மாதங்களில்
சிறந்தது ரமலான்
நாட்களில்
சிறந்தது ஜும் ஆவுடைய நாள்
இந்த
சிறப்பான நேரத்தில் நம் அனைவர் மீதும் ரமலானின் அருட்கொடைகள் குறைவின்றி பொழியட்டுமாக!
இந்த
ரமலானை நமக்கு சார்பாக சாட்சி சொல்லக்கூடியதாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக! நமக்கு பாதகமானதாக
ஆவதிலிருந்து பாதுகாப்பானாக! இந்த ரமலனில் சீதாவிகளான பெருமக்கள் கூட்டத்தில் நம்மையும்
நம்மைச் சார்ந்தவர்களை அல்லாஹ் சேர்த்தருள்வானாக! இந்த ரமலானில் துரதிஷ்டசாலிகளாகிவிடாமல்
அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!
நமது
நோன்பை, தராவீஹ் வணக்கத்தை, தான தர்மங்கங்களை, திலாவத்தை அவற்றில் குறைகள் ஏதுமிருந்தாலும் தனது பெருங்கருணையால்
அவற்றை பொறுத்து நிறைவான கூலியை அல்லாஹ் தந்தருள்வானாக!
முஸ்லிம்
சமுதாயம் பெருந்திரளாக கூடுகிற நேரங்களில் இன்றைய இந்த ஜும் ஆவும் ஒன்று
இன்றைய
சூழலில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய வாழ்வியல் அம்சத்தை நினைவு
படுத்த ஆசைப்படுகிறேன்.
நமது
மார்க்கம் நம்மை தூய முஸ்லிமாக வாழச் சொல்கிறது.
வஜ்ஜஹ்துவில்
பயன்படுத்துகிற ஹனீபன் என்ற வார்த்தைக்கு இஸ்லாம் அல்லாத அனைத்தை விட்டும் விலகி முழு
முஸ்லிமாக வாழ்வேன் என்பதே பொருளாகும்.
நாம்
முழு முஸ்லிம்களாக வாழ் வேண்டும்.
நம்முடைய
கொள்கைகளில் தளர்வோ தளர்ச்சியோ கூடாது. யாருக்காகவும்.
சஃது
பின் அபீ வக்காஸ் ரலி அவர்கள் தம்முடைய 17 வயதில் இஸ்லாத்தில் மூன்றாவது நபராக இணைந்த
போது அவருடைய தாய் அதை ஏற்க மறுத்தார், பழைய மத்திற்கு திரும்பாவிட்டால் நான் சாப்பிட
மாட்டேன் என சத்தியம் செய்தார். அம்மாவின் அளவு கடந்த அன்பு கொண்டிருந்த சஃது ரலி க்கு
அது பெரும் சோதனையாக இருந்தது. மூன்று நாட்கள் நகர்ந்தன அம்மா மயக்க நிலைக்கு ஆளானார்.
பொறுக்க முடியாத சஃது அம்மாவிடம் நெரே சென்று கூறினார்.
“அம்மா
தெரிந்து கொள் உனக்கு நூறு உயிர் இருந்து ஒவ்வொன்றாக அது பிரிவதை நான் பார்க்க நேர்ந்தாலும்
என்னுடைய தீனை விட மாட்டேன், விரும்பினால் சாப்பிடு! இல்லை எனில் சாப்பிடாமல் இரு!
قال الطبراني عن داود بن أبي هند أن
سعد بن مالك قال أنزلت في هذه الآية "وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به
علم فلا تطعهما" الآية قال كنت رجلا برا بأمي فلما أسلمت قالت يا سعد ما هذا الذي
أراك قد أحدثتلتدعن دينك هذا أو لا آكل ولا أشرب حتى أموت فتعير بي فيقال يا قاتل أمه
فقلت لا تفعلي يا أمه فإني لا أدع ديني هذا لشيء فمكثت يوما وليلة لم تأكل فأصبحت قد
جهدت فمكثت يوما آخر وليلة لم تأكل
فأصبحت قد جهدت فمكثت يوما وليلة أخرى لا تأكل فأصبحت قد اشتد جهدها فلما
رأيت ذلك قلت يا أمه: تعلمين والله لو كانت لك مائة نفس فخرجت نفسا نفسا ما تركت ديني
هذا لشيء فإن شئت فكلي وإن شئت لا
تأكلي فأكلت.
நம்முடைய
இபாத்துகளில் தடுமாற்றமோ தடைகளோ ஏற்பட நாம் அனுமதித்து விடக்கூடாது எந்த சூழ்நிலையிலும்
.
an advance history of india என்ற நூலில் ஆர் சி மஜும்தாரும் .ராய் சவுத்ரியும்
இணைந்து எழுதுகிறார்கள். பல்க் யுத்ததின் போது தன்னைச் சுற்றி சண்டை நடந்து கொண்டிருந்த
சூழ்நிலையில் அவ்ரங்க சீப் யானையின் நிழலில் தொழுது கொண்டிருந்தார் என்று எழுதுகிறார்கள்.
1658. 1707 வரை காபுலில் இருந்து தமிழ்நாடு வரை
இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசராம
அவ்ரங்கசீப்பீன் ஆட்சியதியாகாரமோ தலை திருப்ப விடாத பணிகளோ அல்லாஹ்வுக்கான கடமைய
நிறைவேற்றுவதிலிருந்து அவரை தடுக்க வில்லை
பள்ளியில்
பஜ்ரு ஜமாத் தொழுகை
வாரத்திற்கு
மூன்று நாள் நோன்பு
ரமலானின்
பிற்பகுதியில்
உலமாக்களுடன் திக்ர்
இறுதிப்
பத்தில் இஃதிகாப் அங்கேயா அரசு தஸ்தாவேஜுகளில் கையொப்பம் இடுதல் என
அவரது வாழ்க்கை இருந்ததாக வரலாறு சொல்கிறது.
நாம் நமது வேலைகளையு இபாத்துக்களையும் கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வோம் .
ஒரு முஸ்லிம் இப்படித்தான் இறைவனை வணங்கி வழிபடுகிற
வாழ்வில் எதற்காகவும் சம்ரம் செய்து கொள்ளாதவராக இருப்பார். அந்தக் கடமைகளை
நிறைவேற்றுவதில் சுனக்கத்திற்கு இடமிருக்க கூடாது,
நம்முடைய கொள்கையோ கோட்பாடுகளால் பிறரால் குறை
கூறக்கப்படுமானால் அதற்காக தீனை விட்டுவிடுகிறவர்களாக அல்ல. தீனின் சார்பாளர்களாக
இன்னும் அதிக பற்றுள்ளவர்களாக மாற வேண்டும்.
அவுரங்கசீப் அரசவையில் இசையை தடை செய்தார். அதை கேலி
செய்யும் விதமாக இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு போலியான பாடையை தயார் செய்து
அரசவை வழியே கொண்டு சென்றார்கள். இது என்ன என்று அவுரங்கசீப் கேட்டார். இது தான்
இசை இதை புதைக்க கொண்டு போகிறோம் என அரசரின் உத்தரவை விமர்சனம் செய்து
பேசினார்கள்,
அரசர் அசரவில்லை. நல்லது இதை ஆழமாக புதைத்து விடுங்கள்
என்றார்,
மார்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றுவதில் பழிச் சொற்களுக்கு
பயந்து பணிந்து விடாமல் துணிந்து நிற்கவேண்டும்.
நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பதில் நாம்
மன உறுதியோடு இருக்க வேண்டும்.
நமது அடையாளம் வெட்கம்
நமது அடையாளம் கட்டுப்பாடு
நமது அடையாளம் கண்ணியம்
இதில் ஒவ்வொன்றும் பல உதாரணங்களைச் சொல்ல நாம் நினைவு
படுத்திக் கொள்ள முடியும்,
முஸ்லிம்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என எந்த
அடையாளங்களை நல்ல விதமாக உலகம் விளங்கி வைத்துள்ளதோ அந்த அடையாளங்கள் நம்மில்
வெளிப்படுமாறு ஒரு வாழ்க்கை நாம் வாழ வேண்டும்.
இந்த ரமலானில் அப்படி வாழ்வோம் என உறுதி மொழி ஏற்போம். என்ன
பாய் நீ எல்லாம் ஒரு முஸ்லிமா என்ற கேள்விக்கு ஆளாகி விடதபடி வாழ்வோம் என உறுதி
ஏற்போம்.
இவ்வாற்ய் கொள்கை ரீதியாகவும் வழிபாடு ரீதியாகவும் மிகுந்த
சிரத்தையுடன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்வோம் என உறுதி மொழி எடுக்கிற நாம் சமூக ரீதியாக மிக இளகிய – பெருந்தன்மையான இதயத்தோடு
வாழ் வேண்டும்.
நம்முடைய கொள்கையும் வணக்க வழிபாடுகளும் பிற மக்களை
அணுகுகிற விசயத்தில் நம்மை குறுகிய சிந்தனை கொண்டவர்களாக ஆக்கி விடக் கூடாது,
மக்களை பார்க்கும் பார்வையை அல்லாஹுவும் பெருமானாரும்
விசாலப்படுத்திக் காட்டினார்கள்
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي
آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ
الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا} [الإسراء: 70].
ஒரு யூதனின் பிரேத ஊர்வலத்தை கண்டு பெருமானார் எழுந்து
நின்ற நீங்கள் கேட்டு மிகவும் பழகிப்போன் அந்தச் செய்தியை ஞாபகப்படுத்துகிறேன்.
யூதனுக்கெல்லாம் எழுந்து நிற்கலாமா ? என்ற சஹபாக்களின்
கேள்வியில் இஸ்லாமிய தூய போங்கின் தீவிரமும், யூதர்களின் பொய் முகத்தின் மீதான
கோபமும் வெளிப்படுகிறது,
ஆனால்
மனிதனை மனிதராக பார்க்கிற ஒரு பார்வையை பெருமானார் தோழ்ரகளுக்கு கற்பித்தார்கள்.
இதை
உம்மத் தன்னுடைய வாழ்வில் கடை பிடித்தது.
ولما ودخل المسلمون أرض فارس بلد المجوس عباد
النار، أَنَّه َمَرَّتْ جَنَازَةٌ بقَيْسَ بْنَ سَعْدٍ وَسَهْلَ بْنَ حُنَيْفٍ
كَانَا بِالْقَادِسِيَّةِ، فَقَامَا، فَقِيلَ لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ
الأَرْضِ. فَقَالا: إِنَّ رَسُولَ اللهِ مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ، فَقِيلَ: إِنَّهُ
يَهُودِيٌّ، فَقَالَ: "أَلَيْسَتْ نَفْسًا - புகாரி
பெருமானாரின் கால் சோர்ந்து போகும் அளவு நின்றார்கள் என்றொரு ஹதீ ஸ் முஸ்லிமில் வருகிறது.
ففي رواية مسلم عن جابر بن عبد الله قال:
"قَامَ النَّبِيُّ وَأَصْحَابُهُ
لِجَنَازَةِ يَهُودِيٍّ حَتَّى تَوَارَت"[
மற்ற
மக்களுக்கு நாம் அடிக்கடி சொல்லுகிற் இந்தச் செய்தியுல் நாம் யோசிப்பதற்கும் முக்கிய
வழிகாட்டுதல் ஒன்று இருக்கிறது.
சமூக
தளத்தில் நமது பார்வை விசாலமானதாக இருக்க வேண்டும். எல்லா மனிதர்களையும் மதிப்பதாக அமைய வேண்டும்.
இதே
போல இன்னொரு செய்தியும் உண்டு. அஸ்மா அம்மையாரின் தாயார் இஸ்லாத்தை தழுவாத நிலையில்
மதீனா வந்து சேர்ந்த போது தன்னுடைய தாயை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாமா என அவர் பெருமானைர்
கேட்ட போது தாரளமாக சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதித்தார்கள்.
1. நீதி
2. சமத்துவம்
3. கருணை
இந்த
மூன்றிலும் மதம் பார்த்து நடந்து கொள்ளலாகாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது
فاحكم بين الناس بالعدل
என்று தான் அல்லாஹ் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு என்று
தனிப்படுத்த வில்லை.
எல்லோருடனும்
மென்மையாக பழக வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கு இடப்பட்டுள்ள உத்தரவாகும்
فقد قال الرسول : "إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ
شَيْءٍ إِلَّا شَانَهُ"،
தன்னை
சபித்த யூதர்களிடம் மென்மையாக நடக்க பெருமானார் ஆயிஷா அம்மாவுக்கு அறிவுறுத்தினார்கள்
عائشة -رضي الله عنها- تقول: دَخَلَ رَهْطٌ مِنَ
الْيَهُودِ عَلَى رَسُولِ اللهِ فَقَالُوا: السَّامُ
عَلَيْكُمْ. قالت عائشة: فَفَهِمْتُهَا فَقُلْتُ: وَعَلَيْكُمُ السَّامُ
وَاللعْنَةُ. قَالَتْ: فَقَالَ رَسُولُ اللهِ : "مَهْلاً يَا عائشة؛
إِنَّ اللهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ" -وفي رواية:
"وَإيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ"- فَقُلْتُ: يَا
رَسُولَ اللهِ، أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟! قَالَ رَسُولُ اللهِ : "قَدْ قُلْتُ:
وَعَلَيْكُمْ,
பத்ரின்
கைதி உணவு கேட்ட போது வழங்க உத்தரவிட்ட பெருமானார்
أنه مرَّ بأسير في وَثاقه، فناداه: يا محمد، يا محمد،
فأتاه فقال: ما شأنك؟ قال: إني جائع فأطعمني، وظمآن فاسْقني، فأمر له النبي - صلى
الله عليه وسلم - بقضاء حاجته. رواه مسلم.
ஹுனைன் யுத்ததின் போது காபிராக இருந்த சப்வானிடம் கடன் வாங்கிய பெருமானார் அதை திருப்பிக் கொடுத்ததில் காட்டிய நீதி
ما رواه النسائي والحاكم، أنه طلب من صفوان بن أمية
ـ قبل إسلامه ـ يوم حنين أن يُعيرَه أدْرُعا، فقال صفوان: أغصْبا يا محمد؟ قال: بل
هي عارية مضمونة، فلما ضاع بعضُها عرَض عليه النبي - صلى الله عليه وسلم - أن
يضمنها له ويعطيه قيمتها، فقال: لا، أنا اليوم في الإسلام أرغب، ثم أسلم
அதே போல
நஜ்ரானின் கிருத்தவர்களிடம் பெருமானாரின் பெருந்தன்மை
பிஷப்கள்
மாற்றப்பட மாட்டார்கள். துறவிகள் துறவை விட நிர்பந்திக்கப்பட
மாட்டார்கள்.
ما ذكره ابن كثير في البداية: أنه كتب لنصارى نجران
كتابا فيه: ( لا يُغَيَّر أُسْقُف ـ راعي الكنيسة ـ عن أسْقُفيته، ولا راهب عن
رهبانيته، ولا يُغَّير حق من حقوقهم، ولا سلطانهم، ولا مما كانوا عليه
மஸ்ஜிதுன் னபவியிலேயே கிருத்துவர்களை வணஙக அனுமதித்தார்கள் பெருமானார்
ومما
يروى في تسامحه - صلى الله عليه وسلم - مع غير المسلمين ولين جانبه، ما ذكره ابن
كثير في البداية، أن نصارى نجران وفدوا إلى النبي - صلى الله عليه وسلم -، ودخلوا
المسجد وعليهم ثياب حِسان، وقد حانت صلاة العصر، فقاموا يصلُّون إلى المشرق، فقال
النبي - صلى الله عليه وسلم - لأصحابه: دعوهم
நம்மோடு இணங்கி வாழ்பவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்க கூடாது
என எச்சரித்த பெருமானார்.
من ظلم معاهَدا، أو انتقصه حقا، أو كلَّفه فوق
طاقته، أو أخذ منه شيئا بغير طيب نفس منه، فأنا حجيجُه يوم القيامة ). رواه أبو داوود والبيهقي
சுஹைல்
பின் அம்ரின் முன் பல்லை
உடைத்து விட்டால் அவர் இஸ்லாத்திற்கு எதிராக
பேச மாட்டார் என சிலர் சொன்ன
போது
ولما أشير عليه أن يمثل بسهيل بن عمرو لأنه كان
يحرص على حرب المسلمين وعلى قتالهم فأشير عليه أن ينزع ثنيتيه السفليين حتى لا
يستطيع الخطابة بعد ذلك لم يوافق النبي صلى الله عليه وسلم على ذلك بل رفض قائلاً:
لا أمثل به فيمثل الله بي، وإن كنت نبياً
பெருமானாரின்
தோழர்களும் இதே நடை முறையை கடை பிடித்தார்கள்
·
وأوصى أبو بكر الصديق رضي الله عنه أسامة بن زيد
عندما وجهه إلى الشام بالوفاء بالعهد وعدم الغدر أو التمثيل،
·
وعاهد خالد بن الوليد أهل الحيرة ألا يهدم لهم
بيعة ولا كنيسة ولا قصراً، ولا يمنعهم من أن يدقوا نواقيسهم أو أن يخرجوا صلبانهم
في أيام أعيادهم.
இந்த
செய்திகள் எல்லாம் காட்டுவதென்ன?
முஸ்லிம்கள்
தமது கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் கண்டிப்பானவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில்
முஸ்லிமல்லாத மக்களுடன் இறுக்கத்துடனும் பாஸிச கோட்பாட்டுடனும் பழகக் கூடாது. அவ்வாறு
நடக்கவும் கூடாது.
முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக இருக்கிற போது இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
அதே
போலவே முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கிற போதும் மற்ற மக்களுடன் நல்லுறவை பேணி
வளர்க்க வேண்டும்.
மத்
நல்லிணக்கம் என்பது அடுத்தவர்கள் நம்மிடம் காட்டுவது மட்டுமல்ல. நாமும் அடுத்தவர்களுடன்
அத்தகைய் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வெண்டும்.
மத
நல்லிணக்கத்திற்காக நம்முடை ய கொள்கைகளை வழிபாட்டு வழி முறைகளை விட்டுத் தரத் தேவையில்லை.
ஆனால்
நாம் மக்களுடன் பழகுகிற விதத்தில் இயல்பான
– நீதியான் - சமத்துவம் பேணுகிற கருணை மிக்க நடை முறைகள் இருக்க வேண்டும்.
பெருமானார்
(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தவுடன் பரஸ்பரம் அமைதியை பேணுகிற ஒப்பந்தத்தை யூதர்களுடன்
உள்ளார்த்தமாகவே செய்தார்கள்.
அவர்களுடன்
இணக்கமாகவே வாழ்ந்தார்கள்
சந்தை
வியாபாரம் – கடன் பெறுதல் என கொடுக்கல் வாங்கள் இரு தரப்பிலும் நடை பெற்றது.
அக்ழ்
யுத்ததிற்கு குழி தோண்டிய போது தேவையான மண்
வெட்டி மற்ற உபகரணங்களை பனூகுறைழா யூதர்களிடம் இரவலாக பெற்றார்கள்.
முஸ்லிம்கள்
மாபெரும் ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்த போது மற்ற மக்களுடன் இத்தகைய இயல்பான உறவை பேணி
நல்லிணக்கமாகவே வாழ்ந்தார்கள்
முஸ்லிம்களின்
கொள்கை பற்றும் தூய வணக்க முறைகளும் மற்றவர்களிடம் பழகுவதில்ரிந்து அவர்களை தடுக்க
வில்லைன்
நாம்
வாழ்கிற இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மற்ற சமூகத்தவர்களுடன் பழகி வாழ்கிற
தூய அன்பு கலந்த எதார்த்தமான வாழ்விலிருந்து விலகி நிற்கிறார்களோ என்ற ஒரு தோற்றம்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏற்படுகிறது.
தீய
சக்திகள் முஸ்லிம் வெறுப்புணர்வை சமூக தளத்தில் பரப்பி வருவதால் மற்ற சமூகங்கள் முஸ்லிம்
சமூகத்திடமிருந்து விலகி நிற்பதைப் போல சில இடங்களில் தோன்றினாலும்.
மனிதர்கள்
எப்போதும் மனிதர்களே ! மனித இய்ல்பு மனிதர்களை நெருக்கமாக்கவே செய்யும் என்ற உணர்வில்.
1.
மற்றவர்களை மதித்தல்
2.
அவர்களிடம் அன்பாக
நடந்து கொள்ளுதல்
என்ற இரண்டு
இயல்புகளை நாம் கை கொள்வதன் மூலம் பிற சமூக மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் நடவடிக்கை
களை நாம் நம் சக்திக்கு உட்பட்ட வகையில் செய்தாக வேண்டும்.
நாம் கை நீட்டு
கிற போது நம்மை நோக்கி கை நீட்டுகிறவர்கள் இல்லாமல் போக மாட்டார்கள்
இன்றைய காலகட்டத்தில்
முஸ்லிம்களுக்கு இது அவசியமான ஒன்றாகும்.
கூடிய வரையில்
சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக அமைகிற பேச்சுக்கள் நடவடிக்கைகளை நாம் நமது சக்திக்கு
உட்பட்ட அளவில் தடுக்க வேண்டும் .
இது நம்முடைய
வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல! உண்மையில் இது தான் இஸ்லாமிய வாழ்வாகும்.
அல்லாஹ் நம்முடைய
நாட்டில் அனைத்து மக்களிடமும் சகோதரத்து உணர்வையும் சம்த்துவ சிந்தனையையும் வழங்குவானாக!
முஸ்லிம்களை
தனிமைப் படுத்த நினைக்கிறவர்களின் திட்டங்களை அவர்களின் முகங்களை நோக்கியே திருப்பி
விடுவானாக!
No comments:
Post a Comment