வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 04, 2015

அன்சார்கள் இல்லாது போனோமோ?

இஸ்லாம் மக்காவில் பிறந்தது என்றாலும் அது மதீனாவில் தான் வாழ்ந்தது. வளர்ந்தது.

மக்காவிலிருந்து வந்த பெருமானாருக்கும் தோழர்களுக்கு மதீனாவின் அன்சாரிகள் கொடுத்த ஆதரவு தான் இஸ்லாம் வாழவும் வளரவும் வழிவகுத்தது.

அன்சாரிகள் உதவி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது,

தங்களை நோக்கி வந்த அகதிகளுக்கு அவர்கள் கைநீட்டி வரவேற்புக் கொடுத்த்தனால் தான் இஸ்லாம் வாழ்ந்தது. வளர்ந்தது.

பெருமானாரின் 50 வயது காலகட்டத்தில் தாயிப் பயணம் தோல்வி அடைந்திருந்த நிலையில் அல்லாஹ் பெருமானாரை மிஃராஜுக்கு அழைத்துச் சென்றான். அதில் உற்சாகம் பெற்ற பெருமானார் மக்காவிலேயே குடும்குடும்பமாகச் சென்று மீண்டும் தீரத்தோடு பிரச்சாரம் செயதார்கள் இந்த கால கட்டத்தில் தான், எதிர்பாராத வகையில் மதீனாவிலிருந்து வந்த ஆறுபேர் மினா மைதானத்தில் சைத்தானை கல்லெறிகிற க்டைசி இடமான ஜம்ரத்துல் அக்பாவுக்கு பக்கத்தில் பெருமானாரை சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். அது  முதலாம் அகபா உடன் படிக்கை எனப்படுகிறது. 

(இந்த இடத்தில் இந்த ஒப்பந்ததின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட ஒரு பள்ளி வாசல் புழுதிக் காற்றில் காணாமல் போயிருந்தது, சமீபகாலத்தில் மினா விரிவாக்கத்திற்காக அந்த இடத்தை அக்ழந்த போது அந்த பள்ளிவாசலை கண்டெடுத்து இப்போது அப்படியே வைத்துள்ளார்கள்)

இந்த நபித்தோழர்களை நாம் மறந்து விட முடியாது, மார்க்கம் இந்த மண்ணில் வேர்விட காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.


وكان الذين لقيهم صلى الله عليه وسلم من الخزرج هم أسعد بن زرارة وعوف بن الحارث ويعرف بابن عفراء، وهما من بني النجار، ورافع بن مالك بن العجلان وعامر بن عبد حارثة وهما من بني زريق، وقطبة بن عامر بن حديدة من بني سلمة، وعقبة بن عامر بن نابىء من بني غنم، وجابر بن عبد الله بن رباب من بني عبيدة، فعرض النبي عليهم الإسلام وتلا عليهم القرآن فقبلوا ذلك منه وأثر في قلوبهم

فلما قدموا المدينة ذكروا لقومهم النبي صلى الله عليه وسلم ودعوهم إلى الإسلام فأسلم كثيرون منهم حتى إذا كان العام المقبل وافى الموسم من الأنصار اثنا عشر رجلاً وذلك سنة اثنتي عشرة من النبوة (621 م)முதல் அகபா உடன்படிக்கையில் 6 பேர் 2 வதில் 12 பேர் 3 வதில் 70 பேர் என இஸ்லாமை தழுவினார்கள், மதீனா முஸ்லிம் நகராக மாறி பெருமானாரை வரவேற்க காத்திருந்தது. ஒரு நபி சென்று தான் ஊரைத் திருத்துவார். மதீனா நகரின் மாபெரிய சிறப்பு அது நபி வருவதற்கு முன்பே ஈமானுக்கு தயாராகியிருந்தது,

ஈமானுக்கு மட்டுமல்ல தம்மை நாடி வருகிறவர்களை ஆதரிக்கவும் தயாராக இருந்தது,

ஆதரிக்க மட்டுமல்ல அவர்களுடை தேவைகளுக்காக தம்முடைய சவுகரியங்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தது,

وَالَّذِينَ تَبَوَّءُو الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

அவர்களின் அந்த அர்ப்பணிப்புக்கான உதாரணங்களை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வருகிறது. காரணம் என்னவெனில் ஆதரவுக்கும் அனுசரனைக்கும் இது போன்ற உதாரணங்கள் வரலாற்றில் முன்பும் இருந்ததில்லை பின்னாலும் கண்டதில்லை,

அகதிகளுக்காக தமது நிலத்தை பிரித்து பங்கு வைத்து விடுமாறு பெருமானாரிடன் கோரிக்கை வைத்தார்கள் அப்பெருமக்கள்

عن يزيد بن الأصم: أن الأنصار قالوا: يا رسول الله، اقسم بيننا وبين إخواننا من المهاجرين الأرض نصفين. قال: لا، ولكنهم يَكفونكم المَؤُونة، وتقاسمونهم الثمرة؛ والأرضُ أرضُكم. قالوا: رضينا. فأنزل الله تعالى: { وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلإِيمَانَ مِن قَبْلِهِمْ..}

தமது நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள அனுமதித்த அப்பெருமக்கள் அகதிகளுக்கு விவசாயப்பணி தெரியாது என்று பெருமானார் கூறிய போது விளைச்சலில் மட்டும் பங்கு பெற்றுக் கொள்ளட்டும் என்றனர் அந்த மகானுபவர்கள்

وقال رسول اللّه صلى اللّه عليه وسلم؛ (إن إخوانكم قد تركوا الأموال والأولاد وخرجوا إليكم)، فقالوا: أموالنا بيننا قطائع، فقال رسول اللّه صلى اللّه عليه وسلم: (أو غير ذلك؟) قالوا: وما ذاك يا رسول اللّه؟ قال:(هم قوم لا يعرفون العمل فتكفونهم وتقاسمونهم الثمر)، فقالوا: نعم يا رسول اللّه- تفسير بن كثير


தம் குழந்தைக்கு வைத்திருந்த உணவை அகதிகளுக்கு கொடுத்தார்கள். விளக்கை அணைத்து விட்டு தாமும் உண்ணுவது போல நடித்தார்கள்.

أن رسول الله صلى الله عليه وسلم دفع إلى رجل من الأنصار رجلاً من أهل الصفة، فذهب به الأنصاري إلى أهله، فقال للمرأة: هل من شيء؟ قالت: لا، إلا قوت الصِّبْيَة. قال: فَنَوِّميهم، فإذا ناموا فأتيني [به]، فإذا وضعت فأطفئي السراج قال: ففعلت، وجعل الأنصاري يقدم إلى ضيفه ما بين يديه، ثم غدا به إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: لقد عجب من فعالكما أهل السماء. ونزلت { وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ} . رواه البخاري

(அபூதல்ஹா அவருடைய மனைவி உம்மு சுலைம் ஆகிய இருவருமே இவ்வாறு விருந்தளித்தவர்கள் என்பது ஷரஹுகளில் உண்டு)

மனைவியை பிரித்துத் தர சம்மதம் கேட்ட தோழர்;

يقول أنس بن مالك : قدم علينا عبد الرحمن بن عوف وآخى النبي بينه وبين سعد بن الربيع , وكان كثير الأموال , فقال سعد: قد علمت الأنصار أني من أكثرها مالا ، سأقسم مالي بيني وبينك شطرين ، ولي امرأتان فانظر أعجبهما إليك فأطلقها حتى إذا حلت تزوجتها , فقال عبد الرحمن بن عوف: بارك الله لك في مالك و أهلك

மதீனாவின் புறந்கரில் குடி இருந்த பனூன்னழீர் யூதர்கள் தம் ஹிஜிரி 4 ம் வருடம் தம் இருப்பிடங்களை காலி செய்த போது அந்த இடமும் அதிலிருந்த தோட்டம் துறவுகளுக்கும் பெருமானாரின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்த்து, அவற்றை இரண்டு ஏழை அன்சாரிகளுக்கு கொடுத்ததை தவிர மற்ற அனைத்தையும் முஹாஜிர்களுக்கே பெருமானார் கொடுத்தார்கள், அன்சார்கள் துளியும் சலனம் காட்டவில்லை.

كان المهاجرون في دور الأنصار، فلما غنم عليه الصلاة والسلام أموال بني النضير، دعا الأنصار وشكرهم فيما صنعوا مع المهاجرين في إنزالهم إياهم في منازلهم، وإشراكهم في أموالهم. ثم قال : (إن أحببتم قسمت ما أفاء الله علي من بني النضير بينكم وبينهم، وكان المهاجرون على ما هم عليه من السكنى في مساكنكم وأموالكم وإن أحببتم أعطيتهم وخرجوا من دوركم). فقال سعد بن عبادة وسعد بن معاذ : بل نقسمه بين المهاجرين، ويكونون في دورنا كما كانوا. ونادت الأنصار : رضينا وسلمنا يا رسول الله، فقال رسول الله صلى الله عليه وسلم : (اللهم ارحم الأنصار وأبناء الأنصار). وأعطى رسول الله صلى الله عليه وسلم المهاجرين ولم يعط الأنصار شيئا

عَنْ عَبْد اللَّه بْن أَبِي بَكْر , أَنَّهُ حُدِّثَ أَنَّ بَنِي النَّضِير خَلَّوْا الْأَمْوَال لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَتْ النَّضِير لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّة يَضَعهَا حَيْثُ يَشَاء , فَقَسَمَهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ دُون الْأَنْصَار , إِلَّا أَنَّ سَهْل بْن حُنَيْف وَأَبَا دُجَانَة سِمَاك بْن خَرَشَة ذَكَرَا فَقْرًا , فَأَعْطَاهُمَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ .

மனித வரலாறு தனது நீண்ட நெடிய பாதையில் இது மாதிரியான ஒரு காட்சியை கண்டிருக்குமா? اللهم ارحم الأنصار وأبناء الأنصار).

ஆனால் அதே நேரம் பஹரைன் வெற்றி கொள்ளப்பட்ட போது அதன் நிலத்தை அன்சாரிகளுக்கு என சாசனம் செய்து தர பெருமானார் விரும்பியபோது அகதிகளுக்கு தருமாறு கேட்டனர் அன்சாரிகள்

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْطِعَ مِنْ الْبَحْرَيْنِ فَقَالَتْ الْأَنْصَارُ حَتَّى تُقْطِعَ لِإِخْوَانِنَا مِنْ الْمُهَاجِرِينَ مِثْلَ الَّذِي تُقْطِعُ لَنَا قَالَ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي – البخاري -2377

அகதிகளே கனிந்துருகும் அளவு அன்சாரிகள் உதவினார்கள்.

عن أنَس قال، قال المهاجرون: يا رسول اللّه ما رأينا مثل قوم قدمنا عليهم، أحسن مواساة في قليل ولا أحسن بذلاً في كثير، لقد كفونا المؤنة وأشركونا في المهنأ، حتى لقد خشينا أن يذهبوا بالأجر كله، قال:(لا، ما أثنيتم عليهم ودعوتم اللّه لهم) ""أخرجه أحمد في المسند"".

அன்சாரிகளின் உதவியில் நெகிழ்ந்து பெருமானார் அன்சாரிகளுக்காகவும் மதீனா மன்னுக்காகவும் செய்த பிரார்த்தனைகளுக் கொடுத்த முக்கியத்துவமும் அதிகம்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ فَقَالَ  رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا ..  البخاري -3926

இந்த உலகில் இனி எந்த நிலம் கைப்பற்றப் பாட்டாலும் மதீனாவே சிறந்தது என்றார்கள் பெருமானார் (ஸல்)

عَنْ سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تُفْتَحُ الْيَمَنُ فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَتُفْتَحُ الشَّأْمُ فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَتُفْتَحُ الْعِرَاقُ فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ وَالْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ..  البخاري 1875

(யமன்/ வெற்றிகொள்ளப்படும்< உடனே/ ஒரு கூட்டத்தினர் ஒட்டகஙகளை ஓட்டிக்கொண்டு/ தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு (யமன் நாட்டிற்குச்) சென்றுவிடுவார்கள்! ஆயினும்/ மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா பின்னர் ,ஷாம், வெற்றி கொள்ளப்படும்< உடனே ஒரு கூட்டத்தார் ஒட்டகஙகளை ஓட்டிக்கொண்டு/ தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அஙகே சென்றுவிடுவார்கள்< ஆயினும்/ மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்க கூடாதா பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்< உடனே/ ஒரு கூட்டத்தார் ஒட்டகஙகளை ஓட்டிக்கொண்டு/ தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அஙகே சென்றுவிடுவார்கள்! ஆயினும்/ மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா

மதீனாவை இவ்வளவு பாராட்டியும் தீராத பெருமானார் கடைசியில் தன்னையே மதீனாவுக்கு கொடுத்தார்கள்.

உலக வரலாற்றில் மாபெரும் தலைவர்கள் அனைவரும் தம் சொந்த பூமிக்கு திரும்புவதையே விரும்பினார்கள், பெருமானார் மட்டுமே தன்னை அரவணைத்த பூமிக்குள் தான் அடக்கமானார்கள்.

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு மக்கா வெற்றியை தொடர்ந்தி அப்படியே சஹாபாக்கள் ஹுனைன் யுத்தத்திற்கு சென்றார்கள், அதில் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பொருட்கள் கிடைத்தது, பெருமானார் தோழர்களுக்கு வாரி வாரி வழங்கினார்கள், இந்த பிடி 100 ஒட்டகை என்று ஒருவருக்கு கொடுத்தார்கள், இன்னும் கிடைக்குமா என்பது போல அவர் வாயைத் திறந்தார். பிடி இன்னொரு நூறை எனக் கொடுத்தார்கள். அப்போது இஸ்லாமை தழுவாமல் யுத்ததில் கலந்து கொண்ட சப்வான் பின் உமைய்யாவுக்கு ஒரு ஓடை நிறைய ஒட்டகைகளையும் ஆடுகளையும் கொடுத்தார்கள்.

இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்க வில்லை,

இறுதியாக அவர்களை ஒன்று கூட்டி பெருமானார் கேட்டார்கள், மக்கள் எல்லோரும் ஓட்டகைகளுடனும் ஆடுகளுடனும் திரும்புகிற போது நீங்கள் அல்லாஹ்வுடைய தூதருடன் திரும்புவது உங்களுக்கு திருப்திதானே என்றார்கள்,

பெருமானார் (ஸல்) சொன்னார்கள் மக்கள் அனைவரும் ஒரு பாதையில் நடந்து சென்று அன்சாரிகள் ஒரு பாதையில் நடப்பார்கள் எனில்  நான் அன்சாரிகளின் பாதையில் செல்வேன் என்றார்கள்.

கதறிய அந்த தோழர்கள் சொன்னார்கள்எங்கள் பங்காகவும் பாக்கியமாகவும்  அல்லாஹ்வின்  தூதரை நாங்கள் திருப்தி  கொண்டோம்.

வரலாறுப் பேராசான் இப்னு ஹிஷாம் இதை விவரிக்கிறார் பாருங்கள்! உதவிக்கும்  அர்ப்பணிப்புக்கும் ஒத்துழைப்பிற்கும் தோழமைக்கும் இதற்கு நிகர் உலகில் வேறெதுவும் உண்டா கூறுங்கள்!

ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس بالشاة والبعير ، وترجعوا برسول الله إلى رحالكم ؟ فوالذي نفس محمد بيده ، لولا الهجرة لكنت امرأ من الأنصار ، ولو سلك الناس شعبا وسلكت الأنصار شعبا ، لسلكت شعب الأنصار . اللهم ارحم الأنصار ، وأبناء الأنصار . وأبناء أبناء الأنصار . 
فبكى القوم حتى أخضلوا لحاهم ، وقالوا : رضينا برسول الله قسما ، وحظ-

இந்த உதவியும் ஒத்துழைப்பும மற்றவர்களுக்காக தமது சலுகைகளையும் உரிமைகளை விட்டுக் கொடுத்த  இயல்பு தான் இந்த தீன் இந்த மண்ணில் வேர்பிடித்து நிற்க காரணமாக இருந்தது.

வரலாற்றின் ஒரு சோதனை மிக்க கட்டத்தில் வாழ்ந்து கொன்டிருக்கிற முஸ்லிம்கள் மறக்காமல் நினைவில வைத்திருக்க வேண்டிய தத்துவம் இது

அன்சாரிகளாக முஸ்லிம்கள் இருந்தால் இந்த உம்மத் எந்தச் சூழ்நிலையிலும் சிரமங்களை எளிதாக கடந்து வெற்றி நடை போடும்.

வரலாற்றின் இன்னொரு சமீபத்திய உதாரணம்;

ஹிஜ்ரி ஆயிரமாவது ஆண்டு காலகட்டத்தில் குஜராத்தின் ஆட்சியாளராக இருந்தார் முழப்பர் ஹலீம். பக்கத்திலிருந்த அஹ்மதாபாத் சமஸ்தானம் மஹ்மூது கில்ஜி மாண்டூவிடம் இருந்தது. இருதரப்பும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. மஹ்மூது கில்ஜி அதிகமாக குஜராத்தை தாக்கிக் கொண்டிருந்தார். அந்த செழிப்பான நிலத்தையும் தனதாக்கிக் கொண்டு சமஸ்தானத்தை விரிவடையச் செய்ய வேண்டும் என்ற கனவில் இருந்தார். ஆயினும் அவரது கனவு நிறைவேறவில்லை. நேர்மாற்றமாக கில்ஜியின் அரசிற்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டது. அவருடைய அமைச்சர் மண்டலி ராய் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார். கில்ஜியால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் எதிரியான முழப்பர் ஹலீமிடம் உதவி தேடுவது மட்டுமே கில்ஜிக்கு ஒரே வழியாக தெரிந்தது. அவரிடம் சென்று உதவி தேடினார். ஹலீம் எதிரி என்றாலும்  மரியாதையானவர், அவ்ர் உதவி செய்வார் என்ற என்னமோ தனது முன்னாள் எதிரியை நோக்கிச் செல்ல கில்ஜியை தூண்டியது. முழப்பர் உதவி செய்தார். தன்னுடைய பெரும் படையுடன் அவரே மாண்டு மீது போர் தொடுத்து அதை கைப்பற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய தளபதிகள் இந்த நாட்டை நாமே வைத்துக் கொள்ளலாமே என அலோசனை கூறினர். ஹலீம் அதை திட்டவட்டமாக மறுத்தார். படை வீரர்களுக்கு உத்தரவிட்டார், வெற்றி பெற்ற நிலத்தில் இனி ஒரு அடி கூட முன்வைக்க கூடாது, அனைவரும் உடனே நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டார். அஹ்மதாபாத் சமஸ்தானம் மீண்டும் முஸ்லிம்களிடம் திரும்பியது,

வரலாற்றில் இது போல ஏராளமான உதாரணங்கள் உண்டு. சமுதாய உடன்பிறப்புக்கள் தமக்குள் பரஸ்பரம் அன்சாரிகளாக இருக்கும் வரை அவர்கள் வென்றார்கள்.

அன்சாரித்தனத்தை உம்மத் கடைபிடிக்க தவரும் பட்சத்தில் உம்மத்தின் ஒரு பகுதி செழிப்பாக இருந்தாலும் மறு பகுதி சிரமங்களைச் சந்திக்கும். ஒட்டு மொத்ததில் முஸ்லிம்கள் மரியாதையை இழப்பார்கள்.

இப்போதையை பர்மா அகதிகளுடையவும் உலக்ம முழுவதிலும் அகதிகளாக இருக்கிற பாலஸ்தீன அகதிகள் சிரியா அகதிகள் செச்ன்யா அகதிகள் ஆப்கான அகதிகளுடைய வும் பிரச்சனை முஸ்லிம் உம்மத்தை மிக கொடூரமாக வதைக்க காரணம் உம்மத்தின் அன்சாரித்தனம் குறைந்து விட்டதாகும்.

சோதனைகள் சில இடங்களில் ஏற்படுவது இயற்கை ஆனால் வளமான இடத்தில் இருப்பவர்கள் அன்சாரித்தனத்துடன் நடந்து கொள்வார்கள் எனில் சோதனையின் அளவும் குறையும் அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.

இப்போதைய பர்மா அகதிகளின் நிலையை எடுத்துக்கொள்ளுங்கள்

மியான்மர் - பர்மா ஒரு காலத்தில் முஸ்லிம்கள் செல்வாக்குடனும் செல்வத்துடனும் பேர் போற்ற வாழ்ந்த நாடு இன்று அந்நாட்டில் முஸ்லிம்கள் விலங்குகளையும்  விட கீழாக நடத்தப்படுகிறார்கள்.

மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் ரொகிங்கியா இன மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது
ரொகிங்கியா என்பது ஒரு பேச்சு மொழியாகும். அது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.  ரொகிங்கியா இனத்தவர் மியான்மரின் பூர்வகுடிகளாகும் ஆனால் அங்குள்ள அவர்களை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகளான பொளத்தர்கள் கூறுகின்றனர். இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.

1948-ல்  ஆங்கிலேயர்கள்  மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.

 2012 மே மாதம் வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.

பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.

அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

ரொகிங்கியா மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.

நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ஜனநாயகஅரசு.

இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.

ரெகிங்கியா மக்களின் பிரச்சனைக்கு மூல காரணம் மியான்மரில் இருக்கிற பொளத்த இனவாத அரசு. ஆனால் இப்போது இந்தப் பிரச்சனை மீண்டும் திடீரென் வெடித்துள்ளதற்கு காரணம் மியான்மர் அரசு அல்ல. அகதி முகாம்களிலிருந்து தப்பித்து கடலில் தகுந்த பாதுகாப்பின்றி உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ரெகிங்க்யா அகதிகளை பல நாடுகள் ஏற்க மறுத்து நடுக்கடலில் தப்பிக்க வைப்பதும் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி காசு பார்க்கும் ஏஜெண்டுகள் அவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு கடத்திச் சென்று கொன்று குவிப்பதுமாகும்.

மலோசியாவின் ஒரு ஒதுக்குப்புரமான கரையோரத்தில் பல உடல்களை மொத்தமாக புத்தைப்பட்டிருக்கின்ற அடையாளங்களை மலேசிய அரசு சமீபத்தில் கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகிறது.

இப்போதைய ரொகிங்கியா அகதிகளுக்கு தேவைப்படுவது முஸ்லிம்களின் அன்சாரி உள்ளமாகும். ஆனால் அது தான் இப்போதைக்கு கேள்விக்குரியாகி இருக்கிறது.

பங்களாதேஷ் பாகிஸ்தான் மலேஷியா இந்தோனேஷியா போன்ற்  இஸ்லாமிய நாடுகள் மியான்மரின் அகதிகளுக்காக கொஞ்சமாக பரிவு காட்டினாலும் தேவையான பரிவை காட்டாமல் தவிர்க்கின்றன.

கடந்த சில மாதங்களாக மியான்மரில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை திரும்பியதாக தெரிந்ததும் பங்களாதேஷ் அரசு தனது எல்லையில் இருந்தத ரெகிங்யா அகதிகளை அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு இடம் மாற்றம் செய்ய முயற்சித்தது, இது போன்ற முயற்சிகளால் மீண்டும் மியான்மருக்கு செல்வதிலிருந்து தப்பிக்கவே

பன்னூற்றக்கணக்கான அகதிகள் சிறு படகுகளில் சுகாதாரமும் பாதுகாப்பும் உணவும் இன்றி பயணிக்கிறார்கள்.  மிக மோசமான அழிவையும் நிர்க்கதி நிலையையும் அடைகிறார்கள்.

அல்லாஹ் அந்த மக்களுக்கு தகுந்த ஆபியத்தை தந்தருள்வானாக!

உலக முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் அன்சாரிய்யத்த இல்லாமல் போகுமெனில் இத்தகைய அவலங்கள் தவிர்க்க முடியாத்தாகிவிடுவோம்.

உங்கள் நாட்டில் இருக்கிற யூதர்களை எல்லாம் எங்களிடம் அனுப்புங்கள் என இஸ்ரேல் கூறுகிறது.

பக்கத்து நாட்டின் அகதிகளுக்கு பாதுகாப்பும் உதவியும் அளிக்க முடியாத நிலையில் பங்களாதேஷ் இருக்கிறது.

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு முறை சொன்னார். இன்றைய முஸ்லிம்களின் பெரிய தோல்வி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியாமல் இருப்பது தான்

அன்சாரிய்யத் எனும் பண்பு இன்றை முஸ்லிம்களின் ஆதாரத் தேவையாக இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.

நம்மில் ஒவ்வொருவரும் அன்சாரிகளின் இயல்புகளை அடிக்கடி நினைவு கூர்ந்து பார்த்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இந்த தீன் நம் வரை வந்து சேர அவர்களின் எத்தகைய மாபெரிய உதவிகளை காரணமாகியிருக்கின்றன?


நாமும் தேவைப்படுகிற சமயங்களில் தேவைப்படுகிற மக்களை அப்படி கை நீட்டி அரவணைத்தோம் என்றால் நாமும் வளரு வோம் இஸ்லாமும் வளரும். மியான்மர்கள் இருக்காது. அல்லாஹ் கிருபை செய்வானாக! 

No comments:

Post a Comment