வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 15, 2016

பரிசுத்த வாழ்வு

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثاً
வாழ்க்கையை பற்றிய மதிப்பீடுகள் வெகுவாக மாறிவிட்டன. தனிமனித நிலையிலும் சமூக அளவிலும்.

இன்றைய கால கட்டத்தில்ஆடம்பரமான வாழ்க்கைஅல்லதுஅதிகாரம் மிக்க வாழ்க்கை”  அதிக மரியாதைக்குரியதாக இருக்கிறது.

பரிசுத்தமான வாழ்க்கை என்பது கவனிக்கப்படுவதில்லை.

பல கோடி மக்கள் பணத்தை சுருட்டி ஆர்ப்பாட்டமாக வாழ்கிற மல்லையாக்களும் பல கோடி மக்களை துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிற மோடிகளும் ஒபாக்களும் அதிகம் போற்றப்படுகிறர்கள்.. விளம்பர வெளிச்சம் அவர்களை விட்டு விலகுவதே இல்லை.

வாழும் போதும் இறப்பிற்குப் பிறகும் பெரும் மக்கள் கூட்டத்தை திரட்டும் சக்தி படைத்த இத்தகையோர் தமது வாழ்வின் செய்தியாக மக்களுக்கு என்ன நன்மையை விட்டுச் சென்றார்கள் என்பது கேள்விக்குரியே!

இத்தகைய  பிரபலங்களின் வாழ்க்கை எவ்வளவு பரிசுத்தமானது என்பது அதை விடப் பெரும் கேள்விக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை.
காந்தி அகிம்சையை போற்றினார் என்பது அவரது வாழ்வின் செய்தியாக இருந்தது.

நேரு வளர்ச்சியை நேசித்தார் என்பது அவரது வாழ்வின் செய்தியாக இருந்தது.
அந்த அளவுக்கேற்ற பரிசுத்தம் அவர்களது வாழ்க்கையி இருந்தது.

இன்றைய நமது தலைவர்களைப் பற்றி அப்படி ஏதாவது சொல்ல முடியுமா ?
பண ஆசையும் அதிகார துஷ் பிரயோகமும் ஒழுக்க கேடும் இன்றைய நமது தலைவர்களை ஆட்கொண்டிருக்கிறது.

கர்நாடாகாவில் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு பெண் அரசு ஊழியரை அமைச்சர் ஒரு வர் தனது பாலியல் பசிக்கு பலியாக்கி கொன்டது இப்போது பரபரப்பாக இருக்கிறது.
இது ஒரு சிறு துளி. கடல் போல நமது தலைவர்களை சுற்றி ஆபாசம் அக்கிரமம் ஆகிய சேறு சூழ்ந்திருக்கிறது
அரசியல் தலைவர்களின் என்று மட்டுமல்ல,
காசு அதிகாரம் இந்த இரண்டும் செல்வாக்குச் செலுத்துகிற எல்லா இடத்திலும் இது தான் நிலை.
இதெற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் வாழ்க்கையை பற்றிய மதிப்பீடு மாறிவிட்டது தான்.
பணமும் செல்வாக்குமே மரியாதைக்குரியதாகி பரிசுத்தமான வாழ்வு என்பது குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டு விட்டது,
மறுமையை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை தீர்மாணம் இல்லாத்ததே இதற்கு காரணம்.
இஸ்லாம் நமது இன்றைய வாழ்க்கையைஅந்தநாளைய சிந்தனையோடே கழிக்குமாறு அறிவுறுத்துகிறது.
·         ஒவ்வொரு கட்டத்திலும்
·         செல்வத்திலும் அதிகாரத்திலும்.  

நாம் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்கிறோம் என்ற உணர்வு தான் பரிசுத்தமான வாழ்க்கைகான தூண்டுதலாகும்.

இஹ்ஸானுக்கு பெருமானார் அவர்கள் குறிய விளக்கம் இது.
ان تعبد الله كأنك ترا

இது வணக்கத்திற்கு மட்டுமல்ல வியாபாரம் சமுக வாழ்க்கை அரசியல் அனைத்திற்கும் பொருந்தும்.

பொருளில் பரிசுத்தம்

சுத்தமான செல்வம் என்ற சிந்தனை இன்று அரிதாகி விட்டது . ஏன் இல்லாமலே போய்விட்டது என்று சொல்லலாம்.

இலஞ்சம் வாங்குகிறவன் மதிக்கப்படுகிறான். வாங்காதவன் பழிக்கப்படுகிறான். சில நேரங்களில் அழிக்கவும் படுகிறான்.

ஆனால் பொருளில் பரக்கத் என்பது சுத்தமான பணத்தில் தான் கிடைக்கும் என இஸ்லாம் கூறுகிறது.

நிறைய சொத்து என்பது வேறு, பரக்கத்தான சொத்து என்பது வேறு.

வேலூரைச் சேர்ந்த ஒரு வரிடமிருந்து 90 ஆயிரம் கோடியை சமீபத்தில் வருவாய் துறையினர் கைப்பற்றினர்.

ஊரே பணத்தட்டுப்பாட்டில் இருக்கிற போது அவரிடம் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய நோட்டுக்கள் கட்டுக் கட்டாக இருந்தன.

இது பெரும் சொத்தக இருக்கலாம்.

ஆனால் எந்தச் சொத்த்து நமக்கு நிம்மதியை தந்து சீக்கிரமாக நமது தேவையை நிறைவேற்றுகிறதோ அதுவே பரக்கத்தான சொத்து

ஒரு சஹாபி தன் தேவையை நிறைவேற்ற ஒரு இடத்தில் ஒதுங்கி உட்கார்ந்தார்.  அங்கே ஒரு எலி தனது வலைக்குள்ளே சென்று ஒரு தங்க நாணயத்தை வெளியே கொன்டு வந்து போட்டது. சுமர்ர் 17 தங்க நாணயங்கள் இப்படி வெளியே வந்து கிடந்தன. அவர் அவற்றை எடுத்துக் கொன்டு பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து பெருமானாருக்கு முன் கொட்டினார். இவை எனக்கு ஆகுமானாதா எனக் கேட்டார்.  இவை உணக்குரிய ரிஜ்குதான், அல்லாஹ் இப்படி உன்னிடம் கொன்டு வந்து சேர்த்திருக்கிறான் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சிறுநீர் கழிக்கச் சென்ற இடத்தில் எளி வலையின் வழியாக ஒரு வருக்கு காசு வந்தது.

இன்று  இணைய வளையின் வழியாக காசு நம்மிடமிருந்து ஏராளமாக வெளியேறிக் கொன்டிருக்கிறது.

பணத்தில் பரக்கத் என்பது மிக முக்கியம். அதற்கு பரிசும் அவசியம்.

முற்காலத்தில் பசியால் மரணித்தவர்களை விட தற்காலத்தில் அதிக உணவால் மரணமடைவோ அதிகம் என்கிறோமே .

அது பரக்கத் இன்மையின் காரணமே!

பரக்கத் என்பது தேவையை நிறைவேற்றும். நிம்மதியை தரும். துன்பத்தை ஏற்படுத்தாது.

இமாம் அபூஹனீபா ஒரு நாள் தனது துணிக்கடையை சீக்கிரமாக அடைத்து விட்டுக் கிளம்பினார்.  வானத்தில் மேகம் சூழ்ந்திருக்கிறது. இருட்டாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பொருளை சரியாக பார்க்க முடியாது துணியின் தரம் சரியாக அடையாளம் காண முடியாது என நினைத்து கடையை அடைத்தார்கள்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றோ ஓளியை உமிழும் சக்தி வாய்ந்த விளக்குகளை எரிய விட்டு தரமற்ற சரக்குகளை விற்கிறார்கள்.

இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் தனது மாணவரிடம் பருப்பு வாங்கி வருமாறு கொஞ்சம் பணத்தை கொடுத்தனுப்பினார். மாணவர் கடைவீதிக்கு சென்ற போது இரண்டு வியாபாரிகள் அவரை தம்மிடம் வாங்குமாறு அழைத்தனர், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அதிக எடை தருவதாக கூறினர். கடைசியில் சாதாரணமாக அந்த தொகைக்கு கிடைப்பதை விட 7 மடங்கு அதிகமாக பருப்பை கொடுத்தார். இமாம் அஹ்மது வுக்கு அதை ஏற்றுக் கொள்ல மனம் வரவில்லை. வியாபாரியிடம் திருப்பிக் கொடுக்க தானே வெளியே வந்தார்கள். வியாபாரியோ கடையை அடைத்துவிட்டுச் சென்று விட்டார். அவர் சில நாட்களுக்கு கடையை திறக்க மாட்டார் என்று தெரிய வந்தது. இமாம் அஹ்மது தனது பணத்திற்குரிய பருப்பை   எடுத்துக் கொண்டு மீதியை விற்று அந்தப் பணத்தை கடைக்காரரிடம் சேர்த்து விடலாம் என்று நினைத்தார்கள். சந்தையில் நின்று நிலவரத்தைக் கூறி மீதிப் பருப்பை வாங்கிக் கொள்ளுமாறு மக்களிடம் இமாம் அஹ்மது கூறீனார்கள். இது சந்தேகத்திற்குரிய வியாபாரம் என்று கருதி மக்களில் யாரும் அதை வாங்கவில்லை.

இஸ்லாம் உருவாக்கிய பொருளாதார மேடை எவ்வளவு பரிசுத்தமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட மார்க்க அறிஞர்கள் இந்த உதாரணத்தை அதிகம் பயன்படுத்து வதுண்டு.

வாடிக்கையாளரும் விற்பனையாளரும் கடைபிடித்த பெருளியல் பரிசுத்த சிந்தனைக்கு இது ஒரு சான்று.

இன்றைய நமது நுகர்வு உலகம் காசு பணத்தை சேர்ப்பதிலும் பறிப்பதிலும் எவ்வளவு குரூராமாகவும் பேராசையோடும் நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்கிறோம்.

தேங்காய் எண்ணை என்று விற்கப்படுவது எண்ணையும் அல்ல அது தேங்காயிலிருந்து வந்ததும் அல்ல. அது ஒரு வகை பெட்ரோலியம் ஜெல்லி. உணவுத்தரக் கட்டுப்பாட்டுக்கு என்று ஒரு தனித்துறையே செயல்படுகிற கால கட்டத்தில் நாட்டு மக்கள் பகலிலேயே கடை வைத்துக் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். அதை தடுக்கும் சிந்தனை அரசுக்கும் இல்லை.

எப்படியாவது சம்பாதிப்பது என்பது பொருளியல் கோட்பாடாகவும் தனக்கு வரிக் கட்டினால் போதும் என்பது அரசியல் கோட்பாடாகவும் இருக்கிற உலகில் இது தான் நடக்கும்.

வாழ்க்கையை பற்றிய மதிப்பீட்டிற்கும் இதற்கு தொடர்பு இருக்கிறது. பரிசுத்தமான வாழ்வு வேண்டு என்று நினைப்போர் இத்தகைய காரியங்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டர்கள்.

புலன்களை கட்டுப்படுத்தும் பரிசுத்தம்

அல்லாஹ் வழங்கிய புலன்களான பார்க்கும் திறன் கேட்கும் திறன் தொடு திறண் பேச்சு திறன் சுவைத்தறியும் திறன் என்ற ஐந்து புலன்களையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது வாழ்க்கையை பற்றிய மதிப்பை உயர்த்தும்

இவற்றுக்கான உதாரணங்களை சேர்த்துக் கொள்க! தீயதை பார்க்காமல் தவிர்ப்பது, தீயதை பேசாமல் தவிர்ப்பது போல

ஒரு நண்பர் தனது தந்தை இறந்த பிறகு தகப்பானாரைப் பற்றி கூறினார். என் தந்தை எனக்கு சொத்துக்களை அதிகமாக விட்டுச் செல்லவில்லை, இன்னும் சொல்வதானால் சொத்தே இல்லை எனலாம் ஆனால் என் தந்தை பிறரைப் பற்றிய பேச்சுக்களை பேசியதும் இல்லை, எங்களது வீட்டில் அப்படி யாரும் பேச அனுமதித்ததும் இல்லை என்றார். இன்று எங்களிடம் ஓரளவு அந்தப் பழக்கம் இருக்கிறது என்றார்.

ஒரு தந்தையின் வாழ்வு அவரது மரணத்திற்குப் பின்னும் எவ்வளவு மதிப்பானதாக இருக்கிறது.

இறந்தவரின் பிரேதத்தின் மீது குவிகிற ஆயிரமாயிரம் மலர் வளையங்களை இந்த வார்த்தைகள் அதிகம் மதிப்பானதல்லவா ?

இதை தான் நாமும் உலகமும் உணர வேண்டும்
இதயப் பரிசுத்தம்  

இன்றைய தலைவர்கள் மத்தியிலும் சாமாணிய மக்கள் மத்தியுலும் சுத்தமான இதயம் என்பது முடியாத ஒன்றாகி விட்டது.

வஞ்சம் சூது கெட்ட எண்ணம் அழிக்கும் சிந்தனை ஆகியவையே ஒரு மனிதரின் செல்வாக்கை தீர்மாணிக்கும் அம்சங்களாகிவிட்டன.

இவற்றில் யார் கெட்டிக் காரனோ அவன் இராஜ தந்திரி ஆகிவிடுகிறான்,

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது இதயத்தை எப்போதும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டார்கள்.  அதில் யாரும் குப்பைகளை கொண்டு வந்து கொட்ட அனுமதித்தில்லை.  

தனது  வாழ்வு எத்தகைய மதிப்புடையதாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் விளைவு அது.

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  " لا يُبْلِغْنِي أَحَدٌ مِنْكُمْ عَنْ  أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا ، فَإِنِّي أُحِبُّ أَنْ أَخْرُجَ إِلَيْكُمْ وَأَنَا سَلِيمُ الصَّدْرِ " . قَالَ : فَأَتَاهُ مَالٌ فَقَسَمَهُ فَانْتَهَيْتُ إِلَى رَجُلَيْنِ يَتَحَدَّثَانِ وَأَحَدُهُمَا يَقُولُ لِصَاحِبِهِ : وَاللَّهِ مَا أَرَادَ مُحَمَّدٌ بِقِسْمَتِهِ الَّتِي قَسَمَ وَجْهَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالدَّارَ الآخِرَةَ ، قَالَ : فَثَبَتُّ حَتَّى سَمِعْتُهَا ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقُلْتُ : إِنَّكَ قُلْتَ : لا يُبْلِغْنِي أَحَدٌ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي شَيْئًا وَإِنِّي سَمِعْتُ فُلانًا وَفُلانًا يَقُولانِ : كَذَا وَكَذَا ، قَالَ : فَاحْمَرَّ وَجْهُهُ ، وَقَالَ : " دَعْنَا مِنْكَ فَقَدْ أُوذِيَ مُوسَى بِأَكْثَرَ مِنْ ذَلِكَ فَصَبَرَ "

பேராசை பொறாமை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் இருகப்பது இதயப் பரிசுத்தித்தின் முக்கிய அடையாளங்களாகும்.

அவுரங்கசீப் ரஹ் அவர்களை இன்று ஒரு கூட்டம் திட்டமிட்டு கடுமையாக விமர்ச்சிக்கிறது.  அவர் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து ஒரு வலிமையான பேரரசை அரசை அமைத்தார். இன்று ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களின் குற்றப் பரம்பரையோடு ஒப்பிடுகையில் அவரது நடவடிக்கைகள் ஒரு போதும் விமர்சனத்திற்குரியதாக இருக்க முடியாது, ஆயினும் வேண்டுமென்றே அவரை குறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அவுரங்கசீப்பின் வாழ்க்கை அவரது மரணத்தின் ஐந்நூறு ஆண்டுகளை கடந்தும் பாராட்டப்படுகிறது.

அரசு கஜானாவிலிருந்து ஒரு பைசா கூட அவர் எடுக்க வில்லை.

கோட் தைத்துக் கொள்வதற்கோ விமானப் பயனத்திற்கோ சுய விளம்பரத்திற்கோ கோடி கோடியாய் அவர் செலவளிக்க வில்லை.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை நல்லவனாகவே கடைசி வரை வாழ வேண்டும் என்ற தீர்மாணம் இரண்டு இதயத்தில் இருந்தால் அது பரிசுத்த வாழ்க்கைகு துனை செய்யும்.

வாழ்க்கையை மதிப்பிற்குரியதாக  ஆக்குவதற்கு இத்தகைய வழி வகைகளை நாம் முயற்சிக்க வேண்டும் . அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!




8 comments:

  1. ஆமீன். அல்ஹம்துலில்லாஹ் அருமை ஹள்ரத்

    ReplyDelete
  2. ஆமீன். அல்ஹம்துலில்லாஹ் அருமை ஹள்ரத்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! பரிசுத்த வாழ்வே பிரதானமாக இருக்கவேண்டும். என்பதை பிரமாகூறியுள்ளீர்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத்! பரிசுத்த வாழ்வே பிரதானமாக இருக்கவேண்டும் என்று பிரமாதமாக கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  5. அல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் கல்வியில்,பிரயேஜனத்தை அதிகம் இந்த உம்மதிற்கு கொடுப்பானாக ஆமீன்

    ReplyDelete
  6. Masa Allah very excellent article

    ReplyDelete
  7. Masa Allah very excellent article

    ReplyDelete