வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 08, 2024

வக்பு சட்ட திருத்தம் 2024 முஸ்லிம்களின் அடிமடியில் கை வைக்கும் மத்திய அரசு

 لَنْ تَنَالُوا البِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ) [آل عمران:92]

இந்திய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை வக்பு சட்ட திருத்தம் 2024 என்ற ஒரு தீர்மாணம் கொண்டு வரப்பட்டு அது தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்தியை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம்களை இந்துத்துவா சகிதிகளின் அதிகாரத்திற்கு அடிமைகளாக மற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதே இதனுடைய கருத்தாகும்.

பாபரீ மஸ்ஜித் வழக்கு என்பது முஸ்லிம்களின் இதயத்தில் நேரடியாக வேல் பாய்ச்சிய ஒன்று என்றால் இது முஸ்லிம்களுக்கு நஞ்சூட்டும் ஒரு வஞ்சக செயலாம்.

அதிகார மமதையில் சிறுபானையின மக்களை இன அழிப்புச் செய்யும் ஒரு திட்ட்த்தின் பிரதான நடவடிக்கை ஆகும்.

வக்பு எனும் இஸ்லாமின் ஒரு பெரும் சிறப்பு.

மக்கள் தாம் சம்பாதிக்கிற சொத்துக்களை தனக்கானதாக மற்றும் வைத்துக் கொள்ளாமல் அதை மற்ற மக்களுடைய நன்மைகளுக்காவும் அள்ளிக் கொடுப்பதற்கு இஸ்லாம் செய்த ஏற்பாடு.

மனிதாபிமானத்தின் மிக உன்னதமான வழி முறை இது.

ஒரு மனிதர் அவரிடமுள்ள சொத்துக்களில் 3 ல் ஒரு பகுதியை இவ்வாறு வக்பு செய்ய முடியும்.

அவருடைய வாரிகள் அதை கேள்விக்குள்ளாக்க முடியாது.

وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رضي الله تعالى عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذُو مَالٍ، وَلَا يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَلَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ؟ قَالَلَا، قُلْتُ: أَفَأَتَصَدَّقُ بِثُلُثِهِ؟ قَالَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ. مُتَّفَقٌ عَلَيْهِ.

 இது ஒரு மனிதர் அவர் சம்பாதித்த்திலிருந்து அவருடைய மண்ணறைக்கு நன்மை சேர்க்கும் விசயம் என்று இஸ்லாம் வலியுறுத்தியது.

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَإِذَا مَاتَ ابنُ آدم انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أو عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ. رَوَاهُ مُسْلِمٌ.

 حديث ابن مسعود t قال: قال رسول الله ﷺأيكم مال وارثه أحب إليه من ماله؟ قالوا: يا رسول الله، ما منا أحد إلا ماله أحب إليه، قال: فإنّ مالَه ما قَدم، ومالَ وارثه ما أخَّر[1]، رواه البخاري.

 இந்த நபி மொழி சாதாரணமானது அல்ல; பண்த்தை சேகரிக்கும் மோகத்தில் இன்னும் இன்னும் வேண்டும் என்று ஓடிக்க் கொண்டிருக்கிற மனிதர்களை அளவுக்கு மேல் அவர்கள் சேகரிக்கும் பணம் அவர்களுக்கு எந்த அளவில் பயன்படப் போகிறது என்று ஆழ சிந்திப்பதற்கு வழி வகுத்த செய்தியாகும்.

 அறிஞர்கள் சொல்வார்கள்

 هذا الحديث يجلي حقيقة يغفل عنها كثير من الناس، النبي ﷺ يوجه هذا السؤال الذي يفتح بصيرة الإنسان على حقيقة غائبة عنه في كثير من الأحيان أيكم مال وارثه أحب إليه من ماله؟.

 பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கி விட்ட இந்த சிந்தனை மகத்தான் விளைவுகளை மூஸ்லிம் சமீகத்தில் ஏற்படுத்தியது.

 மக்கள் தமக்கு போக உள்ள சொத்துக்களை நற்காரியங்களுக்காக வாரி வழங்கினார்கள்.

 அப்படி செய்யும் போது கூட பழையதை – தேவையற்றதை – வக்பு செய்யாமல் மக்கள் அவர்களுக்கு பிடித்த சொத்தை வக்பு செய்தார்கள்/

 அபூதல்ஹா ரலி அவர்களின் வக்பு. இன்றும் மதீனாவில் காணக் கிடைக்கிறது. 

 பொதுமக்களுக்காக அவர் செய்த வக்பை அவரது சொந்தக்கார்களின் நிர்வாகத்தில் பெறுப்பானார் விட்டு வைக்க சொன்னார்கள்.

  عن أنس بن مالك قال: "كان أبو طلحة أكثر الأنصار بالمدينة نخلاً، وكان أحب أمواله إليه بيرحاء، وكانت مستقبلة المسجد، وكان رسول الله  ، يدخلها ويشرب من ماء فيها طيب، فلما أنزلت;لن تنالوا البر حتى تنفقوا مما تحبون;قام أبو طلحة وقال: يارسول الله: إن الله يقول :>لن تنالوا البر...الآية، وإن أحب أموالي إلي بيرحاء وإنها صدقة لله، أرجو برها وذخرها عند الله، فضعها يارسول الله حيث أراك الله<، فقال  : إجعلها (أي ريعها) في قرابتك.

அதே போல வழிபாட்டு தலங்களுக்கு அல்லது வழிபாட்டுக் காரியங்களுக்கு என்று சொத்துக்களை எழுதி வைப்பது தான் மக்களின் வழக்கம் ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதற்கு மட்டுமல்லாது மக்களுக்கு பயன்படுகிற நன்மையான காரியங்கள் அனைத்திற்காகவும் வக்பு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்

 பள்ளிவாசல் அல்லாத பொதுக் காரியங்களுக்கான முதல் வக்பு செய்தது நபி (ஸல்) அவர்களேயாவார்கள்.

 முகைரிக் என்ற யூதப்பாதிரி பெரும் செல்வந்தர். அவர் உஹது யுத்தம் நடை

அன்று காலை இஸ்லாத்தை ஏற்று யுத்தத்தில் கலந்து கொண்டார். அப்போது தான் இறந்து விட்டால் தனது சொத்து முழுவதும் பெருமானாருக்குரியது என்று கூறினார். உஹது யுத்தத்தில் அவர் ஷஹீதான போது அவருடை சொத்துக்களாக 7 தோட்டங்கள் பெருமானார் வசம் வந்தன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் முஸ்லிம்களின் பொது நன்மைக்குரியதாக அவற்றை ஆக்கினார்கள்.

 قال بن إسحاق: وكان من حديث مخيريق، وكان حبرا عالما، وكان رجلا غنيا كثير الأموال من النخل وكان يعرف رسول الله بصفته وما يجد في علمه وغلب عليه إلف دينه فلم يزل على ذلك حتى إذا كان يوم أحد، وكان يوم أحد يوم السبت، قال يا معشر يهود والله إنكم لتعلمون أن نصر محمد عليكم لحق. قالوا: إن اليوم يوم السبت قال لا سبت لكم. ثم أخذ سلاحه فخرج حتى أتى رسول الله بأحد وعهد إلى من وراءه من قومه إن قتلت هذا اليوم فأموالي لمحمد يصنع فيها ما أراه الله. فلما اقتتل الناس قاتل حتى قتل. فكان رسول الله فيما بلغني - يقول مخيريق خير اليهود وقبض رسول الله أمواله فهي عامة صدقات رسول الله بالمدينة منها

 வக்பு சொத்துக்களை சாராசரி சொத்துக்களை போல கருத முடியாது. அதற்கு என்று மிக நுணுக்கமான நிபந்தனைகளை இஸ்லாம் விதித்தது.

 ஒரு மரக்கட்டையை ஒருவர் பள்ளிவாசலின் மேற்கூரைக்காக என்று வக்பு செய்தால் அந்த மரக்கட்டையை வேறு காரியத்திற்கு பயன்படுத்தக் கூடாது. அது மட்டுமல்ல அது இத்துப் போகும் வரை அதற்காகவே விடப்பட வேண்டும்.

 வக்பு சொத்தில் தம்மிஷ்ட்த்திற்கு காரணங்களை கற்பித்து யாரும் முறை கேடு செய்து விடக்கூடாது என்பதற்கான் ஏற்பாடு இது.

 இஸ்லாம் வக்பை வலியுறுத்தி அதற்கான நிபந்தனைகளை கூர்மையாக்கி வைத்த போது முஸ்லிம்கள் வக்பு நிர்வாகங்களுக்கு என்று தனி வாரியங்களை அமைத்தார்கள் .

 உமய்யாக்கள் காலத்தில் வக்பு நிர்வாங்களை ஒழுங்குபடுத்த ஒரு துறை அமைக்கப்பட்டது.. அது வக்பு சொத்துக்களை பதிவு செய்தது.

 அப்பாஸிய கிலாபத்தின் காலத்தில் வக்பு விவகாரங்கள் நீதித்துறையிலிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு ஒரு தனி துறை உருவாக்கப்பட்டு வக்புகளின் தலைவர் என்ற ஒரு பதவி ஏற்படுத்தப் பட்டது.

 இதே அடிப்படையில் நம்முடைய இந்திய நாட்டிலும் ஏராளமான வக்புகள் உண்டு.

 திருச்சி யிலுள்ள ஜமால் முஹம்மது கல்லூரிக்கு காஜா மியான என்பவர் 100 ஏக்கர் நிலத்தை வக்பு செய்திருக்கிறார்,

 மேல்விஷாரத்தை சேர்ந்த நவாப் ஹக்கீம் அவர்களுடைய வக்பு சென்னையில் செண்டரல் இரயில் நிலையத்திற்கு அருகில் சித்தீக் சராயாக இன்றும் முஸ்லிம்களுக்கான தங்கும் விடுதியாக இருந்து கொண்டிருக்கிறது.

 சென்னையில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிற ஹஜ் ஹவுஸ் பில்டிங்க் பலருடைய வக்பு என்பதை அங்கே எழுதி வைக்கப்பட்டிருக்கிற பெயர்ப் பலகைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். அது மக்களுக்கு எவ்வளவு நன்மையானதாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்

 .கீரனூரில் ஒரு பழை பள்ளிவாசல் உள்ளது எந்த வகையிலாவது வக்பு செய்து விட வேண்டும் என்ற முஸ்லிம் உம்மத்தின் ஆர்வத்தை அங்கு சென்று விசாரித்தால் புரிந்து கொள்ளலாம்.

 1.      குளிர் காலத்தில் தண்ணீரை சூடாக்குவதற்கான விறகிற்கான வக்பு

2.     விளக்கில் எண்ணை ஊற்றுவதற்கான வக்பு

3.     டேலா கட்டிக்கான வக்பு

 என பல வக்புகள் அந்தப் பள்ளிவாசலுக்காக செய்யப்பட்டுள்ளன.

 நாகூரில் ஆண்டு தோரும் மீலாது சொற்பொழிவு செய்யப்படுவதற்காக ஒரு வக்பு உண்டு. அது 70 ஆண்டுகளை கடந்து இப்போதும் நடப்பில் உள்ளது.

 நாகப்பட்டினத்தில் புறாக்கிராமம் என்று ஒரு கிராமம் உண்டு. அது நாகூர் தர்காவில் உள்ள மினாராவில் தங்கும் புறாக்களுக்கு தீனி வாங்குவதற்காக தஞ்சை மன்னர் அளித்த மானியமாகும்.

 இது போன்ற வக்பு சொத்துக்களை தொடர்ந்து பாரமரிப்பதற்காக இந்தியாவிலும் பல வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன.

 உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இரண்டு ஷியா வக்பு வாரியங்கள் உட்பட 32 வக்பு வாரியங்கள் உள்ளன.

 இந்த வக்பு வாரியங்களிடம் ஏராளாமன சொத்துக்கள் உள்ளன. அரசின் தகவலின் படியே ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட ( 7.85,934) சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரம் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு ஒண்ணே கால் லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இந்தியாவில் அதிக சொத்துடைய நிறுவன்ங்களில் பட்டியலில் இந்திய ரயில்வே இந்திய ராணுவம் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக 3 வது இட்த்தில் வக்பு வாரியங்கள் இருக்கின்றன.

 வக்பு வாரியங்களில் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மிக கடுமையான நிபந்தனைகளின் கீழ் அமைக்கப்பட்டன.

 இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தி நம்முடைய நாட்டில் வக்பு சட்டம் 1955 – என்று ஒன்று இயற்றப்பட்ட்து.

அதை மேலும் பாதுகாக்க  வக்பு சட்டம் 1995 இயற்றப்பட்டது.

இந்த வக்பு சட்ட்த்தில் தான் இப்போது மத்திய அரசு கை வைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எவ்வளவு கொடூரமானவை – தீய நோக்கு கொண்டவை என்பதை ஒரு மேற்பார்வையிலேயே அறிந்து கொள்ளலாம்.

அதில் சில அம்சங்கள்

இதுவரை வக்பு சொத்துக்களின் விவகாரத்தை வக்பு வாரியத்தை தீர்ப்பாயத்தில் தான் முறையிட்டு தீர்வு காண முடியும்

இந்த திருத்தம்

வக்பு சொத்துக்களின் விவகாரத்தை கோர்ட்டி முறையிட முடியும் என்று மாற்றுகிறது.

-----

ஒரு வக்பு சொத்திற்கு வக்பு வாரியம் உரிமை கோர முடியும் என்று இருந்த்து.

இந்த திருத்தம்

அவ்வாறு உரிமை கோர முடியாது என்று கூறுகிறது.

--------

ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்து என்று அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட கலக்டருக்கு உண்டு என்று சட்ட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது

  இது வரை வக்பு வாரிய உறுப்பினர்களாக முஸ்லிம்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்றி இருந்த்து

இந்த திருத்தம்  முஸ்லிம் அல்லாதவர்களும் வக்பு வாரியத்திற்கு உறுப்பினர்களாக முடியும் என்று கூறுகிறது.

---

வக்பு சொத்துக்களை மாநில அரசுகல் இது வக்பு சொத்து தானா என்று ஆய்வு செய்து அது வக்பா இல்லையா என்றூ தீர்மானிக்க முடியும்.

--

இனி ஒவ்வொரு வக்பு சொத்து வைத்திருக்கிற நிர்வாகமும் வக்பு சொத்துக்களை மாவட்ட ஆட்சியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.  

அப்போது வக்பு சொத்துக்கள் எது என்பது தொகுக்கப்படும்.

----

வக்பு சொத்துக்களுக்கும் வறுவாய் சட்டங்கள் பொருந்தும்.

---

வக்பு சொத்துக்களின் வருமானங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

வக்பு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையிடலாம்.

என்பது போன்ற 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த திருத்தங்கள் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்காக என்று அரசு சொல்வதுதான் கோரத்திலும் பெரிய கோரமாகும்.

எவ்வளவு பகிரங்கமாக விஷம் வேலைகளை ஒரு அரசே செய்கிறது ?

சாதாரண தெரு குண்டர்கள் கூட இப்படி தங்களுக்கு என்று ஒரு சட்டம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்த திருத்தத்தின் ஒரு பெரிய உண்மை என்ன வென்றால்

அப்பட்டமான வக்பு சொத்துக்களை இந்துத்தவ சக்திகள் நீதிமன்ற முறையீட்டுக்கு இழுக்கவும். அரசுகள் அவற்றை அபரிகரித்துக் கொள்ளும் வழி முறையுமாகும்.

மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரை வைத்தே வக்பு சொத்துக்களை கைமாற்றி விட வேண்டும் என்பது இதையே காட்டுகிறது.

இப்போது புதிதாக் மாவட்ட ஆட்சியாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இப்போது கை வசம் இருக்கிற வக்பு சொத்துக்களில் சர்ச்சைசை ஏற்படுத்தும் திட்டமாகும்.

ஏனெனில் பன்னூறு வருடங்களுக்கு முன்னுள்ள சொத்துக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இனி வக்பு நிருவாகங்கள் தேட வேண்டு.\

பார்பரி மஸ்ஜித் பிரச்சனைக்கு மூலமாக இருந்த்து அதன் பெரிய சொத்தின் மீது அந்தப் பகுதியில் இருந்த சில இந்துக்களுக்கு ஏற்பட்ட ஆர்வமாகும்.

எனவே மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் என்பது இந்தியாவில் பெரிய அளவில் உள்ள சொத்துக்களை மத்திய பாஜக அரசு அபகரிப்பதற்கான ஒரு ஏற்பாடாகும்.

அதே போல் கீழ் மட்ட்த்தில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல்கள் தர்ஹாக்கள் போன்ற வக்பு நிருவனங்களின் உரிமையில் தலையிட்டு எந்த ஒரு இந்துத்தவ பிரதிநிதிய்ம் சர்ச்சையை உண்டு பன்ன முடியும் என்பதாகும்.

தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழகியுள்ள அடிப்ப்டையை உரிமை அப்பட்டமாக நாடாளுமன்றத்தின் மூலம் பகல் கொள்ளையடிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.

இந்த திருத்தம் கொண்டு வரப்பட்ட நாள் திருமதி கனிமொழி கூறியது போல நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும்.

அவர் சொன்னது போல இது மத சிறுபான்மைக்கு எதிரானது மட்டுமல்ல அடுத்தவன் சொத்தை அடித்துப் பிடுங்குகிற மனிதாபிமானத்திற்கு எதிரானதாகும்.

கம்ம்பூனிஸ்ட் கட்சிகள் சொல்வது போல இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் திட்டம் மட்டுமல்ல எங்களுடைய கருணையினால் தான் நீ இங்கு இருக்க முடியும் என்று சிறுபான்மையினரை பெரும்பான்மையின் பெயரால் மிரட்டும் செயலுமாகும்.

வக்பு சொத்துக்களை சர்ச்சைக்குரியவை என்று அரசும் பாஜக கட்சியினரும் பேசி வருகிறார்கள்.

வக்பு சொத்துக்கள் அளவுக்கு துல்லியமான பதிவுகள் உள்ள நிருவன்ங்கள் இந்தியாவில் எங்கும். கிடையாது என்பதே உண்மையாகும். வேறு எந்த மத நிறுவனத்திற்கும் கிடையாது.

வக்பு சொத்துக்கள் அரசு அதிகாரத்தின் அபகரிக்கப்பட்டவை யோ திருடப்பட்டவை அல்ல.

அவை முற்றிலுமாக சுத்தமான சொத்துக்களாகும்.

வக்பு சொத்துக்களை சர்ச்சைக்குரியதாக காட்டப்படுமானால் ஒன்று அந்த சர்ச்சை பொய்யானதாக இருக்கும் ஒரு வேளை ஒரு சொத்து விவகாரத்தில் உண்மையில் சர்ச்சை எழுமானால்  வக்பின் பக்கம் தான் நீதி இருக்கும்.

இதுவே சத்தியமாகும்.

இந்தியாவிலுள்ள வக்பு நிறுவன்ங்களுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய வளத்திற்கும் இருப்பிற்குமான ஒரு பெரும் சாட்சி அது.

தாஜ் மஹாலாக, குதுப்மினார்களாக ஜும் ஆ மசூதிகளாக பல அடையாளங்களோடு அவை இன்றும் முஸ்லிம்களுக்கான அடையாளங்களாக இருக்கின்றன.

இவற்றை தம்முடையதாக்கி கொள்ள இந்துதுத்துவ சக்திகள் முயல்கின்றன.

சமீபத்தில் உத்த்ர பிரதேசத்தில் நடை பெற்ற கன்வர் ஊர்வலத்தில் ஒருவர் காவடி எடுத்துக் கொண்டு தாஜ்மஹாலுக்கு வந்தார் என்ற செய்தி பதிரிகையில் வந்த்துது.

எனவே வக்பு சொத்துக்களை ஆக்ரமிக்கும் மத்திய அரசின் முயற்சி என்பது இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பையும் மரியாதைய்யும் கேள்விக்குள்ளாக்கி அவர்களது அடிமடியில் கை வைக்கும் முயற்சியாகும்

மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கவனிப்பதை விட்டு விட்டு முஸ்லிம்களை இன அழிப்புச் செய்வதை மட்டுமெ அஜண்டாவாக கொண்டு பாஜக அரசு செயல்படுகிறது.

நாட்டில் ஜனநாயகத்தின் மீதும் அரசியல் சாசணத்தின் மீது அக்கறை கொண்ட அரசியல் சக்திகள் மத்திய பாஜக அரசின் திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிற வக்பு நிறுவன்ங்களை பாதுகாக்கவும். அவற்றின் சர்ச்சைகள் ஏற்படாதவாறும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிற சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமா போன்ற தலைவர்களிடம் முஸ்லிம்கள் பகிரங்கமாக முறையிட வேண்டும். இது பற்றி வெளிப்படையாக கருத்துச் சொல்ல அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.

அது போல நாட்டுமக்கள் அனைவருக்கும் வக்பு சொத்துக்களின் புனிதம் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்வதில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்தவேண்டும்.

இந்துப் பெருமக்களிட்த்தில் சிவன் சொத்து குலநாசம் என்ற கருத்து உண்டு , இதனடிப்படையில் கடவுளுக்காக அற்பணிக்கப்பட்ட சொத்துக்களை மத்திய அரசூ ஆக்ரமிக்குமானால் அதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களனால் அது நாட்டுக்கு நன்மையாக அமையாது என்பதையும் இந்துப்பெருமக்களுக்கும் முஸ்லிம்கள் பக்குவமாக உணர்த்த வேண்டும்

சர்ச்சை எழும் நிலங்களை பற்றி ஜமாஅத்துல் உலமா சபை ,முஸ்லிம் கட்சிகளும் அமைப்புக்களும் முயற்சி இந்து பெருமக்களுக்கு பொது வெளியில் விளக்கிச் சொல்ல வேண்டும். பத்ரிகைகள் சமூக ஊடகங்களை இது விசயத்தில் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

பாஜக கட்சி அரசியல் ரீதியாக வலுவிழந்திருக்கிற நிலையில் கூட ஆர் எஸ் எஸ் அமைப்பு எப்படி சாணக்கியத்தனமாக துணிந்து காய் நகர்த்துகிறது என்பதை நாட்டு மக்கள் கவனிக்க வேண்டும்.

நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன அதை விடுத்து மக்களை தொடர்ந்து பிளவு படுத்த முயற்சிக்கும் இந்துதுத்துவ சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். 

அல்லாஹ் துணை செய்வானாக!

 

 

 

 

 

 

 

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ். சரியான தருணத்தில் சரியான வரலாற்று கட்டுரை

    ReplyDelete
  2. Anonymous7:02 PM

    அல்ஹம்துலில்லாஹ் அற்புதன ஆக்கங்கள்
    இன்னும் இவை சம்மந்தமாக பள்ளிவாசல்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

    ReplyDelete
  3. சிறப்பான முறையில் ஆலிம்களுக்கு உதவிடும் வகையில் குறிப்புகள் வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்

    ReplyDelete