வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 11, 2015

ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!



شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ (185 2;
இதோ இன்னொரு ரமலான் வர இருக்கிறது.
மார்க்கத்தின் பெரும்பான்மையான கடமை நிறைவேற்றப்படுகிற மாதம்
பெரும்பான்மையான முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடிக்கிற மாதமும் கூட
முஸ்லிமின் வாழ்க்கையின் சிறந்த பொழுது ரமலான்

·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ……مَا أَتَى عَلَى الْمُسْلِمِينَ شَهْرٌ خَيْرٌ لَهُمْ مِنْ رَمَضَانَ وَلَا أَتَى عَلَى الْمُنَافِقِينَ شَهْرٌ شَرٌّ مِنْ رَمَضَانَ وَذَلِكَ لِمَا يُعِدُّ الْمُؤْمِنُونَ فِيهِ مِنْ الْقُوَّةِ لِلْعِبَادَةِ وَمَا يُعِدُّ فِيهِ الْمُنَافِقُونَ مِنْ غَفَلَاتِ النَّاسِ وَعَوْرَاتِهِمْ هُوَ غَنْمٌ للْمُؤْمِنُ يَغْتَنِمُهُ الْفَاجِرُ- احمد

எதனால் சிறப்பாகிறது ?

முஸ்லிம் அதிகம் இந்த மாதத்தில் அமல்செய்கிறார்

·        عنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلكَ كُلُّ لَيْلَةٍ – ترمذي


;எந்த உணர்வோடு வரவேறக வேண்டும். ?

ஏதோ ரமலான் வருகிறது. இப்தாருக்கும் சஹ்ருக்கும் தராவீஹுக்குமான நாள் என்ற சராசரியான உணர்வுடன் வரவேற்க கூடாது.

ஈமானுடனும் இஹ்திஸாபுடனும் வரவேற்போம்.

·        عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ شَهْرَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ- نسائي

அல்லாஹ் இதில் நிறைய நன்மைகளை தருகிறான் என்ற அழுத்தமான நம்பிக்கையோடும், நமக்கும் தருவான் என்ற எதிர்பார்ப்போடும் ரமலானை வரவேற்க வேண்டும்.

என்வே இதை தவற விட்டு விடக் கூடாது என்ற வேகம் வேண்டும்.

இது தவறினால் எல்லாம் தவறியதாக பொருள். துரதிஷ்ட சாலிகள் மட்டுமே இதில் அலட்சியமாக இருப்பார்கள் 

·        قَالَ رسول الله صلى الله عليه وسلم : إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم

·        عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب فيه الدعاء وينظر الله تعالى الى تنافسكم ويباهي بكم ملائكته فأروا الله تعالى من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عزوجلرواه الطبراني في الكبير

·        روى ابن حبان في صحيحه  بسنده إلى رسول الله {صلى الله عليه وسلم} قال: ((صَعِدَ رَسُولُ اللَّهِ {صلى الله عليه وسلم} الْمِنْبَرَ فَلَمَّا رَقِيَ عَتَبَةً قَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً أُخْرَى فقَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً فقَالَ آمِينَ ثُمَّ قَالَ أَتَانِي جِبْرِيلُ فقَالَ يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ قَالَ وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ فقَالَ وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ آمِينَ فَقُلْتُ آمِين )) (رواه الحكم في مستدركه وابن حبان في صحيحه).


·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُعْطِيَتْ أُمَّتِي خَمْسَ خِصَالٍ فِي رَمَضَانَ لَمْ تُعْطَهَا أُمَّةٌ قَبْلَهُمْ خُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَتَسْتَغْفِرُ لَهُمْ الْمَلَائِكَةُ حَتَّى يُفْطِرُوا وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلَّ يَوْمٍ جَنَّتَهُ ثُمَّ يَقُولُ يُوشِكُ عِبَادِي الصَّالِحُونَ أَنْ يُلْقُوا عَنْهُمْ الْمَئُونَةَ وَالْأَذَى وَيَصِيرُوا إِلَيْكِ وَيُصَفَّدُ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ فَلَا يَخْلُصُوا إِلَى مَا كَانُوا يَخْلُصُونَ إِلَيْهِ فِي غَيْرِهِ وَيُغْفَرُ لَهُمْ فِي آخِرِ لَيْلَةٍ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَهِيَ لَيْلَةُ الْقَدْرِ قَالَ لَا وَلَكِنَّ الْعَامِلَ إِنَّمَا يُوَفَّى أَجْرَهُ إِذَا قَضَى عَمَلَهُ

என முழு இறைநம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும்- இதன் நன்மைகளை இழந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடும் ரமலானை எதிர்பார்ப்போம்.

நமது முன்னோர்கள் காட்டிய அக்கறை அலாதியானது.

வட இந்தியாவின் அறிஞர் பெருமகனார் அப்துர்ரஹீம் ராய்ப்பூரி ஷஃபான் பிறை 29 ல் சீடர்கள் நணபர்கள எல்லோரையும் அழைத்து முஸாபஹா செய்து இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக் கிடைத்தால் ரமலானுக்குப் பின் சந்திக்கலாம் என்று சொல்லி அனுப்பி விடுவார்.

தபால்களை பார்க்க மாட்டார். ஒரு கூடையில் போட்டு வைக்குமாறும் ரமலானுக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் படித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுவார்.

ரமலான் முழுக்க இஃதிகாபில் இருப்பர்.

முஜத்தின் அல்பஸானி (ரஹ்) சொல்வார் .ரமலானின் பரகத் கடல் போன்றது, மற்ற மாதங்களின் பரக்கத் அதில் ஒரு துளி அளவுக்குத் தான்.

பல பெரியவர்கள் பெருநாளுக்கான ஆடைகளை மற்ற தேவைகளை ரமலானிலேயே முடித்து விடுகிற பழக்கம் கொண்டிருந்தனர்.

சிலர் காயகறிகளை கூட் மொத்தமாக வாங்கி வைத்து விடுவர்.

நம்ம்மில் பலரும் ரமலானுடைய அற்புதமான பொழுதுகளை ஷாப்பிங்கில் இழக்கிறோம்.

குறிப்பாக ரமலானுடைய அதி அற்புதமான கடைசி பத்துக்கள் மொத்தமும் கடைவீதிக்குறியதாகிவிடுகிறது.

பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பவர்களின் எண்ணிக்கையை விட கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் ரமலான் அவர்களுக்கு ஷாப்பிங்க் மாதமாகவே மாறிவிடுகிறது. இந்த உணர்வு குழந்தைகளிடம் தொற்றிக் கொள்கிறது,

நாம் நமது முன்னோர்கள் காட்டிய கவனத்தை கொஞ்சமாவது  நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

முன்னோர்கள் தமக்கென தனித்தனி வழி முறைகளை வைத்திருந்தனர்.
குர் ஆன் ஓதல்
سفيان الثوري  (97- 161هـ) أمير المؤمنين في الحديث.. كان سيِّد أهل زمانه في علوم الدين والتقوى،
كان سفيان إذا دخل رمضان ترك جميع العبادة، وأقبل على قراءة القرآن.
பார்வை பழுதுபட்டிருந்த நிலையிலும் 3 நாளில் ஒரு குர் ஆன்
قتادة بن دعامة السدوسي  تابعي ثقة، وكان ضرير البصر،
وكان يختم القرآن في كل سبعٍ دائمًا، وفي رمضان في كل ثلاثٍ، وفي العشر الأواخر في كل ليلة.

குர் ஆன் ஓதுவதுடன் ஹதீஸ் படித்தல்

الإمام الزهري- محمد بن مسلم بن عبد الله بن شهاب الزهري (58- 124هـ)،

تابعيٌّ من أهل المدينة-  أوَّل من دوَّن الحديث،

وكان الزهري إذا دخل رمضان يَفِرُّ من قراءة الحديث ومجالسة أهل العلم، ويُقبِل على تلاوة القرآن من المصحف.

விருந்தாளிகளுடனேயே நோன்பு திறந்த இப்னு உமர் ,
இப்னு உமர் ரலி சாதாரணமாக தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாத பெரும் கொடையாளி
அரசாங்கத்திடமிருந்து தனது பணிகளுக்காக கிடைத்த ஊதியத்தை அன்றே ஏழைகளுக்கு கொடுத்து விட்டு அடுத்த நாள் தனது வாகனத்திற்கு தீனியை கடைத்தெருவில் கடனாக வாங்கிக் கொண்டிருப்பார். 
ஒரு முறை அவருக்கு நான்காயிரம் திர்ஹமும் ஒரு சிறந்த ஆடையும் தரப்பட்டது.

كان تاجرًا أمينًا ناجحًا، وكان راتبه من بيت مال المسلمين وفيرًا، ولكنه لم يدخر هذا العطاء لنفسه قَطُّ، إنما كان يُرسِله إلى الفقراء والمساكين والسائلين،
فقد رآه "أيوب بن وائل الراسبي" وقد جاءه أربعة آلاف درهم وقطيفة[ وفي اليوم التالي رآه في السوق يشتري لراحلته علفًا بالدَّيْن، فذهب أيوب بن وائل إلى أهل بيت عبد الله وسألهم، فأخبروه: إنه لم يبِتْ بالأمس حتى فَرَّقَهَا جميعًا، ثم أخذ القطيفة وألقاها على ظهره وخرج، ثم عاد وليست معه، فسألناه عنها فقال: إنه وهبها لفقير.

ரமலானிலோ

كان ابن عمر لا يفطر في رمضان إلا مع اليتامى والمساكين،

நாம் நமக்கான நன்மைகளின் ஒரு வழியை நமக்கு சாத்தியப் பட்ட விதத்தில் அமைத்துக் கொள்வோம்.

ரமலானில் மார்க்கம் கற்றுத்தந்திருக்கிற பிரதான அமல்களை அனைத்தையும் கடைபிடிப்போம்,. அல்லாஹ் கிருபை செய்வானாக! உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும்., சகல வாய்ப்பு வசதிகளையும் தந்தருள்வானாக!

எனக்கு லோ சுகர் நோன்பு வைக்கனும்னு ஆசைப்படுகிறேன் ஹஜ்ரத் துஆ செய்யுங்கள் என்று கடந்த வாரம் ஜும் ஆவுக்குப் பின் முஸாபஹா செய்த ஒரு பெரியவர் சொன்னார்.

உங்களது ஆர்வத்திற்கு அல்லாஹ் நிச்சயமாக அல்லாஹ் பரக்கத் செய்வான்.  வாய்ப்புத்தருவான். மருத்துவரின் ஆலோசனையுடன் செயல் படுங்கள். நோன்பு வைத்த பிறகு தலை சுற்றல் அல்லது கிறுகிறுப்பு தோன்று மென்றால் தயங்காமல் நோன்பை விட்டு விடுங்கள், நீங்கள் அரோக்கியமாக இருக்கிற போது நோன்பு நோற்றிருந்தால் இப்போது நீங்கள் நோன்பை நோயினால் விட்டாலும் அல்லாஹ் நோன்பாளியாகவே உங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறான் என்று சொன்னேன்.

கண்ணீல் நீர் கசிய அவர் கைகளை விடுவித்து விடை பெற்றார்.

நமக்கு அல்லாஹ் தந்திருக்கிற ஆரோக்கியமான சுகமான ஆயுளை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

·         நோன்பு
·         தராவீஹ் மற்றும் நபில் தொழுகைகள்
·         ஜகாத்சதகா
·         திலாவத
·         இஃதிகாப்
என் அனைத்து வகையான இபாதத்துக்களுக்கும் திட்டமிடுவோம்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்போம்.

மறந்து விடவேண்டாம் . இது அல்லாஹ்வின் உத்தரவு

فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
அற்பக் காரணங்களைச் சொல்லி நோன்பை விடுவோர் எச்சரிக்கை அடையட்டும்.  அவர்கள் எந்த கடமை விடுகிறார்கள்? எத்தகைய நன்மையை விடுகிறார்கள்?  
قال صلى الله عليه وسلم :  من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه } البخاري ومسلم]

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ-  مشلم -1945

قال النووي -رحمه الله- عدة أقوال للسلف في توجيهه،
قيل: لأن الصيام هي العبادة الوحيدة التي عُبِدَ الله بها وحده ولم يعبد أحد سوى الله بالصيام، أي لم يتقرب المشركون على مختلف الأعصار لمعبوداتهم بالصيام.
وقيل: لأن الصوم بعيد عن الرياء لخفائه.
وقيل: لأنه ليس للصائم ونفسه حظ فيه.
وقيل: إن الله تعالى هو المتفرد بعلم ثوابه وتضعيف الحسنات عليه.
وقيل: إضافته لله إضافة تشريف، كما يقال: "ناقة الله" و"بيت الله".

அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்விற்குரியதே எனினும்என் புள்ளேஎன்று சொல்வது போல அல்லாஹ் தன்னுடன் இணைத்து சொன்ன இந்த நோன்பின் அளப்பரிய கூலியை நினைவில் இருத்துவோம்.


அதே நேரத்தில் இந்த அற்புத வணக்கத்தை வெற்று வணக்கமாக ஆக்கிவிடக்கூடாது.

من لم يدع قول الزور والعمل به، فليس لله حاجة في أن يدع طعامه وشرابه } [أخرجه البخاري].
وقال صلى الله عليه وسلم : { الصوم جنة، فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل، فإن سابّه أحد فليقل إني امرؤ صائم } [أخرجه البخاري ومسلم].
அறிஞர்கள் அறிவுரைச் இப்படி சொல்வதுண்டு
فإذا صمت - يا عبد الله - فليصم سمعك وبصرك ولسانك وجميع جوارحك، ولا يكن يوم صومك ويوم فطرك سواء.


 தொழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானது. அதிலும் இரவுத் தொழுகை இன்னும அதிகமாக அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியது.  அது எனது அடியார்களின் இயல்பு என அல்லாஹ் கூறுகிறான்.

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّداً وَقِيَاماً http://www.kalemat.org/gfx/braket_l.gif[الفرقان:64،63]،

ரம்லானின் சிறப்புத் தொழுகை தராவீஹ் ஆகும்,. அது 20 ரக அத்துக்களாகும். 20 ரக அத்துக்களை ஜமாத்தாக தொழுவது உமர் ரலி ஏற்படுத்திய நடைமுறையாகும்.

عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يصلى في شهر رمضان في غير جماعة بعشرين ركعة والوتر = பைஹகி:பாகம் 2-பக்கம்:496
عن يزيد بن رومان قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضى الله عنه في رمضان بثلاث وعشرين ركعة  முஅத்தா.233
عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضى الله عنها في شهر رمضان بعشرين ركعة  பைஹகீ- பாகம் 2-பக்கம்:496
தராவீஐ ஜமாத்தாக தொழுவது உமர் (ரலி) ஏற்படுத்திய சுன்னத் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

அப்போதிலிருந்து இப்போதுவரை மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் இருபது ரகாத்துகளே தொழப்பட்டு வருகின்றன. மக்கா மதினாவின் வர்லாறு. இப்போது போல 24 மணிநேரமும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும் அதற்கு குறையாத வகையில் கவனமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பாரம்பரிய பள்ளிவாசல்களின் நடைமுறையும் இவ்வாறே அமைந்துள்ளது.

8, 11, என்ற எண்ணிக்கையில் சொல்லப்படும் ஹதீஸ்கள்  பெருமானாரின் தஹஜ்ஜத் தொழுகையே குறிக்கிறது. ரமலானின் விஷேச இரவுத்தொழுகையை அல்ல.

இது விசயத்தில் தீர யோசிக்காமல் அவசர முடிவுக்கு வந்து தராவீஹ் விசயத்தில் ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.

ஆரம்பத்தில் தராவீஹ் 8 ரக அத் என்று பேசியவர்கள் பின்னர் இரவுத்தொழுகை 8 ரக அத் என்று மாற்றிக் கொண்ட்தையும், அந்த தொழுகையை கூட ரமலானின் பிறபகுதியில் இரவு 12 மணிக்குமேல் தொழுவதையும் கவனியுங்கள்.

தராவீஹுக்கும் தஹஜ்ஜத் தொழுகைகும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொண்டு தீனை கோமாளித்தனமாக்கும் இவர்களது நடைமுறைகளை உதறித்தள்ளுங்கள்.   


தீனிலிருந்து  தடம் மாறி நிற்கிற தோழர்களுக்காக இங்கே அவர்கள் ஒப்பிக்கொள்கிற இப்னு தைமிய்யாவின் கருத்தை எடுத்துக் காட்டுகிறோம்.

قال ابن تيمية: قيام رمضان لم يؤقت النبي فيه عدداً معيناً بل كان هو لا يزيد في رمضان ولا غيره على ثلاث عشرة ركعة، لكن كان يطيل الركعات فلما جمعهم عمر على أبي بن كعب كان يصلي بهم عشرين ركعة ثم يوتر بثلاث وكان يخفف القراءة بقدر ما زاد على الركعات لأن ذلك أخف على المأمومين من تطويل الركعة الواحدة،


தராவீஹ் மட்டுமல்ல அதற்கப்பாலும் இரவுத் தொழுகைகளில் நாம் கவனம் செலுத்தனும். ஸஹருக்கு சற்று முன்னதாக எழுந்து தொலைக்காட்சி பெட்டியை திறக்காவிட்டால் தஹஜ்ஜது தொழுது விடலாம். இரவுத் தொழுகை அபரிமிதமான நன்மைகளுக்குரியது, பஜ்ரு வரை இரவுத்தொழுகைகளில் ஈடுபட்ட முன்னோர்கள்

·        قالت عائشة رضي الله عنها: ( لا تدع قيام الليل، فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه، وكان إذا مرض أو كسل صلى قاعداً ).
·        وكان عمر بن الخطاب رضي الله عنه يصلي من الليل ما شاء الله حتى إذا كان نصف الليل أيقظ أهله للصلاة، ثم يقول لهم الصلاة الصلاة.. ويتلو: http://www.kalemat.org/gfx/braket_r.gifوَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقاً نَّحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى http://www.kalemat.org/gfx/braket_l.gif[طه:132]
·        وكان ابن عمر يقرأ هذه الآية: http://www.kalemat.org/gfx/braket_r.gifأَمَّنْ هُوَ قَانِتٌ آنَاء اللَّيْلِ سَاجِداً وَقَائِماً يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ http://www.kalemat.org/gfx/braket_l.gif[الزمر:9].
·        وعن علقمة بن قيس قال: ( بت مع عبدالله بن مسعود رضي الله عنه ليلة فقام أول الليل ثم قام يصلي، فكان يقرأ قراءة الإمام في مسجد حيه يرتل ولا يراجع، يسمع من حوله ولا يرجع صوته، حتى لم يبق من الغلس إلا كما بين أذان المغرب إلى الانصراف منها ثم أوتر.
·        وفي حديث السائب بن زيد قال: ( كان القارئ يقرأ بالمئين - يعني بمئات الآيات - حتى كنا نعتمد على العصي من طول القيام قال: وما كانوا ينصرفون إلا عند الفجر

தராவீஹ் தொழுகிறவர்கள் கவனிக்க வேண்டும். தராவீஹ் என்பது இஷாவின் பர்ளுக்கு பிறகு தொழுகிற தொழுகையாகும். பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை விட பர்ளுகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

ரமலானில் தானதர்மங்களை அதிகமாக செய்ய வேண்டும்.
ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டும். மற்ற காலங்களில் கொடுப்பதை விட அதிக நன்மை கிடைக்கும். ஆனால் பிற்படுத்தாமல் முற்படுத்தி கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
மற்ற தர்மங்களையும் தாராளாம செய்ய வேண்டும்.  நோன்பு திறக்க சஹர் ஏற்பாடுகளுக்கு உதவனும். நம்முடன் இல்லாதவர்களை சேர்த்துக் கொள்ளனும்
قال صلى الله عليه وسلم : { من فطر صائماً كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيء } [أخرجه أحمد والنسائي

حديث سلمان: { من فطر فيه صائماً كان مغفرة لذنوبه وعتق رقبته من النار، وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيء }، قالوا: يا رسول الله ليس كلنا يجد ما يفطر به الصائم، فقال رسول الله صلى الله عليه وسلم : { يعطي الله هذا الثواب لمن فطر صائماً على مذقة لبن أو تمرة أو شربة ماء، ومن سقى صائماً سقاه الله من حوضي شربة لا يظمأ بعدها، حتى يدخل الجنة

وكان ابن عمر لا يفطر إلا مع اليتامى والمساكين،
قال أبو السوار العدوي: ( كان رجال من بني عدي يصلون في هذا المسجد، ما أفطر أحد منهم على طعام قط وحده، إن وجد من يأكل معه أكل، وإلا أخرج طعامه إلى المسجد فأكله مع الناس وأكل الناس معه

திருக்குர் ஆன் ஓதுதல்
·        شهر رمضان هو شهر القرآن، فينبغي أن يكثر العبد المسلم من قراءته
·        فكان جبريل يدارس النبي صلى الله عليه وسلم القرآن في رمضان
·        وكان عثمان بن عفان رضي الله عنه يختم القرآن كل يوم مرة
·        فكان للشافعي في رمضان ستون ختمة، يقرؤها في غير الصلاة،
·        وكان قتادة يختم في كل سبع دائماً، وفي رمضان في كل ثلاث، وفي العشر الأواخر في كل ليلة
இஃதிகாப்
كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام؛ فلما كان العام الذي قبض فيه اعتكف عشرين يوماً [أخرجه البخاري

ரமலான் உமரா

ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال: { عمرة في رمضان تعدل حجة } [أخرجه البخاري ومسلم]، وفي رواية { حجة معي

தஸ்பீஹ் திக்ரு இஸ்திக்பார் துஆக்கள் அதிகமாக செய்ய வேண்டும்.

நனமைக்கான சிறு வழியையும் விட்டு விட வேண்டாம்

·        عَنْ الزُّهْرِيِّ قَالَ تَسْبِيحَةٌ فِي رَمَضَانَ أَفْضَلُ مِنْ أَلْفِ تَسْبِيحَةٍ فِي غَيْرِهِ – ترمذي

ஒரு முக்கிய எச்சரிக்கை ரமலானில் வீண்களியாட்டங்களில் ஈடுபடாதீர்கள். அது ரமலானை அவமதித்தாகி விடும்.

மறந்து விடாதீர்கள். ரமலானில் நாம் சீதேவி ஆகவேண்டும். துரதிஷ்ட்சாலி ஆகிவிடக்கூடாது.







1 comment:

  1. جزاك الله خيرا كثيرا في الدارين அல்லாஹ் தங்கள் சேவையை கபூல் செய்வானாக! ஆமீன்

    ReplyDelete