வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 24, 2014

ஆதலினால் அரசியல் செய்வீர்!



·         வாக்களித்து விட்டோம்.
·         அடுத்து என்ன?
·         மே 16 அன்று வெளியாகிற தேர்தல முடிவை எதிர்பார்ப்பது தான்.
·         இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகிற போது ஓட்டளித்துவிட்டு யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு சும்மா இருந்து விடுகிறோம்..
·         தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ நாம் செய்ய வேண்டிய அரசியல் கடமைகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. அதனால்தான் நம்முடைய தேர்தல் என்பது ஓட்டு ரிசல் என்ற அளவோடு நமக்கு முடிந்து விடுகிறது.
·         வேறொன்றும் இல்லையா?
·         இருக்கிறது.
·         ஓட்டுப் போட்டதை தாண்டி நாம் செய்ய வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன,
·         பொதுவான அரசியலில் நாம் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்,
·         அரசியல் ஒவ்வொரு தன்நபருடைய வாழ்விலும் தொடர்புடைய விச்யம்.
·         நீங்கள் நீருக்கடியில் குடியிருந்தாலும் சரி , ஆகாயத்தில் கோட்டை கட்டி வாழ்ந்தாலும் சரி.
·         ஒரு ஆளுமைக்கு கீழ் தான் வாழ்ந்தாக வேண்டும்
·         அந்த ஆளுமை யார்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறது? ஒரு ஆளுமைக்கு உட்பட்டிருக்கிற நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே அரசியல்.

·         ஆட்சியாளர்கள் குறித்த அக்கறையும் கவலையும் ஈமானின் அம்சமாகும்.
இமாம் புகாரியின் அதபுல் முபரதில் ஒரு ஹதீஸ் வருகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்திப்பார்கள்.

حدَّثَنَا سَعِيدُ بْنُ سَمْعَانَ ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَتَعَوَّذُ مِنْ إِمَارَةِ الصِّبْيَانِ وَالسُّفَهَاءِ

இத்தகைய ஆட்சிக்கான அடையாளம் என்ன என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட்து. அவர் மூன்று அடையாளங்களைச் சொன்னார்.

فَقَالَ سَعِيدُ بْنُ سَمْعَانَ : فَأَخْبَرَنِي ابْنُ حَسَنَةَ الْجُهَنِيُّ ، أَنَّهُ قَالَ لأَبِي هُرَيْرَةَ : " مَا آيَةُ ذَلِكَ ؟ قَالَ : أَنْ تُقْطَعَ الأَرْحَامُ ، وَيُطَاعَ الْمُغْوِي ، وَيُعْصَى الْمُرْشِدُ " .  صحيح الأدب المفرد  
1.   உறவுகளுக்கு மரியாதை இருக்காது.
2.   தப்பான தலைவர்களுக்கு மக்கள் கட்டுப்படுவார்கள்
3.   நல் வழிகாட்டிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்

ஆட்சியாளர்கள் தீயவர்களாக் இரக்கமற்றவர்களாக அமைந்து விடக்கூடாது என்ற கவலை ஒவ்வொரு குடிமகனிடமும் இருக்க வேண்டும். அந்த அக்கறை வெளிப்படும் ஒரு விதம் தான் பிரார்த்தனை,
யார் ஆண்டால் எப்படி ஆண்டால் எனெக்கென்ன என்ற மனப்போக்கு ஈமானிய வாழ்வுக்கு அழகல்ல.

இதற்கடுத்த்தாக தனிமனிதர்களின அரசியல் கடமை ந்ல்ல ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுதாகும்


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنْ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ -  البخاري 693

عَنْ ابْنِ عَبَّاسٍ يَرْوِيهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا فَكَرِهَهُ فَلْيَصْبِرْ فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ يُفَارِقُ الْجَمَاعَةَ شِبْرًا فَيَمُوتُ إِلَّا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً -  البخاري 7143

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نَصَحَ الْعَبْدُ سَيِّدَهُ وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ-  البخاري 2550

 ஆட்சியாளர்களை மதிக்க வேண்டும்

عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ

தேவையற்ற குறைகளை கூறிக்கொண்டிருக்க கூடாது.

عَنْ زِيَادِ بْنِ كُسَيْبٍ الْعَدَوِيِّ قَالَ كُنْتُ مَعَ أَبِي بَكْرَةَ تَحْتَ مِنْبَرِ ابْنِ عَامِرٍ وَهُوَ يَخْطُبُ وَعَلَيْهِ ثِيَابٌ رِقَاقٌ فَقَالَ أَبُو بِلَالٍ انْظُرُوا إِلَى أَمِيرِنَا يَلْبَسُ ثِيَابَ الْفُسَّاقِ فَقَالَ أَبُو بَكْرَةَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الْأَرْضِ أَهَانَهُ اللَّهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ


ஆட்சியாளர்களுக்கு கட்டுப்பட வேண்டும் தான் ஆனால் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதோ தகுதியற்று அவர்களைப் புகழ்வதோ தகுதிக்கு மீறி அவர்களை உயர்த்துவதோ இஸ்லாமிய வழி முறைக்கு எதிரானதாகும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ قَدِمَ مُعَاذٌ الْيَمَنَ أَوْ قَالَ الشَّامَ فَرَأَى النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا فَرَوَّأَ فِي نَفْسِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَقُّ أَنْ يُعَظَّمَ فَلَمَّا قَدِمَ قَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ النَّصَارَى تَسْجُدُ لِبَطَارِقَتِهَا وَأَسَاقِفَتِهَا فَرَوَّأْتُ فِي نَفْسِي أَنَّكَ أَحَقُّ أَنْ تُعَظَّمَ فَقَالَ لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا احمد 18591

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُعِيذُكَ بِاللَّهِ يَا كَعْبَ بْنَ عُجْرَةَ مِنْ أُمَرَاءَ يَكُونُونَ مِنْ بَعْدِي فَمَنْ غَشِيَ أَبْوَابَهُمْ فَصَدَّقَهُمْ فِي كَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ وَلَا يَرِدُ عَلَيَّ الْحَوْضَ وَمَنْ غَشِيَ أَبْوَابَهُمْ أَوْ لَمْ يَغْشَ فَلَمْ يُصَدِّقْهُمْ فِي كَذِبِهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ – ترمذي 558


அவர்கள்  ஒரு வேளை தவறான வழியில் சென்றால் சரிப்படுத்துவதும் க்டமை என இஸ்லாம் கூறுகிறது,  

ஆட்சியாளர்களிடம் தவறுகள் காணப்படும் எனில் அதை சுட்டிக்காட்டுகிறவர்களே நல்ல குடிமக்கள்.
அதே போல தவறுகளை சுட்டிக்காட்ட மக்களை அனுமதிப்பவர்களே நல்ல தலைவர்கள்
قال رجل لعمر رضي الله عنه: اتق الله يا أمير المؤمنين فو الله ما الأمر كما قلت، قال: فأقبلوا على الرجل فقالوا: لا تألت أمير المؤمنين (أي لا تنتقص) فلما رآهم أقبلوا على الرجل قال دعوهم لا خير فيكم إن لم تقولوها ولا خير فينا إن لن نقبلها. وجزاكم الله خيرا.  - ابن شيبة -  
இன்றைய காலகட்ட்த்தில் ஆட்சியாளர்களிடம் அவர்களது குறைகளை வலுவாக எடுத்துச் சொல்கிற தைரியம் மக்களிடம் அருகி விட்ட்து.  
விமர்சனம் செய்கிறவர்களை அனுமதிக்கிற தைரியம் ஆட்சியாளர்களிடமும் குறைந்து விட்டது.

ஆட்சியாளர்களை குறை சொன்னால் அடுத்த் என்ன நடக்கும் என்பதற்கு எங்கும் உத்தரவாதம் இல்லை,
அமெரிக்க அரசு தன்னிடமிருக்கிற தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி உலகின் மற்ற அரசுகளின் தலைவர்களுடைய செல்போன்களை ஒற்றுக் கேட்கிறது என்ற உண்மைகளை அந்நாட்டை சேர்ந்த ஸ்னேடன் உலகிற்கு தெரிவித்தார். உலகின் உயர் ஜனநாயக அமைப்பு என்று சொல்கிற அமெரிக்க அவருக்கு மரண தண்டனை அளிக்க காத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகளின் ஊழல்களை சட்ட்த்துக்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்க சுட்டிக்காட்டவும் மக்கள் தவறீ விட்ட காரணத்தினால் தான் அவர்கள் மேலும் பெரிய குற்றவாளிகளாக மாறிவிட்டார்கள். பெரும் குற்றவாளிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட போட்டியிடுகிறார்கள்.

பல் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதி கருப்பு என்பவரை பாஜக தஞ்சை தொகுதி வெட்பாளராக நிறுத்தியது, இது போல இன்னும் ஏராளம் உண்டு.

இந்த இட்த்தில் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று ஊண்டு
ஆட்சியாளர்கள் தவறானவர்களாக இருப்பதற்கு அவர்களை மட்டுமே குறை கூறி பயனில்லை. நாம் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் தவறான் ஆட்சியாளர்கள் வர வாய்ப்பில்லை.

كما تكونوا يولى عليكم . رواه البيهقي عن أبي إسحاق السبيعي مرسلاً
ஆகா கான் ஷியா இஸ்மாயீலீ களின் தலைவர். அவருக்கு சொந்தமான் ஒரு பெரும் கோட்டை ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது, அந்நாட்டில் பெரும்பாலும் சிறு அபார்ட்மெண்ட் வீடுகளில் தான் மக்கள் வசிக்கிறார்கள்  இந்த சமயத தலைவருடைய வீடோ ஒரு மைல் தூரத்துக்கு விரிந்த்து. மட்டுமல்ல அதில் குடி கூத்து என சகல ஹராம்களும் நடப்பதாக் தகவல்கள் உண்டு.  ஒரு நபர் அவரிடம் கேட்டார், நீங்கள் ஒரு சமய குருவாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட ஒரு மாளிகையி ல் அதுவும் ஹராமான அம்சங்களோடு வாழ்கிறீக்ளே சரிதானா?

ஆகா கான் கேள்வி கேட்டவரை திருப்பிக் கேட்டார். இந்த்க் கேள்வி என்னிடம் கேட்கப்பட வேண்டியதல்ல. என்னை தலைவராக தேர்ந்தெடுத்த நீங்கள் நான் இப்படி இருப்பதை அறிந்து தானே தேர்வு செய்தீர்கள்?

உண்மையில் தீய ஆட்களை நாம் தேர்ந்தெடுத்து விட்டு பிறகு அவர்களை குறை கூறிக்கொண்டிருக்கிறோம்.

நம்முடையை அரசியல் விழிப்புணர்வு கூர்மையடைந்தால் தவிர நமது ஆட்சியாளர்களுடையை நடவடிக்கைகளில் மாற்றத்தை பார்க்க முடியாது.
அதற்கு நாம் ஓட்டுப் போட்டால மட்டும் போதாது,

நம்மால் தேர்ந்த்டுக்கப்பட்டவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை சுய நலமின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களிடம் நாம் எடுத்துரைக்க வேண்டும்

நமது நாட்டுக்கு என்ன தேவை ?
நமது மாநிலத்த்திற்கு என்ன தேவை ?
நமது ஊருக்கு என்ன தேவை ?
நமது பகுதிக்கு என்ன தேவை ?
நமது சமுதாயத்திற்கு என்ன தேவை ?

இவற்றைப் பட்டியலிட ஒரு பொறுப்புள்ள் குடிமகனாக நாம் இது வரை தயாராகவில்லை, இது ஒரு அரசியல் நடவடிக்கை என்றால் அந்த நடவடிக்கையை நம்மில் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும்.

வெளிநாடுகளில் குறிப்பாக் அமெரிக்காவில்  தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் தமது பகுதியுள்ள சமூக மக்களோடு இத்தகைய பிரச்சினைகளை குறித்து உரையாடுகிற காட்சிகளை நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம். பயன்படுத்திக் கொள்வதில்லை.

இதுவரைக்கும் உண்டான தேர்தல் வரலாற்றில் இந்திய சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் தேர்தலில் வாக்களித்து விட்டு சும்மா இருந்து விட்டதே தவிர இத்தகையை ஒரு ஆய்வு அல்லது பட்டியலிடுகிற தளத்துக்க் முன்னேறவே இல்லை. தேசிய சமூக பிரச்சினைகளைப் பற்றிய ஒரு தொகுப்பு நம்மிடம் இல்லை.

நம்முடைய் கட்சிகள் அமைப்புக்களும் கூட் ஏதாவது இட ஒதுக்கீடு சிறைக் கைதிகள் விடுதலை என ஏதோ ஒரு ஜிகினா மேட்டரை கையில் எடுத்துக் கொண்டு தேர்தலை அணுகுகின்றனவே தவிர பிரச்சினைகளைப் பற்றிய ஒரு முழுமையான பட்டியதலிடுதலை யாரும் செய்ய வே இல்லை,

உதாரணத்திற்கு
·         பள்ளிவாசல்களுக்கான் அனுமதி மறுப்பு இடையூறு.
·         மத மோதல்களை நடைபெறுகிற போத் அரசியல் கட்சியல் களத்தில் இறங்காமல் – அநியாயக் காரனை – அது யாராக இருந்தாலும்- தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது.
·         தொடர்ந்து பெருகி வரும் முறையற்ற கைதுகள்- போலியான குற்றச் சாட்டுகள் பற்றிய் உறுதியான் நடுநிலையான விசாரனை அமைப்பின் தேவை
·         முஸ்லிம்கள் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தனித் தொகுதிகளாக்குவது,  தொகுதிகளை பிரிப்பது.

·         எங்களது ஊரின் ஒரு நீண்ட சாலை மூன்று மக்களை தொகுதிகளில் பிரிந்து கிடக்கிறது, கோவை மாரக்ராட்சிக்கு உள்ளேயே! நான் கோவை இரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட தொலைவில் வசிக்கிறேன். ஆனால் என்னுடைய தொகுதி பொள்ளாச்சி.

·         கனிசமாக் முஸ்லிம்கள் வாழ்கிற பகுதிகள் பல  இப்படி பல தொகுதிகளாக சிதைக்கப்பட்டிருக்கிறது,

·         இதைப் பற்றிய கவலை தேர்தலின் போது தான் வருகிறது. உடனே அது ஒரு பெருமூச்சோடும் அடுத்தவர் மீது பழிபோடுவதோடும் முடிந்து விடுகிறது,

·         தொகுதி சீரமைப்பு குறித்து தூர நோக்கு கொண்ட ஒரு திட்டமிட்ட செயல்பாடும் தொடர்முயற்சியும் போராட்டமும் இருதால் தவிர இது விசயத்தில் விமோசனத்திற்கு இடமில்லை.

·         அதே போல வாக்குச் சீட்டுக்களில் அடையாள அட்டை களிலும் வேண்டு மென்றோ அல்லது அலட்சியத்தாலோ முஸ்லிம் பெயர்களை தாறுமாறாக எழுது கிற போக்கும், அதையே காரணம் காட்டி அவசியமான உரிமைகளை மறுக்கும் போக்கும் பரவலாக இருக்கிறது.

·         Mohmad  என்பதையும்   mohmed  என்பதையும் ஒரு பெரிய ஆள்மாறாட்டமாக கருதி ஆவணங்களை நிராகரிக்கிறார்கள். பொதுவான சாமாண்ய முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்க்குள்ளாகியிருக்கிற விச்ய்ம இது,

இன்றைக்கு வாக்கு சாவடியில் ஒரு தகராறு . வரலாறு படிச்ச நீங்க  அலாவுதீன் என்ற பெயரை சரியாக எழுதாமலா வெற்றி பெற்றீர்கள். ஆவணங்களில் எழுதும் போது ஏன் சார் தவறாக எழுதுகிறீர்கள் என்று ஒருத்தர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.  

அப்பா பெயர் சரியில்லை தெருப் பெயர் சரியில்லை என்று பல வாக்காளர்களும் திருப்பி அனுப்ப பட்டனர்.

தேர்தலுக்கு முன்னாள் தேர்தல் கமிஷன் வழங்கிய பல வாய்ப்புக்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இன்று வாக்குச் சாவடிக்கு வந்து அதிகாரிகளிடம் சிலர் தகறாறு செய்தனர் அது  வாக்களர்களின் குறைபாடு என்றாலும். இது விச்யத்தில் கீழ் மட்ட ஊழியர்களின் அலட்சியத்த்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது,

என்னுடை ஆதார் அட்டைக்கு அட்ரஸ் எழுதும் போது al ameen colony என்று பதியுமாறு எத்தனை தடவை கூறும் ஏற்கெனவே al amin colony என்று தான் போட்டுவிட்ட்தாக ஒரே வார்த்தையை சொல்லி திருப்பினார் ஒரு ஊழியர், எங்களது பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு இப்படி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கிறது,. இந்த அட்டையை கொண்டு போய  பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் எத்தனை சிரம்ம் ஏற்படும்? ஒரு பார்வையில் இதை சரி செய்து கொண்டு வா என்று சொல்லி தூக்கி வீசிவிடுவார்கள்,   


இவைகள் மிகச்சில பிரச்சினைகள். இது போல இன்னும் தேசிய அளவிலும் சமுதாய அளவிலும் நாம் அக்கறை கொள்ள விசயங்கள் பலது உண்டு, சமூக கூடங்கள் அளவிலும் தேசிய அளவிலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து நாம் விவாதித்து  - இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நாம் விவாதிக்கவும் தேவையான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

நம்முடைய நாட்டில் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் சென்றவர்கள் இத்தகை  தொடர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் வழியாகவே தங்களது இலக்குகளை அடைந்து கொண்டார்கள். தேர்தல் வாக்கு வங்கியை வைத்தல்ல,

இன்னும் ஒரு சமீபத்திய உதாரணம் தெலுங்கானா. எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்த அரசியல் முயற்சிகள் இப்போது பயனளித்திருக்கிறது பாருங்கள். அந்த முயற்சி எத்தனை தளங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர் அரசியல் நடவடிக்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தக் கூடியவை என்பதற்கு இன்று முஸ்லிம் விரோதக் கட்சியாக் உருவெடுத்திருக்கிற கட்சிகளின் வளர்ச்சியே போதுமானவை, ஆரம்ப காலத்தில் இக்கட்சியின் கொள்கைகள் மிக அன்னியமாக பார்க்கப் பட்டன, இன்றுள்ள சூழ்நிலை கோட்சேவை அவர்கள் தேசப்பிதா என்று சொன்னாலும் அது அதையும் சரிக்கட்டுவதற்கு தயாராக ஒரு கூட்டம் இருப்பதை அறீயலாம்.

தீய சக்திகளே தொடர் அரசியல் நடவடிக்கையால் வலுப்பெறுகிற போது, நியாயமான கோரிக்கைகளை உடைய முஸ்லிம்கள் தங்களது  அடிப்படை உரிமைகள் குறித்து தொடர் அரசியல் நடைமுறைகளில் இறங்கினால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும், அல்லாஹ் உதவி செய்வான்,.

தேர்தல் நேரத்திற்கு மட்டுமல்ல அரசியல், தொடர்ந்து பிரச்சனைகள் சார்ந்த் அரசியலில் நாம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற சிந்தனையும் விழிப்புணர்வும் பொது மக்களிடம் வந்தால் மட்டுமே இத்தகைய பிரச்சினைகள் பற்றீய பிரக்ஞ்சையை நாம் மக்கள் பிரதி நிதிகளிடம் எதிர்பார்க்க் முடியும்.



யூதர்களை விடுவிக்க வேண்டும் என்ற தன்னுடை அரசியல் கோரிக்கை பிர் அவ்னிடம் முறையிட் மூஸா (அலை) தயங்க வில்லை என்பதை திருக்குர் ஆன் காட்டுகிறது, அத்தைகைய ஒரு அரசியல் நபித்துவ சமயப் பணி என்பதை அது சுட்டிக்காட்டுகிறது,

فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِنْ رَبِّكَ وَالسَّلَامُ عَلَى مَنْ اتَّبَعَ الْهُدَى(20;47

அதே போல யூதக் குழந்தைகளை கொலை செய்த்து குறித்து கணடனம் தெரிவிக்கவும் மூஸா அலை அவர்கள் தவறவில்லை

துல் கர்ணைன் மன்ன்னிடம் தங்களது தேவைகளை முறையிட்ட மக்களின் வரலாற்றை திருக்குர் ஆன் கூறுகிறது,

قَالُوا يَاذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا(18;94 )

தேவைகளை நிறைவேற்றித்தருவது ஆட்சியாளர்களின் கடமை என்றால் அது குறித்து உரிய வகையில் முறையிடுவது மக்களின் பொறுப்பை என்ந்தை இது உணர்த்தி நிற்கிறது,

அநீதிக்குள்ளாகிற போது ஆட்சியாளர்களிடம் அது குறித்து முறையிடுகிற பாங்கை யூசுப் அலை அவர்களின் வரலாறு தாங்கி நிற்கிறது.

وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ(42)

நான் மேலே சொன்ன ஹதீஸில் குறிப்பிடப் படுவது போல
இது விச்யத்தில் நல்லவர்களை புறக்கணித்து விட்டு தீயவர்களை பின்பற்றிச் செல்கிற ஆபத்திலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாத்தருள்வானாக!

(ஆலிம் ச்கோதர்ர்களுக்கு !
உங்களுடைய பகுதியில் சிக்கலான் கவனிக்கப் படாத  அரசியல சார்ந்த பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வுக்கான வழிமுறைகளையும் சேர்த்துக் கொள்க! அனுபவம் சார்ந்த செய்திகள் உதவியாக இருக்கும்,)

2 comments:

  1. வாழ்த்துக்கள் ஹஜ்ரத் கடுமையான கட்டுரை

    ReplyDelete