வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Monday, June 01, 2015

ரஹ்மத்தை பெறும் வழி

பிரபல ஹதீஸ் தொகுப்பான பைஹகீயில் ஒரு ஹதீஸ் வருகிறது.

وعن عائشة رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " هل تدرين ما هذه الليلة ؟ " يعني ليلة النصف من شعبان ، قالت : ما فيها يا رسول الله ؟ فقال : " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة ، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة ، وفيها ترفع أعمالهم ، وفيها تنزل أرزاقهم " فقالت : يا رسول الله ! ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال : " ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا . قلت : ولا أنت يا رسول الله ؟ ! فوضع يده على هامته ، فقال : " ولا أنا ، إلا أن يتغمدني الله منه برحمته " يقولها ثلاث مرات 

رواه البيهقي في " الدعوات الكبير" .

இந்த ஹதீஸ் இரண்டு தொகுதிகளை கொண்டிருக்கிறது.

ஒன்று பரா அத் இரவின் சிறப்பை பற்றியது.
மற்றது அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பற்றியது.

ஷஃபான் மாத்தின் 15 ம் நாள் இரவான இன்றைய இரவு இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டரீதியான சிறப்பை பெற்ற இரவாகும். இந்த இரவை நிராகரிப்பவர், மார்க்கத்தின் பலம் வாயந்த முன்னோடிகளை புறக்கணித்து விட்டு தன்னுடைய மனோஇச்சையை மார்க்கமாக கொண்டவரே ஆவார்.

அல்லாஹ் உம்மத்தை எச்சரிக்கிறான்

وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا(28)

فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنْ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِنْ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

أَفَرَأَيْتَ مَنْ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ

பெருமானார் எச்சரிக்கிறார்கள்:

  وقال عبد الله بن عمرو بن العاص عن النبي - صلى الله عليه وسلم - : لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به 

மனோ இச்சைப்படி நடப்பவர்களை அதை கடவுளாக்கிக் கொண்டவர்கள் என்கிறார்கள் பெருமானார், வணங்கப்படும் அந்த கடவுள் மீது தான் அல்லாஹ் அதிகம் கோபம் கொள்கிறான் என்றார்கள் பெருமானார் (ஸல்)

وقال أبو أمامة : سمعت النبي - صلى الله عليه وسلم - يقول : ما عبد تحت السماء إله أبغض إلى الله من الهوى 
மனோ இச்சையின் வழி செல்வதை விட்டு சரியான மார்க்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹதீஸ்கள் நல்வழி காட்டுகின்றன.

பைஹகீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் பரா அத் இரவின் சிறப்பிறகான காரணத்தை விளக்குகிறது, நம்முடைய முன்னோடிகள் அதை நமக்கு சரியாக புரியவைத்துள்ளனர்.

ஆயிஷா நாயகியின் ஹதீஸில் இடம் பெற்றுள்ள பரா அத் பற்றிய தகவல் குறித்து. பிரபல ஹதீஸ் விரிவுரையாளர் இப்னு ஹஜ்ர் ரஹ் கூறுகிறார்.

தெரியுமா ? என்ற கேள்வி விளங்குவதற்காக கேட்டதல்ல. இந்த இரவின் மிகிமையை எடுத்துக்காட்டி உறுதி செய்வதற்காக கேட்டதாகும்

قال ابن حجر نبه - عليه الصلاة والسلام - بهذا الاستفهام التقريري على عظم خطر هذه الليلة وما يقع فيها ، ليحمل ذلك الأمة بأبلغ وجه ، وآكده على إحيائها بالعبادة والدعاء والفكر والذكر ،


இந்த  நபி மொழி குறித்து அல்லாமா முல்லா அலி காரி கூறுகிறார்.

  يفرق فيها كل أمر حكيم என்ற் துகான் அத்தியாயத்தின் வசனம் குறீப்பிடுகிற இரவு லைலத்துல் கத்ர் தான். எனினும் பராஅத் இரவிலும் பங்கீடு நடைபெறுவதாக இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது (மிர்காத்)

أن الليلة التي يفرق فيها كل أمر حكيم في الآية هي ليلة القدر لا ليلة النصف من شعبان ، ولا نزاع في أن ليلة نصف شعبان يقع فيها فرق ، كما صرح به الحديث ، وإنما النزاع في أنها المرادة من الآية ، والصواب أنها ليست مرادة منها ، وحينئذ يستفاد من الحديث والآية وقوع ذلك الفرق في كل من الليلتين إعلاما بمزيد شرفهما اهـ . 

முல்லா அலீ காரி

ஹிஜ்ரி 930 ல் பிறந்து 1016 ல் வபாத்தான முல்லா அலீ காரி – இன்றைய ஆப்கானில் உள்ள ஹராத்தில் பிறந்து மக்காவில் நல்லடக்கமான பெருந்தகை – மாபெரும் இஸ்லாமிய பேரறிஞர்களில் ஒருவர். அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுகிறவர். சிறந்த திருக்குர் ஆன் விரிவுரையாளரும் ஹதீஸ் விரிவுரையாளரும் ஆவார். ஹதீஸ் தொகுப்பான மிஷ்காத்திற்கு அவர் எழுதியுள்ள விரிவுரையான மிர்காத்தை கொஞ்சம் படித்துப் பார்த்தாலே அவரது மேதமை தெரியவரும்.
எங்களுடைய் உஸ்தாது  அல்லாமா ஷப்பீர் அலி ஹஜரத் (தாமத் பராகாதுஹி. வ ஹபிழஹுல்லாஹ்) சொல்லுவார் ஆலிம்கள் ஒவ்வொருவரிடமும் மிர்காத் இருக்க வேண்டும். தீனை விளங்கிக்கொள்ள அது இருந்தால் போதும்

இன்றைய மேதாவிகள் ஒற்றைவார்த்தையில் மறுப்பது போல இது லயீப் என்று சொல்லி விட்டுச் சென்று விடாமல் முல்லா அலி காரி கையாளும் நடை முறை இரண்டு இரவுகளின் சிறப்பும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே காரணமாகும்.

இறப்பு பிறப்பு வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின்தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு லைலதுல் கத்ருடையஇரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறதுஎன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

பரா அத் இரவு குறித்து வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலகினமானது அல்ல.

وعن أبي موسى الأشعري رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن " . رواه ابن ماجه1308 –

இது சஹீஹ் என்று இன்றைய மேதாவிகளின் ஞான குரு அல்பானி சான்றளித்திருக்கிறார்.

தங்களுடை குருவால் சான்றளிக்கப்பட்ட ஒரு சஹீஹான ஹதீஸை மறுக்கும் துர்க்குறிகள் மார்க்கத்தின் எதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் தமது விருப்பத்தை மார்க்கமாக்கிக் கொண்ட பேர்வழிகளாகும்.

முல்லா அலி காரி மார்க்கத்தின் எதார்த்தததை எவ்வளவு அழகாக விளக்கித் தருகிறார் என்பதை இந்தப் போக்கோடு ஒப்பிட்டுப்பாருங்கள்.

எது தீன் வழி என்பதை புரிந்து கொள்வது சிரமமாக இருக்காது.

அல்ஹம்து லில்லாஹ்.

இந்த இரவின் மகத்துவம் பல்வேறு பட்ட நபித்தோழர்களின் அறிவிப்புக்கள் மூலமாக பேசப்படுவதால் ஹதிஸ்கள் அனைத்தும் சேர்ந்து சஹீஹ் உறுதியானது என்ற தரத்தை அடைவதாக மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றன.

إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي

عن علي رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا كانت ليلة النصف من شعبان ، فقوموا ليلها ، وصوموا يومها ، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ، فيقول : ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا ؟ حتى يطلع الفجر " . رواه ابن ماجه


மார்க்கத்தின் முன்னோடிகளிடமிருந்து கிடைக்கும் பிரார்த்த்தனை.

وعن كثير من السلف ، كعمر بن الخطاب ، وابن مسعود وغيرهما ، أنهم كانوا يدعون بهذا الدعاء : اللهم إن كنت كتبتنا أشقياء فامحه واكتبنا سعداء ، وإن كنت كتبتنا سعداء فأثبتنا ، فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب

عن ابن مسعود رضي الله عنه أنه كان يدعو بهذا الدعاء أيضا
நம்முடைய சிறப்புமிக்க முன்னோடிகள் கற்றுத்தருகிற வழியில் மார்க்கத்தை கடைபிடித்து ஒழுக அல்லாஹ் கிருபை செய்வானாக!

ஆயிஷா ரலி அறிவிக்கிற ஹதீஸில் பரா அத் இரவின் சிறப்பு பேசப்பட்ட பிறகு அல்லாஹ்வின் ரஹ்மத்தை பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது,

فقالت : يا رسول الله ! ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال : " ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا

நமது வணக்கங்கள் – பிரார்த்தனைகள் – ஏற்கப்படுவதும் – நமக்கான தேவைகளை அல்லாஹ் நிறைவு செய்து தருவதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட ரஹ்மத் எனும் அருளே தவிர எதுவும் அல்லாஹ்வுக்கு கடமை அல்ல.  இதை நாம் புரிந்து அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும்.

இறைவா எங்களுக்கு நீ எவ்வளவோ அருள் செய்கிறாய்! அந்தக் கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூட சக்தியற்றவர்கள் நாங்கள்! உனக்கு நன்றி செலுத்தக் கூட நீயே அருட்செய்ய வேண்டும் என்பது தான் நல்லடியார்களின் பிரார்த்தனையாகும்.

தனக்கு அல்லாஹ் தந்த அருட்கொடைகளை உணர்ந்து கொண்ட சுலைமான (அலை) அல்லாஹ்வை கேட்டார்கள்

وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பு அல்லாஹ் நமக்கு செய்கிற முக்கிய ரஹ்மத்தாகும்.

அந்த ரஹம்த் கிடைக்கப்பெறாதவர்கள் தான் பிர் அவ்ன்களும் காரூன்களுமாவர்,

அதனால் தான் அந்த ரஹ்மத் தனக்கும் கூட தேவை என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹ்வின் ரஹ்மத் விசாலமானது.

அந்த ரஹ்மத்தை பெருவதற்கு மிக முக்கியமான வழி  பெருமானாரின் முன் மாதிரியை பின்பற்றுவதேயாகும்.

அதைப் புரிந்து கொண்ட காரணத்தால் சஹாபாக்கள் பெருமானாரை அணுவிலும் அணுவாக பின்பற்றினார்கள்,

பெருமானார் சிரித்த இடத்தில் சிரித்தார்கள்

حدثنا محمد بن جعفر، حدثنا سعيد، عن قتادة، عن مسلم بن يسار، عن حمران بن أبان، عن عثمان بن عفان، رضي الله عنه أنه دعا بماء فتوضأ ومضمض واستنشق ثم غسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ثلاثا ومسح برأسه وظهر قدميه ثم ضحك فقال لأصحابه ألا تسألوني عما أضحكني فقالوا مم ضحكت يا أمير المؤمنين قال رأيت رسول الله صلى الله عليه وسلم دعا بماء قريبا من هذه البقعة فتوضأ كما توضأت ثم ضحك فقال ألا تسألوني ما أضحكني فقالوا ما أضحكك يا رسول الله فقال إن العبد إذا دعا بوضوء فغسل وجهه حط الله عنه كل خطيئة أصابها بوجهه فإذا غسل ذراعيه كان كذلك وإن مسح برأسه كان كذلك وإذا طهر قدميه كان كذلك‏.‏احمد

عن علي بن ربيعة ، أنه كان ردفا لعلي رضي الله عنه ، فلما وضع رجله في الركاب قال : بسم الله فلما استوى على ظهر الدابة قال : الحمد لله ثلاثا ، والله أكبر ثلاثا ، ( سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين ) الآية ثم قال : لا إله إلا أنت سبحانك إني قد ظلمت نفسي فاغفر لي ذنوبي ، إنه لا يغفر الذنوب إلا أنت ، ثم مال إلى أحد شقيه فضحك فقلت : يا أمير المؤمنين ، ما يضحكك ؟ قال : إني كنت ردف النبي صلى الله عليه وآله وسلم فصنع رسول الله صلى الله عليه وآله وسلم كما صنعت فسألته كما سألتني فقال رسول الله صلى الله عليه وآله وسلم : " إن الله ليعجب إلى العبد إذا قال : لا إله إلا أنت إني قد ظلمت نفسي فاغفر لي ذنوبي ، إنه لا يغفر الذنوب إلا أنت قال : عبدي عرف أن له ربا يغفر ويعاقب " . هذا حديث صحيح على شرط مسلم ولم يخرجاه مستدرك

 عن عبد الله بن مَسْعُودٍ رضي الله عنه ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : 
(
آخِرُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ رَجُلٌ، فَهْوَ يَمْشِي مَرَّةً، وَيَكْبُو مَرَّةً، وَتَسْفَعُهُ النَّارُ مَرَّةً ، فَإِذَا مَا جَاوَزَهَا الْتَفَتَ إِلَيْهَا، فَقَالَ: تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ ، لَقَدْ أَعْطَانِي اللهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ، فَتُرْفَعُ لَهُ شَجَرَةٌ، فَيَقُولُ: أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلِأَسْتَظِلَّ بِظِلِّهَا، وَأَشْرَبَ مِنْ مَائِهَا، فَيَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: يَا ابْنَ آدَمَ، لَعَلِّي إِنَّ أَعْطَيْتُكَهَا سَأَلْتَنِي غَيْرَهَا، فَيَقُولُ: لَا، يَا رَبِّ، وَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ، فَيُدْنِيهِ مِنْهَا، فَيَسْتَظِلُّ بِظِلِّهَا، وَيَشْرَبُ مِنْ مَائِهَا، ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ هِيَ أَحْسَنُ مِنَ الْأُولَى، فَيَقُولُ: أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَشْرَبَ مِنْ مَائِهَا، وَأَسْتَظِلَّ بِظِلِّهَا، لَا أَسْأَلُكَ غَيْرَهَا، فَيَقُولُ: يَا ابْنَ آدَمَ، أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا، فَيَقُولُ: لَعَلِّي إِنْ أَدْنَيْتُكَ مِنْهَا تَسْأَلُنِي غَيْرَهَا، فَيُعَاهِدُهُ أَنْ لَا يَسْأَلَهُ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهِ، فَيُدْنِيهِ مِنْهَا فَيَسْتَظِلُّ بِظِلِّهَا، وَيَشْرَبُ مِنْ مَائِهَا، ثُمَّ تُرْفَعُ لَهُ شَجَرَةٌ عِنْدَ بَابِ الْجَنَّةِ هِيَ أَحْسَنُ مِنَ الْأُولَيَيْنِ، فَيَقُولُ: أَيْ رَبِّ، أَدْنِنِي مِنْ هَذِهِ لِأَسْتَظِلَّ بِظِلِّهَا، وَأَشْرَبَ مِنْ مَائِهَا، لَا أَسْأَلُكَ غَيْرَهَا، فَيَقُولُ: يَا ابْنَ آدَمَ، أَلَمْ تُعَاهِدْنِي أَنْ لَا تَسْأَلَنِي غَيْرَهَا، قَالَ: بَلَى يَا رَبِّ، هَذِهِ لَا أَسْأَلُكَ غَيْرَهَا، وَرَبُّهُ يَعْذِرُهُ لِأَنَّهُ يَرَى مَا لَا صَبْرَ لَهُ عَلَيْهَا، فَيُدْنِيهِ مِنْهَا، فَإِذَا أَدْنَاهُ مِنْهَا فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ ، فَيَقُولُ: أَيْ رَبِّ، أَدْخِلْنِيهَا، فَيَقُولُ: يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ؟ أَيُرْضِيكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا؟ قَالَ: يَا رَبِّ، أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ "، فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ، فَقَالَ: أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكُ فَقَالُوا: مِمَّ تَضْحَكُ، قَالَ: هَكَذَا ضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: مِمَّ تَضْحَكُ يَا رَسُولَ اللهِ، قَالَ: " مِنْ ضَحِكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ: أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: إِنِّي لَا أَسْتَهْزِئُ مِنْكَ، وَلَكِنِّي عَلَى مَا أَشَاءُ قَادِرٌ 

இப்படிச் சிரிக்க வேண்டும் எனற அவசியம் இல்லை. ஆனால் பெருமானாரின் சிரிப்பை பின்பற்றுவதற்காக சிரித்தார்கள்.

பெருமானார் நின்ற இடத்தில் சஹாபாக்கள் நின்றார்கள்.

பெருமானார்நின்று தண்ணீர் குடித்ததை பார்த்ததால் அலீ ரலி நின்று தண்ணீர் குடித்தார்கள்

عَنْ النَّزَّالِ قَالَ أَتَى عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى بَابِ الرَّحَبَةِ فَشَرِبَ قَائِمًا فَقَالَ: (إِنَّ نَاسًا يَكْرَهُ أَحَدُهُمْ أَنْ يَشْرَبَ وَهُوَ قَائِمٌ وَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ
أخرجه البخاري في صحيحه، كتاب الأشربة، باب الشرب قائماً،ح (5184)

பெருமானார் பயனத்தில் ஒரு இடத்தில் குனிந்தார்கள் என்பதற்காக அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் இப்னு உமர் ரலி குனிவார்கள்

عَنْ مُجَاهِدٍ قَالَ: (كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَمَرَّ بِمَكَانٍ فَحَادَ عَنْهُ فَسُئِلَ لِمَ فَعَلْتَ فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا فَفَعَلْتُ
الإمام أحمد قي مسنده، كتاب مسند المكثرين من الصحابة، باب مسند عبد الله بن عمر بن الخطاب، ح (4638

பெருமானாரின் சுன்னத்துக்களையும் ஹதீஸ்களையும் நமது வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு அதற்கு முற்றிலுமாக இணங்கி நடப்பதே அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளும் வழியாகும்.

நாம் வாழ்கிற இன்றைய காலத்தில் பெருமானாரின் சுன்னத்துக்களையும் ஹதிஸ்களையும் தமது விருப்பத்திற்கேபவும் வசதிக்கேற்பவும் திசை திருப்புகிற பழக்கம் பெருகிவருகிறது.

ஒரு ஹதீஸ் பெருமானார் சொன்னது என்பதை ஹதிஸ்களை அறீஞர்கள் உறுதிப்படுத்துகிற போது அது தமது சொந்த விருப்பத்தேற்க இப்படி பெருமானர் சொல்லி இருக்க மாட்டார்கள், இப்படி பெருமானார் சொல்லியிருப்பார்கள் என்று சொன்னால் அது பெருமானாரின் தகுதிக்கு பொருத்தமானதாக ஆகாது என்று பேசுகிற ஒரு சாரரார் உருவாகியிருக்கிறார்கள்.

தம் மனோஇச்சையை மார்க்கமாக பின்பற்றும் அந்தக் கூட்டத்திடமிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானக!

மேலும் சில தகவல்கள் தேவை எனில் இந்த் அரபுக்கட்டுரையிலிருந்து எடுத்துக் கொள்க!





No comments:

Post a Comment