வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 20, 2013

நீதியின் விளையாட்டு


சமீப் காலத்தில் நீதிமன்றங்களில் நடை பெற்ற இரண்டு நிகழ்வுகள் முஸ்லிம் சமுதாயத்தின் கவனத்தை பெற்றவையாகும். இவற்றில் தெளிவும் உறுதியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு அத்தியாவசியமாகும்.

முதலாவது,  காஜிகளின் தலாக் வழங்கும் உரிமையை பறிக்க வேண்டும். நீதிமன்றத்தில் தான் தலாக் வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தின் பிரபலமான அ இ அ திமுக பிரமுகர் பத்ர் சயீத் எனற பெண்மணி சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பது. இவர் தமிழக வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிட்த்தக்கது.

உதட்டுக்கு சாயம் பூசுகிற அளவுக்கு கூட சமூதாயத்திற்கு தொடர்பில்லாத இந்த அம்மையார் அண்ணா திமுக வின் மேலிட்த்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த வழக்தை தாக்கல் செய்திருப்பதாக தெரியவருகிறது. குறிப்பாக வக்பு வாரிய தலைவர் பதவி விவகாரத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையில் நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.

இவர் படித்தவர். இஸ்லாமின் சட்டங்களை யும் இந்திய முஸ்லிம் பர்சனல் லா வையும் தெளிவாக தெரிந்து கொள்வத்ற்கு இவருக்கு வாய்ப்பு இருக்கிறது.

இஸ்லாமிய ஷரீஅத் திருமணத்தை மிக இலகுவாக அமைத்திருக்கிறது. திருமண முறிவையும் இலகுவாக அமைத்திருக்கிறது.

இரு முஸ்லிம் சாட்சிகளின் முன்னிலையில் ஒரு ஆணும் பெண்ணும் குறிப்பிட்ட மஹரின் அடிப்படையில் தாங்கள் மனமொத்து வாழ்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை திருமணம் என்று இஸ்லாம் சட்ட பூர்வமாக ஏற்கிறது. இத்திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பவ்ரும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.

எந்த ஒப்பந்தங்களையும் பதிவு செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது. திருக்குர் ஆனின் மிக நீண

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلْ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا

قال الإمام إبن كثير :
هذه الآية الكريمة أطول آية في القرآن العظيم
عن ابن عباس أنه قال لما نزلت آية الدين قال رسول الله - صلى الله عليه وسلم - "إن أول من جحد آدم عليه السلام إن الله لما خلق آدم مسح ظهره فأخرج منه ما هو ذار إلى يوم القيامة فجعل يعرض ذريته عليه فرأى فيهم رجلا يزهر فقال أي رب من هذا؟ قال هو ابنك داود قال أي رب كم عمره؟ قال ستون عاما قال رب زد في عمره قال لا إلا أن أزيده من عمرك وكان عمر آدم ألف سنة فزاده أربعين عاما فكتب عليه بذلك كتابا وأشهد عليه الملائكة فلما احتضر آدم وأتته الملائكة قال إنه قد بقي من عمري أربعون عاما فقيل له إنك قد وهبتها لابنك داود قال ما فعلت فأبرز الله عليه الكتاب وأشهد عليه الملائكة"

திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம் என்கிற காரணத்தினால் முஸ்லிம் சமூகத்தில் திருமணங்கள் முறைப்படி பதிவு செய்யப்படுகின்றன. முஸ்லி சமூகத்திற்கு அளப்பரிய சேவையாற்றி வருகிற ஜமாத்துக்களும் காஜிகளும் இந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றன. மிக மிக அரிதாக இதில் தவறுகள் நடக்கினறன. (நமது நாட்டின் நீதிமன்றங்களில் நடக்கிற தவறுகளோடு ஒப்பிட்டால் யானைக்கும் எறும்புக்கும் உள்ள சதவீத வேறுபாடு இரண்டிற்குமிடையே இருக்கிறது.)

ஒரு திருமணத்தை மகிழ்ச்சி நிரம்பியதாக
தனி நபருக்கும் மனித குலத்திற்கும் நன்மையானதாக ஆக்கிக் கொள்ள தேவையான அறிவுறைய இஸ்லாம் கூறியிருக்கிறது.

فَقَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ البخاري

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ- إبن ماجة

عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ آخَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ الْآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ سَلْمَانُ –البخاري 1973

பூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி)/ அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.  சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த  ஆடை அணிந்திருக்கக் கண்டார். ,உமக்கு என்ன நேர்ந்தது, என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள்/ ,உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை, என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம்/ ,உண்பீராக!, என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா/ ,நான் நோன்பு நோற்றிருக்கிறேன், என்றார். சல்மான்/ ,நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன், என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணஙகத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள்/ ,உறஙகுவீராக!, என்று கூறியதும் உறஙகினார். பின்னர் நின்று வணஙகத் தயாரானார். மீண்டும் சல்மான்/ ,உறஙகுவீராக!, என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள்/ ,இப்போது எழுவீராக!, என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள்/ ,நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன< உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன< உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன< அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!,, என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள்/ நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்/ ,,சல்மான் உண்மையையே கூறினார்!,, என்றார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا –திர்மிதி

حَدَّثَنَا يَزِيدُ أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ غَيْرَ أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ وَأَطْعِمْ إِذَا طَعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ كَيْفَ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ إِلَّا بِمَا حَلَّ عَلَيْهَا – احمد

فَقَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 أَلَا وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا أَلَا إِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلَا يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ أَلَا وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ = ترمذي

சில அதிருப்திகளை சகித்துக் கொள்ள உத்தரவிட்ட்து இஸ்லாம், குறிப்பாக ஆணகளுக்கு அதிக சகிப்புத்தன்மையை உபதேசித்த்து.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَوْصُوا بِالنِّسَاءِ فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ    

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுஙகள். அவர்களை நல்லவிதமாக நடத்துஙகள். ஏனெனில்/ பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும்/ விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோண லானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோண லாகவே இருக்கும். ஆகவே/ பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுஙகள    புகாரி ;3331

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீஙகள் உஙகள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்/) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள். புகாரி 5204
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَفْرَكُ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ  - احمد 8013

அதே நேரத்தில் திரும்ண உற்வு எந்த நோக்க்க்கதிற்காக அமைந்த்தோ அந்த நோக்கம் சிதையும் எனில் விவாகரத்தையும் எளிதாக்கியது.

நான் உன்னை தலாக் சொல்கிறேன் என்ற ஒரு வார்த்தையில் கணவன் மனைவியை பிரிந்து விடலாம். நீதிமன்றத்திற்கான அல்லது பஞ்சாயத்திற்கான அனுமதியை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதே நேரத்தில் தலாக்கை முறைகேடாக பயன்படுத்துவதை கடுமையாக எச்சரித்துள்ளது,

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا مُعَرِّفٌ عَنْ مُحَارِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنْ الطَّلَاقِ  = ابوداوود 1862


முறை கேடாக தலாக் விடப்படுகிற போது இறைவனின் அரியாசனம் நடுங்குவதாக ஒரு செய்தி திருக்குர் ஆனின் விரிவுரைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இது ஆண்களுக்கு சொல்லப்பட்ட்து என்றால் பெண்களுக்கும் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ =  ترنذي 1108


முஸ்லிம்களும் சரி மற்றவர்களும் சரி மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் தான் விவாகரத்து குறைவாக இருக்கிறது. உலக அளவிலும் ஐரோப்பிய் அமெரிக்க நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தான் விவாகரத்து குறைவாக இருக்கிறது.

காரணம் இஸ்லாம் விவாரத்திற்கான வழி முறையை இலேசாக்கியிருக்கிறதே விவாகரத்தை இலேசானதாக ஆக்கவில்லை

இந்தியாவில் குறிப்பாக தமிழ்கத்தில் குடும்ப அமைப்பை பாதுகாப்பதிலும் பெண்களின் உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாப்பதிலும் ஜமாத்துக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன, எந்த ஒரு ஜமாத்தும் பெண்ணின் சார்பாகத்தான் முதலில் பேசத்தொடங்குகிறது, சேர்த்து வைக்க என்றால் எங்களால முடிந்த அளவு முயற்சி செய்வோம். விவாரத்து என்றால் அதற்கு நாங்கள் முன்னிறக் மாட்டோம் என்று ஜமாத்துக்கள் சொல்வது ச்கஜமான ஒரு பேச்சாகும். ஒரு வேளை விவாகரத்து தான் தீர்வென்றால் திருமணத்தின் வழியாக மாப்பிள்ளைக்கு தரப்பட்ட அனைத்தும் திருப்பி பெண்வீட்டாருக்கு வாங்கிக் கொடுப்பதில் ஜமாத்துக்கள் முக்கிய பங்கு வகிக் கின்றன.

ஜமாத்துக்கள் என்ன செய்கின்றார்களோ அதையே தான் காஜிகளும் செய்கின்றன,

அதிலும் குறிப்பாக சென்னையிலிருக்கிற அரசு தலைமை காஜி இது விசயத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக சென்னையில் உள்ள உலமாக்கள் கூறுகின்றனர்.

அஸர் தொழுகைக்குப் பின் அரசு காஜி இருக்கிற இராயப்பேட்டை பள்ளிவாசலுக்கு சென்றால் யாரும் அவரை எளிதாக பார்த்துவிட முடியும். இதை நானே பார்த்த்திருக்கிறேன்.

முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து குறைவாக இருப்பதற்கு ஜமாத்துக்களும் காஜிகளும் முக்கிய காரணமாகும்.

இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் .
முஸ்லிம் ஷரீஆ சட்டப்படி விவாரத்திற்கான அனுமதி கணவனுக்கு உண்டு.

அதை ஜமாத்துக்களும் காஜிகளும் நெறிப்படுத்துகிறார்கள்.
அதே போல பெண்கள் தலாக் கோருகிற போது அதை ஜமாத்துக்களும் காஜிகளும் நெறிப்படுத்தி தேவை எனில் குலா பெற்றுக் கொடுக்கிறார்கள்.
சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இரண்டு தரப்புகளில் ஒன்று முரண்டு பிடிக்கிற போது திருமண உறவை முறித்து (பஸ்க்)  விடுகிறார்கள் .

இவை எல்லாமே பெரும்பாலும் பொறுப்புணர்வோடும் இறைய்ச்ச சிந்தனையோடும் ந்டை பெற்று வருகின்றன,

இது முஸ்லிம் உம்மத்துக்கு பெரும் நனமையான சேவையாக ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.

இவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜமாத்துக்கள் மூலமாக அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ள்ப்படுவதில் வக்கீல்களுகு பல காலமாக ஒரு கோபம் இருக்கிறது. காரணம் வேறொன்றும் இல்லை அவர்களுடை வருவாய பாதிப்புக்குள்ளாகிறது என்பது தான.

தற்போது இந்தப் பிரச்சினையில், திருமதி பதர் சயீத் காஜிகளை குறிவைத்து  நீதிமனறத்தை நாடியிருப்பது தேவையற்ற ஒரு பிரச்சினையாகும். காஜிகளின் அதிகாரத்தால் பெண்கள் பாதிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது குட்டையை கலக்கி அதில் மீண் பிடிக்கும் முயற்சியே தவிர வேறில்லை,

இது விசயஹ்தில் காஜிகளை எதிர்ப்பது என்பதும். ஜமாத்துக்களை எதிர்ப்பதும் ஒன்று தான் அது போல கணவன் அல்லது மனைவியின் விவாரத்து அதிகாரத்தை மறுப்பதும் ஒன்றுதான், இது இஸ்லாத்தை ஒரு சட்ட்த்தை மறுப்பதற்கு சம்மானதாகும்.

முஸ்லிம் சமுதாயம் இன்றுள்ள சிக்கலான நிலையில், ஒரு வேளை யாராவது ஒரு பெண்மணி பாதிக்கப்பட்டிருப்பார் என்றால், மார்க்க சட்ட்த்திற்கு முரணாக தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கும் என்றால் திருமதி பதர் சயீத் அதை முஸ்லிம் சமுதாயத்திடமே முறையிட்டிருக்கலாம். அது சீர்திருத்த்திற்கு உதவியாக அமைந்திருக்கும்.

பதர் ச்யீத் நீதிமன்றத்தை நாடியதில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியைதை தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. இதுவே அவருடைய நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது.
அதிமுக தலைமையிட்த்தில் நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அவர் இப்படி ஒரு அவல்ட்சணமான வேலையில் இறங்கியிருக்கிறார்,

சமுதாயம் இத்தகைய தீய சக்திகளை அடையாளம் கண்டு கொள்வதோடு நம்முடைய அடிப்ப்டை கோட்பாடுகளிலிலும் நடைமுறைகளிலும் நமக்குள்ள உறுதிப்பாட்டை நிலை நிற்த்திக் கொள்ள வேண்டும்.

அத்தோடு ஜமாத்துக்களும் காஜிகளும் தமது பணியை மிகுந்த எச்சரிக்கையோடும் செய்து வரவேண்டும்.

சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் என்பவர் சட்டப்படி நீதி வழங்காமல் தனக்கு தோன்றிய சவுகரியப்படி தீர்ப்பு வழங்கியதாகும்.

அந்த நீதிபதி, சட்டப்ப்டியான பதிவுகள் இல்லாவிட்டாலும் உடலுறவு திருமணம் தான் என்று தீர்ப்பளித்திருக்கிறார்.
இதோ அவருடைய தீர்ப்பு

ஒரு பெண்ணுக்கு 18வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பி அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலம் அந்தப்பெண் கருத்தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும், அவன் கணவன் என்றும் கருதப்படவேண்டும் என்பது இந்த கோர்ட்டின் கருத்து. ஏற்கனவே அவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையிலும் இது பொருந்தும். ஒரு வேளை அவள் கருத்தரிக்காமல் போனாலும் அவர்களுக்குள் பாலியல் உறவு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் இருவருமே கணவன் மனைவி உறவுக்கு உட்பட்டவர்களே

தாலி கட்டுவது, அம்மி மிதித்து வலம் வருவது , அக்னி சுற்றுவது, மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது , பதிவு திருமணம் செய்துகொள்வது போன்றவை எல்லாம் மத சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்து வதற்காகத்தான் செய்யப்படுகிறது.   இப்படி சடங்குகளை மையப் படுத்தி அல்லது பின்பற்றி திருமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்குள் பாலியல் உறவு இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது.
கணம் கோர்ட்டார் அவர்களே! நீதிமன்றங்கள் கூட ச்முதாயத்தை திருப்திப்படுத்துவறகாகத்தான் அதனால் நீதிமனறங்கள் அவசியமற்றவை என்று சொல்லி விடலாமா? என்று யாரும் குறுக்கே பேச வில்லை அதனால் நீதிபதி தான் பேச நினைப்பதை பேசி முடித்து விட்டார். என்ன தீர்ப்பு சொல்வது என்பதில் சட்டத்தையும் மதிக்காமல் சமூக அமைப்பையும் கவனிக்காமல் சொல்லப்பட்ட கட்டப்பஞ்சாயத்து இது.  

உடலுறவை திருமணம் என்று சொல்லாதே! அது தனிமனித சுதந்திரத்தில் த்லையிடுகிற வேலை என்று ஒரு குரல் எழுகிறது. கலாச்சாரத்தையும் பன்பாட்டையும் புண்படுத்த்தாதே! என்று மற்றொருபுறம் குரல் எழுந்திருக்கிறது.

தீர்ப்பை சொல்லி விட்டு அதற்கு விளக்கம் வேறு அவர் கொடுக்கிறார், அந்த விளக்கமும் கேலிக்கூத்தானது,
அலசி ஆராய்ந்தே தீர்ப்பு வழங்கியுள்ளேன்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நிவாரணம் தரும் வகையில் மட்டும் தீர்ப்பு வழங்கவில்லை.  கலாசார ஒருமைப்பாட்டுக்கு ஏற்ற வகையில் தீர்ப்பு கூறியுள்ளேன் என்று நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தீர்ப்பை விட குழப்பமானது. கலாச்சார ஒருமைப்பாடு என்ற வார்த்தைக்குள புதைந்திருப்பது என்ன் என்பதை நீதிபதி விளக்க வேண்டும்.

போகிற போக்கில் நீதிபதியால் சொல்லப்படும் கருத்துக்கள் தீர்ப்பாக கருதப்படாது என்று  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தெரிவித்தார்.என்றாலும்  அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல நீதிபதி கர்ணன் ஏதோ ஒரு உள் நோக்கம் வைத்து இத்தீர்ப்பை வழங்கியிருப்பதாக அவர் கொடுத்த விளக்கம் அமைந்திருக்கிறது.

இதில் முஸ்லிம் சமுதாயத்தின் மேதமையை புரிந்து கொள்ள் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் மிகச்சிறப்பாக இது விசயத்தை ஆய்ந்து தெளிந்து சொன்னார்கள்.

திருமணம் என்றாலே உடலுறவு தான் அதன் அக்ராதிப் பொருள் என இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறினார்.

لعن الله ناكح يده
ناكح البهيمة ملعون

இந்த நபி மொழிகளில் நாகிஹ் என்ற வார்த்தைஉடலின்பம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளான.

அகராதிப்படி பொருள் கொடுப்பது மிருகங்களின் உறவிற்கும் மனிதர்களின் உறவிற்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விடும்.

இஸ்லாமிய ஷரீஅத் மனிதர்களின் நிகாஹ் என்பதற்கு அற்புதமான் பொருள் கொடுத்த்து.

இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் செய்ய்ப்படுகிற ஒப்பந்தமே மனித வழக்கிலான திருமணமாகும்.

திருமணங்கள் பல மாதிரி இருந்தன அது காலப்போக்கில் சீர் செய்யப்பட்டு சரியான வடிவம் மட்டும் எஞ்சியிருக்கிறது.


أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ النِّكَاحَ فِي الْجَاهِلِيَّةِ كَانَ عَلَى أَرْبَعَةِ أَنْحَاءٍ فَنِكَاحٌ مِنْهَا نِكَاحُ النَّاسِ الْيَوْمَ يَخْطُبُ الرَّجُلُ إِلَى الرَّجُلِ وَلِيَّتَهُ أَوْ ابْنَتَهُ فَيُصْدِقُهَا ثُمَّ يَنْكِحُهَا وَنِكَاحٌ آخَرُ كَانَ الرَّجُلُ يَقُولُ لِامْرَأَتِهِ إِذَا طَهُرَتْ مِنْ طَمْثِهَا أَرْسِلِي إِلَى فُلَانٍ فَاسْتَبْضِعِي مِنْهُ وَيَعْتَزِلُهَا زَوْجُهَا وَلَا يَمَسُّهَا أَبَدًا حَتَّى يَتَبَيَّنَ حَمْلُهَا مِنْ ذَلِكَ الرَّجُلِ الَّذِي تَسْتَبْضِعُ مِنْهُ فَإِذَا تَبَيَّنَ حَمْلُهَا أَصَابَهَا زَوْجُهَا إِذَا أَحَبَّ وَإِنَّمَا يَفْعَلُ ذَلِكَ رَغْبَةً فِي نَجَابَةِ الْوَلَدِ فَكَانَ هَذَا النِّكَاحُ نِكَاحَ الِاسْتِبْضَاعِ وَنِكَاحٌ آخَرُ يَجْتَمِعُ الرَّهْطُ مَا دُونَ الْعَشَرَةِ فَيَدْخُلُونَ عَلَى الْمَرْأَةِ كُلُّهُمْ يُصِيبُهَا فَإِذَا حَمَلَتْ وَوَضَعَتْ وَمَرَّ عَلَيْهَا لَيَالٍ بَعْدَ أَنْ تَضَعَ حَمْلَهَا أَرْسَلَتْ إِلَيْهِمْ فَلَمْ يَسْتَطِعْ رَجُلٌ مِنْهُمْ أَنْ يَمْتَنِعَ حَتَّى يَجْتَمِعُوا عِنْدَهَا تَقُولُ لَهُمْ قَدْ عَرَفْتُمْ الَّذِي كَانَ مِنْ أَمْرِكُمْ وَقَدْ وَلَدْتُ فَهُوَ ابْنُكَ يَا فُلَانُ تُسَمِّي مَنْ أَحَبَّتْ بِاسْمِهِ فَيَلْحَقُ بِهِ وَلَدُهَا لَا يَسْتَطِيعُ أَنْ يَمْتَنِعَ بِهِ الرَّجُلُ وَنِكَاحُ الرَّابِعِ يَجْتَمِعُ النَّاسُ الْكَثِيرُ فَيَدْخُلُونَ عَلَى الْمَرْأَةِ لَا تَمْتَنِعُ مِمَّنْ جَاءَهَا وَهُنَّ الْبَغَايَا كُنَّ يَنْصِبْنَ عَلَى أَبْوَابِهِنَّ رَايَاتٍ تَكُونُ عَلَمًا فَمَنْ أَرَادَهُنَّ دَخَلَ عَلَيْهِنَّ فَإِذَا حَمَلَتْ إِحْدَاهُنَّ وَوَضَعَتْ حَمْلَهَا جُمِعُوا لَهَا وَدَعَوْا لَهُمْ الْقَافَةَ ثُمَّ أَلْحَقُوا وَلَدَهَا بِالَّذِي يَرَوْنَ فَالْتَاطَ بِهِ وَدُعِيَ ابْنَهُ لَا يَمْتَنِعُ مِنْ ذَلِكَ فَلَمَّا بُعِثَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ هَدَمَ نِكَاحَ الْجَاهِلِيَّةِ كُلَّهُ إِلَّا نِكَاحَ النَّاسِ الْيَوْمَ


இந்த எதார்த்த்தை புரிந்து கொள்ளாமல் மிகப் பெரிய ஆராய்ச்சி செய்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக நீதிபதி சொல்கிறார்.
நம் நாட்டில் நீதிபதிகளுக்கு என்ன ஆயிற்று?  சட்டப் புத்தகங்களை படிக்காமல் நாவல்களைகளையும் பதிரிகைகளை படித்து தீர்ப்புகளை எழுத் தொடங்கி விட்டனரே! சட்ட்த்தின் மீது நீதிபதிகளுக்கே நம்பிக்கை போய்விட்டதா?

2 comments:

  1. பத்ர்.சயீத்.முஸ்லிம்.பெயர்,வைத்துக்.கொண்டால்.எப்படி.எதுனாலும்,பேசிவிடலாம?

    ReplyDelete
  2. ALHAMDU LILAH MIKUM ARUMAI ARPUTHAM

    ReplyDelete