வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 18, 2015

அன்பு மாதமே! அருள் மாதமே!

ரமலான் வந்து விட்டது. நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

நமது சந்தோஷத்திற்கு காரணம் என்ன?

பெருநாளா? கஞ்சியா? சஹரா?

நமது மகிழ்ச்சிக்கான நோக்கத்தை முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அதற்கேற்ப செயல் பட முடியும்.

அதிகமாக அமல்களை செய்யும் ஒரு வாய்ப்பு என்று கருது வோமா னால்  நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம் சரியானது.

அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள ஆயுள் நீளமானது என்பதை போல தோன்றினாலும் – அது குறைவானதே!

உலகின் பல நிகழ்வுகளோடு ஒப்பிடுகிற போது 60 க்கும் 70 க்கும் இடைப்பட்ட நம்முடைய வாழ்நாள் என்பது மிக குறைவானதே!

ஹோலி என்றெரு வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுகிறது, நம்மில் பலருக்கும் அதை ஒரு தடவை பார்க்கக் கூட வாய்ப்புக்கிடைக்காது.

நம்முடைய வாழ்க்கை இவ்வளவுதான்.  இந்த குறுகிய வாழ்வை நன்மைகளால் எந்த அளவு நிரப்பிக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் வெற்றியாளர் ஆவோம். மகிழ்ச்சியடைவோம்.

தேர்வு எழுதுகிற மாணவர்கள் தமக்கு கிடைத்திருக்கிற நேரத்தில் எத்தனை சரியான பதில்கள் எழுத முடியுமோ அத்தனை பதில்களையும் எழுத முயற்சி செய்வார். அது போல ரமலானிய வாய்ப்புக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முய்றசிக்க வேண்டும்.

ரமலான் ஒரு அற்புத வாய்ப்பு  

பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமான வார்த்தைகளால் வரவேற்ற மாதம். சமுதாயத்தை ஊக்கமும் உற்சாகமும் படுத்திய மாதம்


عن سلمان الفارسي رضي الله عنه أنه قال : ( خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر عظيم مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعاً ، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدّى سبعين فريضة فيما سواه ، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من النار رواه ابن خزيمة

ஒரு ரமலானை பெற்றுக்கொள்வது வாழ்வின் மிகப்பெரிய பேறு.

عن طلحة بن عبيد الله أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض  - احمد

ஷஹீதை விட ரமலானை பெற்றுக் கொண்டவர் அதிக மரியாதைக்குரிய்வர் ஆகிறார்.

இந்த ரமலானை நாம் எப்படி கருதுகிறோம். எப்படி பயன்படுத்தப் போகிறோம்.

மூன்று பேர் ஒரு இமாமிடம் வந்தனர். தமது இயலாமையை முறை இட்டனர், பக்கத்திலிருந்த ஒரு செல்வந்தரை அணுகுமாறு இமாம் கூறினார். ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயை அவர் கொடுத்தார்.  செல்வந்தரை சந்தித்து விட்டு வந்த முதலாமர் ஹஜ்ரத்திடம் என்ன பெரிய மனிதர் இவர் இத்தனை தூரத்திலிருந்து வருகிறேனே!  ஒரு நூறு ரூபாயை தருகிறாரே என அதை ஒரு பத்து ரூபாய்க்கும் கீழாக மதித்தார். இரண்டாமவரே நூறு ரூபாய் கொடுத்தார் என அதற்குரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மூன்றாமவரோ இவ்வளவு கிடைக்கும் என்று எதிர்பாராதவரைப் போல் நூறு ரூபாய கொடுத்தார் ஹஜ்ரத் என ஆச்சரியமாக சொன்னார்.

ரமலானை அணுகுவதிலு அல்லாஹ் நம்க்கு தர இருக்கிற அருட்கொடைகளை பெற்றுக் கொள்வதில் நாம் என்ன மனோ நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமானதாகிறது,

ஒரு ரமலான் நமக்கு சரியாக கிடைத்து விடுமானால் நமது பாவங்கள் அழிந்து விடும்.

عن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه وسلم كان يقول : (الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر ).
இந்த ரமலானில் நம்மால் முடிந்த அமல்களை அதிகமாக செய்வோம். அல்லாஹ் அவற்றை ஏற்றுக் கொள்வானாக என்ற சிந்தனையோடு இந்த ரமலானை நாம் எதிர்கொள்வோம்
ரமலானின் பிரதான வணக்கமான நோன்பை முறையாக கடைபிடிப்போம்.
நோன்பு மகத்தான் நன்மைக்குரிய ஒரு வணக்கமாகும்.
நோனபினால் கிடைக்கும் நன்மை என்ன வென்பதை நாம் அறிந்திருந்தால் நமது வாழ்வின் மகிழ்ச்சியான மதிப்பான பொழுதில் எல்லாம் நோன்பாக இருப்போம் என ஆசைப்படுவோம்.
மூத்தா யுத்தில் குற்றுயிரும் குலையுயிறுமாக இருந்த ஜாபர்  பின் அபீதாலிப் ரலி தண்ணீர் அருந்த வில்லை, தங்களை அனுப்பிய போது இவர் தாக்கப்பட்டல் அடுத்து இன்னவர் என்று பெருமானார் சொன்ன போதே தமது மரணம் நிச்சயம் என அறிந்து கொண்டதாக கூறிய ஜாபர் ரலி அவர்கள் அல்லாஹ்வை சந்திக்கிற இன்றைய நாளில் நான் நோன்பாளியாக இருக்க ஆசைப்பட்டேன் என்றார்கள்.
أمَّر الرسول على هذا البعث زيد بن حارثة، وقال: (إن قُتل زيد فجعفر، وإن قُتل جعفر فعبد الله بن رواحة)، وعقد لهم لواءً أبيضاً، ودفعه إلى زيد بن حارثة.

நோன்புக்கு அல்லாஹ்வே கூலி தருவதாக வந்துள்ள ஹதீஸுக்கு இப்னு உயையனாவின் விளக்கம்.

كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ "؟
فَقَالَ ابْنُ عُيَيْنَةَ: هَذَا مِنْ أَجْوَدِ الْأَحَادِيثِ وَأَحْكَمُها، إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يُحَاسِبُ اللهُ عَزَّ وَجَلَّ عَبْدَهُ وَيُؤَدِّي مَا عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ مِنْ سَائِرِ عَمَلِهِ حَتَّى لَا يَبْقَى إِلَّا الصَّوْمُ، فَيَتَحَمَّلُ اللهُ عَزَّ وَجَلَّ مَا بَقِيَ عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ وَيُدْخِلُهُ بِالصَّوْمِ الْجَنَّةَ

كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ "؟
فَقَالَ ابْنُ عُيَيْنَةَ: هَذَا مِنْ أَجْوَدِ الْأَحَادِيثِ وَأَحْكَمُها، إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يُحَاسِبُ اللهُ عَزَّ وَجَلَّ عَبْدَهُ وَيُؤَدِّي مَا عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ مِنْ سَائِرِ عَمَلِهِ حَتَّى لَا يَبْقَى إِلَّا الصَّوْمُ، فَيَتَحَمَّلُ اللهُ عَزَّ وَجَلَّ مَا بَقِيَ عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ وَيُدْخِلُهُ بِالصَّوْمِ الْجَنَّةَ
மனிதனின் நன்மைகள் தீர்ந்து விடுகிற போது அல்லாஹ் நோன்பை மதிப்பு நிர்ணயிக்கப்படாததாக இருப்பது கொன்டு வந்து அதன் வழி மக்களை ஈடேற்றுகிறான்.
ரமலானின் நோன்பு நோற்று தராவீஹை நிறைவேற்றுவதோடு நாம் கடைபிடிக்க வேண்டிய் இரண்டு முக்கிய விச்யஙகளை பெருமானார் இணைத்தே சொன்னார்கள்.
இது பொருமையின் மாதம். பசியுடன் இருக்கும் போது தான் கோம் வரும். அல்லாஹ்வுக்கா பசித்திருக்கிற போது அது சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் தான் அதிகரிக்க வேண்டும்.
ரமலானின் இன்னொரு பண்பாடு – இதில் வெளிப்படும் சகோதரத்துவ உதவிகளாகும்.
«ايما اهل قرية بات فيهم امرؤ جائع فقد برئت منهم ذمة الله»

ஒரு மனிதனை பசித்திருக்கச் செய்து ஒரு ஊர் உறங்குமெனில் அந்த ஊரிலிருந்து அல்லாஹ்வின் பெறுப்பு நீங்கிவிடுகிறது,
நாம் நம்மைச் சார்ந்தவர்களுக்கு வேண்டியவர்களுக்கு அவர்களை அலைய விடாமலே தேடிச் சென்று உதவ வேண்டும்.
அல்லாஹ் நம்மை அலைய விட்டல் என்னவாகும் என்று யோசிக்க வேண்டும்,?
وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزداد فيه رزق المؤمن من فطر فيه صائماً كان مغفرة لذنوبه وعتق رقبته من النار، وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيىء، قالوا: يا رسول الله: ليس كلنا يجد ما يفطر به الصائم قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب لمن فطر صائما على مذقة لبن أو شق تمرة أو شربة ماء، ومن سقى صائما سقاه الله عز وجل من حوضي شربة لا يظمأ بعدها حتى يدخل الجنة» ،

இவ்வாறு மக்களுக்கு அனுசரைனையாக உதவியாக நடந்து கொள்கிற போது மக்களின் ரிஜ்கு குறைந்து விடும் என்று நினைக்க கூடாது. அல்லாஹ் மற்ற ரிஜ்கை  அதிகமாக தருவான்


அல்லாஹ் இந்த ரமலானை நமக்கு நற்சாட்சியாக ஆக்குவானாக!

No comments:

Post a Comment