வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 01, 2018

தீன் இருக்க பயமேன் ?


முஸ்லிம்களுக்கு நெருக்கடியான கால கட்டம் இது,
அநீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். அவமதிக்கப் படுகிறார்கள்.
இதிலிருந்து விடுபட பல வழிகளையும் முஸ்லிம்கள் யோசிக்கீறார்கள். கல்வி பெறுதல், அதிகாரத்தை அடைதல், பிற சமூகங்களுடனான உறவுகளை நெருக்க மாக்கிக் கொள்ளுதல் என வெவ்வேறு தீர்வுகள் சமுதாயத்திற்கு முன் வைக்கப் படுகிறது. அவரவர்களுக்கு வசதியான வாசகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்..  
ஆனால் இஸ்லாம் என்ற இந்த தீன் மட்டுமே முஸ்லிம்களை எல்லா நிலையிலும் பாதுகாக்கும்.  வளப்படுத்தும்.
கல்வி பெறுதல் இஸ்லாத்தின் அடிப்படையில், அதிகாரத்தை அடைதல் இஸ்லாத்தின் அடிப்படையில் பிற தொடர்புகளும் இஸ்லாத்தின் அடிப்படையில் என்று நமது வாழ்க்கை அமைய வேண்டும்.
கிருத்துவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் பாருங்கள். யூதர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் பாருங்கள்? பிராமாணர்கள் எப்படி வளர்ச்சியடைகிறார்கள் பாருங்கள் என்ற உதாரணங்கள் நமக்கு தேவையற்றவை,
அவர்களது வளர்ச்சியின் வரலாற்றை ஆழ்ந்து சிந்தித்தால் அவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடித்ததன் மூல்மே வெற்றியடைந்திருக்கிறார்கள் எனற உண்மை புரிய வரும்.
இதை அழுத்தமாக உணர்ந்து கொண்டு வெவ்வேறு வழிகளை யோசிக்காமல் தீனின் வழியை கடைபிடித்து நின்றால் வெற்றி நமக்கே!
 وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ (85



தீனில் எல்லாம் இருக்கிறது என்ற எண்ணத்தை விட தீனில் என்ன இல்லை ?  என்ற சிந்தனை நம்மிடம் வளரவேண்டும்

அப்போதுதான் இந்த ஆயத்தின் பொருளும் கனமும் முழுவதுமாக புரிய வரும்.

கணிதத்தில் சிறப்பு பட்டம் பெற்ற ஒருவர் தன்னுடையா நோக்கில் குர் ஆனை ஆராய்கிறார். குர் ஆனில் என்ன இல்லை என்று அதிசயித்து நிற்கிறார்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அனைத்து எண்களையும் குர் ஆன் பயன்படுத்தி யிருக்கிறது . பின்னங்களும் கூட குர் ஆனில் கூறப்பட்டுள்ளன.

 1 - قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1].

2 -  إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الغَارِ} [التوبة: 40].

3 - 4 - 5 - 6 - مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ} [المجادلة: 7].

7 - 8 - سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا} [الحاقة: 7].

9 - 300 - وَلَبِثُوا فِي كَهْفِهِمْ ثَلَاثَ مِائَةٍ سِنِينَ وَازْدَادُوا تِسْعًا} [الكهف: 25].

10 - مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا} [الأنعام: 160].

11 - إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ} [يوسف: 4].

12 - وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا} [الأعراف: 160].

ஒரு டஜன் என்பது காலகாலமாக பயன்படுத்தப் படுகிற எண்ணிக்கையின் வடிவம்.

அதற்குப்பிறகு ஈரிலக்க எண்களை குர் ஆன் பேசுகீறது.

20 - 200 {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} [الأنفال: 65].

30 - {وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا} [الأحقاف: 15].

40 - {وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً} [البقرة: 51].

50 - { فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا} [العنكبوت: 14].

60 - {فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا} [المجادلة: 4].

70 - {إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80].

99 - {إِنَّ هَذَا أَخِي لَهُ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً} [ص: 23].

100 - {فَأَمَاتَهُ اللَّهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ} [البقرة: 259].

- 1000 - 2000 - {وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ} [الأنفال: 66].

3000 - {أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آَلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ} [آل عمران: 124].

5000 - {يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آَلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ} [آل عمران: 125].

50000 - {تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ} [المعارج: 4].

100000 - {وَأَرْسَلْنَاهُ إِلَى مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ} [الصافات: 147].

எண்களைப் பொருத்தவரை ஒரு அளவுக்கு கற்றுக் கொடுக்கப் படும். அதற்கு மேல் வாய்ப்பாடாக மற்றவற்றை மக்கள் கற்றுக் கொள்வார்கள்.

பின்னங்கள்

نصف – ثلث - ثلثان - {إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِنْ ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ} [المزمل: 20]. 

ربع - {فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ} [النساء: 12].

خمس - {وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ} [الأنفال: 41].

سدس - {فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ} [النساء:

மருத்துவர் ஒருவர் குர் ஆனை ஆராய்கிறார். விஞ்ஞானத்தின் புதிய புதிய செய்திகள் குர் ஆனின் புதையலாக இருப்பதை அறிகிறார்.

டாக்டர் அப்துல் மஜீத் ஜிந்தானி எமன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவியலாளர்.

عبد المجيد بن عزيز الزنداني الأرحبي البكيلي هو سياسي وداعية يمني وهو المؤسس لجامعة الإيمان باليمن ومؤسس الهيئة العالمية للإعجاز العلمي في القرآن والسنة في مكة المكرمة

திருக்குர் ஆனின் ஒரு வசனத்தில் தனக்கு தெரிந்து பல நூறு ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாமை தழுவியதாக கூறுகிறார்.

மருத்துவ உலகம் உடலுக்குள் இருக்கும் நரம்புகள் தான் மூளைக்கு செய்திகளை கொண்டு செல்கின்றன என நம்பிக் கொண்டிருந்தது. பிறகு அவர்கள் தோலில் உள்ள நரம்புகள் தான் மூளைக்கு செய்தியை கொண்டு செல்கின்றன. என்பதை கண்டறிந்தார்கள்.

ஊசி போடுகிற போது தோல் பாகத்தில் அது நுழைகிற போது மட்டுமே  தெரிகிறது. அதற்குடுத்துச் உடலினுள் செல்கையில் வலி தெரிவதில்லை.

திருக்குர் ஆனின் கருத்தை விஞ்ஞானம் இப்போதுதான் உணர்ந்து கொள்கிறது,

إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا (56)

இதே ஜிந்தானி 2000 மவது ஆண்டில் கப்ரில் மனிதர்கள் வேதனை செய்யப் படுகிறார்கள் என்ற கருத்தை நிறுவினார்.

இதற்கு ஆதாரமாக மண்ணியல் (ஜியாலஜி) அறீஞர்கள் சைபீரியாவின் நிலப் பதிகளை ஆராயும் போது பூமிக் கடியில் மனிதர்களின் சப்தங்கள் கேட்ட ஒலிப் பதிவு நாடாவை வெளியிட்டார்.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ரஷய் ஆய்வாளர்கள் குழுவின் தலைவர் பேராசிரிய அஜகோவா Azzacove கூறிய செய்தியை ஜிந்தானி உலகிற்கி வெளிப்படுத்தினார். அஜகோவோ சொன்னார்.

ஒரு கம்யூனிஸ்டாக நான் கடவுளை ஏற்றுக் கொள்வதில்லை.ஆனால் ஒரு ஆய்வாளனாக நரகம் இருக்கிறது என்பதை நம்ப ஆரம்பித்து விட்டேன்.

எத்தகைய புதிய சிந்தனைகளை கடந்தும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டு வருகிறது என்பதன் அடையாளம் ஒரு சில அடையாளங்கள் இவை

2017 ம் ஆண்டு ஆக்ஸ்டு 22 ம் தேதி உச்சநீதிமன்றம் முத்தலாக்கிற்கு எதிராக தீர்ப்புக் கூறியது என்பது பொத்தம் பொதுவான கருத்து

இதிலுள்ள உண்மை என்னவென்றால்

அப்போதைய தலைமை நீதிபதி கோஹர் அவர்களும் அபதுன் நஜீர் அவர்களும் முஸ்லிம்களுடைய சட்டத்தில் தலையிட தேவையில்லை என்றே கூறினார்கள்.

5 நீதிபதிகளை கொண்ட அந்த அமர்வில் 3 நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டதால் முத்தலாக் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு மாறியது.

உச்ச் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு சுமார் 396 பக்கங்களை கொண்டது. அந்த தீர்ப்பில் இஸ்லாமிய விவாகரத்து அமைப்பின் பல அம்சங்களையும் நீதிபதிகள் அங்கீகரித்தும் பாராட்டியும் இருக்கிறார்கள்.

குறிப்பாக,  ஒரு குடும்ப பிரச்சனை வழக்கிற்கு வருகிற போது இரண்டு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேரை நியமித்து வழக்கிற்கு மத்திஸ்துவம் செய்ய முதலில் முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தை நவீன காலத்தில் இப்போதுதான் நாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிற கருத்தை திருக்குர் ஆன் முன்பே கூறியிருக்கிறது என பாராட்டியிருக்கிறார்கள்.

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلاَحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا) النساء/35 "

குடும்ப பஞ்சாயத்து விவாகாரங்களில் ஈடுபட்ட யாருமே யோசிக்காத வழி இது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முத்தலாக்கின் நியதிகளை சரியாக புரிந்து கொள்ளாதது. அல்லது முஸ்லிம் சமூகத்தில் சில பேர் முத்தலாக்கை தவறாக பயன்படுத்தியதே முத்தலாக் விசயத்தில் நீதிமன்றத்தின் ஷரீஅத்திற்கு எதிரான கருத்திற்கு காரணமாகும்.

ஓட்டுக்கு காசு என்பது ஜனநாயகத்தை சீரழித்து வருகிற நிலையில் தார்மீக அடிப்ப்டையில் மட்டுமல்ல சமய ரீதியில்  அது குற்றம் என்பதை குர் ஆன் கூறுகிறது

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ

என்ற வசனத்தை மேற்கோள் காட்டுகிற போது இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடுகிற ஐயா! இப்படித்தான் ஐயா மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மனம் திற்க்கிறார்கள்.

நமது மாநிலத்தில் மது ஆறாக ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கெதிராக போராடுகிற அனைவரும்

فقد ورد عن ابن عباس – رضي الله عنْهما –: أنَّ رسول الله - صلى الله عليه وسلَّم - قال: ((اجتنبوا الخمر فإنَّها مفتاح كلِّ شر))

قال عثمان - رضي الله عنه - : ((اجتنِبوا الخمر؛ فإنَّها أمُّ الخبائث))؛ النَّسائي



   என்ற இஸ்லாமின் கருத்துக்களை எடுத்து வைக்க தவறுவதில்லை,                        இந்த நூற்றாண்டில் இந்தியா கண்ட மிகப் பெரிய சமூக நீதிப் போராளியான ஈ வே ரா பெரியார் இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்து என்று கூறினார் என்றால் இருபதாம் நூற்றாண்டி சிக்கல் களுக்கும் இஸ்லாமே தீர்வு என்ற இஸ்லாமின் எதார்தத்தையே அது பறை சாற்று கிறது.

இந்த உலகின் நேர்வழி மொத்ததிற்கும் இஸ்லாம் சொந்தம் கொண்டாடுகிறது.

إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
அந்த வழியை உறுதியாக கடைபிடித்து நிற்கையில் நிச்சயம் வெற்றியும் நிம்மதியும் முஸ்லிம் உம்மத்திற்கே உரியது.

தீன் நம்மிடம் இருக்க எந்த தீய சக்திகளை கண்டும் முஸ்லிம்கள் பயப்பட வேண்டியதில்லை.

தீன் நம்மிடம் செழிப்பாக வெளிப்படுகிற ஒவ்வொரு கட்டத்திலும் எதிரிகளுக்கு அது கிலியை ஏற்படுத்தும்.


பத்ரு களத்தில் காதிஸிய்யா மைதானத்தில் அவ்ரங்க சீப்பின் யுத்தங்களில் எதிரிகள் மிரண்டு நின்றது முஸ்லிம்களின் இஸ்லாமிய இயல்புகளை கண்டுதானே தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை கண்டல்ல.

இத்தகைய எண்ணம் வருவதற்கு  தீனில் என்ன இல்லை என்ற சிந்தனை நம்மிடம் வர வேண்டும். 


2 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் ஆச்சிரியமான,மனநிறைவான செய்திகள். இன்றைய ஜும்ஆ உம்மத்திற்கு பயனுல்லதாக தங்களின் கட்டுரை அமைந்திற்கிறது அருமை

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete