வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 29, 2016

அறவாழ்வு வீரத்தின் அடையாளம்


الَّذِينَ اسْتَجَابُواْ لِلّهِ وَالرَّسُولِ مِن بَعْدِ مَآ أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُواْ مِنْهُمْ وَاتَّقَواْ أَجْرٌ عَظِيمٌ
பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்கள் ஒவ்வொருவரையும் நட்சத்திரம் என்று சொன்னார்கள்
அவர்களில் எவரை பின்பற்றினாலும் நேர்வழி பெறலாம் என்றார்கள்
இந்த வாசக அமைப்பில் அழுத்தமான கருத்துக்கள் பொதிந்துள்ளன,
·         நட்சத்திரங்களின் வழிகாட்டுதல்கள் பொதுவானவை
·         அந்த வழிகாட்டுதல்களை தேடி நீங்கள் அதிகம் சிரமப்பட தேவை இல்லை. பார்வையை செலுத்தினாலே போதுமானது,
·         பெருமானாரோடு சிறிய அளவில் தொடர்பு கொண்டிருந்த தோழரை பின்பற்றினாலும் வெற்றியடைய முடியும்
ஒரு சிறப்பான மனித வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக திகழ்கிற பெருமக்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுபைர் பின் அவாம்  (ரலி) .
அவர்களது வாழ்க்கை வரலற்றையும் அதன் வழியே நமக்கு கிடைக்கும் வழிகாட்டுதல்களை இன்று நாம் பார்க்கிறோம்.
சுபைர் ரலி அவர்களின் முக்கியத்துவம் & சிறப்புக்கள்
·         முதல் முஸ்லிம்களில் ஒருவர்
·         பெருமானாரின் சகலை
·         பெரும் வீரர்
·         இஸ்லாத்திற்காக முதன் முதலில் வாளை உருவியவர்
·         அடுத்த ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்டவர்
·         சொர்க்கவாசி

ஹிஜ்ரத்திற்கு 28 வருடங்களுக்கு முன்பு பிறந்தார். பெருமானாரை விட 12 வயது இளையவர்.
தந்தையை சிறு வயதிலேயே பரி கொடுத்திருந்தார்/
தாயின் மிக கண்டிப்பான வளர்ப்பில் வள்ர்ந்தார்.
கருணைக்கு பதிலாக அந்த தாய் கண்டிப்பையே தேர்ந்தெடுத்தார். சிறு தவறுகளுக்கும் அடித்தார். தன் மகன் வீரப் புதல்வனாக வரவேண்டும் என்பதற்காக

كانت تضربه وهو صغير وتُغلِظ عليه، فعاتبها عمه نوفل بن خويلد وقال: «ما هكذا يُضرب الولد؛ إنك لتضربينه ضَرْب مُبْغضة» فقالت:[
مَنْ قَالَ إِنِّي أُبْغضه فقد كـذب   وَإِنَّمَا أَضْرِبُهُ لِكَـي يَلَبْ
وَيَهْزِمَ الجَيْشَ وَيَأْتِـي بَالسَّلَبْ   وَلا يَكُن لِمَالِهِ خَبْأٌ مُخَبْ

முதல் முஸ்லிம் குழுவில் முதல்வர்
أسلم الزبير وهو ابن ست عشرة سنة، وقيل ابن اثنتي عشرة سنة
كان رابع أو خامس من أسلم
قال ابن إسحاق: «فَأَسْلَمَ عَلَى يَدَيْهِ - يعني أَبي بَكْرٍ - فِيمَا بَلَغَنِي: الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ، وَعُثْمَانُ بْنُ عَفَّانَ، وَطَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ، وَسَعْدٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَانْطَلَقُوا حَتَّى أَتَوْا رَسُولَ اللَّهِ  وَسَلَّمَ وَمَعَهُمْ أَبُو بَكْرٍ، فَعَرَضَ عَلَيْهِمُ الإِسْلامَ، وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ، وَأَنْبَأَهُمْ بِحَقِّ الإِسْلامِ، وَبِمَا وَعَدَهُمُ اللَّهُ مِنَ الْكَرَامَةِ، فَآمَنُوا وَأَصْبَحُوا مُقِرِّينَ بِحَقِّ الإِسْلامِ، فَكَانَ هَؤُلاءِ النَّفَرُ الثَّمَانِيَةُ الَّذِينَ سَبَقُوا إِلَى الإِسْلامِ، فَصَلَّوْا وَصَدَّقُوا رَسُولَ اللَّهِ  وَآمَنُوا بِمَا جَاءَ مِنْ عِنْدِ اللَّهِ

சிரமங்களை சகித்துக்கொண்டார் .
பாயில் கட்டிப் போட்டு புகை போடப்பட்டார்.
وكان عمّه نوفل يُعذِّبه ليرجع عن الإسلام، فكان يعلقه في حصير، ويدخّن عليه، وكان الزبير يقول: «لا أكفر أبدًا.»
என்ன வகையான சிதரவதை பாருங்கள் ?

திருவிலே விளைந்த வீரம் -  முதன் முதலாக வாளேந்திய இளையர்

 “நாயகம் காலத்து  பெரு வீர்ரகள் மூவர்என்று கூறுகிற இமாம் தவ்ரீ அவர்கள் ஹம்சா அலி சுபைர் (ரலி)” என அவர்களை வரிசைப் படுத்துகிறார்.

சுபைர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக முதன் முதலில் வாளை உறுவியவர் என்ற பெருமை பெற்றவராவார்.

மக்காவில் இஸ்லாம் ஒரு ரகசிய மதமாக இருந்த கால கட்ட்த்தில், இஸ்லாத்தை தழுவிக் கொண்டவர்கள் பலரும் தங்களது மார்க்கத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப் பட்டுவிட்டார் என்ற ஒரு வதந்தி சுபைர் ரலி அவர்களுக்கு எட்டியது. இளைஞராக இருந்த சுபைர் ரலி அவர்கள் தனது இடையிலிருந்த வாளை உறுவியவாறு சிங்கமென மக்காவின் தெருக்களில் பெருமானாரை தேடிக் கொண்டு நடந்தார். ஒரு இட்த்தில் நாயக்த்தை பார்த்த பிறகே அமைதி அடைந்தார். தனது இளைய தோழரின் போர்க் கோலத்தைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் சுபைரே! இது என்ன கோலம்?” என்று கேட்டார்கள். உங்களைப் பற்றி ஒரு செய்தி வந்த்து அப்படி நடந்திருக்கும் என்றால உங்களைத் தாக்கியவர்கள் வெட்டிப்போடவே வந்தேன் என்றார் சுபைர்.

قد رُوِى أنه سرت شائعة ذات يوم أن النبي محمد أُخِذ بأعلى مكة، فخرج الزبير وبيده سيفه، فخرج الزبير وهو غلام، ابن اثنتي عشرة سنة، بيده السيف، فمن رآه عجب، وقال: الغلام معه السيف، حتى أتى النبي Mohamed peace be upon him.svg فقال: ما لك يا زبير؟ فأخبره وقال: أتيت أضرب بسيفي من أخذك.»،

وقال عروة: «جاء الزبير بسيفه، فقال النبي Mohamed peace be upon him.svg: ما لك ؟ قال: أُخبِرت أنك أُخِذت. قال: فكنت صانعًا ماذا؟ قال: كنت أضرب به من أخذك. فدعا له ولسيفه.»، ولهذا قيل أن الزبير هو أول من سل سيفًا في الإسلام

தன்னுடைய விரலசைவுக்கு கட்டுப்பட்டு உலகை புரட்டிப் போட ஒரு கூட்டம் தயாரானதைப் பிற்காலத்தில் கண்ணாரக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அதற்கான அறிகுறிகள் கூட தென்படாத அந்த பலவீனமான பொழுதில் சுபைர் (ரலி) அவர்களின் சத்திய ஆவேசத்தை கண்டு மிகவும் சந்தோஷம்டைந்தார்கள். அந்த இளைய தோழருக்காகவும் அவரது வாளுக்காகவும் வெற்றிக்கு பிரார்த்தனை செய்தார்கள்.   

அந்தப் பிரார்த்தனையை மிஞ்ச வேறென்ன இருக்கிறது. சுபைர் (ரலி) அவர்களின் வீரமும், வாள் வீச்சும் வெற்றி மேல் வெற்றியை இஸ்லாத்திற்காக குவித்தன.

அவரது தனிப்பட்ட சாதனகளில் ஒன்று குறிப்பிட்த்தக்கது.

எகிப்தை வெற்றி கொள்ளவதற்காக உமர் ரலி அவர்கள் அம்ரு பின் ஆஸ் (ரலி) தலைமையில் 3500 பேர் கொண்ட ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பாபிலோன் என்ற கோட்டை நீண்ட நாட்களாக முற்றுகை இட்டும் வெற்றி கிடைக்கவில்லை. மேலும் அதிகம் துணைப்படையை அனுப்பி வைக்குமாறு அம்ரு அவர்கள் உமர் (ரலி) க்கு கடிதம் எழுதினார். உமர் ரலி அவர்கள் சுபைர் (ரலி) உட்பட பல தோழர்களை அனுப்பி வைத்தார்கள். ஏழு மாதமாக முற்றுகை இட்டும் கோட்டை விழவில்லை என்பதை கவனித்த சுபைர் (ரலி) அவர்கள் நேரடியாக தனியாக களத்தில் இறங்க தீர்மாணித்தார்.

கோட்டைக்கு அருகே செல்லத் தீர்மாணித்தார். “நான் என்னை அல்லாஹ்வுக்காக வழங்கப் போகிறேன், அதன் மூலம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என்று சொல்லிக் கொண்ட அவர் தன் தோழர்களைப் பார்த்து என்னுடைய தக்பீர் சப்த்த்தை கேட்டால் உடனே கோட்டை நெருங்கி விடுங்கள் என்று சொன்னார்.

எதிரிகளின் தாக்குதலைப் பற்றி சற்றும் அஞ்சாமல் ஒரு ஏணியை சுவற்றில் சாய்த்து வைத்து சரசரவென்று கோட்டைக்கு மேலே ஏறி வாளை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என்று சத்தமிட்டார். முஸ்லிம் வீர்ர்கள் கோட்டைச் சுவற்றில் ஏறிவிட்டார்கள் என்று கருதிய எதிரிகள் ஓடிச் சென்று ஓளிந்து  கொண்டார்கள்.

சற்று நேரத்தில்  கோட்டை சுவ்ற்றுக்கு மேலே அவரையும் அவரது வாளையும் தக்பீர்ன் சப்த்த்தையும் பார்த்த மற்ற தோழர்கள் விரைந்து சென்று கோட்டயை கைப்பற்றினார்கள்.

சுபைர் (ரலி) வீரத்தினால் வீழ்ந்த அந்தக் கோட்டை முஸ்லிம்களின் எகிப்து வெற்றியை  நிறைவு செய்தது.

மக்காவில் தன்னந்தனியாக இஸ்லாமின் எதிரிகளை நோக்கி வாளை உறுவிய சுபைர் (ரலி) அவர்கள் தன்னந்தனியாகவே எகிப்தின் வெற்றிக்கனியை முஸ்லிம்களூக்கு பறித்துத் தந்தார்கள்.

அண்ணல் நபியின் வெற்றிக்குரிய ஆசி பெற்ற வீரம் அல்லவா அது!

வீரம் அல்லது தீரம்  என்பது  வாள் வீசுவதிலோ எதிரிகளை வெட்டிச் சாய்ப்பதிலோ மட்டுமல்ல. எந்த ஒரு காரியத்தையும் தனியாக எடுத்துச் செய்வதிலும் அதற்காக பிறரின் உதவியை தாங்கி நிற்காமல் செயல்படுவதிலும் இருக்கிறது என்பதை சுபைர் ரலி அவர்களின் வரலாறு உணர்த்துகிறது.

நம்மில் பலரும் ஒரு காரியத்தை திட்டமிடுவோம். ஆள் துணை இருந்தால் செய்வோம் என்று சொல்லிவிடுவோம்.
அல்லது சூழ் நிலை கனிந்திருந்தால் தான் செயல்படுவோம்.

ஒரு காரியத்தை முடிக்காமல் இருப்பதற்கு சால்ஜாப்புக்கள் சொல்லி தப்பிக்க முயற்சிப்பது நமது பழக்கம் .

சூழ்நிலைகளை மாற்றும் திறன் வீரனுக்கு தேவை என்பதை சுபைர் ரலி அவர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


·         هاجر إلى الحبشة في الهجرة الأولى
அபீசீனியாவில் நீண்ட நாள் தங்கியிருக்க வில்லை. மக்காவிற்கு திரும்பினார்.
ஆயிஷா அம்மாவின் அக்கா அஸ்மா ரலி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
அஸ்மா அம்மாவும் ஒரு வீரப்புதல்விதான்.
பெருமானார் (ஸல்) அவர்கள் தவ்ரில் தங்கியிருந்த போது அவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தவர்
பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது சுபைர் (ரலி) வியாபாரத்திற்காக சிரியா சென்றிருந்தார்.
فعن عروة بن الزبير قال: «أن رسول الله  لقي الزبير في ركب من المسلمين كانوا تجارًا قافلين من الشام (إلى مكة)، فكسى الزبيرُ رسول الله  وأبا بكر ثياب بياض»،

فكانت هجرة الزبير إلى المدينة المنورة بعد هجرة النبي وأبي بكر

இந்த தம்பதிகள் ஹிஜ்ரத் செய்த போது அஸ்மா அம்மையார் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

மதீனாவில் முஸ்லிம்களுக்கு பிறந்த முதல் குழந்தை இந்த தம்பதியருடையது.  

وكانت أسماء قد خرجت من مكة مهاجرة وهي مُتمّة حملها بعبد الله، فولدته بقباء في شوال سنة 1 هـ
فكان عبد الله أول مولود للمهاجرين فيالمدينة، وقد استبشر المسلمون بمولده، حيث كانوا قد بقوا لفترة لا يولد لهم مولود حتى قيل إن يهود المدينة سحرتهم.

 حملته أمه في خرقة إلى النبي محمد، فحنّكه بتمرة وبارك عليه وسماه عبد الله باسم جده أبي بكر، وأمر أبا بكر أن يؤذن في أذنيه.   ( البدابة والنهاية  - فصل في ميلاد عبد الله بن الزبير )

சுபைர் ரலியின் வீரத்தின் சாட்சிகள்
شهد الزبير بن العوام جميع الغزوات والمشاهد مع النبي محمد،
 وكان من الفرسان،
وأُصِيبَ جسده بكثير من الطعن والرمي؛
قال الحسن البصري: «كَانَ بِالزُّبَيْرِ بِضْعَةٌ وَثَلَاثُونَ ضَرْبَةً، كُلُّهَا مَعَ النَّبِيِّ »،

وَعَنِ ابْنِ شِهَابٍ، قَالَ:: «لَمَّا أَتَى عَلِيٌّ  بِسَيْفِ الزُّبَيْرِ جَعَلَ يُقَلِّبُهُ وَيَقُولُ: سَيْفٌ طَالَمَا جَلَا الْغَمَّ عَنْ وَجْهِ رَسُولِ اللَّهِ.»

பத்று யுத்ததின் போது முஸ்லிம்களின் வலது புற அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு சுபைர் ரலி அவர்களிடம் வழங்கப்பட்டது.

சுபைரின் வாள்

قَتَل الزبير في غزوة بدر عبيدة بن سعيد بن العاص فيقول:[41] «لقيت يوم بدر عبيدة بن سعيد بن العاص، وهو مدجج، لا يرى منه إلا عيناه، وهو يكنى أبا ذات الكرش، فقال أنا أبو ذات الكرش، فحملت عليه بالعنزة فطعنته في عينه فمات. قال هشام: فأخبرت: أن الزبير قال: لقد وضعت رجلي عليه، ثم تمطأت، فكان الجهد أن نزعها وقد انثى طرفاها. قال عروة: فسأله إياها رسول الله  فأعطاه، فلما قبض رسول الله  أخذها ثم طلبها أبو بكر فأعطاه، فلما قبض أبو بكر سألها إياه عمر فأعطاه إياها، فلما قبض عمر أخذها، ثم طلبها عثمان منه فأعطاه إياها، فلما قتل عثمان وقعت عند آل علي، فطلبها ابن الزبير، فكانت عنده حتى قتل

அன்னாரின் வீரத்திற்கும் விவேகத்திற்கும் பத்ரு களம் வாய்ப்பை கொடுத்த்து. பத்ரு யுத்தம் தொடங்கிய போது மக்காவின் குறைஷியரின் தரப்பிலிருந்து உடல் முழுவதையும் இரும்புப் பலகையால் கவசமணிந்த உபைதா பின் சஃத் என்பவன்  வெளியே வந்து பெருமையோடு என்னை எதிர்க்க வருவது யார் எனக் கொக்கரித்தான். சுபைர் ரலி அவர்கள் அவனை நோக்கி சென்றார்கள். அவனுடை உடலில் எங்கும் அடிக்க முடியாதவாறு கவசமிடப் பட்டிருந்த்து. அவனுடை கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. சுபைர் (ரலி) மிரளவில்லை. யோசித்துக் கொண்டிருக்கவும் இல்லை. நிமிட நேரத்தில் அவனுடை கண்களுக்குள்ளாக தன்னுடைய வாளைப் பாய்ச்சினார்கள். அவன் சுருண்டு விழுந்தான். அவனுடை கணகளுக்குள் சிக்கிக் கொண்ட வாளை உறுவுவதற்காக அவர் அசைத்து இழுத்த போது வாளின் முனை உடைந்து போனது.

முனை உடைந்து போனாலும் அந்த வாள் வரலாற்றுச் சிறப்புமிக்க தகுதியை பெற்றது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த முனை உடைந்த வாளை சுபைர் (ரலி) அவர்களிடம் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்கள். நாயக்த்திற்கு பிறகு அபுபாக்கர் சித்தீக (ரலி) அவர்களும் அவர்களுக்கு பிறகு உமர் (ரலி) அந்த வாளை கேட்டு வாங்கி தங்களிடம் வைத்துக் கொண்டார்கள். பின்னர் ஒரு சமயம் அந்த முனை உடைந்த வாள் ஏலம் விடப்பட்ட போது அதிக தொகைக்கு அது ஏலம் போனது (புகாரி 3974) 

சுபைரின் காயங்களில் விரல் விட்டு விளையாடிய சிறுவர்கள்

فعن عروة قال: كان في الزبير ثلاث ضربات: إحداهن في عاتقه، إن كنت لأدخل أصابعي فيها، ضرب ثنتين يوم بدر، وواحدة يوم اليرموك.»

சுபைருக்கு சமாமாக மலக்குகள்

كان الزبير يلبس عمامة صفراء يوم بدر، فنزلت الملائكة وعليها عمائم صفر، فقال النبي: «إِنَّ الْمَلائِكَةَ نَزَلَتْ عَلَى سِيمَاءِ الزُّبَيْرِ  (  تاريخ دمشق لإبن عساكر )

சுபைர் அவர்களும் நாயகத்தின் அழைப்பு வருவதற்கு முன்னரே ஆயத்தமாகி நிற்பவராக இருந்தார்.

அசைக்க முடியாத வீரம் கொண்ட சுபைர் (ரலி) அவர்கள் வாள் வீச்சில்  வித்தகராகவும் குதிரைச் சவாரியில் நிபுணராகவும் திகழ்ந்தார். மரணத்தை அஞ்சாத மாவீர்ர் என்று வரலாறு அவரை வர்ணிக்கிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அகழ்ப் போரின் போது நபி (ஸல்) அவர்கள்:
(இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருபவர் யார், என்று மக்களைஅழைத்தார்கள். உடனே ஸுபைர் (பின் அவ்வாம்) அவர்கள் நான் செல்கிறேன் என முன்வந்தார்கள். மீண்டும் நபி (ஸல்) வேறு யாரு முண்டா என்று கேட்டார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தி யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு எனது (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைர்   ஆவார்,, என்று கூறினார்கள்.

: إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًا، وَحَوَارِيَّ الزُّبَيْرُ

அகழ்போரின் போது நபி (ஸல்) அவர்களின் அழைப்பிற்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பதிலளித்த சுபைர் ரலி அவர்களின் வீரம் சாமாண்யமானது அல்ல. அகழ்ப் போர் அத்தகைய சூழ்நிலையில் நடந்தது. முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்ற உயிர் நிலையில் இருந்தனர். அவர்களது பார்வைகள் நிலை குத்தி நின்றுவிட்டன என்றும் இதயம் தொண்டைக்குழி வரை வந்து விட்ட்து என்றும் அல்லாஹ் அந்தச் சுழ்நிலையின் பீதியை திருக்குர் ஆனில்  விவரிக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எந்த அழைப்பிற்கும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிற நபித்தோழர்களில் வேறு யாரும் அன்றை தினம் நாயகத்தின் அந்த அழைப்பிற்கு பதிலளிக்கத் தயாராக வில்லை என்பதே அந்த சூழ்நிலையின் நெருக்கடியை புலப்படுத்துகிறது. அத்தைய சூழ்நிலையிலும் சுபைர் தயாராக இருந்தார். அதனால் தான் நபி (ஸல்) அவரை தனது பிரத்தியோக உதவியாளர் என்று புகழ்ந்துரைத்தார்கள்.

عن عائشة قالت لِعُروَةَ: يا ابنَ أُختي، كانَ أبَوكَ منهُم: الزُّبَيْرُ وأبو بكرٍ، لما أصاب رسولَ الله  ما أصابَ يومَ أُحُدٍ، وانصَرَفَ عنه المُشرِكونَ، خافَ أنْ يَرْجِعوا، قال: مَن يَذهَبُ في إثْرِهِم. فانتدَبَ مِنهُم سَبْعونَ رَجلًا، قال: كان فيهم أبو بكرٍ والزُّبَيرُ
 الَّذِينَ اسْتَجَابُواْ لِلّهِ وَالرَّسُولِ مِن بَعْدِ مَآ أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُواْ مِنْهُمْ وَاتَّقَواْ أَجْرٌ عَظِيمٌ இந்த ஆயத்தின் விரிவுரையில் ஆயிஷா அம்மாவின் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.


ரோஷம்
சுபைர் ரலி அவர்களின் வீரத்தைப் போலவே அவர்களது ரோஷமும் வரலாற்றில்  இடம் பெற்ற  ஒன்றாகும்.

ரோஷம் இருக்கிற இட்த்தில் தானே உண்மையான வீரம் இருக்கும்  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சுபைர் (ரலி) அவர்களுக்கும் இன்னொரு நெருக்கமான உறவு இருந்த்து. அது சகலை உறவு.

அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகள் அஸ்மா (ரலி) சுபைர் திருமணம் செய்திருந்தார். இளைய மகள் ஆயிஷா (ரலி) வை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்திருந்தார்கள். இதன் காரணமாக நாயகம் (ஸல்) அவர்களுக்கு சுபைர் (ரலி) குடும்பத்தோடு அழுத்தமான பாசம் இருந்த்து.

அஸ்மா (ரலி) கூறுகிறார்:
ஒரு நாள் மதீனாவிலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்த சுபைர் ரலிக்கு சொந்தமான தோட்ட்த்திலிருந்து நான் என் தலை மீது பேரீச்சங கொட்டைகளை வைத்து நடந்து  வந்து கொண்டிருந்தேன்.  (வழியில்)நபி (ஸல்) என்னை கடந்து  சென்றார்கள் அவர்களுடன் அன்சாரித் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். ஆனால் நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும் அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக் காரராக இருந்தார். நான் வெட்கப் படுவதைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள்.

நான் (என் கணவர்) ஸுபைரிடம் நடந்த்தை சொன்னேன். அவர் நீ நபி (ஸல்) அவர்களுடன் வராமல் நடந்து வந்த்துதான் என்னை வருத்தமடையச் செய்கிறது என்றார். (புகாரி 5224)

இந்த நபி மொழி பல தகவல்களைத் தருகிறது.
ஒரு முக்கியமான பணியாக தோழர்களுடன் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் அஸ்மா அம்மையாருக்காக நபிகள் நாயகம் (ஸல்) தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்த்து அதில் ஏறிக் கொள்ளும்படி அழைத்த்து தனது மனைவியின் குடூம்பத்தார் மீது நபி (ஸல்) அவர்களுக்கு இருந்த பாசத்தை காட்டுகிறது. அது இயற்கையானது அல்லவா?

ஒரு ஆத்திர அவசரத்திற்காக அன்னியப் பெண்ணை வாகனத்தில் ஏற்றிக் கொள்வது கூடும் என்பதை இந்நபி மொழி சுட்டுவதாக சட்டவல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தான் இவ்வளவு தூரம் இடமளித்தும் அஸ்மா அம்மையார் ஒட்டகத்தில் ஏறிக் கொள்ளாத்தை கண்டு நபி (ஸல்) அவர்கள் கோப்ப்படவில்லை. அஸ்மா அம்மையாரின் தயக்கத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொண்ட்தின் அடையாளமாக எதுவும் செல்லாமல் நபி (ஸல்) சென்றது மக்களை புரிந்து கொள்ளும் அண்ணலாரின் இயல்பை வெளிப்படுத்துகிறது.

சுபைர் (ரலி ) அவர்களின் ரோஷத்தையும் இந்நபி மொழி நமக்கு காட்டுகிறது. தனது மனைவி மற்றும் பிள்ளைகள் விசய்த்தில் ரோஷம் காட்டுவது ஈமானியப் பண்பாகும். அதுவே சிறந்த குடும்பத்தலைவரின் அழகாகும்.

மனைவியும் பிள்ளைகளும் சகோதரிகளும் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாருடனும் வெளியே சென்று வரலாம் என்று இடம் கொடுப்பது மானங்கெட்ட செயலாகும்.

ரோச்ஷமுள்ள எந்த ஆண்மகனும் இப்படி உணர்ச்சியற்று இருக்க்க் கூடாது. குறிப்பாக இறை நம்பிக்கையுள்ள முஃமின்கள் இப்படி இருக்கலாகாது.

இதை நாகரீகம் என்று கருதுவது இஸ்லாமின் அடிப்படிக் கோட்பாடுகளுக்கு எதிராக கலகம் செய்வதாகும்.

அல்லாஹ் மூன்று பேரை சபிக்கிறான் என்று சொன்ன நபிகள் நாயகம் அவர்கள் தனது மனைவி விசயத்தில் ரோஷமற்று நடந்து கொள்ளும் கணவனை மூன்றாவதாகச் சொன்னார்கள்.

 عن ابن عمر: أن رسول الله صلى الله عليه وسلم قال: "ثلاثة قد حرم الله تبارك وتعالى عليهم الجنة: مدمن الخمر، والعاق، والديوث الذي يقر في أهله الخبث" 

இவ்வாறு ரோஷமற்று நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக்க் காரணம் என்னவென்றால் இத்தகைய ஆசாமிகளால் தான் சுலபமாக சமூகத்தில் தவறான நடத்தைகள் உண்டாகின்றன. மேலும் இவர்கள் அடிப்ப்டையான மனித நாகரீகத்திற்கு எதிராக போலித்தனமான நாகரீகத்திற்கு வழியமைத்தும் கொடுக்கிறார்கள்.

காய் கறிக் காரனிலிருந்து வீட்டுக்கு வேலைக்கு வரும் ஆட்கள் வரை ஆபீஸ் பாய்கள் எடுபிடி ஆட்கள் கார் டிரைவர்கள் என அனைத்து வகையான அன்னியரிடமிருந்து தகுந்த தூரத்தில் தம்முடைய குடும்பத்தை வைத்துக் கொள்வது ஒரு குடும்பத் தலைவரின் அடிப்படை பொறுப்பாகும்.

குடும்பத்திலுள்ளோர் இந்த எல்லைகளை மீறுகிற போது அதை ஆரம்ப நிலையிலேயே கண்டித்து தடுத்து விடுவது இஸ்லாமிய ரோஷமாகும்.

இந்த ரோஷத்தை கை விட்டு விட்டால் பின்னர் ஏற்படும் சீர்கேடுகளிலிருந்தும் தப்ப முடியாது. அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் தப்ப முடியாது.  

சுபைர் ரலி அவர்களின் வாழ்வு நமக்கு இந்த பாடத்தை தருகிறது.

மக்கா வெற்றியின் போது முஹாஜிர்களில் மூன்று தலைவர்களில் ஒருவராக சுபைர் ரலி யை பெருமானார் நியமித்து அவரிடமும் ஒரு கொடியை கொடுத்தார்கள்.

மதீனாவின் காவலர்
பெருமானாரின் வபாத்திற்குப்பிறகு மதீனாவின் காவலர்களில் ஒருவராக சுபைர் ரலி நியமிக்கப்பட்டார்கள்

بعد موت النبي كان الزبير من جملة الحرس الذين يحرسون المدينة، لأن كثير من قبائل العرب قد ارتدت، وطمع كثير من الأعراب في المدينة، فجعل أبو بكر الصديق على أنقاب المدينة حرسًا يبيتون حولها منهمعلي بن أبي طالب، والزبير بن العوام، وطلحة بن عبيد الله، وسعد بن أبي وقاص
யர்மூக் யுத்தத்தில் சுபைர்
யர்மூக் யுத்தம் ரோமர்களிடமிருந்து முஸ்லிம்கள் சிரியாவை கைப்பற்றிய யுத்தம் அதில் சுபைர் ரலியின் பங்களிப்பு மகத்தானது.
சுமார் 50 வயதை தொட்டிருந்த அவரோடு இளம் தோழர்களால போட்டியிட முடியவில்லை

كان الزبير بن العوام فيمن شهد معركة اليرموك، وكانت في أواخر خلافة أبي بكر وبداية خلافة عمر بن الخطاب، يقول ابن كثير:[ «وقد كان فيمن شهد اليرموك الزبير بن العوام، وهو أفضل من هناك من الصحابة، وكان من فرسان الناس وشجعانهم، فاجتمع إليه جماعة من الأبطال يومئذ فقالوا: ألا تحمل فنحمل معك؟ فقال: إنكم لا تثبتون. فقالوا: بلى، فحمل وحملوا فلما واجهوا صفوف الروم أحجموا وأقدم هو، فاخترق صفوف الروم حتى خرج من الجانب الآخر، وعاد إلى أصحابه ثم جاؤوا إليه مرة ثانية، ففعل كما فعل في الأولى، وجرح يومئذ جرحين بين كتفيه

எகிப்தை வெற்றி கொண்டதிலும் சுபைர் ரலியின் பணி மகத்தானது.
அம்ரு பின் ஆஸ் ரலி எகிப்தை வெற்றி கொள்ள சென்ற போது இன்னும் அதிகமான எண்ணிக்கையில் துணைப் படை வேண்டு மென உமர் ரலியிடம் கேட்டு கடிதம் எழுதினார்கள். சுபைர் ரலி உள்ளிட்ட பல ஆயிரம் தோழர்களை உமர் ரலி அனுப்பி வைத்தார்கள்.

எகிப்தின் வெற்றியில் சுபைர் ஆற்றிய பங்கை மேலே ஒரு வரலாற்றில் நாம் கண்டோம்.

وكان للزبير دورًا بارزًا في فتح حصن بابليون، حيث اعتلى الزبير بن العوام مع نفر من المسلمين، السور،وكبَّروا، فظنَ أهل الحصن أنَّ المسلمين اقتحموه، فهربوا تاركين مواقعهم، فنزل الزبير وفتح باب الحصن لأفراد الجيش الإسلامي فدخلوه
உமர் ரலி நியமித்த சூரா குழு உறுப்பினர்

لما طُعِن عمر بن الخطاب ودنت وفاته، أوصى بأن يكون الأمر شورى بعده في ستة ممن توفي النبي محمد وهو عنهم راضٍ وهم: عثمان بن عفان، علي بن أبي طالب، طلحة بن عبيد الله ، الزبير بن العوام، عبد الرحمن بن عوف، وسعد بن أبي وقاص


இந்த ஆறு பேருக்கும் ஆட்சியை தனக்கு கோரும் அதிகாரம் இருந்தது

இவர்களின் தனக்கு அதிகாரம் வேண்டாம் என முதலில் விட்டுக் கொடுத்தவர் சுபைர் (ரலி)

(குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மக்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் இக்காலத்தில் சுபைர் ரலியின் நட்சத்திர வழிகாட்டல் அபூர்வமானது)

بعد الانتهاء من دفن عمر بن الخطاب ذهب أهل الشورى إلى الاجتماع في بيت عائشة بنت أبي بكر، وعندما اجتمع أهل الشورى قال لهم عبد الرحمن بن عوف: «اجعلوا أمركم إلى ثلاثة منكم»، فقال الزبير: «جعلت أمري إلى علي»


உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப்பட்ட போது அது சுபைர் ரலி அவர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. அவர்களுக்கு ஆதரவாக நியாயம் கேட்கும் குழுவில் இணைந்தார் சுபைர் ரலி. . அதனால் ஒரு கட்டத்தில் உஸ்மான் ரலிக்குப் பிறகு பொறுப்ப்பேற்ற அலி ரலி அவர்களோடு போர் புரியும் நிலை ஏற்பட்டது, போர்க்களத்தில் அலி ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் செய்தியை சுபைருக்கு நினைவூட்டினார்கள். சுபைர் ரலி யுத்த களத்தை விட்டு வெளியேறினார்கள்

حيث التقى بعلي فقال لهيا زبير! أنشدك الله أسمعت رسول الله  يقول: «إنك تقاتلني وأنت ظالم؟». قال: نعم! لم أذكره إلا في موقفي هذا»، فلما تذكّر الزبير ذلك انصرف عن القتال، (سير أعلام النبلاء )
காலமெல்லாம் உயர்ந்து நின்ற சுபைர் ரலியின் வாள் ரஸூலின் வார்த்தைக்கு கீழே நின்றது.
அது பொருக்காமல் ஒருவர் சுபைர் ரலி அவர்களை கொலை செய்தார்.

فلما رجع الزبير متوجهاً إلى المدينة لحقه ابن جرموز بوادي السباع فقتله وهو يصلي، فلما جيء به مقتولاً بكى علي بن أبي طالب وقال: سمعت رسول الله  يقول: «بشر قاتل ابن صفية بالنار

فكَان مَقتلُه بِوَادِي السِّبَاعِ بالْبَصْرَةَ، سَنَةَ سِتٍّ وَثَلَاثِينَ.
கடனுக்கான கவலையை தவிர வேறு கவலை இல்லா மரணம்

ان ميراث الزبير أرضين بالغابة، ودارًا بالمدينة، ودارًا بالبصرة ودارًا بالكوفة، ودارًا بمصر، وكان عليه دَين يُقدّر بـ ألفي ألف ومائتي ألف، وكان أكبر هم الزبير قبل وفاته هو سداد هذا الدَين، وأوصى ابنه عبد الله بسداده، فقال له: «يا بُنَيّ، إنَّه لا يقتل اليوم إلاَّ ظالم أو مظلوم، وإنّي لا أُراني إلاَّ سأقتل اليوم مظلومًا، وإنَّ من أكبر همِّي لَدَينِي، قال عبد الله: فجعل يوصيني بدينه ويقول: يا بُنيَّ، إن عجزتَ عنْه في شيء فاستعِنْ عليْه مولاي، قال: فوالله ما دريتُ ما أراد حتَّى قلتُ: يا أبتِ مَن مولاك؟ قال: الله، قال: فوالله ما وقعتُ في كربة من دَينه إلاَّ قلتُ: يا مولى الزبير، اقضِ عنه دينَه، فيَقضيه.»،


சுபர் ரலி அவர்களுக்கு இந்த தீனில் உள்ள மரியாதை

 قال عمر بن الخطاب لو عهدت أو تركت تركة، كان أحبهم إلي الزبير؛ إنه ركن من أركان الدين

عن عبد الرحمن بن عوف عن النبي أنه قالأبو بكر في الجنة، وعمر في الجنة، وعثمان في الجنة، وعلي في الجنة، وطلحة في الجنة، والزبير في الجنة، وعبد الرحمن بن عوف في الجنة، وسعد بن أبي وقاص في الجنة، وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة
தனது தோழர்களை நட்சத்திரங்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு அட்சர சுத்தமானது என்பதற்கு சுபைர் ரலி அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு

இத்தகைய பெருமக்களின் வாழ்வியல் பாடங்களை கவனமாக கடைபிடிக்க அல்லாஹ் நம்க்கு கிருபை செய்வானாக!

1 comment:

  1. அருமையான பதிவு நன்றி இது போன்றகட்டுரைகளை முகனூலிலும் பதிந்தால்மக்களுக்கு பயனுல்லதாக இருக்கும்

    ReplyDelete