வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 22, 2014

மிஃராஜ் - பெரும்பான்மையாகும் வழி·         மிஃராஜ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு.
·         இது நடந்த காலகட்டத்தை வரையறுப்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி மிஃராஜ் நிகழ்ச்சியை புக்கனிக்கிற நிலைக்கு சில முஸ்லிம்கள் ஆளாகியிருப்பது இன்றைய உம்மத்திற்கு நேர்ந்திருக்கிற சோதனையாகும்.
·         நபி (ஸல்) 51 வயதில் ரஜப் மாத்தின் 27 ம் இரவு மிஃராஜ் நிகழ்ந்த்து என்பது வரலாற்றின் தீர்வாகும்.
·         எழுதப்படாத பழைய வரலாறுகளில் தேதியை தீர்மாணிப்பதில் கருத்து வெறுபாடுகள் ஏற்படுவது சகஜம்.  அறிஞர்கள் அதில் ஆய்வு செய்து ஒரு தீர்மாணத்திற்கு வருகின்றன. அப்படி தீர்மாணிக்கப்பட்ட விசயங்களில் ஒன்று தான் மிஃராஜ்.
·        كان الإسراء قبل الهجرة بسنة ، وبه جزم ابن حزم في ليلة سبع وعشرين من شهر رجب وهو المشهور وعليه عمل الناس وكان ليلة الإثنين، وكان بعد خروجه صلى الله عليه وسلم إلى الطائف. (محمد رسول االله )
·         மக்களிடம் முடிவாகி விட்ட ஒரு விசயத்தை கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி அலட்சியப்படுத்த முயல்வது அறிவீனமும் தான் தோன்றித்தனமும் ஆகும்.
·         அன்பு நிறைந்த தவ்ஹீதிய போர்வை போர்த்த சகோதரர்களே!
·         பெருமானார் (ஸல்) அவர்கள் தனது பூத உடலோடு மிஃராஜுக்கு சென்றாகள் என்பதை ஒத்துக் கொண்ட பிறகு - அந்த பயணம் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானது என ஏற்றுக் கொண்ட பிறகு-  சமுதாயம் முடிவு செய்த ஒரு தேதி,  வழக்கம் போல உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் ஒரு தேதியை முடிவு  செய்து அறிவிக்க வேண்டும். அந்த நாளில் மிஃராஜை நினைவு கூற வேண்டும். அப்படி ஒரு நிகழ்வே நடக்காத்து போல அதை புறக்கணிப்பது என்ன நியாயம்?
·         மிஃராஜ் பெருமானாரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வு மட்டுமல்ல முஸ்லிம் உம்மத்தின் வரலாற்றிலும் கூட அது மிக முக்கிய நிகழ்வாகும்.
·         புரவலர்களாக  இருந்த அபூதாலிப் கதீஜா ரலி ஆகியோரின் மரணத்திற்கு பிறகு மக்காவில் குறைஷிகளின் தலைவராக பொறுப்பேற்ற அபூலஹ்பு பெருமானாருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பாதுகாப்புத் தர முடியாது என மறுத்து விட்ட நிலையில், தாயிப் மக்களிடம் ஆதரவு தேடிச் சென்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள், அந்தப் பயணமும் தோல்வியில முடிந்திருந்த நிலையில் இஸ்லாத்தின் பிரதான பணி இனித்தான் தொடங்க இருக்கிறது என்பதை அறிவுறுத்துவதாக இப்பயணம் அமைந்தது.

·         தோல்வியின் விளிம்பிலிருந்து ஒரு வெற்றிப் பயணம் தொடங்கியது, சமுதாயத்திற்கு மகத்தான பாடம் அதில் இருக்கிறது.

·         இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் அது வரை ஈமான் மட்டுமே இருந்தது
 மிஃராஜிலிருந்து தான் இஸ்லாமே தொடங்கியது எனலாம்.
அது வரை ஷிர்க்கையும் ஒழுக்க கேடுகளையும் தவிர்ந்து கொள்வதே இஸ்லாமாக இருந்தது
·         மிஃராஜிலிருந்து தான் இஸ்லாமின் கடமைகள் தொடங்கின


·         இஸ்லாத்தின் பிரதான  கடமையாகவும் ஏன் இஸ்லாத்திற்கே  -அடையாளமாகவும் அமைந்த  தொழுகை.  இந்த சமயத்தில் அமுல் படுத்தப்பட்ட்து
.
·         அனைத்து எதிர்பார்ப்புகளும் தோற்றுப் போய்விட்ட நிலையில் இஸ்லாம் தொடங்கியது என்பது முஸ்லிம்களுக்கு எப்போதும் ஊக்கத்தையும் தூண்டுதலையும் ஏற்படுத்துகிற நிகழ்வாகும்

·         மிஃராஜ் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஆறுதலாக இருந்த்து. தொடர்ந்து இஸ்லாமியப் பிரச்சாரத்தில் உறுதியாக ஈடுபட தேவையான ஊக்கத்தை பெருமானருக்கு வழங்கியது என்பத் மட்டுமல்ல தொடர்ந்த் முஸ்லிம் உம்மத்திற்கு அதே ஊக்கத்தையும் உற்சாகத்தையு உணர்வையும் தரக்கூடியது என்பதே மிஃராஜிலிருந்த் இன்று நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய பாடமாகும்.

16 வது நாடாளும்னற தேர்தலில் இந்துதுதவ சகதிகள் பெரும் பெற்றது முஸ்லிம்களுக்கு பெரும் கவலையளித்துள்ளதை உணர முடிகிறது.

அரசியல் ஈடுபாடும், ஆதிக்க எண்ணமும் முஸ்லிம்களின் சிந்தனையை பெரிதும் ஆக்ரமித்திருப்பதே – நமக்கு சார்பானவர்கள் போய்விட்டார்களே? நமக்கு எதிரானவர்கள் வந்து விட்டார்களே? அடுத்து என்ன நடக்குமோ ? என்ற பீதியுணர்வுக்கு காரணமாகும்.

இந்தியாவில் நாம் கவலைப் பட வேண்டிய விசயம் இது தானா?

முஹம்மது நபி (ஸல்) அவர்களது முழு வாழ்க்கையில் எந்த இடத்திலும் ஆட்சி அதிகாரம் பற்றிய பேச்சை பார்க்க முடியாது.
மதீனாவிலிருந்து கொண்டு ஒரு போதும் மக்காவை கைப்பற்றுவேன் என்று அவர்கள் சூளுரை செய்த்தில்லை. அரபகத்தை நாம் ஆளுவோம் என தோழர்களை தூண்டிவிட்ட்தில்லை

பெருமானாரின் கவலை மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதாகவே இருந்த்து.

ஒரு நாள் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறார்கள்
ஆயிஷா நாயகி கேட்டார் “ உங்களை உறங்க விடாமல் தடுப்பது எது?
பெருமானார் (ஸல்) சொன்னார்கள் “ மக்கள் இப்படி குப்ரில் இருக்கிறார்களே!’

கைபர்   யுத்த்தின் போது யூதர்களின் வலிமை மிகுந்த நிதாத கோட்டையை பெருமானார் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அபூபக்கர் ரலி யின் தலைமையில் முதல் நாள் வெற்றி கிடைக்கவில்லை. உமர் ரலியின் தலைமையில் அடுத்த நாள் வெற்றி கிடைக்கவில்லை “ நாளை நான் ஒருவரிடம் கொடியைத் தருவேன் அவர் அல்லாஹ்வை விரும்புகிறார். அல்லாஹ்வும் அவரை விரும்புகிறான். அவர் வெற்றி பெறுவார் என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

மிகுந்த எதிர் பார்ப்போடு சஹாபாக்கள் காத்திருந்த போது அலி (ரலி)யிடம் கொடியை கொடுத்தார்கள் பெருமானார் (ஸ்ல)

பெரும் வீர்ராக இருந்த அவரிடம் கொடியை கொடுத்த்தில் ஆச்சரியமில்லை. அந்த யுத்த்தில் அதை நிரூபித்தார். கைபர் கோட்டையின் கதவை தன் ஒரு கையால அவர் பிடுங்கிப் போட்டார். அந்த கதவை பலர் சேர்ந்தும் தூக்க முடியவில்லை.

ஆச்சரியம் எதில் என்றால்

அவரிடம் கொடியை கொடுத்த போது பெருமானார் சொன்ன அறிவுரைகள் அதிசயமானவை.
சாதரணமாக போர்க்களத்தில் படைத்தலைவர்கள் விடாதீர்கள்! வெட்டுங்கள்!  குத்துங்கள்! தாக்குங்கள்! என்று கூறித்தான் படையினரை தூண்டுவார்கள். அதிலும் முந்தைய இரண்டு நாட்களிலும் வெற்றி கிடைக்காமல் தமதமாகிக் கொண்டிருக்கிற போது படைத்தலைவர்களின் ஆக்ரோஷம் அதிகமாகத்தான் இருக்கும், இது தான் உலக நியதி

ஆனால் பெருமானார் (ஸல்) அலி (ரலி) யிடன் என்ன செய்யப் போகிறீர் என்று கேட்டார்கள் .
அவர்கள் நம்மை போல் ஆகும் வரை சண்டையிடப்போகிறேன் என்று பதிலளித்தார், அலி (ரலி) ஒரு தளபதியின் பதில் இப்படித்தான் இருக்க முடியும்,

உலகை உய்விக்க வந்த திருத்தூதர் உத்தம் நபி நாதர் முஹம்மது (ஸல்) கூறினார்கள்.
அலீ! நிதானமாக நடந்து கொள்வீராக! அவர்களை அடைந்த்தும் அவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்வீராக! ஞாபகம் இருக்கட்டும்!! உங்களால் ஒரு மனிதர் நேர்வழி பெறுவது சிவப்பு ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்த்து.


فيبعث أناساً من أصحابه فلم يكن فتح ومنهم أبو بكر وعمر بن الخطاب.
ثم قال صلى الله عليه وسلم لمحمد بن مسلمة: «لأعطين الراية غداً لرجل يحب الله ورسوله ويحبه الله ورسوله، لا يولي الدبر يفتح الله عز وجل على يديه فيمكنه من قاتل أخيك».
وفي الغد بعث رسول الله صلى الله عليه وسلم إلى عليّ رضي الله عنه، وكان أرمد شديد الرمد، فجيء به إلى رسول الله صلى الله عليه وسلم وقد عصب عينيه فعقد له لواءه الأبيض وتفل في عينيه ودلكهما فبرأ حتى كأن لم يكن بهما وجع، وقال عليّ رضي الله عنه: فما رمدت بعد يومئذ،
فلما أخذ عليّ الراية قال: أقاتلهم حتى يكونوا مثلنا، فقال رسول الله صلى الله عليه وسلم «انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام، فإن لم يطيعوا لك بذلك فوالله لأن يهدي الله بك رجلاً واحداً خير لك من حمر النعم».

பெருமானார் (ஸல்) அவர்களின் இலட்சியமும் கவலையும் என்னவக இருந்த்து என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் எதுவும் தேவையுண்டா?

ஆட்சியதியாகரம் அல்ல! மக்களின் ஹிதாயத்தே பெருமானாரின் இலட்சியம் கவலை எல்லாம்.

“அவர்களைப் பற்றிய கவலையில் உங்களை அழித்துக் கொள்வீர் போலிருக்கிறதே என்று பெருமானாரைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறானே ! அந்தக் கவலை ஆட்சியதிகாரத்தைப் பற்றியகவலை அல்ல!  மக்களின் ஹிதாயத்தைப் பற்றிய கவலையே!

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا(6)

உஸாமா ரலி யுத்த களத்தில் தன்னை வெட்ட வந்தவரை வெட்டு வதற்காக சென்ற போது அவர் கலிமா சொன்னார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தந்திரம் செய்கிறார் என்று நினைத்து அவரை உஸாமா (ரலி) கொன்றுவிட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசிய போது “ அவர் அப்படிச் சொன்ன பிறகுமா? வெட்டினீர் ?

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِي شَيْبَةَ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ فَأَدْرَكْتُ رَجُلًا فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَطَعَنْتُهُ فَوَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ فَذَكَرْتُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَقَتَلْتَهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنْ السِّلَاحِ قَالَ أَفَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لَا فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي أَسْلَمْتُ يَوْمَئِذٍ قَالَ- مسلم 96

போர் முனையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு வர் கலிமா சொன்னாலும் அவருடைய ஹிதாயத்தை கவனிக்க வேண்டும் என்ற பெருமானாரின் அக்கறை தான் நாம் நினைவில் கொள்ள வேண்டும்

இது போல தன்னுடைய பரம எதிரிகளை கூட பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அபூஜஹ்லுடைய மகன் இக்ரிமாவை , அபூசுப்யானின் மனைவி ஹிந்தாவை. வஹ்ஷியை, இன்னும் மன்னிக்க முடியாத பலரை பெருமானார் (ஸல்) மன்னித்தார்கள்.
இதை சொற்பொழிவாளர்கள் ஆச்சரியமாக குறிப்பிடுவதுண்டு, ஆனால் இதில் ஆச்சரியத்திற்கு எதுவுமில்லை. மக்களின் ஹிதாயத்தை இலட்சியமாக கொண்டு வாழும் ஒருவர் அவர்களை நேர்வழிப் படுத்துவதை விரும்புவாரே தவிர அவர்கள் மீது ஆதிக்கம் செய்வதையோ அவரை அழிப்பதையோ விரும்ப மாட்டார் அல்லவா?     

பெருமானாரின் இந்த இலட்சியமும் எண்ணவோட்டமும் தான் சஹாபாக்களிடம் இருந்த்து.

இஸ்லாமிய கலீபாக்களிடம் ஆட்சி ஆதிக்க விரிவாக்க நோக்கம் இருக்க வில்லை. தீனை எடுத்துச் செல்வதும் ஹிதாயத்தை பரப்புவதுமே நோக்கமாக இருந்த்து.

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் காதிஸிய்யா யுத்த்தின் போது பாரசீகப் பெரும் படைத்தளபதி ருஸ்துமின் சபைக்குச் சென்ற முஸ்லிம் தூதுக்குழுவினரிடம் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது ருஸ்துமின் ஆடம்பர கூடாரத்திற்குள் பட்டு விரிப்பில் குதிரையை இழுத்துச் சென்ற முஸ்லிம்களின் தலைவர் என்ன சொன்னார் என்பதை வரலாறு பொன்னொழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறது.

ثم قال ان رسول الله أمرنا أن نبلغ الناس رسالة الله لنخرجهم من الظلمات الى النور، ولهذا جئنا اليكم لاطمعا في اموالكم ولا في ذهبكم وحريركم فقد رأيتم كيف احتقرنا ذلك كله ووطئناه بخيولنا وانما جئنا لننقذكم من عبادة العباد الى عبادة الله الواحد القهار، فان أنتم دخلتم في ديننا رجعنا عنكم لانرزؤكم في اموالكم ولاثرواتكم شيئا ، ويكون ملككم لكم وأرضكم لكم وتصبحون أخوة لنا في الأسلام نتعاون معكم تعاون الأخ مع أخيه على ما في خيره وصلاحه ، فان أبيتم ذلك فالجزية عن يد والا فالسيف حتى يحكم الله بيننا وبينكم وهو أحكم الحاكمين .   .

இந்த நோக்கம் தான் முஸ்லிக்ள் சென்ற இட்த்திலெல்லாம் இஸ்லாம் வெற்றி பெறக் காரணமானது.

முஸ்லிம்கல் இராக்கிற்கு சென்றார்கள் இராக் முஸ்லிம் நாடானது. முஸ்லிம்கள் ஈரானுக்கு சென்ற போதும், எகிப்துக் சென்ற போதும், ஆப்ரிக்காவின் ஐரோப்பாவின்  மற்ற நாடுகளுக்கு சென்ற போதும் அங்கு இஸ்லாம் வென்றது. இன்றும் அங்கு இஸ்லாம் நின்று வாழ்கிறது.

இந்தியாவிற்கு ஆரம்பத்தில் வந்த முஹம்மது பின் காஸிமுக்கும் மஹ்மூதுல் கஜ்னவிக்கும் மக்களிடம் ஹிதாயத்தை கொண்டு சேர்க்கிற நோக்கம் இருந்த்து.
அவர்கள் காலத்தில் இஸ்லா வளர்ந்த்து. அதற்கு பின்னர் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட முஸ்லிம்களுக்கு அதிகாரமும் அரசியலும் பிரதானமாகிய போது இஸ்லாத்தின் வளர்ச்சி தடை பட்ட்து.

இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்.

இராக்கிலும் ஈரானிலும் எகிப்திலும் தஜ்கிஸ்தானிலும் ஆஜர்பைஜான் ஆர்மீனியாவிலும் நடந்த மாற்றங்கள் இங்கு நடக்க வில்லை..

இந்த நாட்டில் நாம் சிறுபான்மையினராக இருப்பது தானே நமது கவலைக்கு காரணம்.

இந்த கவலையை நிரந்தரமாக் போக்க வழி

இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை சமயமாக மாறும் வழியை நாம் யோசிப்பது தான். அது குறித்து கவலைப் படுவது தான்.

இந்தக் கவலை வந்து விடும் என்றால் ஒரு தேர்தலில் முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றது பெரிய கவலையாக இருக்காது, இருக்க முடியாது?

இந்தியா முஸ்லிம் நாடாகி விடும் என்று தான் அவர்கள் பயம் காட்டுகிறார்கள். நாம் ஏன் அவர்கள் பயப்படுகிற ஆயுத்த்தை கையில் எடுக்க கூடாது/

நாம் கத்திய எடுத்தால் துப்பாக்கி எடுத்தால் வெடி குண்டை எடுத்தால் அது போல அவர்களும் எடுக்க முடியும். நாம் இஸ்லாமை கையில் எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?

அல்லாஹ் எதில் வெற்ற்யை தருவன் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த பெருமானாருக்கு மிஃராஜ் பயணத்தின் வழியே தனது ஆற்றலை சக்தியை யை காட்டி பிரம்மாண்டப்படுத்திய இறைவன் தொழ்கை என்ற ஒரு கடமையை கொடுத்ததான். இனி மேல் தான் உங்கள் பணி தொடங்குகிறது என்று அறிவுறுத்தினான்.

இந்திய முஸ்லிம்களுக்கும் இனித்தான் உண்மையான பணி காத்திருக்கிறது.!  
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆயிரமாண்டு கால வரலாறு செய்யத்
தவறியை கடமையை இந்த தேர்தல் முடிவு நமக்கு உணர்த்துவதாக வே நான் நினைக்கிறேன் நீங்கள்?


6 comments:

 1. ஹல்ரத்தின் இந்த கட்டுரை உள்ளத்தின் எழுச்சி கட்டுரை அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 2. sariyana nerathil telivana sindanai
  Jazakallah

  ReplyDelete
 3. Excellent and purity
  جزاك الله خيرًا...

  ReplyDelete
 4. Halrath, ungalin sevaiye...... sevai.
  Adhuve engalukku thevai.jazakallahu hairan fiddharain.

  ReplyDelete
 5. Anonymous8:18 PM

  அருமையான கட்டுரை ஹழ்ரத்

  ReplyDelete
 6. மிகவும் அருமையான கட்டுரை."நாம் கத்திய எடுத்தால் துப்பாக்கி எடுத்தால் வெடி குண்டை எடுத்தால் அது போல அவர்களும் எடுக்க முடியும். நாம் இஸ்லாமை கையில் எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?" இந்த வார்த்தைகளை வாழ்க்கையாக்கினால் இன்ஷா அல்லாஹ் வெற்றி நமதே...

  ReplyDelete