வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, March 25, 2015

இரண்டாம் கட்ட தலைமை

இரண்டாம் கட்ட தலைவர்கள்
وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ



சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான்யூ நேற்று முன் தினம் காலமானார். அவரது மரணம்,  சர்வ்தேச அரசியல் அரங்கில் ஒரு இழப்பை ஏற்படுத்தியுள்ளது

லி உலக நாடுகளின்  ஒரு மதிப்பான பார்வைக்குரியவராக திகழ்ந்தார்,

அவரிடம் பல் வேறு குறைகள் இருந்தது. ஜனநாயகத்தை நசுக்கியது, சீனர் ஆதிக்க மன்ப்பான்மை, இஸ்லாம் குறித்து வெறுப்பூட்டும் கருத்துக்களை பேசியது, குடும்ப அரசியலை நிறுவனப்படுத்தியது என பல குறைகள் அவரிடம் இருந்தாலும் சிங்கப்பூர் என்ற ஒரு மீன் பிடித் தீவை உலகின் கவனிக்கத் தக்க நாடாக மாற்றி அதை அமெரிக்க ஐரோப்பிய போன்ற முன்னேறிய நாடுகள் கூட முன்னுதாரணமாக கருதும் அளவுக்கு செழிப்பானதாக, பாதுகாப்பானதாக, ஆக்கியதில் லீயின் பங்களிப்பு மகத்தானது.

அதனால் அவர் நவீன சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அது மட்டும்ல்ல முன்றாம் நிலை நாடு என்ற நிலையிலிருந்த சிங்கப்பூரை முதல் நிலை நாடு என்ற நிலைக்கு  ஒரு தலை முறை கால கட்டத்திற்குள்ளாக உயர்த்தியவ்ர் என்ற பெருமைக்கு தனிச் சொந்த்க்காரராகவும் அவர் திகழ்கிறார்


He is recognized as the founding father of modern Singapore, and the only leader known to bring an entire country from third-world to first-world status in a single generation

சாதாரணமாக இருந்த சிங்கப்பூர் ஒரு தலைமுறை கால கட்டத்திற்குள் அதாவது 30 ஆண்டுகளுகுள் அசாதாராண வளர்ச்சியை கண்டதை சிங்கப்பூர் மக்கள் பார்த்தார்கள்

சிங்கப்பூரின் வெற்றியில் தமிழககத்தை சேர்ந்த பல சிற்றுர்களும் வளர்ச்சியடைந்ததன.
தமிழ்கத்தின் மன்னார்குடி பகுதியில் லீ   யின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
குடிசையில் வாழ்ந்த எங்களை மாடி வீட்டில் வாழ வழி செய்தவரே என்று அவர்கள் அதில் பாராட்டியிருக்கிறார்க்ள்.

அதற்கு கரணம் சிங்கப்பூரில் அவர்களது உழைப்பிற்கு அதிக வருமாணம் கிடைத்ததும் ஒரு மரியாதை வாழ்வு கிடைத்ததுமாகும்.

சுத்தமான காற்று, சுகாதாரமன சுற்றுச் சுழல்,இலஞ்சமற்ற நிர்வாக அமைப்பு, பாதுகப்பான வாழ்வு என்ற அம்சங்களில் சிங்கப்பூர் இன்றும் அதை விரும்பும் மக்களின் கனவுப் பிரதேசமாக இருக்கிறது.

இன்று தங்களது நாட்டை நகரை மாற்றியமைக்க விருமபும் மக்கள் சிங்கப்பூர மாடலையே தேர்ந்தெடுக்கிறார்கள்

ஆந்திர மாநிலத்திற்கு ஒரு தலை நகரை உருவாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் நிறுவனம் தான் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

சவூதி அரேபியா அரசு தனது பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவருக்கும் சிங்கப்பூரில் பயிற்சி அளிக்க திட்டமிட்டு வருகிறது.

உலகின் தலை சிறந்த 100 பல்கலை கழகங்களில் 2 பல்கலை கழகங்கள் சிங்கப்பூரில் இருக்கின்றன.

இந்தியாவிலோ அரபு நாடுகளிலே அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரு பல்கலை கழகம் கூட இல்லை.

உலகின் தலை சிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடாகாவும் சிங்கப்பூர் திகழ்கிறது. நமது நாட்டின் புகழ்பெற்ற பிரபலங்கள் பலர் சிகிட்சைக்காக அங்கு செல்வதை பத்ரிகைகளில் படித்திருப்பீர்கள்

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா நூல்நிலையம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தை மாதிரியாக கொண்டே உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரின் பெருளாதாரம் மிக வலிவான நிலையில் இருக்கிறது.

பட்ஜெட்டில் பற்றாக்குறையை காட்டுகிற அரசுகளை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். சிங்கப்பூர் தனது வருவாயில் செலவு போக எஞ்சிய பணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்கிறது.

நல்ல மழை பெழிகிற வகையில் அடர்ந்த காடுகள் சூழ உருவாக்கப்பட்டிருக்கிற சிங்கப்பூரில் எவரும் மழையில் நனைந்து விடாத படி பஸ்ஸில் இருந்து அல்லது காரில் இருந்து இறங்கி தமது வீடுகளுக்கோ அலுவலகங்களுக்கோ சென்று விட முடியும்.

வீட்டுக் குழாயை திறந்தால் எப்போதும் தண்ணீர் வரும். சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையே இல்லை.  

அந்த் தண்ணீர் மினரல் வாட்டரை விட சுத்தமானது என்று லீ சொல்லுவார்

சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவதை ஒரு அடிப்படை மனோபாவமாக கொண்ட சமுதாயமாக இன்று சிங்கப்பூர் மாறியிருக்கிறது.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் முதல் தர விமான நிலையம் என்ற பெருமையை பல ஆண்டுகளாக தக்க வைத்த்துக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரும் சரக்குகளை கையாளும் துறைமுகமும் சிங்கப்பூரில் இருக்கிறது.

சுறுசுறுப்பாக உழைக்கிறவாடிக்கையாளருக்கு உதவியாக இருக்கிறமனோபாவம் கொண்ட மக்கள் என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றிருக்கிறது.

காலை ஐந்து மணிக்கு சிங்கப்பூரின் ஏதாவது ஒரு இரயில் நிலையத்தை பார்த்துக் கொண்டு நின்றீர்கள் என்றால் அரை மணி நேரம் ஷட்டில் ஆடிய உணர்ச்சியை பெறுவீர்கள், காலையில் அதிக வேகமாக் இயங்கும் நாடு அது,

ஆறுமணிக்கு மேல் தூங்குகிறவன் நாட்டிற்கு தேவையில்ல என்றார் லீ

இவை அத்தனையும் லீயின் பெருமைக்க்கான சான்றுகள்.

ஒரு இலட்சிய இலக்கை அடைவதில் வெற்றி கண்ட, தான் விரும்பிய படி ஒரு பெருளாதார சமூக அமைப்பை உருவாக்கி சாதனை படைத்த நம் காலத்தில் பார்க்க முடிந்த ஒரு தலைவர் லீ என்று சொன்னால் அது மிகையல்ல.

அத்னாலேயே அவர் குறித்த இவ்வளவு தகவல்களை நாம் பரிமாறினோம்.

எனக்கு மிக நெருக்கமான சிங்கப்பூரைச் ஒரு தொழில் அதிபர் அடிக்கடி சொல்லுவார். லீ ஒரு முஸ்லிம் அல்ல; என்றாலும் இஸ்லாமின் பல வழிகாட்டுதல்களையும் அவர் சுவீகரித்து தேசம் என்ற பெயரில் அவர் செயல்படுத்தினார் என்று சொல்லுவார்.
 
ஒரு சிறந்த தலைவராக லீயை அடையாளம் காட்டும் அம்சங்களில் பிரதானமானது  நாடு தனக்குப் பின்னால் தான் உருவாக்கிய வழியில் செயல் படுவதற்குரிய இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கியதும் அவர்களுக்கு வழி விட்டதுமாகும்.

இன்றைய முஸ்லிம் சமுதாயம் ஒவ்வொரு துறையிலும் கவனிக்க வேண்டிய அம்சம் இது,

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நடை முறை இது.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஏராளாமான சிறப்புகள் இருக்கின்றன, அதில் பிரதானமானது, அவர்களை ஒரு தலை சிறந்த தலைவராக அடையாளம் காட்டக் கூடியது, தனக்குப்பின் இந்த சமூகத்தை தன்னைப் போலவே வழி நடத்திச் செல்லும் ஒரு குழுவை அவர்கள் தாயார் செய்து சமூகத்திற்கு அடையாளம் காட்டியதாகும்.

இப்படி ஒரு குழு இருந்த்தை அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(100)

உளத்தூய்மையோடு சரியாக பின்பற்றியவர்கள் என்ற வாசகம் முந்தைய சஹாபாக்களை பின்பற்றியவர்களின் சிற்ப்பை செல்லுகிற அதே கட்டத்தில் இரண்டாம் தலைமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனது அடியொட்டி நடக்கிற் ஒரு பெரும்  கூட்டம் பெருமானாருக்கு இருந்தது. அது அரசியலை மட்டுமல்ல; எல்ல அம்சத்திலும் தூய வாழ்வியலை நோக்கமாக கொண்டிருந்தது என்பது அதன் தனிச்சிறப்பு.

பணியாளர் முன்னூறு திர்ஹமுக்கு பேசி முடித்த குதிரைக்கு எண்ணூறு திர்ஹம் கொடுத்த நபித்தோழர் ஜரீர் பின் அப்தில்லாஹ் அல் பிஜ்லீ

قال النووي في شرح مسلم 

فأرسل جرير رضي الله عنه غلامه ليشتري له فرساً، فوجد الغلام الفرس بثلاثمائة درهم، وجاء الغلام بصاحب الفرس ومعه الفرس إلى جرير ليقبضه الثمن، فلما رأى جرير الفرس وجده يستحق أكثر من ثلاثمائة، فقال: يا فلان! فرسك يستحق أربعمائة. قال: قبلت. قال: خمسمائة. قال: قبلت. قال: ستمائة. قال: قبلت.. حتى وصل به إلى ثمانمائة فقال الرجل: قبلت. فأعطاه الثمانمائة فتعجب الغلام،
وقال لـجرير : ما هذا الذي فعلت؟
قال له: إني بايعت رسول الله صلى الله عليه وسلم على النصح لكل مسلم. أي: لا أستطيع الغش، وهذه هي كمال المتابعة.

பெருமானார் கழற்றி வீசிய தங்க் மோதிரம் தனக்கு வேண்டாம் என மறுத்த சஹாபி

جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وهو يلبس خاتم ذهب، فلما رآه أخذه منه ونزعه نزعاً شديداً، ورماه في الأرض وقال: يعمد أحدكم إلى جمرة من نار فيضعها في يده! فلما قام الرجل ينصرف وقد ترك الخاتم على الأرض، قيل له: خذه فبعه وانتفع بثمنه. قال: كيف آخذه وقد طرحه رسول الله؟!) وترك الخاتم(முஸ்லிம்

யாரிடமும் கேட்காதே! என்ற பெருமானாரின் வார்த்தைக்கு சவ்பான் (ரலி) கட்டுப்பட்ட விதம்

حديثُ ثوبان رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسم قال : ( مَنْ يَتَقَبَّلُ  لِي بِوَاحِدَةٍ وَأَتَقَبَّلُ لَهُ بِالْجَنَّةِ ؟ " قَالَ : قُلْتُ : أَنَا. قَالَ : ( لَا تَسْأَلِ النَّاسَ شَيْئًا ) فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ ، فَلَا يَقُولُ لِأَحَدٍ نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَتَنَاوَلَهُ . رواه أبو داود (1450)


இவ்வாறு பின்பற்றுகிற ஒரு கூட்டத்தை பெருமானார் உருவாக்கிய இருந்ததோடு இவர்களை வழி நடத்துகிற தலைவர்களையும் பெருமானார் அடையாளம் காட்டினார்கள்.

நான் இல்லை எனில் அபூபக்கரிடம் செல் ! என்ற பெருமானார்.

عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَتَتْ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ قَالَتْ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تَقُولُ الْمَوْتَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ 3659(புகாரி

عَنْ أَبِي عُثْمَانَ قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السُّلَاسِلِ فَأَتَيْتُهُ فَقُلْتُ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ عَائِشَةُ فَقُلْتُ مِنْ الرِّجَالِ فَقَالَ أَبُوهَا قُلْتُ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَعَدَّ رِجَالًا - (புகாரி)

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُفَاضِلُ بَيْنَهُمْ تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ-(புகாரி) 3697

ஹிஜ்ரீ 9 ம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப்பட்ட போது தனக்கு பதிலாக அபூபக்கர் ரலி அவர்களை அந்த ஹஜ்ஜுக்கு தலைமேற்க அனுப்பினார்கள்.

عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَجَعَ مِنْ عُمْرَةِ الْجِعِرَّانَةِ بَعَثَ أَبَا بَكْرٍ عَلَى الْحَجِّ فَأَقْبَلْنَا مَعَهُ நஸஈ  -

அதே போல் தனது இறுதி நிமிடங்களில் அபூபக்கர் ரலி அவர்கள் முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை தாங்கி தொழ வைப்பதை கண்டு பெருமானார் மகிழ்ந்தார்கள்

عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ الْأَنْصَارِيُّ وَكَانَ تَبِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَدَمَهُ وَصَحِبَهُ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي تُوُفِّيَ فِيهِ حَتَّى إِذَا كَانَ يَوْمُ الِاثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلَاةِ فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرَ الْحُجْرَةِ يَنْظُرُ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ فَهَمَمْنَا أَنْ نَفْتَتِنَ مِنْ الْفَرَحِ بِرُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ وَظَنَّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجٌ إِلَى الصَّلَاةِ فَأَشَارَ إِلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتِمُّوا صَلَاتَكُمْ وَأَرْخَى السِّتْرَ فَتُوُفِّيَ مِنْ يَوْمِهِ  (புகாரி)664

தான் உருவாக்கிய ஒரு சமுதாயத்தை தன் வழியில் பார்த்த பிறகே பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தானார்கள்.

அவர் உருவாக்கிய சமுதாயம் அவர் திட்ட மிட்ட வழியில் வேறு எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் துணிந்து நடை போட்டது.
அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜகாத் கொடுக்க முடியாது என்று சிலர் மறுத்தார்கள். ஆட்சிப் பெறுப்பேற்று சில நாட்களோ நகர்ந்திருந்த நிலையில் – அதை சகித்துக் கொள்ள முடியாது என பிரகடணம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள்,

بعد وفاة النبي محمد ارتدت بعض القبائل العربية عن الإسلام، وصنف جحدوا الزكاة، وتأولوا بأنها خاصة بزمن النبي محمد
 فلما تولى أبو بكر الخلافة قام في الناس خطيباً فقالوالله لأقاتلن من فرق بين الصلاة والزكاة، فإن الزكاة حق المال،
والله لو منعوني عقالاً (الحبل الذي يعقل به البعير) كانوا يؤدونه إلى رسول الله لقاتلتهم على منعه

، قال عمر: «فوالله ما هو إلا أن قد شرح الله صدر أبي بكر فعرفت أنه الحق

பெருமானார் (ஸல்) நோய் வாய்ப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கட்டமைத்த படை பிரிவை ச்ந்தர்ப்ப சூழ்நிலையை பார்த்துக் கொண்டு நிற்காமல் மிகுந்த துணிச்சலோடு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அபூபக்கர் ரலி மேற்கொண்டார்கள்

رسال جيش أسامة بن زيد إلى الشام

ندب النبي محمد المسلمين لغزو الروم بالبلقاء وفلسطين سنة 11هـ، وأمَّر عليهم أسامة بن زيد، ولكن النبي مرض بعد البدء بتجهيز هذا الجيش بيومين، فلم يخرج الجيش وظل معسكراً بالجُرْف، وهي موضع على بعد ثلاثة أميال من المدينة نحو الشام، ورجع إلى المدينة بعد وفاة النبي. 

ولما تولى أبو بكر الخلافة أمر أن يُبعث أسامة بن زيد الكلبي، وألا يبقى بالمدينة أحد من جند أسامة إلا خرج إلى عسكره بالجرف

 واقترح بعض الصحابة على أبي بكر بأن يبقي الجيش فقالوا: «إن هؤلاء جلُّ المسلمين، والعربُ على ما ترى قد انتقضت بك، فليس ينبغي لك أن تفرق عنك جماعة المسلمين،

 فقال أبو بكر: «والذي نفس أبي بكر بيده، لو ظننت أن السباع تخطفني لأنفذت بعث أسامة كما أمر به رسول الله Mohamed peace be upon him.svg، ولو لم يبق في القرى غيري لأنفذته

وأوصى أبو بكر أسامة فقال: «اصنع ما أمرك به نبي الله Mohamed peace be upon him.svg؛ ابدأ ببلاد قضاعة ثم إيت آبل (منطقة جنوب الأردن)، ولا تقصرن في شيء من أمر رسول الله Mohamed peace be upon him.svg، ولا تعجلن لما خلفت عن عهده».

 ومضى أسامة بجيشه، فبثّ الخيول في قبائلِ قضاعة وأغار على آبل، فسلِم وغنِم، وكان مسيره ذاهباً وقافلاً أربعين يوماً،
فزادت هيبة المسلمين في نفوس أعدائهم وقالوا: «لو لم يكن لهم قوةٌ لما أرسلوا هذا الجيش»، فكفوا عن كثير مما كانوا يريدون أن يفعلوه، وأصاب القبائلَ العربيةَ في الشمال الرعبُ والفزعُ من سطوة الدولة الإسلامية.


இந்த நடவடிக்கைகளும் வெற்றிகளும் பெருமானார் (ஸல்) அவர்களுடையதாகவே பார்க்கப்படும். காரணம் இத்தகைய் இரண்டாம் கட்ட தலைவர்களை அவர்களே உருவாக்கியிருந்தார்கள்.

இன்றைய முஸ்லிம் உம்மத்திற்கு இதில் ஒரு பெரிய பாடம் இருக்கிறது.

பெரும்பாலும் நாம் நமது பொறுப்புக்களை நமக்காக நிரந்தரமானது என்றே நினைத்து விடுகிறோம். அடுத்த கட்டம் குறித்து யோசிப்பது நமக்கு எரிச்சலூட்டுகிறது, கோபத்தை உண்டு பண்ணுகிறது. அதற்குள் இப்ப என்ன அவசரம் என்று கொதிப்படைகிறோம். இது சரியான வாழ்வியல் அல்ல.

நேரு இந்தியாவின் பிரதமராக 17 வருடங்கள் இருந்தார், அடுத்த பிரதமராக யாரை தேர்வு செய்வீர்கள் என ஒரு முறை அவரிடம் கேட்கப்பட்டது. நான் இன்னும் ஆயுள் எனக்கு இருக்கிறது என்றார். ஒருவேளை அவர் இருக்கிற போதே மற்றொருவருக்கு அந்தப் பதவியை கொடுத்து அதில் தன்னைப் போலவே அவர் பக்குவப்படுத்தியிருப்பார் எனில் சிறப்பான பிரதமர்களின் ஒரு அணி நமக்கு கிடைத்திருக்க கூடும். ஆனால் அப்படி நடக்க வில்லை. இன்று நாடு நேருவைப் போன்ற பெருந்தன்மையான தொலை நோக்கு கொண்ட தலைவர்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. 

·         வீடு
·         கடை
·         நிறுவனம்
·         ஜமாத்
·         பொது ஸ்தாபனங்கள்
·         அறக்கட்டளைகள்
·         அமைப்புக்கள்
·         கட்சிகள்

அனைத்திலுமே அடுத்த கட்ட பொறுப்பாளர்களை உருவாக்க வேண்டியது நமது கடமை, அதில் தான் நமது வெற்றி முழுமையடைகிறது என்கிற தத்துவத்தை உணராமல் இருக்கிறோம்.

நாம் நமது ஒவ்வொரு துறையிலும் – நாமே இறுதிவரை பொறுப்பாளிகளாக இருப்பதை விட ஒரு கட்டத்தில் அடுத்தவர்களை நமது பெறுப்பேற்றை ஏற்று நடத்த தயார்படுத்துவதும், நமது இயல்புகளுக்கு பழக்கப்படுத்துவதும், வழிகாட்டுவதும், முக்கியமாகும்.

எனக்கு தெரிந்த பல புத்திசாலி தந்தைகள், தமது ஆரோக்கிய காலத்திலேயே பிள்ளைகளை முன்னுக்கு நிறுத்தி தமது பொறுப்புக்களை பழக்கி கொடுத்திருக்கிறார்கள். வீடு குடும்பம் , நிறுவனங்கள். ஆகியவற்றை அவர்கள் வழி நடத்து வதை பார்த்து மகிழ்ந்து கொண்டு தேவையான ஒத்துழைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தந்தை ரமலான் மாதத்தில் பெரியவனாகிவிட்ட தன்னுடை பையனிடம் ஜகாத் தொகை அடங்கிய பையை கொடுத்து ஆட்களை குறிப்பிட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு வருமாறு கூறினார்.
அவர்களும் பழக வேண்டும் அல்லவா என்று அவர் கூறினார்.

தொண்டு நிறுவனங்கள், ஜமாத்துக்கள், அமைப்புக்கள், அனைத்திலும் இரண்டாம் கட்ட தலைமைக்கு இப்படி ஆட்களை தயார் செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.

அப்படி மூத்தவர்கள் வழி விடுகிற போது இளைஞர்கள் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி விடுவார்கள் எனில் அதுவே சீர்குலைவுக்கு முக்கிய காரணமாக ஆகிவிடும்.

என்ன தான் வேகம் தொழில் நுட்பமும் இருந்தாலும் அனுபவத்தின் தேவையை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

சிங்கப்பூரை இவ்வளவு பிரம்மாணடமாக உருவாக்கிய லீ குவான்யூ 1959 ல் இருந்து 1990 வரை பிரதமராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் இறப்பு வரை இருந்திருக்கலாம். 90 ல் பதவியிலிருந்து விலகு மற்றொருவரை பொறுப்புக்கு கொண்டு வந்தார். புதிய அரசில்  லீ மூத்த அமைச்சர் என்றும்  வழி காட்டி அமைச்சர் என்றும்  பதவியில் இருந்தார். தொடர்ந்து சிங்கப்பூரின் நலனில் அக்கறை செலுத்தி வந்தார், அவரது வழிகாட்டுதல்கள் அந்நாட்டிற்கு பெரிதும் உதவியாக இருந்தது.

ஒரு பெரும் தலைவராக இருந்த அவர் இறந்து போய்விட்டாலும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம் சிறப்பான ஒரு நிருவன அமைப்பை அவர் தனக்கு பிந்தையதாக ஏற்படுத்திக் கொடுத்து விட்டடார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த வழி இது. நாம் மறந்து விட்டோம்.

பாடங்களும் படிப்பினைகளும் எங்கு கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது புத்திசாலிகளின் கடமை.

இனியாவது நாம் சிந்திப்போமா?




No comments:

Post a Comment