வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 08, 2016

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் தத்துவங்கள்


எந்த தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வது என்பது இன்ற மனித சமுதாயத்திற்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. 

மக்களின் பெரும் செல்வாக்குப் பெற்று திகழ்கிற தலைவர்களுக்கு கூட இன்றை காலகட்டத்தில் வாழ்க்கைகான தத்துவம் எதுவும் இருப்பதில்லை. 

சிறந்த மனித வாழ்க்கைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்திய வழிகாட்டுதல்கள் மீது நாம் கவனம் செலுத்துவோம்.
பெருமானாரின் சுன்னத்துக்கள் உலகின் சிறந்த வழிகாட்டுதல்கள் ஆகும். அதற்கு நிகர் வேறெதுவும் இல்லை.
எந்த நவீனமும் பெருமானாரின் சுன்னத்துக்களின் மரியாதையை விஞ்சி விட முடியாது.
பெருமானாரின் ஒற்றை சுன்னத்தை கடை பிடித்தாலும் அது சொர்க்க வாழ்க்கையை சொந்தமாக்கும்.
இமாம் அபூதாவூத் சொர்க்கத்தில் இருப்பது போல ஒருவர் கனவு கண்டார், அதற்கான காரணத்தை கேட்டார். இமாம் அபூதாவூத் சொன்னார்கள். ஒரு திர்ஹத்தால் எனக்கு சொர்க்கம் கிடைத்தது.
இமாம் அபூதாவூத் ரஹ் அவர்கள், ஒரு படகில் சென்று கொன்டிருந்தார்கள், அவர்களது படகு சென்ற திசைக்கு எதிர் திசையில் இன்னொரு படகு கடந்து சென்றது, அப்போது அதிலிருந்து ஒருவர் தும்மி விட்டு அல்ஹம்து லில்லாஹ் சொன்னார். அந்த சப்தம் இமாம் அபூதாவூதிற்கு கேட்டது பதில் சொல்வதற்கு படகு கடந்து விட்டது,  கரைக்கு சென்ற பிறக் ஒடு திர்ஹம் கொடுத்து மீண்டும் ஒரு படகில் பயணம் செய்து அல்ஹம்து லில்லாஹ் சொன்னவரை நெருங்கி யர்ஹமகல்லாஹ் என்று சொன்னார்கள்.
அதுவே தான் சொர்க்கம் செல்ல காரணம் என இமாம் அபூதாவூத் கனவு கண்ட மனிதரிடம் கூறினார்.
பெருமானாரி (ஸல்) அவர்களின் ஒரு கடினமான கட்டளையை நிறைவேற்றியவருக்கு சொர்க்கம் செல்வதற்கான ஆதாரத்தை கொடுத்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்
காலித் பின் சுபுயானை கொல்ல பெருமானார் இட்ட உத்தரவை தனியாக நிறைவேற்றினார் அப்துல்லாஹ். 
(قشعريرة» மயிர் கூச்சமெடுக்கும் போது உடலில் ஏற்படும் சிறு கொப்புளங்கள் )
بلغ رسول الله أن خالد بن سفيان الهذلي ، وكان ينزل بعرنة، قد جمع الجموع لرسول الله ، فبعث الرسول عبد الله بن أنيس ليقتله ، فقال أنيس للرسول: يا رسول الله، انعته لي حتى أعرفه، فقال: «إذا رأيته وجدت له قشعريرة».
قال: فخرجت متوشحاً سيفي حتى وقعتُ عليه وهو بعرنة مع ظعنٍ يرتادُ لهنّ منزلاً، وحين كان وقتُ العصر، فلمّا رأيتُهُ وجدتُ ما وصف لي رسول اللّه من القشعريرة، فأقبلتُ نحوَهُ وخشيتُ أن يكون بيني وبينه مجاولة تشغلني عن الصّلاة، فصلّيت وأنا أمشي نحوه أُومِئُ برأسي للركوع والسجود.
فلما انتهيت إليه قال: من الرجل؟
قلت: رجل من العرب سمع بك وبجمعك لهذا الرجل، فجاءك لذلك. (أي جئت لأناصرك على الرسول)
قال: أجل أنا في ذلك.
قال: فمشيت معه شيئاً، حتى إذا أمكنني حملتُ عليه السيف حتى قتلته، ثم خرجتُ وتركتُ ظعائنه مُكبّاتٍ عليه، فلما قدمت إلى رسول اللّه فرآني قال: «أفلح الوجه».
قال: قلت: قتلته يا رسول اللّه.
قال: «صدقت».
قال: ثم قام معي رسول اللّه فدخل في بيته، فأعطاني عصا فقال: «أمسك هذه عندك يا عبد الله بن أنيس».
قال: فخرجت بها على الناس فقالوا: ما هذه العصا؟
قال: قلت أعطانيها رسول اللّه وأمرني أن أُمسكها، قالوا: أَوَلا ترجِع إلى رسول اللّه فتسأله عن ذلك.
قال: فرجعت إلى رسول الله فقلت: يا رسول الله لم أعطيتني هذه العصا؟
قال: «آيةٌ بيني وبينك يوم القيامة إنّ أقل الناس المتخصرون يومئذٍ».
قال: فقَرَنَها عبد الله بسيفه فلم تزل معه، حتى إذا مات أمر بها فضُمَّت في كفنه، ثم دفنا جميعاً.


இத்தகைய கடுமையான கட்டளைகளை பின்பற்றினால் மட்டுமல்ல. மிக எளிதான சுன்னத்த்துக்களை பின்பற்றினாலும் சொர்க்கம் நிச்சயம்

சொர்க்க வாசி என்று பெருமானார் (ஸல் ) அவர்கள் முன்னறிவுப்பு செயத மனிதரிடம் இருந்த ஒரே ஒரு சுன்னத்.
யார் மீதும் பொறாமை கொள்ளாமல் இருப்பது
قد جاء في مسند الإمام أحمد عَنْ أنس بن مالك رضي الله عنه قَالَ: (كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَطْلُعُ عَلَيْكُمْ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ, فَطَلَعَ رَجُلٌ مِنْ الأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ, قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ, فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ, فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الأُولَى, فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا, فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الأُولَى, فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ: إِنِّي لاحَيْتُ أَبِي, فَأَقْسَمْتُ أَنْ لا أَدْخُلَ عَلَيْهِ ثَلاثًا, فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ, قَالَ: نَعَمْ.
قَالَ أَنَسٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلاثَ, فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا, غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلاةِ الْفَجْرِ, قَالَ عَبْدُ اللَّهِ: غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلا خَيْرًا, فَلَمَّا مَضَتْ الثَّلاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ: يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلا هَجْرٌ ثَمَّ, وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلاثَ مِرَارٍ: يَطْلُعُ عَلَيْكُمْ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ, فَطَلَعْتَ أَنْتَ الثَّلاثَ مِرَارٍ, فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ, فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ, فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا هُوَ إِلا مَا رَأَيْتَ, قَالَ: فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ: مَا هُوَ إِلا مَا رَأَيْتَ, غَيْرَ أَنِّي لا أَجِدُ فِي نَفْسِي لأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا, وَلا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ, فَقَالَ عَبْدُ اللَّهِ :هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ, وَهِيَ الَّتِي لا نُطِيقُ).


சாதாரணமாக செர்க்கத்தை அடைந்து கொள்ளும் எளிய வழிகளைப் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏராளமாக சொல்லிக் கொடுத்தார்கள்,
சமுதாயம் தனது பன்பாட்டுச் செழுமையை வளர்த்துக் கொள்ள இன்றைய கால கட்டத்தில் இந்தச் சுன்னத்களின் கவனம் செலுத்துவது அவசியம்
எந்தக் கட்டத்திலும் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்வது.
وقال صلى الله عليه وسلم : أكثر ما يدخل الناس الجنة التقوى وحسن الخلق ، وأكثر ما يدخل الناس النار الفم والفرج . أخرجه الترمذي وابن ماجه                         

சாதாராணமாக எத்தகை அக்கிரமத்தையும் மனசாட்சி என்ற ஒன்றே இல்லாதவர்களைப் போல செய்து விடுகிற காலம இது
நமக்கு நாமே ஒரு நீதியை வகுத்துக் கொண்டு சத்தியத்தை சாகடிக்கிற காலம் இது.
தொழில் முறை குற்றவாளிகள். – காசுக்கு கொலை செய்வோர். குண்டாயிசம் செய்வோர். இன்ன பிற அக்கிரமங்களில் ஈடுபடுவோ பெருகி விட்ட காலம் இது.

இத்தகைய சூழலில் நமது வாழ்வில் எந்த ஒரு சிறு பொழுதிலாவது அல்லாஹ்வை பயந்து ஒரு நன்மையை செய்வது அல்லது அல்லாஹ்வை பயந்து ஒரு தீமையை விடுவது சொர்க்கத்திற்குரியவர்களாக நம்மை நிச்சயம் ஆக்கும்

அதே போல நற்பண்புகளுக்கு என்ன விலை என்று கேட்கிற காலம் இது.
இஸ்லாத்தில் மன்னிப்பு பெருந்தன்மை கருணை உபகாரம் அனைத்துக்கும் முக்கிய மதிப்பு இருக்கிறது
 قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: ( تَبَسُّمُك في وَجْه أَخِيك لك صدقة ) رواه الترمذي .
 قال عبد الله بن الحارث ـ رضي الله عنه ـ: ( ما رأيت أحدا أكثر تبسّما من رسول الله - صلى الله عليه وسلم ـ ) رواه الترمذي
 عائشة ـ رضي الله عنها ـ رسول الله ـ صلى الله عليه وسلم ـ فتقول: ( كان ألين الناس، وأكرم الناس، وكان رجلاً من رجالكم إلا أنه كان ضحاكًا بسّامًا ) .
فعن جرير بن عبد الله - رضي الله عنه - قال: ( ما حجبني رسول الله ـ صلى الله عليه وسلم ـ منذُ أسلمتُ، ولا رآني إلا تبسمَ في وجهي) رواه مسلم .
 فعن جابر بن عبد الله ـ رضي الله عنه ـ قال: قال رسول الله ـ صلى الله عليه وسلم ـ: ( كلُّ معروف صدقة، وإنَّ من المعروف أن تلقى أخاك بوجهٍ طَلْق ) رواه الترمذي .

அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுதல்
اكرم جارك ولو كان كافرا என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்
பிறரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் நம்மைப் பற்றிய அகந்தை அழிய வேண்டும்.
நன்மையான அமல்களை அதிகம் செய்து கொள்ளும் படி பெருமானார் அறிவுறுத்தினார்கள்
مسلم في صحيحه عن ربيعة بن كعب الأسلمي قال : كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته ، فقال لي : ( سل ) ، فقلت : أسأل مرافقتك في الجنة ، فقال ( أو غير ذلك ) ، قلت : هو ذاك ، قال: فأعني على نفسك بكثرة السجود . شرح صحيح مسلم النووي

 عن عبد الله بن بريدة عن أبيه رضي الله عنهما قال : أصبح رسول الله يوما فدعا بلال ، فقال : ( يا بلال بم سبقتني إلى الجنة ؟ إنني دخلت البارحة الجنة فسمعت خشخشتك [ أي صوت مشيك ] أمامي ؟ ) فقال بلال : يا رسول الله ! ما أذنت قط إلا صليت ركعتين ، ولا أصابني حدث قط إلا توضأت عنده . فقال رسول الله صلى الله عليه وسلم ( بهذا ) . صحيح الترغيب والترهيب

உயர்த சிறந்த பண்பாடுகளை முந்திக் கொண்டு கடை பிடிப்பது
சாதாரணமாக நம்முடைய பழக்கம். அடுத்தவர்கள் நம்மிடம் மரியாதை செய்தால் மட்டுமே திருப்பி செய்வது,  உயர்ந்த குணம் என்பது அதுவல்ல. நற்குணத்திற்கு நாமாக முந்திக் கொள்வது.
ال صلى الله عليه وسلم : يا أيها الناس : أفشوا السلام ، وأطعموا الطعام ، وصلوا بالليل والناس نيام ، تدخلوا الجنة بسلام . رواه ابن ماجه
عن عبادة بن الصامت عن النبي صلى الله عليه وسلم : اضمنوا لي ستا من أنفسكم اضمن لكم الجنة ، اصدقوا إذا حدثتم ، وأوفوا إذا وعدتم ، وأدوا إذا ائتمنتم ، واحفظوا فروجكم وغضوا أبصاركم ، وكفوا أيديكم . رواه ابن خزيمة 
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : من عاد مريضا ,، أو زار أخا له في الله ، ناداه مناد : أن طبت وطاب ممشاك ، وتبوأت من الجنة منزلا . رواه الترمذي
عن عثمان بن عفان رضي الله عنه قال : قال صلى الله عليه وسلم : أدخل الله عز وجل الجنة رجلا كان سهلا مشتريا وبائعا ، وقاضيا ومقتضيا 
روى الأمام مسلم _رحمه الله _ في صحيحه عن حذيفة عن النبي صلى الله عليه وسلم : أن رجلا مات فدخل الجنة فقيل له ما كنت تعمل \" قال فأما ذكر وإما ذكر \" فقال إني كنت أبايع الناس فكنت أنظر المعسر وأتجوز في السكة أو في النقد فغفر له . شرح صحيح مسلم للنووي
நபி (ஸல் அவர்களின் வாழ்வியல் தத்துவங்களை சுருக்க 4 வழிமுறைகளில் உள்ளடக்கலாம்
1.   இதயத்தை சுத்தமாக வைத்திருப்பது
2.   அல்லாஹ்வை பயப்படுவது
3.   முடிந்தவரை நன்மைகளை சேர்த்துக் கொள்வது அவை சிறியதாக இருந்தாலும் தீமைகளை தவிர்த்துக் கொள்வது அது எவ்வளவு சிறியதாகை இருந்தாலும் சரி. 
4.   உயர்ந்த பண்பாட்டையும் குணத்தையும் கடைபிடிப்பது

இந்த அடிப்படைகளில் நாம் வாழ உறுதியேற்போம். நமது சந்ததிகளுக்கு கற்றுக் கொடுக்கவும் நடை முறைப் படுத்தவும் சூளுரைப்போம், 

No comments:

Post a Comment