வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 31, 2020

சிறப்பாக வாழ்வோம்

 ஒரு புதுவருடம் பிறக்கிறது.

இஸ்லாம் ஹிஜ்ரீ காலண்டர் நடைமுறை நமக்கு வழங்கியுள்ளது. அதுவே நமக்கு சட்டப்பூர்வமானதாகும். நமது மாதங்கள் ஹிஜ்ரீ மாதங்களாகவே கணக்கிடப்படும். வருடம் என்பதும் நம்மை பொறுத்தவரை ஹிஜ்ரீ வருடமே. ஹிஜ்ரீ ஆண்டு என்பது சந்திர ஓட்டத்தை அடிப்படையாக கொண்டது.

ஆனால் கீ பி ஆண்டுக்கணக்கு நமக்கு முரணானது அல்ல. அது சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டது. அதுவும் காலக்கணக்கீட்டிற்குரியதே! நமது தொழுகைகளுக்கான நேரத்தை சூரியனின் சுழற்சி அடிப்படையிலேயே நமது மார்க்கம் தீர்மாணித்துள்ளது.

ஆனால் ஹிஜ்ரீ தான் நமது அடையாளம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடைபெரும் கூத்துக்கள் எதையும் இஸ்லாம் ஏற்கவில்லை. ஆ ஊ என்ற ஒரு காட்டு கத்தலை தவிர அதில் வேறெதுவும் இல்லை. மது அருந்துதலும் ஆபாச நடனங்களும் எந்த வகையிலும் ஒரு புது வருடத்தை வரவேற்கும் அர்த்த முள்ள வழி முறை கிடையாது.

ஒவ்வொரு புது வருடத்தின் போது நமது பொறுப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டும்.

ஏனெனில் நமக்கு ஒரு வயது கூடுகிறது.   

நம்மில் பலர் இளமையின் துடிப்பான கட்டத்திற்குள் அடி எடுத்து வைக்கிறோம். பலர் குடுமப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டத்தை அடைந்துள்ளோம். பலர் முதுமையின் வாசலில் நிற்கிறோம்.

ஒவ்வொரு நிலையிலும் நாம் சிந்திக்கவும் திட்டமிடவும் வேண்டிய ஒரு முக்கியச் சிந்தனை இருக்கிறது.

அதுவே நமது அடுத்து வரும் நாட்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டின் கொரோனோ பரவலினால் ஏற்பட்ட இழப்புக்கள் சோதனைகளை தாண்டி நாம் சிறப்பாக முன்னேறுவது குறித்து யோசிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

எச்சரிக்கையாக திட்ட மிட வேண்டியிருக்கிறது.

பாதுகாப்புக்கான விழிப்புணர்வும் அதிகமாக தேவைப்படுகிறது.

இஸ்லாம் ஒரு அற்புதமான உற்சாகமளிக்கிற உத்தரவாதத்தை தருகிறது.

 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (6)

 ஒரு சிரமத்திற்குப் பின் இரண்டு இலேசான வழிகள் உண்டு.

عن الحسن قال : خرج النبي صلى الله عليه وسلم يوما مسرورا فرحا وهو يضحك ، وهو يقول" لن يغلب عسر يسرين ، لن يغلب عسر يسرين ، فإن مع العسر يسرا ، إن مع العسر يسرا " .

 திருக்குர்ஆனின் இந்த உற்சாகமளிக்கிற வார்த்தைகளை கவனத்தில் கொண்டு நாம் புதிய வருடத்தை எதிர் கொள்வோம்.

 அல்லாஹ் சிறப்பான வெற்றிகளுக்கு துணை நிற்பான்!

 நமது கடமை நாம் சிறப்பாக வாழ வேண்டும் என்று நிய்யத் வைக்க வேண்டும். அது குறித்த ஒரு மன உறுதியும் கொள்ள வேண்டும்.

 மிகச் சிறப்பான வாழ்வுமுறைகளுக்கு இஸ்லாம் காட்டும் அற்புதமான வழிமுறைகளில் சிலவற்றை இங்கு நினைவு படுத்துகிறேன்.

 நாம் நமக்காக மட்டுமே வாழாமல் பிறர் நலன் குறித்தும் சிந்தித்தவர்களாக இருக்க வேண்டும்.

 ஒரு சிறப்பான மனித வாழ்கைக்கு இதை விடச் சிறந்த்து வேறெதுவும் இல்லை.

 அதனால் தான் பெருமானார் (ஸ்ல) அவர்கள் மார்க்கம் என்றாலே பிறர் நலன் நாடுவது என்றார்கள்,

 ﻋﻦ ﺗﻤﻴﻢ ﺑﻦ ﺃﻭﺱ ﺍﻟﺪﺍﺭﻱ ، ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : (ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﻨﺼﻴﺤﺔ ﺛﻼﺛﺎ ) ، ﻗﻠﻨﺎ ﻟﻤﻦ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ؟ ، ﻗﺎﻝ : ( ﻟﻠﻪ ﻭﻟﻜﺘﺎﺑﻪ ﻭﻟﺮﺳﻮﻟﻪ ﻭﻷﺋﻤﺔ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻭﻋﺎﻣﺘﻬﻢ ) ( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ.)

  النَّصِيحَةُ: كَلِمَةٌ يُعَبِّرُ بِهَا عَنْ جُمْلَةٍ ، هِيَ إِرَادَةُ الْخَيْرِ للغير

 உலகம் கண்ட ஒரு மாபெரும் சக்ரவர்த்தியின் இதயத்தை பாருங்கள்!

 உமர் (ரலி) ஒரு பெண்மணிக்கு அறிவுரை சொன்னார்கள்.  அவள் கேட்க மறுத்தாள்.  உமர் அழுதார்கள் . நீங்கள் ஏன் அழ வேண்டும் என்று தோழர்கள் கேட்டார்கள்.  அந்தப் பெண்ணுக்கு வேதனை தரப்படும் போது அது எப்படி இருக்கும் என்று யோசித்தேன் அதனால் அழுதேன் என்றார்கள்

 சிறப்பான வாழ்க்கைக்கு நாம் கைவிட வேண்டிய ஒரு முக்கிய குனம் உண்டு

 இந்த உலகில் மக்களிடம் காணப்படுகிற மிகப் பெரிய ஒரு கெட்ட குணம் தன்னை உயர்வாக கருதி மற்றவர்களை தாழ்வாக நினைப்பது.

 குடும்பத்தில், நண்பர்களுக்கிடையில், பொது வெளியில் எங்கும் இந்தப் போக்கு பரவி இருக்கிறது.

 இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் மிக தூய்மையாக கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய சமூக அமைப்பில் இந்த ஒரு இயல்புதான் மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. நம்மிடம் குடிகாரகள் இல்லை. முறைகேடாக சம்பாதிப்பவர்கள் குறைவு, ஒழுக்க கேடர்கள் குறைவு. ஆனால் சர்ச்சைகள் அதிகம் இருக்கிறது எனில் அதற்கு ஒரு முக்கிய காரணம் இதுவே

 நமது ஜமாஅத்துக்களில் – இயக்கங்களில் – குடும்ப விவகாரங்களில் எங்கும் இது வியாபித்து பிரச்சனைகளை தீர விடாமல் செய்கிறது.   

 அருமையானவர்களே! இனிவரும் நாட்களில்  நமது வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள முடிவு செய்தால் நாம் முதலில் நான் உயர்தவன் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சிந்தனையை முற்றிலுமாக விலக்கி வைக்க வேண்டும்.

 நாம் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் இந்த ஒரு குணம் நம்மை அதள பாத்ளத்தில் தள்ளிவிடும் என்பது மாத்திரமல்ல. சமூகத்தையும் பெரிய அளவில் பாதித்து விடும்.

 சுலைமான் (அலை)  காலத்தில் ஒரு இறைநேசர் இருந்தார் அவருக்கு மேகம் நிழல் கொடுக்கும்كانت تظله الغمام

 ஒரு பயணத்தில் அவர் சீடர்களோடு சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு பெரிய துஷ்டன் எதிர்ரே வந்தான். ஒருவரை ஒருவர் நெருங்கிய போது  இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

 இந்த துரதிஷ்டம் பிடித்தவனை பார்க்க வேண்டி வந்ததே   என நினைத்து இறைநேசர் தனது முகத்தை திருப்பிக் கொண்டார்.  அந்த துஷ்டனோ இந்த நல்ல மனிதருக்கு   நாம் எதிர்ப்ப வேண்டியதாகிவிட்டதே  அவருக்கு சங்கடம் கொடுத்து விட்டோமே என்று முகம் திருப்பிக் கொண்டான் அவர்கள் ஒருவரை ஒருவர் கடந்து சென்றபோது மேகம் அந்த துஷ்டனோடு சென்றது,

 இஸ்லாமிய மரபு வழிக் கதை சொல்லிச் செல்லும் செய்தி மிக ஆழமானது. நண்பர்களே! மிக அழுத்தமாக சிந்திக்க வேண்டியதாகும்.

 நமது தனி வாழ்வில் சமூக வாழ்விலும் நம்மை வாட்டி வதைக்கும் கெட்ட குணம் இது.  நமக்கு மேலே நிழல் தருகிற மேகத்த்த பிறரை நோக்கி திருப்பி விடக் கூடியது இது.

 நமது வாழ்வை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள நாம் கவனத்தில் வைக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம்

 உலக வாழ்க்கை என்றாலே காசு பணம் என்று தான் நாம் நினைக்கிறோம். அதை நோக்கி ஓடுவது தான் இலக்கு என்று தீர்மாணிக்கிறோம்.

 காசு பணம் தேவை தான் . ஆனால் காசே கடவுளாகி விடக் கூடாது.

 இந்த கொரோனோ காலம் நமக்கு மிக முக்கியமான உணர்த்திய பாடம்

 ஏராளமாக காசிருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை,

 காசு பணம் என்பது நல்ல முறையில் வாழவும் நன்மைகளை சம்பாதிக்கவும் வழிகாட்ட வேண்டும்

 கல்லாப்பெட்டியிலும் கணக்குப் புத்தகத்திலும் குவிகிற காசு சில வேளைகளில் நல்ல விசயங்களை விட்டு நம்மை திருப்பி விடக் கூடும்.

 عليه السلامخضر அவர்களைத் தொடர்ந்து காணும் ஒருவர் இருந்தார். திடீரென்று அவருக்கு அவர் தென்படவில்லை மற்றொருவரிடம் காரணம் கேட்கச் சொன்னார். கிழ்ர் (அலை) சொன்னார்கள்.  அந்த மனிதர் தனக்கென எதையும் சேமித்து வைத்து கொள்ளாதவராக இருந்தார் அன்றைய தினம் அவருக்கு நிறையப் பணம் வந்த்து. அப்போது அவர் தன் மனைவியிடம் இதை சேமித்து வைத்துக் கொள் என்று சொன்னார் அதனால் அவருக்கு காட்சி தருவதை நிறுத்தி விட்டேன் என்றார்.

 காசு பணத்தை எவ்வளவும் திரட்டி வைக்கலாம். திரட்ட முயற்சிக்க வேண்டும்.

ஆனால் அதுவே வாழ்வின் இலக்காக ஆகிவிடக் கூடாது.

இன்றைய நம்முடைய ஓட்டம் அப்படி ஒரு திசையில் செல்வதை நாம் கண்கானித்து நிதானமாக செல்ல வேண்டும்.

சிறப்பான வாழ்க்கை மற்றொரு குணம் மன்னிக்கு வழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்

இன்றைய நம்முடைய வாழ்வில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று. Sorry

அதை உயர்வான நாகரீகம் என்று நினைக்கிறோம். நமது குழந்தைகளுக்கு பழக்கப் படுத்துகிறோம்.

நாம் கையில் வைத்திருக்கிற குழந்தை அருகிலிருப்பவரை காலால் மிதித்து விடும் என்றால் அங்கிளிடம் சாரி சொல்லு சாரி சொல்லு என்று கட்டாயப்படுத்துகிறோம்.

குழந்தைக்கு மிதிப்பது என்பது தப்பு என்று தெரியாது. மிதிபட்டவருக்கு அது ஒரு விசயமே கிடையாது . ஆனாலும் ஆயிரம் சாரிகள் அங்கே சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் நாம் அடுத்தவர்களை மன்னிப்பதற்கு தயார் இல்லை. பகைச் சொற்களை கட்டியாக பிடித்துக் கொண்டு வாழ்கிறோம்.

சிறப்பான வாழ்க்கைகு இது உதவாது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த தன் முதுகின் மீது நாற்றமடிக்கிற  ஒட்டகக் குடலை வீசியவர்களை :இன்று நான் உங்களை பழி வாங்க மாட்டேன் என்று சொல்லி மன்னித்தார்கள்

அது அவர்களை வரலாற்றின் பெருமனிதராக உயர்த்தியது.

எனவே புதிய வருடத்தில் எல்லா நிலையிலும் சிறப்பான வாழ்கை வாழ வேண்டும் என்று நிய்யத் வைப்போம்  அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

1 comment:

  1. தங்களின் கட்டுரையை கொஞ்சம் சீக்கிரமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete