வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 11, 2017

அந்தஸ்தான வாழ்வு

இது ஷஃபான் 15 ம் நாள்.
இந்த நாளின் இரவை பராஅத் இரவு என்று முஸ்லிம் உம்மத் காலம் காலமாக சிறப்பித்து வருகிறது.
இரவு வணக்கங்களும் சிறப்பு பயான் நிகழ்ச்சியும் கப்ரு சியாரத்துமாக கழித்த பிறகு இன்றை பகலில் நோன்பு நோற்று இருக்கிறோம்.
அல்லாஹ் நமது அமல்களை அங்கீகரித்தருள்வானாக!
நம்முடையயவும் குடும்பத்தினருடையவும் நம்மைச் சார்ந்த அனைத்து முஃமின்களுடையவும் ஆயூளை நீட்டித்து தந்தருள்வானாக!
அது போல நம்முடையவும் நமது சந்ததிகளுடையவும் குடும்பத்தினருடையவும் ரிஜ்கை ஹலாலான வழியில் விசலாமாக்கி தந்தருள்வானாக
எல்லா வகையான சோதனைகளிலிருந்தும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களை பாதுகாத்தருள்வானாக!
நமது பாவங்களை மன்னித்தருள்வானக!
நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் நரகிலிருந்து விடுதலை செய்தருளவானாக!
நாம் கேட்ட , கேட்கிற துஆ க்களை ஏற்றுக் கொண்டருள்வானக!
பராஅத் இரவின் சிறப்பு மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். சுமார் பத்து சஹாபாக்களின் அறிவிப்புக்களில் இதன் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
அபூமூஸல் அஷ் அரீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த பெயரை நாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். , மார்க்க கல்வி ஏதுமற்ற சில குழப்பாதிகளே மனப்பாடம் செய்து வைத்திருக்கிற சில ஹதீஸ்களை சொல்லி சமுதாயத்தில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிற போது காலம் காலமாய் சத்திய மார்க்கத்தை இறையச்சமுடைய முன்னோர் காட்டித் தந்த வழியில் பின்பற்றி வருகிற நமக்கு சில ஹதீஸ்களை தெளிவாக நினைவில் இருப்பது அவசியம். குழப்பத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும் . குழப்ப வாதிகளுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவும். )
நினைவுல் வையுங்கள் இந்த ஹதீஸை அறிவிப்பவர் அபூமூஸல் அஷ் அரீ ரலி அவர்கள்
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ- أبن ماحة
இது ஸஹீஹான ஹதிஸ் என அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்.
இந்த ஹதீஸ் “ இப்னு மாஜா “ எனும் நபி மொழித் திரட்டில் இடம் பெற்றுள்ளது. இப்னு மாஜா மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு நபி மொழித்தொகுப்புக்களில் ஒன்றாகும்.
(ஹதீஸீன் அறீவிப்பாளர், ஹதீஸ் சொல்லுகிற செய்தி ஹதீஸ் இடம் பெற்ற நபி மொழித்தொகுப்பு அனைத்தை நினைவில் வையுங்கள்.)
நம்மைச் சார்ந்திருந்த சிலர் கொள்கை வேறு பட்டுச் சென்று விட்ட பிறகு எத்தகைய வஞ்சகர்களாகி விட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு இந்த ஹதிஸ் ஒரு சானறாகும்.
ஷஃபான் 15 ம் நாள் இரவுக்கு அதாவது பராஅத் இரவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை தெளிவாக இந்த நபி மொழி அறிவிக்கிற போது அந்த அப்படி ஒன்றே கிடையாது என்று எத்தகைய துணிச்சலோடு மறுக்கிறார்கள் பாருங்கள் ?
தம் சொந்த விருப்பத்தை மார்க்கமாக நினைக்கும் இந்த வஞ்சக் பேர்வழிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சஹாபாக்கள் 3 யாசீன் ஓதினார்களா ? பராஅத் என்று கொண்டாடினார்களா ? இனிப்புக்களை பங்கிட்டார்களா ? என்பது போன்ற இடக்கான கேள்விகளால் மார்க்கத்தின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிறப்பை எவ்வளவு வேகமாக இவர்கள் மறுக்கிறார்கள் பாருங்கள் !
யாசீன் எப்போதும் ஓதலாம். எத்தனை தடவையும் ஓதலாம் எந்த நல்ல நிய்யத்திலும் ஓதலாம். இதற்கு தனியாக எந்த ஆதாரமும் தேவையில்லை.
தலைவர் செயலாளர் என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அந்த அமைப்பின் கருத்தையே மார்க்கமாக கருதுகிறவர்கள் யாசீன் ஓதுவதை குற்றப் படுத்துவது எவ்வளவு கேலிக் கூத்தானது ?
சகோதரர்களே ! நன்கு கவனிக்க வேண்டும் ! கொள்ளை கெட்டவர்களின் பிரசுரங்களில் போஸ்டர்களில் இந்த இரவுக்கு எந்தச் சிறப்பும் இல்லை என்ற வாசகத்தை நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த இரவு சிறப்பிற்குரியது என்பது நபிமொழிகளால் முன்னோர்களால் நிரூபிக்கப்பட்டு விட்ட உண்மை. அதனால் இந்த இரவின் சிறப்பை மறைத்து விட்டு கவனத்தை வேறு திசையில் திருப்புகிறார்கள். மூன்று யாசீன் ஓதினார்களா ? சஹாபாக்கள் இரவுத் தொழுகை ஜமாத்தாக தொழுதார்களா என பசப்புகிறார்கள்
வேகமாக பாய்ந்து வருகிற அம்பு வேட்டைப் பிராணியின் உடலை விட்டு  வெளியேறு வது போல இத்தகையோர் தீனை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிச் சென்ற அடையாளத்திற்கு பொருத்தமான இந்தப் பேர்வழிகள் இப்போது சஹாபாக்களை துணைக்கு அழைக்கிறார்கள்.
ஹழரத் உஸ்மான் ரலி அவர்கள் ஜும் ஆ வில் இரண்டாவது ஒரு பாங்கை அதிகப்படுத்தினார்கள். அதை ஒட்டு மொத்த சஹாபாக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதை உஸ்மான் பிளாக் மெயில் செய்து விட்டார் என்று விமர்ச்சித்த இவர்கள் சஹாபாக்கள் பராஅத் இரவு கொண்டாடினார்களா என்று கேட்பது வேடிக்கையானது.
பராஅத் என்று கொண்டாடினார்களா என்ற கேள்வுயும் குதர்க்கமானது. பரா அத் என்றாலும் சஃபான் 15 என்றாலும் ஒன்றுதான். ஷஃபான் பதினைந்தாம் நாள் இரவின் சிறப்பு என இப்னு மாஜா ரஹ் அவர்கள் தனியாக தலைப்பிட்டு ஒரு பாடத்தை அமைத்திருக்கிற போது அந்த இரவு முன்னோர்களால் கவனிக்கப்பட்டது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
முன்னோர்களின் வழிகாட்டுதலை உதறிவிட்டு தமது சொந்த விருப்பத்தை மார்க்கமாக்கிக் கொண்ட இந்த மூடர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாக! அது வரை இத்தீயோர்களின் குழப்பங்களிலிருந்து நம்மையும் நமது சந்ததிகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் யாராவது இங்கு இருப்பின் அவர்கள் நியாயமாக யோசிக்கட்டும்.
ஷஃபான் 15 ம் நாள் இரவின் சிறப்பு ஹதீஸ்களில் தெளிவாக உறுதி செய்யப் பட்டிருக்கும் நிலையில் அந்த அடிப்படை உண்மையை மறைத்து விட்டு மக்கள் நன்மையை நாடிச் செய்கிற குர் ஆன் ஓதுதல் சியாரத் செய்தல் போன்ற சில பொது வான நல்ல காரியங்கள் மீது சந்தேகத்தை கிளப்பி விட்டு இந்த நாளில் இதைச் செய்ய ஆதாரம் இல்லை என்று திசை திருப்புவது சரிதானா ?  என்பதை அவர்கள் யோசிக்கட்டும்.
மார்க்கத்தின் பெயரச் சொல்லி வஞ்சக வலை விரிக்கும் கூட்டத்திலிருந்து அவர்கள் விலகி நிற்கட்டும்.  அல்லாஹ் கிருபை செய்வானாக!
அருமையானவர்களே !
நேற்றைய இரவிலே அல்லாஹ்விடம் நீண்ட ஆயுள் வேண்டும் என்று நாம் கேட்டோம்.
அந்த ஆயுள் எப்படி பட்ட ஆயுளாக இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்த்தோமா ?
இன்றைய தினத்திற்கு பிறகு நமது வாழ்க்கை எப்படியாவது நீண்டு கிடைத்தால் போதுமா ? அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ?
சிந்திக்க வேண்டும்.
நமக்கு நீண்ட வாழ்க்கை வேண்டும் அந்த வாழ்க்கை அந்தஸ்தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும்
ஒரு வாழ்க்கை அந்தஸ்தானதாக இல்லா விட்டால் வாழ்ந்து என்ன பயன் இருக்கிறது ?
எனவே நமது சிந்தனை விசாலப்பட வேண்டும். இனி வரும் நாட்கள் நமது வாழ்வை அந்தஸ்தானதாக ஆக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்
அல்லாஹ் கிருபை செய்வானாக!
அந்தஸ்தான வாழ்க்கை எது ?
அந்தஸ்து என்று சொன்னவுடன், பணம் பதவி அடியாள் கூட்டம் என்று இருப்பது என நினைக்க வேண்டாம். அதுவா அந்தஸ்து ?
இன்றைய அரசியல் வாதிகளை கவனிக்கிறோம். திகட்டத் திகட்ட ஊழல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். வெட்கமே இல்லாமல் மக்களை சுரண்டு கிறார்கள்.
நேற்று கூட ஒரு அதிகாரி அமைச்சர் தன்னுடைய பதவிக்காக 30 இலட்சம் கேட்கிறார் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு இளைஞனைச் சந்தித்தேன். விவசாய துறையில் அற்புதமான ஆராய்சி செய்து டாக்டரேட் முடித்திருக்கிறார். கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு முயற்ச்சித்து வருகிறார். 20 இலட்சம் அமைச்சருக்கு கேட்கிறார்கள் ஹழ்ரத் என புலம்பினார்.
எண்ண முடியாத அளவு கண்க்கின்றி சம்பாதிக்கிறார்கள். முன்னாள் முதல்வர் இறந்து போனார், அவர் திரட்டிய கோடிக்கணக்கான சொத்துக்கள் அநாதையாகிவிட்டன. போவோர் வருவோரெல்லாம் திருடிச் செல்லும் களஞ்சியமாக அது மாறிவிட்டது.
ஊரார் காசை அடித்துச் சாப்பிடுகிற வாழ்கை அந்தஸ்தான வாழ்கையா /
இல்லை.
நமது வாழ்க்கையில் மூன்று முக்கிய நாட்கள் உண்டு’
ஒன்று பிறந்த நாள். நாம் பிறக்கிற போதே நல்லவனா கெட்டவனா என்பது முடிவாகி விட்டது. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
என்றாலும் பிறக்கிற குழந்தை நல்லதாக இருக்கட்டும் என்ற அர்தத்திலேயே குழந்தை பிறந்த வுடன் காதில் பாங்கு சொல்கிறார்கள். பெரியவர்களை வைத்து தஹ்னீக் செய்கிறார்கள்.
இரண்டாவது நாள். மவ்தாகிற நாள். அப்போது நாம் நல்லவரா கெட்டவனா என்பது ஊராருக்கு ஒரு அளவு தெரிந்திருக்கும். ஆனால் அது உறுதியான கருத்தாக இருக்க வாய்ப்பில்லை.
மூன்றாவது நாள் அல்லாஹ்வின் சந்நிதியில் நாம் எழுந்து நிற்கிற நாள். அன்று நாம் நல்லவனா கெட்டவனா என்பது அனைவருக்கு முன்னாளும் வெட்ட வெளிச்சமாகிவிடும். முகஸ்துதிக்கோ மர்மத்திற்கோ எந்த இடமும் இருக்காது.
இந்த மூன்று நாட்களிலும் நிம்மதியுடன் இருப்பதே உண்மையில் அந்தஸ்தான வாழ்விற்கான அடையாளமாகும்.
ஈஸா அலை கூறுகிறார்கள்.
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا (33
இந்த 3 நேரங்களிலும் பிரதானமானது 3 வது நேரமாகும்.
அந்த நேரத்தில் நம்முடைய வாழ்க்கை அந்தஸ்தானதாக இருக்க வேண்டும் என நாம் அதிகம் ஆசைப்பட வேண்டும்.
அந்த சந்தர்ப்பத்தில் எந்த அற்ப காரணத்தை சொல்லியும் நமது அலங்கோலத்தை நாம் மறைத்துக் கொள்ள முடியாது.
அல்லாஹ்விடம் நமெக்கெதிரான சாட்சியங்களும் வாதங்களும் வலுவாக இருக்கின்ற என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
எனக்கு பொறுப்புக்கள் அதிகமாக இருந்தன அதனால் உனக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய முடியவில்லை என்று சொல்லுகிற மனிதனுக்கு எதிராக காட்டுவதற்கு அல்லாஹ்விடம் சுலைமான் அலை அவர்களிடம் வரலாறு இருக்கிறது. ஜின் வர்க்கம் பறவை இனம் எனப் பரவியிருந்த பேரரசர் எப்படி வாழ்ந்தார் ?
وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَاأَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ(16)وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنْ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ(17)حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ
காற்றில் பயணித்து காரியம் ஆற்றிய  அவரை விடவா உனது பிஸி அதிகம் என அல்லாஹ் கேட்பான்.
நான் தொழிலாளி அதனால் உன்னை வணங்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு எதிராக சொல்லிக்காட்ட அல்லாஹ்விடம் யூசுப் அலை அவர்களின் வரலாறு இருக்கிறது.
அடிமையாக வாழ்ந்தார். சிறையில் வாடினார். சதிச் செயல்களுக்கு ஆளானார்.

ஆனால் அவரது வாழ்க்கையின் போங்கு எப்படி இருந்தது ?
யூசுப் அத்தியாயத்தின் கடைசி வசனங்கள் அதற்கு சாட்சி

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنْ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ(101)
மக்கள் பஞ்சத்தில் வாடிய போது நோன்பு வைத்த நிலையில் அவர் கஜானாவிலிருந்து கோதுமைகளை மக்களுக்கு பரிமாரினார்.

இதைவிடவா உனது வாழ்வில் வேலை அதிகம் என அல்லாஹ் கேட்பான்.

நான் ஏழையாக இருந்தேன் அதனால் உன்னை வணங்க முடியவில்லை என்று கூறுபவர்களுக்க் எதிராக சுட்டிக்காட்ட அல்லாஹ்விடம் ஈஸா நபியின் வரலாறு இருக்கிறது.
ஈஸா அலை ஒரு தலையணையும் தம்ளரும் வைத்திருந்தார். ஒரு பயணத்தில் தலைக்கு கையை வைத்து படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார். எனக்கு ஏன் இந்தச் சுமை என்று கூறி தலையனையை அவருக்கு கொடுத்து விட்டார். வழியில் இன்னொரு மனிதன் கையினால் அள்ளி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தமளரையும் கொடுத்து இந்த உலகிலிருந்து தான் வைத்துக் கொள்ள எதுவுமே இல்லாதவராக ஈஸா அலை வாழ்ந்தார்கள்.
ஆனாலும் அல்லாஹ்வின் அடுமை தான் என்பதை அவர் மறக்க வில்லை
அவர் சாலிஹானவராக இருந்தார் என அல்லாஹ் சான்றளித்துள்ளான்.

وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنْ الصَّالِحِينَ(46)

நான் நோயாளியாக  இருந்தேன் அதனால் உன்னை வணங்கிட முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு எதிராக காட்டுவதற்கு அல்லாஹ்விடம் அய்யூப் நபியின் வரலாறு இருக்கிறது.
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِي الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ(83)
إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ(44)

அற்பமான எந்த காரணத்தை கூறியும் தப்பித்துக் கொள்ள முடியாத அந்த நாளில், எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாத நீதி இருக்கும் அந்தச் சபையில் நமது வாழ்க்கை அந்தஸ்தானக இருக்க வேண்டும்

அவ்வாறு நமது வாழ்வை அந்தஸ்தானாதாக ஆக்கிக் கொள்வதற்கு என்ன செய்வது ?
அதை நமது மார்க்கம் கற்றுத்தருகிறது.
1    லாயிலாக கலிமாவில் உறுதியாக இறுதிவரை இருப்பது.
من قال لا إله إلا الله دخل الجنة

லாயிலாக இல்லலாஹ் என்ற கலிமாவிலும் அஹலுஸ்ஸுன்னத் வல் ஜாமாத்தின் கொள்கையிலும் உறுதியாக இருப்பது அந்தஸ்தான வாழ்விற்கான அடையாளமாகும்
கொள்கையில் உறுதியற்றிருப்பது. தடுமாறுவது. இரட்டை வேசம் போடுவது அனைத்து அவலட்சணமாகும்.
நாம் மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களையும் சத்தியக் கொள்கையில் நிலைத்திருக்க செய்ய வேண்டும். அவர்கள் வழி தவறுவார்கள் எனில் நம்மை நரகத்திற்கு இழுப்பார்கள்.
وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ (29)
சமீபத்தில் என்னை வருத்தப்பட வைத்த ஒரு நிகழ்வு .
ஒரு மூதாட்டி தனது மகனிடம் கேட்டார். நான் மவ்தாகிவிட்டால் எனக்கா துஆ ஓதுவியா ?
யாகூப் அலை தன் மகன் காணாமல் போனதும் நீண்ட நாட்கள் அழுதார். மகனுக்காக ஒரு நபி இத்தனை காலம் அழலாமா?
மகன் காணாமல் போனதற்காக அல்ல. சிறியவரான அவரது ஈமான் பறிபோய்விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகவே கண் பார்வை பறி போகும் அளவு அழுதார்.
யூசுப் அலை அவர்களின் சட்டையுடன் மற்ற பிள்ளைகள் வந்த போது யாகூப் அலை அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி அவரை எந்த நிலையில் கண்டீர்கள். சகோதர்ர்கள் இஸ்லாத்திலே அவரை கண்டோம் என்று சொன்னார்கள்.
அப்போது யாகூப் அலை சொன்னார் : الآن تمت نعمت ربي
அந்தஸ்தான் வாழ்விற்கான
இரண்டாவது அடையாளமஅமல்களை நிறைந்த வாழ்கை
வாழ்க்கை அமல்களாலே அழகு பெறுகிறது. கடந்த ஆண்டை விட இனி வரும் நாட்கள் நமது வாழ்க்கையில் அமல் கள் அதிகமாக இருக்கட்டும்.
வயது ஏற ஏற நபில் தொழுகை குர் ஆன் ஓதுதல் திக்ரு தஸ்பீஹ்களை செய்தல் அதிகரிக்கட்டும்.
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ [النحل: 97]

عن أبي هريرة - رضي الله عنه - أن النبي -صلى الله عليه وسلم- قال: «قَالَ اللَّهُ: إِذَا تَحَدَّثَ عَبْدِي بِأَنْ يَعْمَلَ حَسَنَةً فَأَنَا أَكْتُبُهَا لَهُ حَسَنَةً مَا لَمْ يَعْمَلْ، فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا بِعَشْرِ أَمْثَالِهَا، وَإِذَا تَحَدَّثَ بِأَنْ يَعْمَلَ سَيِّئَةً فَأَنَا أَغْفِرُهَا لَهُ مَا لَمْ يَعْمَلْهَا، فَإِذَا عَمِلَهَا فَأَنَا أَكْتُبُهَا لَهُ بِمِثْلِهَا

மாஷா அல்லாஹ் அதிகமாக சொன்னால் அது சொர்க்கத்தை தரும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

திருக்குர் ஆனின் ஒரு ஆயத்தை சுட்டிக்காடுகிறார்கள்.

وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ تُرَنِي أَنَا أَقَلَّ مِنْكَ مَالًا وَوَلَدًا(39)فَعَسَى رَبِّي أَنْ يُؤْتِيَنِي خَيْرًا مِنْ جَنَّتِكَ

அந்தஸ்தான வாழ்க்கையின் மூன்றாவது அடையாளம். பிறருக்கு நன்மை செய்வது

அபூபக்கர் ரலி அவர்கள் அவர் இஸ்லாமான அதே நாளில் அவரால் இஸ்லாத்திற்கு அழைத்து வரப்பட்டோர்.

عثمان بن عفان،والزبير بن العوام ،وعبد الرحمن بن عوف،وسعد بن أبي وقاص،وطلحة بن عبيد الله.

இஸ்லாமை தழுவிய அடிமைகள் பலர் அடிபட்டு உதைப்பட்டு சித்ரவதையை அனுபவித்த போது அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அவ்வடிமைகளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்தார்கள்.

أعتق أبو بكر مع بلال عامر بن فهيرة  وأم عُبيس وزِنِّيرة والنهدية وبنتها وبجارية بني مؤمل 


பண்டைய காலத்தில் தான் இப்படி மனிதர்கள் இருந்தார்கள் என்றில்லை, நாம் வாழும் காலத்திலும் மனித குலத்திற்கு ஆச்சரியமளிக்கீற நன்மை செய்த பலர் இருக்கிறார்கள்

அத்தகையோரில் ஒருவர் அப்துர் ரஹ்மான சமீத் – 1947 ல் குவைத்தில் பிறந்து  2013 ல் வபாத்தானவர்.
மருத்துவர் – கனடாவிலும் இலண்டனிலும் மருத்துவம் பயின்றவர்.
ஆப்ரிக்க மக்களுக்கு உதவி செய்வதற்காக மடகஸ்கரில் குடியேறினார். நேரடியாக அவர்களுக்கு உதவிகள் செய்தார்.
ஏழு இலட்சம் பேர் அவரால் இஸ்லாமை தழுவினர் என்கிறது விக்கி பீடியா. இந்த எண்ணிக்கை 11 இலட்சத்தை தொட்டும் விட்டது என்கிறது இன்னொரு அறிக்கை.
فقد أسلم على يديه وعبر جهوده وجهود فريق العمل الطموح الذي يرافقه أكثر من سبعة ملايين شخص في قارةأفريقيافقط

 29 வருடங்கள் அவர் ஆப்ரிக்காவின் வறண்ட அச்சம் தரக்கூடிய சிரமாமன இடங்களில் சேவை செய்தார்.
அப்துர் ரஹ்மான கூறுகிறார். என்னிடம் இஸ்லாமைத் தழுவிய பலரும் அழுவார்கள். எங்கள் தாய் தந்தையருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கவில்லையே ! நீங்கள் தாமதமாக வந்து விட்டீர்களே என அவர்கள் அழுகிற போது அவர்களை விட நான் அதிகமாக அழுவேன்
அல்லாஹ்விடம் முன் வைப்பதற்கேற்ற என்ன அற்புதமான வாழ்க்கை பாருங்கள்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரிடமும் பிறருக்கு உதவி செய்ய ஏதாவது ஒரு சக்தி இருக்கிறது, அதை பயன்படுதி மற்றவருக்கு உதவு வதன் மூலம் கிடைத்திருக்கிற வாழ்க்கையை அந்தஸ்தானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அந்தஸ்தான வாழ்விற்கு நான்காவது வழி பாவங்களை குறைத்துக் கொள்வது,

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ - ترمذي2252
أن النبي -صلى الله عليه وسلم- قال  ; الثلاثة الذين يبغضهم الله: الشيخ الزاني، والفقير المختال، والغنى الظلوم

அந்தஸ்தான வாழ்விற்கு ஐந்தாவது  வழி பிறருக்கு துன்பம் அளிக்காத வாழ்க்கை
பிறருக்கு துன்பளிக்கிற போது நாம் செய்த நல்லமல்கள் அழிந்து விடுகின்றன.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ 

قال أبو ذر: قلت: يا رسول الله أرأيت إن ضعفت عن بعض العمل ؟ قال : (تكف شرك عن الناس فإنها صدقة منك على نفسك). متفق عليه.
(وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً).

وعن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.


நீண்ட ஆயுள் வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம் அந்த வாழ்க்கை அல்லாஹ்வின் முன்னிலையில் எடுத்து வைக்க தக்க அந்தஸ்தான வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட வேண்டும்

நமது இன்றைய வாழ்க்கை முறை குறித்து நாம் ஒரு மதிப்பீட்டுக்கு தயாராக வேண்டும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். அருமையான பதிவு. சமூகத்திற்கு பலன் தரும் பதிவு جزاكم الله خير الجزاء يا أستاذ

    ReplyDelete