வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 09, 2015

அமல்களால் அழகு படுத்துவோம்

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34)

புனிதம் மிக்க ரமலானி நிறைவுப் பகுதியில் இருக்கிறோம்.

நரக விடுதலைக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவோம்.  
கலிமா சொன்னவர்களுக்கு நிரந்தர நரகம் கிடையாது.

عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال (( يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير )) * البخاري

முஸ்லிம்கள் பாவம் செய்திருந்தால் அந்த பாவத்தின் அளவு நரகத்தில் தண்டனையை அனுபவித்து விட்டு இறுதியில்  பெருமானாரின்  ஷபா அத்தில் சொர்க்கம் செல்வார்கள் அத்தகையோர் ஜஹன்னமீ என்றழைக்கப்படுவர்.

عن عمران بن حصين رضي الله عنهما، عن النبي - صلى الله عليه وسلم - قال: ((يخرج قوم من النار بشفاعة محمد - صلى الله عليه وسلم -، فيدخلون الجنة، يسمون الجهنميين)) صحيح البخاري)

நாம் எந்த பட்டியலில் இருப்போம் என்று யோசித்துப் பார்ப்போம்.

நம்முடைய பாவங்கள் பெரிதென்றாலும் தயக்கமின்றி அல்லாஹ்விடம் மன்னிப்பை கேட்போம். அவனது மன்னிப்பு அளப்பெரியது , அதற்கு முன்னாள் எந்தப் பாவமும் சாமான்யமானது, காணல் நீரைப் போல அது இல்லாது போய்விடும்.

يا نفس لا تقنطي من زلة عظمت ... إن الكبائر في الغفران كاللمم
  
அல்லாஹ் நரகத்தின் வாடையை கூட நம்மை அணுகிவிடாமல் பாதுகாப்போம்.  நரகத்திலிருந்து விடுதலை தருவதற்கான விசேஷ நேரம் தான் இந்த் ரமலானின் இறுதி நாட்கள்
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .

நரகத்தின் ஒரு சிறு வேதனையை ஒரு சிறு பொழுதேனும் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது,

وعن النعمان بن بشير رضي الله عنهما قال ‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه، ما يرى أن أحد أشد منه عذابا، وإنه لأهونهم عذابا‏"‏ ‏(‏‏(‏ متفق عليه‏)‏‏)‏
யா அல்லாஹ் எங்களையும் – குடும்பத்தினரையும் – சார்ந்தவர்களையும் – உலக முஸ்லிம்கள் அனைவரையும் இந்த ரமலானின் பரக்கத்தால் சுடு நரகின் வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக!

ரமலானின் கடைசி 10 நாட்களில் வரிந்து கட்டி இபாதத் செய்வது பெருமானாரின் இயல்பு

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ  - مسلم

இந்த சுன்னத்தை மனதில் வைத்து செயல்படுவோம் . குடும்பத்தாரை செயல்பட வைப்போம்.

இஃதிகாப் எனும் அற்புதம்
இஃதிகாப் சுன்னத் முஅத்தா கிபாயாவாகும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ

قال الإمام الزهري رحمة الله عليه : { عجباً للمسلمين تركوا الإعتكاف مع أن النبي > صلى الله عليه وسلم <ما تركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل 

எல்லா நன்மைகளையும் செய்தது போல

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُعْتَكِفِ هُوَ يَعْكِفُ الذُّنُوبَ وَيُجْرَى لَهُ مِنْ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا இப்னுமாஜா -

பள்ளியிலும் தனிமை

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ قَالَ فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ



நோன்பு நமது ஆசைகளை அடக்கி வைக்க கற்றுத் தருகிறது என்றால் இஃதிகாப் அல்லாஹ்வில் ஆசை வைக்க பழக்கப்படுத்துகிறது,

குடும்பம் வியாபாரம் மற்ற பணிகள் அனைத்திலிருந்தும் விலகி அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அடியாராக மக்கள் ஒதுங்குகிறார்கள்,

உன்னைத் தவிர எனக்கு யாரும் உறுதியில்லை – ஒதுங்குமிடமில்லை  என்று ஒதுங்குகிற மனிதனைப் பார்த்து மனிதனே இரக்கப்படாமல் இருக்க மாட்டான் என்கிற போது – வல்ல ரஹ்மானின் மன்னிப்பும் அருட்கொடைகளும் பொழிந்து விடாதா என்ன?

عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل، قال: ((إذا تقرب العبد إلي شبراً تقربت إليه ذراعاً، وإذا تقرب إلي ذراعاً تقربت منه باعاً، وإذا أتاني يمشي أتيته هرولة)) رواه البخاري.  

சில நாட்களும் இஃதிகாப் இருக்கலாம். 
ஒருநாளாவது இஃதிகாப் இருப்பது சிறப்பானது, ஹனபின் மத்ஹபின் படி கடமையானது,
இரவு நேரங்களில் மட்டும் என்றோ அல்லது கொஞ்ச நேரமோ கூட இஃதிகாபின் நிய்யத்தில் பள்ளியில் தங்கலாம்.

ஆக குறைந்த பட்சமாக ஐவெளை தொழுகைகு சற்று முன்னதாக சென்று அல்லது சற்று தாமதித்திருந்து இஃதிகாபின் நிய்யத்தில் பள்ளியில் தங்கியிருக்கலாம். தேவையற்ற விசயங்களை பேசமால் இருப்பது அல்லது திக்ரு தஸ்பீஹ்கள் திலாவத்தில் ஈடுபடலாம். வெறுமனே மெளனமாக இருப்பதை சிறப்பாக கருதக் கூடாது.

ஹாபிழ் இபனுல் கய்யூம் அல் ஜவ்ஸீ சொல்கிறார். 

“இஃதிகாபின் நோக்கம்  நமது ஆன்மாவை அல்லாஹ்வோடு தொடர்பு படுத்துவதாகும். மற்ற அனைத்தைப் பற்றிய சிந்தனையை விட்டும் அல்லாஹ்வை மட்டுமே சிந்திப்பதாகும். படைப்புக்களின் மீதான் அன்பை தவிர்த்து விட்டு அல்லாஹ்வை மட்டுமே நேசிப்பதாகும். கப்ரின் தனிமையின் போது  இந்த இஃதிகாபின் இனிமையை நாம் அனுபவிப்போம்”.

ஆண்கள் ஐவேளை தொழுகை நடைபெறுகிற பள்ளியில் இஃதிகாப் இருக்க வேண்டும்.
.பெண்கள் தங்களது வீடுகளில் தொழும் இடங்களில் இந்த நிய்யத்தில் இஃதிகாபில் இருக்கலாம். ( மஸாயில் – மெளலானா ரிப் அத் சாஹிப்)

ரமலானின் இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்படுகிற முக்கியமான ஒரு கடமை. ஜகாத் .
ஜகாத் அது ஒரு தனி கடமை.
ரமலானில் நிறைவேற்றினால் அதிக நன்மை கிடைக்கும் என் பதால் ரமலானில் நிறைவேற்றுகிறோம். எப்பபோது கடமையாகிறதோ அப்போது ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும். அதே போல ரமலானில் கொடுக்காவிட்டால் ரமலான் முடிந்த பிறகு ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும். சிலர் இந்த ரமலானில் கொடுக்க இயலாவிட்டால் அடுத்த ரமலானில் தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது தவறு. 

அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் வைக்கப்படுகிற சொத்து எப்படி கருப்பு பணமாகிறதோ அது போல ஜகாத் நிறைவேற்றப்படாத சொத்து நாம் பதுக்க்கப்பட்ட சொத்தாகிவிடும்.
குர் ஆண் எச்சரிக்கிறது.

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34) يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ(35)
நாம் சேர்த்து வைக்கிற தங்கம் வெள்ளியே நம் மீது காய்ச்சி ஊற்றப்படும் என்கிறது இந்த வசனம்

முப்தீ ஷபீ சாஹிப் மஆரிபில் கூறுகிறார்.

“தன்னை தேடி வருகிற ஏழையை பார்த்ததும் கஞ்சனின் நெற்றி வேற்கிறது. அவன் பக்கத்தில் வந்த்து அங்கே இங்கே என கழுத்தை திருப்பிக் கொள்கிறான். பிறகு அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள படுத்துக் கொள்கிறான். அதனால் இந்த மூன்று நெற்றி – புஜம் – முதுகு என குறிப்பிடப்பட்டுள்ளது.  உடல் முழுவதும் ஊற்றப்படும் என்பதே இதன் கருத்து.

ஜகாத் நிறைவேற்றப்படும் பொருள் مَا كَنَزْتُمْ ல் சேராது. என்றார்கள் பெருமானார்,
ஜகாத் கொடுத்தாவர்களிடம் கண்டிப்பு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ آتَاهُ اللَّهُ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي بِشِدْقَيْهِ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلَا لَا يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ الْآيَةَ   بخاري

ஜ்காத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? எனஜகாத்திற்கு திட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது.
  
ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை

ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.

யார் மீது கடமை
அடிப்ப்டை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக சுமார் 612 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 40 ஆயிரம்ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் மீது  ஜகாத கடைமையாகும்.

இந்தக் கையிருப்பு தொகையாக இருந்தாலும் அல்லது வியாபார பொருளாக இருந்தாலும் ஜகாத் கடமையாகி விடும்.

பிக்செட் டெபாசிட்டுகள், முதலீடுகள், சேமிப்புத் தொகைகள், வாடகை வருமானம் கணக்கில் கொள்ளப்படவேண்டும.

கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும் என்ற உத்தரவாதமிருப்பின் அதுவும் கணக்கில் கணக்கில் கொள்ளப்படும். ஆயினும் பணம் கைக்கு வந்த பிறகு அதற்குரிய ஜகாத்தை வருடக் கணக்கிட்டு நிறைவேற்றினால் போதுமானது.

வீடு கடைகளுக்கு அட்வான்ஸாக கொடுத்திருக்கிற தொகை கணக்கில் வராது. அட்வான்ஸ் தொகை பிணைத் தொகையாகும். அது முழுமையாக திரும்பி வரும் உத்தரவாதம் இல்லை. வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்பட பிடித்தம் செய்யப்பட வாய்பு உண்டு. சில நேரங்களில் மொத்த அட்வான்ஸ் தொகையும் பிடித்தம் செய்யப்படுவதுண்டு.

தொழிற்சாலைகளுக்கான இடம் உபகரணங்கள் ஜகாத்திற்கான நிஸாபில் கணக்கில் வராது. அவற்றுக்கு ஜகாத் இல்லை. இவை தவிர உண்டான மூலதனமும் வருவாயும் ஜகாத்தின் நிஸாபில் கணக்கிடப்படும்.

வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு, கார் ஆட்டோ போன்ற பொருட்களின் மதிப்பு நிஸாபின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  அதிலிருந்து வரும் வருவாய் கணக்கில் கொள்ளப்படும

வியாபார நோக்க மின்றி வீட்டு மனையாக தரிசி நிலமாக வைத்திருக்கிற சொத்துக்களுக்கு ஜகாத் இல்லை. அதன் சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும் சரி. அவற்றிலிருந்து பார்க்கிங்க்,  விண்ட் மில், பிளக்ஸ் போர்டு சுவர் விளம்பரம் போன்ற வருமானம் கிடைக்கும் எனில் அவ்வருமானம் நிஸாபில் சேர்க்கப்படும்.


ரியல் எஸ்டேட்  வியாபார நோக்கில் வாங்கிப் போட்டிருக்கிற நிலத்தின் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்  ஒரு ஆண்டிற்கான பரிமாற்றத்தில் மிக குறைந்த அளவாக ஆண்டு முழுவதும் வைத்திருந்த தொகைக்கு ஜகாத் செலுத்தினால் போதுமானது.

உதராணத்திற்கு தொடக்கத்தில் 5 லட்சமாக இருந்து அது இடையில் 2 லட்சமாக குறைந்து இறுதியில் அது 7லட்சமாக உயர்ந்திருக்குமெனில் 2 லட்சம் தான் வருடம் முழுவதும் இருந்த தொகை என்ற வகையில் அதற்கு மட்டுமே ஜகாத் கொடுத்தால் போதுமானது. மற்றவியாபார பரிமாற்றத்திலும் இதே போன்ற அளவீட்டை கை கொள்ள வேண்டும்.

பெண்கள் அணிந்திருக்கிற அத்தியவசிய நகைகளில் ஜகாத் கடமையாகாது.

அதிகப்படியான சேமிப்பு நோக்கிலான நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

தங்கம் வெள்ளிக் கட்டிகள் பாத்திரங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும். வைரக்கற்களுக்கு ஜகாத் இல்லை. 


வங்கிகள் மற்ற நிதி அமைப்புக்க்களில் இருந்து நீண்ட கால தவனை திட்ட்த்தில் பெறப்படும் கடன தொகை வருமாணக் கணக்கில் சேர்ர்கப்படும். அந்த வருடம் கட்டும் தவனை தொகை மட்டும் கழித்து விட்டு எஞ்சிய தொகைக்கு ஜகாத் வழங்க வேண்டும்
யாருக்கு ஜகாத்
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஜ்காத் யாருக்கு கொடுக்கப் பட வேண்டும் என்பதை மார்க்கம் அறுதியிட்டு கூறியுள்ளது. உரிய நபர்களுக்குத்தன் ஜகாத் வழங்க வேண்டும். நமதுஅவசரத்திற்கு அல்லது முகஸ்துதிக்காக தகுதி அற்றவர்களுக்கு கொடுத்தால் ஜகாத் கொடுத்த்தாதாகாது.

தாய தந்தை மனைவி மக்கள் போன்ற உறவுகளை தவிர மற்ற சகோதர சகோதரிகள் பெரியத்தா சின்னதாக்கள் மற்ற நெருங்கிய உறவுக்கார்ர்களுக்கு ஜகாத்தை கொடுக்கலாம். உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தால் தர்ம்ம் செய்த நன்மையும் உறவுகளை பேணிய இரட்டை நன்மை கிடைக்குக்ம்

அடுத்த்தாக நமக்கு பக்கத்தில்/ நமது ஊரில் இருக்கிற தேவையுடையவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

நமக்கு அருகிலேயே தேவைய்டையவர்கள் இருக்கும் போது வெளியூர்களுக்கு தூரத்திலிருப்பவர்களுக்கு ஜகாத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

அமைப்புக்கள் இயக்கங்களுக்கு ஜகாத் பணத்தை கொடுப்பவர்கள் முதலில் தங்களது உறவினர்களையும் அருகிலிருப்போரையும் கவனித்து விட்டார்களா? என்பதையோசித்துப் பார்க்க வேண்டும்.

பைத்துல் மால் என்ற பெயரில் நமதூர்களில் இயங்குகிறவை அதிகாரப் பூர்வமானவை அல்ல. அதனால் அவற்றிடம் கொடுத்த தொகை உரியவர்களை சென்றடைந்து விட்டது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாம் ஜகாத்தை நிறைவேறியவர்களாக முடியும்.

ஜகாத் கொடுக்கிற போது வாங்கும் நபருக்கு அது முழுஉரிமையானதாக 
ஆக்கி விட வேண்டும், ஜகாத் பணத்தை  கடனாக கொடுக்க கூடாது


லைலத்துல் கத்ரு
லைத்துல் கத்ரை தேடி அமல் செய்வது ஈமானிய கடமையாகும்,

ரம்லானின் கடைசி ஏழு நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவில் லைலத்துல் கத்ரை தேடிக்க்கொள்ளுங்கள் என பெருமானார் கூறினார்கள்.
عبادة بن الصامت قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبر الناس بليلة القدر فتلاحى رجلان من المسلمين قال النبي صلى الله عليه وسلم خرجت لأخبركم فتلاحى فلان وفلان وإنها رفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة بخاري

சஹாபாக்கள் அது எந்த இரவாக இருக்கும் என்பதை தேடி ஆராயந்து – 27 ம் நாள் இரவு கத்ருடைய இரவு என்று கூறினார்கள். சிலர் சத்தியமிடவும் செய்தார்கள்.

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه   بخاري

وذهب أبي بن كعب - رضي الله عنه - إلى أنها ليلة سبع وعشرين، وكان يحلف على ذلك، ويقول: "بالآية أوالعلامة التي أخبرنا بها رسول الله  - صلى الله عليه وسلم - أن الشمس تطلع في صبيحتها لا شعاع لها   رواه أحمد برقم (20263)، وصححه الألباني في صحيح الترمذي برقم (2669).

ஈமானிய உணர்வோடு லைலத்துல் கத்ரை நாமும் தேடுவோம். நமது குடும்பத்தினரையும் தேடும்படி செய்வோம்.
கார் சாவியைக் காணவில்லை என்றால் எப்படி தேடுவோம். தேடவைப்போம்.

குர் ஆன்
இந்த நாட்களில் அதிகம் குர் ஆண் ஒதுவோம். ரமலானுக்கும் குர் ஆனுக்குமான தொடர்பு நாம் அறியாததல்ல.
சுப்யான் சவ்ரீ ரஹ் அவர்கள் ரமலானை குர் ஆன் ஓதுவதில் மட்டுமே செலவிடுவார்கள்.

ولقد كان السلف اشد حرصاً على تلاوة القرآن وخاصة في شهر رمضان فقد كان الأسود بن يزيد يختم المصحف في ست ليالي فإذا دخل رمضان ختمه في ثلاث ليال فإذا دخلت العشر ختمه في كل ليلة ,
இஷாவை பிற்படுத்தி ஒரு குர் ஆன்
وكان الشافعي رحمة الله عليه يختمه في العشر في كل ليلة بين المغرب والعشاء
இந்த ரமலானில் கூட குர் ஆனின் தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் பிறகு எப்போது ஏற்படுத்திக் கொள்ள முடியும்,

தெரிந்த்தை அதிகம் ஓதுவோம் அது சூரத்துல் இஹ்லாஸாக இருந்தாலும்

ஒரு முறை ஜிப்ரயீல் அலை அவர்களுடம் பெருமானார் பேசிக் கொண்டிருந்த போது அபூதர் வருகிறார் என ஜிப்ரயீல் அலை கூறினார். அபூதர்ரை தெரியுமா என பெருமானார் கேட்டார்கள். அவர் மலக்குகளிடம் இரு காரணங்களுக்கக பிரபல மானவர் என்றார், அவர் தன்னை சிறியவராக கருதிக் கொள்கிறார். குல் ஹுவல்லாஹுவை அதிகம் ஓதுகிறார்.  

 أنه كان جبريل عليه السلام مع الرسول عليه الصلاة والسلام إذ أقبل أبو ذر الغفاري ، فقال جبريل : هذا أبو ذر قد أقبل ، فقال عليه الصلاة والسلام : أوتعرفونه ؟ قال : هو أشهر عندنا منه عندكم ، فقال عليه الصلاة والسلام : بماذا نال هذه الفضيلة ؟ قال لصغره في نفسه وكثرة قراءتهقل هو الله أحد " 
தப்ஸீர் கபீர்

இனி மீதமிருக்கிற நாட்களை கனீமத்தாக கருதுவேம். சச்சரவுகளை அறவே தவிர்ப்போம்.   

அல்லாஹ் இந்த ரமலானை நமக்கு பாக்கியமானதாக் ஆக்கியருள்வானாக!

ஜகாத் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண 
ஜகாத்


No comments:

Post a Comment