வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 08, 2015

தாய் மதம் திரும்புவோம்

 فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفاً فِطْرَتَ اللهِ الَّتِى فَطَرَ النَّاسَ عَلَيها لاَ تَبْدِيلَ لِخْلْقِ اللهِ ذلِكَ الدَّينُ الْقَيِّمُ وَلَـكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ 

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வில் ஹ்ஜ்ரி 6 ம் வருடமும் அதில் நடை பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையும் முக்கியமானவை ஆகும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயத்தை ஹுதை பிய்யா உடன்படிக்கை எழுதியது,

காலா காலத்திற்கும் , தங்களது நிகழ்கால வாழ்விற்கான ஏராளமான படிப்பினைகளையும், பார்வைகளையும், செயல் திட்டங்களையும், அதன் வழி முறைகளையும் முஸ்லிம் உம்மத் அதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக தோல்வி போல தெரிகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டு எழுவதற்கான உற்சாகத்தை ஹுதைபிய்யா தருகிறது.

இன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு ஹுதைபிய்யா ஒரு நல்ல படிப்பினையாகும்.

இந்த ஜும்ஆ வில்  ஹுதைபிய்யா முஸ்லிம் உம்மத்திற்கு கற்றுக் கொடுத்த ஒரு வாழ்வியல் பாடத்த்தை நாம் பார்க்க இருக்கிறோம்.

ஹிஜ்ரி 6 ம் ஆண்டு நபி (ஸல்அவர்கள் கஃபாவை தவாபு செய்வது போல கனவு கண்டார்கள்.

நபிமார்களின் கனவு வஹ்யின்  ஒரு அம்சம் என்பதால் பெருமானார்(ஸல்) அவர்கள் உம்ராவிற்கு தயாராகுமாறு தோழர்களிடம் கூறினார்க்ள்.
மக்காவாசிகளுடன் சுமூக உறவு இல்லாத சூழலில் உம்ராவுக்குச் செல்வது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றுகருதிய சில தோழர்கள் கிளம்பவில்லை.  பெருமானாரின்உத்தரவுக்கு எந்த சலனமும் இன்றி கட்டுப்பட்ட தோழர்கள்1400 பேர் அண்ணலாருடன் புறப்பட்டார்கள்.

வழியில் துல ஹுலைஃபா என்ற இடத்தில்உம்ராவிற்கா இஹ்ராம் அணிந்து கொண்டார்கள்.

மக்காவை நெருங்கிய போதுகாலித் பின் வலீதின் தலைமையில் காபிர்கள் முஸ்லிம்களைதடுக்க தயாராக இருப்பதாக செய்தி கிடைத்தது.

நபி (ஸல்அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களதுபயணத்தைத்  தொடர்ந்தார்கள்.
முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும்முயற்சி செய்தார். தனது குதிரைப் படையை  முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள்  தன்யீம்வழியாக மக்கா செல்லும்  நேரான பிரதான பாதையை விட்டுவிட்டு  வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். 

மலைகளுக்கிடையில் கற்களும்,பாறைகளும் நிறைந்த கரடு முரடானபாதை வழியேஅதாவது வலப்பக்கம் ஹம்ஸ் என்ற ஊரீன் புறவழியானஸனிய்யத்துல் முரார் வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில்  பயணத்தைத்  தொடங்கினார்கள்.   இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். 

தான் நின்றுகொண்டிருந்த வழியை  புறக்கணித்து விட்டு  இஸ்லாமியப்படை  வேறு  வழியில்  செல்கிறது  என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  காலித் குறைஷிகளை  எச்சரிப்ப்பதற்காக மக்காவிற்குவிரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள்  தங்களது  பயணத்தைத்  தொடர்ந்து ஸனிய்யத்துல் முரார்  என்றஇடத்தை  அடைந்தவுடன் அவர்களது  வாகனம்  அங்கு  மண்டியிட்டு  உட்கார்ந்து  விட்டது.

மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம்பிடித்தது.  அப்போது நபி (ஸல்) 'எனது ஒட்டகம் கஸ்வாமுரண்டு பிடிப்பதில்லை!  அது அத்தகையகுணமுடையதுமல்ல! என்றாலும்  யானைப்  படைகளைத்  தடுத்த  அல்லாஹ் இதையும்  தடுத்துவிட்டான்  எனது  உயிர்  எவன்  கைவசம் இருக்கிறதோ  அவன்  மீது  ஆணையாக!  அல்லாஹ் மேன்மைபடுத்திய வற்றைக்  கண்ணியப்படுத்தும்  வகையில் எந்த  ஒரு திட்டத்தை குறைஷிகள்  என்னிடம்  கேட்டாலும் நான்  அவர்களுக்கு  அத்திட்டத்தை  நிறைவேற்றிக் கொடுப்பேன்என்று  கூறிவிட்டு  தனது  ஒட்டகத்தை  அதட்டவே  அது குதித்தெழுந்தது. நபியவர்கள்  தனது  பாதையைத்  திருப்பி ஹுதைபிய்யாவின்  இறுதியிலுள்ள ஸமது என்ற கிணற்றுக்குஅருகில் தங்கினார்கள். 

خرج رسول الله صلى الله عليه وسلم حتى إذا سلك في ثنية المرار بركت ناقته القصواء فقال الناس خلأت، فقال: «ما خلأت وما هو لها بخلق ولكن حبسها حابس الفيل عن مكة لا تدعوني قريش اليوم إلى خطة يسألوني صلة الرحم إلا أعطيتهم إياها».

தனது ஒட்டகை படுத்துக் கொண்ட போது பெருமானார் (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சொன்ன கருத்தை மக்காவின் காபிர்கள் அறியவில்லை. அவர்கள் என்ன கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கும் , பெருமானார் (ஸல்) அவர்கள அதற்கு சம்மதித்திருப்பார்கள்.

ஆனால் மக்காவின் காரிர்கள் அப்போது ஹரமிற்குள் நுழைய அனுமதிக்க முடியாது திரும்பிச் சென்று விட்டு அடுத்த வருடங்கள் வாருங்கள் என்று திருப்பி அனுப்பினார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டார்கள், சஹாபாக்களால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மிகுந்த ஏமாற்றத்தோடு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது தான் அல்லாஹ் அல்பதஹ் வெற்றி என்ற அத்தியாயம் முழுவதையும் அருளினான்.

இதை வெற்றி மகத்தான வெற்றி என்பதை முஸ்லிம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெருமானார் (ஸல்) இதன் உட்புறத்தை தோழர்களுக்கு புரிய வைத்தார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு விச்யத்தையும் ஒரு மாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும் இரகசியத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

وقد روى الإمام أحمد وأبو داود والحاكم من حديث مجمع بن جارية الأنصاري الأوسي قال: شهدنا الحديبية فلما انصرفنا عنها وجدنا رسول الله صلى الله عليه وسلم عند كُرَاع الغَميم وقد جمع الناس وقرأ عليهم: {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحاً مُّبِيناً} (الفتح: 1)، فقال رجل: يا رسول الله أوَفتح هو؟ قال: «إي والذي نفسي بيده إنه لفتح»،

இந்த ஒப்பந்த்தின் மூலம்
·         மக்காவின் மக்களும் முஸ்லிம்களும் கலந்து பழக வாய்ப்பு ஏற்பட்டது. காலித் பின் வலீத், அம்ரு பின் ஆஸ் (ரலி) போன்றோர் இஸ்லாமை தழுவினர்.
·         பெருமானார் (ஸல்) அவர்களை ஒரு அரசியல் சக்தியாக மக்காவின் மக்கள் அங்கீகரித்தனர், இந்த செய்தி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதை பெரும் அரசியல் வெற்றி என்று தற்கால ராஜ தந்திரிகள் கருதுகிறார்கள்.
·         மக்காவாசிகளை பயந்து கொண்டு இஸலாமை தழுவாமல இருந்த யமன் போன்ற மற்ற பகுதிகளிலிருந்த அரபுகள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமை ஏற்றனர்.

وروى موسى بن عقبة والزهري والبيهقي عن عروة بن الزبير قال: أقبل النبي صلى الله عليه وسلم راجعاً فقال رجل من أصحابه: ما هذا بفتح، لقد صددنا عن البيت وصدّ هدينا ورد صلى الله عليه وسلم رجلين من المؤمنين كانا خرجا إليه فبلغه صلى الله عليه وسلم قول ذلك الرجل فقال: «بئس الكلام بل هو أعظم الفتح قد رضي المشركون أن يدفعوكم بالراح عن بلادهم ويسألوكم القضية ويرغبوا إليكم في الأمان ولقد رأوا منكم ما كرهوا وأظفركم الله عليهم وردكم سالمين مأجورين فهو أعظم الفتوح، أنسيتم يوم أُحُد إذ تصعدون ولا تلوون على أحد وأنا أدعوكم في أخراكم، أنسيتم يوم الأحزاب إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذا زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا؟» فال المسلمون: صدق الله ورسوله هو أعظم الفتوح، والله يا نبيّ الله ما فكرنا فيما فكرت فيه ولأنت أعلم بالله وأمره منا.

ஒரு நெருக்கடியிலும் தமக்கான வாய்ப்பை உணர்ந்து கொள்ளும் உத்தியை முஸ்லிம் உம்மத்திற்கு பெருமானார் கற்றுக் கொடுத்தார்கள்.

வரலாறு நெடுகிலும் இந்த உத்தியை உணர்ந்து கொண்ட முஸ்லிம் சமுதாயம் சலிப்படையாத – களைப்படையாத – விரக்தியடையாத – காரிய சாத்தியம் அறிந்த சமுதாயமாக – புத்திசாலிகளின் ஆன்மீக கூட்டமாக திகழ்ந்தது.

காதிஸீய்யா யுத்தம் பாரசீக சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டிய யுத்தம், அந்த யுத்திற்காக காதிஸீய்யாவில் கூடியிருந்த சஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் தளபதி ருஸ்துமுடன் பேச்சு நடத்தினார். பின்னர் மன்னர் யஜ்தஜ்ரிதிடம் பேச்சு நடத்த ஆள் அனுபினார். தளபதி செய்யாத ஒரு மடத்தனத்தை அந்த புகழ் பெற்ற அரசன் செய்தான்.
தன்னிடம் பேச வந்த முஸ்லிம் குழுவினரின் ஒருவரின் கூடை நிறைய மண்ணை அள்ளிக் வைத்தான். அவன் கேவலப்படுத்துவதாக நினைத்தான். சஃது ரலி அவர்களோ, அரசனே வலிய வந்து தங்களிடம் பாரசீகத்தை ஒப்படைத்து விட்டதாக கூறினார்,
என்ன ஆழமான பார்வை பாருங்கள்! அப்படியே நடநதது. பாரசீக சாம்ராஜ்யத்ததை அவர்கள் இழந்தார்கள்.
وبعث سعد بجماعة من المسلمين إلى يزدجرد يدعونه إلى الإسلام فلما دخلوا عليه
قال‏:‏ ما الذي دعاكمِ إلى غزونا والولوع ببلادنا
فقال له النعمان بن مقرن‏:‏ إن الله تعالى أرسل إلينا رسولاَ يدلنا على الخير فأمرنا أن ندعو الناس إلى الإنصاف ونحن ندعوكم إلى ديننا فإن أبيتم فالمناجزة
فقال يزدجرد‏:‏ إني لا أعلم في الأرض أمة أشقى منكم
فقال المغيرة بن زرارة الأسير‏:‏ اختر إن شئت الجزية عن يدٍ وأنت صاغر وإن شئت السيف أو تسلم
فقال‏:‏ أتستقبلني بمثل هذا
فقال‏:‏ ما استقبلتَ إِلا من كلمني
فقال‏:‏ لولا أن الرسل لا تقتل لقتلتك لا شيء لكم عندي
ثم قال‏:‏ ائتوني بوقر من تراب واحملوه على أشرف هؤلاء ثم سوقوه حتى يخرج من باب المدائن ارجعوا إلى صاحبكم فاعلموه أني مرسل إليهم رستم حتى يدفنه وجنده في خندق القادسية ثم أورده بلادكم حتى أشغلكم في أنفسكم بأشد مما
ثم قال‏:‏ من أشرفكم‏.‏
فسكت القوم فقال عاصم بن عمرو‏:‏ أنا فحملنيه فحمله على عنقه
فأتى به سعدًا فقال‏:‏ ملكنا اللّه أرضهم تفاؤلًا بأخذ التراب‏.‏

எந்த ஒரு கட்டத்திலும் தமக்கான தூர நோக்கிலான வாய்ப்பை உணர்ந்து தேடிக் கொள்வது முஸ்லிம்களின் கடமையாகும்.

இப்போது உலகில் பொதுவாகவும்  நமது நாட்டில் குறிப்பாகவும் முஸ்லிம்களை கீழே வீழ்த்துவதற்கான ஏற்பாடுகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

நம்மில் சிலர் உறசாகம் இழக்கிறார்கள். சிலர் விரக்தியடைகின்றனர். சிலர் புலம்புகின்றனர்.

இது விரக்தியடைவதற்கோ தளர்வடைவதற்கோ தோற்று விட்டதாக நினைப்பதற்கோ உள்ள தருணம் அல்ல.

முஸ்லிம் உம்மத்திற்கெதிரான திட்டங்கள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் இஸ்லாம் உயிர்ப்புடனும். இன்னும் அதிக மலர்ச்சியுடனும் வெற்றி பெறுவதை நாம காணலாம்.

நாம் நமக்கான சரியான பாதையை தேர்ந்தெடுக்க அகலமான ஆழமான பாவைக்கு பழக வேண்டும்.

முஸ்லிம்கள் சிலர் சுமர்ர் 57 குடும்பத்தினரை  உத்தரபிரதேசத்தில் இந்து மத்திற்கு மாறியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Members of at least 57 Muslim families were converted to Hinduism at a ceremony called 'Purkhon ki ghar vapsi', a mass conversion jointly organized by Dharma Jagran Samanvay Vibhag, an offshoot of the Rashtriya Swayamsevak Sangh (RSS), and Bajrang Dal in Agra

தொடர்ந்து நாடு முழுவதும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தப்போவதாக இந்துத்துவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

* ஆர்யசமாஜ் அறக்கட்டளையைச் சேர்ந்த, சுவாமி ஸ்ரத்தானந்தா, 1920களில், 'தாய் மதம் திரும்புதல்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.* கடந்த 1926 டிச., 23ல், டில்லி, நாயாபஜார் பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்குள் நுழைந்த ஒரு நபர், ஸ்ரத்தனந்தாவை கொலை செய்தான்.

* ஸ்ரத்தானந்தா, டிச., 23ல் இறந்தாலும், கிறிஸ்துமஸ் தினத்தன்று, 'தரம் ஜக்ராம்' என்ற இந்து அமைப்பு, 'தாய் மதம் திரும்புதல்' என்ற நிகழ்ச்சியை, நடத்தப் போவதாக அறிவித்திருந்திருந்தது. முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களை இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கையாக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, அலிகார் மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு, பார்லிமென்டி லும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக, 'தரம் ஜக்ராம்' அமைப்பு அறிவித்தது.

ஆயினும் இது குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன, போட்டோக்கள் வெளியாகின்றன.

இச்செய்திகள் சில முஸ்லிம்களை அதிகம் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.

உணர்ச்சி வசப்படத் தேவையில்லை.

அல்லாஹ்வின் பெரும் கிருபையாக, முதல் செய்தி வந்த போதே அந்த செய்தியின் இறுதியில் ரேஷன் கார்டு தருவதாகவும், ஆதார் கார்டு தருவதாகவும் தங்களை அழைத்து வந்த்ததாக அவர்கள் கூறினார்கள்.

அந்த போட்டோவில் இருந்தவர்கள் அடுத்த வாரம் அலிகரில் ஜும் ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்த செய்தியை  ஆங்கில பத்ரிகைகள் வெளியிட்டன.

இது ஆட்சியில் அமர்ந்திருக்கிற இந்துதுதுவ அமைப்புக்களின் குத்தாட்டத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது,

ஒரு மததிற்கு தழுவுகிறவர்கள் அந்த மதத்தின் அடையாளத்தை அல்லவா அணிந்திருக்க வேண்டும். தொப்பி போட்டுக்க் கொண்டு அதில் சிலர் காட்சியளித்த போதே இது ஒரு நாடக நடவடிக்கை என்பது புரிந்து போகிறது.

நாட்டில் மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை குலைக்கும் வகை யில் ஆசை காட்டி மக்களை மதமாற்ற அரசே முயற்சி செய்வதாக முஸ்லிம் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அரசு இதற்காகவே மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறது.

உண்மையில் இத்தகைய ஒரு சட்டத்தை நமது வாயிலிருந்தே வர வைக்க இந்துதுவா செய்யும் குயுக்தியாகும் இது.

முஸ்லிம்கள் அலிகர் விசயத்தை நமக்கு பாதகமாக பார்க்காமல் நமக்கு சாதகமாக பார்க்கும் மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் பெற வேண்டும்,

பொது அரங்கில் மதம் மாற்றும் அதிகாரமும் – உரிமையும் அனைவருக்கும் வேண்டும் என நாம அரசை கோர வேண்டும். அதே போல் மதம் மாறுகிறவர்களை அல்லது நியாயமாக தமது மதத்தை பிரச்சாரம் செய்கிறவர்களையோ துன்புறுத்தக் கூடாது. அனைவருக்கும் இதில் சமமான உரிமையை வழங்க வேண்டும் என நாம் கேட்க வேண்டும்.

மட்டுமல்ல நமது நாட்டில் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு வராமல்  அறியாமை இருளில் – அநாகரீகத்தின் இருளில் – ஒழுக்கக் கேட்டின் இருளில் – மூட நம்பிக்கையின் இருளில் இருக்கிற மக்களை இஸ்லாத்தின் வெளிச்சத்திற்கு அழைக்க பகிரங்க முய்றசிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கான துணிச்சலையும் சட்ட ரீதியான வாய்ப்பையும் பெற வேண்டும்.

உத்தர பிரதேசம் பரலவியில் உள்ள ஒரு அமைப்பு நூறு இந்துக்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றும் நிகழ்ச்சி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. மாநில அரசு அதை தடை செய்திருக்கிறது.

இது மற்றவர்களைப் போல ஒரு நாட்க விழாவாக அல்ல, உண்மையில் எதார்த்தமாக தீனின் வெளிச்சத்திற்கு மக்களை கொண்டு வரும் அக்கறையில் நடைபெற வேண்டும். பிரச்சினைகளுக்கு விளம்பர ரீதியிலான பதிலாக இல்லாமல் எதார்த்தமான தீர்வாக இதை நாம் அணுக வேண்டும்.

இஸ்லாமை எடுத்துறைக்கும் பணி என்பது யாரையும் ஏமாற்றும் பணி அல்ல, யாருக்கும் கேடு விளைவிக்கும் பணி அல்ல. யாருக்கும் தீமையளிக்கும் பணியுமல்ல.

மாறக மக்களை நல்வழிப்படுத்தும் அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வரும் – அவர்களை சீர் படுத்தும் – அவர்களுக்கு கவுரவத்தையும் அந்தஸ்தையும் பெற்றுத்தரும் பணியாகும்.

அலிகரின் மதமாற்ற நாடகக காரகளுக்கும் மதுரைக்கு அருகிலுள்ள மீனாட்சி புரம் ரஹ்மத் நகராக மாறிய காட்சியை நாம் காட்ட வேண்டும். முதலில் அதை நாம் உணர வேண்டும்

டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெருத்தமாக The other conversion story  என்ற ஒரு  கட்டுரை வெளியாகி இருந்தது. ஜெயமோகன் என்பவர் எழுதினாலும் அதிலுள்ள உண்மைய யாரையும் சிந்திக்க வைக்க கூடியது,

கட்டுரையாளர் கூறுகிறார்,

But the village, which changed its name to Rehmat Nagar along with the mass conversions, remains a peaceful, communally integrated hamlet. 
On February 20, the day after the symbolic conversion, 300 dalit families — about 500 to 600 people — gathered in the village square and amid hushed silence and much trepidation, tonsured their heads and repeated the Shahada

They were formally initiated into Islam by the Ishadul Islam Sabha of South India, which had its offices in Tirunelveli. 

கட்டுரையாளர் கூறுகிறார்

mass conversions took place here. But, it was nothing like the Sangh Parivar's controversial Ghar Wapsi programme in Uttar Pradesh last month.


இதெற்கென்ன காரணம்

தேவர் சமுதாயத்தின் அடக்கு முறையிலிருந்து விடுபடவே இந்த மதமாற்றம் என்கின்றனர் அம்மக்கள். மரியாதையை தேடி நாஙகள் மதம் மாறினோம் என்கின்றனர் அவர்கள்

"It was a yearning for dignity. We sought Islam to escape caste hatred and the atrocities inflicted on us by the Thevars (a most backward community, but higher in the caste hierarchy than dalits),"
    
recalls Umer Kaiyum, who was once A Mookkan. A retired primary school teacher,
உமர்க்ய்யாமாக மாறிய முக்கப்பன் தனது அனுபவத்தை கூறுகிறார்

. "I was a Tamil pundit. But, I was mocked for my name and forced to change it to Umadevan,"

மூக்கப்பன் என்ற எனது பெயர் காரணமாக வே நான் தாக்குதல்களுக்கு ஆளானானேன். என் பெயரை உமாதேவன் என மாற்றிக் கொண்டிருந்தேன் .

நாங்கள் குளித்து சுத்தமாக ஆடை உடுத்தி யிருந்தாலும் தமிழக அரசின் பேருந்தில் தேவர்களுக்கு பக்கத்தில் அமர அனுமதிக்கப்படவில்லை

"We may have been bathed and better dressed than them (Thevars), but we were never allowed to sit on the seats of the Tamil Nadu bus," says Saleem,

ஒரு தலித சகோதரர்  சிவ சுபரமணியம் 10 வருடங்களுக்கு முன் பேருந்தில் தான் எப்படி இருக்கையை காலி செய்ய வேண்டியது என்பதை நினைவு கூர்ந்து விட்டு இன்று அவர்கள் தம்மை பாய் என்று அழைப்பதாக கூறினார். அவர் ஒரு எழுத்தாளர். ஆசிரியர்.

"An old dalit I met in Meenakshipuram told me how he once had to vacate his seat in a village bus for a 10-year-old Thevar boy, addressing him respectfully. But after he converted to Islam, he didn't have to do that and he is addressed respectfully as 'bhai'," says A Sivasubramanian, a Tamil teacher and writer

சர்தார் முஹம்மது இப்போது கான்கிரீட் வீடு கட்டிக் குடியிருக்கிறார். ஆனால் இதற்கு முன் அவர் கூரை வீட்டிலே மட்டும் வாழ அனுமதிக்கப்பட்டார்.

Mohammed, 70, sits proud in his stone and concrete home. He built it about two decades ago. As a dalit, he was permitted only to build a thatched hut. 

கட்டுரை இப்படி முடிகிறது.

உள்ளூர் நாட்டமை முன்னாள் இந்து சமூக மக்களின் தலைவர் 66 வயது கருப்பையா மாடசாமி மாலை பள்ளிவாசலலிருந்து அழைப்பு வந்ததும் பள்ளிவாசலுக்குள் சென்று தொழுகைக்கு அமர்கிறார். அவர் இப்போது முஸ்லிம்.

இஸ்லாமை தழுவுகிறவர்கள் எத்தகைய உயர்வான மரியாதையான நேர்வழியை பெறுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கடமையை இந்த நேரத்தில் முஸ்லிம்கள் மன உறுதியோடு செய்ய வேண்டும்.

இன்னொரு முக்கியமான செய்தியும் இங்கே இருக்கிறது.

உலகின் அனைத்து மனிதர்களுக்குமான தாய் மதம் இஸ்லாமே ஆகும்.

மனிதர்கள் அனைவரும் ஆதமின் பிள்ளைகளே. ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரை மார்க்கம் இஸ்லாம் ஒன்றேயாகும்.

முஹ்ம்மது நபி இஸ்லாத்தை தோற்று வித்தவர் அல்ல; இஸ்லாமிய நபிமார் வரிசையின் கடைசி கண்ணி.

இறைவனை பெருத்த வரை மதம் ஒன்றே , அதுவே இஸ்லாம்
திருக்குர் ஆண் அறை கூவிச் சொல்கிறது,

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمْ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ(19)


ஆலிம்களின் நாவுகளில் அடிக்கடி புரண்ட இந்த வசணம் இன்றை சூழலில் அதிகம் பிரச்சாரம் செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

மூஸா அலை அவர்களின் உண்மையான கருத்துக்களை பின்பற்றுகிறவர்கள் முஸ்லிம்களே! வட்டி குற்றவியல் சட்டங்களில் தவ்ராத்தின் சட்டங்களையே முஸ்லிம்கள் தொடர்து பின்பற்றுகிறார்கள். அதற்கு மேலான சீர்திருத்தங்கள் இஸ்லாத்தில் இருக்கிறது,

ஈஸா நபியை உண்மையில் நேசிப்பவர்கள் இருக்க வேண்டிய இடம் இஸ்லாமே.
ஈஸா கொல்லப்படவில்லை அவரை இறைவன் காப்பாற்றினான் , அவர் மரியாதைக்குரியவராக இறுதி காலத்தில் இறங்கி வந்து அரும்பெரும் பணிகளைச் செய்வார். அவர் முஹம்மது நபியை பின்பற்றி இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை பரிபூர்ணப்படுத்துவார் என்றே இஸ்லாம் கூறுகிறது, யூதர்களை போல அன்னை மேரியை அவமதிக்காமல் முழு மரியாதையுடனும் இஸ்லாம அவரை அழைக்கிறது, சிறந்த மனிதக்ர்களாக அவர்களுக்குள்ள மரியாதையை குறைவின் இஸ்லாம் கொடுக்கிறது.

இந்து மததின் உண்மையான தத்துவங்களை தேடுகிறவர்களும் நாட வேண்டியது இஸ்லாமையே. இந்த உலகில் ஆதிக காலத்தில் உருவமற்ற இறைவனையும் இறைவழிபாட்டையு அறிமுகப்படுத்தியதில் இந்து மத்தின் மூல நூல்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. உருவ வழி பாடு சாமாணிய மக்களுக்கானது என இந்து மத அறிஞர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர்.

சித்தர்கள்,  ராஜா ராம் மோகன் ராய் , இராமலிங்க அடிகள், வள்ளலார் போன்ற இந்து மத்தில் உருவ வழிபாட்டுக்கு எதிரான பிரச்சாரகர்களாக இன்றளவும் அறியப்படுகிறார்கள்.

உப நிடதங்கள் பூசை புணஸ்கார நடைமுறைகளை ஏற்கவில்லை அவற்றை கேலி செய்கின்ற என தத்துவ தரிசனங்கள் என்ற நூலில் எட்வேர் சாமுவேல் தேவசிகாமணி என்பவர் எழுதுகிறார். பக 15 )

ஆரம்பத்தில் இறைவனையும் அவனது தன்மைகளையும் அமரர்களான வானவர்களான மலக்குகளையும் இந்திரன் வாயு அக்னி எமன் என தனித்து அறிவித்த இந்து மத அடிப்படைகளை துறந்து அவற்றை கடவுளின் பிம்பங்களாக்கியதும் அவற்றை வணங்குவதை கடவுளின் வணககமாக மாற்றியதும் பின்னர் ஏற்பட்ட திரிபுகளே என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் இந்து மதம் ஒருவமற்ற இறைவனை வழங்குவதை உயர்ந்த பக்தி வழி எனக் குறீப்பிடுகிறது.

சென்னையில் ஒரு கூட்டத்தில் எனக்கு பின்னால் பேசிய ஊரான் அடிகள் அவர்கள் : இறை வழி பாட்டில் இந்து மத்தின் கடைசி நிலை உருவமற்ற இறை வழிபாடே என்றார்.

இதுவே இயற்கை மார்க்கத்தின் அடிப்படையாகும்.

இந்த அடிப்படை உணர்விலேயா மனிதர்கள் பிறக்கிறார்கள்

இதைத்தான் நபிகள் நாயகம (ஸல்) அவர்கள் அனைவரின் இயற்கை மதம் இஸ்லாமே என்றார்கள்.

عن أبي هريرة أنه كان يقول قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ثم يقول أبو هريرة واقرءوا إن شئتم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله الآية -  புகாரி


எனவே  தாய் மதம் திரும்பவேண்டும் என்று சொல்வோர். உண்மையான தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும். அது இஸ்லாம் ஒன்றே யாகும். அந்த தாயிடம் வருமாறு உலக மக்கள அனைவரையும் நாம் அழக்கிறோம்.

அப்படி அழைக்க வேண்டிய பொறுப்பை அலிகார் நிகழ்வுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இத்தகைய வாய்ப்புக்களை உணர்ந்து அதற்கேற்ப செயல் படுகிற தப்வீக்கையும் தைரியத்தைய்ம் அல்லாஹ நம் அனைவருக்கும் வழங்குவானாக!


இஸ்லாமின் வெளிச்சப்பாதைக்கு இதுவரை திரும்பாதவர்களை அல்லாஹ் திருப்புவானாக! அதற்கு நம்மை காரணமாக ஆக்குவானாக!

1 comment:

  1. அருமையான பதிவு ஹஜ்ரத்..

    ReplyDelete