மார்ச் 20 ம் தேதியை அதாவது இன்றைய தினத்தை உலக மகிழ்ச்சி நாளாக ஐ நா அறிவித்திருக்கிறது.
20
March. International Day of Happiness (UN)
உலகில் வாழும் தனி
மனிதனின் அடிப்படை
நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வது
அது போல நமது
பொதுவாழ்வின் தத்துவம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வேண்டும் என்பது என ஐநா
அறிக்கை கூறுகிறது.
அதனால் நாம் வாழ்வதே மகிழ்ச்சியாக
இருக்கத்தான் என்ற
தத்துவத்தை மக்களிடையே
பரப்புமாறு ஐநா
கேட்டுக் கொண்டுள்ளது.
பூட்டான் நாடு
தனது
நாட்டின் தேசிய
வளர்ச்சியை விட தேசிய மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
எங்களுககு வருவாயை விட மகிழ்ச்சி தான் முக்கியம்
என்று பூட்டான் மக்கள் சொல்கிறார்கள். உலகின் மற்ற நாடுகள் எல்லாம் தேசிய உற்பத்தி சதவீதததை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிற போது பூட்டான் 1970 லிருந்து தேசிய மகிழ்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பது பிரபலமான ஒரு செய்தியாகும்.
Bhutan, a country which recognized the supremacy
of national happiness over national income since the early 1970s and famously
adopted the goal of Gross National Happiness over Gross National Product.
பூட்டான் நாட்டின் இந்த அக்கறைதான் ஐநா இப்படி ஒரு தீர்மாணததை நிறைவேற்ற காரணமாகும்.
ஒரு குட்டி நாட்டின் தீர்மாணம் வாழ்க்கையின் ஒரு அடிப்படை நோக்கம் பற்றி சிந்திக்கவும் அதற்காக பாடுபடவும் ஐ நாவை தூண்டியிருக்கிறது.
இதில் ஒரு அற்புதமான பாடம் இருக்கிறது.
நீங்கள் ஒரு சத்திய கோட்பாட்டில் உறுதியாக இருப்பீர்களானால் – ஒரு கட்டத்தில் நீங்கள் தனியாக இருப்பதை போல உணர்ந்தாலும், இன்னொரு சந்தர்ப்பத்தில் உலகம் உங்களது பின்னால் வரும்.
பொருளாதார வளர்ச்சி , தொழில் துறை முன்னேற்றம் வசதியான வாழ்க்கை என்ற வகையில் மட்டுமே உலகம் சிந்தித்துக் கொண்டிருக்கிற போது வாழ்க்கையின் அடிப்படையே மகிழ்ச்சி தான் என்பதை யோசிக்குமாறு செய்திருக்கிறது பூட்டான்.
இன்றைய உலகில் வெறுப்புணர்வும் வெறுப்புணர்வை ஊட்டும் நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன.
நம்முடைய நாட்டில் சுப்ரமண்ய சுவாமி தேவையில்லாமல் பள்ளிவாசல் என்பது ஒரு கட்டிடம் தான் அதை இடிப்பதில் தவறில்லை என்று பேசியிருக்கிறார். அப்பட்டமாக வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு, இது இழிவான மனிதர்களின் வேலை.
நல்ல மனிதர்கள் தாம் மகிழ்ச்சியாக இருந்து பிறை மகிழ்ச்சிப்படுத்துவார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதே சரியான வாழ்க்கையின் அழகு - கூடுமானவரை பிறருக்கு மகிழ்ச்சியளிப்பதே உயிர்வாழ்வலின் அர்த்தம் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.
நம் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நிறைய அருட்கொடைகளை செய்திருக்கிறான். அவற்றை நினைவில் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும்
وَإِن تَعُدُّواْ نِعْمَةَ اللّهِ لاَ تُحْصُوهَا ﴾
صِحَّةٌ في بدنٍ ، أمنٌ في وطن ، غذاءٌ وكساءٌ ، وهواءٌ
وماءٌ ، لديك الدنيا وأنت ما تشعرُ ، تملكُ الحياةً وأنت لا تعلمُ
﴿
وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً﴾
عندك
عينان ، ولسانٌ وشفتانِ ، ويدانِ ورجلانِ
இந்த நிஃமத்களை உணர்ந்து மகிழ்ச்சியாக
இருக்க அல்லாஹ் கூறுகிறான்.
قل بفضل الله وبرحمته
فبذلك فليفرحوا هو خير مما يجمعون
குறைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது,
காசு இருந்தால் உடல் நலமில்லாமல் இருக்கும். இல்லை எனில் மனைவி பிள்ளைகள் சரியில்லாமல் இருப்பார்கள் அல்லது மதிப்பு கிடைக்காமல் இருக்கும். அல்லது எல்லாம் சரியாக இருந்தும் காசு இல்லாமல் இருக்கும். இப்படி ஏதோ ஒரு காரணம் மகிழ்ச்சியை தடுக்கும்
டாக்டர் உடல் பரிசோதனை செய்வார் என்றால் அதில் ஏதாவது ஒரு குறையை சொல்லிக் காட்டாமல் இருக்க மாட்டார். நம்மில் பலரும் அதில் மனம் சுருங்கிப் போய்விடுவோம்.
உண்மை என்ன தெரியுமா?
ஹீமோ குளோபின் குறைவாக இருந்த ஒருவரை பரிசீலனை செய்த ஒரு டாக்டர் சொன்னார்.
இரத்தத்தில் ஹீமோ குளோபின் 14 சதவீதம் இருக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோருக்கு அந்த அளவில் இருக்காது.குறிப்பாக இந்தியர்களுக்கு அந்த அளவில் இருக்காது. 10 க்கு கீழ் குறையாமல் பார்த்துக் கொண்டால் போதுமானது என்றார் அவர்.
மகிழ்ச்சியின் ஒரு சாவியை அவர் கொடுத்ததாக நான் உணர்ந்தேன்.
இதே போலத்தான் பணமும் மற்ற வசதிகளும் செல்வங்களும் அது கொஞ்சம் குறைவானதாக இருந்தாலும் போதுமானது என்று உணர்ந்து கொள்வோமானால் இந்த அளவு கிடைத்திருக்கிறது என திருப்தி அடைவோமானால் சதோசஷம் தானாக வரும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அற்புதமான வாழ்வியல் வழிகாட்டுதலை தந்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((انْظُرُوا إِلَى مَنْ هُوَ
أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ؛ فَإِنَّهُ
أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ)). رواه مسلم (4/2275 ،
رقم 2963).
ஹஜ்ரத் அலி ரலி
கூறினார்கள்
செருப்பில்லையே என்று கவலைப்
பட்டேன் கால்களே
இல்லாதவனை பார்க்கும்
வரை
எனவே மகிழ்ச்சிக்கான காரணங்கள்
நம்மிடம் பலது
இருக்கிறது, அவற்றை
எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியாக
வே இருக்க
வேண்டும்.
சிலர் எப்போதும் கவலையாகவே
இருப்பார்கள் . எதையோ
இழந்தது போல
இருப்பார்கள். குறைகளையே
பெரிதாக நினைத்துக்
கொண்டிருப்பார்கள். உலகமே
கெட்டு விட்டது
என பேசுவார்கள்.
இந்த விரக்திப் போக்கை
பெருமானார் தடை
செய்துள்ளார்கள்
கவலை ஏற்படுகிற போது அதற்கு காரணம் இருக்கிறதா என்று யோசித்து விட்டு இல்லை என்றால் நம்மை நாமே மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு அல்லாஹ் நமக்கு செய்துள்ள நிஃமத்தை எண்ணிப் பார்த்து அதை வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள குர் ஆன் உத்தரவிட்டுள்ளது.
أما بنعمة
ربك فحدث
ஒரு வேளை கவலைக்குரிய காரணம் இருக்கும் என்றாலும் அல்லாஹ் தன் படைப்புக்களின் மீது இரக்கம் கொண்டவன் என்பதை எண்ணிப்பார்த்தால் கவலை ஓடிப்போய்விடும்
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ
அதீத கவலை
·
பணம் கிடைக்காதோ
·
உடல் நிலை என்னாவாகுமோ?
·
உதவாமல் ஆகிவிட்டால்
?
·
திடீரென்று ஒரு தேவை
வந்து விடால் என்பது போன்ற கவலைகள்
தேவையற்ற பயம்
·
விழுந்து விடுவோமோ
·
நம்மை வஞ்சித்து விடுவார்களோ
·
தீர்ந்து விட்டால்
என்பது போன்ற சிந்தனைகளை உதறிவிட்டால் மகிழ்ச்சி
தானாக வந்து உட்கார்ந்து கொள்ளும்.
கவலையையும் தேவையற்ற பயத்தையும் உதறுவதற்கு அல்லாஹ்வின்
மீது முழு நம்பிக்கை வேண்டும்.
திருக்குர் ஆன் கூறுகிறது. கவனிக்க மறக்க வேண்டாம்.
·
ஈமான்
·
நல் அமல்கள்
الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا
الصَّالِحَاتِ طُوبَى لَهُمْ وَحُسْنُ مَآبٍ}
طُوبَى
لَهُمْ என்பதற்கு அறிஞர்களின் விளக்கங்கள்
·
قال ابن عباس :
فرح وقُرة عين
·
قال عِكْرِمة :
نعم مالهم.
·
قال الضحاك :
غبطة لَهُم.
(மகிழ்ச்சி, நல்ல சொத்து, பெருமை.)
மகிழ்ச்சி பணத்தினால் , பதவியினால், உலக பொருட்களால் கிடைத்து விடும் என்று நாம் நினைத்தால் அது சராசரி மனிதனின்
நினைப்பு. கெட்டிக்கார மனிதனின் நினைப்பல்ல.
பட்டம், உணவு, பெண்கள், சுக போகப் பொருட்கள், மகிழ்ச்சிகான வழியா? - அப்பபடி நினைப்பவர்கள் தவறிழைக்கின்றனர்
அப்படியானால் நிறைய காசு, பெரிய பட்டம், அழகான மனைவி, பவிசான வேலை, செல்வாக்கான பதவியில் இருப்போர், எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் நிலவரம் அப்படியா இருக்கிறது.
உலகில் அதிக வசதி வாய்ப்புக்களை, சுதந்திரத்தை
பேசுகிற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் அல்ல. சிரமத்திலும், சதா பெரும் துயருக்கு இடையேயும்
வாழ்கிற மக்கள் தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பணப் பற்றாக்குறை,
சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல்
இடத்தில் இருக்கிறார்கள்.
இந்தியர்களாகிய நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்!
மெக்ஸிகோ நாட்டு மக்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்கள்.
மகிழ்ச்சியான செய்தி
தான். ஆனால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் இது தான் உண்மை.
மகிழ்ச்சி என்பது சாதனங்களில் இல்லை
. சாதனங்களை ஆழ்கிற மனித மனங்களில் தான் இருக்கிறது.
கதீப் பஃதாதியின் அஜ்ஜுஹ்து வர்ரகாயிகில் ஒரு உரையாடல்
“நமது மகிழ்ச்சியை பார்த்தால் அரசர்கள் பொறாமைப்படுவார்கள் என்றார் பரதேசியாக திரிந்த இபுறாகீம் பின் அத்ஹம் (ரஹ்)
قال إبراهيم بن بشار ،: خرجت أنا وإبراهيم بن أدهم ، وأبو يوسف
الغسولي ، وأبو عبد الله السنجاري نريد الإسكندرية ، فمررنا بنهر يقال له
نهر الأردن ، فقعدنا نستريح ، وكان مع أبي يوسف كسيرات يابسات ،
فألقاها بين أيدينا فأكلناها وحمدنا الله تعالى ، فقمت أسعى أتناول ماء
لإبراهيم ، فبادر إبراهيم فدخل النهر حتى بلغ الماء إلى ركبته ، فقال بكفيه
في الماء فملأها ، ثم قال : ( بسم الله ) وشرب الماء ، ثم قال : ( الحمد لله
) ، ثم ملأ كفيه من الماء وقال : ( بسم الله ) وشرب ، ثم قال : ( الحمد لله
) ، ثم إنه خرج من النهر فمد رجليه ، ثم قال : يا أبا يوسف ، لو علم
الملوك وأبناء الملوك ما نحن فيه من النعيم والسرور لجالدونا بالسيوف أيام
الحياة على ما نحن فيه من لذيذ العيش وقلة التعب ، فقلت : يا أبا إسحاق ،
طلب القوم الراحة والنعيم ، فأخطأوا الطريق المستقيم . فتبسم ، ثم قال : من
أين لك هذا الكلام ؟ !
- الزهد والرقائق الخطيب البغدادي -
இந்த மனப்பக்குவத்தை தருகிற சக்தி
ஈமானுக்கும் நல் அமல்களுக்கும் இருக்கிறது.
இறைவன் ஒருவன் இருக்கிறான், அவனே
நம்மை படைத்தவன், அவன் தீர்மாணித்தபடியே காரியங்கள் நடக்கின்றன. நம்முடை சக்தியும்
செல்வாக்கும் செயலாற்றும் திறனும் ஓரளவுக்குத்தான். அவன் நாடியபடி தான் எல்லாம் நடக்கும்
என்ற ஈமான் மகிழ்ச்சிக்கான முல வித்தாகும்.
அத்தோடு ஈமான் ஈலக மகிழ்ச்சிக்கும்
வழி வகுக்கிறது,
நம்மில் பலரும் இந்த உலகியல் மகிழ்ச்சியை மட்டுமே
பெரிதாக நினைக்கிறோம். அது முஃமின்களுக்கு அழகல்ல.
இந்த உலகிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
மறு உலகிலும் நாம் மகிழ்ச்சியக இருக்க வேண்டும்.
ஈமான் இருக்கும் இடத்தில் துன்பமும் சந்தோஷமும்
எல்லை மீறாமல் இருக்கும், அது வே நல்லது.
عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم «
عَجَباً لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ
لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً
لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْراً لَهُ » . صحيح
مسلم
·
ஈமானுக்கு அடுத்த
படியாக இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிற வாழ்க்கை
மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.
இறைவனின் அருள் எல்லையில்லாதது. இறைவனின் சாபமோ
ஏழாம் தலைமுறைய பாதிக்கும்.
قال أحمد ابن حنبل في الزهد سمعت وهبا يقول : « إن الرب تبارك وتعالى قال
في بعض ما يقول لبني إسرائيل : إني إذا أُطِعت رضيت ، وإذا رضيت باركت ، وليس
لبركتي نهاية ، وإني إذا عُصِيت غضبت ، وإذا غضبت لعنت ، ولعنتي تبلغ السابع من
الولد » الزهد
لابن حنبل
·
நன்மையான் காரியங்கள் செய்வது மகிழ்ச்சிக்கு காரணமாகும்.
يقول ابن عباس رضي الله عنهما : « إنَّ للحسنة ضياءً في الوجه ،
ونوراً في القلب ، وسَعةً في الرزق ، وقوةً في البدن ، ومحبةً في قلوب الخلق . وإن
للسيئة سواداً في الوجه، وظلمةً في القلب ، ووهناً في البدن ، ونقصاً في الرزق ،
وبغضةً في قلوب الخلق» .
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّمَا حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا ثَلاثٌ
: الطِّيبُ ، وَالنِّسَاءُ ، وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلاةِ "
முஹம்ம்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عن ابن عمررضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: أحب الناس إلى الله أنفعهم، وأحب الأعمال إلى الله عز وجل سرور تدخله
على مسلم، أو تكشف عنه كربة، أوتقضي عنه ديناً، أوتطرد عنه جوعاً، ولأن أمشي مع
أخي المسلم في حاجة أحب إلي من أن أعتكف في المسجد شهراً، ومن كف غضبه ستر الله
عورته، ومن كظم غيظاً، ولو شاء أن يمضيه أمضاه، ملأ الله قلبه رضى يوم القيامة،
ومن مشى مع أخيه المسلم في حاجته حتى يثبتها له، أثبت الله تعالى قدمه يوم تزل
الأقدام، وإن سوء الخلق ليفسد العمل، كما يفسد الخل العسل- أخرجه الطبراني في الكبير - والحديث
حسنه الألباني
உங்களுக்குப் பிடித்த ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வாருங்கள். சமூக நற்பணி அல்லது பக்கத்தில் தேவைப் படுபவர்களுக்கு உதவுதல் என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதனால் உங்களுக்கு பண வரவு இல்லாமல் போகலாம்; ஆனால் இவையெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பவை.
என் இதயம் கடினமாக இருக்கிறது அதை மென்மைப்படுத்த ஒரு வழி சொல்லுங்கள் என ஒரு
தோழர் கேட்டதற்கு அநாதைகளின் தலையை தடவி விடுங்கள் என்றார்கள் பெருமனார் (ஸல்)
عن أبي هريرة رضي الله عنه أن رجلاً شكا إلى
النبي صلى الله عليه وسلم قسوة قلبه فقال : « إن أردت أن يلين قلبك فأطعم المساكين
وامسح رأس اليتيم
இறைவா! ஓடும் நதிகளுக்காகவோ
ஆடும் மரங்களுக்காகவோ அல்ல;
மக்களுக்கு நன்மை செய்யவே நான் வாழ்ந்தேன் என் முறையிட்ட முஆவியா ரலி
ولما حضرت معاذا رضي الله عنه الوفاة قال : اللهم إني قد كنت أخافك وأنا
اليوم أرجوك اللهم إنك تعلم أني لم أكن أحب الدنيا وطول البقاء فيها لجرى
الأنهار ولا لغرس الأشجار ولكن لظمأ الهواجر ومكابدة الساعات ومزاحمة العلماء
بالركب عند حلق الذكر. - ابن الجوزي
·
மனதை
எப்போதும் ஆக்க
பூர்வமான வழியில் செலுத்துங்கள்:
மனம் காலியாக இருக்கும் போது தான் வேண்டாத எண்ணங்கள் வந்து குடியிருக்கும்.
மனம் காலியாக இருக்கும் போது தான் வேண்டாத எண்ணங்கள் வந்து குடியிருக்கும்.
மனதை ஆக்கப்பூர்வமான வழியில்
செலுத்த
·
இனி நான் என்ன நன்மை
செய்யலாம் என்று யோசிக்கலாம்.
·
புத்தகங்களை வாசிக்கலாம்,
·
குர் ஆன் ஓதுவதும்
திக்ரு தஸ்பீஸ் செய்வதும் மனம் அலை பாய்வதை தடுக்கும்.
·
தீய குணங்களிலிருந்து விலகி இருங்கள்
மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க
மிக எளிய வழி இது.
பேராசை, அகம்பாவம் பொறாமை
மோசடி வஞ்ச்ம் ஆகிய குணங்கள் மகிழ்ச்சியை வெகு தூரத்திற்கு விரட்டி விடக் கூடியவை.
பேராசையும் பொறாமையும் இருக்கிற
மகிழ்ச்சியை இல்லாமல் செய்து விடும்.
வஞ்சமும் மோசடியும் நீண்ட
கால மகிழ்ச்சியை தடுத்துவிடும்.
ஒரு மனிதன் புத்தரிடம் வந்து “எனக்கு மகிழ்ச்சி வேண்டும்" என்றான்.
புத்தர் சொன்னார்
"முதலின் எனக்கு என்பதை விட்டுவிடு அது நான் என்ற அகந்தை"
"பிறகு வேண்டும் என்பதை நீக்கு அது ஆசையின் அடையாளம் "
"பார் இப்பொழுது உன்னிடம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது!"
"முதலின் எனக்கு என்பதை விட்டுவிடு அது நான் என்ற அகந்தை"
"பிறகு வேண்டும் என்பதை நீக்கு அது ஆசையின் அடையாளம் "
"பார் இப்பொழுது உன்னிடம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது!"
·
நற்குணங்கள்
மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதில் முக்கிய பங்காற்றுபவை அதில் முக்கியமானது, . மன்னிப்போம் மறப்போம் என்கிற மனோபாவம்
இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள்; ஒரு முறை நடந்ததை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாமே! பழைய, ஆறிப்போன புண்களைக் கிளறிவிடுவானேன்? தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?
இந்த மனோபாவம் அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள்; ஒரு முறை நடந்ததை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாமே! பழைய, ஆறிப்போன புண்களைக் கிளறிவிடுவானேன்? தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?
·
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ,
قَالَ : أَتَيْتُ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي : " يَا عُقْبَةُ
بْنَ عَامِرٍ صِلْ مَنْ قَطَعَكَ , وَأَعْطِ مَنْ حَرَمَكَ , وَاعْفُ عَمَّنْ
ظَلَمَكَ
மகிழ்ச்சி கரமான வாழ்க்கைக்கு முக்கியமான இன்னொரு வழி அதிகம் கோபப் படாமல் இருப்பது. எடுத்தெதெற்கெல்லாம்
கோபப்படுவது. முன் கோபம்.
عن أبي هريرة رضي الله عنه ، أن رجلا قال للنبي صلى الله عليه وسلم : " أوصني
" ، قال :( لا تغضب ) ، فردّد ، قال : ( لا تغضب ) رواه البخاري .
علي بن أبي طالب رضي الله عنه يقول :
" أول الغضب جنون وآخره ندم ،
يقول عروة بن الزبير رضي الله عنهما :
" مكتوبٌ في الحِكم: يا داود إياك وشدة الغضب ؛ فإن شدة الغضب مفسدة لفؤاد
الحكيم "
கோபத்தில் சண்டையிட்டவன்,
வார்த்தை விட்டவன் , தலாக் விட்டவன், அனைவரும் மகிழ்ச்சியை நொடியில் இழப்பார்கள்
கோபமோ கூடாது என்பதல்ல,
கோபத்தில் அதிக நிதானம் அவசியம்.
{ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس
والله يحب المحسنين }
இந்த தப்பை நான் செய்திருந்தால்
என்று யோசித்தால் நிதானம் தானாக வந்து விடும். மன்னிப்பு தானாக பிறக்கும்.
·
இன்றே செயல்படு !
நாளைக்கு தள்ளிப் போடாதே
·
நாளையைப் பற்றி அதிகம்
கவலைப்படாதே!
·
ஒரு சிரமத்திற்கு
அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுத்துவிடாதே!
·
எளிமையாக வாழு! ஆடம்பரத்தை
தவிர்!
·
கடமையை செய்! ந்ன்றியை
எதிர்பாக்காதே!
ஆகிய வழிகாட்டுதல்களையும் மகிழ்ச்சிகரமான வாழ்வியலுக்கான
முக்கியமான தத்துவங்களாக அறிஞர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.
மகிழ்ச்சி எனும் போது நாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய மற்றொருரு முக்கிய விசய்ம் இருக்கிறது.
இறைவன் அ னுமதித்த நல்ல விசயங்களில் மகிழ்ச்சி வேண்டும்.
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون
அதை தான் இவ்வசனம் கூறுகிறது.
அனுமதிக்கப்படாத் அக்கிரமக் காரரியங்களில் பிறரை துன்புறுத்துவதில் அகம்பாவத்தில் ஆண்வத்தில் மகிழ்ச்சி கூடாது, அது முறைகேடான மகிழ்ச்சியாகும்.
திருக்குர் ஆனின் மற்றொரு வசனம் அதை எச்சரிக்கிறது,
لا تَفْرَحْ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْفَرِحِينَ[القصص:76].
இது காரூனைப் பார்த்துச் சொல்லப்பட்டதாகும், இந்த மகிழ்ச்சி நல்லதல்ல.
நமக்கு வேண்டியது நல்ல மகிழ்ச்சியே!
நிறைவாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது
இதை தான்
நான் மகிழ்ச்சியாக இருக்க
வேண்டு, பிறரை மகிழ்ச்சிப்படுத்தனும்.
அதற்காகவே நான் பிறந்தேன்.
ஹழ்ரத்! எல்லா நாளும் நல்லா இருங்க.
ReplyDelete