வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 22, 2019

கொடுங்கோலர்களுக்கு ஒரு நன்மையும் கிட்டாது.


وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا
 ألا لعنة الله على الظالمين

ஆட்சியதிகாரம் கையில் கிடைக்கிற போது மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள், அல்லது நன்மை செய்ய நினைக்கிறவர்கள் வரலாறு வாழும் தோறும் வாழ்கிறார்கள்.
கரிகால் சோழன் கல்லணை கட்டினான். இரண்டாயிரம் ஆண்டுகளாக அவன் பெயர் நிலைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அணையும் பயன்படுகிறது. இப்போது போல அல்லாமல் காவிரி ஆறு எப்போதும் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் வெள்ளப் பெருக்கால் மக்களுக்கு ஏற்பட்ட சேத்த்தை அகற்ற நினைத்த மன்ன்னருக்கு அதற்கு ஒரு வழியை இறைவன் காட்டினான். கற்கைகளை நீருக்குள் உருட்டி விட்டு அந்தக் கற்களுக்கு மேல் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் மண்ல் பூசிய பாறையை ஒட்டவைத்து கட்டப் பட்ட கல்லணை காவிரி ஆறு கொள்ளிட்த்திலிருந்து பல பகுதிகளாக பிரிந்து ஒருங்கிணைந்த தஞ்சை நாகை மாவட மக்களின் விவசாயத்திற்கு இன்றும் பயன் படுகிறது, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற போது அந்தப் பகுதி பாதிக்கப் படாமல் பாதுகாக்கிறது.
தமிழகத்தில் மகத்தான பல பெரும் திட்டங்களை சில ஆயிரம் ரூபாய்களில் நிறைவேற்றிய சூத்திரதாதி காமராஜர். அவர் ஒரு தடவை முத்துப் பேட்டைக்கு வந்தார்/
முத்துப்பேட்டையில் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிறது ஒரு ஆறு. அதே போல் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது இன்னொரு ஆறு. இந்த ஆறு மற்றதுடன் ஓரிடத்தில் கலக்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற காலத்தில் இரு ஆறுகளும் சந்திக்கிற இடத்தில் வயற்காடுகளையும் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு சிற்றூரின் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை நேரில் கண்டு ஆய்வு செய்கிறார் அப்பொதைய முதலமைச்சர் காமராசர்.
வடக்கே இருந்த்து தெற்கே பாய்கிற ஆற்றை மற்ற ஆறோடு கலக்க விடாமல் ஆற்றுக்கு அப்பால் கொன்டு சென்று அடுத்த பகுதி மக்களுக்கு பயண்படுமாறு செயய முடியுமா என்று அதிகாரிகளை காமராசர் கேட்டார். பாமரத்தனமாக.
ஆறு என்ன சின்னக் குழந்தையா ? இங்கிருந்து அங்கு தூக்கிவிட . ? ஆடிப்போன அதிகாரிகள் அதெல்லாம் சாத்தியம் இல்லீங்க ஐயா! என்றனர்.
அதிகாரிளின் வாத்த்தைகளோடு நின்று விடாத காமராசர் " ரயிலு போறதுக்கு மனுசங்க போறதுக்கெல்லாம் சுரங்க பாத போடறது இல்லையா ஆறு போறதுக்கு ஏன் சுரங்கப் பாத போடக் கூடாதா என்று அதே பாமரத்தனதோடு இன் ஞினியர்களுக்கு ஆலோசனை சொன்னார் காமராசர்.
அவரது ஆலோசனைப்படி வடக்கே இருந்து வருகிற ஆறு மற்ற ஆற்றை கடந்து செல்வதற்காக ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டது. அந்த சுரங்கம் வழியாக செல்லும் ஆறு மற்ற ஆற்றை கீழே புமிக்கடியில் தாண்டி தெற்கே செல்கிறது. அந்தப் பகுதிக்கு நீர் ஆதாரமாக அமைந்திருக்கிறது.
மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதர் ஆற்றுக்கே சப்வே கட்டினார்.  

அந்த ஆற்று சப்வேயை இப்போதும் முத்துப் பேட்டையில் பார்க்கலாம்.  இப்போதும் அது மக்களுக்கு பயனளித்துக் கொண்டே இருக்கிறது.

இப்போதைய அரசியல் போக்கு மாண்டே போனாலும் இன்னும் காமராசர் வாழ்வார். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நினைத்த அவரது மனம் தீர்க்க மாய் வராலாற்றை சுரண்டியிருக்கிறது.
ஹஜ்ஜுக்கு செல்கிறவர்கள் மினாவின் மலைப்பாதையில் சில் உடைந்த சுவர்களை பார்க்கலாம். சுபைதா கால்வாய் என்று அதற்கு பெயர். ஒரு மகத்தான் வரலாற்றையும் ஒரு பேர்ரசரின் மனைவியாக மிக் அற்புதமாக செயலாற்றிய ஒரு பெண்மணியின் அந்தப் பழஞ்சுவர்கள் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன,
ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் இஸ்லாமிய பேர்ரசை பக்தாதிலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார் அப்பாஸிய மன்னரான் கலீபா ஹாரூன் ரஷீது. அவரது மனைவி அமத்துல் அஜீஜ் என்ற இயற் பெயரும் சுபைதா என்ற புகழ்பெயரும் கொண்டவர்.  
அவர்  ஹிஜ்ரீ 186 ம் ஆண்டு பஃதாதில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த போது வருகிற வழியில் மக்காவிற்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக மிகப்பெரும் சிரமம் எடுத்துக் கொள்ளப்படுவதையும் இந்தப் பணியில் பலர் இறந்து போவதையும் அவர் கண்டார்.  இதில்  அவர் மிகவும் வருத்த முற்றார்/ 
இந்தப்பிரச்சனை தீர தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.  தீர்க்க குணம்
கொண்ட அவர் அருகில் தண்ணீர் அதிகமாக கிடைக்கிற இடம் எது என விசாரித்தார். தாயுபுக்கு செல்லும் வழியுல் உள்ள வாதி நுஃமான் என்ற இடத்தில் மலைப்பாறைகளுக்கு நடுவே அருமையாக ஓடிக் கொண்டிருக்கிற ஓடையைப் பற்றி அவருக்கு  சொல்லப் பட்டது.  உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அங்கிருந்து மக்காவிற்கும்  மக்காவ்லிருந்து 20 கீமி தொலைவிலிருக்கிற அரபாவிற்கும்  ஒரு வாய்க்கால் வெட்டி நீரை கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
பாலைவனத்தில் ஒரு கால்வாய். அது வும் செயற்கை கால்வாய். பெரிதாக இருபுறம் சுவர் எழுப்பி ஒரு மேம்பாலம் போல கட்டி  சுவர்களுக்கு  நடுவே ஒரு பள்ளம் அமைத்து ஒரு கால்வாய் கட்டப் பட்டது.
இதற்கான பணிகளில் அதிக தொகை செல்வான போது அரசாங்க கஜானாவில் ஒற்றை நாணயம் மிச்சமிருக்கிற வரை பணி தடை படக் கூடாது என்று உத்தரவிட்டார்.
அப்போது அவர் உத்தரவிட்ட வார்த்தை வைர வரிகளுக்கு சொந்தமானது. கோடாரியின் ஒரு அடிக்கு ஒரு தங்க நாணயம் கொடுக்க வேண்டியிருந்தாலும். கொடு!
وقد أنفقت زبيدة الكثير من أموالها وجواهرها لتوفر للحجاج المياه العذبة والراحة و تحميهم من كارثة الموت. و بعد أن أمرت خازن أموالها بتكليف أمهر المهندسين والعمال لإنشاء هذه العين؛ أسرّ لها خازن أموالها بعظم التكاليف التي سوف يكلفها هذا المشروع، فقالت له: "اعمل ولو كلفتك ضربة الفأس دينارًا"،

சுமா பதினாறு கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த கால்வாய் கட்ட ஆறாயிரம் கிலோ தங்கம் அளவுக்கு செலவு பிடித்தது.  வேலையை முடிந்த பிறகு அது குறித்த செலவுப் பட்டியல் அடங்கிய ஒரு புத்தகத்தை அதிகாரிகள் சுபைதா அம்மாவிட கொடுத்த போது திஜ்லா நதிக்கரையில் அமைந்த தனது அரண்மனையில் கொலுவீற்றிருந்த அந்த அம்மையார் அந்த செலவுப் புத்தகத்தை திஜ்லா நதியில் வீசி எறிந்து விட்டு சொன்னார்.  இதில் நான் கணக்குப் பார்க்க போவதில்லை. இனி யாருக்கேனும் பாக்கி  வர வேண்டியிருக்குமானால் என்னிடம் அதைப் பெற்றூக் கொள்ளலாம் என்றார்.  மட்டுமல்ல  அந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் சிற்ப்பு ஆடைகளை வழங்கினார்.
ولما تمّ عملها اجتمع العمال لديها، وأخرجوا دفاترهم ليؤدوا حساب ما صرفوه، وليبرّئوا ذممهم من أمانة ما تسلموه من خزائن الأموال، وكانت السيدة "زبيدة" في قصر مطلٍّ على دجلة، فأخذت الدفاتر ورمتها في النهر، قائلة: "تركنا الحساب ليوم الحساب؛ فمن بقي عنده شيء من المال فهو له، ومن بقي له شيء عندنا أعطيناه
கீபீ 8 ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இந்தக் கால்வாய் சுமார் 8 ஆண்டுகள் மக்களுக்கு பயன்பட்டது. அவ்வப் போது மன்னர் அதை மராமத்து செய்து வந்தனர். கீ பீ 16 ம் நூற்றாண்டி இஸ்லாமிய உலகை ஆண்ட துருக்கி சுல்தான் சுலைமான் ( தி கிரேட் சுலைமான் ) காலத்தில் இந்த கால் வாய் பல இடங்கங்களிலும் உடைந்து போனது.  
இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் சுபைதா அம்மாவின் கால்வாய் காலப் போக்கில் உடைந்து போனாலும் அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அதற்குப் பின்னர் வந்த மன்னர்கள் தனி கவனம் செலுத்தினார்கள். இதற்காக நிறைய செலவழித்தார்கள்.
அரபு நாட்டில் சவூதி அரசாங்கம் அமைந்த போது மன்னர் அப்துல் அஜீஸ் காலத்தில் அரபாவிலிருக்கும் ஹாஜிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு அய்னு சுபைதா என்று பெயரிடப்பட்டது.  நீர்நிலைகளை கவனிக்கும் நிறுவனம் கூட அய்னு சுபைதா என பெயரிடப் பட்ட்து.
சுபைதா கால்வாய் இப்போது சில இடிந்து போன சுவர்களாக காட்சியளித்தாலும் நீர் வழங்கும் திட்டம் அவர் பெயரால் நிரந்தரமாக இருக்கிறது.
وفي العهد السعودي أي في عهد الملك عبد العزيز أُنشئت إدارة خاصة لإدارة العين سُمّيت (عين زبيدة) تشرف إشرافًا كاملاً على العين والآبار الخاصة بها وترميمها

ஆட்சியதிகாரம் கையில் இருக்கிற போது மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் காரியமாற்றுகிறவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகலாய வரலாற்றில் வாழ்கிறார்கள். அவர்களது சாதனைகள் கால பெருவெள்ளத்தில் அரித்துச் செல்லப் பட்டாலும் கூட அழிக்க முடியாதபடி அவர்களது மக்கள் நலச் சிந்தனை மனித வரலாற்றை ஆக்ரமித்து நிற்கிறது. இமய மலையை விட உயரமாய்.
கேட்பாரற்ற அதிகாரம் கையில் இருக்கிற போது எல்ல மீறிய  அக்கிரமங்களை செய்கிற போது  தங்களது நல்லறங்களை கூட இழந்து விடுகிறார்கள். வரலாற்றில் கொடுங்கோலர்களாகவே வாழ்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் அப்படி ஒரு துரதிஷ்ட சாலி ஹஜ்ஜ்ஜ் பின் யூசுப்.
ஹிஜ்ரீ 40 ல் பிறந்து 95 ல் இறந்தார். சுமார் 55 ஆண்டு கால வாழ்வு.
சிறுவயதிலேயே திருக்குர் ஆனையும் ஹதீஸையும் இலக்கியங்களையும் கற்ற அவர் இளம் வயதில் தந்தையுஜ்டன் சேர்ந்து குர் ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்தார்.  பின்னர் அப்துல் மலிக் பின் மர்வானின் படையில் ஒரு வீர்ராக சேர்ந்தார். படையணியிரிடைய்யேஇருந்த சீர்கேடுகளை கலைந்து சீர் செய்தார். இதனால் சீக்கிரமே படைத்தலைவராகும் வாய்ப்புக் கிடைத்தது.  மக்காவில் தனியரசு  செய்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் சுபைர் ரலி அவர்களை  கொன்றார். அதனால் மக்கா மதீனா உள்ளிட்ட நிலப்பரப்பின் ஆளுநரானார்.
அப்துல்லாஹ் பின் சுபர் ரலி அவர்களை கொன்றது வரைஒரு தளபதியாக ஹஜ்ஜாஜ் நடந்து கொண்டிருக்கலாம். அதற்கு மேல் அவருடைய அரக்க மனம் நியாயமின்றி செயல் பட்டது.
மிகப்பெரும் சஹாபியான அப்துல்லாஹ் பின் சுபைர் ரலி அவர்களுக்கு சிறப்பான ஒரு நல்லடக்கத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தால் ஒரு வெற்றியாளராக அவர் நிலைத்திருப்பார்.
ஆனால் ஹஜ்ஜாஜின் வக்கிரம் அந்த அளவோடு நிற்க வில்லை. அப்துல்லாஹ் பின் சுபை ர்  ரலி என்ற மாபெரும் சஹாபியின் உடலை ஒரு கமபத்தில் தொங்க விட்டார். அதை இறுதிப் பார்வை  பார்க்க வருமாறு அப்துல்லாஹ் பின் சுபைர் ரலி அவர்களின் தாயாராரும், ஆயிஷா அம்மாவின் அக்காவுமாம் அபூபக்கர் ரலி அவர்களின் மகளுமான அஸ்மா அம்மாவை அழைத்தார்.  நான் எனது மகனை ஒவ்வொரு முறையும் இறுதிப் பார்வையாகத் தான் பார்த்து அனுப்புவேன் எனவே நான் வரமுடியாது என்றார் அஸ்மா அம்மையார்.  உங்களது இரண்டு ஜடைகளையும் பிடித்து இழுத்து வருபவரை அனுப்புவேன் என்று எச்சரித்தார் ஹஜ்ஜாஜ். யாரை எச்சரிக்கிறோம் என்று சிறிதும் யோசிக்காமல்.
 முடிந்தால்  என் தலைமுடியை பிடித்து இழுத்து வருபவரை அனுப்பு என்றார் அம்மையார்.
மிரட்டல் பயனிக்காத நிலையில் அந்த அம்மையாரிடம் நேரில் வந்து தனது தனது கொலைக்கு நியாயம் கற்பித்தார்.
நான் உன் மகனிடம் நடந்து கொண்ட்து எப்படி என்று அஸ்மா அம்மாவிடம் கேட்டார்
 அஸ்மா அம்மா சற்றும் தயங்காமல் சொன்னார்.
என மகனது உலகியல் வாழ்வை அழித்து உனது மறுமை வாழ்வை அழித்துக் கொண்டாய்.
فلما رأى ذلك أتى إليها فقال: كيف رأيتني صنعت بعبد الله؟ قالت: رأيتك أفسدت عليه دنياه، وأفسد عليك آخرتك،
எனது மகனை இரண்டு முந்தனைக் காரியின் மகனே என நீ கேலி பேசியதாக அறிந்தேன். உனக்கு தெரியுமா முஹம்மது நபி (ஸல) அவர்கள் ஹிஜ்ரத்திற்கு புறப்பட்ட போது அவர்கள் கொண்டு சென்ற தண்ணீர்ப் பையை கட்டு வதற்கு ஒரு கயிற்றை தேடினார்கள். கிடைக்க வில்லை. உடனே நான் எனது  முந்தானையை இரண்டாக கிழித்து ஒன்றை பெண்களை மறைக்கப் பயன்படும் ஆடையாக வும் இன்னொன்றை பெருமானாரின் தண்ணீர்ப் பையை கட்டும் கயிறாகவும் பயன்படுத்தினேன் அதனால் பெருமானார் என்னை இரண்டு கச்சைக்காரி என்றார்கள் என்றார்.
ஹஜ்ஜ்ஜாஜ் தனது மனோ விகாரம் அந்த அம்மையாரிடம் பலிக்காது என்பத்த அறிந்து திரும்பினார்.


எந்த பெரும் கலகத்தையும் அடக்கும் ஆற்றல் அவரிடமிருந்த்து.  உமய்யாக்களின் ஆட்சிகாலத்தில் கூபாவில் ஏற்பட்ட கலகத்தை ஒன்பதே வீர்ர்களுடன் சென்று அடக்கியதால் ஹிஜாஸீன் பொறுப்பாளராக இருந்த  அவருக்கு இராக்கின் ஆளுநர் பதவியும் சேர்த்துக் கிடைத்தது.
20 ஆண்டுகளே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அவர் வரலாற்றி ல் அதிக செல்வாக்குப் பெற்ற ஒரு ஆளுமையாக இருந்த போதும் கூட இஸ்லாமிய வரலாற்றில்  ஒரு கரும்புள்ளியாக இன்றளவும் கருதப் படுகிறார்
இத்தனைக்கும் அவர் செய்த நன்மைகளும் பல வரலாற்றை வென்று வாழ்பவை தான்.
குதைபது பின் முஸ்லிம் என்ற தலபதியை அனுப்பி ஐரோப்பாவின் பல பகுதிகளை கைப்பற்றினார்ன். இன்றைய துருக்கி அவர் காலத்தில் இஸ்லாமில் இணைந்த பகுதியாகும்.
அதே போல இந்தியாவுக்கு முஹம்மது பின் காஸிமை அனுப்பி வைத்து இந்திய மண்ணீல் இஸ்லாம் பரவ காரணமாக இருந்தவர் அவர் .  இன்றை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹஜ்ஜாஜ் அனுப்பிய ஆட்கள் மூலமே ஆரம்பத்தில் இஸ்லாம் பரவியது.
இப்னு கஸீர் ரஹ் அவனது நல்லியல்புகளை பட்டியலிடுகிறார்.
وكان يكثر تلاوة القرآنويتجنب المحارم، ولم يُشتهر عنه شيء من التلطخ بالفروج
அவர் ஆட்சியதிகாரத்தில் உல்லாசமாக இருப்பவராக இருக்க வில்லை. 

திருக்குர் ஆனின் எழுத்துக்களுக்கு புள்ளிகள் வைக்க பட்டிருக்க வில்லை. புள்ளிகல் வைக்க ஏற்பாடு செய்த்து ஹஜ்ஜாஜ் தான்.
குர் ஆனிய எழுத்த்துகளுக்கு ஹரகத் எனும்  உயிர்க் குறிகள் இடும் பழக்கம் இருக்கவில்லை. ஹரகத் இடும் நடை முறைக்கு வித்திட்டவரும் ஹஜ்ஜாஜ் தான்.
ஹஜ்ஜாஜ் இராக்கில் சுகாதார மையங்களை அமைத்தார்.
பொது இடங்களை கழிப்பறைகளாக்குவதை தடுத்தார்.
மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்கினார்.
பல பாலங்களை கட்டினார். கிணறுகளை தோண்டினார்.
கிராம மக்கள் நகரங்களுக்கு குடியேறுவதை தடுத்தார்.
கிணறுகள் நீர் நிலைகளை அமைத்துக் கொடுத்து விவசாயிகளின் நிலையை உயர்த்தினார்
விவசாய நிலங்கள் தரிசாக விடாமல் பாதுகாத்தார்.
விவசாயிகளுக்கு கடன் வழங்கினார்.
விவசாயிகளுக்கு கால்நடைகளை வழங்கினார்.
சில் நேரங்களில் உப தேசங்களுக்கு கட்டுப் படும் இயல்பும் அவரிடம் இருந்த்து.
الحجاج و سعيد بن المسيب[
عن أبي بكر بن أبي خيثمة عن بحر بن أيوب عن عبد الله بن كثير قال : صلى الحجاج مرة بجانب سعيد بن المسيب قبل أن يكون الحجاج ذا منصب و سلطة فجعل يرفع قبل الإمام ويقع قبله في السجود. فلما سلم أخذ سعيد بطرف ردائه –وكان له ذكر بعد الصلاة _ ، فما زال الحجاج ينازعه بردائه، حتى قضى سعيد ذكره. ثم أقبل عليه سعيد فقال له: «يا سارق، يا خائن. تصلي هذه الصلاة؟ فوالله لقد هممت أن أضرب بهذا النعل وجهك». فلم يرد عليه. ثم مضى الحجاج إلى الحج، فعاد إلى الشام. ثم جاء نائباً على الحجاز. فلما قتل ابن الزبير، كر راجعاً إلى المدينة نائباً عليها. فلما دخل المسجد، إذا مجلس سعيد بن المسيب. فقصده الحجاج، فخشي الناس على سعيد منه. فجاء حتى جلس بين يديه، فقال له: «أنت صاحب الكلمات؟». فضرب سعيد صدره بيده وقال: «نعم». قال: «فجزاك الله من معلم ومؤدب خيراً. وما صليت بعدك صلاة إلا وأنا أذكر قولك». ثم قام ومضى

வரலாற்றுச் சிறப்பு மிக்க பல நல்ல காரியங்களை ஹஜ்ஜாஜ் செய்திருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆதிக்கத் தை நிலை நாட்டும் அக்கிரம்ம் அவரது நன்மைகளை பலனற்றதாக்கி விட்டது.

ஒரு பேரரசுக்கு எதிராக கலகங்கள் நிறை உருவான காலத்தில் ஒரு தளபதியாக இருப்பவர் கைகளில் ஆலிவ் இலைகளை வெள்ளைப் புறாக்களையு வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பது எதார்த்தமே என்றாலும்   அநீதியும் அக்கிரமமும் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

அது கொடுங்கோன்மையாகும்.

ஹஜ்ஜாஜ் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரை கொன்றுள்ளதாக திர்மிதியில் வருகிற ஒரு  வரலாற்று தகவல் கூறுகிறது.

وروى الترمذي في سننه (2220) عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ قَالَ : " أَحْصَوْا مَا قَتَلَ الْحَجَّاجُ صَبْرًا فَبَلَغَ مِائَةَ أَلْفٍ وَعِشْرِينَ أَلْفَ قَتِيلٍ " .
    
கொடுங்கோன்மை ஒரு போதும் நிலைக்காது என்பது மட்டுமல்ல.
வரலாற்றில் அது அவப்பெயரையே சம்பாதித்து தரும். செல்வாக்காக வாழ்ந்திருந்தாலும் கூட.
அது மட்டுமல்ல. கொடுங்கோன்மையாளர்கள் செய்கிற நற்காரியங்கள் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படாது. இந்த உலகில். ,
மறுமையில் அது அல்லாஹ்வின் நாட்ட்த்தை பொறுத்த்து.
ஹஜ்ஜாஜ் மவ்தாகிற போது தனது அக்கிரமங்களுக்கு மன்னிப்புக் கிடைத்து விடும் என்று நம்பினார்.
மரண தருவாயில் “ மக்கள் எனக்கு மன்னிப்பு கிடைக்காது என்கிறார்கள் இறைவா! என்னை மன்னித்து விடு என்றார்.
தனது அக்கிரமங்களை பற்றி அவருக்கிருந்த பயமே அவ்வறு கூற வைத்த்து.
ஆயினும் மன்னிப்பாளன் அல்லாஹ் என்ன செய்வான் என்று தெரியாது.
அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்கள் இறுதி நிமிட்த்தில் தனது  கொடுங்கோன்மையை ஹஜ்ஜாஜ் உணர்ந்து கொண்ட்தை பாராட்டுவார்கள்
ن عمر بن عبد العزيز أنه قال: «ما حسدت الحجاج عدو الله على شيء حسدي إياه على: حبه القرآن وإعطائه أهله عليه، وقوله حين حضرته الوفاة: "اللهم اغفر لي فإن الناس يزعمون أنك لا تفعل
கொடுங்கோலர்கள் உலகில் வாழும் போது அவர்கள் செய்த நன்மைகள் கவனிக்கப் படாது என்பது மட்டும் நிச்சயம்.
மக்கள் கொடுங்கோலர்களின் நன்மைகளை பேசக் கூடாது.
காரணம் அது அவர்களது கொடுங்கோன்மைக்கு மேலும் அதிக வலிமைய தந்து விடும்.
கொடுங்கோலர்கள் தனிமைப்படுத்தவும் தூற்றவும் பட வேண்டும்.
உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் தங்களது உமய்யா வமிசத்திற்காக உழைத்தவர் என்றாலும் ஹஜ்ஜாஜை ஒரு போதும் ஏற்று கொள்ள வில்லை , கடுமையாக சாடுபவராகவே இருந்தார்கள்
உலகமே கெட்டுப் போனாலும் ஹஜ்ஜாஜை ஜெயிக்க முடியாது,
وقال عمر بن عبد العزيز : لو تخابثت الأمم وجئتنا بالحجاج لغلبناهم ، وما كان يصلح لدنيا ولا لآخرة .
"تاريخ دمشق" (12/185).

ப.சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்திருப்பதை 2010 ல் மத்திய காவல்துறை  அமித்ஷாவை கைது செய்த்தோடு ஒப்பிட்டு பலரும் எழுதுகிறார்கள். பேசுகீறார்கள்.
இது அநீதியாகும்.
கொடுங்கோன்மைக்கார்ர்கள் ஒரு போதும் நியாயவான்கள் ஆக மாட்டார்கள். அவர்களை நியாயப் படுத்தவும் மக்கள் முயலக் கூடாது.
அல்லாஹ் கொடுங்கோன்மைக்காரக்ரளிடமிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்பானாக!

No comments:

Post a Comment