வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 16, 2015

மஅஸ்ஸலாமா யா ரமலான்

ரமலானின் நிறைவு ஜும் ஆ வில் இருக்கிறோம்.
ரமலான் விடை பெறுகிறதே என்பது ஏக்கமாக இருக்கிறது.
இந்த ரமலான் நமக்கு எவ்வளவு நன்மையானதாக இருந்தது.
ஒரு ரமலான் 7 வகையான நன்மைகளுக்கு காரணமாக இருக்கிறது.
1.   நோன்பு
2.   அதிகப்படியான தொழுகைகள்
3.   ஜகாத் சதகா
4.   இஃதிகாப்
5.   திலாவத்
6.   பயான் கேட்குதல்
7.   அதிகப்படியான துஆ

இதில் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏராளமான நன்மைகளை உள்ளக்கியதாகு,/ அல்லாஹ்வின் அதிக அன்பிற்கும் இரக்கத்திற்கும் காரணமானவையாகும்.
நோன்பு – முப்பது நாள் நோன்பு நோற்றோம்.
கடுமையான ஒரு வணக்கம் தான் அல்லாஹ்வுக்காக செய்த போது நமக்கு அது இலேசாக தெரிந்தது.
கொஞ்ச நேரம் சாப்பாடு தாமதமானாலே தாம் தூம் என்று குதிக்கிற நாம் பகல் முழுவதும் பசியை காத்தோம்.
ரய்யான் என்ற வாசல் நமக்காக காத்திருக்கிறது.  
தராவீஹ் தொழுகை ;
நம்முடைய இரவு நேரங்கள் பெரும்பாலும் உறக்கத்திற்குரியவை. அல்லது பொழுது போக்குக்கும் உல்லாசத்திற்கும் உரியவை.
அந்த நேரத்தை தவறாமல் தளர்வை பெருட்படுத்தாமல் நாம் தொழுதோம்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَطْعِمُوا الطَّعَامَ ، وَأَفْشُوا السَّلامَ ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ ، تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلامٍ "
ஜகாத்கொடுக்க முடிந்தவர்கள் ஜகாத் கொடுத்தோம். மற்றவர்கள் முடிந்த வரை தர்மம் செய்தோம்.
பரம ஏழைகளை தவிர ரமலானில் தர்மம் செய்யாதவர்கள் இருக்க முடியாது.

قال النبي  :( من تصدق بعدل تمرة من كسب طيب، ولا يقبل الله إلا الطيب، وإن الله ليقبلها بيمينه، ثم يربيها لصاحبها كما يربي أحدكم فَلُوَّه، حتى يكون مثل الجبل ) رواه البخاري 

நம்முடைய ஒவ்வொரு பள்ளிவாசலும் இஃதிகாபின் கூடாரங்களால் புதிய அழகு பெற்றன. அந்தக் கூடாரங்களில் அல்லாஹ்வை தேடிய மக்கள் தங்கினர். தங்களுடைய பகுதி மக்கள் அனைவரின் சார்பாக இந்த சுன்னத்து முவக்கதா கிபாயாவை நிறைவேற்றின்ர். நம் அனைவரையும் இந்த நன்மையில் கூட்டாக்கினர். ( அவர்களுக்காக துஆ)
நாமும் முடிந்த வரை இருந்தோம்.
இஃதிகாபின் நன்மை அலாதியானது.
روى ابن ماجه (1781) عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُعْتَكِفِ : ( هُوَ يَعْكِفُ الذُّنُوبَ ، وَيُجْرَى لَهُ مِنْ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا 

குர் ஆன் முழுவதையும் ஓதும் பாக்கியமும் காதாற கேட்கும் வாய்ப்பும் நமக்கு கிடைத்து.  
عن أبي أمامة رضي الله عنه قال : سمعت رسول صلى الله عليه وسلم يقول :  اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعاً لأصحابه "   
وقال صلى الله عليه وسلم :  من استمع إلى آية من كتاب الله كتبت له حسنة مضاعفة ومن تلاها كانت له نوراً يوم القيامة "   

وقال صلى الله عليه وسلم :  عليك بتلاوة القرآن فإنه نور لك في الأرض وذكر لك في السماء "   
நாம் மார்க்கத்தின் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் உபதேசங்களை கேட்பதற்கும் ரமலான் அற்புதமான வாய்ப்பாக அமைந்தது.
 عن معاوية رضي الله عنه قال: قال رسول الله- صلى الله عليه وسلم-: «مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً يُفَقِّهْهُ فِي الدِّينِ - أخرجه البخاري.
மற்ற காலங்களை விட அல்லாஹ்வை நோக்கி நமது கைகள் அதிகமாக நம்பிக்கையோடு ஏந்திய காலம் இந்த ரமலானின் காலம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான தருணம் இது.
காரணம் அல்லாஹ்விடம் கையேந்து கிற போது அது எதற்காக இருந்தாலும்.  கையேந்துகிற மனிதன் தான் பிர் அவ்ன் அல்ல என்பதை பறை சாற்றுகிறான்.
அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான அமல் இது. அதனால் ஏந்தப் படும் கையை அவன் காலியாக திரும்ப விடுவதில்லை.
 قال رسول الله " إن ربكم تبارك وتعالى حيي كريم يستحي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفراً " صحيح الترمذي ..
நாம் என்ன கேட்டோமோ நிச்சயமாம
1.   அது உடனே கிடைக்கும்
2.   அல்லது அதற்கு மாற்றானது கிடைக்கும்
3.   குறைந்த பட்சம் நமக்கு வர இருந்த சோதனை தடுக்கப்படும்
இவ்வளவு நன்மைகளையும் மொத்தமாக பெற்றுக்கொண்ட பாக்கியம் மிக்க மாதம் இதோ நம்மிடமிருந்து விடை பெறக் காத்திருக்கிறது,
இனிய ரமலானே
உனது வருகை எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நன்மையாக இருந்தது. பாக்கியமாக இருந்தது.
போய்வா  அஸ்ஸலாமு அலைக்கும்.
நாளை மறுமையில் எங்களுக்க்கு சார்பாக சாட்சி சொல்ல வா!
மீண்டும் பல முறை உன்னைச் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும்,
போய்வா! அஸ்ஸலாமு அலைக்கும்.
பாக்கியம் மிக்க ரமலானுக்கு விடை கொடுத்து அனுப்புகிற போது நாம் கவலையோடும் கண்ணீரோடும் நினைவுகூற வேண்டிய செய்தி ஒன்றிருக்கிறது.
இந்த சந்த்ரப்பத்தில் அல்லாஹ்விடம் அதிக பயத்தோடு கையேந்த கடமைப் பட்டிருக்கிறோம்.  
ஒரு பாக்கியத்தை பிரிவது உண்மையில் மகிழ்ச்சியான விசயமல்ல.  
ஒரு பாக்கியம்  விலகுகிற போது அது ஒரு இழப்பாக மட்டும் இருப்பதில்லை.
அதனுடன் பல பாக்கியங்களை நாம் இழக்க நேரிடும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வாபாத்தான போது அந்தக் கவலையில் சில நாட்கள் கழிந்த பின் ஆறுதலுக்காக அபூபக்கர் (ரலி) உமர் ரலி அவர்களும் உம்மு அய்மன் (ரலி) அவர்களை தேடிப் போனார்கள். உம்மு அய்மன் (ரலி அதிகம் அழுதார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பது மட்டுமல்ல. அவர்களுடன் வஹி வருவதும் நின்றுவிட்டதல்லவா என்று உம்மு அய்மன்(ரலி) கதறிய போது மூன்று பேரும் சேர்ந்து பேரழுகை அழுதனர்.
لمّا توفي رسول الله - صلى الله عليه وسلم - قال أبو بكر لعمر - رضي الله عنهما - : مُرَّ بنا إلى أم أيمن ، نزورها كما كان رسول الله - صلى الله عليه وسلم - يزورُها .

فلما وصلا إليها بكتْ ، فقالا لها ما يُبكيك ؟ إنّ ما عند الله خير لرسوله . 
فقالت إني لأعلم أن ما عند الله خير لرسوله ، وأن رسول الله قد صار إلى خيرٍ ممّا كان فيه ، ولكنْ أبكي أنَّ الوحيَ قد انقطع عنّا من السماء !!

உண்மையில் யோசித்துப் பார்த்தால் வஹி நின்று போனது எத்தகைய நஷ்டம் . பெருமானார் நல்ல இடத்திற்கு சென்று விட்டார்கள், நாமல்லவா இழப்புக்குமேல் இன்னொரு பேரிழப்பிற்கு ஆளாகி நிற்கிறோம்.
أبو الطفيل عامر بن واثلة الكناني ரலி நபித்தோழர்களில் இறுதியாக மரணித்தவர். குறைஷிக் குடும்பத்தின் சிறந்த தலைவராகவும் சிறந்த அறிஞராகவும் நாவண்மை பெற்றவராகவும் இருந்த ஹிஜ்ரி மூன்றில் பிறந்து சிறு பிராயத்தில் எட்டு ஆண்டுகள் பெருமானாருடன் இருக்கும் வாய்ப்பை பெற்றறார். பிற்காலத்தில் அவர்  கூபாவில் தங்கியிருந்தார். அலி ரலி அவர்கள் கொல்ப் பட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்டார்.

ஹிஜ்ரீ 110 ல் அவர் வபாத்தானார்.
நபித்தோழர்களில் அவரே இறுதியாக மரணித்தவர்.

أبو الطفيل عامر بن واثلة الكناني هو آخر الصحابة موتا وتوفي سنة 110 هـ وهو بالإجماع آخر من مات من الصحابة الذين رأوا النبي محمد صلى الله عليه وسلم.

அவரது  ஜனாஸாவிற்கு மக்கா நகரில் அதுவரை வரலாறு காணாத கூட்டம் திரண்டது.

பல சஹாபாக்களும் இறந்தார்கள் சிலர் கொலை கூட செய்யப்பட்டார்கள் எனுனும் அபுத்துபைல் ரலி அவர்களின் மரணம் மக்களுக்கு அது பெரும் துக்கத்திற்குரிய விச்யமாக இருந்தது.

ஒரு நபித்தோழர் என்ற பாக்கியத்தை மட்டும் அன்று முஸ்லிம்கள்

இழக்கவில்லை. ஒரு அற்புதமான சகாப்த்தையும் சேர்ந்தே அல்லவா அவர்கள் இழந்தார்கள்.

ஒரு பாக்கியம் பறிபோன போது அது மட்டும் போகவில்லையே! ஒரு பாரம்பரியத்தையே அல்லவா எடுத்துச் சென்றுவிட்டது.

ஹுதைய்பிய்யா உடன்படிக்கைக்குப் பிறகு ஹிஜ்ரி 7 ம் ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு எழுதிய கடிதத்தில் முத்திரையிடுவதற்காக ஒரு மோதிரம் செய்து கொண்டார்கள். அந்த மோதிரம் அபூபக்கர் ரலி இடமும் பிறகு உமர் ரலி யிடமும் இருந்தது. இஸ்லாம் வெற்றிகரமாக வளர்ந்து வந்தது. ஓலை அனுப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றாக சிக்கலில்லாமல் இஸ்லாத்தை தழுவிக் கொண்டிருந்தன. காலம் அமைதியாகவும் பெருமிதமகாவும் செழிப்பாகவும் சென்று கொண்டிருந்தது.

மோதிரத்தை கையில் அணீந்திருந்த உஸ்மான் ரலி அவர்கள் குபா பள்ளிவாசலுக்குள் அருகில் இருந்த கிணற்றின் சுவற்றில் உட்கார்ந்து அந்த மோதிரத்தை சுழற்றி கொண்டிருந்த போது அது கை தவறி கிணற்றில் விழுந்தது. எப்படித் தேடியும் அது கிடைக்கவில்லை.

உஸ்மான் ரலி அவர்கள் பெரும் துக்கம்டைந்தார்கள்.

அதற்குப்பிறகு அமைதியாகச் சென்று கொண்டிருந்த இஸ்லாமிய அரசியலில் வரலாறு விக்கித்து நிற்கிற விபத்துக்கள அரங்கேறின. முஸ்லிம்களில் புதிய பிரிவுகள் தோன்றின,

பெருமானாரின் மோதிரம் என்கிற பாக்கியம் மட்டுமல்ல அத்தோடு முஸ்லிம் உம்மத்தின் அலாதியான அமைதி நிம்மதி என்ற பாக்கியங்களும் சேர்ந்தே அல்லவா பறிபோயின.

இதன் தொடர்ச்சியாக மதீனாவில் பாதுகாப்பில்லாமல் எதார்த்தமாக வாழ்ந்த உஸ்மான் ரலி அவர்களை எகிப்திலிருந்து வந்த கலகக் குழுவினர் கொன்றனர்.

அந்த மாபெரும் பாக்கியத்தை சமுதாயம் இழந்த போது அதனால் பறிபோன நன்மைகள் ஒன்றல்ல. பல நூறு.

அதில்  ஒன்று உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப்பட்ட சூழலில் மதீனாவில் ஒரே களோபரமாக இருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் அபூஹுரைரா ரலி அவர்களுக்குச  பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த எடுக்க எடுக்க பேரீத்தம் பழம் கொண்டிருந்த அந்த் அற்புத பை காணாமல் போனது.

அதனால் அபூஹுரை ரலி சொல்வார், மக்களுக்கு உஸ்மான் ரலி கொல்லப்பட்ட ஒரு கவலை என்றால் எனக்கு இரண்டு கவலை
للناس هم ولي همان وهم الجراب

அபூஅஹுரைரா ரலி க்கு அற்புதமாக கிடைத்த பை மட்டுமே தவறிப்போனது. முஸ்லிம் உம்மத்திற்கோ அதன் அருமையான ஒற்றுமை என்ற மாபெரிய வளமல்லவா தவறிப்போனது?
ஒரு நல்ல விசயத்தை இழக்கிற அதன் தொடர்ச்சியாக பல நன்மைகளை நாம் இழக்கிறோம்.
இதோ இந்த ரமலான் நமக்கு பெரும் பாக்கியமாக வருகை தந்தது. பல வகையிலும். அருமையான காலச் சூழல்அமைதியான மனோநிலை. என்பதற்கெல்லாம் முதன்மையாக இந்த ரமலானில் நாம் ஐந்து ஜும்ஆக் களைப் பெற்றோம். அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடாத பேறு இது!
ரமலான் மகத்தானது. ஜும் சிறப்பானது. ரமலானிய ஜும் என்பது மிக மிகச் சிறப்பானது, அத்தகைய ஜும் ஆக்களை ஐந்தை நமக்கு வழங்கிய ரமலான் எனும் பாக்கியம் இதோ விடைகிறது.

இனி ஒரு ரமலான் கிடைக்குமா ? தெரியாது? அதில் இது போல அமல் செய்கிற வாய்ப்புக் கிடைக்குமா தெரியாது?

ஆனால் ஒன்று நிச்சயம் இந்த ரமலானில் நன்மைகளை தேடுகிற நமது உணர்வுகளை நாம் அப்படியே தொடர்ந்து பாதுகாப்போம் எனில் நிச்சயம் ரமலானின் பாக்கியம் நம்மை தொடர்ந்து வரும். பூ வாடிய பிறகும் காற்றில் இருக்கிற மணம் போல.

நாம் மிகுந்த அச்சவுணர்வோடு அல்லாஹ்விடம் கையேந்து கிறோம்.

யா அல்லாஹ் இந்த ரமலானை எங்களுக்கு பாக்கியமானதாக ஆக்குவாயாக!

இந்த ரமலானில் நாங்கள் பெற்ற நன்மைகளை எங்களது வாழ்வில் தொடரச் செய்வாக!

அதன் மூலம் இந்த ரமலானுக்கு விடை கொடுப்பதை எங்களது வாழ்வில் ஒரு நன்மையாகவே ஆக்கி வைப்பாயாக!
அஸ்ஸலாமு அலைக்க  யா ஷஹ்ர ரமலான்.2 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை
    உவமைகள் அதை விட அருமை

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை
    உவமைகள் அதை விட அருமை

    ReplyDelete