شهر رمضان الذي أنزل فيه القرآن هدى
للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على
سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة
ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون(185)
இன்னும் சில
நாட்களில் ரமலான் வர இருக்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமான வார்த்தைகளால் வரவேற்ற
மாதம். சமுதாயத்தை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய மாதம்
عن سلمان
الفارسي رضي الله عنه أنه قال : ( خطبنا رسول
الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر عظيم
مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعاً
، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان
كمن أدّى سبعين فريضة فيما سواه ، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من
النار رواه ابن خزيمة
ரமலானை வ்ரவேற்கிற நமது முதல் கடமை பிறை பார்ப்பது.
يفترض على
المسلمين فرض كفاية أن يلتمسوا الهلال في غروب اليوم التاسع والعشرين من شعبان
ورمضان حتى يتبينوا أمر صومهم وإفطارهم
அல்லாஹ் நமக்கு
ஷஃபான் மாத்தின் 29 நாளில் ரமலான் பிறையை காட்டினால் அடுத்த நாள் நோன்பு. இல்லை
எனில் அதற்கடுத்த நாளிலிருந்து ரமலான் ஆரம்பமாகும். நபிகள நாயகம் (ஸல்) அவர்களது
வழிகாட்டுதலிலும் சஹாபாக்களின் வழி முறைகளிலும் தெளிவாக அறியப்பட்ட நடைமுறையை நாம்
பின்பற்றி வருகிறோம்.
சவூதி என்று
சொல்லி, சர்வதேச பிறை என்று சொல்லி குழப்பும் தீய சக்திகளை புறக்கணிப்பீர்!
இஸ்லாத்தின்
எதார்த்த்திற்கும் எளிமைக்கும் எதிரான கூற்று அது. இஸ்லாத்தினோடு தொடர்பில்லாத
பேச்சு அது.
மார்க்கத்தை
விளையாட்டுப் பொருளாகவும் விவாத களமாகவும் எடுத்துக் கொண்டு விட்ட சிலர் ரமலானின் பிறையிலிருந்து
தஙகளது பித்தலாட்ட்த்தை ஆரம்பித்து விடுவர். சமுதாயம் அந்த குறும்புக்கார்ர்களை
அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى
تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ - البخاري –
1907
عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ
بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ
الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا
بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ
الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ
الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ
فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا
رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ
أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ
فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي- مسلم
நீங்கள் இருக்கிற இடத்தில் பிறை தென்படுகிறதா என கவனியுங்கள். தெரிந்தால் ஜாமாத்திடம் சொல்லுங்கள். உங்களுக்கு பிறை தென்படவில்லை எனில் அமைதியாக வீடுகளுக்குச்
செல்லுங்கள். பிறைச் செய்தி உங்கள் வீடு தேடிவரும். பிறை பார்க்கிற் இடங்களில் கூடி டென்சனை உண்டு பன்ணாதீர்கள்.
ஒரு பண்க்காரர் என்னிடம் பதறினார் ஹஜ்ரத் வீட்ல கறி
வாங்கிக் கொடுத்திட்டேன். இன்னிக்கே நோன்பு ஸ்டார்ட்
ஆகிடுமில்லே
இந்த பத்ற்றம் தேவையற்றது.
ஜூலை 9 ம் தேதி சந்தேகத்திற்குரிய நாள். அன்றைய தினம் நோன்பு வைப்ப்பது கூடாது.
9 ம்தேதி இரவு பிறை தென்பட்டால் 10 ம் தேதி முதல் நோன்பு. இல்லை எனில் 11 ம் தேதி முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகும்.
ஒரு ரமலானை பெற்றுக்கொள்வது வாழ்வின் மிகப்பெரிய பேறு.
عن طلحة بن عبيد الله أن رجلين قدما
على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من
صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت
فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي
توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن
لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه
وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في
سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك
رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما
بينهما أبعد ما بين السماء والأرض - احمد
ஷஹீதை விட ரமலானை
பெற்றுக் கொண்டவர் அதிக மரியாதைக்குரிய்வர் ஆகிறார்.
ரமலான் அருட்கொடைகளின் மாதம். நாம் அவ்வருட்கொடைகளை பெற்றூக் கொள்ள தயாராக வேண்டும்.
ஒரு ஹதீஸை கவனியுங்கள்
عَنْ
أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَامَ
أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحْ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ
تُوَاجِهُهُ - ترمذي
எந்த தொழுகைக்கு நாம் நின்றாலும் அல்லாஹ்வின் அருட்கொடை நம்மை நோக்கி வருகிறது. நாம் அதைப் பெற்றுக் கொள்வதற்கேறப இருக்க வேண்டும்.
ஒருவரை நாம் செல்போனில் அழைத்தால் நமது போனில் இருக்கிற சிக்னல் ஆகாயத்திலிருக்கிற சாட்டிலைட்டிற்கு சென்று நாம் அழைத்த எண்ணிற்கு திரும்பி வருகிறது. அப்போது அந்த எண்ணுள்ள போன் சுவிட்ச் ஆன் செய்யப் பட்டிருந்தால் சிக்னலின் எல்லைக்குள் இருந்தால் தொடர்பு கிடைக்கும். அந்த போன் சுவுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலோ தொடர்பு கிடைக்காது. இதே போல தொழுகையில் நாம் இதயத்தை அல்லாஹ்வின் ரஹ்மத்திற்காக திறந்து வைத்திருந்தால் ரஹ்மத் வரும். இல்லை எனில்,…
ரமலானும் அப்படித்தான் அல்லாஹ்வின் அருளைப் பெற நாம தயாராக ஆவலாக இருக்க வேண்டும்.
வாழ்நாளின் ஒரு
பொன்னான நேரத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூடுமான நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும். குறைந்த
பட்ச்ம் தவறுகளை தவிர்க்க வேண்டும்.
عن أبي هريرة قال قال رسول الله صلى
الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت
أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد
يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة -
ரமலானை பயன்படுத்தாவர்களாக ஆகி விடக் கூடாது. அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக!
روى ابن حبان في صحيحه بسنده
إلى رسول الله {صلى الله عليه وسلم} قال: ((صَعِدَ رَسُولُ اللَّهِ {صلى الله عليه
وسلم} الْمِنْبَرَ فَلَمَّا رَقِيَ عَتَبَةً قَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً
أُخْرَى فقَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً فقَالَ آمِينَ ثُمَّ قَالَ
أَتَانِي جِبْرِيلُ فقَالَ يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ
لَهُ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ قَالَ وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ
أَحَدَهُمَا فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ فقَالَ وَمَنْ
ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ آمِينَ
فَقُلْتُ آمِين )) (رواه الحكم في مستدركه وابن حبان في صحيحه).
ரமலானை பயன்படுத்திக்கெள்ள அக்கறையோடும் ஈடுபாட்டோடும் இடைவிடாமல் தொடர்ச்சியாகவும் நாம அமல்கள் செய்ய வேண்டும்.
·
நோன்பு
நோன்பு ரம்லானின்
பிரதான கடமை
சமுதாயம் இதில் சளைக்காத ஆர்வத்தை காட்டுகிறது. சிறு பிள்ளைகள் முதல்
பெரியோர் பெண்களவரை அனைத்து தரப்பாரும் விருப்பத்தோடு இந்த விரத்த்தை மேற்கொள்கின்றனர்
ஒரு சிறு பையன் நோன்பு வைத்தான், அவனது பட்டினியை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதியம் நேரத்தில் பையனிடம் சொன்னார். தம்பி
சாப்பிடு! இப்போது சாப்பிட்டால் அது இன்னொரு சஹராகிவிடும். உனக்கு இரண்டு
நோன்பு கிடைக்கும் என்றார். பையன் மறுத்து விட்டான். எல்லோரும் சாப்பிடும்
போதுதான் நானும் சாப்பிடுவேன் என்றான்.
மாற்று மத
சகோதர்ர்களை ஆச்சரியப் படுத்தக் கூடியது இஸ்லாமிய நோன்பு.
முஃமின்களது காலில் ஒரு முள் தைத்தால் கூட அதற்கு தனியான நன்மைகளை
வழங்குகிற இறைவன் ஒரு பகல் முழுக்க அடியான் பட்டினி கிடக்க, தாகத்தை பொறுத்துக் கொள்ள எவ்வளவு கருணை மழை பொழிவான்?
குழந்தை பள்ளிக்கூட்த்திலிருந்து திரும்பியதும் தாய் எவ்வளவு
அக்கறையாக கருணையோடு குழந்தைக்கு
சோறூட்டுகிறார். அல்லாஹ்வின் கருணை அதைவிடப் பெரிதல்லவா?
அதனால் தான்
நோன்புக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்கிறான்.
ஒரு சிலர் முதல் மூன்று நோன்பு கடைசி மூன்று நோன்பு என்று
ஷார்ட்கட் பயன்படுத்துகின்றனர், தவறு. தள்ளாத முதியோர், கர்ப்பிணிகள் பால் கொடுக்கும் பெண்கள், நோயாளிகளை தவிர
மற்ற அனைவரின் மீதும் நோன்பு கட்டாயக் கடமை என்பதை மறக்க கூடாது.
·
وقد شرع صوم رمضان في شعبان من السنة الثانية للهجرة وقد صام رسول الله
{صلى الله عليه وسلم} تسعة رمضانات (إعانة الطالبين2/358).
· وقال صلى الله عليه وسلم : «من صام
رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه » [أخرجه البخاري ومسلم]
· عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ
يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ
مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ
الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ
فَيُشَفَّعَانِ احمد
நோன்பு நோற்கிற அதே சமயத்தில் நோன்பின் உயர்ந்த
பண்பாடுகளை கடை பிடிக்க வேண்டும்.
ஞாபகத்தில் வையுங்கள் நாம் பசித்திருப்பதில்
அல்லாஹ்வுக்கு ஒன்றும் மிச்சமாகிவிடப்போவதில்லை. இந்த வணக்கம் நம்மை
பக்குப்ப்டுத்தவே
قال النبي صلى الله عليه وسلم : «من لم يدع قول الزور والعمل
به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه » [أخرجه البخاري].
·
وقال صلى
الله عليه وسلم : «الصوم جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل،
فإن سابّه أحد فليقل إني امرؤ صائم » [أخرجه البخاري ومسلم].
·
فإذا صمت - يا عبد الله - فليصم سمعك
وبصرك ولسانك وجميع جوارحك، ولا يكن يوم صومك ويوم فطرك سواء.
·
தொழுகை தராவீஹ் தஹஜ்ஜுத்
அனைத்து
தொழுகைக்களிலும் விஷேச கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக தராவீஹ்
மற்றும் தஹஜ்ஜது தொழுகைகள்
عن أبي هريرة أن النبي صلى الله عليه
وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه- نسائي
தராவீஹ் 20 ரக அத்துக்களே!
நீங்கள் தராவீஹ்
தொழ நினைத்தால் ஜமாத்துடன் 20 ரக அத் தொழுங்கள்.
அது தான் மார்க்கம்.
وعن ابن شهاب عن عروة بن الزبير عن
عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في
رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي
بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم
فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر
نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس
يقومون أوله
عن ابن عباس قال كان النبي صلى الله
عليه وسلم يصلى في شهر رمضان في غير جماعة بعشرين ركعة والوتر = பைஹகி:பாகம் 2-பக்கம்:496
عن
يزيد بن رومان قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضى الله عنه في رمضان
بثلاث وعشرين ركعة முஅத்தா.233
عن
السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضى الله عنها في شهر
رمضان بعشرين ركعة பைஹகீ- பாகம் 2-பக்கம்:496
தராவீஐ ஜமாத்தாக தொழுவது உமர்
(ரலி) ஏற்படுத்திய சுன்னத் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
அப்போதிலிருந்து இப்போதுவரை மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் இருபது ரகாத்துகளே தொழப்பட்டு வருகின்றன. மக்கா மதினாவின் வர்லாறு. இப்போது
போல 24 மணிநேரமும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும் அதற்கு குறையாத வகையில் கவனமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. உலகம்
முழுவதிலுமுள்ள பாரம்பரிய பள்ளிவாசல்களின் நடைமுறையும் இவ்வாறே
அமைந்துள்ளது.
8, 11, என்ற எண்ணிக்கையில் சொல்லப்படும் ஹதீஸ்கள் பெருமானாரின்
தஹஜ்ஜத் தொழுகையே குறிக்கிறது. ரமலானின்
விஷேச இரவுத்தொழுகையை அல்ல.
இது விசயத்தில்
தீர யோசிக்காமல் அவசர
முடிவுக்கு வந்து தராவீஹ்
விசயத்தில் ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.
ஆரம்பத்தில் தராவீஹ் 8 ரக அத் என்று
பேசியவர்கள் பின்னர் இரவுத்தொழுகை 8 ரக அத் என்று மாற்றிக் கொண்ட்தையும், அந்த தொழுகையை கூட ரமலானின் பிறபகுதியில் இரவு 12 மணிக்குமேல் தொழுவதையும் கவனியுங்கள்.
தராவீஹுக்கும் தஹஜ்ஜத் தொழுகைகும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொண்டு
தீனை கோமாளித்தனமாக்கும் இவர்களது நடைமுறைகளை உதறித்தள்ளுங்கள்.
தஹஜ்ஜுத்
தனித்துவம் மிக்க
தஹஜ்ஜத் தொழுகைக்கு ரமலான் ஒரு நல்ல வாய்ப்பாகும். சஹருக்கு சற்று நேரம் முன்னதாக
எழுந்திருத்தால் போதுமானது.
குறைந்த பட்சம் 8 அதிக பட்சமாக 12 ரக அத் தஹஜ்ஜுத் தொழுலாம்.
டிவி
சஹர் நேரத்தில்
டி வி பார்க்கிற
பழக்கத்தை விட்டுவிட்டால் தஹஜ்ஜத் தொழுகை இலேசாகி விடும்.
என்னதான் சிறந்த பயான் என்றாலும் திட்டவட்டமாக் முடிவெடுத்து சஹர்
நேரத்தில் டி வி யை ஆப் செய்துவிட்டு சஹர் செய்து பாருங்கள். அமைதியான சஹரை அனுபவிப்பீர்கள். தஹஜ்ஜுத் தொழுவும் குர் ஆன் ஓதவும் போதிய
நேரம் கிடைக்கும்.
·
திருக்குர் ஆன் ஓதுதல்
ரமலானின் சிறப்பே
குர் ஆன் தான். அதிமாக குரான் ஓத வேண்டும்.
பெருமானாருக்கு
ஜிப்ரயீல் (அலை) ஒரு முறை குர் ஆனை ஓதிக்காட்டுவார்.
இமாம் அபூஹனீபா ஒரு ரமாலானில் 63 முறை குரான் ஒதும் பழக்கம் கொண்டிருந்தார். பகலில் ஒன்று இரவில் ஒன்று. ஒரு மாத தராவீஹில் 3 குர் ஆன்.
Nice article Thanks foe the info Baqavi saab
ReplyDeleteMaasha Allah
ReplyDelete