வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 22, 2016

அலப்போ"வில் அமைதி தவழட்டும்!

முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களின் ஒரு வழிகாட்டுதல் நமது வாழ்விற்கு மிகவும் அத்தியவாசியமானது. மிக அற்புதமானதும் கூட
நமக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கையில் “ஆபியத்” எனும் நிம்மதி மிகவும் முக்கியமானது.
அது கெட்டுப் போவதை எதை முன்னிட்டும் நாம் அனுமதிக்க கூடாது.
இந்தச் செய்தியை நீங்கள் எத்தனை முறை கேட்டிருந்தாலும் , மீண்டும் மீண்டும் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஆழமான சிந்தனையை இது நமக்கு தருகிறது. நமது ஆசை என்னவாக இருக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது.
ஒரு போர்க்களத்தில் பெருமானாருக்கு எதிராக படை திரட்டிய எதிர்கள் அவர்களை எதிர்கொள்ள பெருமானார் (ஸல்) அவர்கள் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன் ஊரைக் காலி செய்து விட்டு மலைகளில் ஒழிந்து கொண்டனர்.  எதிரிகளை சந்திக்க முடியாமல் போன போது நபித்தோழர்கள் சண்டை நடக்க வில்லையே … ஷஷீதாவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டனர். தோழர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாழ்க்கையின் மிக உன்னதமான எதிர்பார்ப்பை கற்றுக் கொடுத்தார்கள்.
நோக்கம் மிக உயர்வானதாக இருந்தாலும் கூட ஆபியத் பிரதானம் என்ற வழிகாட்டுதலை இது தருகிறது.

நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஆபியத்தை தவற விட்டு விடக் கூடாது.

ஆபியத்தை – நிம்மதியை தக்க வைத்துக் கொள்ளும் அதிகப்படியான முயற்சினுடேயே இலட்சியத்தை நோக்கிய நமது பயணம் அமைய வேண்டும்

வியாபாரம். அரசியல் சமூக சீர்திருத்தம் குடும்பம் தனி மனித நிலைகள் அனைத்திலும் இது முத்திரை மந்திரமாக இருக்க வேண்டும்

சின்ன கருத்து வேறுபாட்டிற்காக ஆபியத்தை தொலைத்து விடுவது நம்முடைய இன்றைய இயல்பாக இருக்கிறது.

பல நேரங்களில் அத்தகைய கருத்து வேறுபாடுகள் தேவையே அற்றதாக இருக்கும் – நமது ஈகோவை காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லது அடுத்தவருடைய ஈகோவை காயப்படுத்துவதற்காக ஏற்பட்டதாக இருக்கும்.

சிக்னலில் ஒரு செகண்ட முந்திச் செல்பவனை நோக்கி நாம் உரத்து சப்தமிடும் கோஷம் கூட ஆபியத்திற்கு ஆபத்தாக அமையும்.

இதில் எந்த நன்மையும் இல்லை. தேவையும் இல்லை.

வீடுகளில் தேவையற்ற பேச்சுக்கள் – போகிற போக்கில் நிம்மதியை குலைத்து விடுவதுண்டு.

பக்ரீத் பெருநாள் அன்று மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். கணவனை மனைவி கேலி செய்தார். மனைவி திரும்ப கணவரை கேலி செய்த போது அது பலருக்கும் முன்னிலையில் தடித்தததாக ஆகிவிட்டது. சட்டென கணவன் மனைவியை தலாக் சொல்லி விட்டான்.

இது கேரளாவில் நடை பெற்ற ஒரு சம்பவம்

இது போன்ற ஆபியத்தை நிம்மதியை தவறவிடும் சந்தர்ப்பங்கள் நமது சொந்த சிந்தனையால் பேச்சால் நடவடிக்கையால் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் அதிபட்ச அக்கறையோடு செயல்பட வேண்டும்

அல்லாஹ்வும் அத்தகைய சூழலை ஏற்படுத்த் விடக் கூடாது எனவே  
அல்லாஹ்விடமும் அதிகமதிகம் பிரார்த்தை செய்ய வேன்டு,

இது  குறித்த தெளிவான சிந்தனை முதலில் அவசியமானது,

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் இது விசயத்தில் ஏராளமாக இருக்கின்றன.

50 தற்கும் மேற்பட்ட வகையில் ஆபியத் குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் நம்மை கவனப்படுத்தியுள்ளார்கள் .

·        ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية  = رواه الترمذي 3515 عن عبد الله بن عمر
·        سلوا الله العفو والعافية فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية
·        من أصبح معافى في جسده آمنا في سربه عنده قوت يومه فكأنما حيزت له الدنيا= فعن عبد الله بن محصن الأنصارى= رواه الترمذي رقم 2347

பெரும் செல்வந்தரான அப்பாஸ் ரலி அவர்களுக்கு பல முறை இந்த அறிவுரையை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ الله عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ، قَالَ: "سَلِ اللَّهَ الْعَافِيَةَ" فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ، فَقَالَ لِي: "يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلِ اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ  ". أخرجه ابن أبى شيبة

துர்முதியின் விரிவுரையான துஹ்பத்துல் அஹ்வதியில் முபாரக் பூரி கூறுகிறார்

قال العلامة "المباركفوري في "تحفة الأحوذي بشرح جامع الترمذي: (سَلِ اللَّهَ الْعَافِيَةَ) فِي أَمْرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ بِالدُّعَاءِ بِالْعَافِيَةِ بَعْدَ تَكْرِيرِ الْعَبَّاسِ سُؤَالَهُ بِأَنْ يُعَلِّمَهُ شَيْئًا يَسْأَلُ اللَّهَ بِهِ دَلِيلٌ جَلِيٌّ بِأَنَّ الدُّعَاءَ بِالْعَافِيَةِ لَا يُسَاوِيهِ شَيْءٌ مِنْ الْأَدْعِيَةِ وَلَا يَقُومُ مَقَامَهُ شَيْءٌ مِنْ الْكَلَامِ الَّذِي يُدْعَى بِهِ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ,

قَالَ الْجَزَرِيُّ فِي عِدَّةِ الْحِصْنِ الْحَصِينِ: لَقَدْ تَوَاتَرَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دُعَاؤُهُ بِالْعَافِيَةِ وَوَرَدَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَفْظًا وَمَعْنًى مِنْ نَحْوٍ مِنْ خَمْسِينَ طَرِيقًا.

சோதனை ஏற்பட்டால் தாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைக்க கூடாது சோதனையே ஏற்படாமல் இருக்கட்டும் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோம் என நினைப்பதுவே ஈமானிய குணம் என்பதை அபூபக்கர் ரலி அவர்களின் வார்த்தைகள் விளக்குகின்றன

" لأن أعافى فأشكر أحب إلي من أن أبتلى فأصبر

ஆபியத் குறித்து  எந்த அளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடுக்கடுக்கான இந்த செய்திகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

இஸ்லாத்தின் மிக முக்கியமான இந்த வாழ்வியல் தத்துவம் உரிய கவனம் செலுத்தப்படாததனாலேயே முஸ்லிம் உலகில் பெரும் சோகங்கள் தொடர் கதையாகி வருகின்றன,

சிரியா நாடு அமைதியின்மையின் உச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய சிரியா என்பது வரலாற்றின் புகழ் பெற்ற ஷாம் எனும் சிரியா தேசத்தின் பகுதியாகும்
பண்டைய  சிரியா என்பது இன்றைய லெபனான், ஸ்ரேல் பாலஸ்தீனம் போன்றவற்றையும் ஜோர்டானின் சில பகுதிகளையும் கொண்டதாகக் இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே சிரியாவுடனான அரசியல் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

சிரியாவிலிருந்த சில குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகபடை திரட்டுவதாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு செய்தி கிடைத்த போது சிரியாவின் ஒரு பகுதியான் துமத்து ஜந்தல் என்ற இடத்தின் மீது போர்த் தொடுக்குமாறு பெருமானார் (ஸல்) அவர்கள் படையை அனுப்பி வைத்தார்கள்.
பிற்காலத்தில் ஹழரத் உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் சிரியாவை வென்று இஸ்லாமிய்ப் பேரரசில் இணைத்தார்கள்.
காலித் பின் வலீத் ரலி அவர்களின் கிரீடத்தில் மின்னும் ஒளிவீசும் வைரமாக சிரியா திகழ்ந்கிறது.
சிரியாவை கைப்பற்றிய அவர்களது முயற்சிகள் ஒவ்வொன்றும் யுத்தங்களுக்கான பாடமாகவும் வெற்றிகளுக்கான அடையாளமாகவும் அமைந்தவை .
சிரியாவை வெற்றி கொள்ளும் பாதை அஜ்னாதைன் , பைசான் சண்டை டமாஸ்கஸ் வெற்றீ பஃலபக் மற்றும் ஹிம்மஸ் வெற்றி ஆகிய பல சண்டைகளில் அப்போதைய ரோமப் பேரசை எதிர்த்து முஸ்லிம்கள் வெற்ற் கண்டார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் பிரதானமானது எர்மூக் யுத்தமாகும். முதலாவது இரண்டாவது மூன்றாவது யர்மூக் யுத்தங்களே சிர்யாவை முஸ்லிம்களுக்கு முழுமையாக சொந்தமாக்கியது.
ஹிஜ்ரீ 15 ஜமாதுல் ஆகிர் 25 முதல் ரஜப் 4  முஸ்லிம் படையினரும் ரோமானியப் படையினரும் யர்மூக் நதியின் வட பாகத்தில் திரண்டிருந்தனர்.
மழைக்காலமாக இருந்ததால் போரை தொடங்குவதை முஸ்லிம்கள் தாமதித்தனர்.
ஹிஜிரி 15 ரஜ்ப் 4 ம் நாள் எர்மூக் யுத்தத்தின் முனையில் ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. கடல் போல் திரண்டு நிற்கிற இரண்டு படைகளின் முன்னிலையில் முஸ்லிம் படைத்தளபதி காலிதும் ரோமர்களின் தளபதிகளில் ஒருவரான ஜார்ஜும் மிக உணர்ச்சிகரமான வழியுல் சந்தித்தனர். ஜார்ஜ் இஸ்லாமை தழுவினார்.
சைபுல்லா என்ற பெயருக்கு அல்லாஹ்வின் வாளொன்று வானிலிருந்து வந்திருப்பதாக தப்பாக அர்த்தம் செய்து கொன்டிருந்தார் ஜார்ஜ். காலித் ரலி அவர்கள் அவரின் சந்தேகத்தை தீர்த்தார்கள்.
 خرج من عند الروم قائد عظيم من قوادهم وهو (جورجه) وفي روايات اسمه (جرجه) وقيل: إن اسمه (جورج)، ولكن هذا الرجل العظيم المشهور في التاريخ الإسلامي خرج وطلب خالد بن الوليد، فخرج له خالد أمير الجيوش كلها؛ فلما اقتربا، وكل منهما رافع سيفه وماسك درعه، طلب جورجه الأمان من سيدنا خالد بن الوليد؛ فأمنه خالد وخفض سيفه، فخفض الآخر سيفه ولكن احتمى كل منهما بدرعه يخشى الخيانة من الآخر، واقترب جورجه وخالد بن الوليد في وسط الأرض، بين الجيش المسلم وبين الجيش الرومي ودار بينهما حوار عجيب:
قال جورجه: يا خالد اصدقني؛ فإن الحرَّ لا يكذب، ولا تخدعني؛ فإن الكريم لا يخدع، هل أنزل الله على نبيكم سيفًا من السماء فأعطاكه فلا تسُلَّه على أحد إلا هزمته؟
فقال خالد: لا لم ينزل الله علينا سيفًا من السماء.
فقال جورجه: فبم سُمِّيت سيف الله؟
فقال خالد: إن الله  بعث فينا نبيه  فدعانا؛ فنفرنا عنه، ثم إن بعضنا صدقه وتابعه، وبعضنا باعده وقاتله وكذبه، فكنت ممن باعده وقاتله وكذبه، ثم إن الله أخذ بقلوبنا ونواصينا فهدانا به فتابعناه؛ فقال لي رسول الله : أنت سيف من سيوف الله سلَّه على المشركين، ودعا لي بالنصر فسميت سيف الله بذلك؛ فأنا من أشد المسلمين على المشركين بدعوة رسول الله  لي بالنصر، وبتسميته لي أنني سيف من سيوف الله.. (سيف الله المسلول).
فقال جورجه: صدقتني.. ثم قال: يا خالد إلام تدعوني؟
فقال خالد: أدعوك إلى شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله، والإقرار بما جاء من عند الله.
فقال جورجه: فمن لم يجبكم إلى ذلك؟
قال خالد: فعليه الجزية ونمنعه.
فقال جورجه: فإن لم يعطِها؟
قال خالد: نؤذنه بحرب ثم نقاتله.
فقال جورجه: فما منزلة الذي يدخل فيكم ويجيبكم على هذا الأمر اليوم؟
قال خالد: منزلتنا واحدة، فيما افترض الله علينا: شريفنا ووضيعنا، وأولنا وآخرنا.
فقال جورجه: هل لمن دخل فيكم اليوم يا خالد مثل ما لكم من الأجر والذُّخْر؟
فقال خالد: نعم وأفضل..
فتعجب جورجه وقال: كيف يساويكم وقد سبقتموه؟
فقال خالد: إنا دخلنا في هذا الأمر وبايعنا نبينا http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg وهو حيّ بين أظهرنا تأتيه أخبار السماء، ويخبرنا بالكتب ويرينا  الآيات، وحُقَّ لمن رأى ما رأينا وسمع ما سمعنا أن يسلم ويبايع، وأنكم وأنتم لم تروا ما رأينا، ولم تسمعوا ما سمعنا من العجائب والحجج فمن دخل منكم في هذا الأمر بحقيقة ونية كان أفضل منا عند الله..

فيقول جورجه: بالله لقد صدقتني ولم تخدعني؟
فقال خالد: بالله لقد صدقتك.. وما بي إليك ولا لأحد منكم من حاجة وإن الله لوليُّ ما سألت عنه.
فقال جورجه: صدقتني..
ثم قلب ترسه وقال: يا خالد علِّمني الإسلام..
فأخذه خالد بن الوليد وأسرع به إلى خيمته وشنَّ عليه الماء من قِرْبَة (أي تخفف الرجل من لباسه بعض الشيء وصبَّ عليه الماء ليغتسل من كفره) فعلمه الصلاة.
كل ذلك والجيشان مصطفَّان أمام بعضهما لم يحدث بينهما قتال؛ فعلمه الصلاة فصلَّى ركعتين دخل بهما الإسلام ثم انطلق بعد ذلك يقاتل يوم اليرموك بجوار خالد طوال المعركة، حتى منَّ الله عليه بالشهادة في نهاية المعركة.. فاستشهد في هذه المعركة في آخرها وكان في أولها كافرًا, فقال خالد: سبحان الله عَمِلَ قليلاً وأُجِرَ كثيرًا، هذا فضل الله يؤتيه من يشاء..

தங்களது தளபதி மனம் மாறியயதில் ஆத்திரப் பட்ட ரோமப் படை வீரர்கள் தனி நபர் சண்டையில் யுத்தத்தை தொடங்கினர்.

பெயர் அறியா இளைஞனின் பெரும் பங்கு

خرج رجل من الروم يطلب المبارزة من المسلمين، ونحن نعلم أنه توجد مجموعة من صناديد المسلمين واقفة تنتظر الأمر بالمبارزة، وأثناء وقوف هؤلاء الأبطال خرج هذا الرجل يطلب المبارزة؛ فوجد المسلمون غلامًا من الأزد لا يعرفه أحد وهو دون العشرين، يجري ناحية سيدنا أبي عبيدة بن الجراح ويقول له: يا أبا عبيدة إني أردت أن أشفي قلبي، وأجاهد عدوي وعدو الإسلام، وأبذل نفسي في سبيل الله تعالى لعلي أرزق بالشهادة فهل تأذن لي؟
لم يكن من هؤلاء الرجال الذين نادى عليهم سيدنا خالد بن الوليد، وهو غلام دون العشرين، ولا يعرف اسمه أحد، ولكن الله I يعرفه، فقال: هل تأذن لي أن أخرج فأقاتل هذا الرجل؟
فهزت الكلمات قلب سيدنا أبا عبيدة بن الجراح، وقال له: اخرج فخرج، وعندما همَّ بالخروج التفت إلى سيدنا أبى عبيدة بن الجراح، وقال له كلمة بكى منها أبو عبيدة بن الجراح قال له: يا أبا عبيدة هل لك إلى رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg من حاجة؟ (فهو  ذاهب للشهادة فبكى سيدنا أبو عبيدة بن الجراح حتى اخْضَلَّت لحيته).
فقال أبو عبيدة: أَقْرِأ رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg مني السلام وأخبره أنَّا وجدنا ما وعدنا ربنا حقًّا.
فانطلق الغلام المجهول الذي لا يعرفه أحد ولكن الله I يعرفه،
انطلق وقاتل هذا الرجل الرومي حتى قتله، وأخذ فرسه وسلاحه وسلمهما إلى المسلمين وعاد من جديد وقال: هل من مبارز؟
فخرج له ثاني فقتله، والثالث فقتله، ثم الرابع فقتله، فخرج له خامس فحقق له أمنيته، لقاء الرسول http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg فقطع رقبته؛  فطارت رقبة الغلام على الأرض، واستُشهِد في سبيل الله وطارت روحه الطاهرة إلى السماء في حواصل طير خضر تبلغ رسول الله http://islamstory.com/sites/all/themes/islamstory/images/r_20.jpg سلام أبي عبيدة ورسالته..

தீனுக்காக தன் உயிரையே தூக்கி எரிந்த இளைஞன் வரலாற்றுக்கு தன் பெயரை விட்டுச் செல்ல ஆசைப்பட வில்லை.

இது போன்ற எண்ணெனெற்ற உணர்ச்சி மயமான நிகழ்வுக்குப் பின் சிரியா முஸ்லிம்களின் வசமானது.
இவ்வாறு வெற்றி கொள்ளப்பட்ட சிரியாவின் நகரங்களில் முக்கியமானது ஹலப் என்று அரபியில் அறியப்படும் அலப்போ நகரம்.
சுமார் 5000 வருடம் பழமையான நகரம் .ஏராளமான வரலாற்று தொல் பொருள்சான்றுகளை தாங்கி நிற்கிற நகரம் .
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் செல்வாக்கான நகரமாக ஹலப் திகழ்ந்தது. இஸ்தான்பூல் கைரோ வுக்கு அடுத்த படியாக மூன்றாவது நகராக ஹலப் கருதப்பட்டது.
இஸ்லாமியப் பேரர்சின் முடிவுகள் இஸ்தான்பூல் எனப்படும் காண்ஸ்டாண்டி நோபிளில் எடுக்கப்பட்டாலும் கூட ஹலப் தான் அந்த முடிவுகளை தீர்மாணிக்கும் நகரமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது .
சிரியாவில் 90 சதவீதம் சுன்னீ முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், ஷியா இனத்தைச் சார்ந்த பஷார் அல் அஸத் என்ற 2011 லிருந்து சிரியாவில் சர்வாதிகார அரசு நடத்தி வருகிறார்.
ரஷ்யாவும் ஈரானும் தங்களது இராணுவத்தை அனுப்பி அஸதுக்கு உதவி செய்து வருகின்றன.
அஸதின் ராணுவம் சன்னி முஸ்லிமக்ளை மிருகங்களை விட மோசகமாக நடத்துகிறது.
அஸதின் இராணுவத்தால் கணக்கற்ற முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்
தம்மை கற்பழிக்க வரும் இராணுவத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளலாமா என பெண்கள் முஸ்லிம் அறிஞர்களிடம் பத்வா கேட்பது சகஜமாக நடக்கிறது என்றால் நிலமை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அறிது கொள்ளலாம்.
முஸ்லிம் போராட்ட வீரர்கள் பல குழுக்களாக தமது ஜனநாயக உரிமைக்காக போராடி வருகின்றனர்.
அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரம் ஹலப் என்கிற அலப்போ நகரம்
அந்தப் போராட்டத்தில் ஹலப் நகரத்தில் இது வரை 31000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
ஹலப் நகரத்தை குறி வைத்து தற்போது ரஷ்யா தாக்குதல் தொடுத்ததில் வரலாறு காணாத சோகம் ஹலப் நகருக்கு ஏற்பட்டுள்ளது,
மூன்று மாதங்களாக மக்கள் உணவு மின்சாரம் இல்லாமல் மக்கள் தொடர்ந்த்து பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.
ஹலப் நகரிலிருந்து ஸ்கைப் வழியாக அல் ஜஸீராவுக்கு பேட்டியளித்த ஒரு இளை ஞன் நாங்கள் உயிர் வாழ்ந்து கொன்டிருக்கிறோம் அவ்வளவு தான் என்று கூறுகிறார்

அஸதின் மோசமான நிர்வாகம் காரணமாக சிரியாவின் வசதிகள் 97 சதவீதம் அழிந்து விட்ட நிலையில் அலப்போ வின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
உலக நாடுகள் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி ஹலபை கை விட்டு விட்டன,
ரஷயா ஈரானின் ஆதரவோடு அஸதின் ஆட்டம் மிகவும் கொடூராமாக அரங்கேறி வருகிறது.
சிரிய இராணுவம் தனது சொந்தக் குடிமக்களை கேள்வி கணக்கின்றி கொன்று வருகிறது.
போராட்டக் குழுக்களும் – போராட்டக் குழுக்களை சாராத தனி நபர்களும் கூட மக்களுக்கன அமைதியையும் நிம்மதியையும் கவனத்தில் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றன,
ஹலபின் அமைதிக்காக கடந்த வாரம் மக்கா முகர்ரமாவில் மஸ்ஜிதுல் ஹரமில் கண்ணியமிகு இமாம் சுதைசி அழுது அழுது துஆ கேட்டார்
பாரம் பரியமும் செழிப்பும் மிக்க ஹலப் நகரரும் அஸதின் பதவி ஆசைக்கும் ரஷ்யா ஈரான் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அரசியல் ஆதாயத்திற்கும் போராளிகளின் கட்டுபாடற்ற போராற்றங்களுக்கும் இடையே தத்தளித்துக் கொன்டிருக்கிறது.
இஸ்லாம் கற்றுக் கொடுத்த ஆபியத்தை பேணும் சிந்தனையை போராட்டடக்குழுகக்கள் கை கொள்வதே இப்போதைக்கு ஹலபின் அமைதிக்கு சரியானது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
நூருத்தின் அல் ஜன்கீ கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அலப்போவின் வீழ்ச்சி அரசியல் ரீதியாக இது ஒரு பெரும் வீழ்ச்சிதான். ஆனால் ஒரு புரட்சிப் பயணத்தில் இது மறு ஆய்வுக்கான ஒரு தருணம் என்று கூறியிருக்கிறார்.
அந்த மறு ஆய்வு என்பது மக்களின் ஆபியத்தை நிலை நாட்டும் வகையிலான ஒரு போராட்டமாக அமைய வேண்டும் என்பது இன்றைய சூழலில் முஸ்லிம்களின் வேண்டுதலாகும்
ரஷ்யாவின் அளவு கடந்த அத்து மீறல் காரணமாகவே துருக்கி நாட்டிற்கான ரஷ்ய தூதர் பாதுகாவலர் ஒரு வரால் சுட்டு க் கொல்லப்பட்டிருக்கிறார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் தன்னை அழித்து ரஷ்யாவின் அத்து மீறலை இந்த உலகிற்கு காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
இத்தைகைய செயல் படு மோசமான தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
துப்பாக்கி ஏந்திய போராட்டங்களை விட ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இன்றைய ரீதியில் மக்களுக்கு ஆபியத்தான் வழியில் தீர்வை தர வல்லவை.
முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து செயல் பட வேண்டும்
அல்லாஹ் ஹலப் மக்களையும் சிரிய மக்களையும் கொடுமைக்கர அஸதிடமிருந்து பாதுகாப்பானக!\
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக! சத்தியத்தில் நிலை நிறுத்துவானாக!  அவர்களது கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
தொடர்ந்து சிரிய மக்களுக்காக நாம் பிரார்த்திப்போம்
நமக்கான வாழ்வியல் பாடத்தை நாம மறக்க வேண்டாம்
நமது வாழ்வின் அனைத்து நிலையிலும் ஆபியத்தை முன்னிறுத்திய திட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம்  முயற்சி செய்வோம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!!!












1 comment:

  1. சிரிய மக்களுக்கு அல்லாஹ் மன வலியமயை தந்து வெற்றியை தருவானாக.

    ReplyDelete