வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Monday, July 13, 2015

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

இன்று நாம் அல்லாஹ்வின் மாபெரிய நன்மையை எதிர்பார்த்துக் குழுமியிருக்கிறோம்.
லைலதுதுல் கத்ரை ஒற்றைப் படையில் தேடிக்கொள்ளுங்கள் என பெருமானார் சொன்னார்கள்/
உபையிப் னு கஃபு ரலி போன்ற சில சஹாபாக்கள் அது இருபத்து ஏழுதான் என்று சத்தியமிட்டு சொன்னார்கள்.
நாம் மற்ற நாட்களில் லைலத்துல் கத்ரை தேடினாலும் சஹாபாக்களின் கருத்தினி அடிப்படையில் இன்றைய தினம அல்லாஹ் தருகிற மகத்தான அருளை எதிர்பார்த்து ஒன்று திரண்டிருக்கிறோ,
அல்லாஹ் இந்த புனித இரவின் சகல பரக்கத்துக்களை நம்மனைவருக்கும் நிறைவாக தந்தருள்வானாக!
ஒன்றை நாபகத்தில் வையுங்க்ள. ஈமானுடனும் இஹ்திஸாபுடனும்பெருமானாரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டும். அந்த நன்மைகள் நமக்கு கிடைக்கு ம் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இங்கு குழுமி இருந்தோம் எனில் நிச்சயம் நம் அனைவருக்கும் இந்த இரவு லைலத்துல் கத்ருடைய இரவாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் . அல்லாஹ் கிருபை செய்வானாக!
இந்த நல்ல சந்தர்பத்தில் இந்த இரவின் மகத்துவம் எத்தைகையது என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எடுத்த எடுப்பில் இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்துதது என்று சொல்லி விட வில்லை
முதலில் وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ இது எப்படிப் பட்ட இரவு தெரியுமா? என்று கேட்கிறான்.
இது லைலைத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் முழுதாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கிறது.
வீட்டில் ஒரு பழைய பொருள் இருந்தது. பிள்ளைகள் அதை விளையாட்டுக்காக எடுத்து பயனபடுத்திவிட்டார்கள் . இதைப் பார்த்து தந்தை ஓடிவருகிறார். இது எப்படிப்பட்டது தெரியுமா? என்று அழுத்தமான குரலில் கேட்பார்பிள்ளைகள் அமைதியாகி விடுவார்கள். அது என்ன என்பதை அவர் விளக்கிச் சொல்ல அவர்களுக்கு அதன்மீது ஒரு விளக்கம் பிறக்கும்.
உஸ்மான் ரலி அவர்களை கொல்வதற்காக வீட்டுச் சுவரேறிக் குதித்தவர்களில் அபூபக்கர் ரலி அவர்களின் மகன் முஹம்மதுவும் ஒருவர்.. உஸ்மான் ரலியின் தாடியைப் பிடித்து அவரை கண்டிக்க முய்ற்சித்த போதுஇந்த தாடிக்கு உன்னுடைய தந்தை கொடுத்த மரியாதை என்ன தெரியுமா என்று உஸ்மான கேட்ட போது அந்த சூழ்நிலையிலும் தனது தவறை உணர்ந்து திடுக்குற்று வெளியேறினார் அபூபக்கர் ரலி அவர்களின் மகன்.
அதிகாரிகளோடு உமர் ரலி தெரு வழியே சென்று கொண்டிருந்த போது ஒரு வயதான கிழவி அவரை தடுத்து பேசிக் கொண்டிருந்தார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். இந்தக் கிழவி இவ்வளவு நேரம் நம்மை தடுத்து வைத்து விட்டாரே என நினைத்தனர். அமீருல் முஃமினீன் சொன்னார். இவர் யார் தெரியுமா . கவ்லா பின் து இவர் பெருமானாரிடம் ஒரு கோரிக்கை வைத்த போது வானங்களுக்கு அப்பாலிருந்து அல்லாஹ் பதிலளித்தான். இன்று முழுக்க இவர் நின்று பேசிக் கொண்டிருந்தாலும் நானும் நின்று கொண்டிருப்பேன் என்றார்.
أبا يزيد يحدث قال لقيت امرأة عمر يقال لها خولة بنت ثعلبة وهو يسير مع الناس فاستوقفته فوقف لها ودنا منها وأصغى إليها رأسه ووضع يديه على منكبيها حتى قضت حاجتها وانصرفت فقال له رجل يا أمير المؤمنين حبست رجالات قريش على هذه العجوز قال ويحك وتدري من هذه ؟ قال لا قال هذه امرأة سمع الله شكواها من فوق سبع سموات هذه خولة بنت ثعلبة والله لو لم تنصرف عني إلى الليل ما انصرفت عنها حتى تقضي حاجتها إلى أن تحضر صلاة فأصليها ثم أرجع إليها حتى تقضي حاجتها.
இவர் யார் தெரியுமா? இது எப்படிப்பட்டது தெரியுமா? இது எந்த நாள் தெரியுமா? என்ற கேள்விகள் ஏன் கேட்கப்படுகிறது என்றால் எதிரிலிருப்பவர்கள் இக்குறிப்பிட்ட விசயங்களை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகஒரு விழுப்பூட்டும் வாசமாக கேட்கப்ப்டுகிறது.
லைலைத்துல் கத்ரைப் பற்றி இப்படி அல்லாஹ் கேட்கிற போது அதன் மரியாதையை முழுமையாக செவியேற்பதற்கு நாம் தயாராகி விட வேண்டும்.
இந்த இரவின் முதல் சிறப்பு
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
இன்று செய்கிற ஒவ்வெரு நற்காரியமும் ஆயிரம் மாதம் அதே நன்மையை செய்த கூலியை பெற்றுத்தருகிறது.
அந்த ஆயிரம் மாதம் என்பது சாதாரணம் ஆயிரம் மாதம் அல்ல;
ஒட்ட்டகையின் மாதங்கள் போர் புரிந்த ஒட்டகத்தின் எலும்பைக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் போர் செய்த شمعون الغازي  யின் ஆயிரம் வருடங்களை விட ச் சிறந்தது.

شمعون الغازي   யைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் சஹாபாக்களிடம் கூறிய போது அதில் ஆசைப்பட்ட சஹாபாக்கள். அப்படி ஒரு வாய்ப்பு தங்களுக்கு இல்லையே என்று ஆதங்கப்பட்ட போது இந்த அத்தியாயம் இறங்கியது.

இன்னொன்றும் இங்கே கவனிக்கத்தக்கது,

பலரும் இன்று தொழுதால் 83 ஆண்டுகள் 4 மாதங்கள் தொழுத நன்மை கிடைக்கும் என்று கூட்டல் கழித்தல் வேலை செய்கிறார்கள்

உண்மையில் அப்படி அல்ல.
அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று தான் சொல்லியிருக்கிறான்.

எனவே நன்மைகளுக்கான கூலி ஆயிரம் என்ற எண்ணுக்குள் அடங்காது. அதை தாண்டிச் செல்லும்

நன்மைக்கான கூலி ஆளுக்கு ஆள் வேறுபடும்

நமது ஈமானும் ஈடுபாடும் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கூலி அதிகரிக்கும். அதன் எல்லையை அல்லாஹ்வே அறிவான்.

அதனால் தான் பெருமானார் (ஸ்ல்) ரமலானின் கடைசி பத்து வந்து விட்டால் வேட்டியை வரிந்து கட்டிக் கொள்வார்கள்  . இஃதிகாபில் இருப்பார்கள்

இதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேணும். அளவிடற்கரிய கூலியை தருகிற நாள் இது.

இந்த நாளின் இன்னொரு சிறப்பு

மலக்குகள் இறங்குகிறார்க

மலக்குகள் இறங்குவது எந்த முஃமினுக்கும் மகிழ்ச்சியளிக்கிற விசய்ம்.
மலக்குகள் நம்மை செர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதை இலக்காக கொண்டவர்கள்.
சைத்தான்கள் நம்மை வழிகெடுப்பதை நோக்கமாக கொண்டவர்கள்.
நாம் மலக்குகள் சூழ வாழ் ஆசைப்பட வேண்டும் .
மலக்குகள் நம்மை நெருங்காமலிருக்கிற் விச்யங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
துர்வாடை அடிக்கிறபூண்டு  வெங்காயம் -  நாய்புகைப்படம் ஆகியவற்றைக் கண்டு மலக்குகள் அருவருக்கிறார்கள் என பெருமானார் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ  - ترمذي

இன்று இறங்குகிற மலக்குகள் விசேசமானவர்கள் .
தினசரி மலக்குகள் ஏறி இறங்கும் நடை முறை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ
எனவே இங்கே பொருள்
تنزل ملائكة ليلة القدر
லைலத்துல் கத்ருக்கென்றே விசேசமாக இருக்கிற மலக்குகள் இறங்குகிறார்கள்/
அதனால் தான் ரூஹ் என்ற ஜுப்ரயீல் அலை இங்கே பின்னால் சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஜிப்ரயில் மலக்குகளின் தலைவர்
வேறு ஒரு இடத்தில்  يوم يقوم الروح والملائكة  என்று குறிப்பிடுகிற அல்லாஹ் இங்கே வரிசைய மாற்றிச் சொன்னதன் காரணம். லைலத்துல் கத்ரில் விசேஷ மலக்குகள் இறங்குகிறார்கள் என்பதே!
மலக்குகள் மட்டும் இறங்கவில்லை. ருஹுல்குத்ஸ் ஆன ஜிப்ரயீல் அலை அவர்களும் இறங்குகிறார்கள்
ஜிப்ரயீல் அலை நபிமார்களோடு பேசுகிறவர்.
فعَنْ عَبْدِ اللهِ،قَالَ:" رَأَى رَسُولُ اللهِ r جِبْرِيلَ فِي صُورَتِهِ،وَلَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ،كُلُّ جَنَاحٍ مِنْهَا قَدْ سَدَّ الْأُفُقَ يَسْقُطُ مِنْ جَنَاحِهِ مِنَ التَّهَاوِيلِ وَالدُّرِّ وَالْيَاقُوتِ مَا اللهُ بِهِ عَلِيمٌ "  .(أخرجه أحمد

அவரது ஆற்றலை அல்லாஹ் பிரஸ்தாபிக்கிறான்
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ
யூசுப் அலை அவர்களை அவர்களது சகோதரர்கள் கிணற்றில் போட்ட போது வானத்திலிருந்த ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட அவர் தண்ணீரை தொடுவதற்குள் தாங்கிப் பிடித்தார் ஜிப்ரயீல் அலை

மலக்குகளின் எண்ணிக்கை அளவிடற்கரியது.
 عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : الْمَلائِكَةُ لَيْلَةَ الْقَدْرِ فِي الأَرْضِ أَكْثَرُ مِنْ عَدَدِ الْحَصَى .
இந்த உம்மத்தின் மாபெரிய சிறப்பு ஜிபரயீல் அலை அவர்களும் ஏராளமான மலக்குகளும் அவர்களை  சூழ்ந்து நின்று துஆ இப்போது இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்,
அவர்கள் என்ன துஆ  செய்கிறார்கள்
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ(5)
இன்றைய முஸ்லிம் உம்மத் எந்த அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறதோ. அந்த அமைதியை தருவதற்காக ஜிப்ரயீலுடன் மலக்குகள் ஏராளமாக வருகிற நேரம் இது.
இந்த அமைதி யாருக்கு கிடைக்கும்
يسلمون علي كل راكع وساجد

யாருக்கு கிடைக்காது
1.   மது அருந்துகிறவன்
2.   பெற்றோருக்கு வேதனையளிப்பவன்
3.   சண்டைக்காரன்
இந்த அமைதி வெறும் அமைதி என்ற வாழ்த்து மட்டுமல்ல. அமைதிக்கு தேவையான எல்லா நன்மைகளையும் கொண்டு வருகிறார்கள் எனப்தே இதன் பெருள் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள்.
இந்த இரவின் மரியாதையை இவ்வளவு தூரம் விளக்கிக்ச் செல்கிற இறைவன் இந்தச் செய்தியை இப்படி ஆரம்பிக்கிறான்.
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ(1)
இந்த இரவிலே குர் ஆனின் முதல் வசனத்தை பெருமானாருக்கு அல்லாஹ் அருளினான்.
அது எல்லா நன்மைகளுக்கும் மூல ஊற்றாய் இருக்கிறது.
அதனால் லைலத்துல் கத்ரின் மாபெரிய சிறப்பாக இந்த இரவில் அல்லாஹ் குர் ஆனை அருளினான என்பது அமைந்திருக்கிறது.
நமக்கு குர் ஆன் கிடைக்கத்தொடங்கிய நாள் இது என்பதை விட வேறு அதிகமான சிறப்பு என்ன இருக்கிறது.
நமது வாழ்வின் எல்லா நன்மைகளுக்கும் வழிகாட்டக் கூடியது குரான்
நமது வாழ்வின் சகல வெற்றிக்கும் காரணமானது. குர் ஆன்.
எல்லா வகையான தீமைகளிலிருந்து பின்னடைவுகளிலிருந்து பாதுகாக்க க் கூடியது குர் ஆன்.
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள் வலிமையற்றவர்களாக இருந்தார்கள்.
இப்னு ஜரீர் அறிவிக்கிறார்
மக்காவில் பெருமானாரும் கதீஜா அம்மாவும் அலி ரலியிம் கஃபாவில் தொழுது கொண்டிருந்த வித்தியாசமான காட்சியை செல்வந்தரான அப்பாஸ் ரலி யின் வீட்டு மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரின் விருந்தாளி عفيف, இவர்கள் யார் என்று கேட்ட போது,
وهذا حدثني أن ربك رب السماء والأرض أمره بهذا الذي تراهم عليه،
என்று பதில் சொன்ன் அப்பாஸ் அடுத்துச் சொன்னார்.
وأيم الله ما أعلم على ظهر الأرض كلها أحدا على هذا الدين غير هؤلاء الثلاثة.
பூமியின் மேற்பரப்பில் இந்த மதத்தில் இம்மூவரை தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
(அவரே பின்னால் இந்த மார்க்கத்தில் இனைந்து  மகத்தான தலைமுறையை உருவாக்குவார் என்பதை உணராமல்.)
சாதாரணமாக நினைத்தார்கள் மக்காவின் மக்கள்
தொல்லைகள் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கம் வளர்ந்த போது தம் விரல்களால் கிள்ளி விடலாம் என நினைத்தார்கள், தம் வாயால் ஊதி அனைத்து விடலாம் என திட்டமிட்டார்கள்.
மேலும் இஸ்லாம் வளர்ந்த போது கடுமையான இடையூறுகளைச் செயதார்கள் ,   நபியையே கொல்லுவதற்கு சதிதிட்டங்களில் இறங்கினார். ஆனால் அல்லாஹ் தீனை வெற்றியின் பாதையில் தொடர்து செலுத்தினான்.
وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ(46)

அல்லாஹ் பயன்படுத்திய தந்திரம் வேறு எதுவும் இல்லை. குர் ஆன் மட்டுமே
இன்றையை நவீன  விஞ்ஞானம், மனிதர்கள் நின்று விதைக்க முடியாத இடங்களில் விமானங்கள் மூலமாக வானத்திலிருந்து விதைகளை தூவுவது போல தீனின் பாதையில் மகத்தான மாற்றங்களை குர் ஆன் விதைத்துக் கொண்டே சென்றது.
உள்ளூர்க்காரர் உமர் (ரலி) குர்ஆனை கேட்டு முஸ்லிமானார்
வெளியூர்க்காரர் துபைல் பின் அம்ரு குர்ஆனை கேட்டு முஸ்லிமானார்
நாயகத்தை பேசிச் சரிக்கட்டலாம் என்று தேடி வந்து பொன்னும் பெண்ணும் தருகிறோம் என்று பேரம் பேச வந்த  உதபது பின் ரபீஆ குர் ஆனை தொடர்ந்து கேட்க முடியாமல் அல்லாஹ்வுக்காக கேட்கிறேன் போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
முஸ்லிம்களின் கையில் வாள் இருக்க வில்லை. குர் ஆன் அதையும் விட வலிமையாக காபிர்களின் இதயத்தை பிளந்தது.


No comments:

Post a Comment