வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 09, 2018

பொதுவாழ்வு மரியாதைக்குரியது,



தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதி காலமானார். அவருக்கு உரிய உயரிய இறுதி மரியாதை செய்யப் பட்டது, முழு ராணுவ மரியாதையுடன் அவருடைய உடல் அவரும் அவருடைய தொண்டர்களும் விரும்பிய படி அறிஞர் அண்ணாவின் சமாதி அருகே மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப் பட்டது.  ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தரப்படுகிற அனைத்து மரியாதைகளும் அவருக்கு தரப்பட்டுள்ளன. அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரித்த்து. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டன. ஜனாதிபதி முதல் பல மாநில முதல்வர்கள் அவரது இறுதியாத்திரையில் பங்கேற்றனர். சுமார் 20 மாநிலங்களில் அரசு விடுமுறை அளிக்கப் பட்டது
கருணாநிதி ஆட்சியில் இல்லாத நேரத்தில் இறந்து போனால் அவருக்கு உரிய மரியாதை தரப்படுமா என்ற கேள்வி அனைத்து தரப்பினரிட்த்திலும் இருந்த்து. சென்னை மெரீனா கடற்கரையில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் பெரும்பாலான மக்கள் நினைத்தனர்.
ஆனால் தடைகளை கடந்து தனக்குரிய மரியாதையை  கருணாநிதி பெற்றுக் கொண்டார். மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப் பட்டிருக்கிற எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு கருணாந்திக்கு கிடைத்திருக்கிறது ஆட்சியதிகாரத்தில் இல்லாத நிலையிலும்  ஒரு தேசிய  தலைவருக்குரிய மரியாதை அவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
கடற்கரையில் ஓய்வெடுக்க அவருக்கு இடம் கிடைத்தது.  அவரோடு கொள்கைரீதியாக கடுமையாக வேறுபட்டவர்கள் கூட மனம் நெகிழ்ந்து மரியாதை செய்தனர். தங்களது தலைவருக்கு இவ்வளவு மரியாதை கிடைக்கும் என்று அவரது கட்சிக்கார்ர்கள் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.,
கருணாநிதி அவர்களுக்கு கிடைத்த இந்த கருத்துவேறுபாடற்ற மரியாதைக்கு பல காரணங்கள் இருக்கலாம் . அவற்றில் முக்கியமானது.
அவருடை நீண்ட பொது வாழ்வு.
தன் வீடு. தன் குடும்பம் என்று மட்டுமே வாழ்கிறவர்கள் சாமாணியர்கள். தன் சமூகத்தின் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றப் பாடுபடுகிறவர்களே சிறப்பான மனிதர்கள்.
இஸ்லாம் சிறப்பான மனித வாழ்க்கைக்கு குறிப்பிடுகிற மிக முக்கிய மான வழிகாட்டுதல் இது.
நன்மைய ஏவி தீமையை தடுப்பது என்பது பொதுவாழ்வின் சுருக்கமான அடையாளமாகும். சிறந்த சமுதாயத்தின் முதல் இலக்கணமாக அல்லாஹ் இதை குறிப்பிடுகிறான.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பொதுச் சேவைகள் காரணமாகவே மக்கள் மத்தியில் அல் அமீன் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார்கள்,
ஹிரா மலைக்குகைகள் ஜிப்ரயீல் அலை அவர்களை முதன்முறையாக சந்தித்த்த அதிச்சியில் இருந்த பெருமானார் (ஸல் ) அவர்களை தேற்றுவதற்காக கதீஜா ரலி அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளிலும் பெருமானாரின் இயல்பு வெளிப்படுகிறது,
كلا، أبشر، فوالله لا يخزيك الله أبدا؛ إنك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتقري الضيف، وتعين على نوائب الحق

நபித்துவம் பெறுவதற்கு முன் மக்காவில் நீதி பெற்றுத்தருவதற்காக சிலர் சேர்ந்து சபதம் எடுத்த்துக் கொண்ட ஹில்புல் புலூல் எனும் அமைப்பில் நபி (ஸல்) அவர்கள் தானும் பங்கெடுத்துக் கொண்ட்டர்கள் என்பது மட்டுமல்ல இஸ்லாத்திற்குப் பிறகும் அத்தகைய  ஒரு பொதுச் சேவை அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுமானால் அதை தான் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறீனார்கள்.

பொதுமக்களின் எந்த தேவையையும் நிறைவேற்றத் தயாராக இருப்பது . கூடுமானாவரை நிறைவாற்றித் தர முயற்சிப்பது.  பொது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.

فعن جابر بن عبدالله - رضِي الله عنْهما - قال: ما سُئِل رسول الله - صلَّى الله عليه وسلَّم - شيئًا قطُّ فقال: لا

وكان - صلَّى الله عليه وسلَّم - لا يأنَفُ أن يمشي مع الأرملة والمسكين فيقضي حاجتهم.


عن أنس بن مالك - رضِي الله عنْه -

أنَّ امرأةً كان في عقلها شيءٌ، فقالت: يا رسول الله، إنِّي لي إليك حاجَة، فقال: ((يا أمَّ فلان، انظُرِي أي السكك شئتِ حتى أقضي لك حاجتك))،  مسلم


கருணாநிதி மக்களின் தேவைகள் பலவற்றை நிற்றவேற்றிக் கொடுத்தார்.

குடிசைமாற்று வீடுகள்.
சமத்துவ புரஙகள்
பாலங்கள்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
ஒரு ரூபாயுக்கு ஒரு கிலோ அரிசி
என பல அரிய சேவைகளுக்கு சொந்தக் காரர் அவர்

எந்தப் பொதுச் சேவையும் தன் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

 عن عروة  قال: قلتُ لعائشة: ما كان رسول الله - صلَّى الله عليه وسلَّم - يصنع في بيته؟ قالت: يخيط ثوبَه ويخصف نعلَه، ويعمَل ما يعمَل الرجال في بيوتهم، وفي روايةٍ لابن حبَّان: ما يعمَل أحدكم في بيته.


கருணாந்தி தனது குடும்பத்தையும் கவனமாக கவனித்துக் கொண்டார். குடும்பத்தின் தேவைகளுக்கா அவர் அதிகம் பயன்பெற்றார் என்ற விமர்சனம் ஒரு புறம் இருக்கிறது என்றாலும் .

பொதுவாழ்வில் தனது  குடும்ப உறவுகளின் தொடர்பை அவர் விடவில்லை.

மிசாவில் சிறை சென்றவர்களுக்காக கட்சி சார்பிப் ஒவ்வொருவருக்கும் இரு நூறு ரூபாய் அனுப்ப்ப் பட்டது. ஆனால் வெற்றி கொண்டான் மனைவிக்கு ஒரு ரூபாய் மட்டுமே அனுப்பப் பட்டது. வெற்றி கொண்டான் இது பற்றி கருணாநிதியிடம் கேட்டார். அவர் சொன்னார். இன்னொரு நூறு ரூபாயை உன இரண்டாவது மனைவிக்கு அனுப்பினேன். நானும் இரண்டு மனைவி வைத்திருப்பவன் தானே

தமிழ் நாடு தமிழ் மக்கள் என்ற அவருடைய சிந்தனை நாட்டிற்கும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பல நன்மைகளை செய்திருக்கிறது.

உடல் ஊனமுற்றோர். பிற்படுத்தப் பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் உடனான அவருடை தொடர்பும்  நெருக்கமும் அவர் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.   
கருணாநிதியின்  இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த பலரும் அவர் பிற்படுத்தப் பட்டோருக்காக பாடுபட்டவர் என்று குறிப்பிட்ட்தை கவனிக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த்து. முஸ்லிம்களுக்கு அவர் செய்த ஒரு முக்கிய உதவியாக பார்க்கப் படுகிறது.

அவருடைய சில செயல்கள் கண்டிப்பாக விமர்சனத்திற்குரியவை தான் என்றாலும் அவற்றை தாண்டிய அவரது சமூக அக்கறை நிச்சயம் கவனத்திற்குரியதாகும்.

மூஸா அலை அவர்களின் சாபத்திற்குள்ளான சாமிரி குறித்து தப்ஸீர் ரூஹுல் ம ஆனியில் இப்படி ஒரு செய்தி உண்டு.

காலைக் கன்றை வணங்கிய அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்ட்து. ஆனால் அதற்கு தூண்டிய சாமிரிக்கு ஒரு சாபம் மட்டுமே வழங்கப் பட்ட்து . அது  ஏன் ?

هم  موسي بفتله ولكن رده الله  لانه كان سخيا

ஒரு வள்ளலாக அவன் மக்களது தேவைகளை நிறைவேற்றுபவனாக இருந்தான் எனவே மரண தண்டை அவனுக்கு தரப்பட வில்லை. அவனது பொது வாழ்வு அவனுக்கு பாதுகாப்பை தந்த்து.

எனவே பொது வாழ்வில் ஈடுபடுகிறவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் தன்னலம் இன்றி செய்த பொதுக்காரியங்கள் நிச்சயமாக அவர்களை உயர்த்தும் அந்த உயர்வை தான் கலைஞர் கருணாநிதி பெற்றிருக்கிறார்.

பொதுப்பணியாற்றுதற்கு ஒரு உந்து சக்தியாக அவரது வாழ்வு திகழ்கிறது.

இந்திய நாடு இந்துத்துவ தீவிரவாத்த்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற சூழலில் அதை தனி ஒரு வராக தடுத்து நிறுத்துகிற சக்தி அவரிடம் இருந்த்து.

அவருடைய இழப்பு இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஒரு பேரிழப்பாகும்.

முஸ்லிம் சமுதாயம் இந்த வகையில் கருணாநிதியின் மரணத்தில் அதிக கவலை கொள்ள வேண்டியிருக்கிறது..

அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். அல்லாஹ் சிறந்த பதில்களை தருவதில் கைதேர்ந்தவன்.

பொது வாழ்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். அது நமது அந்தஸ்தை பாதுகாத்து விடும்.

முஸ்லிம்களுக்கு இது இயல்பாகவே போதிக்கப் பட்டிருக்கிறது.

தெருவில் கிடக்கிற முள்ளை அகற்றுவது ஈமானின் அடி நிலை பண்பு என நபி (ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நமது சமூகத்திற்கு நாம் என்ன செய்ய முடிய்வும் என்று யோசிப்போம். என்ன தேவை என்று ஆராய்வோம். வாழிகள் தானாக பிறக்கும் .
 நம்மால் முடிந்த பொதுச் சேவைகளை செய்வோ.ம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
from madina munawwara
abdul azeez baqaavi


No comments:

Post a Comment