வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 27, 2020

ஷஹீதுகளின் உடல்கள் மீதுதான் போராட்ட வரலாறு நடந்து வந்திருக்கிறது.


ரஜப் மாதம் பிறந்து விட்டது.
பெருமானாரின் துஆ
ரமலானுக்கு தயாராவோம்.
ஈரானுக்கு சென்று வந்த 4 சவூதிகள் மூலமாக கொரோனோ வைரஸ் தொற்று சவூதி அரேபியாவிலும் காண்ப்பட்ட்தால் உம்ரா விசா வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.  பல்லாயிரம் முஸ்லிம்களூக்கு இது பெரும் வேதனையளித்துள்ளது என்றாலும் மக்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப் பட்டுள்ள இந்நடவடிக்கை சரியானதே என்று பல நாடுகளிலுமுள்ள ஷரீ ஆ நீதிமன்றங்கள் கூறியுள்ளன, எனவே அடுத்த சில வாரங்களுக்கு உம்ரா செல்ல திட்டமிட்டிருக்கும் பயணிகள் தமது பயணத்தை மாற்றுத் தேதியில் அமைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உலக மக்கள் அனைவரை கொடூரமான கொரோனோ வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்தருள்வானாக! புனித மக்கா ஒளிமிகு மதினா நகரங்களை மக்கள் மீண்டும் தரிசிக்க வல்லாஹ் விரைவாக வழிசெயவானாக!
ஆ ர் எஸ் எஸ் அமைப்பு மக்களின் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாத அமைப்பு. அதனால் மாற்றுக் கருத்குடையவர்களை அவர்கள் கொலை செய்து விடுவார்கள். காந்தியடிகளிலிருந்து எழுத்தாளர் கெள்ரி லங்கேஷ் வரை இது தான் நடந்தது.
தற்போது சி ஏ ஏ சட்ட்த்திற்கு எதிராக முஸ்லிம்களின் போராட்டம் வீரியம் பெற்று நாட்டு மக்கள் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. அதில் உள்ள நியாயங்கள் மக்கள் புரியத் தொடங்கிவருகின்றனர்.
சென்னையில் கடந்த 19  ம் தேதி சிறை நிறப்பு போராட்டம் நடைபெற்ற போது சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது சென்னை மின்சார இரயிலில் ஒருவர் அலுத்துக் கொண்டு கூறினார் , போலீஸ் இந்த பாய்மார்களை தடியடி நட்த்தி விரட்டி இருக்கனும். எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம் பாருங்க!
அப்போது அருகே இருந்த ஒரு முஸ்லிம் இவருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு இந்து சகோகரார் வேகமாக குறிக்கிட்டு. “ கொஞ்ச நேரம் இரயில் தாமதமானத உங்களாலே பொருத்துக் கொள்ள முடியலையே!  பாய்மார்களை ஆயுசுக்கும் அகதிமுகாம்கள்லே டீடென்ஸ்சன் செண்டர்லே அடைக்கப் போறாங்கன்னா அவங்களாலே எப்படி பொருத்துக் கொள்ள முடியும் ? என்று கேட்டுள்ளார். முதலில் பேசியவர் அமைதியாகி விட்டார்.
இது போல ஒன்றிரண்டு அல்ல பல நூறு நிகழ்வுகள் மூலம் நாட்டு மக்கள் இந்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு, நாட்டுக்கு என்ன பாதிப்பு என்பதை விளங்கிக் கொண்டு அவர்களும் போராட்ட்த்தில் இறங்கி வருகிறார்கள்.
சர்வதேச அளவிலோ “ அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக நாட்டு மக்கள் இவ்வளவு கடுமையாக போராடுகிறார்களே! அரசு இறங்கி வந்து இந்த சட்டத்தை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கிறேன் என்று அறிவித்து அமைதி மீடால் என்ன என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்தச் சூழலில் தான் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் அமிஷா இப்போராட்டங்களை ஒடுக்குவது எப்படி என்று அலோசிப்பதாக் பத்ரிகைகளில் செய்தி வெளியானது. அந்த ஆலோசனையில் என்ன முடிவு செய்யப் பட்ட்து என்ற தகவல் வெளியே வரவில்லை
ஆனால் அவர் என்ன யோசித்தார் எப்படி யோசித்தார் என்பதை தில்லியின் வடகிழக்குப் பகுதியில் இந்துத்துத்துவ்ச அமைப்பின் செய்து காட்டிவிட்டனர்.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது இந்துத்துவ கலவரக்கார்ர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று மூன்று நாட்கள் அவகாசம் அளித்தார் அதற்குள் இந்துத்துவ கலவரக் காரகள் திட்டமிட்டு முஸ்லிம்கள் பெருமளவில் படுகொலை செய்து கணக்கற்ற பொருளாதார இழப்பிற்கு ஆளாக்கினார்கள். மனித வரலாறு கண் கொண்டு பார்க்க முடியாத காட்சிகள் அரங்கேறின.
இப்போதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருக்கிற போது தில்லிமாந்கர காவல்துறை மக்களின் கவனமும் முழுக்க அவர் பேரில் இருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் புகுந்து விளையாடிக் கொள்ளுங்கள் என்று அமித்ஷா அனுமதியளித்தன் அடிப்படையிலேயே இந்துத்துவ வெறியர்கள் தில்லியில் மிகப்பெரிய ஒரு இனவெறிக் கலவரத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.
இதுவரை சுமார் 38 பேர் பலியாகியுள்ளனர். ஓரிருவரை தவிர மற்ற அவனைவரும் முஸ்லிம்கள். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சுமார் ஐம்பது பேர் மிக கடுமையான காயத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலோருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது,  ஏராளமான கடைகள் வீடுகள்  தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.
கலவரம் பாதித்த பகுதிகளில் வசித்த முஸ்லிம் குடும்பங்களின் கதைகள் குஜராத கலவரக் கதைகளைப் போலவே மிக கொடூரமானவை. காதுகளால் கேட்க முடியாதவை
முஷர்ரப் என்பவருவடை மனைவியும் மகனும் வீட்டில் இருக்கிறார்கள் அவர்களது வீட்டை போலீஸாரின் கண்முன்னேயே கலவரக் கார்ர்கள் சூறையாடுகிறார்கள், முஷர்ர்ரபின் மனைவி மலிகா பின்வாசல் வழியாக தப்பி பக்கத்திலே இருந்த ஒரு இந்துவின் வீட்டுக்கு சென்று குங்கும்ம வாங்கி இந்து வை போல நெற்றியிலே பொட்டு வைத்து கொண்டு உயிரை ஒரு கையிலும் மகனை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி ஓடுகிறார். இந்துத்துவ கும்பல் அவரை துரத்திப் பிடிக்கிறது. பெயரை கேட்கிறார், இந்து பெயரை சொல்கிறார். அவரது மகனை மிரட்டுகிறார்கள் அவனும் இந்துப் பெயரை சொல்கிறான். நம்பிக்கையற்ற அவர்களை அந்த இரண்டு வயது சிறுவனின் டிரவுசரை கழட்டிப் பார்க்கிறார்கள், நல்லவேளை அவனுக்கு அதுவரை கத்னா செய்யப் படவில்லை. அவர்கள் எப்படியோ தப்ப்பி வெளியே வந்து சொல்கிற கதையில் முஸ்லிம் அடையாளமுள்ள் எத்த்னை பேர் அழிக்கப் பட்டிருப்பார்கள் என்பது அச்சத்தை தரும் செய்தியாக இருக்கிறது, (the new York times 27.02.2020)
தில்லியில் 20 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களை காக்க 80.000 கவலர்கள் உள்ளனர், .இந்தக் காவலர்களில் பெரும்பாலோர் டிரம்ப் திருமிச் செல்லுவது வரை அவரது பாதுகாப்பு பணியிலேயே இருந்துள்ளனர், தில்லி நகரம் காலியாக வைக்கப் பட்டிருந்த்து, மீதி இருந்த சொற்ப போலீசாருக்கும் கலவரக் கார்ர்களுக்கு உதவுமாறு தெளிவாக உத்தரவிடப் பட்டிருந்த்தை வீடியோக்களைப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
ஒரு கலவாக்காரன் ஒரு காவலரை டூ வீலரில் அழைத்துக் கொண்டு வருகிறான். ஒரு இட்த்தில் காவல்துறையினரே ஒரு முஸ்லிமின் கடைக்கு தீ வைக்கின்றனர்.
ஜாபராபாத் பகுதியில் சி ஏ ஏ வுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்த போது காவல்துறையினரே இந்துக்களை உதவிக்கு வருமாறு அழைத்த்தாக பத்ரிகை செய்திகள் கூறுகின்றன.
இதுவரை எந்த அதிகாரி துப்பாக்கி சூடு நட்த்த உத்தரவிட்டார் என்பது வெளியே வரவில்லை. ஆனால் காயம் பட்டவர்களில் சுமார் 70 சதவீத்த்தினர் துப்பாகிச் சூட்டால் பாதிக்கப் பட்டவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமான கடைகள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன, 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சாத்துக்குடி வாங்கி வைத்திருந்தேன், அனைத்தையும் நாசம் செய்து விட்டார்கள் என்று ஒரு முஸ்லிம் வியாபாரி அழுகிறார் என்றால் ஆயிரக்கணக்கான வியாபர நிறுவன்ங்கள் திட்டமிட்டு அடையாளமிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டுள்ளன்.
தர்காக்க்கள் மதரஸாக்கள் பள்ளிவாசல்கள் முஸ்லிம்கள் நட்த்தும் கல்விநிறுவனங்கள் என ஒன்று விடாமல் நாசப்படுத்தப் பட்டுள்ளன.
அசோக் நகர் என்ற இட்த்திலுள்ள பள்ளிவாசலின் மினாரவின் மீதேறி அதை உடைக்க முடியாதவர்கள் அதன் மீது காவிக் கொடு ஏற்றுவதை உலகமே விக்கித்தவாறு பார்த்தது. வெறிக் கூச்சலோடு  ஒரு கும்பல்  பள்ளிவாசலை உடைப்பதையும் சமூக ஊடகங்கள் காட்சிப் படுத்தியுள்ளன,
இதில் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற செய்தி என்ன வென்றால் டிரம்ப் இந்தியாவுக்கு வந்து திரும்பிய 36 மணி நேரத்திற்குள் நடைபெற்ற இந்தக் கலவரங்கள் பல வார காலம் கலவரம் நட்தால் ஏற்படக் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன,
இதற்கு பாஜக தலைவரான் கபில் மிஸ்ராவின் பேச்சை பலரும் காரணமாக சொல்கிறார்கள் . உண்மையில் அது கூட ஒரு திசை திருப்பும் நாடகமாக இருக்கலாம்.
ஏனென்றால் டிரம்ம் திரும்பிய பின் நாங்கள் கவனித்துக் கொள்வோம் என்று சொல்கிறார். ஆனால் கலவரக் கார்ர்களோ டிரம்ப் திரும்புவதற்கு முன்னதாகவே தில்லியை பிணக்காடாக மாற்றிவிட்டார்கள்
இதுவரை பலியானோர்களது எண்ணிக்கையை ஹாஸ்பிடலில் முடிவு செய்து கொண்டிருந்தார்கள்.
இப்போதுதான் முஸ்லிம்களின் வீடுகளை பூட்டி தீ வைக்கப் பட்டுள்ளதில் வீடுகளுக்கு கரிக்கட்டைகளாக எரிந்து கிடக்கிற உடல்களை கண்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதனால் 20 என்ற எண்ணிக்கை வரை மெதுவாக உயர்ந்து கொண்டிருந்த பலியானோ எண்ணிகை திடீரென 38 உயர்ந்து விட்டது.
கலவரம் நடந்து முடிந்து இரண்டு நாட்களாகவிட்ட பிறகும் கூட இன்னும் எத்தனை வீடுகளுக்குள் பிணங்கள் இருக்கின்றன என்பதை முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.
இத்தனை கொடூரமான படுகொலைகள் தில்லியில் நடந்திருக்கின்றன, அங்குதான் இந்தியாவின் அனைத்து பாதுகாப்புத்துறையின் தலைமையகங்களும் இருக்கின்றன உண்மையில் அவை அனைத்தும் இந்த கலவரங்கள் குறித்து கண்டு கொள்ளாமல் வைக்கப் பட்டன,
மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு டிரம்ப் வந்து திரும்புவதற்குள்ளாக ஒரு பெரும் கலவரத்தை நட்த்தி முடிக்க திட்டமிட்டு மிக கச்சிதமாக் மிகப்பெரிய மனிதப் படுகொலையை அரங்கேற்றி தில்லி மாந்கருக்கு பெரும் அவலத்தை தேடித்த்ந்ந்திருக்கிறார்கள்.
உயர் உச்ச நீதிமன்றங்களே இந்தக் கலவரம் குறித்தும் காவல் துறை உளவுத்துறையின் இயலாமை குறித்தும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கண்டனம் தெரிவித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதரனை இரவோடு இரவாக பஞ்சாப் மாநிலத்திற்கு மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது, காரணம் கேட்டால் இது முந்த்தய முடுவு என்கிறார்கள், அப்படியானால் கூட குறைந்த பட்சம் 14 நாள் அவகாசம் தர வேண்டுமே என்றால் இல்லை, அவசரம் என்கிறார்கள் .
அது மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய கொடுமை என்ன வென்றால் கலவரதை தூண்டி கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்று நேற்றைய முன் தினம் நீதிமன்றம் கேட்டதற்கு நேற்று மத்திய அரசு பதிலளித்திருக்கிறது, நடவடிக்க எடுப்பதற்கு இது சரியான நேரம் அல்ல.
எனவே தில்லியின் கலவரம் என்பது சி ஏ ஏ போராட்டங்களை ஒடுக்குவதற்காக அப்பட்டமாக மத்திய உள்துறை அமைச்சகமே நேரடியாக கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட இன வாத பயங்கர தாக்குதலாகும்.
இதை இனியும் மூடி மறைக்க முடியாது.
எனவே இந்தற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.
இந்தியாவின் கவுரம் மிக்க உள்துறை அமைச்சர் பதவிக்கு அவர் எந்த வகையிலும் பொருத்தமானவர் அல்ல.
படுகொலைகளை நிகழ்த்தி பயங்கரவாதச் செயல்கலை செய்து தங்களது சித்தாந்தங்களை பரப்ப நினைக்கிறவர்கள்  வரலாற்றில் மிக மோசமான நிலையையே சந்தித்திருக்கிறார்கள்.
إِنَّمَا السَّبِيلُ عَلَى الَّذِينَ يَظْلِمُونَ النَّاسَ وَيَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا وَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ

மிக விரைவான தண்டனைக்குரிய குற்றம் அக்கிரம்ம் செய்வது

قال الرّسول صلّى الله عليه وسلّم: (ليس شيءٌ أُطِيعَ اللهُ -تعالى- فيه أعجلَ ثواباً من صلَةِ الرحِمِ، وليس شيءٌ أعجلَ عقاباً من البغْيِ وقطيعةِ الرَّحم

முஸ்லிம் போராட்டக் காரகள் வெளிப்படுத்த வேண்டியது என்ன வென்றால்
நாங்கள் கவலை கொள்கிறோம். ஆனால் எங்களது ஜனநாயக ரீதியிலான போராட்ட்த்தை ஒரு போதும் கைவிட மாட்டோம்.
அரசாங்கம் தைரியம் இருந்தால் நேருக்நேர் எங்களிடம் பேசட்டும்.
அரசாங்கத்தின் குறுக்குவழியிலான அடக்குமுறைகளுக்கு நாசகர நடவடிக்கைகளுக்கும் நாங்கள் அஞ்சிவிட போவதில்லை.
ஜனநாயக வழியில் எங்களது அறப்போராட்ட்டங்கள தொடரும்.
இந்திய சுதந்திரப் போராட்டம் முஸ்லிம்கள் ஜனஸாக்களின் மீது நடந்து தான் தொடங்கியது.
தில்லியிலிருந்து கோரக்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு ஆலிம் தூக்கிலப்பட்டார். அவரது உடல் தொங்கிக் கொண்டிருந்த்து.
அதை கண்டு கொத்திதெழுந்துதான் இந்தியா வீறு கொண்டு எழுந்த்து.
இந்த தில்லியின் ஷஹீதுகள், உத்தரப் பிரதேசத்தின் ஷஹீதுகள், மங்களூரின் ஷஹீதுகளைப் பார்த்து இந்த இரண்டாவது சுதந்திரப் போரும் வீறு கொண்டு எழும்.
இன்ஷா அல்லாஹ்
  

No comments:

Post a Comment