வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 03, 2019

அல்லாஹ் வைத்த செக்!


இந்திய அரசியலில் நீதி வெற்றி பெறவும் அநீதி தோற்கவும் அல்லாஹ் செய்த சமீபத்திய ஏற்பாடு ,சபரி மலைப் பிரச்சனை .

இந்திய குடும்ப வியல் நீதிமன்றங்களில்  நிறைந்து கிடக்கிற விவாவரத்து வழக்குகளில்  முஸ்லிம்களின் வழக்குகள் ஒரு சதவீதம் கூட இல்லை அதிலும் முத்தலாக் பிரச்சனை மிக மிக குறைவானதாக இருக்கிற நிலையில் மத்தியை ஆளும் பாஜக அரசு இஸ்லாமை கேவலப்படுத்துகிற நோக்கிலும் முஸ்லிம்களை அச்சுறுத்துகிற நோக்கிலும்  மிக அநீதியான முறையில் முத்தலாக தடை சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது  – அதை முறையாக சட்டமாக்க இயலாத நிலையில் அவசர சட்டம் இயற்றியது.
அல்லாஹ் பெரும் சூழ்ச்சியாளன்.
சபரி மலையுல் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை உத்தரவிடச் செய்தான்.
முஸ்லிம் பெண்களுக்கு பாலின சமத்துவத்தைப் பற்றி பேசியவர்கள் தங்களுடைய சமூகத்தில் பெண்களின் நிலைக்கு பதில் சொல்லட்டும் என்று அல்லாஹ் வைத்த செக் தான் இது.
கடவுளின் சன்னிதானத்திலேயே பெண்களை தீட்டென ஒதுக்கும் இந்து சமூகத்தின் இழிவு பகிரங்கப் படுத்தப் பட்டது.
நாட்டில் அதிக வருவாய் கொண்ட கடவுளான ஐயப்பன் சன்னிதியில் இரண்டு பெண்கள் நுழைந்து விட்டார்கள் என்பதற்காக நேற்று சபரிமலையில் பரிகார பூஜை செய்யப் பட்டது. மட்டுமல்ல இது தொடர்பாக நேற்று கேரளாவில் நடை பெற்ற வன்முறையில் 2 வர் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக நடந்துவரும் போராட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 100 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பத்திரிக்கையாளர்கள் சங்கம்  குற்றம்சாட்டியுள்ளது.

இந்தப் போராட்டம் கேரள அரசுக்கோ அல்லது உச்சநீதிமன்றத்திற்கோ எதிரானதோ அல்ல. அப்பட்டமாக பெண்களுக்கு எதிரானது என்று சிலர் கூறுகின்றன.

உண்மையில் இந்தப் போராட்டம் முத்தலாக் விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் மூக்கை நுழைத்தவர்களுக்கு எதிரான அல்லாஹ்வின் விளையாட்டேயாகும்.

இந்த உண்மையை புரிந்தும் புரியாதவர் போல நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு பிரதமர் மோடி “ முத்தலாக் பிரச்ச்னையானது பெண்களின் சமத்துவம் தொடர்பானது. சபரி மலை விவகாரம் பாரம்பரியம் தொடர்பானது என்று கூறுயிருக்கிறார்.

முத்தலாக்கிற்கு  ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால பாரம்பரியம் இருக்கிறது.

عن عائشة رضي الله عنها أن رجلا طلق امرأته ثلاثا فتزوجت فطلقت ، فسئل النبي صلى الله عليه وسلم أتحل للأول ؟ قال : لا ، حتى يذوق عسيلتها كما ذاق الأول 

فقد ذكره البخاري رحمه الله تحت ترجمة ( باب من أجاز الطلاق ثلاثا )

إن القول بوقوع الثلاث ثلاثا قول أكثر أهل العلم ، فلقد أخذ به عمر وعثمان وعلي والعبادلة : ابن عباس ، وابن عمر ، وابن عمرو ، وابن مسعود ، وغيرهم من أصحاب رسول الله صلى الله عليه وسلم ، وقال به الأئمة الأربعةأبو حنيفة ومالك ، والشافعي ، وأحمد ، وابن أبي ليلى ،والأوزاعي ، وذكر ابن عبد الهادي عن ابن رجب رحمه الله قوله : اعلم أنه لم يثبت عن أحد من الصحابة ولا من التابعين ولا من أئمة السلف المعتد بقولهم في الفتاوى في الحلال والحرام - شيء صريح في أن الطلاق الثلاث بعد الدخول يحسب واحدة ، إذا سبق بلفظ واحد 

சபரி மலைக்கு  தமிழ்கம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் பெருமளவில் வருவது என்பது கடந்தி சில ஆண்டுகளாகத்தான் வழக்கில் உள்ளது.

பெண் சுயச்சார்பு அற்றவள் என்று மனுதர்மம் கூறுகிறது.
பெண்கள் வேதம் படிக்க தகுதியற்றவர்கள் என்றும் அது கூறுகிறது.
பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. பெண்கள் சம்பாதிப்பது அனைத்தும் அவளுக்கு பொறுப்பானவனுக்கே சேரும் .
விதவைப் பெண்கள் திருமணம் செய்ய தடை செய்யப் பட்டனர்.
கணவன் இறந்த உடன் அவனது சிதையிலேயே விழுந்து உயிர் துறந்து விடும் பெண் பத்தினி எனக கருதப் பட்டாள்
1987 ல் ராஜஸ்தானில் மால் சிங்க் சகாவத் என்ற 24 வயது இளைஞன் இறந்து போனான். திருமணமான 8 மாதங்களில் அந்த கணவனின் சிதையிலேயே விழுந்து தீக்குளிக்குமாறு அவனது இளம் மனைவி ரூப் கன்வர் நிர்பந்திக்கப் பட்டாள்.
இந்தியாவில் மிக கடைசியாக சதியில் இறங்கி தீக்குளித்த அந்தப் பெண் தீக்குளிப்பதை  திவர்லா கிராமத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோ வேடிக்கை பார்த்துள்ளனர்.
ரூப்கண்வர் ஒரு பட்டதாரியாவார்.
அரிச்சந்திர புராணம் கணவர் மனைவியை விலைக்கு விற்றதையும் அவள் அதை ஏற்றுக் கொண்டு விலைக்கு வாங்கியவனுக்கு செய்தாள் என்று கூறுகிறது.
இராமயணத்தில் கூட யாகம் செய்த பார்ப்பணர்களுக்கு தர்மமாக மனைவியர்களை அரசன் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. அப்பெண்களை வைத்து நிரிவகிக்க முடியாத பார்ப்பணர்கள் அவர்களை அரசரிடமே திருப்பிக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் சென்றதாக அந்நூல் கூறுகிறது
இந்து சமய புராணங்கள் ஆண்கள் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான மனைவியரை வைத்திருந்த்தாக கூறுகிறது. அவர்களிடையே நீதி பரிபாலிக்கப் பட்டதாக  எந்த தகவலும் அவற்றில் இல்லை.
சமீபத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் தாங்களை இந்துக்கள் அல்ல  என அறிவித்துக்கொண்டனர், அதற்கு அவர்கள் கூறிய காரணங்களில் ஒன்று “இந்து மத்த்தில் இருப்பது போல லிங்காயத்தில் பெண்களுக்கு கடவுளுக்கு தீட்டானவர்கள் அல்ல என்பதாகும்.

கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது என்று புராணங்கள் கூறுகின்றன.
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது

 மனு, அனைத்து சாதியிலும் உள்ள பெண்கள், அந்தந்த சாதிக்குள் சூத்திரர் அந்தஸ்து பெற்றவர்கள் என்று கூறுகிறார். அதாவது, அவர்கள் வீட்டில் உழைக்க வேண்டும். உடமை இருக்கக் கூடாது, கல்வி கூடாது
பாஜக் ஆட்சி செய்த சத்த்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது 10ம் வகுப்புக்கான சமூக விஞ்ஞான பாடத்தில் பெண்கள் வேலைக்கு வருவதால் தான் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிறது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 
அதே போல உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக் ஆட்சி செய்த கால கட்டத்தில் 10 வகுப்பு பாட திட்டத்தில் பெண்கள் தங்களது உரிமைகளைக் கோருவதுதான் குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படக் காரணம் என்று எழுதி வைத்தார்ர்கள் .
ஜேபி ஆட்சியில் இருந்த போது, மாநில மகளிர் கமிஷனின் தலைவராக இருந்த பிஜேபி பிரமுகர் மிருதுளா சின்ஹா, வரதட்சணை வாங்குவதில் என்ன தவறு என்று வாதாடினார். தான் வரதட்சணையுடன் வந்ததாகவும், தனது கணவர் வீட்டில் அதனால் வசதியாக வாழ்வதாகவும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் தலாக் முத்தலாக சட்டங்கள் அனைத்தும் பெண்களீன் பாதுகாப்பிற்காவும் அவர்களின் நல்வாழ்வினைக் கருதியுமே அமைக்கப் பட்டன.
இஸ்லாம் தலாக்கை அமுல் படுத்திய வழிகளை யோசித்துப் பார்த்தேல் இது புரியும்

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا (1  

தலாக்கில் பெண் ஒரு பொருட்டல்ல என்றால் அவளது இத்தாவை கவனிக்கச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?

ஏதேனும் அவதூரைக் கூறி அவளை வீட்டை விட்டு துரத்தி விடக் கூடாது இதில் அல்லாஹ்வை பயந்து கொள்ளக் கூறும் அறிவுரை எதற்கு ?

أن النبي صلى الله عليه وسلم قاللا يفرك مؤمن مؤمنة، إن كره منها خلقا رضي منها آخررواه مسلم.

பெண்களை சகித்துக் கொள்ளவே பெருமானார் (ஸல்) அவர்கள் அதிகம் அறிவுறுத்தினார்கள்.
حديث أبي هريرة t: أن النبي  ﷺ قالاستوصوا بالنساء خيراً، فإن المرأة خلقت من ضِلَع، وإن أعوج شيء في الضِّلَع أعلاه، فإن ذهبتَ تقيمه كسرته، وإن تركته لم يزل أعوج، فاستوصوا بالنساء


மக்களுக்கு எதார்த்தமான வாழ்கை நெறியை இஸ்லாம் கற்பித்த்தது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதம் எதுவும் பாராட்டப்படவில்லை.
ஒரு திருமண உறவிலிருந்து பெண் முற்றிலுமாக விடுபட்டு விடுகிற போது அவளுக்கான மறுமண வாய்ப்புக்கள் சிறப்பாக அமைகின்றன. முத்தலாக் அதற்கு வழி வகுக்கிறது.
பாலினப் பாகுபாடு காட்டப்படுவது தன்னுடைய சொந்த மதமான இந்து மதத்திலா அல்லது இஸ்லாமிலா என்று நம்முடைய பிரதமர் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆர் எஸ் எஸ் அமைப்பில் கூட சுயம் சேவக்குகளாக பெண்கள் சேர்த்துக் கொள்ளப் பட வில்லை. அவர்களுக்கான தனி அமைப்புக்கள் உண்டு , அவற்றின் பெயரில் கூட சுயம் என்ற வார்த்தை இல்லை.
இஸ்லாம் பெண்களின் வாழ்வுரிமை. கல்வி பெறும் உரிமை. சொத்துரிமை சமூக வாழ்கையில் பங்கேற்கும் உரிமை திருமணம் மற்றும் விவாகரத்துப் பிரச்சனைகளில் தனது கருத்துக்களை நிலை நாட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாம் வழங்கியது போல இந்த நவீன நூற்றாண்ட்லும் கூட வேறு எந்தச் சட்டமும் வழங்கவில்லை.
பெஹன் பஜ்ஜாவோ என்பதை வெறும் கோஷமாக வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பத்து பெண்களை கூட காப்பாற்றவில்லை
எந்த அளவில் மக்கள் கிண்டல் செய்கிறார்கள் பாருங்கள்
மனைவியை புடிக்கலையா தலாக் சொல்லாதே கைது செய்யப் படுவாய் ! விட்டு விட்டு போய் விடு பிரதமராகி விடுவாய்
இஸ்லாமிய ஷரீஅத் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப் படும் போது அது தன்னைப் பற்றிய வாசிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொள்கிறது.
அந்த வாசிப்பில் பலர் இஸ்லாமின் இரசிகர்களாகியிருக்கிறார்கள்.
இப்போதும் அது தான் நடந்துள்ளது.


கடந்த 26 ம் தேதி இந்திய நாடாளுமன்ற மக்களவையில்  முத்தலாக் தடை சட்டம் மீதான மசோதா தாக்கல் செய்யப் பட்ட போது  பிகார் மாநிலத்தைச் சார்ந்த காங்கிரஸ் எம் பி ரன் ஜீத் ரன் ஜன் என் ஐ எம் கட்சியின் அஸதித்தீன் உவைஸி தமிழத்தைச் சாந்த அனவர் ராஜா ஆகியோர் பாஜகவின் இதயத்தை உலுக்கும் வகையில் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கூட்ட்த்தில்   பேசிய பிகார் மாநிலத்தைச் சார்ந்த காங்கிரஸ் MP ரன் ஜீத் ரன்ஞன் தான் குர் ஆனை படித்த்தாகவும் . அது பெண்களுக்கு சரியான உரிமைகளை வழங்கியுள்ளதாகவும் குறீப்பிட்டார்.  குர் ஆனை தான் படிக்க ஒரு வாய்ப்பை வழங்கிய நாடாளுமன்றத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Congress MP from Bihar, Ranjeet Ranjan, in the Lok Sabha, said that the Muslim women have equal divorce rights according to the Quran. 
இஸ்லாம் தனக்குரிய இடத்தை எதிர்ப்புச் சூழ்நிலையிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறது.

காங்கிரஸ் எம் பி அசதுத்தீன் உவைஸி நாடாளுமன்ற விவாதத்தின் போது மிகத் தெளிவாக கூறினார்.  மத்திய அரசின் நோக்கம் முஸ்லி பெண்களைப் பாதுகாப்பது அல்ல. இஸ்லாமை குறை கூறுவதே . அது ஒரு போதும் நடக்காது. இந்து ஆண்கள் முறையற்று விவகரத்து செய்தால் ஓராண்டு தண்டனை என்பது நடப்பில் இருக்கும் போது முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்பது என்ன நியாயம் என்று அறை கூவினார்.  நாங்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படியே வாவோம், இஸ்லாமிய ஷரீஅத்தே எங்களுக்கு போதுமானது என்ற அறைகூவிச் சொன்னார்.
தமிழக அ இ அதிமுக எம்பி  ஜனாப் அன்வர் ராஜா மக்களவையில் மீண்டும் ஒரு முறை சிங்கமென கர்ஜித்தார்.
நீங்கள் பண மத்ப்பிழப்பு சட்டம் கொண்டு வந்திர்கள் மக்களை எதிர்த்தீர்கள்
ஜி எஸ் டி சட்டம் கொண்டு வந்தீர்கள் வியாபாரிகளை எதிர்த்தீர்கள்
இந்த முத்தலாக தடைச் சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் அல்லாஹ்வை எதிர்க்கிறீர்கள். அவன் உங்களை சும்மா விடமாட்டான் என்றார்.
அல்லாஹ்வின் ஏற்பாடு தான் சபரி மலை விவகாரமாக மத்தியை ஆளும் பாஜகவிற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வடிவிலும் கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையின் வடிவிலும் வந்திருக்கிறது.
தீய சக்திகள் தமது கெட்ட சிந்தனைகளை திருத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல் அமைதி திரும்பும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
  
இந்த சந்தர்ப்பத்தில் உலகிற்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். அல்லாஹ்வின் மார்க்கத்தை உண்மையாக வாசிக்க வாருங்கள். நேர்வழி பெறுவீர்கள் நீச்சயமாக!  இல்லை எனில் அன்றைய அபூஜ்ஹல் கள் போல குறுக்கு வழியில் தான் இருப்பீர்கள். ஒரு போதும் சத்திய இஸ்லாமிற்கு எதிரான திட்டம் வெற்றி பெறாது .

  
   

No comments:

Post a Comment