வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 12, 2017

இஸ்லாம் கூறும் பன்முகத்தன்மை பிறரது நம்பிக்கையை ஆக்ரமிக்காமல் இருப்பதே!


இந்தியா எனும் நம்முடைய நாடு உலகின் மிகச் சிறப்பான கலாச்சார பிணைப்புக்களை கொண்ட நாடு. பல மத்தத்தவர்களும் இனத்தவர்களும் மொழிக்காரர்களும் இணைந்து அவர்களது தனி அடையாளங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிற நாடு.
இந்த நாட்டின் விசேச பண்பான பண்முகத்தன்மையை அழித்து ஒரே அடையாளத்திற்குள் மக்களை கட்டாயமாக கொண்டு வர தற்போதைய மத்திய் அரசு நினைக்கிறது.
1.   மாட்டிறைச்சி விவாகரம்.
2.   ஷரீஅத் சட்டங்களில் தலையீடு
3.   நீட் தேர்வு
4.   ஜி எஸ் டி
5.   இந்தியாவின் தொல்பொருள் சின்னங்களை அவமதித்தல்மாற்றுதல்
6.   தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பு
(ஆலிம் பெருமக்களே! இந்த விசயங்கள் குறித்து சுருக்கமான அறிமுகம் கொடுங்கள். )
இப்படி நாட்டில் தற்போது நடந்துவருகிற ஒவ்வொரு விவாகாரங்களின் பின்னணியிலும் மத்திய அரசின் இந்த இரகசிய திட்டம் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் பன்முகத்தன்மையை ஏற்க வேண்டும் என்பது பற்றி பலத்த அறிவுரைகள் முஸ்லிம்களை நோக்கியும் முன்வைக்கப்படுகிறது.
இஸ்லாம் பன்முகத்தனமையை ஏற்கிறதா ? எதிர்கிறதாஅதவாது மற்ற சமயங்கள் சமூகங்களின் நம்பிக்கைகள் பண்டிகைகள் விழாக்களை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா ? அனுசரிக்கலாமா ? வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளலாமா ? என்ற கேள்விகள் எழுப்பப் படுகிறது.
இதில் ஒளிவுமறைவற்ற தெளிவான பதில் என்ன தெரியுமா ?
இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட தெளிவான ஓரிரைக் கோட்பாட்டையும் நம்பிக்கைகளையும், வரையறுக்கப்பட்ட சட்டங்களை கூறுகிறது என்பது மட்டுமல்ல, இது மட்டும்தான் சத்தியம் என்றும் அறுதியிட்டு கூறுகிறது. இது தவிர மற்ற மதக்கோட்பாடுகள் அனைத்தும் தற்போது செல்லாதவை என்று என்கிறது.
وَمَن يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ {آل عمران:85
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ * اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لا إِلَهَ إِلا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ

எனவே எல்லோரும் இஸ்லாமின் பக்கம் வர வேண்டும். அதை தவிர நன்மைக்கு எந்த வழியும் இல்லை. என்று வெளிப்படையாகவே இஸ்லாம் கூறுகிறது.
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ * فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ[

இஸ்லாமை ஏற்காதவர்கள் நரகவாதிகளே அவர்கள் எத்தகைய நன்மை செய்திருந்தாலும் சரி!
قال النبي صلى الله عليه وسلم((لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أهل النار)) رواه الإمام مسلم في صحيحه.

உலகில் அறியப்பட்ட மற்ற வேத நூல்களை கூட ஆராய்ச்சித் தேவைக்கன்றி முஸ்லிம்கள் வாசிக்க கூடாது என்கிறது இஸ்லாம்.
روى النسائي عن النبي صلى الله عليه وسلم أنه رأى في يد عمر بن الخطاب رضي الله عنه ورقة من التوراة فقال((أمتهوكون يا ابن الخطاب؟ لقد جئتكم بها بيضاء نقية، لو كان موسى حيا واتبعتموه وتركتموني ضللتم))، وفي رواية((لو كان موسى حياً ما وسعه إلا اتباعي، فقال عمر: رضيت بالله رباً وبالإسلام ديناً وبمحمد نبياً))

பிற மதக் நம்பிக்கைகளை முஸ்லிம் ஏற்கக் கூடாது என்கிறது இஸ்லாம்.
யூதப்பாதிரியான அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு விருந்துக்கு சென்றார். அங்கு ஒட்டகை இறைச்சி பரிமாறப்பட்டது. அவரது முந்தைய மதக்காரர்கள் ஒட்டகை இறைச்சியை வெறுத்தார்கள். அந்தப் பழக்கத்தில் அவரும் முகத்தில் ஒரு அறுவருப்பைக் காட்டினார். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.
தப்ஸீர் இப்னு கஸீரில் இந்த வசனத்திற்கான பின்னணியில் இது இன்னும் விரிவாக கூறப்படுகிறது.
இக்ரிமா ரலி கூறுகிறார். சனிக்கிழமையை புனிதமாக கருதவும், இரவு நேரங்களில் தவ்ராத்தைப் படிக்கவும் சில நவ் முஸ்லிம் யூதர்கள் அனுமதி கோரினர். அப்போது இந்த வசனம அருளப்பட்டது.
روى الطبري عن عكرمة، قال: قال عبد الله بن سلام، وثعلبة، وابن يامين، وأسد، وأسيد ابنا كعب، وسعد بن عمرو، وقيس بن زيد، كلهم من يهود، يا رسول الله! يوم السبت يوم نعظمه، فدعنا فلنسبت فيه -أي: دعنا نتخذ يوم السبت عيداً- وإن التوراة كتاب الله، دعنا فلنقم بها الليل، فنزلت: {يا أيها الذين آمنوا أدخلوا في السلم كافه

இஸ்லாம் கூறும் நடவடிக்கைகளுக்கு எதிரானவைகளை சாத்தானிய வழி கேடுகள் என்றும் இது விசயத்தில் சருகுதல்களும் சஞ்சலங்களும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும்  உறுதிபட இந்த வனம் பேசுவதை கவனிக்க வேண்டும்.
பிற மதங்களுக்கு சொந்தமான பழக்க வழக்கங்களை ஏற்க கூடாது.
قال النبي صلى الله عليه وسلم : ( من تشبه بقوم فهو منهم ) رواه أبو داود ( 4031

·         தமிழ் நாட்டில் பொட்டு வைத்துக் கொள்ளுதல் போல்
·         இந்து துறவிகள் அணிந்து கொள்வது போல ஆடைகள் அணிதல்
·         ஒரு குறிப்பிட்ட வகை சாயம் பூசிக்கொள்வது யூதர்களிடம் பழக்கத்தில் இருந்தது. பெருமானார் (ஸல்) அதை தடுத்தார்கள்.
، فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم رأى عليه ثوبين معصفرين فقال له : ( إن هذه من ثياب الكفار فلا تلبسها ) رواه مسلم ( 2077 ) .
·         கல்யாணத்தில் மோள தாளங்கள் அடித்தல்
·         பந்தல் காலுக்கு பாலூற்றுதல்
·         சனிக்கிழமை இறந்தவரின் பிரேதத்தோடு சேவல்களை கப்ருஸ்தானுக்கு அனுப்புதல்
·         விதவை பெண்கள் வெள்ளைச் சேலைதான் அணிய வேண்டும் என்று வலியுறுத்துதல்
·         விதவை பெண்களை அபசகுணமாக கருதுதல் போன்ற
·         கார்த்திகை விளக்கேற்றுதல்
·         தீபாவளிக் கொண்டாட்டங்கள் – பட்டாசு வெடித்தல்
·         இறுக்கமான உடல் அசைவை புலப்படுத்தும் படியான ஆடைகளை அணிதல்
·         போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் கட்டாயமாக!

பிற மத சமூக கலாச்சாரங்களை பின்பற்றுவதிலும் அப்படித்தான் .

பிற மதத்தவர்களின் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் நடை பெறும் நிகழ்வுகளுக்காக வாழ்த்து தெரிவிப்பதை கூட இஸ்லாம் அனுமதிக்க வில்லை. அது அர்களது தவறான கோட்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைகிறது என்பதால்

கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து.
கிருஸ்துமஸுக்கு வாழ்த்து

 وَالَّذِينَ لا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَاماً[الفرقان:72].
என்ற வசனத்திற்கு பிறமததவர்களின் திருவிழாக்களில் கலந்து கொள்வது என்று சில முபஸ்ஸிர்கள் விளக்கம் சொல்கிறார்கள்
قال مجاهد في تفسيرهاإنها أعياد المشركين، وكذلك قال مثله الربيع بن أنس، والقاضي أبو يعلى والضحاك
وقال ابن سيرينالزور هو الشعانين ، والشعانين: عيد للنصارى يقيمونه يوم الأحد السابق لعيد الفصح ويحتفلون فيه بحمل السعف، ويزعمون أن ذلك ذكرى لدخول المسيح بيت المقدس 

قد قال عمر رضي الله عنهإياكم ورطانة الأعاجم، وأن تدخلوا على المشركين يوم عيدهم في كنائسهم فإن السخطة تتنزل عليهمرواه أبو الشيخ الأصبهاني والبيهقي بإسناد صحيح.
وروى البيهقي أيضاً عن عمر أيضاً قولهاجتنبوا أعداء الله في عيدهم

எனவே பிற சமூகத்தினருக்கு அவர்களுடை பெருநாட்களின் போது வாழ்த்துச்சொல்வதானால் அவர்களது மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துச் சொல்லவேண்டுமே தவிர அவர்களது நம்பிக்கைக்கு வாழ்த்துச் சொல்வது கூடாது

இந்த அளவு இஸ்லாம் நாம் நமது  தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிற மதங்களின் திருவிழாக்களில் பெருநாட்களில் அவர்களை ஒத்துப் போகிற எந்த நடவடிக்கையிலும் நாம் ஈடுபடக் கூடாது.

இஸ்லாம் கூறும் பன்முகம் ?

பிற மத சமூக நம்பிக்கைகளை நடைமுறைகளை கலாச்சாரக் கூறுகளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவோ பின்பற்றவோ கூடாது என்று உறுதியாக இஸ்லாம் கூறுவதை பன்முகத்தன்மைக்கு எதிரானதாக கருதக் கூடாது.
மாறாக ஒரு சத்தியக் கோட்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் நிலைத்து நிற்பதாகவே பார்க்க வேண்டும் .

அதே நேரத்தில் பிறரின் மீது நம்முடைய கருத்தை திணிக்கவோ வற்புறுத்தவோ கூடாது என்பதில் இஸ்லாம் பன்முகத்தன்மையின் முதல் தர ஆதரவாளராக இருக்கிறது.

இந்த இடத்தில் பன்முகத்தன்மையை ஏற்றல் என்பதன் பொருள். நம்முடைய கருத்தை பிறர் மீது திணிக்காமல், அவர்களுடைய சொந்த அடையாளங்கள அழிக்க முயற்சி செய்யாமல் . அவர்களை அவர்களது கோட்பாட்டுகளின் படி நம்பிக்கை கொள்ளவும் வாழ்க்கையை கடைபிடிக்கவும் அனுமதிப்பது. அவர்களுடைய உணர்வு களை மதிப்பது, அவர்களில் நல்ல விசயங்களை பாராட்டுவது  என்று அர்த்தமாகும்.

{لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

பிற மத்ததவர்களோடு ஒரே தட்டில் உட்கார்ந்து உணவு கொள்ள அனுமதியுண்டு.
அவர்களது அன்பளிப்புக்களை மறுக்கத் தேவையில்லை.
குறிப்பாக அவர்களது நம்பிக்கைகளில் இடையூறு கேலி கிண்டல் செய்ய அனுமதியில்லை.
அவர்களது கொண்டாடட்டங்கள தடுக்க அனுமதி இல்லை.
அவர்களுக்கு அன்பளிப்புக்களை தர்மங்களை வழங்கத்தடையில்லை

لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين * إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون  ) الممتحنة / 8- 9 .

سماء بنت أبي بكر رضي الله عنهما قالت : " قَدِمَتْ عَلَيّ أمي وهي مشركة - في عهد قريش إذ عاهدوا رسول الله صلى الله عليه وسلم ومُدَّتِهم - مع أبيها ، فاستفتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي قدمت علي وهي راغبةٌ - تطلب العون -  أفأصلها ؟ قال : نعم صِلِيْها " رواه البخاري برقم 2946 .

இஸ்லாமிய அரசர்கள் – முஸ்லிமல்லாத சகோதரர்களது நம்பிக்ககளிலும் கோட்பாடுகளிலும் தலையிட்டது இல்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அவ்ரங்கசீப் பல கோயில்களுக்கு மானியம் வழங்கினார் என்பதும்
மதுரையில் உள்ள ஆதீனங்களுக்கு அவர் வழங்கிய மானியங்களுக்கு இன்னும் அங்கு சான்றுகள் உள்ளன என்பதும் இஸ்லாமிய பன்முகத்தன்மையின் அடையாளங்களாகும்

தமிழகத்தில் முஸ்லிம்கள் தமது கொள்ளகையில் உறுதியாக நின்ற அதே நேரத்தில் மாற்று சமூகத்தவருடனும் மாமன் மச்சான் உறவைப் பேணி நின்றதும் இஸ்லாமிய பன்முகத்தன்மையின் அடையாளமாகும்

நாம் நமது அடிப்படைகளில் உறுதியாக நிற்போம். அதே நேரத்தில் மனிதாபிமான நல்லியல்புகளுக்கு அடையாளமாகவும் திகழ்வோம்.














No comments:

Post a Comment