வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 15, 2016

காவிரி நதி அல்ல கவுரவம் ?

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنْ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ                                       நம்முடை முன்னோர்கள் அனைகளையும் கால்வாய்களையும் நல்ல நோக்கத்திற்காக கட்டினார்கள்.
மக்காவில் சுபைதா கால்வாய என்றெரு கால்வாய் இருக்கிறது, பாலைவனத்தில் ஒரு கால்வாய். அது வும் செயற்கை கால்வாய். பெரிதாக இருபுறம் சுவர் எழுப்பி நடுவே மேம்பாலம் போல  ஒரு கால்வாய் அமைத்து மக்காவின் வடக்குப் புறத்தில் தாயிபிற்கு செல்லும் வழியில் உள்ள வாதி நுஃமான் என்ற இடத்திலிருந்து மக்காவிற்கு தண்ணீர் கிடைப்பதற்கான ஏற்பாட்டை ஹாரூன் ரஷீதின் மனைவி சுபைதா அம்மையார் செய்தார். அந்த அம்மையாரின் இயற்பெயர் அமதுல் அஜீஜ் என்பதாகும்
ئها أمة العزيز بنت جعفر بن المنصور، زوجة هارون الرشيد وغلب عليها لقبها زبيدة.
முஸ்லிம் உம்மத்தின் மதிப்பு மிக்க வக்புகளில் ஒன்றாக இன்றளவும் அது கருதப்படுகிறது,
ஹிஜ்ரீ 186 ம் ஆண்டு பஃதாதில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த போது வருகிற வழியில் மக்காவிற்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக மிகப்பெரும் சிரமம் எடுத்துக் கொள்ளப்படுவதையும் இந்தப் பணியில் பலர் இறந்து போவதையும் கண்ட அவர் மிகவும் வருத்த முற்று இந்த திட்டத்தை  தொடங்கினார். மக்காவிற்கு வரும் தண்ணீர் அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு கிடைக்கவும் அவர் அற்புதமான ஏற்பாடுகளைச் செய்தார். இதற்கான பணிகளில் அதிக தொகை செல்வான போது அரசாங்க கஜானாவில் ஒற்றை நாணயம் மிச்சமிருக்கிற வரை பணி தடை படக் கூடாது என்று உத்தரவிட்டார்.
தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் வரண்ட பகுதிகளில் விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் பென்னி குக் என்ற பிரிட்டிஷ் இன் ஞினியர் தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையை கட்டியது இப்போது நாம் அனைவரும் அறிந்திருக்கிற செய்தி


இத்தகைய நல்ல நோக்கத்தில் உலகில் கால்வாய்களும் அணைகளும் கட்டப்பட்டன.
கட்டப்பட்ட போது நல்லெண்ணத்தோடு கட்டப்பட்ட அணைகள் அதை அணுபவிப்பவர்களால் பிரச்சனைக்கு ஆளாவது என்பது உலகின் பல பாகத்திலும் நடக்கிற எதார்த்தம். மிகவும் வேதனையானதும் கூட.
நல்லெண்ணத்தில் கட்டப்பட்ட அணைகளே பிரச்சனைகளுக்கு ஆளாகிறது என்றால் பிரச்சனைகளுக்கா கட்டப்பட்ட அணைகள் எப்படி தப்பும்?
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் பிரச்சனைகளுக்காகவே – கட்டப்பட்டன,
காவிரி ஆறு கர்நாடகாவில் உற்பத்தியாகி கேரளா பாண்டிச்சேரியில் ஆங்காங்கே தொட்டுச் சென்றாலும் தமிழ்நாட்டில் தான் பெருமளவு பாய்கிறது. ஆற்றின் 54 சதவீதப் பகுதி தமிழகத்திடம் இருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியங்கள் காவிரியை நம்பியே இருக்கின்றன. ஆனாலும் உற்பத்தி யாகும் இடம் கர்நாடகத்தில் இருக்கிறதல்லவா அதுவே தொடக்கம் முதல் கர்நாடாகாவின் தலைக் கணத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.  
இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
1910 ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து., மைசூர் அரசு நடுவண் அரசிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.
அன்றிலிருந்துது பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர்ப் பிரச்சனை தான் மூன்றாவது உலக யுத்ததிற்கு காரணமாகப் போகிறது என்று ஐநா எச்சரித்திருக்கிற நிலையிலும் இந்தப் பிரச்சனைக்கு இருநூறு வருடங்களாக சரியான ஒரு தீர்வு வரவில்லை.
ஆச்சரியம் என்னவென்றால்
120 வருடங்களுக்கு முன்பு இரு மாகாணங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு நியமித்த “கிரீபின்” எனும் நடுவர் தனது உத்தரவில் சொன்ன வாசகம் இப்போதும் பொருந்துகிறது.
“இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வைத் தர முடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்"
120 வருடங்களாக நாகரீகமும் விஞ்ஞானமும் மாபெரிய வளர்ச்சியை கணட போதும் மனிதாபிமானம் சற்றும் வளர்ச்சியடைவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-ல் 'காவிரி நடுவர் மன்றம்' அமைத்தது.

.

பிப்ரவரி 5, 2007-ஆம்நாள் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள்  (12 கி. மீ.) அளவு காவிரி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் அடிகள் (7.6 கி. மீ) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று அறிவித்தது.

2007ல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இத்தீர்ப்பு நடுவண் அரசின் அரசாணையில் இடம் பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நடுவண் அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது

நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கர்நாடகா புது விளக்கம் கொடுத்தது. 12 கீமி க்கு பதிலாக 6 கீமி அளவுக்கு மட்டுமே தண்ணீரை விடுவித்து விட்டு மீதியுள்ளதை தமிழகம் தனது நீர்ப்பிடுப்பு பகுதியிலிருந்து திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறிவந்தது,
இந்த நிலையில் தான் காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது, தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை. இந்தத் தண்ணீரைக்கொண்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாது. என்ற போதும் கர்நாடகா உயிர் தண்ணீரை விடுவிப்பதை கவுரவத்தை விட்டுக் கொடுப்பதாக கருதுகிறது.
தண்ணீர் பிரச்சனையை இரு மொழி பேசும் மக்களிடயேயான கவுரப்பிரச்சனையாக மாற்றி விட்டது.
அறிவை பறி கொடுத்த முட்டாள்கள் கலவரத்தில் தமது சொந்த கவுரவத்தையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயிக்கான சொத்துக்கள் சேதமடைந்துள்ளது என வெப்துணியா கூறுகிறது.
தமிழர்கள் பல இடங்களிலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஒரு பஸ் டிப்போ கொள்ளூத்தப்பட்ட தோடு 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்நாடக மக்கள் காவிரி நீரை தேவைக்கு வழங்குவதை கவுரமாக நினைக்காமல் வழங்காமல் தடுப்பதை கவுரமாக நினைக்கிறார்கள்.
சைத்தான் மனிதர்களின் மதிப்பை இழக்கச் செய்கிற முக்கிய இடம் இது. சைத்தான் மதிப்பிழந்த இடமும் இது தான்
கொடுப்பது கவுரவம் மன்னிப்பது கவுரவம் பணிந்து நடப்பது கவுரவம் என்ற உன்னதமான மனிதப் பண்புகள்   
ஆதமுக்கு பணியுமாறு அல்லாஹ் உத்தரவிட்டத்தை அது அல்லாஹ்வின் உத்தரவு என்பதை உணர்ந்து சைத்தான் பணிந்திருப்பான் எனில் அது அவனுக்கு கவுரமாகி இருக்கும். அவன் பணிய மறுத்தான். சைத்தான் ஆனான்,
காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் மிகப்பெரும் கொடையாளியாக இருந்தார். ஹஜ்ஜுக்காக மக்கள் மினாவில் கூடுகிற போது யாருடைய அடுப்பும் எரியக் கூடாது என உத்தரவிடுவார். அவரே அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பார்.
மக்காவின் தலைவர்க் தங்களுக்குரிய பாரம்பரிய பரிய பெருமை அவர் விட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், பிறகு ஒரு நாள் வலீதின் விருந்து என்றும் மறுநாள் மக்கத்து குறைஷிகளின் விருந்தென்றும் முடிவானது,
இப்படி வாரி வழங்குவதில் கவுரம்வம் பார்க்கப்பட வேண்டும்
மனித கவுரவத்திற்கு இழுக்காக கர்நாடகா இப்போது சைத்தானிய செயல்களுக்கு களமாகியிருக்கிறது.
தமிழக மக்களாகிய நாம் நிதானத்தை கடை பிடிக்க கடைமைப் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் நீதி தவறி அப்பாவிகளை துன்புறுத்து விடக்கூடாது.
لا يجرمنكم شنأن قوم
தமிழகத்தில் அத்தைகய வன்முறையாட்டங்கள் நிகழவில்லை என்பது நிம்மது அளிக்கிறது. அல்லாஹ் இத்தகை கொடும் தீமையிலிருந்து நமது மாநிலத்தை பாதுகாப்பானாக!
மத்திய அரசு நீர்ப்பங்கீடு சம்பந்தமாக ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலே இதற்கு காரணமாகும்.
தற்போது ஆளும் பாஜக மாநிலத்தில் நடை பெறும் காங்கிரஸ் அரசை கையாளாகாத அரசாக காட்டிக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயனபடுத்திக் கொள்ளவும் வனமுறைக்கு பின்னால் இருக்கவும் கூடும்.
நீர்ப்பங்கீடு விசயத்தில் உலகத்திற்கு மிக அற்புதமான ஒரு தீர்வை மிக எளிமையாக் முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
புகாரியில் ஒரு பாபு
بَاب شِرْبِ الْأَعْلَى إِلَى الْكَعْبَيْنِ
மேலே இருப்பவனுக்கு கணுக்கால் அளவு தண்ணீரை தடுத்துக் கொள்ள மட்டுமே அனுமதியிருக்கிறது,
அதில் இடம் பெறும் ஹதீஸ்
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ فِي شِرَاجٍ مِنْ الْحَرَّةِ يَسْقِي بِهَا النَّخْلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْقِ يَا زُبَيْرُ فَأَمَرَهُ بِالْمَعْرُوفِ ثُمَّ أَرْسِلْ إِلَى جَارِكَ فَقَالَ الْأَنْصَارِيُّ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ اسْقِ ثُمَّ احْبِسْ يَرْجِعَ الْمَاءُ إِلَى الْجَدْرِ وَاسْتَوْعَى لَهُ حَقَّهُ فَقَالَ الزُّبَيْرُ وَاللَّهِ إِنَّ هَذِهِ الْآيَةَ أُنْزِلَتْ فِي ذَلِكَ فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ قَالَ لِي ابْنُ شِهَابٍ فَقَدَّرَتْ الْأَنْصَارُ وَالنَّاسُ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْقِ ثُمَّ احْبِسْ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ وَكَانَ ذَلِكَ إِلَى الْكَعْبَيْنِ
இந்த ஹதீஸுக்கு கீழே புகாரியில் இந்த ஹதீஸ் இடம் பெறுகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلَأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ ثُمَّ رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ
ஈரலுள்ள ஒவ்வொரு பிராணிக்கு நீர் தர வேண்டியது மனித குலத்தின் கடமை அதை தடுப்பவர்கள் மனித குலத்தின் எதிரிகளாக பார்க்கப்பட வேண்டும். ஆனால் தண்ணீர் தரக் கூடாது என்று தடுப்பவர்களை கதாநாயகர்களாக கருதுகிற மக்களும் ஊடகங்களும் இருக்கிற வரை இந்தக் கொடுமைக்கு முடிவு கிடைக்காது,
அல்லாஹ் தற்போதைய பதற்றத்தை விரைவாக தணியச் செய்வானாக!! மக்களுக்கு நல் வழி காட்டக் கூடிய தலைவர்களை தந்தருள்வானாக!
தமிழகத்திற்கு போதிய நீர்வழத்தை நன்மையான வகையில் வழங்கியருள்வானாக!   ( இது போன்ற முந்தைய பதிவு அணை இருப்பும் பொறுப்பும்


No comments:

Post a Comment