வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 29, 2018

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் வழிகள்

இந்த மாதங்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் பரக்கத்த்தை தேடினார்கள்.
இதில் பொருளாதார பரக்கத்தும் அடங்கும்.
ஆனால் அது பிரதானமல்ல
ஏனெனில் எதைச் சந்திக்க போகிறோமோ அதில் பரக்கத் அவசியம்
தேர்வை சந்திக்கிற போது இல்மில், திருமணத்தின் போது அழகில் ஆரோக்கியத்தில் .
நாம் ரமலானை சந்திக்க தயாராகிறோம். அப்படியானால்
அருளாதாரத்தில் பரக்கத் நிறைய வேண்டும்.
அதன் மூலம் ரமலானை சந்திக்க வேண்டும்.
எனவே இந்த மாதங்களில் அல்லாஹ்வின் அருளை பெறுலுக்குரிய நன்மையான காரியங்களை அதிகமாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் அன்பை பெருவதற்குரிய சில வழிகளை அறிஞர்கள் கூறுகிறார்க:. 
இந்தப் புனித மாதங்களை பரக்கத்தானதாக ஆக்கிக் கொள்ள இந்த வழிமுறைகளை நாம் செயல்படுத்தலாம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
قراة القرآن بالتدبر والتفهم
குர் ஆன் ஓதுதல் அல்லாஹ்வோடு பேசுவதாகும்.
ஒரு வரை நேசிக்கிறோம் என்றால் அவரோடு பேசுவதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும்.
இன்றைய குடும்ப பிரச்சனைகளுக்கான ஒரு முக்கியக் காரணம்.
குடும்பத் தலைவர்கள் மனைவியோடு அல்ல்து பிள்ளைகளோடு பேச நேரம் ஒதுக்காமல் இருப்பது என மனநல மருத்துவர்கள் கூறூகிறார்கள். .
ஒருவர் தனது மனைவிக்கு உடல் நல்ம் இல்லை என பல மருத்துவர்களிடமும் சென்றார். கடைசியில் ஒரு அனுபவசாலி இருவரிடமும் தனித்தனியாக விசாரனை செய்து விட்டு கணவரிடம் கூறினார் . உங்கள் மனைவியை எளிதாக குணப்படுத்தி விடலாம். நீங்க்ள் தினசரி கால் மணி நேரம் அவருக்கு ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். என்ன பயிற்சி டாக்டர் ? எவ்வளவு செலவாகும்! யாரிடம் செல்ல வேண்டும் ? என்றார் கணவர்.
மருத்துவர் சொன்னார் இது ஒரு பைசா செலவில்லாத பயிற்சி. நீங்கள் உங்கள் மனைவியுடன் உட்கார்ந்து தினமும் ஒரு கால் மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு மாதத்தில் மாற்றத்தைப் பார்க்கலாம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு இடையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அனைத்து மனைவிமார்களிடமும் சென்று பேசிக் கொண்டிருப்பார்கள்.
அன்பானவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது போல மகிழ்ச்சியும் ஆறுதலும் நெருக்கத்தை பெறுவதும் வேறெதிலும் இல்லை.
அல்லாஹ்வோடு அத்தகைய உறவை பராமரிக்க ஒரே வழி குர் ஆனை ஓதுவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
هو حبل الله المتين 
عبد الله قال : قال رسول الله - صلى الله عليه وسلم  إن هذا القرآن هو حبل الله المتين وهو النور المبين وهو الشفاء النافع عصمة لمن تمسك به ونجاة لمن اتبعه -  திர்மிதி

இறைநேசர்கள் ஷைகுமார்கள் எப்போதும் குர் ஆனை ஒதிக் கொண்டிருக்க இதுவே காரணன், இது அல்லாஹ்வோடு பேசிக் கொண்டிருப்பது. அல்லாஹ்வோடு தொடர்பு கொள்வது.

இன்றைய ஸ்மார்ட் போன்களின் உலகில் நமது பார்வையும் கவனமும் அடிக்கொருதடவை அதை பார்த்துக் கொள்கிறது. அதில் தேவையானவர்களுடன் நட்பு கொள்கிறது. மணிக்கணக்கில் அன்லிமிடட் கால் கள் பேச வைக்கிறது அல்லவா ?

அல்லாஹ்வோடு தொடர்பை  நெருக்கமாக்கிக் கொள்ள் இந்த குர் ஆனிய பேச்சு நிச்சயமாக நமக்கு உதவும்.

குர் ஆனை அர்த்தம் புரிந்து அதன் ஆழங்களை சிந்திக்கவும் பழக வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் பேச்சில் காணப்படும் ஆச்சரியமான அம்சங்கள் புலப்படும். நமது இன்பமும் ஆச்சரியமும் அதிகரிக்கும்.

இந்த நிலை ஏற்படாமல் நமது இதயத்தை நாம் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது.

فَلا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا [محمد:24].
கொள்ளைக் காரராக இருந்து புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் ஒரு வீட்டை கொள்ளையிடச் சென்ற போது
 أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ (16

என்ற ஆயத் ஓதப் படுவதை கேட்டார். திருந்தினார் . ஒரு பெரும் இறை நேசராக மாறினார்,
என்றால் அதற்கு காரணம் அவருக்கு அந்த வசனங்களின் கருத்துப் புரிந்ததால் தானே!

வாரந்தோறும் கஃபு ஓதுகிறோம்.  அது நமது வாழ்க்கையில் நிதானத்தை தர வேண்டும் என்றால்

وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا (32كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِم مِّنْهُ شَيْئًا ۚ وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا (33)وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا (34) وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَٰذِهِ أَبَدًا (35وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا(36قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37لَّٰكِنَّا هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا (38وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ۚ إِن تَرَنِ أَنَا أَقَلَّ مِنكَ مَالًا وَوَلَدًا (39فَعَسَىٰ رَبِّي أَن يُؤْتِيَنِ خَيْرًا مِّن جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِّنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا (40أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَن تَسْتَطِيعَ لَهُ طَلَبًا (41وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَىٰ مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا (42وَلَمْ تَكُن لَّهُ فِئَةٌ يَنصُرُونَهُ مِن دُونِ اللَّهِ وَمَا كَانَ مُنتَصِرًا (43هُنَالِكَ الْوَلَايَةُ لِلَّهِ الْحَقِّ ۚ هُوَ خَيْرٌ ثَوَابًا وَخَيْرٌ عُقْبًا (44)
நம் கைவசம் இருப்பது எதுவும் அல்லாஹிவினுடையது. எந்த நிமிடத்திலும் அது பறிக்கப் பட வாய்ப்பிருக்கிறது. அல்லாஹ் கிருபை செய்தால் மட்டுமே எந்தச் சூழலிலும் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற செய்தியை இந்த வசனத்தின் கருத்தை சிந்திக்காமல் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்.

எனவே குர் ஆனை அறிந்து தெளிந்து சிந்தித்து உணருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அது அல்லாஹ்வின் நெருக்கத்தை மேலும் அதிகப் படுத்தும்


அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற இரண்டாம் வழி
التقرب إلي الله بالنوافل

எந்த ஒரு நேசரும் தனது நேசருக்காக விசேசமாக என்ன செய்கிறார் என்பது அவர்களுக்கிடையேயேன அன்பிற்கான அளவீடாகும்.

வெளியூருக்கு சென்று திரும்புகிற ஒருவர் தனது மனைவிக்காக அல்லது மகளுக்காக தனியாக / இரகசியமாக ஒரு அவர் விரும்பும் ஒரு பொருளை வாங்கி வருவார் எனில் இருவருக்கிடையேயுள்ள நெருக்கம் அதிகரிக்கும் அல்லவா ?

நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்று விருந்து  சாப்பிடுகிற போது தனது மனைவியரின் பசியையும் கவனத்தில் கொள்வார்கள், அவர்களுக்கும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்வார்கள் ,அது போல பாத்திமா அம்மா தனக்கு உணவு கிடைத்த போது அதை தந்தைக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள் . இது இவர்களுக்கிடையே அலாதியான அன்பிற்கும் நெருக்கத்திற்கும் காரணமாகியது,

நேசருக்காக நேசர் என்ன செய்கிறார் என்பது மிகுந்த கவனத்திற்குரியது.

அல்லாஹ்வின் நேசத்தை பெருவதற்கு நபிலான அதுவும் இரகசியமான நபில் வணக்கத்தை விட வேறு சிறந்த வழி கிடையாது,

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ "


தஹஜ்ஜுத், இஷ்ராக், ஒளுவிற்கான இரண்டு ரகாத் நபில் போன்ற நபில் தொழுகைகளை இந்த நாட்களில் அதிகமாக நிறைவேற்ற முயற்சி செய்வோம்.
பாரிக் லனா பீ ரஜப் என்ற துஆ விற்கு அது வலுச் சேற்பதாக அமையும்.,

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற மூன்றாம் வழி

دوام ذكره علي كل حال باللسان والقلب

நேசர்களை நேசர்களின் பெயர்ளையும் அவர்களது சிறப்புக்களையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள், அது நேசத்தின் கணத்தை வெளிப்படுத்தும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மனைவியின் பெயரைச் சுருக்கி ஆயிஸ் என்பார்கள், ஹுமைரா என்பார்கள்.
மக்களிடையே அன்பை அதிக்கரிக்க இந்த திக்ர் உதவு வது போல அல்லாஹ்வை திக்ரு செய்வது அவனது நட்பை நெருக்கமாக்குகிறது.  

ஒரு தாய் தனது மகன இறந்து போன பத்து ஆண்டுகள் கழித்தும் அதே மலர்ச்சியோடு மகனை பற்றிய செய்திகளை பரிமாறுவார், அதே போல காதல் கணவனை இழந்த மனைவி வாயைத் திறந்தால் தனது கணவரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருக்க மாட்டாள் .

நமது நாவில் அல்லாஹ்வின் திக்ரு இடம் பெறாத நிமிடம் இருக்க கூடாது.

عن عبد الله بن بسر رضي الله عنه، قال (لما شكا الرجل حاله قال: يا رسول الله! إن شعائر الإسلام قد كثرت عليَّ فأخبرني بأمر أتشبَّثُ (أتمسكبه، قال: لا يزال لسانك رطباً من ذكر الله) رواه الترمذي

فقال: (ألا أنبئكم بخير أعمالكم وأرضاها عند مليككم، وأرفعها في درجاتكم، وخير لكم من إعطاء الذهب والورِق(الفضة)، ومن أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم؟، قالوا: وما ذاك يا رسول الله؟، قال: ذكر الله) رواه ابن ماجه

முன்னோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்யுங்கள்
حتي يقال إنه مجنون

திருக்குர் ஆனில் ஒரு இடத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கூறுகிறான்.

திக்ரிலேயே ஒதுங்கிக் கொள்
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا

அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்வது மற்ற படைப்புகளை விட்டும் நம்மை விடுவித்து விடுகிறது.
இது அல்லாஹ்வின் நெருக்கத்தை இறுக்கி வைக்கிறது. வைக்காதா என்ன ?

நீங்கள் நேசிப்பவர் உங்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பார் எனில் என்ன நடக்கும் ? அது வே அல்லாஹ்வை நெருக்கமாக்குவதிலும் நடக்கும்.

இது இந்தப் புனித மாதங்களை பரக்கத்திற்கு காரணமாக்கிக் கொள்ள எளிய வழி
மற்ற நாட்களை  விட அதிகம் திக்ருகளில் ஈடுபடுவோம்.
சும்மா இருக்கையில், தொழுகைக்கு காத்திருக்கையில், தூங்குவதற்கு முன்பு  நமக்குத் தெரிந்த திக்ருகளை அதிகமாக செய்யலாம். அல்லாஹ் இந்த ரஜபையும் ஷஃபானையும் நம்க்கு பரக்கத்தானதாக ஆக்குவான்.

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற நான்காம் வழி

அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நமது விருப்பததை விட அதிக முக்கியத்துவம் அளிப்பது.

إيثار محابه علي محابك عند غلبات الهوي
ஆசைகளின் தூண்டுதலில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் இருப்பது.

நாம் நேசிப்பவருக்கு பிடித்த மாதிரி ஆடை அணிந்து கொள்கிறோம். பேசுகிறோம். நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்கிறோம்.
சிகரெட் குடிக்காமல் தவிர்க்கிறோம். தலையை படிய வாரிக் கொள்கிறோம். மானரிசங்களை மாற்றிக் கொள்கிறோம். அவருக்கு பிடிக்கதவரோடு தொடர்பை தவிர்த்து விடுகிறோம் அல்லவா ?
அது போலவே அல்லாஹ் வின் நெருக்கத்தை பெற அவனுக்கு பிடித்தமானதை செய்ய முயற்சிக்க வேண்டும் . நம்முடைய விருப்பத்தை விட அவனுடைய விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற ஐந்தாம்  வழி
மனம் நெகிழ்ந்து அல்லாஹ்வை சரணடைதல் . யா அல்லாஹ் எனக்கு உன்னைத் தவிர வேறு யாருமில்லை என விழுதல்’’

அன்பையும் நெருக்கத்தையும் பெற்றுத் தருவதில் இதற்கு நிகரான இடம் வேறு எதற்கும் இல்லை.

وهم من اعجبها إنكسار القلب بكليته بين يدي الله

உனக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று அம்மா செல்கிற போது அல்லது காதலி அல்லது காதலன் சொல்கிற போது அது எத்தகைய நெருக்கத்தை பெற்றுத்தருகிறதோ அதே போல யா அல்லாஹ் நீதான் எனக்கு என்று சொல்கிற போது அல்லாஹ் நமக்கு மிகவும் நெருக்கமாகிறான் .

அல்லாஹ் நெருக்கத்தை பெற அடியார்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிற போது . அல்ல்லாஹ் அவற்றை ஸ்கேன் வைத்து பரி சோதிப்பதில்லை;

இப்போதெல்லாம் பேஸ்புக்கில் காதலித்துக் கொள்கிறவர்கள் டிடக்டிவ் ஏஜென்ஸிகளை வைத்து உண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்க.

அதை அறிந்து கொள்ளாமல் ஏமாந்து போகிறவர்கள் பல்ர் உண்டு.

மேட்ரி மேனியல் விளமபரத்தில் மோசடியான தகவல்களை கொடுத்து திருமணம் செய்து கொள் வோர் எண்ணீக்கை அதிகரித்து இருக்கிறது.
இதற்கு சில இணைய தள ஏற்பாட்டாளர்களே துணை போகிறார்கள்.. இப்படி சிலரை சமீபத்தில் காவல் துறை கைது செய்தது நினைவிருக்கும்.

இன்றைய நவீன உலகில் நேசம் அறிவியல் பூர்வமாக துல்லியமாக ஸ்கேன் செய்யப்படுகிறது.
அல்லாஹ் அப்படி எல்லாம் ஸ்கேன் செய்வதில்லை. அல்லாஹ்வை நோக்கிய முயற்சியை தொடங்கினாலே அல்லாஹ் தனது  அன்பை நம்மீது பொழிகிறான்.

அல்லாஹ்வின் அன்புப் பார்வை நம்மீது விழுந்து விட்டால் ?

இந்த உலகில் வேறென்ன வேண்டும் !

இந்த புனித மாதங்களை நமக்கு பாக்கியமானதக் ஆக்கிக் கொள்ள இந்த வழிமுறைகளை முடிந்த வரை கடை பிடிப்போம். அல்லாஹ் ரஜைபிலும் ஷஃபானிலும் பரக்கத் செய்வானாக! ரம்லானை பயனுள்ளதாக ஆக்குவானாக!4 comments:

 1. Masha Allah அருமை உதாரணங்கள் மிக அருமை என் ரப்பை நெருங்கும் வழிகளை கற்றுத்தந்த தங்களுக்கு ஆயிரம் ஆயிரம் جزاك الله خيرا كثيرا في الدارين

  ReplyDelete
 2. அருமை,
  الله أكبر

  ReplyDelete
 3. அருமை,
  الله أكبر

  ReplyDelete
 4. அல்ஹம்துலில்லாஹ்

  அருமை ஹழரத் மிக மிக அருமை அல்லாஹ்வின் பொருந்துதலை பெற்றுக்கொள்ள சிறந்த நல்வழியை எளிய முறையில் போதித்திருக்கிறீர்கள்
  மாஷாஅல்லாஹ்...
  அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுக்கொள்ளும் அனைத்து வழிகளையும் கடைபிடிக்கும் நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் கருனையாளன் அல்லாஹ் வழங்கியருள்வானாக . ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
  தங்களுடைய முயற்சிகள் அனைத்தயும் அல்லாஹ் கபூல் செய்து பொருந்திக்கொள்வானாக.
  جزاك الله خيرا كثيرا في الدارين hazrath


  ReplyDelete