வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 18, 2017

உச்ச நீதிமன்றம் ஷரீஅத்தின் மேன்மையை உணர வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் தொடர்பான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
முத்தலாக் விவாகரத்து நடைமுறைக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடிவருகிறார்.
பல எதார்த்தங்களை அவர் நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்திருக்கிறார்.
இன்றைய சூழலில் கழுகுகளால வேட்டையாடப் படுகிற சிறு பறவைகள் போல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தமது அடிப்படை உரிமைகள் பாதுகாப்படும் என்று இந்த நீதிமறத்தை தான் அவர்கள் அதிகம் நம்பி இருக்கிறார்கள். ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் முறை மீது கொண்டுள்ள நம்பிக்கை
ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக பின்பற்றப்படுகிற நடைமுறைகளை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.  அது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கே இடமில்லை .

அவர் முன் வைத்த மற்ற சில கருத்துக்களும் மிக முக்கியமானவை. முஸ்லிம் சமூகத்தில் முத்தலாக நடை முறை குறைந்து வருகிறது. நீதி மன்றமத்தின் நடவடிக்கைகள் இது விசயத்தில் மேலும் இறுக்கம் காட்ட முஸ்லிம்களை தூண்டி விடக்கூடும்.

மற்றொரு அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் மற்றொரு கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஷரீ அத் சட்டம் வேண்டாம் என்று சொல்லக் கூடிய பெண்களுக்கு ஸ்பெசல் மேரேஜ் ஆக்ட் என்ற வேறு ஒரு வழி இருக்கிறது. அதன் மூலம் தங்களது பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வு கண்டு கொள்ள முடியும். ஷரீஅத் சட்டத்தின் படி தீர்வுகாண நினைப்பவர்களுக்குத்தான் ஷரீஅத்தின் படியான தீர்வு வழங்கப்படுகிறது. எனவே ஷரீஅத்தில் தலையிட வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் வாதிடுகிற முகில் ரோகித் அவரக்ள் தொடர்ந்து வேண்டாத கருத்துக்களை – இந்துத்துவ வெறுப்புணர்வை விதைக்கிற கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.

முத்தலாக் நடைமுறையை அரசு இரத்து செய்யுமானால் முஸ்லிம்களின் விவாகரத்திற்கு அரசு தனி சட்டம் கொண்டு வரும் என்கிறார்.

இந்த மொத்த விவகாரமும் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் செயல்படத் தெரியாத பஜக அரசாங்கத்தின் ஷரீ அத் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் திட்டமாகும். இந்தப் பிரச்சனையை சூடாக வைத்திருப்பதன் மூலம் தனது தவறுகளிலிருந்து மக்களின் கவனத்தை திருப்பி விடலாம் என அரசு நினைக்கிறது.

உண்மையில் நீதிமன்றங்களின் முஸ்லிம்களின் விவாகரத்து வழக்கு என்பது மிகவும் குறைவு என்ற

சமீபத்தில் ராஜஸ்தானில் நடை பெற்ற முஸ்லிம் பெண்களின் மாநாட்டில் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் வாழும் உரிமை தங்களுக்கு உண்டு என்று முஸ்லிம் பெண்கள் அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.  இந்தியாவில் நடை பெறுகிற விவாகரத்து வழக்குகளில் ஒரு சதவீதம் அளவுக்கு கூட முஸ்லிம் வழக்குகள் இல்லை. என்பதையும் அவர்கள் அழுத்தமாக சுட்டிக்காட்டி இருக்கீறார்கள்.

நீதிமன்றத்தின் முன் நீதியைக் காப்பாற்றும் இறுதிக்கட்ட போரட்டம் நடந்து வருகிறது.  

முஸ்லிம்களின் தனி விவகாரங்களில் ஷரீஅத்தின் நடை முறைப் படி தீர்ப்பு வழங்க வேண்டியது தான் நீதிபதிகளின் பொறூப்பாகும். அது எளிதான வேலையுமாகும். ஷரீ அத்தின் சட்ட திட்டங்கள் தெளிவானவை. வழக்கறிஞருக்கு படிக்கிறவர்களுக்கு முஹம்மதன் லா என்பது தனியாக போதிக்கப்படுகிறது. நீதிபதிகள் அதை சரியாக படித்திருந்தால் தீர்ப்பு வழங்குவதில் சிரமம் எதுவும் இருக்காது. அதை சரியாக படிக்காத – இஸ்லாமிய ஷரீஅத்தை துச்சப்படுத்துகிற - நீதிபதிகள் தான் தேவையற்று ஷரீ அத் விச்யத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.  ஷரி அத் சட்டம் வேண்டாம் என்று கேட்கிறவர்களுக்கு தனியாக ஸ்பெசல் மேரேஜ் ஆக்டின் படி தீர்ப்பு வழங்கலாம், அதை யாரும் கேட்கப்போவதில்லை.

உச்சநீதிமன்றம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கச்சை கட்டிக் கொண்டு நடக்கிற அநீதியான பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு ஒரு முடிவும் கட்ட வேண்டும். நாட்டில் தற்போது நிலவி வருகிற வெறுப்புணர்வு சூழலை கருத்தில் கொண்டு அதை விரைவாக நீக்கியாக வேண்டிய கடமையை உணர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இந்துத்துவ ஆதிக்கத்திற்கு நீதிமறமும் ஆட்பட்டு விடக்கூடாது என்று

அல்லாஹ் நமது ஷரீ அத்தின் மேன்மைகளை அனைவரும் உணரும் படி செய்வானாக!  அதை புரிய வைக்கிற தவ்பீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!  நீதியை பாதுகாக்கிற மன்றங்கள் மக்களிடையே குழப்பத்தை விளைவிக்காமல் இருக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

ஷரீஅத்தின் சட்டங்களை சரியாக புரிந்து கொண்டு பிறருக்கு புரிய வைக்கவும் முஸ்லிம்கள் அக்கறை செலுத்த வேண்டும். இது நம்மில் ஒவ்வொரு தனி நபரின் மீதான கடமையாக இன்றைய சூழலில் உருவெடுத்து கிறது.

பொது வெளிகளில், சமூக ஊடகங்களில், அலுவலகங்களில் பயணங்களில் என எந்த ஒரு இடத்திலும் ஷரீ அத்திற்கு எதிரான விமர்ச்சனங்கள் முன் வைக்கப்படுகிற கால கட்டம் இது.

எந்த விமர்சனத்தையும் வென்று நிற்கிற சக்தி ஷரீஅத்திற்கு இருக்கிறது.

இது அல்லாஹ்வால் பரிபூர்ணப்படுத்தப் பட்ட மார்க்கம்/

 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ) المائدة/3 .

பெண்களை இஸ்லாமிய ஷரீ அத் மதிப்பதில்லை. அவர்களுக்கு நீதி வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்படுமானால் அதை போல அதை போல அவதூறு வேறெதுவும் இல்லை.

திருமணம் சார்ந்த விவகாரமானாலும் சரி. பொதுக் காரியங்களிலும் சரி ஆணுக்குச் சம அந்தஸ்தில் பெண்ணை வைத்ததில் இஸ்லாத்தை போல இன்னொரு சமயம் இந்த உலகில் இல்லை.
திருமணத்தில் பெண்ணிடம் சம்பந்தம் பெற வேண்டும் என்ற ஏற்பாடு 1400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இஸ்லாமிய வழக்கில் இருக்கிறது.                                                                                                                           

இது ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முந்தைய உத்தரவு

لا تنكح الأيم حتى تستأمر، ولا تنكح البكر حتى تستأذن رواه البخاري في (النكاح

சொத்துரிமையில் அவர்களது பங்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் உறுதி செய்தது.

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ

திருமண விலக்கு பெருகிற உரிமையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கியதே!


فَإِنْ خِفْتُمْ أَلا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ) البقرة / 229 .

عن عائشة - رضي الله عنها - (أن حبيبة بنت سهل - رضي الله عنها - كانت عند ثابت بن قيس بن شماس - رضي الله عنه -) أتت النبي - صلى الله عليه وسلم - فقالت: يا رسول الله، ثابت بن قيس , ما أعتب عليه في خلق ولا دين  ولكني أكره الكفر في الإسلام  " فدعا النبي - صلى الله عليه وسلم - ثابتا , فقال: خذ بعض مالها وفارقها " فقال: ويصلح ذلك يا رسول الله؟ , قال: " نعم " , قال: فإني أصدقتها حديقتين  وهما بيدها) (فقال رسول الله - صلى الله عليه وسلم -: " أتردين عليه حديقته؟ " , قالت: نعم) (يا رسول الله , كل ما أعطاني عندي, فقال رسول الله - صلى الله عليه وسلم - لثابت:) (" خذهما وفارقها) وفي رواية: (اقبل الحديقة , وطلقها تطليقة

இஸ்லாமிய விவாகரத்து என்பதே பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாக வே வழங்கப்படுகிறது.  . இந்த ஹதீஸ் அதற்கு சாட்சி . நாட்டு நடப்புகளும் அதற்கு சாட்சி.

ஒரு ஆண் தனது மனைவியை விவாகரத்துச் செய்வதை எந்த அளவில் எல்லாம் இஸ்லாம் தடுத்துள்ளது தெரியுமா ?

·        وعاشروهن بالمعروف، فإن كرهتموهن، فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا 
·        قال رسول الله سبحانه و تعالى : ( أبغض الحلال إلى الله الطلاق ) , رواه أبو داود وابن ماجه 
·        قال عمر رضي الله عنه لرجل أراد أن يطلق زوجته لأنه لا يحبها: ويحك ألم تبن البيوت إلا على الحب

சைத்தான் திருமண உறவை முறிக்க முயற்சிப்பதை பிரதான வேலையாக வைத்திருக்கிறான் என்றது இஸ்லாம்.

عن جابر عن النبي صلى الله عليه وسلم : "إن إبليس ينصب عرشه على البحر ، ويبعث سراياه ، فأقربهم إليه منزلة أعظمهم فتنة ، فيأتيه الشيطان فيقول : مازلت به حتى فرقت بينه وبين امرأته ، فيدنيه منه ، ويقول: أنت أنت ! ويلتزمه 


திருமணம் செய்து விட்டு பொறுப்பில்லாமல் இருக்கிற கணவனை என்ன செய்யலாம். ,

14 நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டம் பெண்களிடம் கூறுவதை கேளுங்கள்

قال ابن قدامة في المغني: وجملته أن الرجل إذا منع امرأته النفقة لعسرته وعدم ما ينفقه فالمرأة مخيرة بين الصبر عليه وبين فراقه
இதைவிடப் புரட்சிகரமான பெண்ணுரியை திட்டமும் சட்டமும் வேறு உண்டா ?

குடும்பச் செலவுகளுக்கு பெண் தன்னுடைய காசை செலவிட வேண்டுமா ? இஸ்லாமிய ஷரீஅத்தின் நீதியை கேளுங்கள் !

இது சவூதி அரேபியாவின் ஒரு மார்க்க தீர்ப்பு .

فالواجب على زوجك أن ينفق عليك بالمعروف، ولا يلزمك أن تنفقي على البيت من مالك الخاص، إلا أن تتبرعي بذلك عن طيب نفس

அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இப்படி ஒரு தீர்ப்பை காட்ட முடியுமா ?

கணவனிடம் இருந்து குடும்பச் செலவுக்கு தேவையான காசை எடுத்துக் கொள்ளலாமா ? இஸ்லாமிய ஷரீஅத்தின் தீர்ப்பை கேளுங்கள்

فعن عائشة رضي الله عنها: أن هند بنت عتبة قالت: يا رسول الله إن أبا  سفيان رجل شحيح وليس يعطيني ما يكفيني وولدي إلا ما أخذت منه وهو لا يعلم، فقال: خذي ما يكفيك وولدك بالمعروف. رواه البخاري ومسلم.

குடும்பச் செலவுக்கான பணத்திலிருந்து பெண் எடுத்துக் கொள்ளும் அல்லது திருடிக் கொள்ளும் பணத்துக்காக தண்டை கிடையாது என பெரும்பாலான சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்

فالراحج من أقوال العلماء، أنه لا حد على الزوجة فيما تأخذه من مال زوجها، جاء في الموسوعة الفقهية: اتفق جمهور الفقهاء على عدم إقامة الحد إذا سرق أحد الزوجين من مال الآخر وكانت السرقة من حرز قد اشتركا في سكناه، لاختلال شرط الحرز وللانبساط بينهما في الأموال عادة.

ஒரு பல பெண்களை திருமணம் செய்து விட்டு நீதியாக நடந்து கொள்ளாதவனை 14 நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாம் கண்டித்ததே!

إِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا ) النساء / 3 

وعَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِذَا كَانَ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ سَاقِطٌ ) . وفي رواية : ( أَحَدُ شِقَّيْهِ مَائِلٌ -
رواه الترمذي ( 1141 ) وأبو داود

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : (كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ) . رواه البخاري (2454) ومسلم (2770) .


இன்றைய சூழலில் கூட பிற சமயப் பெண்களுக்கு இந்த உரிமை உண்டா ?

தனது குழந்தையை பராமரிக்கிற உரிமை பெண்களுக்கே உண்டு
இஸ்லாமிய ஷரீஅத் சொல்வதை கேளுங்கள்

 عَنْ عبد الله بن عمرأن امرأة أتت رسول الله صلى الله عليها وسلم فقالت ‏‏"يا رسول الله إن ابني هذا كان بطني له وعاء وحجري له حواء وثديي له سقاء وزعم أبوه ‏أنه ينزعه مني فقال: " أنت أحق به ما لم تنكحي" أخرجه أحمد والحاكم وصححه 

உமர் ரலி யிடமே மகனை விட்டுக் கொடுக்கச் சொன்ன கலீபா வை சந்தித்த வரலாறு இஸ்லாமிற்கு உண்டு.

فروى مالك في ‏الموطإ عن يحي بن سعيد أنه قال سمعت القاسم بن محمد يقول كانت عند عمر بن الخطاب ‏رضي الله عنه امرأة من الأنصار، فولدت له عاصماً بن عمر، ثم إن عمر فارقها فجاء ‏قباء، فوجد ابنه عاصماً يلعب بفناء المسجد فأخذ بعضده فوضعه بين يديه على الدابة ‏فأدركته جدة الغلام فنازعته أباه حتى أتياً أبا بكر الصديق رضي الله عنه فقال عمر، ابني ‏وقالت المرأة ابني فقال أبو بكر رضي الله عنه خل بينها وبينه فما راجعه عمر الكلام".‏

முத்தலாக் என்பது கூட இஸ்லாமிய பெண்களைப் பாதுகாக்கிற ஒரு ஏற்பாடே !

மனைவியை அதிகமாக தலாக் விடுகிற கணவன். அவள் இன்னொரு வாழ்வை அனுபவிப்பதை தடுப்பதற்காக குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கின்றன என்று காரணங்களை கூறி அவளை திருப்பிக் கொள்ள நினைக்கலாம்ஒரு பெண்ணை கணவனிடமிருந்து முழுமையாக விடுவித்து விடும் ஏற்பாட்டை முத்தலாக் செய்கிறது.  (இது இன்றைய நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து போன்றதே!)

தலாக் குறித்த சிந்தனையே கணவனுக்கு வரக் கூடாது என்பதற்காகத்தான ஹலாலா எனும் கடுமையான சட்டம்.

ஹலாலா கூட விளையாட்டாக நடை பெறக் கூடாது.

قد ثبت عن رسول الله صلى الله عليه وسلم: http://www.alifta.net/_layouts/images/UserControl-Images/MEDIA-H1.GIF أنه لعن المحلل والمحلل له 


உச்ச நீதிமன்றம் ஹலாலா குறித்தோ பல தாரமணம் குறித்தோ விசாரிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறது.

அது போலவே முத்தலாக் குறித்த விசாரணையும் தேவையற்றது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வரவேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

நீதிமன்றங்களிலும் பொது அவைகளிலும் நியாயமின்றி நடத்தப்படுகிற இஸ்லாத்தின் மீதான குற்றச் சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உச்சநீதிமன்றமும் அடி பணிந்து விடக் கூடாது என்பதே இந்தியாவில் உள்ள இருபத்தைந்து கோடி முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு,

பொது ஊடகங்களும் நீதிமன்றங்களும் இஸ்லாமிய ஷரீஅத்தின் மேன்மயையும் நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என நாம் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
ஷரீஅத்தை கடைபிடிக்க விரும்புகிற மக்களை அவர்கள் விரும்பும் போக்கில் விட்டு விடுமாறூ கோருகிறோம்.

நிர்வாண மாக அலைந்து திரிகிற, பிணங்களை திண்ணுகிற சாமியார்களை அனுமதிக்கிற தேசம் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நியாயமான சட்டத்தை கடை பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு.

ஷரீ அத்தை ஏற்காதவர்களுக்கு மாற்று சட்டம் ஏற்கெனவே நடை முறையில் இருக்கிறது.

தனியாக எந்த திருமண சட்டத்தையும் இந்துத்துவாவை பிரதி பலிக்கும் மத்திய அரசு உற்பத்தி செய்ய தேவையில்லை.

முஸ்லிம்களை அச்சுறுத்தும் இப்படி ஒரு திட்டத்தை முன் வைத்ததற்காக மத்திய அரசின் வக்கீல் முகில் ரோகித் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும்.

உச்ச நீதிமன்றம் சூழநிலையின் நெருக்கடிகளுக்கு ஆளாகாமல் நல்ல தொரு தீர்ப்பை தரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே நேரத்தில் ஒரு எச்சரிக்கையையும் தர விரும்புகிறோம்.

இதற்கிடையே பொது அரங்கில் இது விசயத்தில் முஸ்லிம் சமூகத்தை மேலும் இழி படுத்த முயற்சி செய்திகள் நடை பெறுகின்றன.

முத்தலாக விசயத்தில் தங்களுக்கு சார்பான தீர்ப்பு வேண்டும் என முஸ்லிம் பெண்கள் அனுமார் கோவிலில் வழி பட்டனர். என்று பத்ரிகை செய்தி சமீபத்தில் வந்தது.

இந்துத்துவ சக்திகளின் மதவிரோதப் போக்கின் அழுத்தமான அடையாளம் அது. நாட்டின் நிலவும் சமூக நல்லிணக்கததை குலைக்க முயற்சி செய்யும் அரசியல் நாடகம் இது.

இத்தகைய போக்குகள் தொடருமானால் நாட்டில் சமூக நல்லுறவு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்பதை எச்சரிக்கிறோம்.

கணவனால் கை விடப்பட்ட யசோதா பென்னுக்கு சார்பாக ஏதாவது ஒரு  தர்காவில் பிரார்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய அதிகம் நேரம் பிடிக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அல்லாஹ் நமது நாட்டை வெறுப்புணர்வூட்டும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக! இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்திற்கும் இஜ்ஜத்தை தந்தருள்வானாக!


No comments:

Post a Comment