வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 30, 2026

நீர் நிவாகம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் கிடைக்க வில்லை. வழக்கமாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்பட வில்லை. போதிய தண்ணீர் இன்றி காவிரி ஆற்றுப் படுகை விவசாயிகள் கவல்ல அடைந்துள்ளனர். இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இன்னொரு அணை கட்ட கர்நாடாக முயற்சிக்கிறது. அதை தடுக்க தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நீலகிரியின் சில பகுதிகள் வரண்டு போயிருப்பதாக சுற்றுச் சூழல் ஆய்வளர்கள் தற்போது கூறியுள்ளார்கள். இது சமீப காலத்தில் காணப்படாத ஒரு ஒரு காட்சி என்று அவரகள் கூறுகிறார்கள். உலகம் ஒரு பெரிய வறட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளம் என்று அவரகள்

புவியின் சுற்றுச் சூழல் குறித்தும் குறிப்பாக தண்ணீர் குறித்து மிக கவனமாக சிந்திக்கவும் செயல்படவும் நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

தண்ணீர் அல்லாஹ்வின் மிகப் பெரும் படைப்பு. தனது சக்திக்கு அடையாளமாக அல்லாஹ் அதை தனியே குறிப்பிட்டுக் காட்டுகிறான். தண்ணீரின் பலனையும் குறிப்பிடுகிறான்.

 وَاللَّهُ أَنزَلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَسْمَعُونَ

மிகப் பெரும் படைப்பு

நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவுக்கு சென்ற போது பூமியை பார்த்தார், அது நீல நிரத்தில் தெரிந்த்து. ஏனெனில் பூமி தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது. மொத்த பூமியின் 3 ல் 2பங்கு தண்ணீருக்கு அடியில் இருக்கிறது.

• Neil Armstrong saw the Earth from the Moon, it appeared blue! because water covers more than 2/3 Earth

பூமிப் பந்தின் ஒரு அங்கமாய் கடல் இருந்தாலும் பூமி என்னவோ கடலில் மிதப்பது போலத்தான் இருக்கிறது.

 • "The earth was formed out of water and by water" bible

பூமி தண்ணீருக்கு வெளியேதண்ணிரால் உருவாக்கப் பட்டிருக்கிறது என்று பைபிள் கூறுகிறது.


நீராருங்கடலுடுத்த நில மடந்தை
என்று தமிழ்த்தாய் வாழ்த்து கூறுகிறது. தண்ணீரை ஆடையாக உடுத்தியிருக்கிற நிலம் என்பது அதன் பொருள்/

முக்கியத்துவம்

மனிதப் படைப்புக்கு அடுத்து முக்கியமானது தண்ணீர் தான் என்கிறார்கள் அறிஞர்கள்/

• the most precious creation after humankind is water

அனைத்து படைப்புக்களுக்கும் ஆதாரம் தண்ணீர்

وَجَعَلْنَا مِنْ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ

وعن أبي هريرة قال: قلت يا رسول الله إني رايتك طابت نفسي وقرت عيني، فأنبئني عن كل شيء، قال صلى الله عليه وسلم: " كل شيء خلق من ماء

நீரின்றி வாழவும் முடியாது.

 வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் தண்ணீர் தேவை. விவசாயம், தொழில் வளர்ச்சி முதல் கலாச்சார மற்றும் மத சம்பிரதாயங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் தண்ணீர் அவசியமாகிறது என்கிறார் யுனஸ்கோ வின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் கொசிரோ மட்சுரா

• Water is probably the only natural resource to touch all aspects of human civilization - from agricultural and industrial development to the cultural and religious values embedded in society."
- Koichiro Matsuura, Director General, UNESCO

 தண்ணீர் பூமியின் தட்ப வெப்பத்தையும் சீர் படுத்துகிறது அதே போல மனித உடலின் தட்பவெப்பத்தை சீர்படுத்துகிறது..

வாலிப மனித உடலில் 60 முதல் 70 சதவீதம் நீர் ஆகும். இரத்தில் 82 சதவீதம் தண்ணீர் ஆகும். மூளையின் 70 சதவீத தண்ணீர் ஆகும். நுரையீரலின் 90 சதவீதம் தண்ணீர் ஆகும்.  


• Water regulates the Earth's temperature. It also regulates the temperature of the human body

• 60% - 75% of the adult human body is water - 82% of blood is water; 70% of the brain and 90% of the lungs are made up of water

எனவே பூமில் வாழ்க்கை என்பதே தண்ணீர் சார்ந்தது ஆகும்.

Life on earth probably originated in water

இதில் குடிதண்ணீர்ன் பங்கு இன்னும் மகத்தானது.

97 சதவீத தண்ணீர் கடலில் இருக்கிறது. 2.5 சதவீத தண்ணீர் மட்டுமே குடிப்பதற்கு ஏற்றது மீதியுள்ளவை உப்பு  தண்ணீர் ஆகும்.

இந்த இரண்டரை சதவீத குடி தண்ணீரிலும் 2 சதவீத தண்ணீர் உறைந்து பனியாக இருக்கிறது/

• More than 97% of the earth's water is in its oceans
• 2.5 percent of the water on the Earth can be drunk. The balance 97.5 percent is salt water
• About 2% of the available drinking water is frozen leaving only 1% for drinking

நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு தம்ளர் குடி தண்ணீரும் எவ்வளவு விசேஷமானது என்பதை நாம் உணர வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் மக்கள் குடிப்பதற்காக இருக்கிற கிணறுகளில்  உப்புத்தண்மை அதிகம் கிணற்று நீரிலிருந்து உப்பு தயாரிக்க முடியும் என்ற அளவில் உப்பு தன்மை அதிகமாக இருக்கிறது.

அப்படியானால் அங்கு குடி தண்ணீர் எவ்வளவு சிரமம் என்பதை சிந்தித்துப் பார்க்க் வேண்டும்.

உலகின் பல பகுதியிலும் குடி தண்ணீருக்கான பஞ்சம் ஏற்ப வாய்ப்பிருக்கிறது என தொடர்ந்து ஐநா எச்சரித்து வருகிறது.


• In the last two decades, the assessment, development, and management of freshwater resources has been emphasised at various global meetings

ஜூலை 29,2010 தனிமனிதனுக்கு சுத்தமான குடிநீர் அடப்படை உரிமையாக ஐ. நா அறிவித்த்து

அந்த அறிவிப்பில்  எய்ட்ஸ், மலேரியா, அம்மையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு அதிகம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது மிக வும் கவலை அளிக்க கூடிய செய்தியாகும்.


ஐ நாவுக்கான  ஜெர்மன் தூதர்  விட்டிங் என்பவர் “ ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் என்று கூறிகிறார்,


உலக அளவில் 884 மில்லியன் மக்களுக்கு நல்ல குடி நீர்
கிடைப்பதில்லை என்கிறது ஒரு அறிக்கை.

எனவே தண்ணீர் சரியாக விநியோக்கிகப்படாவிட்டால் மக்களின் ஆரோக்கியம் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அனைத்தும் கேள்விக்குரியாகி விடும் என்று டப்லின் நகரில் நடந்த ஒரு ஆய்வுக் கூட்டம் எச்சரிக்கிறது  

Dublin Conference: if water and land resources are not managed well, then human health, food security, economic development, and ecosystems will all be at risk.

இஸ்லாம் தண்ணீர் குறித்த முக்கியமான பல வழிகாட்டுதல்களை செய்கிறது.

தண்ணீர் அல்லஹ் தருகிறான் நீ குழப்பம் செய்யதே! என்கிறான்


وَإِذْ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ(60)

 

இன்றைய ஆய்வுகளும் மிக தெளிவாக கூறுகின்றன. பூமியில் இருக்கிற தண்ணீரில் 2 சதவீதம் மட்டுமே குடி தண்ணீர் என்றாலும் அது உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் போதுமாக இருக்கிறது.

2006 ம் ஆண்டின் ஐ நா அறிக்கை கூறுகிறது. இங்கு எல்லோருக்கும்  போதுமான தண்ணீர் இருக்கிறஹ்டு. ஆனால் அவற்றை அடைவது மோசமான நிர்வாகங்களால் தடுக்கப் பட்டிருக்கிறது.

A 2006 United Nations report stated that "there is enough water for everyone", but that access to it is hampered by mismanagement and corruption.

அல்லாஹ் மக்களுக்கானதை தாரளமாக கொடுத்திருக்கிறான். ஆனால் அதற்கான பொறுப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டும்

இஸ்லாம் இறைவன், மனிதன், இயற்கை இம்மூன்றுக்கும் இடையிலான உறவை மிக செம்மையாக கடைபிடிக்க கற்று தந்திருக்கிறது

தண்ணீர் குறித்து விசாரிக்கப்படும்.

குடித்த தண்ணீர் குறித்து விசாரிக்கப்படும்


عن أبي هُرَيْرَةَ إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي الْعَبْدَ مِنْ النَّعِيمِ أَنْ يُقَالَ لَهُ أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ وَنُرْوِيَكَ مِنْ الْمَاءِ الْبَارِدِ ترمذي

சிக்கனம் தேவை

وقد توضأ رسول الله صلى الله عليه وسلم بمد ، وتطهر بصاع وهو أربعة أمداد بمده

روت أم المؤمنين عائشة أنه صلى الله عليه وسلم كان يغتسل بقدر الصاع ويتوضأ بقدر المد


வீண் செய்யக்கூடாது.

குளிப்பது சுன்னத்து , அதே நேரம் அதில் விரயம் செய்வது பித் அத்தாகும்.

குளியல் தொட்டிகளிலும் ஜக்கூஸிகளிலும் தண்ணீர் வீணடிக்கப் படுவதை இது கண்டிக்கிறது/   

வீடுகளில் பைப்புகளில் தண்ணீர் சொட்டுச் சொட்டாக ஒற்ற விட்டு விடுகிறார்கள்

இப்படி சொட்டு சொட்டாய வீணாகிற தண்ணீர் ஒரு நாளுக்கு 6 லிட்டர் அளவை கடந்து விடுகிறது.

A dripping tap can waste up to 6 litres of water in a day

ஒரு கப் அரிசியை வேக வைக்க இரண்டு கப் தண்ணீர் செலவழிக்கப் படுகிரது. ஆனால் சமைத்த பாத்திரத்தை சுத்தம் செய்ய 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.

To cook 1 cup of rice you need 2 cups of water but to wash the pan in which it has been cooked you need 4-5 litres of water

அல்லாஹ் எச்சரிக்கிறான்/

உங்களுக்கு கிடைத்த வந்த தண்ணீர் தடுக்கப்படுமெனில் என்ன ஆகும் யோசிய்ங்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்


قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ

மாசு படுத்தக் கூடாது
நீர்வழிகளை அடைத்து விடக்கூடாது

தண்ணீர் அனைவருக்குமானது. அது அனைவருக்கும் பங்கிடப் பட வேண்டும். அதை விற்பனை செய்யக் கூடாது. தண்ணீரை பெற்றுக் கொள்வது சமூக உரிமை என்று இஸ்லாம் கூறுகிறது.


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ


أَنَّ رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ


பெண்களின் பங்கு

தண்ணீர் பற்றி கவலைப்படும் அறிஞரகள் இதில் பெண்களின் பங்களிப்பு மிக அவசியம் என வலியுறுத்துகிறார்கள். எனவே பெண்களிடம் இந்த சிந்தனையை நாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

பல இடங்களிலும் தண்ணீரை பெண்கள் தான் சுமந்து கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீரின் அருமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இக்காலத்தில் ஒரு சுவிட்ஸின் அழுத்தத்தில் தண்ணீர் வந்து கொட்டுகிற போது அந்த் தண்ணீரின் பெருமையை அவர்கள் உணராமல் வீணடித்து விடுகிறார்கள். தண்ணீரை வீணடிப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாகிறது/  

ஒரு வாய் தண்ணீருக்காக ஹாஜரா அம்மையார் ஓடியதை தாய் குலம் மறந்து விடக் கூடாது. தண்ணீருக்காக  ஹஜரா அம்மையார்  ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் ஒரு நின்னவுச் சின்னமாக்கி அதை மக்கள் அனைவருக்குமான ஒரு கடமையாக்கி விட்டான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உம்ராவின் போது நிறைவேற்றப்படுகிற சஃயு என்கிற வணக்கம் கூட தண்ணீரின் முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது எனலாம்.

தண்ணீரின் தேவையை ஹாரூன் ரஷீத் மன்னரின் மனைவி என்ன அற்புதமாக புரிந்து வைத்திருந்தார்கள்.

மக்காவில் ஹஜ்ஜுக்கு திரளும் ஹாஜிகளுக்கு அரபாவில் தண்ணீர் கொடுக்க தாயிபிலிருந்து ஒரு கால்வாயை வெட்டினார்கள். இன்றளவும் அந்த கால்வாயின் மிச்சங்கள் ஜுபைதா கால்வாய் என்று அறியப்படுகிறது

பெண்கள் தண்ணீரின் மரியாதையை புரிந்து செயல்பட வைக்க நாம் முயல வேண்டும்.

தண்ணீர் தர்மம்

தண்ணீர் உலகின் மிக ஆதார சுருதி என்பதால் அதை தடுத்து வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்வதற்கு இஸ்லாம் மாபெரிய நற்கூலிய்ய அறிவித்துள்ளது/


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُؤْمِنٍ أَطْعَمَ مُؤْمِنًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُؤْمِنٍ سَقَى مُؤْمِنًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الرَّحِيقِ الْمَخْتُومِ وَأَيُّمَا مُؤْمِنٍ كَسَا مُؤْمِنًا عَلَى عُرْيٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ

 இறந்தவர் பெயரால் தண்ணீர் தர்மம்


عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ قُلْتُ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْيُ الْمَاءِ النساءي

 தண்ணீர் கொடுத்தவருக்கு சொர்க்கம்

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : "يَصُفُّ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ صُفُوفًا - وَقَالَ ابْنُ نُمَيْرٍ: أَهْلُ الْجَنَّةِ - فَيَمُرُّ الرَّجُلُ مِنْ أَهْلِ النَّارِ عَلَى الرَّجُلِ فَيَقُولُ: يَا فُلَانُ، أَمَا تَذْكُرُ يَوْمَ اسْتَسْقَيْتَ فَسَقَيْتُكَ شَرْبَةً؟ قَالَ: فَيَشْفَعُ لَهُ، وَيَمُرُّ الرَّجُلُ عَلَى الرَّجُلِ فَيَقُولُ: أَمَا تَذْكُرُ يَوْمَ نَاوَلْتُكَ طَهُورًا؟ فَيَشْفَعُ لَهُ-إبن ماجة

 நமக்கு கிடைத்திருக்கிற தண்ணீரின் அருமையை புரிந்து கொள்வோம். பொறுப்புணர்ந்து நடந்து கொள்வோம்.

 இதில் பிடிவாதம் காட்டாமல் , தவறாக நிர்வாகம் செய்யாமல் , யாருக்கும் அநீதி இழைக்காமல் கருனையோடு நடந்து கொள்வோம்.

 அல்லாஹ் நம்மையும் உலகையும் பாதுகாப்பான்

No comments:

Post a Comment