹ் பற்றிய இறை வசனத்தில் இடம் பெறுகிற ليلا    என்ற வார்த்தைக்கு இரவின் சிறு பொழுதில் என்று பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 
காரணங்களையும் விளைவுகளையும் அவனால் மாற்ற முடியும்
யூதர்களை இஸ்ரவேலர்களின் பாலைவனத்தில் கதவுகள் கம்பிகள் இல்லாமல் சிறை வைத்தான்
மர்யம அம்மையாருக்கு ஜகரிய்யா (அலை)உணவு கொண்டு ருவதற்கு முன்பே அவரிடம் அந்தப்பருவத்தில் கிடைக்காத உணவுப் பொட்ருட்கள் இருந்தன.

ஆனால் அல்லாஹ் உலகத்தின் சாதரண நடைமுறைகளை காரணங்களை அடிப்ப்டையாக்க் கொண்டே அல்லாஹ் அமைக்கிறான்.

உஹது யுத்த்தில் முஸ்லிம் தோற்றுப் போனார்கள். காரண்ம் மலையிலிருந்து வீர்ரகள் கீழே இறங்கியிருந்தனர்.

இந்த உலகத்தில் நாம் நிம்மதியாக வாழ வேண்டுமா?
வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமா?
கல்வியில் சாதனை படைக்க வேண்டுமா?
குழ்ந்தைகளை சிறப்பாக வளர்க்க வெண்டுமா?  

இவை ஒவ்வொன்றுக்கும் பல வழிகள் – காரணிகள் உண்டு,  முறசி உழைப்பு நல்ல அணுகுமுறை கவனம் என அந்தக்காரணங்கள் அமையலாம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது. அந்தக்காரணங்களை தொழுகை இலேசாக்கி வைக்கிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் வாழ்க்கையில் வெற்றி மேல வெற்றியை குவித்த்தற்கு தொழுகையும் ஒரு காரணமாக அமைந்த்து.

இந்த உலகத்தை காரண உலகமாக படைத்த இறைவன் தன்னை பணிந்து வணங்கி வழிபடக்கூடியவர்களுக்கு அந்தக் காரணிகளை இலேசாக்குகிறான்.

அதனால் தான் திருக்குர் ஆன் இப்படிக்க் கூறுகிறது.
.
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ(45)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(153)

يقول تعالى آمرا عبيده فيما يؤملون من خير الدنيا والآخرة بالاستعانة بالصبر والصلاة
·         ورواه أبو داود عن حذيفة قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة.
·         قال حذيفة رجعت إلى النبي صلى الله عليه وسلم ليلة الأحزاب وهو مشتمل في شملة يصلي وكان إذا حزبه أمر صلى.
·         حارثة بن مضرب سمع عليا رضي الله عنه يقول لقد رأيتنا ليلة بدر وما فينا إلا نائم غير رسول الله صلى الله عليه وسلم يصلي ويدعو حتى أصبح.
·         قال ابن جرير وروي عنه عليه الصلاة والسلام أنه مر بأبي هريرة وهو منبطح على بطنه فقال له "أشكم درد" ومعناه أيوجعك بطنك ! قال: نعم - قال: "قم فصل فإن الصلاة شفاء"
சஹாபாக்களின் நடைமுறை

·         أن ابن عباس نعي إليه أخوه قثم وهو في سفر فاسترجع ثم تنحى عن الطريق فأناخ فصلى ركعتين أطال فيهما

எங்களுடைய உஸ்தாது கமாலுத்தீன் ஹஜரத் அவர்கள்! டேய்! சரியா தொழுங்க! அப்பதான் அல்லாஹ் இல்மில் பரக்கத் செய்வான் என்று அடிக்கடி கூறுவார்கள்.

கல்வியில் மட்டுமல்ல. வியாபாரத்தில், பொதுப்பணிகளில், குடும்பத்தில் அல்லாஹ் காரணங்களை இலேசாக்கித்தர வேண்டுமெனில் நாம் தொழுகைய சரியாக கடைபிடித்து வரவேண்டும் அல்லாஹ் கிருபை செய்வானாக.


No comments:

Post a Comment