வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 05, 2015

மாட்டிறைச்சி அரசியல்يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ(1)

மனிதன் இந்த உலகின் பிரதான படைப்பு.
மனிதனுக்காகவே இந்த உலகில் மற்ற அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.  இது இஸ்லாமின் நம்பிக்கை

இஸ்லாமின் நம்பிக்கை என்பது படைத்த இறைவன் வகுத்தளித்த கோட்பாடாகும்.

هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا

இந்த பூமியில் படைக்கப்பட்டவை அனைத்தும் மனிதன் பயன்படுத்திக் கொள்வதற்காக..

இந்த ஆயத்த்தில் இரண்டு சிந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன
·         மனிதன அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
·         இவற்றில் எதுவும் மனிதனை படைக்கவில்லை. அவற்றை அவன் வணங்க கூடாது.

" خلق لكم " أي من أجلكم . وقيل : المعنى أن جميع ما في الأرض منعم به عليكم فهو لكم . وقيل : إنه دليل على التوحيد والاعتبار .

மனிதன் உண்ணுவதற்கு அனுமதியளித்துள்ள வற்றையும் தடுக்கப்பட்டவற்றையும் அல்மாயிதா அத்தியாயம் பட்டியலிடுகிறது.

அதன் முதல் வசனம் இப்படி பேசுகிறது

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ(1)
ஆடு மாடு ஒட்டகை கோழி மான் முயல் – வாத்து புறா காடை மயில் என பலவகை உயிரினங்களை சாப்பிட மார்க்கம் அனுமதியளித்துள்ளது. பன்றி கீறிக்கிழித்து தின்னும் மிருகங்களையும் பறவைகளையும் உண்ணுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இஸ்லாம் தடை செய்துள்ள உணவு வகைகளை இமாம்கள் நான்கு பொது விதிகளுக்குள் வரைமுறைப் படுத்தியுள்ளனர்,

1.   அல்லாஹ்வும் இறைத்தூதரும் குறிப்பிட்டு தடை செய்துள்ளவை

செத்துப் போனவை பன்றி இரத்தம் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்கூறி அறுக்கப்பட்டவை, கீறிக்கிழித்தும் திண்ணும் பழக்க முடைய விலங்குகள் பறவைகள் ‘

عن ابن عباس رضي الله عنهما قال: نَهَى رَسُولُ الله- صلى الله عليه وسلم- عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ. أخرجه مسلم
2.   மாக்கம் கொல்லுமாறு உத்தரவிட்ட பிராணிகள்
பாம்பு தேள் எலி போன்றவை

3.   கொல்லக் கூடாது என்று மார்க்கம் தடை செய்திருக்கிற எறும்பு தேனீ போன்றவை
4.   அறுவெறுப்பானவை – புழு பூச்சிகள்

இவைகளைத் தவிர மார்க்கம் அனுமதித்துள்ளவை அனைத்துமே மனிதனுக்கு நன்மையானதும் தேவையானதுமாகும்.

அல்லாஹ் அனுமதித்துள்ள அனைத்திலும் நன்மை உண்டு.

முதலில் இங்கு அனைவரும் நாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய விசயம். புலால் உணவைத் தான் உண்ண வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. அது போல காய்கறி உணவே சிறந்தது என்றும் இஸ்லாம் சொல்லவில்லை. காய்கரி உணவை அனுமதிக்கும் இஸ்லாம் அளவாக சாப்பிடும் மாமிச உணவையே ஆதரிக்கிறது.

பெருமானாருக்கு ஆட்டின் முன் சப்பைக் கறி பிடித்தமானது. அதை ஒரு கடி கடித்தார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَعْوَةٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً -  البخاري 2092

சஹாபாக்கள் உண்டார்கள்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ خُبْزًا وَلَحْمًا وَلَمْ يَتَوَضَّئُوا- إبن ماجة

விருந்திற்கு சிறந்தது இறைச்சி விருந்து –

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி அவர்களிடம் ஒரு ஆட்டை அறுத்தாவது விருந்து கொடு என்றார்கள் பெருமானார்.
 اولم ولو بشاة  
சொர்க்கத்து உணவு

وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ[الطور:22]،
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ[الواقعة:21].
عن أبي الدرداء رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: سيد طعام أهل الدنيا وأهل الجنة اللحم.
سنن ابن ماجه
உடலுக்கு பலம் வேண்டுமா? இமாம் ஷாபியின் யோசனை


وقال الشافعي :

أربعة تقوي البدن : أكل اللحم ، وشم الطيب ، وكثرة الغسل من غير جماع ، ولبس الكتان .

وأربعة توهن البدن : كثرة الجماع ، وكثرة الهم ، وكثرة شرب الماء على الريق ، وكثرة أكل الحامض .
 
மனித உடலுக்கு தேவைப்படுகிற இரும்பு சத்து புலால் உணவில் அதிகமாக கிடைக்கிறது.

(முஹம்மது கான் ஹஜ்ரத் எழுதிய அருள்மறைக் குர் ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நூலிலிருந்து சில செய்திகள்)

·         உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகிற துத்தநாதம் zinc  மாமிச உணவில் தான் அதிகமாக கிடைக்கிறது.
·         உடலுக்கு மிகவும் தேவையான பொருட்களில் துத்தநாதமும் ஒன்று, நோய் தொற்றாமல் இருக்கவேண்டுமானால் இரத்தில் துத்தநாதம் குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும். அளவு குறையுமானால் சாதாரண முகப்பரு கூட சீழ் பிடித்துவிடும்.
·         இரத்ததில் துத்தநாதம் குறையுமானால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. சராசரியாக ஒரு நாளைய உணவில் 20 மில்லி கிராம் துத்தநாதம் இருக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் உணவில் துத்தநாதம் இருந்தாலும் சிறப்பாக மாட்டிறைச்சி, ஈரல் சிறுநீரகம் ஆகியவற்றில் தான் அது அதிகமாக உள்ளது.
·         இவற்றை உண்டால் 15 மில்லிகிராம் துத்தநாதம் எளிதில் கிடைத்துவிடும்”

ஒரு வளைப்பக்கத்து செய்தி இது

“கிராமத்திலே கேளுங்கள் ---மனிதனுக்கு எந்தெந்த உருப்பிலே வியாதியோ ஆட்டின் அந்த உறுப்பை உண்டால் அந்த வியாதி குனமாகுமென்பார்கள் !இது அனுபவ கைமருந்து ஆகும்.  ஏழைகளுக்கு எளிய செலவில் சரிவிகுதி சத்துணவு புலால் உண்பதுதான் !

புலால் உணவுக்கு எதிரான குரல்கள் எதுவும் மனிதாபிமானம் சார்ந்தது அல்ல.

சமூகத்தில் ஒரு வகை தீண்டாமை உணர்வை ஏற்படுத்துவதை – மரக்கறி சாப்பிடுகிறவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களை உயர்வு தாழ்வு படுத்துவதை நோக்கமாக கொண்டதே!

அனுமதிக்கப்ப்பட்ட ஒட்டகை இறைச்சியை தாமாக ஹராமாக்கிக் கொண்ட யூதர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். அதற்கு காரணம் அவர்கள் அதன் மூலம் ஒரு புனிதத்துவத்தை தேட முயன்றதேயாகும். இது இல்லாத்தை இட்டுக் கட்டிச் சொல்லும் அநீதியும் மற்ற மக்கள் மீது உயர்வு தேட முற்படுகிற அநீதியுமாகும்.

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ(93)فَمَنْ افْتَرَى عَلَى اللَّهِ الكَذِبَ مِنْ بَعْدِ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(94)

இந்தியாவில் பசுவை தெய்வமாக கருதுவதாக கூறுகிற சிலர் புலால் உணவில் மாட்டிறைச்சிக்கு எதிராக பேசிவருகிறார்கள். அது உண்மையில் ஒரு சிறு குழுவினரின் பேச்சாகும்.
அவர்கள் தம்மை மற்ற மக்களிடமிருந்து உயர்த்திக் கொள்வதற்காக இக்கொள்கையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை

இந்துமத்தின் ஆதி கோட்பாடுகள் எதிலும் மாட்டிறைச்சிக்கு எதிரான கருத்து இல்லை. மாறாக மாட்டிறைச்சியை போற்றும் கருத்துக்களே அதிகம் இடம் பெற்றுள்ளன,

பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் "இந்து ஆரியன்" என்ற 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்:
ரிஷிகள் விருந்தில் பசு மாமிசம்

வஸிஷ்ட ரிஷியானவர் விஸ்வாமித்திரர், ஜனகர், சத்தியானந்தர், ஜமதக்கினி முதலிய ரிஷிகள், சிநேகிதர் ஆகியவர்களுக்கு விருந்தளித்தார். அவ்விருந்திற்காக ஓர் கொழுத்த பெண் பசுக்கன்றை அறுத்தார். ஜமதக்கினிக்கு விருந்துக்குச் சொல்ல போயிருந்த வசிஷ்ட ரிஷி சாப்பாட்டின் இன்பத்தையும் அதன் திவ்ய வாசனைகளையும் கூறுகையில் அவர் கூறியதாவது:

பசுக்கன்று அறுப்பேன், நெய் சாதம் சமைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் படித்த கல்விமான்; நானும் ஓர் படித்தவன்; ஆதலின் நீங்கள் என் விருந்துக்கு வந்து நாங்கள் சமைத்து வைத்திருக்கும் பசு மாமிசம், நெய் சாதம் இவைகளைச் சாப்பிட்டு எங்களுக்கு ஆசி கூறும்படியாக வேண்டுகிறேன்.

கோல்புரூக் என்ற ஒருவர் ஹிந்து மதக் கோட்பாடுகளை மட்டும் ஓர் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்புத்தகத்தில் கூறுவதாவது:

பூர்வீக காலத்திலிருந்த ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு யாராவதொரு விருந்தாளி வந்தால் அவருக்காக ஓர் பசுவை அறுப்பது பொதுவான வழக்கமாக இருந்தது. ஆதலின் அவருக்குப் பசுவை அறுப்பவர் என்று கூறப்படுகிறது.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது.
(மனு 235)
    
பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3) அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவுதான்  முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே என ஆய்வுகள் கூறுகின்றன்.

உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது
அமெரிக்கா, பிரேசில், சீனா மற்றும் ஐரோப்பியப்பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது

பனிப்பிரதேசங்களில் வாழ்கிறவர்கள் (பெரும்பாலான ஐரோப்பியர்களுக்கு – அதே உலகிலுள்ள இராணுவத்தின் பெரும்பாலும் மாமிச உணவையே உண்ணுகின்றனர், குறிப்பாக மாட்டிறைச்சியை உண்ணுகின்றனர்,

இங்கிலாந்து ராணியின் அரண்மனையின் பிரதான உணவு மாட்டிறைச்சி உணவு தான் என ஒரு தகவல் கூறுகிறது.

அதே போல் ஏழை மக்களுக்கு இலகுவாக கிடைப்பதும் மாட்டிறைச்சி தான். இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் போன்ற மக்கள் ஓரளவு நல்ல உணவு சாப்பிடுவது மாட்டிறைச்சியினால் தான்.

நம்முடை பக்கது மாநிலமான கேரளாவில் பிரதான உணவு மாட்டிறைச்சி தான் , கேரள சட்டமன்றத்தில் வழங்கப்படுகிற உணவு மாட்டிறைச்சி உணவு தான்.

நிலமை இப்படி இருக்க நம்முடைய நாட்டில் திடீரென் மாட்டிறைச்சிக்கு எதிராக திடீரெனய் கடுமையான சட்டம் போடப்பட்டுருக்கிறது.

இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் யார் தெரியுமா? அரியானாவில் செத்துப்போன  ஒரு பசுவின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்களின் தோலை உயிரோடு உரித்தவர்கள்.  

கூட்டம் கூட்டமாக மனித உயிர்ப் பலிகளை கண்டு கொள்ளாதோர் பசுவை புனிதம் என்று பேசுகின்றனர். நமது நாட்டில் புரையோடியுள்ள தீண்டாமை உணர்வின் உச்சம் இது,

நமது நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது.  இந்தியாவின் தலை சிறந்த பெருமக்களே இப்பதவியில்  பெரும்பாலும் அமர்ந்துள்ளனர்.

பாபு ராஜேந்திர பிரசாத் , சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பக்ருத்தீன் அலி அஹ்மது சங்கர் தயாள் சர்மா, ஏபிஜே அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் வகித்த அந்த பதவியின் கண்ணியம் பெரும் பாலும் பாதுகாக்கப் பட்டே வந்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி போன்றவர்களால் அந்த மரியாதைக்கு குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மெதுவாக எழுகிறது.

நமது மாண்பிற்குரிய ஜனாதிபதி பொறுப்பேற்றது முதலே அதிரடியாக பல காரியங்களையும் செய்துவருகிறார், சப்தமில்லாமல்

தூக்கு தண்டனை கைதிகள் பலர் வரிசையில் காத்திருக்க சில முஸ்லிம்களது தண்டனைகளை மட்டும் – குறிப்பாக அப்ஜல் குருவிற்கான தண்டனையை நிறைவேற்ற அனுமதி கொடுத்தார். அத்தோடு தூக்கு தண்டனைக்கான வாசல் மூடப்பட்டுவிட்டது. அப்ஜல் குரு விசயத்தில் அரசு ஒரு குற்றவாளியைப் போல இரகசியமாக செயல்பட அவர் அனுமதித்தார்.

இப்போது 19 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாட்டுக்கறி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அதை ஒட்டி மார்ச் 3 ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் சாப்பிடவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். 

இந்தச் சட்டம் இப்போது புதிதாக போடப் பட்ட சட்டமல்ல. கடந்த 1995ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பதவியில் இருந்த சிவசேனாபா.ஜ கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டம் இது.

ந்தச் சட்டமும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் சட்டமாகும். இதுவரை வந்த எந்த ஜனாதிபதியும் இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத நிலையில்  மகாராஷ்டிரா மிருக பராமரிப்பு மசோதாவுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து இச்சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. 

இதற்கு பின்னணியில் மத்தியில் ஆட்சியில் அமைந்திருக்கிற பாரதீய ஜனதா அரசின் தூண்டுதல் இருக்கிறது என்பதை மறு[ப்பதற்கில்லை. ஆனால் அடிப்படை மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய – மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று என்ற வகையில் இச்சட்டம் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிககாட்டி உத்தரவில் கையெழுத்திடாமல் இருக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு, அவரை யாரும் நிர்பதப்படுத்த முடியாது.

ஆனால் இந்திய ஜாதிய அமைப்பில் மிக உயர்ந்த தரமுடையதாக கருதப்படுகிற மேற்குவங்க பிரமாணரான முகர்ஜி நாட்டு மக்களின் அடிப்படையான உணர்வை கருத்தில் கொள்ளாமல் ஒரு குழுவின் அதிகார ஆட்டத்திற்கு உடன்பட்டு விட்டார் என்றே நோக்கர்கள் கருதுகிறார்கள். உயர் ஜாதியத்தின் ஆழமான வேர் ஜனாதிபதி மாளிகை வரை ஊடுறுவி நிற்பதை இந்த அனுமதி அப்பட்டமாக உணர்த்துகிறது.

இதை உணர்வதற்கு மாட்டிறைச்சி என்பதற்கு இணைய கலைக் களஞ்சியமான விக்கிபீடியா மாட்டிறைச்சி என்பதற்கு தருகிற விளக்கம் போதுமானது

“ உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது
அமெரிக்கா, பிரேசில், சீனா மற்றும் ஐரோப்பியப்பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது

இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், இச்சமயத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு”

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினரின் தனி சதவீதத்தை விட அதிக அளவில் உள்ளனர். 

தாழ்த்தப் பட்ட மக்கள் மட்டுமல்லாது சுமார் 20 சதவீத மக்கள் தொகை கொண்ட சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அதே போல கிறுத்துவர்களும் மாட்டிறைச்சி உண்பவர்களாவார்கள்.

இவர்கள் அத்தனை பேரின் அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில் அப்பட்டமாக ஒரு “தீண்டாமை” சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இந்த சட்டத்திற்கு அனுமதிக்கான கோப்பை இபோது மத்திய அரசு நகர்த்தியதற்கு ஆழமான ஒரு பின்னணி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அமெரிக்க ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைத்து வருவதன் மூலம் ஆர்ப்பாட்டமான ஒரு செல்வாக்கை பெற நினைத்தது.

அமெரிக்க ஜனாதிபதி வந்தார். திரும்பிச் செல்லும் போது நிகழ்த்திய உரையில்


இந்தியா முன்னேற மத ரீதியாக பிளவுபடாமல் இருப்பது அவசியம் என்ற அவசியான அறிவுரையை சொல்லி விட்டுப் போனார்.

மக்களை பிரித்து இலாபம் பார்க்க முய்றசி செய்யும் கட்சியின் கன்னத்தில் விழுந்த அறை அது.

அத்தோடு நிற்க வில்லை அவர். தொடர்ந்து அமெரிக்கா சென்ற பிறகு அங்கு நடைபெற்ற தேசிய காலை உணவு பிரார்த்தனை கூட்டத்தில்
Gandhi Would Be Shocked by Religious Intolerance in India
இந்த இரண்டு வாசகங்களும் மத்தியை ஆளும் அரசாங்கத்தின் மரியாதையை பெருமளவில் பதம் பார்த்திருந்தது.

எல்லா வற்றுக்கும் மேலாக தில்லி சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி அத்தனை அலட்டல்களும் காற்றுப் பிடுங்கப்பட்ட பலூனாக மாறியிருந்தன,

காஷமீர் மாநிலத்தில் ஆட்சிப் பெறுப்பேற்றிருந்த முப்தி சயீத தன் மனதில் பட்ட உண்மைகளை அப்பட்டமாக பேசி யிருந்தார். அவரது ஆட்சியில் பங்கேற்றுள்ள சக்தி தனது தொடை தட்டி குணத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வந்தது.

இந்த சூழ்நிலையில் பாரதீய ஜனதா அரசின் பலவீனங்களை ஈடுகட்டும் என்று நினைத்துத்தான் திடீரென் ஒரு ஆபத்தான சட்டத்தை நாட்டிற்குள் உலாவிட்டிருக்கிறது பாரதீய ஜனதா அரசு.

பல் வேறு பட்ட சந்தர்ப்பங்களில் மக்களைப் பிரிக்கிற பல் வேறு கோஷங்களை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் வெற்றி கண்டவர்கள் இப்போது இந்த மாட்டிறைச்சி ஆயுதத்தை எடுத்துள்ளனர்.

இது திட்டமிட்ட ஒரு அரசியல் தந்திரமாகும். பல குயுக்தியான நோக்கங்கள் இதில் மத்திய அரசுக்கு இருக்கின்றது.

·         தற்போதைய சங்கடங்களில் இருந்து தப்பித்தல்
·         தொடர்ந்து தனது இந்துத்துவ போக்கினை செயல்படுத்த ஆழம் பார்க்த்தல் .
·         முஸ்லிம்கள் இதை எதிர்ப்பாளர்கள். அப்போது பசுவின் புனிதக் கருத்தியலை பேசச் செய்து மக்களிடையே முஸ்லிம் விரோத உணர்வை தூண்டிவிடச் செய்யுதல்

நாட்டை ஆளும் ஒரு பொறுப்புள்ள அரசு, ஒரு கற்பிதமான  சிறு காரணத்தைச் சொல்லி மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதும், அவர்களிடையே பிளவை உண்டு பண்ண முயற்சி செய்வதும் கீழ்த்தரமான அரசிய்ல நடவடிக்கைகளாகும்.

மக்களின் ஆரோக்கியத்திற்குரியதல்ல என்று சொல்லி இப்படி ஒரு மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கும் என்றால் அது கூட ஏற்றுக் கொள்ளக் கூடியது, ஒரு சிறு பிரிவினர் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள் என்று சொல்லி இப்படி இரு சட்டத்திற்கு அனுமதியளித்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தின் கோட்பாட்டை மற்றவர்கள் மீது திணிப்பது அப்பட்டமான அத்துமீறலாகும்.

உலகின் மன்னராட்சி நடைபெறுகிற நாடுகளில் கூட இத்தகைய கொடுமை இல்லை

துபாய் இந்தியா போன்ற ஜனநாயக நாடல்ல, மன்னராட்சி நடக்கும் நாடு.

மதச்சாற்புடைய ஒரு இஸ்லாமிய நாடு

இஸ்லாமியர்கள் பன்றிக் கறியை 'ஹராம்' என சொல்லி விலக்கிவிடுவார்கள்.பெரும்பாலும் பன்றிக் கறியை கண்ணால் பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அத்தகைய கட்டுப்பாடுகள் உடைய ஒரு இஸ்லாமிய நாடான UAEல் பெரும்பாலான 'ஹைப்பர் மார்க்கெட்டுகளில்' பன்றி இறைச்சி தாராளமாக கிடைக்கும். 'For Non Muslims' என பெரிதாக அறிவிப்பு பலகை வைத்துவிடுவார்கள்.

ஒரு மதச்சாற்புள்ள நாட்டில் அவர்கள் மார்க்கத்திற்கு எதிரான ஒரு இறைச்சி விற்பனையாகிறது.
பன்றி இறைச்சியை விருப்ப உணவாக சாப்பிடுபவர்களை இங்கு யாரும் தடுப்பது கிடையாது.

சமயச் சுதந்திரம் இந்தியாவில் தாராளம் என்று பேசுவோரும், இஸ்லாமிய நாடுகளை குறை கூறுவோரும் இதைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்ளும் நம்முடைய நாட்டின் ஒரு மாநிலத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிப்பது என்பது  அது அப்பட்டமான தனி மனித உரிமை மீறலாகும்.  

இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது.
முதலில் இதை ஒரு அரசியல் ஸ்டண்ட நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்.
மாட்டுக்கறி – மற்றும் மாட்டுத் தோல் ஏற்றுமதியில் முஸ்லிம்களே அதிகம் இருக்கிறார்கள் இதை தடுத்து விட்டால் அவர்களது பொருளாதாரததை தடுத்துவிடலாம் என்ற கணக்கும் இதில் இருக்கிறது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக மாட்டிறைச்சி வியாபாரத்தை முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்தி வளர்ப்பதை பாரதீய ஜனதா கட்சியினர் செய்துவருவதை கவனிக்க வேண்டும்

2014 செப்டெம்பரில் ல் வெளியான பத்ரிகைகளில்  அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி பேசியது பதிவாகியுள்ளது.   
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் இறைச்சி வர்த்தகத்தினால் தீவிரவாதிகள்தான் பயனடைவதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு பயனளிக்கும் இந்த சட்டவிரோத செயல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'இந்தியா ஃபார் அனிமல்ஸ்' (India for Animals) என்கிற மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்

ஆனால் உண்மையில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் மிகக் குறைந்த அளவில் சாமானிய இலாபம் பார்க்கிறவர்கள் தான் முஸ்லிம்கள். அதிக அளவில் இலாபம் பார்க்கும் கம்பெனிகள் அனைத்தும் பிறமத்தவர்களுடையதே!

இந்தியாவில் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் &கம்பெணி முதலாளிகள்
1) Al-Kabeer Exports Pvt. Ltd.
உரிமையாளர் : Mr. Shatish &Mr. Atul Sabharwal, 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) Arabian Exports Pvt.Ltd.,
உரிமையாளர்: Mr.Sunil Kapoor, Russian Mansions, Overseas, Mumbai 400001
3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
உரிமையாளர்: Mr. Madan Abott. MG road, Janpath, New Delhi 110001
4) P.M.L Industries Pvt. Ltd.
உரிமையாளர் Mr. A.S Bindra, S.C.O 62-63 Sector -34-A, Chandigarh.160022

இந்த உண்மை அரசிற்கு தெரியாமல் இருக்கிறது, அப்படி இருந்தும் இப்படி பேசுகிறார்கள் என்றால் உண்மையில் இந்தச் சட்டம் பசுக்களை பாதுகாப்பதை விட முஸ்லிம்களை குறிவைத்தே போடப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் குறிப்பாக நாட்டில் இன்று நிலவும் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திருப்புவதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியை சட்டமாக்கியுள்ளனர்.

முஸ்லிம்கள் இதை பொறுமையாகவும் நிதானமாகவும் அணுகவேண்டும்.
உண்மையில் இந்தச் சட்டம் இந்திய முஸ்லிம்களை பாதிப்பதை விட இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களையே அதிகம் பாதிக்கும் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற ஜாதிய தீண்டாமைக்கு வித்திடுகிறது என்ற வகையில் நமது மூழு எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும், ‘

இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அக்கறையுள்ள குடிமகன் என்ற அடிப்படையில் மஹாரஷ்டிரா அரசின் இச்சட்டத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய ஒரு சட்ட நகலில் ஜனாதிபதி கையெழுத்திட்டதில் நமது வருத்ததை தெரிவிக்கிறோம்.

மாநில அரசு இச்ச்ட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஜனாதிபதி அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும். என்று கோருகிறோம்.  

மேன்மைமிகு ஜனாதிபதியின் முடிவு நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாப்பின் மீது கருப்பு நிழலாக விழுந்துள்ளதை நாம் மேன்மை தாங்கிய குடியரசுத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் சிறந்த சீர் திருத்ததிற்கு துணை செய்வானாக!
இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான் சிந்தனைகளை முறியடிப்பானாக! அவற்றை மன உறுதியோடும் புத்திசாலித்தனத்தோடும் எதிர் கொள்ளும் தவ்பீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!


3 comments:

 1. அற்புதமான விசயங்கள் கொடுத்துள்ளீர்கள் இதை புதன் கிழமையன்று வெளியிட்டால் ப்ரிபேர் பண்ணுவதற்கு இலகுவாக இருக்கும்.

  ReplyDelete
 2. بارك الله ماشاء الله

  ReplyDelete
 3. m.hadhees maslahi.6:07 AM

  ஏராளமான ஆக்கப்பூர்வமான செய்திகளை தந்துள்ளீர்ள் ஹழரத்,ஒரு வாரத்தில் பேசி முடித்துவிடக்கூடிய விஷயமல்ல இது.
  முஸ்லிம்களிடமே புலால் சாப்பிடுதல் குறைந்து...இந்த சட்டத்தை வலுவில்லாமல் எதிர்க்கும் காலமிது..
  ஆலிம்கள் இதுபோன்ற குறிப்புகளை அவசியம் பாதுகாக்க வேண்டும்.
  வரும்காலங்களில் இப்பிரச்னை நாடு முழுதும் இன்னும் தீவிரமடையும் போது நம் வெள்ளிமுழக்கங்களுக்கு இவை பெரிதும்உதவும்.
  Jazakallah halrath ..

  ReplyDelete