வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 08, 2018

கர்ப்பிணிகளுக்கு மரியாதை


 وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ

திருச்சியில் காவல்துறை ஆய்வாளர் காமராஜர் உதைத்தததில் டூவிலரில் பயணம் செய்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். என்ற செய்தியோடு தமிழகத்தில் இந்த ஆண்டு மகளிர் தினம் கடந்து சென்றுள்ளது. மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினமாகும்..’
காவல்துறையினர்  பணக்காரர்களுக்கு சலாம் போடுகிறவர்களாகவும் ,சாமாணிய மக்களை சங்கடப்படுத்துகிறவர்களாகவும் தொடர்ந்து நடந்து கொளவது நாட்டிற்கு நேர்ந்த பெரும் கேடு,
பெண்களை போற்றுவதாக அதிகம் பேசுகிற பகுதிகள் பலவற்றில் இப்படித்தான் பெண்களுக்கான மரியாதை தரப்படுகிறது,
கைநிறையச் சமபளம் கவர்ச்சியான ஆடைகள் பவிசான பாவனைகள் என மாற்றங்கள் பெருகிய போதும் பெண்களின் வாழ்வு ஆபத்தானதாகவே இருக்கிறது.,
பெண்களை அடக்குமுறை செய்வதாக இஸ்லாத்தின் மீது அவதூறு கிளப்புகிறார்களே, அந்த இஸ்லாம் தான் உண்மையில் பெண்களுக்கான பரிபூரண மரியாதையை வழங்குகிறது,
ஒவ்வொரு மகளிர் தினத்திலும் இஸ்லாம் போற்றப் பட வேண்டும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்த்தப் பட வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் விசயத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் சிறப்பானவை.
கர்ப்பினி இறந்து போனால் அவள் ஷஹீத் என்றார்கள் பெருமானார் (ஸல்)
قال صلى الله عليه وسلم : ( وَالمَرْأَةُ تَمُوتُ بِجُمعٍ شَهِيدة ) رواه أبو داود (3111) وصححه النووي في "شرح مسلم" (13/62) ، وقال : التي تموت بالولادة ، يعني ماتت مع شيء مجموع فيها غير منفصل عنها .
கர்ப்பமாகும் தகுதியுள்ள பெண்களே திருமணத்திற்கு சிறந்தவர்கள் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ ، وَإِنَّهَا لَا تَلِدُ ؛ أَفَأَتَزَوَّجُهَا ؟ 
قَالَ : لَا !! ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ : ( تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَرواه أبو داود (2050) والنسائي (3227)

எனவே ஒரு திருமண வாழ்வை தொடங்கும் போதே பிள்ளைகள் குறித்த சிந்தனை தம்பதிகளுக்கு அவசியம்.
நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை சிறப்பானவர்களாக வளர்க்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
இன்றைய உலகம் பிள்ளைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், பிள்ளைப் பேற்றை தள்ளி வைக்கவும், பிள்ளைகளே உருவாகாமல் தடுப்பதற்குமான வழிகளை சொல்லிக் கொடுக்கிறது.
இது மனித சமூகத்திற்கு எதிரான சிந்தனையாகும். விலங்குகளை இனப்பெருக்கவும் செய்ய நினைக்கிற மனிதன் மனிதர்களின் இனப் பெருக்கத்தை தவிர்க்க நினைப்பது கேவலமானது.
பிள்ளைகளால் பெருளாதாரச் சிரமம் ஏற்படும் என  நினைக்க கூடாது.  
Ø     وما من دابة إلا على الله رزقها )
Ø     وكأين من دابة لاتحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم )
Ø     إن الله هو الرزاق ذو القوة المتين
Ø     فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له
Ø     ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم 
Ø     ومن يتوكل على الله فهو حسبه

பராமரிப்பு நோக்கிற்காக உடல் நலம் பேணுதலுக்காக கர்ப்பத்தை தடுக்கும் வழிகளை (மாத்திரைகள் உள்ளிட்ட மற்ற உபகரணங்களை பயன்படுத்த அனுமதி உண்டு.,
 قول جابر بن عبد الله رضي الله عنهما : " كُنَّا نَعْزِلُ وَالقُرْآنُ يَنْزِلُ " رواه البخاري (5208) ،

பிற சமூகங்களின் கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில், அது போல வாழ வேண்டும் என்ற நினைப்பில் குழந்தைப் பேற்றை தவிர்ப்பது கூடாது என இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா வெளியிட்டுள்ளார்கள். இந்த சமுதாயத்தின் பண்பாடு அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகும் என அவர்கள் கூறியுள்ளனர்,

இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவுரை

தற்காலத்தில் 35 வயதுக்கு மேல் கர்ப்பம் உருவாவது வெகுவாக குறைந்து விட்டது.  ஆகவே இளம் பருவத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் கிடைக்கும் போது பெற்றுக் கொள்ளவதே சிறந்தது. அதை சிரமமாக கருத வேண்டாம்.

இளமையின் எல்லையில் நிற்கிற பல தம்பதிகள் குழந்தைகளுக்காக ஏங்குவதை அதிகம் காண முடிகிறது.

திருமணம் ஆனதும் குழந்தை இல்லையா ? கவலை வேண்டாம்.

தற்காலத்தில் திருமணம் ஆனவு 10 மாதத்தில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள், அது தவறில்லை.
ஆனால் ஒரு வேளை கருத்தரிக்க தாமதிக்கிற போது இது குறித்து தமபதிகளை மனச்சங்கடத்திற்குள்ளாக்குவது தவிர்க்கப் பட வேண்டும்.

ஒரு முஸ்லிமுடைய இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது சிறந்த செயல்

وفي رواية للطبراني " " إن أحب الاعمال إلى الله تعالى بعد الفرائض : إدخال السرور على المسلم ، كسوت عورته ، أو أشبعت جوعته ، أو قضيت حاجته "

وللطبراني أيضا عن عائشة رضي الله عنها " من أدخل على أهل بيت من المسلمين سرورا لم يرض الله ثوابا دون الجنة "

 நபிமார்கள் பலரும் வயோதிகத்தில் கூட குழந்தையை பெற்றிருக்கிறார்கள்.

قال ابن كثير في قصص الأنبياء عن هاجروولدته ولإبراهيم من العمر ست وثمانون سنة قبل مولد إسحاق بثلاث عشرة سنة،

நமது கேள்விக்ளால் மற்றவர்கள் துன்பம் அடைந்து விடாத வாறு பார்த்துக் கொள்ளனும்.
المسلم من سلم المسلمون من لسانه ويده

உன் கூட கல்யாண ஆனவங்களுக்கெல்லாம் குழந்தை பிறந்திருச்சு. நீ கர்ப்பம் தரிக்கலையா ? என்பது போன்ற கேள்விகள் இளம் பெணகளை துன்புறுத்தி விடக் கூடியவை.

இன்னொரு முக்கிய விசயம் கருத்தரித்தல் என்பது முழுக்க பெண்ணச் சார்ந்த விசயம் மட்டும் அல்ல. ஆண்களுக்கே இதில் முக்கியப பங்கு இருக்கிறது.

இன்றைய உணவுப் பழக்க வழக்கத்தால் கருப்பை குழாயில் அடைப்பு அல்லது விந்தணுக்களில் குறைவு உடல் பருமன் போன்ற காரணங்களால் குழந்தை பேறு தள்ளிப் போகிறது.

ஓரளவு காத்திருப்பிற்குப் பின் இளமையின் நீண்ட நாட்கள் தள்ளிப் போகும் எனில் மருத்துவர்களை அணுகி விடுவது நல்லதே!

இன்றைய மருத்து முறையில் குழந்தைப் பேற்றுக்காண பல்வேறு நடைமூறைகள் வந்து விட்டன. அவற்றில் பலவற்றை மார்க்கம் ஆதரிக்கிறது. அந்த வழிகளை தம்பதிகள் கையாளலாம்.

கணவனுடைய விந்தணுவை வெளியே எடுத்து பெண்ணுடையை சினை முட்டையையை வெளியே எடுத்து டியூபில் வைத்து கருவை உருவாக்கி மீண்டும் மனைவியின் கருவுக்குள் வைத்து குழந்தையை வளரச் செய்யும் டெஸ்ட் ட்யூப் பேபி நடை முறை இன்று பரவலாகி வருகிறது.

எடுத்த எடுப்பிலேயே இத்தகைய மருத்துவ மனைகளுக்குச் சென்று விடாமல் தேவை ஏற்படும் எனில் இந்த சிகிட்சை முறையை நாடலாம்.
இதற்கு இஸ்லாத்தில் சில நிபந்தனைகள் இருக்கிறது முக்குயமாக அவற்றை கவனிக்க வேண்டும்.

மனைவியின் கர்ப்பத்திற்கு உள்ளே செலுத்தப் படும் விந்தனு கண்டிப்பாக கணவனுடையதாகவே இருக்க இருக்க வேண்டும். (இது விசயத்தில் மருத்துவ மனைகளின் நம்பகத்தன்மை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்).

விந்தணுவை வெளியேற்றுகையில் கணவன் மனைவியின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் தனது கையால் விந்தை வெளியேற்றக் கூடாது.   

குழந்தை தாமததத்திற்கான காரணத்தை பெண்ணின் மீதே சுமத்தாமல் இருவரும் டெஸ்டுகளுக்கு சம்மதிக்கா வேண்டும்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இப்போது மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.
குழந்தை பேறு தாமதமாகிறது எனில் அதற்கு டெஸ்ட் டியூப் பேபி நடை முறை மட்டுமே தீர்வு என்று இல்லை. சில சந்தர்ப்பங்களில் ஒரு ஊசியின் மூலமே கருத்தரிப்பு செய்து விட முடியும். சரியான மருத்துவ ஆலோசனை கேட்டால் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.
பல நூநூறு வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட மார்க்க சட்ட நூல்களில் கணவனுடைய விந்தனு மரியாதையாக வெளியே எடுக்கப் பட்டு மனைவியின் கருவறைக்கு செலுத்தப் படுமானால் வாரிசுரிமை உண்டாகும் என்ற சட்டம் சொல்லப் பட்டிகிறது.
அப்போது இந்தச் சட்டத்தை கேள்விப்பட்ட மருத்துவர்கள் கேலி பேசினார்கள். விந்தணு வெளியே எடுக்கப் பட்டால் காற்று அதை கெடுத்து விடும் என்றார்கள்.
ஆனால் தற்காலத்தில் இமாம்களின் ஆய்வு மெய்ப் படுத்தப் பட்டுள்ளது.

ஆய்வுகள் சரியான முடிவுகளை தராவிட்டாலும் தம்பதிகள் விரக்தியடையத் தேவையில்லை.அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (101
நபி ஜகரிய்யா அலை அவர்களுக்கு அவர்களது முதுமையில் அல்லாஹ் குழந்தையை கொடுத்தான்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தனது 60 வது வயதில் இபுறாகீம் ரலி அவர்களை பெற்றார்கள்.

ஒருவேளை குழந்தை பேறுக்காண சாத்தியங்கள் அற்வே இல்லை எனில் தாமதிக்காமல் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளுதல் அறிவுடைமையாகும்.

முஹம்மது நபி (ஸள்) அவர்கள் ஜைது பின் ஹாரிதா ரலி அவர்களை தன்னுடைய மகனாக தத்தெடுத்தார்கள்.

அவருடை பெயர் மட்டுமே குர் ஆனில் இடம் பெற்றிருக்கிறது.
பெருமானாரின் தத்தெடுப்புக் கிடைத்த மரியாதையாகவும் இதைப் பார்க்கலாம்.

தத்தெடுக்கிற போது இரண்டு தரப்புக்கும் ஆறுதலும் துணையும் கிடைக்கிறது.

எந்த வகையிலும் ஒரு குழந்தைக்கு சொந்தமாகுதல் என்பது மிகப் பெரிய அருள் என்கிற போது அதற்கு காரணமான கருவுற்ற நிலையை கவனமாக பராமரிக்க வேண்டியது மக்களின் கடமை
கருவுற்ற பெண்ணை காலால் எட்டி உதைத்தல் என்பது கொடூரமானது.

கருவுற்ற பெண் தாக்கப் பட்டதில் இஸ்லாமிய வரலாறு கொடூரமான காட்சியை சந்திதிதிருகிறது.

பெருமானாருடைய அருமை மகளார்  அன்னை ஜைனப் அம்மையார் ஹிஜ்ரத்திற்கு இரகசியமாக புறப்பட்ட போது அதை கண்டு கொண்ட எதிரி அவர் மீது ஈட்டி எறிவது போல பாவனை செய்தான். அதைக் கண்டு பயந்து ஜைனப் அம்மையார் ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்தார்கள் அதனால் ஜைனப் அம்மையாரின் கர்ப்பம் கலைந்தது. மிகுந்த சிரமத்தோடு அவர்கள் மதீனா வந்து சேர்ந்தார்கள். ‘

 وكان أول من سبق إليها هبار بن الأسود بن المطلب بن أسد بن عبد العزى الفهري فروعها هبار بالرمح وهي في الهودج، وكانت حاملا
 காவல் துறை அதிகாரி கர்ப்பிணி என்று தெரிந்தே உதைத்திருக்க மாட்டார்.
பெண்களை எச்சரிப்பதற்கு முன்னால் அவர்களது நிலையை அறிந்து கொள்ள மார்க்கம் உத்தரவிட்டிருக்கிறது.
ஒரு பெண்ணிற்கு தண்டனை அளிப்பதற்கு முன்னால் இதை கவனிக்க வேண்டும்,.
இது பெருமானார் கற்றுக் கொடுத்த நடைமுறை

கருவுற்ற பெண்ணிடம் மார்க்கம் பலவகையிலும் கருணை காட்டியிருக்கிறது.
அவள் நோன்பை விட்டுக் கொள்ள அனுமதித்திறது.
கருவுற்ற காலத்தில் ஒரு பெண்ணை தலாக் விடக் கூடாது.

கருவுற்ற பெண்ணை பேணுவது கணவனின் கடமை மட்டுமல்ல. சமுதாயத்தின் கடமையுமாகும்.

அல்லாஹ் சமுதாயத்தில் குழந்தைகளுக்காக ஏங்கும் தம்பதிகளுக்கு அவர்கள் விரும்பும் குழந்தைகளை சாலிஹானவையாக தந்தருள்வானாக! 

6 comments:

 1. Anonymous8:25 PM

  காலத்தின் குரலாய் கட்டுரை அமைந்துள்ளது

  ReplyDelete
 2. ما شاء الله ! بارك الله !

  ReplyDelete
 3. அருமையான குறிப்பு

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். சமகால நிகழ்வுகளை முன் வைத்து பயான் குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خيرا كثيرا يا أستاذ

  ReplyDelete