வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 31, 2013

தீபாவளி நமக்கல்ல

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ(35)إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ(36)

நம்முடைய இந்து சகோதரர்கள் தீபாவளிக் கொண்டாட்ட்த்திற்காக தயாராகி வருகிறார்கள்.
பட்டாசு வெடிப்பப்துவாணவேடிக்கைகள் செய்வது அவர்களது கொண்டாட்டம். அது அவர்கள் வணக்கம்.

உலகில் சிலை வணக்கம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த கேலிக் கூத்துக்கள் நடந்ததும்-  நடப்பதும் வாடிக்கை. ஆபாசம், ஆட்டம் பாட்டம், தேவையன்றி சப்தமெழுப்ப இசைக்கருவிகள் வாணவேடிக்கைகள் செய்தல் பணத்தை ஒரு பயனும் இல்லாத வழிகளில் செலவழித்தல் இவை அனைத்தும் சிலை வணக்கத்தின் ஒரு பகுதியே!

ஜாஹிலிய்யாக் காலத்தில் மக்காவாசிகள் தவாபு செய்கிற போது சீட்டியடிக்கிற பழக்கமும் கைதட்டுகிற பழக்கமும் கொண்டிருந்தனர், வீணான வழிகளில் காசு பணத்தை விரயம் செய்தனர், அதைத்தான் அல்லாஹ் அன்பால் அத்தியாயத்தில் 35 36 வசன்ங்களில் கண்டிக்கிறான்.

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ(35)إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَالَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ يُحْشَرُونَ(36)

عن ابن عباس في قوله "وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية" قال كانت قريش تطوف بالبيت عراة تصفر وتصفق والمكاء الصفير والتصدية التصفيق.

சீனர்கள் நிஜக்காசை கொடுத்து போலிக் காசுகளை வாங்கி அதை தீயில் போடுவார்கள். இறந்து போன பிரதேத்த்துடன் கட்டுக்கட்டாக அக்காசுகளை வைப்பார்கள்.

முஸ்லிம்களது பெருநாட்களில் இஸ்லாமின் ஏகத்துவ தத்துவமும் சகோதரத்துவ கோட்பாடும் அமைதி மார்க்கத்தின் அடையாளங்களும் மிளிர்வதைப் போலவே பிற சமூகத்தினரின் விசேச நாட்களில் அவர்களுடைய தத்துவங்களும் கோட்பாடுகளும் வெளிப்படும் என்பதை சிந்திக்கிற யாரும் அறிந்து கொள்ளலாம்.

இந்துக்களின் கொண்டாடமான தீபாவளியும் அப்படித்தான். இந்து மதத்தின் கற்பனையான பொய்யான கோட்பாடுகளையும் அசமஞ்சத்தனமான த்த்துவங்களையும் பிரதிபலிக்கிறது.


தீபாவளி பற்றி இந்துமத நூல்கள் குறிப்பிடுகிற செய்திகளை கொஞ்சம் கவனியுங்கள். அதன் தத்துவங்களிலும் நடைமுறைகளிலிலும் குப்ரு ஷிர்கின் அனைத்து அம்சங்களும் அதில் இருப்பதை உணரலாம்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.

புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
·  கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்குர்  ஆண் சொல்வது போல எந்த ஆதரமும் இன்றி செய்யப்படும் இது போன்ற நடவடிக்கைகள் சிலை வணக்கத்திற்கு மக்களை தூண்டும் சைத்தான் அழகுபடுத்திக் காட்டும் நடவடிக்கைகளாகும்.

இத்த்தகைய திருவிழாக்களை கண்டு மனதில் வெருப்பு கொள்வதும் விலகி நிற்பதும் ஈமானிய குணமாகும்.

நமது ஈமான தூய்மையானதாக இருக்க வேண்டும்.

தவ்ஹீதின் தளகர்த்தரான நபி இபுறாகீம் (அலை) மக்களின் முன்னிலையில் தன்னுடைய ஈமானை இப்படிப் பிரகடணப்படுத்தினார்

إِنِّي وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ

ஷாபி மத்ஹபில் தொழுக்க்கு தக்பீர் கட்டியவுடன் இது ஓதப்படுகிறது. தொழுகையை தொடங்குவதற்கு முன் அல்லாஹ்விற்கு அடியார்கள் கொடுக்கிற உறுதிமொழியாக இது அமைந்திருக்கிறது.

குர்பானி கொடுப்பதற்கு முன்னதாக இதை ஓதுகிறோம்,

இந்த வாசகத்தில் உள்ள ஹனீபன் என்ற வாசகம் மிக முக்கிய கவனத்திற்குரியது.

அசத்தியமான அனைத்து வழிகளை விட்டு விலகி சத்தியமான வழியின் பால முழுச் சார்பு கொண்டவனாக அல்லாஹ்வை வணங்குகிறேன் என்பது இதன பொருளாகும்.

வஜ்ஜஹ்துவில் இடம் பெற்றுள்ள இரண்டு வாசக்ங்கள் ஹனீபன் என்பதன் பொருளை விளக்குகின்றன,
وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِينَ
وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

இஸ்லாம் முஸ்லிம்களிடம் இரண்டு அம்சங்களை எதிர்பார்க்கிறதுது,
அவர்கள் முஸ்லிம்களாக நடக்க வேண்டும்
அவர்களிடம் முஷ்ரிகின்  அம்சங்கள் இருக்க கூடாது. 


முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான உயர்வான - இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகிற ஒரு தூய சமூகத்தை உருவாக்க நினைத்தார்கள். அந்த சமூகத்தில் பிற மதங்களின் அர்த்தமற்ற இறை விருப்பத்திற்கு மாறான கோட்பாடுகள் அனைத்திலிருந்தும் தன்னுடைய சமுதாயம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்கள் வலியுறுத்தினார்க:ள்

عن المسور بن مخرمة رضي الله عنهما، أن رسول الله صلى الله عليه وسلم قال: هدينا مخالف لهديهم  يعني: المشركين.-  حاكم
 வணக்க வழிபாடுகளில் தொடங்கி தாடி மீசை வைப்பதில் தொடர்ந்து ஆடை அணிவது வரை அனைத்து விச்யங்களிலும் முஷ்ரிகின் அடையாங்களை விட்டு விலகி இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும் என வலியுறுத்தினார்கள். உதாரணமாக நிறைய விசயங்களை சுட்டிக் காட்ட முடியும்

முஹர்ரம் 9 ம் நாளில் நோன்பு பிடிக்க பெருமானார் (ஸல்) சொன்னது
யூதர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக!

روى عبد الله بن عباس رضي الله عنهما قال : حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا : يا رسول الله، إنه يوم تعظمه اليهود والنصارى، فقال رسول الله صلى الله عليه وسلم : "فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع" . قال : فلم يأتِ العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم

நரை முடிக்கு சாயம் பூச பெருமானார் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதும் இதன் அடிப்படையிலேயே!
 ففي الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: ((أن اليهود والنصارى لا يصبغون فخالفوهم

عن أبي أمامة رضي الله عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال: يا معشر الأنصار، حمروا وصفروا، وخالفوا أهل الكتاب فقلنا: يا رسول الله، إن أهل الكتاب يتسرولون ولا يتزرون، فقال: تسرولوا واتزروا، وخالفوا أهل الكتاب- رواه أحمد
இந்த  நபிமொழியில் யூதர்கள் சுர்வால் – பேண்ட் – மட்டுமே அணிகிறார்கள். நீங்கள் யூதர்களுக்கு மாற்றமாக பேண்டும் அணியுங்கள், வேட்டியும் கட்டுங்கள் என்ற அறிவுரையும் சேர்ந்திருக்கிறது.

செருப்புடனும் மோசாவுடனும் தொழலாம் என்று பெருமானார் (ஸ்ல்) அவர்கள் அனுமதித்த்தும் இதன் அடிப்படையிலேயே!

  وفي سنن أبي داوود والحاكم من حديث شداد ابن أوس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ((خالفوا اليهود والنصارى فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم))

மீசைய கத்த்ரித்து தாடியை வளர்க்க பெருமானார் சொல்லும் போதும் இப்படியே சொன்னார்கள்.

عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: خالفوا المشركين، وفروا اللحى وأحفوا الشوارب .
மாதவிடாய் பெண்ணுடன் பரிமாறும் விச்யத்திலும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய பெறுமானார் கூறினார்கள். அது யூதர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

فعن أَنسٍ رضي الله عنه : ( أَنَّ اليهُودَ كَانُوا إذا حَاضَتْ المرأَةُ فيهِمْ لم يُؤَاكِلُوهَا ولم يُجَامِعُوهُنَّ في البيُوتِ , فَسأَلَ أصحَابُ النبيِّ صلى الله عليه وسلم النبيَّ صلى الله عليه وسلم فَأنزلَ الله تَعَالَى : {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ }إلى آخرِ الآيةِ , فقالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم : اصنَعُوا كُلَّ شَيْءٍ إلاَّ النِّكَاحَ , فَبَلَغَ ذلك اليَهُودَ , فَقَالُوا : ما يُرِيدُ هذا الرَّجُلُ أَن يَدَعَ من أَمْرِنَا شيئاً إلاَّ خَالَفَنَا فيه )
தொழுகைக்கான அழைப்பில் யூத கிருத்துவர்களின் வழியை பின்பற்ற பெருமானார் விரும்பவில்லை

فعن ابن عُمَرَ : ( كان الْمُسلمُونَ حين قَدِمُوا الْمَدينَةَ يَجتَمِعُونَ فَيَتَحَـيَّـنُونَ الصَّلاةَ ليس يُنَادَى لها , فَتَكَلَّمُوا يَوْماً في ذلك , فقال بَعْضُهُمْ : اتَّخِذُوا نَاقُوساً مِثلَ ناقُوسِ النَّصَارَى , وقال بَعْضُهُمْ : بَلْ بُوقاً مِثْلَ قَرْنِ اليهُودِ , فقال عُمَرُ : أَولا تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بالصَّلاةِ ؟ فقال رسول اللَّهِ صلى الله عليه وسلم : يا بلالُ قُمْ فَنَادِ بالصَّلاةِ

பிற மத்த்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதற்காக
சூரியன் உதிக்கிற மறைகிற நேரங்களில் தொழுவதை பெருமானார் தடுத்தார்கள்.
ونهى صلى الله عليه وسلم عن الصلاة وقت طلوع الشمس ووقت غروبها حسماً لمادة المشابهة للكفار ,

சஹர் சாப்பாட்டை வலியுறுத்தியதிலும் இதே கோட்பாடு வலியுறுத்தப்பட்ட்து.
ورغَّب صلى الله عليه وسلم في أكلة السَّحَرِ مُخالفةً لليهود والنصارى , فقال صلى الله عليه وسلم : ( فَصْلُ ما بينَ صيَامِنَا وصيَامِ أَهلِ الْكِتَابِ أَكلَةُ السَّحَرِ رواه الإمام مسلم 1096.
பிறமத்தவரின் சமய நடவடிக்கைகளை முஸ்லிம் கள் பின்பற்றக் கூடாது என்று பெருமானார் கடுமையாக எச்சரித்தார்கள்

عن عبد الله بن عمر رضي الله عنهما، قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم - سنن أبي داود  - صححه ابن حبان.
عن عبد الله بن عمرو رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس منا من تشبه بغيرنا، لا تشبهوا باليهود ولا بالنصارى - الترمذي

பிற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் போது அங்குள்ள சமய அடையாளங்கள் முஸ்லிம்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் உமர் ரலி எச்சரிக்கையாக இருந்தார்கள்.

عن عمر بن الخطاب رضي الله عنه أنه كتب إلى المسلمين المقيمين ببلاد فارس: (إياكم والتنعم وزي أهل الشرك
முஸ்லிம்கள் தங்களுடைய எந்த ஆவலை பூர்த்தி செய்யும் போதும் அதில் பிற மதக்கலப்புக்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள பெருமானார் (ஸல்) அறிவுறுத்தினார்கள்

فعن ثابت بن الضحاك رضي الله عنه قال : ( نَذرَ رَجُلٌ على عَهْدِ النبيِّ صلى الله عليه وسلم أن يَنحَرَ إِبلاً ببُوَانةَ ([81]) , فأَتَى النبيَّ صلى الله عليه وسلم فقالَ : إنِّي نَذرْتُ أنْ أنحَرَ إبلاً ببُوَانةَ , فقال النبيُّ صلى الله عليه وسلم : هَلْ كانَ فيها وثنٌ مِنْ أوثانِ الجاهليةِ يُعبَدُ ؟ قالوا : لا , قال : هلْ كانَ فيها عيدٌ مِنْ أعيادِهم ؟ قالوا : لا , قال النبيُّ صلى الله عليه وسلم : أَوْفِ بنَذرِكَ , فإنه لا وَفَاءَ لنذرٍ في معصية الله , ولا فيما لا يَملِكُ ابنُ آدَمَ  رواه أبو داود ح3313

قال العلاَّمة علي القاري : ( وهذا كلُّه احترازٌ من التشبُّه بالكفَّار في أفعالهم )

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அறியாமைக் கால சமய நடைமுறைகளை கடை பிடிப்பதை பெருமானார் வன்மையாக கண்டித்தார்கள்

عن ابن عباس رضي الله عنهما أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم قال : ( أَبغضُ الناسِ إلى الله ثلاثةٌ : مُلْحِدٌ فِي الْحَرَمِ , ومُبْتَغٍ فِي الإسلامِ سُنَّةَ الجاهليةِ , وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بغيرِ حَقٍّ لِيُهْرِيقَ دَمَهُ   -  رواه البخاري 6882

பிற மத்த்தவரின் சமயத்திருவிழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே : {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ   என்பதின் பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்

: {وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَاماً }.
قال بعضُ السلف : كابن عباس رضي الله تعالى عنهما, وأبو العالية , والضحاك بن مزاحم الهلالي, ومجاهد ت , وطاووس بن كيسان, ومحمد بن سيرين , والربيع بن أنس , وعبد الملك بن حبيب, وأحمد بن حنبل, وغيرهم : أنَّ المرادَ بالزور في هذه الآية : أعياد المشركين .

பிற மத்த்தவர்களின் திருவிழாக் காலங்களில் அவர்களுடைய சடங்குகளில் பங்கேற்பது அல்லாஹ்வுடைய கோபத்திற்கு காரணமாகி விடும் என்று உமர் (ரலி) எச்சரித்துள்ளார்கள்

قال عمر بن الخطاب رضي الله عنه : ( .. ولا تدخلوا على المشركينَ فِي كنائسهم يومَ عيدهم , فإنَّ السُّخطَةَ تَنْزِلُ عليهم - البيهقي في الكبرى

இந்தியா போன்ற பன்முக சம்ய நம்பிக்கைகளை கொண்ட நாட்டில் வாழ்கிற முஸ்லிம்கள் மார்க்கத்தின் இந்த அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். இல்லை எனில் நமது இஸ்லாமிய வாழ்வு கேள்விக்குறியதாகிவிடும்,

ஒரு பட்டாசு வெடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? என்று அலட்சியமாக கேட்பது இஸ்லாத்தின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ளாத கேள்வியாகவே அமையும். இஸ்லாமிய வாழ்வில் அக்கறை கொள்ளாத தன்மையாகிவிடும் (அல்லாஹ் நம்மை காப்பானாக!)

குழந்தை களுக்காக என்ற சமாதானமும் ஏற்கத் தகுந்த்தல்ல. இது நம்முடைய மார்க்கம் அனுமதிக்காத விச்யம் என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பது சிரமம் அல்ல. அக்கறை இருந்தால் போதுமானது.

காசு விரயம் என்பதற்கு அப்பால் இதில் சமய நம்பிக்கையின் கலப்பு நம் ஈமானை பாதித்து விடக் கூடியது என்பதையும் முஸ்லிம் உம்மத்தை தூய்மையானதாக உருவாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையையும் நினைத்துப் பார்க்கிற எவரும் பிற சமயத்தவரின் சடங்குகளிலிருந்து கூடுமானவரை தள்ளியே இருப்பார்கள்; இருக்க வேண்டும்.

முஸ்லிமன் ஹனீபன் என்பதற்கான அடையாளம் அது.  


16 comments:

  1. Anonymous5:56 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    தங்களது பதிவுகள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. நான் இப்போது இத்தளத்தை பார்வையிடும் போது 199696 வது பார்வயாளன். ஏறத்தாழ இரண்டு லட்சம் பார்வை தங்களது பயான் குறிப்புகள்மீது எனும்போது மிக சந்தோஷமாகிறது. எல்லாக்கால நவீனங்களும் இஸ்லாமிய பயன்பாட்டுக்கு எளிதில் வந்தது தங்களைப்போல ஆலிம்களால்தான். தங்களது அசாத்திய மார்க்க மற்றும் உலமாச் சேவைகள் தொடர எனது துஆ எப்போதும் ..........
    வஸ்ஸலாம்.
    சன்ங்கரன்கோவில் மவ்லவி ஹசனி இப்னு நூரி

    ReplyDelete
  2. நல்ல .தகவல்கள் .ஜஸாகல்லா

    ReplyDelete
  3. nalla pala ariya thagavalgal tharukireergal thodarattum ungal சேவை neengal soottum தலைப்பும் arumai

    ReplyDelete
  4. மிக அருமை

    ReplyDelete
  5. மிக அருமை

    ReplyDelete
  6. மாற்று மதத்தினா்களின் பண்டிகைகளில் நாம் பங்குபெறக்கூடாதென்பதற்கும், அவா்களுக்கு எல்லா விஷயங்களிலும் மாறு செய்ய வேண்டுமென்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் அல்ஹம்துலில்லாஹ். ﺑﺎﺭﻙاللهﻓﻲعلمكم

    ReplyDelete
  7. ALHAMDU LILLA ARUMAYAANA PADHIU ﺑﺎﺭﻙﺍﻟﻠﻪﻓﻲعلمكم

    ReplyDelete
  8. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  9. MASHA ALLAH.JAZAKALLAHU KHAIRAN FIDDARAIN.

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  11. சிறப்பு

    ReplyDelete
  12. Anonymous8:54 PM

    மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  13. Anonymous7:37 PM

    ماشاءالله

    ReplyDelete
  14. Anonymous7:37 PM

    ماشاءالله

    ReplyDelete
  15. Anonymous7:58 PM

    alhamdulillah jazakumulla barakallah

    ReplyDelete