வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 12, 2015

பெற்றோர் எனும் பேர் உறவு

இன்றைய வாழ்வியலில் பெற்றோருக்கான இடம் என்ன என்பதை தீர்மாணிப்பதில் நாகரீக உலகம் ஒரு பெரும் பின்னடைவில் இருக்கிறது.

பெற்றோரின் உழைப்புஆரோக்கியம்செல்வம்அனைத்தையும் சுரண்டிக் கொண்ட பிள்ளைகள் அவர்களுக்காக செலவு செய்ய, நேரம் ஒதுக்க கணக்குப் பார்க்கிறார்கள்.

பெற்றோரை புறக்கணிப்பது ஒரு பக்கம் சகஜமாக நடக்கிறது
இன்னொரு சாரார் உங்களுக்கான எங்களது கவனமும் மரியாதையும் இவ்வளவு தான் இதற்குள்ளாக நீங்கள் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லாமல் சொல்கின்றனர்.

ஆனந்த விகடன் இணைய தளத்தில் சமீபத்தில் படித்த ஒரு செய்தி அதிர்ச்சியளித்தது.

போரூருக்கு பக்கத்தில் ஒரு வீட்டில் வசிக்கும் இளைஞன் தன் மனைவிக்கும் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டையை தவிர்க்க முடியாமல் தவித்து ஒரு கட்டத்தில் அம்மாவை சில நாட்கள் முதியோர் இல்லத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்கிறான். அடுத்த நாள் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவனது அம்ம உடலெல்லாம் காயமாக வீட்டுக்கு ஓடி வந்தாள். அவளை மருத்துவ மனையில் அவசர பிரிவில் சேர்க்க வேண்டி வந்தது. காரணம் என்னவெனில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட சில மனிநேரத்தில் அந்த அம்மா என் மகனை வரச் சொல்லுங்கள் நான் என் மருமகளோடு சமரசமாகிப் போய்விடுகிறேன் என சொல்லியிருக்கிறார். எங்கே பாட்டி மகனோடு திரும்பி போய்விட்டால் அட்வான்ஸ் தொகை திருப்பி கொடுக்க வேண்டியது வருமோ என்ற பயத்தில் அந்த மூதாட்டியை முதியோர் இல்லத்தார் அடித்திருக்கிறார்கள். அடிபட்ட உடலோடு அந்த அம்மா சுவறேரிக் குதித்து  வீட்டைத் தேடி ஓடி வந்திருக்கிறார். அதற்குள் அவரது உடலெல்லாம் காயம். மருத்துவ மனையில் பல நாள் தங்கியிருந்து அவர் சிகிட்சை பெற வேண்டியிருந்த்து.

ஒரு மகனே காசு கொடுத்து அம்மாவுக்கு அடிவாங்கிக் கொடுத்த அந்த அதிர்ச்சி தகவலை ஜீரணிக்க இன்று வரை இயலவில்லை.

இன்றைய நமது வாழ்க்கைப் போக்கில் பெற்றோர்களிடமிருந்து எல்லா வகையான வசதிகளையும் இளையவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரின் வீடு, சொத்துக்கள், அந்தஸ்து, பெற்றோர் பதவியில் இருப்பவர் என்றால் அவரது பதவியின் வசதிகள், அன்பு கருணை அனைத்திற்கும் பிள்ளைகள் அதிகாரத்தோடு எடுத்துக் கொள்கிறார்கள்.  சட்டம்  அந்தப் பிள்ளைகளின் உரிமைகளுக்கு பாதுகாப்பும் வழங்குகிறது.

சிங்கப்பூரில் தந்தையுடன் வசிக்க மாட்டேன் என வயதுக்கு வந்த ஒரு மகள் மறுத்துவிட்டாள். அவள் வெளியே தனியே வசிக்கிற காலத்தில் அவளுக்கு தேவையான செலவுக்கான பணம் கொடுக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு அவளது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது, மிரட்டவோ துனபுறுத்தவோ கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் பிள்ளைகளோ தாம் வளர்ந்து விட்ட காலத்தில் பெற்றோர்களை சுமையாக கருதுகிறார்கள்.

அவர்களுக்கு கட்டுப்படுவதை மலிவாக கருதுகிறார்கள். அவர்ககளது வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறார்கள்.

டாடி! இதெல்லாம் உங்களுக்கு தெரியாது!
இதெல்லாம் உனக்கு எதுக்கு அம்மா?
என்றெல்லாம்____பேசுகிற, இதற்கெல்லாம் மேலாகவும் பேசுகிற துணிச்சலையும் - அலட்சியத்தையும் இன்றைய உடல் ஆரோக்க்கியமும் இன்றை வசதியும் நமக்கு தந்துவிட்டது.

இன்றைய நாகரீக காலத்தில் இந்த நிராகரிப்பின் சதவீதம் அதிகரித்திருக்கிறது.

பெற்றோர்கள் பேசா மடந்தைகளாக்கப்படுகிறார்கள். அறிவுரை சொல்லவோ ஆலோசனை சொல்லவோ தகுதியற்றவர்களாகி விட்டனர்,

பெற்றோரிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பிறகு சிறகு முளைத்தவுடன் அவர்களை உதாசீனப்படுத்துகிற போக்கு மனித தன்மைக்கு முற்றிலும் எதிரானது.

இந்த நிலையில் பெற்றோருடனான உறவை பேணுவதின் அவசியத்தை இன்றைய ஜும் ஆவில் பார்க்கிறோம்.

இன்றைய நாகரீக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இஸ்லாம் மிக அழுத்தமாக போதிக்கிற இரண்டு பண்புகள்
·         பெற்றோருக்கு உபகாரியாக இரு!.
·         அவர்களை உதாசீனப்படுத்தாதே!

அல்லாஹ் தன்னைப் பற்றி சொன்னதற்கு அடுத்ததாக் பெற்றோருக்கான உரிமைகளை கூறுகிறான்

·        وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
·        قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

இணைவைத்தல கூடாது என்றதற்கு அடுத்த படியாக பெற்றோருக்கு உபகாரியாக இரு என இந்த வசனங்கள் கட்டளையிடுகின்றன.

அப்படியாயின் மனித வாழ்வின்
முதல் இலட்சியம் : இறைவனுக்கு இணை வைக்காமல் வாழவேண்டும்
இரண்டாவது இலட்சியம் : பெற்றோர்களுக்கு உபகாரியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சொல்லக் காரணம் என்ன தெரியுமா?
மனிதனை படைத்த இறைவன் ஒருவனே! அதே போல இந்த உலகில் அவனுக்கு அடையாளம் தந்த பெற்றோர்களும் ஒருவர்களே! ஒரு தாய்! ஒரு தந்தை மட்டுமே!

பெற்றோருக்கு கட்டுப்படு என்பதை தாண்டி உபகாரியாக இரு என்ற இவ்வுத்தரவின் வாசகத்தை நாம் என்றென்ன்றைக்கும் மறந்து விடக் கூடாது.

நான் பெற்ற மகன் எனக்கு நிறைய உபகாரம் செய்தான் என பெற்றோர் மெச்சும் படியான ஒரு வாழ்க்கைக்கு நாம் எல்லாம் ஆசைப்பட வேண்டும்

இந்த உலகில் அதை விட அதிக மகிழ்ச்சிக்குரிய மரியாதைக்குரிய நிலமை வேறில்லை.

நமது எந்த வெற்றியும் பெற்றோர் அனுபவிக்கவில்லை என்றால் அது நிறைவானதாக ஆகவே ஆகாது.

ஒரு இளைஞன் கார் வாங்கிக் கொண்டு வந்து துஆவிற்கு பள்ளிவாசலுக்கு முன் நிறுத்தினான், இப்போது தான் வாங்கினேன் என்றான், நேரடியாக இங்கே வருகிறீர்களா என்றேன், இல்லை, என் அம்மாவை உட்கார வைத்து ஒரு சுற்று சுற்றி விட்டு வருகிறேன், என்றான், நான் சொன்னேன் நீ பாக்கிய சாலி, பலருக்கு அவர்கள் நல்ல நிலைக்கு செல்கிற போது அதை அவனது பெற்றோர் அனுபவிக்கிற சுகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உனக்கு தனியே துஆ செய்யத் தேவையில்லை, உன் அம்மாவிற்கு நீ கொடுத்த மரியாதையே போதும் என்றேன்.

அல் இஸ்ரா அத்தியாயத்தின் 23 வது 24 வது வசனங்கள் பெற்றோரிடம் நடந்து கொள்ள் வேண்டிய 6 நடைமுறைகளை பட்டியலிடுகின்றன.
பள்ளிக் கூடங்கள். அலுவலகங்கள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் என பலரும் தமது துறைகளுக்கேற்ற உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் பெற்றோர் விசயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளை இவ்விரு வசனங்கள் குறிப்பிடுகின்றன,


وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا(23)وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنْ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا(24)رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا



முதல் கடமை பெற்றோருக்கு உபகாரியாக இருக்க வேண்டும்.

உபகாரி என்ற வார்த்தையே ஆழமான புரிந்துணர்வையும் அழுத்தமான கட்டுப்பாட்டையும் சுட்டிக்காட்டுகிற வார்த்தையாகும்.

அல்லாஹ்விடம் இஹ்ஸானாக நடந்து கொள்வது எப்படி என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியுள்ளார்கள்.
أن تعبد ربك كأنك تراه ، وإن لم تكن تراه فإنه يراك
எந்த ஒரு மகனும் மகளும் தனது பெற்றோரின் உணர்வை புரிந்து கொண்டு, அவர்களது எண்ணத்திற்கேற்ற படி நடக்க வேண்டும். அவர்களது முன்னிலையிலும் அவர்களை விட்டு தூரத்த்தில் இருக்கிற போதும்,

அவ்வாறு நடப்பவர்கள் வாழ்வில் பெரும் அந்தஸ்தை அடைவார்கள் என்பதற்கு வரலாறு ஏராளமான சான்றுகளை சுமந்திருக்கிறது,

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிபொய் பேசக் கூடாது என்ற தாயின் உத்தரவை கடைபிடித்தார்.
மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி

மேற்படிப்புக்காக வெளி நாட்டுக்குச்   சென்றார்.    எனினும் மேல்நாட்டுக்குச் சென்றால் தன் மகன் கெட்டுப் போய்விடுவான் எனத் தாயார் புத்லிபாய் அஞ்சினார். எனவே ஜைன முனிவர் ஒருவரின் ஆலோசனைப்படி 'மேல்நாட்டில் நான் மது மாது மாமிசம் தொடமாட்டேன்'; என்று தாயாரிடம் சத்தியம் செய்து கொடுத்தார். இதனை உரியபடி நிறைவேற்றினார்

இருவரும் வெகு தூரத்தில் இருந்த போதும் பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பளித்தவர்களே

இன்றைய பிள்ளைகள், பெற்றோர் தம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகம் எதிர்பார்க்கிறார்கள்

இன்றைய ஊடகங்களும் அதற்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.

இது ஒரு மனிதாபிமானமற்ற ஏமாற்று நாகரீகமாகும். வாழ்க்கையின் அடிப்படையான மதிப்பீடுகளை மன்னுக்குள் புதைக்கும் திட்டமாகும்.

பெற்றோர் தம் பிள்ளைகளின் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்பது எந்த அளவு முக்கியமோ அதற்கு ஒரு படி மேலாக பெற்றோரின் உணர்வுகளுக்கு பிள்ளைகள் மதிப்பளிக்க வேண்டும்.

நீயும் உன் சொத்துக்களும் உன் தந்தைக்குரியவை என பெருமானார் சொன்னார்கள்

فعن جابر رضي الله عنه أن رجلاً قال: يا رسول الله إن لي مالاً وولداً ، وإن أبي يريد أن يجتاح مالي، فقال: "أنت ومالك لأبيك".   

عن عمرو بن شعيب عن أبيه عن جده أن أعرابيا أتى للنبي صلى الله عليه وسلم فقال : إن أبي يريد أن يجتاح مالي، فقال : " أنت ومالك لوالدك، إن أطيب ما أكلتم من كسبكم، وإنّ أولادكم من كسبكم فكلوه هنيئاً 

நம்மில் பலர் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வாழும் நிலையை கடந்து விட்டோம் எனறு நினைக்கிறோம். அப்படி இல்லை. பெற்றோர் இல்லாவிட்டாலும் கூட அவர்களது மனோவிருப்பமும் இலட்சியமும் நமக்குத் தெரியத்தான் செய்யும். அதையே கடைபிடிப்பதே அவர்களுக்கு செய்கிற இஹ்ஸானாகும்.  

இந்த வசனத்தின் இரண்டாவது அறிவுரை இது.

إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ


உன் பெற்றோரைச் சீ என்று சொல்லாதே என்று சொல்வதற்கு பதிலாக வயதாகும்  நிலை வரை உனக்கு அவர்கள் கிடைத்தால் என்கிறான்.

இவ்வசனத்தின் முதல் பொருள்,வயதானபெற்றோர் உடனிருக்க கிடைப்பதை ஒரு அரும்பெரும் பாக்கியமாக பிள்ளைகள் கருத வேண்டும் என்பதாகும் .

நம்மில் பெரும்பாலோர் பெற்றோர் உயிருடன் இருக்கிற போது அந்த அருமையை புரிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறோம். அந்த விபரீதம் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் இப்படி உஷார்படுததியளளான்.


யாரையும்தான் சீ என்று ஏளனமாக சொல்லக் கூடாது, அப்படியிருக்க பெறறோரைப் பார்த்து சீ சொல்லக் கூடாது என்றால் அதன் பொருள்.

ஒரு வேலையை ஒருவர் பல தடவை சொன்னால் அந்த வேலையை செய்து விட்டால் கூட சே.. இவருக்கு வேறு வேலை இல்லை என்று சளித்துக் கொள்வோம்.

எந்த நிலையிலும் பெற்றோர்களை சலித்துக் கொள்ளக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.

அல்லாஹ் அடுத்துச் சொல்கிறான்.

وَلَا تَنْهَرْهُمَا

அவர்களை வெருட்சியடையச் செய்யக் கூடாது.

இன்று நாம் பெற்றோர்களை மிரட்டுகிறோம் அந்த மிரட்டலில் உருட்டலில் அவர்களை அடங்கிக் கிடக்கச் செய்கிறோம். அவர்களைது வாயை மூடச் சொல்கிறோம். உன் வேலையைப் பார்த்துட்டு போ! என்றெல்லாம் எச்சரிக்கிறோம்.

நம் மீது அன்பு வைத்திருக்கீற காரணத்தால் அவர்கள் அடங்கிப் போகிறார்கள்.

நம்மை நேசிக்கிறவர்களை நாம் ஒடுக்குவது எவ்வளவு மனிதாபிமானமற்ற செயல், சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த வகையிலும் அவர்களை வெருட்டக் கூடாது என இறைவன் செய்திருக்கிற எச்சரிக்கையை நாம் மறந்து விடக் கூடாது

அடுத்து அல்லாஹ் சொல்கிறான்.
وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

பெற்றோர்களிடம் மரியாதைகவே பேச வேண்டும்.

இதை தனியாக சொல்ல வேண்டியதில்லை, ஆயினும் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளான்,

பெற்றோர் நம்மீது காட்டுகிற அளவற்ற அன்பினால் அவர்களை நாம் சாதரணமாக கருதி விடுகிற வாய்ப்புண்டு, அதனால் ஊர்க்காரர்கள் எல்லோரிடமும் மரியாதையாக பேசுகிறவர்கள் கூட பெற்றோர்களிடம் சாதாரணமாக பேசுவதுண்டு, இதை அன்பின் நியாயம் என பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், அது சரியல்ல என்கிறது இவ்வசனம் பெற்றோர்களை அழைப்பதிலிருந்து அனைத்து வார்த்தை பரிமாற்றங்களிலும் மரியாதை மிளிர வேண்டும்.

அவர்களிடம் தகவல்களை மறைக்க கூடாது.
அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்
அவர்களது விருப்பத்தை அறிய முய்றசிக்க வேண்டும்.

ஓரு மரியாதையான மனிதரிடம் எப்படி நடந்து கொள்வோமோ அப்படி பெற்றோர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல் தலைவியை அம்மா என்று அழைக்கிறவர்க அவரிடம் எப்படி பயத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்கிறார்கள், பாருங்கள்!

திருக்குர் ஆன் அடுத்து கூறுகிறது
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنْ الرَّحْمَةِ

இரக்கத்தினால் பணிவின் இறகை அவர்களை நோக்கி தாழ்த்து!

பெற்றோர்களிடம் அடங்கிப் போய்விட வேண்டும், அவர்களிடம் நமது செல்வாக்கையும் பலத்தையும் காட்டக் கூடாது.

பெற்றோர்கள் எவ்வளவுதான் பலசாலியாக - செல்வாக்கானவர்களாக இருந்தாலும் தங்களது பிள்ளைகளிடம் அவர்கள் அந்த பதவிசைக் காட்ட மாட்டார்கள்.

குழந்தை ஒரு குறும்பு செய்து விட்டால் தந்தை தனது பலத்தை பிரயோகித்து அடித்துவிட மாட்டார்,

அரசராகவே இருந்தாலும் தம் குழந்தையை முதுகின் மேல் வைத்து யானைச் சவாரி செய்யாமல் இருக்க மாட்டார்.

தன்னை மகிழ்விப்பதில் தீராத ஆவல் கொண்டு வாழ்ந்த பெற்றோர்களின் இயல்பை அவர்களது முதுமைப்பருவத்தில்  பிள்ளைகள் நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றொர் அன்பினால் அடங்கிப் போனார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர் மீது கருணையினால் அடங்கிப் போக வேண்டும்.

அன்பிலே கூட சில நேரம் முரட்டுத்தனம் இருக்கும். கருணையில் முரட்டுத்தனம் இருக்காது.

திருக்குர் ஆன் அடுத்து கூறுகிறது

وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அந்த பிரார்த்தனையில் அவர்கள் தன்னுடைய சிறு வயதில் காட்டிய அன்பையும் கருணையையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ மிகப் பிரபலம்.
ஒரு தோட்டத்தில் அப்பாவும் மகனும் உட்கார்திருப்பார்கள். பையன் பேப்ப்ரர் படித்துக் கொண்டிருப்பான். தந்தையின் பார்வை மங்கிய நிலையில் குருவிச் சதத்தம் கேட்கும். இது என்ன என்று அவர் கேட்பார். பேப்பர் படித்துக் கொண்டே அவன் குருவி என்பான். அதே குருவி வேறு ஒரு பக்கம் சென்று சப்தமிடும், இது என்ன என்பார் அப்பா? மீண்டும் குருவி என்பான் மகன் சற்று சளித்துக் கொண்டு. இவ்வாறே மற்றுமொரு முறைக் கேட்பார். பையன் பேப்பரை வீசிக் கொண்டு சப்தம் போடுவான், உனக்கென்ன ஆச்சு? அது தான் கு ரு,,, வி,,, என்கிறேனே காதில் விழவில்லையா என எழுந்து நின்று பொரிந்து தள்ளுவான், தந்தை வேகமாக எழுந்து வீட்டிற்குள் சென்று ஒரு டைரியை எடுத்து வந்து ஒரு தாளை சப்தமிட்டு படிக்கச் சொல்லுவார், மகன் படிப்பான்.
இன்று நான் என் மகனுடனும் ம்களுடனும் தோட்டத்தில் சந்தோஷமாக இருந்தேன், என் மகன் ஒரு குருவை காட்டி இது என்ன என 21 முறை கேட்டான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு நான் பதில் சொன்னேன். அவன் திரும்ப திரும்ப கேட்கிற ஒவ்வொரு முறையும் அவனை நான் கட்டிக் கொண்டேன். கோபிக்கவில்லை. என்று டைரியில் எழுதி யிருக்கும், அதை படித்த பிறகு தந்தையை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவான்,

நமது சிறு வயதில் பெற்றோர் நம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள்,
நமது தொல்லைகளை எப்படி சகித்துக் கொண்டார்கள்,
நமக்காக எவ்வளவு அர்ப்பணித்தார்கள்?
நமது தேவைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்  
என்பதை ஒவ்வொரு கனத்திலும் பிள்ளைகள் என்னிப்பார்க்க வேண்டும் என்பதற்காக இறைவன் அவர்களுக்கான பிரார்த்தனையிலே அவர்களது சேவையை நினைவு கூறச் செய்துள்ளான்,

திருக்குர் ஆனின் இன்னொரு வசனம் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பட்ட கஷ்டங்களை நினைவு படுத்தி விட்டு எனக்கும் நன்றி செலுத்து உன் பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنْ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ(14)

பெற்றோர்களின் மரியாதையை பேணுவதில் அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்துதில்  நபிகள் நாயகம்  அதிக முக்கியத்துவத்தை செலுத்தினார்கள்.

முஸ்லிம் உம்மத் பெற்றோர்கள் விசயத்தில் ஓரளவு அக்கறை காட்டும் சமுதாயமாக இன்றும் இருப்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த அழுத்தமே காரணமாகும்.

இன்றும் முதியோர் இல்லங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் குறைவாகவே இருக்கிறது, பெற்றோர்களை கைவிடும் போக்கும் குறைவே ! அதற்கு காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயத்தின் மனப்பான்மையாகும் இவ்வாறு உருவாக்கியதாகும்,

அல்லாஹ்வின் அறிவுரைகளையும் பெருமானாரின் வார்த்தைளையும் கவனிக்கிற எந்த முஸ்லிமும் பெற்றோரை அலட்சியப்படுத்த முடியாது,

உனது நிலையான நன்மையின் முதல் படி பெற்றோர்களை மதித்தலேஅல்லாஹ்வுகு மிகப்பிரியமான செய்லும் அதுவே

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَقْرَبُ إِلَى الْجَنَّةِ قَالَ الصَّلَاةُ عَلَى مَوَاقِيتِهَا قُلْتُ وَمَاذَا يَا نَبِيَّ اللَّهِ قَالَ بِرُّ الْوَالِدَيْنِ قُلْتُ وَمَاذَا يَا نَبِيَّ اللَّهِ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ  مسلم
முதுமையான பெற்றோர் சொர்க்கம் செல்லும் வாயில்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلْ الْجَنَّةَ مسلم


ஜிஹாதை விட பெற்றோரை தேர்ந்தெடுக்க பெருமானார் பல முறை அறிவுறுத்தினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُجَاهِدُ قَالَ لَكَ أَبَوَانِ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ أَقْبَلَ رَجُلٌ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا مسلم 4624

عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا
இதை மீறி எப்படி ஒரு முஸ்லிம் ஜிஹாதில் ஈடுபட முடியும்?. அப்படி செய்தால் பெருமானரின் உத்தரவை மீறி விடுவாரே ! பிறகு அது எப்படி ஜிஹாதாக முடியும்.

என்ன அற்புதமான சமூக் கட்டமைப்பு பாருங்கள்! முஸ்லிம் சமீகத்தில் பெற்றோரை நிராகரித்து விட்டு எவரும் சேவையாளராக ஆக முடியாது,


பெற்றோரிடம் காட்டும் கரிசனம் இறையச்சத்திற்கு நிகரான அமலாக ஆகி அதை கொண்டு வாழ்வின் ஒரு முக்கிய கட்டத்தில் உதவும்.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ بَيْنَمَا ثَلَاثَةُ نَفَرٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمْ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنْ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالًا عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ تَعَالَى بِهَا لَعَلَّ اللَّهَ يَفْرُجُهَا عَنْكُمْ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَامْرَأَتِي وَلِي صِبْيَةٌ صِغَارٌ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا أَرَحْتُ عَلَيْهِمْ حَلَبْتُ فَبَدَأْتُ بِوَالِدَيَّ فَسَقَيْتُهُمَا قَبْلَ بَنِيَّ وَأَنَّهُ نَأَى بِي ذَاتَ يَوْمٍ الشَّجَرُ فَلَمْ آتِ حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلَابِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ فَفَرَجَ اللَّهُ مِنْهَا فُرْجَةً فَرَأَوْا مِنْهَا السَّمَاءَ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ فَتَعِبْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَجِئْتُهَا بِهَا فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلَا تَفْتَحْ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ عَنْهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً فَفَرَجَ لَهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي فَعَرَضْتُ عَلَيْهِ فَرَقَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلَا تَظْلِمْنِي حَقِّي قُلْتُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا فَقَالَ اتَّقِ اللَّهَ وَلَا تَسْتَهْزِئْ بِي فَقُلْتُ إِنِّي لَا أَسْتَهْزِئُ بِكَ خُذْ ذَلِكَ الْبَقَرَ وَرِعَاءَهَا فَأَخَذَهُ فَذَهَبَ بِهِ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مَا بَقِيَ فَفَرَجَ اللَّهُ مَا بَقِيَ مسلم
உதவிக்கான  இந்த தொடர்பு இறைவன் போட்ட முடிச்சாகும். அறிவியல் மூளையால் இந்த தொடர்பின் இழையை புரிந்து கொள்ள முடியாது

வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கும் தீர்வு பெற்றோரை மதிப்பதில் நேசிப்பதில் உபகாரியாக இருப்பதில் கிடைக்கும்.

அதே நேரத்தில் பெற்றோர்களை மதிக்கத் தவறினால் – துன்புறுத்தினால்- மனக் கஷ்டத்திற்கு உள்ளாக்கினால் எதிர்பாராத சிக்கல்கள் வரும். நன்மைகள் கிடைக்காமல் போகும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْبَرُ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَوْلُ الزُّورِ أَوْ قَالَ وَشَهَادَةُ الزُّورِ – البخاري

பல நல்ல விசயங்கள் குறித்தும் பேசுகிற போது இந்த நன்மை பெற்றோரை துன்புறுத்தியவனுக்கு கிடையாது என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ الْجُهَنِيِّ قَالَ : " جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ شَهِدْتُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّكَ رَسُولُ اللهِ وَصَلَّيْتُ الْخَمْسَ وَأَدَّيْتُ زَكَاةَ مَالِي وَصُمْتُ شَهْرَ رَمَضَانَ ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : ( مَنْ مَاتَ عَلَى هَذَا كَانَ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا - وَنَصَبَ إِصْبَعَيْهِ - مَا لَمْ يَعُقَّ وَالِدَيْهِ ) . أحمد (24299)

பராத் இரவு லைலத்துல் கத்ர் இரவின் நன்மைகளை குறீத்து பேசுகிற போது எல்லோருக்கும் கிடைக்கிற அந்த நன்மைகள் பெற்றோரை துன்புறுத்துகிறவனுக்கு கிடைக்காது என்றார்கள்

عائشة –
 اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان  ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك--  ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل--  ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر- البيهقي


வயதான பெற்றோர் இருந்தும் அவர்களை  சரியாக பராமரிக்காத பிள்ளைகளை பெருமானார் சபித்தார்கள்
ملعون من عق والديه – الطبراني

பெற்றோரை இழித்தும் கடுமையாகவும் பேசுகிறவர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கை
அவாம் பின் ஹவ்ஷப் அறிவிக்கிறார்
நான் ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன், அங்கே அஸர் தொழுகைக்குப்பிறகு அங்கிருக்கிற கபரஸ்தானில் ஒரு கப்ரு பிளந்து ஓரு மனிதன் வெளியே வருகிறான், அவனது உடல் மனித உடலாக இருக்கிறது, தலை கழுதையின் தலையாக இருந்தது. மூன்று முறை கழுதையை போல் கத்திவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான், கப்று மூடிக் கொண்டது. ஒரு பெண் அந்த இடத்தை கடந்து சென்றாள், எல்லோரும் இவள் தான் அந்த மனிதனின் தாய் என்றார்கள், நான் நடந்த நிலவரத்தை விசாரித்தேன். அந்த ஆள் பெரும் குடிகாரன், அவனுடைய தாய் ஒரு நாள் அஸருடைய நேரத்தில் மகனை கருணையோடு எச்சரித்தாள், அப்போது அவன் நீ ஏன் கழுதை மாதிரி கத்துகிறாய் என்றான், அஸருக்குப் பின் இறந்து போனான். அதற்குப் பிற்கு தினசரி இப்படி நடக்கிறது என்றார்கள்.
இஸ்பஹானி அறிவிக்கும் இந்த செய்தி ஸஹீஹ் தர்கீபு வத் தர்ஹீபஇல் இருக்கிறது,)

பெற்றோர்களின் நலன் பேணுதல் விவகாரத்தில் நமது அக்கறையின் ஆழமும் அகலமும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை இந்தச் செய்திகள் அறிவுறுத்துகின்றன,

இன்றைய நாகரீக உலகின் போங்கில் பெற்றோர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு நேரடியாக பணிவிடை செய்யாத் – அவர்களுக்கு ஆறுதலை தராத போக்கு மிகவும் வருத்ததிற்குரியது.

அத்தகையோர் தமது வாழ்வின் நெகிழ்ச்சியான அனுபவங்களை - வளமான எதிர்காலத்தை – இழக்கிறார்கள். மட்டுமல்ல பல துயரங்களுக்கும் அப்கீர்த்திகளுக்கும் ஆளாகிறார்கள்.

இந்த் உரையின் சாராம்சமாக 4 செய்திகளை முன்வைக்கிறோம்,

·         பெற்றோர் இருப்பதை ஒரு அருள் என உணர்வோம்.
·         அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். பிள்ளைகள் எதையும் கொடுக்க வேண்டாம். அவர்களுடன் கலந்து பேசினாலே பல பெற்றோர்களுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு விடும்.
·         நமக்கு அவர்கள் செய்ததை நினைவு கூறுவோம்.அவர்களுக்குச் செய்ய வேண்டியதை நாமே முன்னின்று செய்வோம். அவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போமெனில் நமது குடும்பம் தானாக அவர்களுக்கு மதிப்பளிக்கும். பல இடங்களிலும் தாய் தகப்பன் விவகாரத்தை மனைவியிடம் ஒப்படைப்பதே பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
·         கூடுமானவரை அவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்வோம்.


1 comment:

  1. Anonymous12:03 AM

    Abul Hasan Pod, [12.03.15 19:44]
    Jasalulla

    Abul Hasan Pod, [12.03.15 19:44]
    Jasakumulla

    சிக்கந்தர் மஸ்லஹி பாதுஷா, [13.03.15 07:58]
    👌👍

    HADEES, [13.03.15 08:33]
    Alhamdhulillah.jazakallah.

    Mohammed Azhar, [13.03.15 08:54]
    பாரக்கல்லாஹ்

    HADEES, [13.03.15 12:07]
    கண்களில் நீர் வரவழைக்கிற வார்த்தைப் பிரயோகங்களுடன்...அருமையான பதிவு இது.

    Yasir Baqiyath, [13.03.15 12:26]
    வழமைபோல் அருமையான பதிப்பு
    அல்ஹம்துலில்லாஹ்.
    பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு உள்ள கடமைகள், அதில் நடக்கும் அத்துமீறல்கள்
    என்ற கருத்தில்
    வரும் வாரத்தில் வெள்ளிமேடையில்
    பதிந்தால் நன்றாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்!

    ReplyDelete